ஊடக தர்மம்

சேதுவுக்கு ஒரு முகம்-„செய்தியாளன்“.
 
-சேது ரூபன்: சில கருத்துகள்
 
சேது ரூபன் கேட்கின்றார்„ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?“ என.
 
இதை யாரிடம் கேட்கின்றார்?
 
பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!
 
நன்று.
 
இதுவரை,புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு,தனியே“செய்தியாளன்“என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்!நீங்கள் புலியினது அரசியலை“தமிழீழத்தின்“பொருட்டு ஏற்று,அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர்.இந்த அரசியற்போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே“செய்தியாளன்“என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது!
 
சேது ரூபன் என்ற „செய்தியாளன்“புலிகளையும்,அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும்“நியாயப்படுத்தியது அவரது(சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசுகொள்ளும்பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற்பாட்டை ஏற்படுத்தவில்லை!
 
இன்று,இலங்கை அரசுக்காகச்“செய்தி கேரிக்கும்-கருத்தூன்றும்“சேதுவுக்கு எங்கிருந்து“புலிகள் வேறு-செய்தியாளன் வேறு“என்ற தத்துவம் சரியாக இருக்கோ, அதை அவர்சார்ந்த அன்றைய புலியும் இன்றைய இலங்கை அரசும் கவனத்தில் கொள்ளாதது சேதுவின் பிரச்சனை இல்லை!அது,அமைப்பினது-அரசினதும் பிரச்சனை.எனவே,சேது சொல்லும்போது அதைப் புரியாதவர் கற்றுக்குட்டி.
 
இந்தப்பிரச்சனையை மேலும் விருத்திக்கிட்டுச் செல்ல முனையும்போது,சில கேள்விகள் எழுவது தற்செயலானது இல்லை.அது,வர்க்க அரசியலில் வர்க்கஞ்சார்ந்த கொள்கைகளுடைய நமது உணர்வில் அறுதியான-கறாரான புரிதற்பாடு.
 
 

என்றபோதும்,சேது,“செய்தியாளன்“.
 
இதன் தெரிவில், இன்று பாசிச இலங்கை அரசோடு கைகுலுக்கும்போது அது தமிழ் பேசும் மக்களது பிரச்சனையுள் கையாண்ட இலங்கையினது பாசிசத்துக்கும் சேதுவுக்கும் எந்த முரண்பாடுமில்லை.காரணம்: சேது வெறும்“செய்தியாளன்“-உலகினால் அங்கீகரிக்கப்பட்ட „செய்தியாளன்“. இத்தகைய „செய்தியாளன்“ புலிகள் வலுவாக இருந்தபோது, புலிக்காகக் குரல் கொடுப்பது அவரது தார்மீகக் கடமையாகிறது அது குற்றமில்லை!-இதைக் குற்றமென்று எவனும்-எவளும் உரைக்கமுடியாது-இது சேது அவர்களது வாதம்!
 
நன்று, அன்பா-நன்று!
 
இதை,இன்று உரக்கக் கூறும் காலமொன்று உருவாகியுள்ளது.
 
நீங்கள் கைகுலுக்கும்“விரிந்த“தளங்களின் மூலம் உங்களைப்போன்றவொரு செய்தியாளனான திச நாயகத்தை உங்களுடன் உறவாடும் இலங்கை அரசு 20 வருடச் சிறையுள் தள்ளியுள்ளதே! அது, குறித்து உங்களது குரலைக் காணவில்லையே?-இது, ஏன்?
 
உங்களால் இலங்கை அரசிடம் இவ்வாதத்தைக்(செய்தியாளன் வேறு-புலிகள் வேறு) கறாராகச் சொல்லமுடியுமா? அங்ஙனம், முடியாதுபோனால் உங்களது ஊடகவியல் தர்மத்துக்கமைய அதை உலகத்தில் அம்பலப்படுத்திப் போராடமுடியுமா?-இது உங்களது கடமை இல்லையா?
 
சேது ருபன் கேட்கிறார், புலிகள் ஏன் தன்னைத் துரோகியாகப் பார்க்கவேண்டுமென.அதாவது,தான் புலியின் உறுப்பினர் என்றால் மட்டுமே அஃது, துரோகமாம்.அஃதாவது, புலிகள் „துரோகி“சொல்லிப் போட்டவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்தாம் என்று சொல்கிறார்.ஆகப் புலிகள்“துரோகி“என்று கொன்றவர்கள் அனைவரும் புலிகளது உறுப்பினர்களானால், புலிகள் தமது அரசுடனான உறவாடலில், முதலில் கொன்று தள்ளப்பட்டிருக்க வேண்டியவர் பிரபாகரனே.ஏனெனில், அவர்தாம் தனது சுமூகமான உறவாடலைப் பிரேமதாசாவுடன் செய்து,தனது தாய் தந்தையரை இலங்கை அரசின் விமானம் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கூட்டி வரச் செய்தவர்.
 
இது,வேறு-செய்தியாளனது கடமை வேறு!சொல்லக்கூடும்.சேது,இதைச் சொல்வார்.ஏனெனில்,அவர் புலி உறுப்பினரில்லை-மாறாகப் புலிக்கு ஆதரவாகக் கருத்துக்கட்டியது மட்டும்தாம்.இது,அவரது ஜனநாயக உரிமை!
 
புலிகளில் கணிசமான தலைவர்களுக்குக் கொள்கை-கோதாரி ஒன்றும் இருந்ததில்லை என்பதற்குச் சேது ரூபன் ஒரு உரைகல்.காற்றடிக்கும் திசைக்கேற்ப அவர்கள் பட்டம் ஏற்றிக்கொள்வர்கள்.இதுதாம,; அடியாட்சேவையின் இன்றைய உதாரணம்.
 
மக்களைச் சார்ந்து,அவர்களது விடுதலைக்காக இனவாத ஒடுக்குமுறை அரசை எதிர்த்துப்போராடும் அமைப்புக்கு-பத்திரிகையாளனுக்கு, ஒருபோதும் இத்தகைய நடிவடிக்கையைச் செய்ய எதிரி அநுமதிப்பதில்லை.
 
அரசுக்கும்,புலிக்கும் உறவுவைவைத்து அடுத்துக்கெடுக்கும் உளவாளிகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களது ஏவல்படைகளுக்கேதாம் இத்தகைய நிலைப்பாடும்,உறவும் நிலைக்கமுடியும்.இன்றைய புலிகளது அழிவுக்குச் சேது போன்றவர்களது பாத்திரம் மிக நேர்த்தியாக இயங்கி இருக்கிறது.இதைப் பார்க்காத புலிகளது விசுவாசிகள், ஒடுக்கும் வர்க்கத்துச் செய்தியாளன்-பத்திரிகையாளன் இந்து இராமைப் போட்டுத் தாக்கினார்கள்.உள்ளிருந்து கருவறுத்த சேது போன்ற“செய்தியாளர்களை“கவனத்தில் எடுக்காது, தமது நட்பு சக்தியாகக் கனவுகண்டார்கள்.இப்போது,“செய்தியாளன்“உலகு தழுவி ஒடுக்கும் வர்க்கத்தோடு கைகுலுக்கும்போது அது“செய்தியாளன்“தார்மீக உரிமையாகிறது அன்பர் சேதுவுக்கு!
 
புலிகளின் கணிசமான புலம்பெயர் தலைவர்கள்-பினாமிகளும் இத்தகைய“கொள்ளை“யின் நிமித்தம் இப்போது இலங்கை அரசோடு கைகுலுக்குவது இந்த அர்த்தத்தில்தாம்.
 
வாசகர்களே,ஒன்றை வடிவாக இனங்காணுங்கள்!அதாவது,இலங்கைப் பாசிச அரசு மக்களைக் கொன்று புலிகளை அழித்ததுமட்டும் வரலாறு இல்லை.அத்தகைய அரசை மிக நேர்த்தியாகத் தாங்கும் இத்தகைய „செய்தியாளர்கள்“தாம் அதன் பாசிசப்போக்கின் கொலைக் களத்தை நியாயப்படுத்தும் முதற்றரமான உந்து சக்திகள்!
 
இலங்கை அரசை ஆதரித்துச் செய்தி வெளியிடும் செய்தியாளர்களை நாம் கூறுகிறோம்“ஒடுக்குமுறை அரசினது கைக்கூலிகள்“என்று.
 
அது,பரந்துபட்ட மக்களது நலனினது அடிப்படையில்.
 
இப்போது,சேது ரூபன் இலங்கை அரசோடும்,அதன் அடக்குமுறை ஜந்திரத்தோடும் உறவாடித்தாம் செய்திகளை மக்களுக்குச் சொல்வதாகவிருந்தால் சேது ரூபன் பரந்துபட்ட மக்களுக்கு எதிரான அரசுசார்பு-ஒடுக்குமுறை ஜந்திரம்சார்பு ஊதுகுழல்.
 
இத்தகைய ஊடக தர்மம் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களதும்,பரந்துபட்ட இலங்கை-உலக மக்களதும் எதிரி என்பது நிர்ணயமானது.
 
புலிகளின் பினாமிகளுஞ்சரி,புலித்தலைமையும்சரி ஒருபோதும் மக்கள் நலனுடனான கொள்கையுடன் இருந்தவர்களில்லை என்பதை சேதுவின் இன்றைய நிலையிருந்து உரைக்கும்போது,அவர்களில் கணிசமானோர் இன்று இலங்கை அரசின் பின்னேதாம் நிற்கின்றனர்.இது,எதனால் ஆனது?
 
இதுதாம் வர்க்க நலன் என்பது!
 
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குச் சேது ரூபன் ஒரு உதாரணம்.
 
சேது மீளவும், அடித்துக் கூறுகிறார்“சேது ரூபன் பாசிசக் கோட்டையின் உறுப்பினர் இல்லை“என.ஆகப் பாசிக் கோட்டை என்பது புலிகள்மட்டும்தாமென இந்தப் புத்திஜீவிச்“செய்தியாளர்“புரிவது புலனதகிறது.
 
இலங்கை அரசைப் பாசிசக் கோட்டை இல்லை என்று, இதன் மறுபுரிதலை அவர் சொல்லிச் செல்வது மிக அவசியமாகப் புரியப்பட வேண்டியது!
 
இன்று,புலிகளது விசுவாசிகள் தமக்குள் இருந்த விரோதிகளை இனங்காணாமல், நம்மைப் போட்டு“எட்டப்பன்-காக்கை வன்னியன்“என்று வாந்தியெடுக்கும்போது,முழுமொத்த தமிழ்ச் சமுதாயமே மிகப் பின்தங்கிய புரிதலில் உள்ளது புலனாகிறது.புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில் சேது ஒரு உரைகல்.
 
இதற்குமேல், சேதுவுக்கு மக்கள் சமுதாயம் வர்க்கமாக இருப்பதால் அங்கு வர்க்க அரசியலும்-வர்க்க ஒடுக்குமுறையும் உள்ளதென்று கூற நாம் என்ன மூடர்களா?
 
சேதுவுக்குத் தனது வர்க்க நிலை நன்றாகவே புரிந்துள்ளது.அது,இனிவரும் அரசியலில், சேதுவை இலங்கையின் ஒரு தொகுதிக்குப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் அரசின் முயற்சியில் கொணர்ந்து நிறுத்தினாலும் ஆச்சரியமுண்டோ?
 
சேதுவிடம் இரட்டை முகமில்லை என்று அவரே உரைப்பது சரியானது!அது,ஆளும் வர்க்க-ஒடுக்குமுறை வர்க்கத்தின் ஒரே முகம் என்பது சரியானதுதாம் சேது.நான் அதை ஏற்கிறேன்!
 
நீங்கள்,உங்கள் பரந்துவிரிந்த உறவுகளைச் செவ்வனவே செய்வீர்கள் என்பது உங்களது கருத்திலிருந்துகொள்ளதக்கதே.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09

Werbeanzeigen

எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்

தேசம் நெட்டில் எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்.

இது முழுமையான தேடலை நோக்கி நகர்வதற்கு சேதுவை எனது தளத்துக்கு வரும்படி அழைக்கின்றேன்.

தேசம் நெட்தான் வசதியானால்,அங்கே மேலும் தொடர்வோம்.

ஸ்ரீரங்கன்
29.12.09

http://thesamnet.co.uk/?p=18429

சேதுரூபன் on December 29, 2009 12:23 pm

ப.வி.சிறீரங்கன்
ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா? குற்றமா? என்னதான் உங்கள் அறிவு? ஒரு செய்தியாளன் தமிழீழ போராட்டத்தை நியாயபடுத்துவது தவறா? குற்றமா? அப்ப எதிர்பது குற்றம் இல்லையா? எந்த உலகில் எவன் சொன்னது? இன்றும் இலங்கை தமிழ் ஊடகங்கள் ஆதரவாகவே செய்திகளை வெளியிடுகின்றது ஆகவே அவர்கள் குற்றவாளிகளா? புலிகள் வேறு செய்தியாளன் வேறு என்ற வேறுபாடு தெரியதவராக தாங்கள் இண்றும் உள்ளது வேதனைக்குரியது. சேதுருபன் ஏன் துரோகியாக வேண்டும்? சேதுருபன் புலி உறுப்பினராக இருந்தால்தானே புலிகள் அவரை துரோகி என்று அறிவிக்க முடியும்? சேதுருபன் துரோகி என்றால் இலங்கையில் ஊடகங்களில் சேலை செய்யும் 100க்கு மேற்பட்ட தமிழ் செய்தியாளர்கள் துரோகிகளா? ஊங்களை எட்டபன் என்று புலிகள் சொன்னால் அதற்கு சேதுவா பொறுப்பு?

சேதுவிடம் ஒரு இரட்டை முகமும் இல்லை. ஒரு செய்தியாளன் சட்டபடி அனைத்து தரப்புடனும் தொடர்பில் இருக்கவேண்டும் அவனே பூரணமான செய்தியாளன். தங்கள் வாதம் மாட்டுக்கும் ஆட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஆதங்கம் நண்பரே. உங்கள் பாதிப்புக்கு சட்டத்தை நாடலாம் அல்லது உளவியல் மருத்துவரை நாடலாம் அதுக்கு சேதுவிடம் பரிகாரம் இல்லை. சேது தங்கள் தாக்கத்தை செயதியாக மட்டும் வெளிவிட கூடியவன் அதுவே அவன் தொழில். சேது பாசிசக்கோட்டையில் உறுப்பினர் இல்லை என்றுதானே உரத்துக் கூறுகிறேன். சேது புலி என்றால் அவருடைய தகட்டு இலக்கம் என்ன? கண்டு அறிந்து சட்டத்தை நாடவேண்டிதுதானே? நீங்கள் புலியால் பாதிக்கபட்டால் சேதுவிடம் ஏன் சீறிப்பாய வேண்டும்? புலிகளை வக்காளத்து வாங்கியது சேது மட்டுமா? 500 இணையத்தளங்கள் 50 ஆயிரம் உலக ஊடகங்கள் 50 இலங்கை ஊடகங்கள் ஆகவே இவை அனைத்தும் பாசிசத்திற்கு பொறுப்பானவர்களா? அப்ப புலி தலைவரின் பேட்டியை ஒலிபரப்பிய உலகின் 1 இலட்சம் ஊடகமும் பொறுப்பாளிகளா? எட்டபர்.கொம் நானா நடாத்தினேன்? நிதர்சனம்.கொம் எனது இணையமா? நான் எவரிடம் இருந்தும் பாதிக்கவில்லை. நான் எழுதிய கட்டுரையில் சேந்து குடித்து என்றோ சேந்து படுத்து என்றோ எதுவும் எழுதப்படவில்லையே? அது நடந்திருந்தாலும் அதில் என்ன தவறு? அது எனது தனி மனித உரிமை இல்லையா? குடிப்பது தவறா? புலிகளை காட்டி கொடுப்பது எனது தொழில் இல்லையே? உமக்கு சட்ட உரிமை இல்லை என்று ஆர் சொன்னது? உமது சட்ட உரிமையை நான்தான் தட்டி பறிச்சனா? புலிகளால் நீங்கள் வெருட்டபட்டால் அதற்கு நானா பொறுப்பு? நண்பரே எனது தொடர்புகள் பரந்து விரிந்தவை. அவை இங்கு தேவை அற்றவை.

P.V.Sri Rangan on December 29, 2009 1:25 pm Your comment is awaiting moderation.

சேது,நீங்கள் பத்திரிகையாளன் என்பதைப் பயன்படுத்திவிடுவீர்களென நான் எண்ணியது சரி.அப்போது,நாங்கள் எல்லாம் உங்களது பாசையில் ஆடு மாடு வித்தியாசத்தில் கற்றுக் குட்டிகளா?

நீங்கள் ஊடகத்துறைக்கு வருவதற்குமுன் நானும் எழுத்தாளனாக-கட்டுரையாளனாக-பத்திரிகையாளனாகத்தாம் இருக்கிறேன்.இதுள் உங்களைமட்டும் இனம் காட்ட நீங்கள் குறித்த பத்திரிகையாளன் எனும் பதம் இப்போதைய”அரச-புலி”உறவுகள் குறித்துச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கும்.ஆனால்,வரலாற்றைத் திரும்பிப்பார்பவர்களுக்கு மிகத் தெளிவாகப் புலிகள் பக்கங்கள் தெரியும்.அதாவது, உங்களைப் போன்று பலருடன்-அரசு-அமைச்சகர்கள்,வெளியுலகமெனத் தொடர்பு வைத்த எத்தனை ஊடகவியலாளர்களைப் புலிகள் துரோகியாகக் கண்டு பொட்டுவைத்தார்கள் என்பது.ஒன்றா இரண்டா?

இப்போது,உங்கள் தரப்பு நியாயத்துக்கு இது பொருத்தமாகக் கையாளுகின்ற லொஜிக் ஏன் மற்றவர்கள் தரப்பில் பொருத்தப்பாடில்லை?

புலிகள் உங்களையும் பொட்டு வைக்கவில்லையெனக் கருதுவதாக இதைக் குறுக்காது,நமது சமுதாயத்தில் புலிகளது பாசிசப் பக்கங்களையும்,அவர்களுக்காக வக்காலத்துவேண்டிய ஊடகவியலாளர்களையும் நாம் இனங்கண்டு,அவர்களது இரட்டை வேடத்தைப் பொதுத் தளத்தில் அம்பலப்படுத்துவது ஜனநாயகப் பண்பு.உங்களது பாணியில் பத்திரிகையாளன் என்பது செய்திகள் தொகுக்கும் வேலைமட்டுமல்ல.அது,விரிந்த தளத்தில் எல்லாவகை எழுத்துக்களோடு சமுதாயத்தின் மீதான பிரச்சனைகளை முன் வைப்பவர்களுக்கும் பொருந்தும்.உங்களது பத்திரிகா தர்மத்தின்படி சமூக விரோதப் போராட்டத்தை எங்கே-எப்படி மக்கள் முன் வைத்தீர்கள்?புலிகள் குறித்து உங்கள் மதிபீடென்ன?பத்திரிகையாளன் அனைவருடனும் தொடர்பு வைப்பதுக்கும் தனிமனிதர் வைப்பதற்குமான வித்தியாசத்தைக்”காட்டிக்கொடுப்பு-செய்தி சேகரித்தல்”என்றோ அர்த்தப்படுத்தப்படும்?

P.V.Sri Rangan on December 29, 2009 2:00 pm Your comment is awaiting moderation.

சேதுவுக்கு இன்னுமொன்றையும் கூறிவிடலாம்.இப்போது நீங்கள் பத்திரிகையாளன் என்பவன் பலமட்டத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்பதும்,அவர்கள் அப்பொழுதுதாம் முழுமையான பத்திரிகையாளர் என்பதும் சரியானால்,இது இந்துப் பத்திரிகை இராமுக்கும் பொருந்திவிடுந்தானே?

நீங்கள் ஆம் என்பீர்கள் இப்போது.

ஏனென்றால், உங்களுக்கான ஒரே துரும்பு இது.ஆனால்,இத்தகைய சந்தர்ப்ப அரசியலை விட்டு,ஒரு பத்திரிகையாளன் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதும்,அதிகாரத்தை கேள்வி கேட்பதும் அவசியமானது.

„புலிகள்தானே இந்து இராமைத் துரோகி என்றனர்.நான் இல்லையே“ என்றும் உங்களால் சொல்ல முடியும்.இப்போது, நீங்கள் ஒரு பத்திரிகையாளன்.சுந்தரின் வானொலியில் குமாரதுரை குறித்து நீங்கள் கட்டமைத்த கருத்துக்களம், பத்திரிகைக் காரருக்கு உள்ள தார்மீகக் கடமையில்தாம் நிகழ்ந்ததா?

எனக்கு, மக்களுக்குத் துரோகமிழைத்த புலியுஞ்சரி;குமாரதுரையுஞ்சரி;இராமும்சரி;நீங்களும்சரி மக்களை ஏமாற்ற முனையும்போது அனைவருமே சமூக விரோதிகள்தாம்.மக்களைப் போலித்தனமாக எவர் ஏமாற்றிப் பாசிசத்துக்கு-அதிகாரத்துக்கு முண்டுகொடுக்கின்றாரோ(அதுள் நான் உட்பட)அவர்கள் பரந்துபட்ட மக்களதும்-ஜனநாயகத்தினதும் எதிரிகளே.

அவ்வளவுதாம்.

நீங்கள் உங்களை நியாயவாதியாகக்காட்டும் உரிமையை நான் மறுக்கவில்லை.அது அனைவருக்கும் பொதுவானதென்பதே எனது வாதம்.

சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?

ஃது,தேசம் நெட்டில் போடப்பட்ட பின்னூட்டம்.சேது கேட்கின்ற நியாயம் குறித்தான தேடலில், புலிகளால் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு,இன்றும்“துரோகியாக“பல புலிவிசுவாசிகளால் உளவியற்றாக்குதலுக்குட்படும் நான், அதே நியாயத்தைக் கேட்பதற்காக இதை பதிவிடுகிறேன்!
 
புலிகளும்,அவர்களது விசுவாசிகளும் இப்போது „வெள்ளைவேட்டிக் கத்தசாமிகளாக“த் தம்மை இனங்காட்டுகின்றனர்.பாசிசச் சேட்டையால் மற்றவர்களைக் கொன்று தள்ளியவொரு கூட்டம்,தம்மை மனிதாபிமானிகளாகவும்;ஜனநாயகவாதிகளாக்காட்டவும் இந்தத் தருணத்தில் வெளிப்படையாகப் பேசுவதென்று முலாம் பூசும்போது,இவர்களால் பாதிப்புக்குள்ளாகியவர்களும் அவர்களது நியாயத்தில் தமக்கும் அதே அளவுகோல் இருப்பதாகச் சொல்கின்ற உரிமைக்காக நானும் பேசுகிறேன்!
 
எனக்கு,இவர்களது ஒற்றைத் தன்மையிலான நியாயமும்,இரட்டை வேடமும் எப்போதோ புரிந்தவொன்றுதாம்.எனினும்,புலிகளது மக்கள் விரோதம் எத்தகையது என்பதைப் புரிய இப்பதிவு வழி வகுக்கும்.
 
நாம்,சமூக விரோதிகளைப் பல தளங்களில் இப்போது இனங்காணமுடியும்.அவர்கள் தம்மால் தாமே அம்பலமாகி வருகின்றனர்.
 
 

 
>>எனது இப் படத்தை பிலிக்கரிலிருந்து வெட்டியெடுத்துச் சாத்திரி என்ற புலிவிசுவாசி,எனக்கெதிராக-நான் மகிந்தாவை அடிபணிந்து மகிந்தாவிடம் ஆயுதம் வேண்டுவதாகப் பொருத்திப் புலிக்காகக் குரல் கொடுத்தார்.இப்படத்தை இங்கே போடுவதற்கான காரணம்:புலிகளது விசுவாசிகளும் புலிகளும் ஒரே பாதையில் நடந்தார்கள் என்பதற்கே!எட்டப்பர் டொட்.கொம்இப்போது,என்னைப்பற்றி எழுதிய பழைய லிங்கில் சண்டே லீடர் பற்றி எழுதிவிட்டுப் புதிய லிங்கில் எனது படத்தை எடுத்துவிட்டு,அவதூறைமட்டும் விட்டுள்ளார்கள்.படம் கழற்றியதற்கான காரணம்:அப்படம் ரீ.ரீ.என் தொலைக்காட்சியால் பிடிக்கப்பட்டதென்பதும்,அத்தொலைக்காட்சி புலியுடையதென்பதும்,எனவே,எட்டப்பர்.கொம் புலிகுரியதென்றதையும் இல்லாதாக்குவதற்கே.புலிகள் இப்படி எத்தனை சுத்துமாத்துச் செய்வினம் என்பது உலகறிந்தது.<<
எட்டபர்.கொம் பழையசுட்டி:
எட்டப்பர்.கொம் புதிய சுட்டி:
————
 
 
P.V.Sri Rangan on December 29, 2009 8:46 am Your comment is awaiting moderation.
 
சேது இரூபன் தன் வாக்குமூலத்துடன் ,தனக்கு இலங்கை அரசு-தூதுவராலயம் உட்பட ;அமைச்சகர்களுடன் தொடர்பிருந்ததாகச் சொல்கிறார்.இது பல வருடங்களாக.அத்துடன் ,புலிக்கு விசுவாசமாகவும் கருத்துக்கள் உரைத்துத்“தமிழீழ“போராட்டம்பற்றி- நியாயப்படுத்திப் புலிக்கு-புலியாகச் செயற்பட்டவர்.இது வரலாறு-புலம் பெயர் ஊடகங்களைக் கேட்டவர்கள்-பார்த்தவர்களுக்குத் தெரிந்தது.
 
 
இங்கு என்ன கேள்வியென்றால்,புலிகள் தம்மை எதிர்ப்பவர்கள் மாற்றுக் கருத்து வைப்பவர்கள்மீது „கருத்து“க்கட்டித் துரோகிகளாகப் பொதுத்தளத்தில் ஒருவரை“இனங்“காட்டும்போது-அவர்களுக்கு இலங்கை அரசோடும்-தூதுவராலயத்துடன் தொடர்பிருப்பதாகச் சொல்கிறது.இப்போது, சேது இரூபன் சொல்கிறார் ,தனக்கு, புலிகள் மற்றவர்கள் மீது போர்த்திய „அனைவருடனும்“ தொடர்பிருந்ததாக.
இங்கே, புலிகளது தர்மப்படி சேது ரூபன் ஏன் துரோகியாக முடியவில்லை?
 
மற்றவர்கள் ,புலிகளது பாசிசத்தை அம்பலப்படுத்தியபோது: டுசில்டோர்ப் மே தினத்தில் ரீ.ரீ.என் தொலைக்காட்சியின் கமராவில் பிடிக்கப்பட்ட எனது படத்துடன் -என்னை எட்டப்பனாகக் காட்டிப் புலிகள் „கருத்து“க்கட்டிப் போட்டது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்-இங்கே, புலிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இந்தவிசயம் சொல்லப்படுகிறது.
 
சேது ரூபனது வாக்குமூலம் மிக முக்கியமானது.புலிகளதும்-அவர்கள் விசுவாசிகளதும் இரட்டை முகத்தைப் புரிந்துகொள்ள.
 
 


 
 
புலிகளால் மிரட்டப்பட்டுத் தொடர்ந்து உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நான், இப்போது எங்கே நியாயம் கேட்கலாம்?;என்னைப் போல் எத்தனை தனிமனிதர்கள் இவர்களது பாசிசச் சேட்டையால் பாதிக்கப்பட்டோம்?
 
இப்போது ,சேது ரூபன் தனது உறவுகளை வெளிப்படையாகப் பேசுகிறார்.இதுவே-புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.புலிகளுக்கு வக்கலாத்து வேண்டியவர்கள் முதல், அவர்களது உறுப்பினர்கள்வரை அனைவரும் புலிகளது பாசிசத்துக்குப் பொறுப்பானவர்கள்.எனவே,இவர்களுக்கும் அதே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எட்டப்பர்.கொம்-நிதர்சனம் என எத்தனை நூறு புலி ஊடகங்கள் மக்களை வெருட்டிப் பணிய வைத்தனர்?
இன்று இவர்கள் சுயமாகப் பாதிக்கப்படும்போது நியாயம்-சட்டம் எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.
 
எனக்கு, இலங்கைத் தூதுவர் காரியாலய அதிகாரிகளோடு உறவென்றும்;சேர்ந்து குடித்ததென்றும்,புலிகளைக்காட்டிக் கொடுப்பதாகவும் உரைத்தவர்களே இப்போது தமக்கும் நியாயம் கேட்கின்றனர்.இதுள், சேது ரூபன் எங்கே நிற்கிறார்?
 
எம்மைப்போன்ற நிலையுள்ளா;
அன்றிப் புலிப் பினாமிகளது நிலையிலா?
 
 
சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?
 
 
புலிகளால் தொடர்ந்து வெருட்டப்பட்ட-உளவியற் தாக்குதலுக்குள்ளான-படங்கள்போட்டு எட்டப்பனாக இனம் காட்டபட்டவர்களுள் ஒருவனாக… இப்போது, நியாயம் எவரிடம் கேட்பதென்று யோசித்தபடி ,உமது(சேது ரூபன்)நிலையையும்-வாக்கு மூலத்தையும்கண்டு இதை எழுத முனைந்தேன்-அவ்வளவுதாம்!
 
„முற்பல் செய்தால் பிற்கல் விடியம்“என்று தமிழிலும் பல அநுபவ மொழி உண்டு.
 
 
அது, இப்போது நிஷமாகி வருகிறது.
 
…ம்… புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் கோட்டில் நியாயம் கேட்கிறது?
 
புலிகள் நிசத்தில் தற்போது அடையாளம் காட்டுவார்களா?
 
சேது ரூபனுக்கு இது தெரியாதா என்ன?
 
கேளுங்கள் சேது நியாயத்தை-அது உங்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை.மற்றவர்களுக்கும் எனப் புரிந்து அவர்களுக்கும் உள்ளதை அங்கீகரித்து.
 
இப்படி அங்கீகரிக்கும்போது, நீங்கள் „ஈ.ரி.பி.சி.“வானொலியில் வைத்த அனைத்துப் பழி சுமத்தலுக்கும் பொறுப்பேற்று.உங்கள் குரலில் நீங்கள் புலிக்காக மற்றவர்கள்மீது பழி சுமத்தியதன் ஒலியிழை பலரிடம் ஆதாரமாக இருக்கு.
 
அதை வைத்து, அவர்களும் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.09
காலைப்பொழுது மணி:9.45
 
 
 

புனைபெயரில் ஒழிந்து கொண்டு பத்திரிகா தர்மம் பேசும் எஸ் சிவரூபனுக்கு….. : நடராஜா சேதுரூபன்
 
 
எஸ் சிவரூபன் தனது சொந்த முகத்துடன் கட்டுரையை வெளியிடாமல் தனது உருட்டுக்கும் புரட்டுக்கும் புனைபெயரில் கவர் எடுத்துக்கொள்கின்றார். சேதுவும் தேசம் ஜெயபாலனின் பொறுப்பற்ற பத்திரிகா தர்மமும் (http://thesamnet.co.uk/?p=18428) . : எஸ் சிவரூபன் பத்திரிகா தர்மம் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. இவரிடம் உள்ள தாழ்வுமனப்பான்மையே இவரை மற்றவர்களது கல்வித் தகுதி திருமணம் போன்ற விடயங்களை கேவலப்படுத்த காரணம் என நினைக்கிறேன். என்னைப் பற்றிப் பிழையான தகவல்கள் பல உலாவருகின்றது. உங்களைப் போன்றவர்கள் ஒழிந்திருந்து செய்கின்ற ஊத்தை வேலைகள் தான் நிதர்சனத்திலும் இடம்பெற்றிருக்கும் என நினைக்கின்றேன். தற்போது நீங்கள் தேசம்நெற்றை இன்னொரு நிதர்சனமாக்கி இருக்கிறீர்கள்.
 
கட்டுரையாளர் எஸ் சிவரூபன் என்ற பெயருக்குள் ஒழிந்திருப்பவரிடம் நான் கேட்பது என்னைப் பற்றி எழுதிய ஒரு விடயத்திற்காவது உங்களுக்கு ஆதாரம் இருந்தால் அதனை நீங்கள் உங்களது சொந்தப் பெயரில் அல்லது எஸ் சிவரூபன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டே வையுங்கள். நான் எழுதுவதை நிறுத்துகின்றேன். அது எனது குழுந்தைகள் மீது சத்தியம். அப்படி ஆதாரத்தை வைக்காவிட்டால் நீங்கள் எழுதுவதை நிறுத்துங்கள்.
 
1. ‘புலிகளின் நிதர்சனம் டொட்கொம் என்ற புலிகளின் இணையத்தளத்திற்கு நிர்வாகி ஆகிய சேது என அழைக்கபடும் நடராசா சேதுரூபன் என்பவருக்கு தமிழ் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவன்’ என்கிறார் இந்த கட்டுரை எழுதியவர்.
 
அப்படியானால் அவர் என்ன மொழியில் இணையம் நடாத்தினார்? தொடர்பில் இருந்திருந்தால் தமிழைத் தவிர உலக மொழிகள் எதுவுமே பாவிக்காத புலிகளுடன் என்ன மொழியில் சேது உரையாடி இருப்பார்? நான் தற்போது தேசம் இணையத்திற்கு தமிழில் தான் பதில் எழுதி உள்ளேன். சேதுவுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது கட்டுரையாளனின் தலைசிறந்த கண்டுபடிப்பு.
 


 
நிதர்சனம் இணையத்தளத்தை சேதுரூபனாகிய நான் இயக்கியதற்கான ஒரு ஆதாரத்தைத் தானும் கட்டுரையாளர் முன்வைக்கட்டும்.
 
சேதுரூபனாகிய நான் பொட்டமானுடன் நேரடித் தொடர்பில் இல்லாத போதும் அப்படி இருந்ததாக அடம்பிடிக்கும் கட்டுரையாளர் நான் பொட்டம்மானுடன் நேரடித் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தட்டும்.
 
எந்தக் கொலைகளுடனும் அல்லது கொலை செய்தவர்களுடனும் எந்த தொடர்பும் வைத்திராத என்மீது சேது பல கொலைகளுக்கு நிதர்சனம் ஊடாக உடைந்தையாக இருந்தவர் என கூறபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள கட்டுரையாளர் ஒரு செய்தியைத் தானும் ஆதரமாக காட்ட முடியுமா என்பதே சேதுருபனாகிய எனது சவால்.
 
மத்திய கல்லூரி அதிபர் ராஜதுரையுடைய கொலைக்கும் அது பற்றிய செய்திக்கும் அது வெளியான இணைய ஆசிரியருக்கும் இணையத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தால் அதனை வெளியிடுங்கள். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்.
 
இவை சாதாரண குற்றச்சாட்டுகளும் அல்ல. தண்டனைக்குரிய குற்றங்கள். இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட புலம்பல்கள். ஒரு தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவர் ஒழிந்திருந்து கொண்டு புலம்பியதை விமர்சனம் என்ற பெயரில் வெளியிட்டது தேசம்நெற்றின் தவறு.
 
Sethuruban with TELO Selvam and EPRLF Sureshபுலிகளுக்கும் சேதுவாகிய எனக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய தேவை எனக்கு எள்ளளவேனும் இல்லை. எனக்கும் ஈ.பி.டி.பிக்கும் புளோட்டுக்கும் ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்எவ்க்கும் இராணுவத்திற்கும் பொலிசுக்கும் இன்னோரன்ன பல சக்திகளுடனும் தொடர்பு இருந்தது அதை நான் ஏன் மறைக்க வேண்டும்?
 
2. 1998 காலபகுதியில் ஊடகத்துறையில் புகுந்து கல்வியையும் முழுநேர ஊடகத்துறையையும் தொடராக ஆரம்பித்து இலங்கை அரச தொலைக்காட்சி கொழும்பின் தமிழ் தேசிய பத்திரிகை ஊடாக யுத்த களத்து செய்தி சேகரிப்பு வரை ரிபிசி வானொலி, ஈரிபிசி வானொலி அதன் பின்னரான பல சர்வதேச ஊடகங்கள் வரை வேலை செய்து வருகிறேன். இந்த 11 வருடகால வராலாற்றை ‘ஒரு வயது குறைந்த ஒரு மூன்றாந்தர கோமாளி’யாக வர்ணித்தமை எழுத்தாளரின் தாழ்வு மனப்பான்மையை கட்டியம் கூறி நிற்கின்றது.
 

   
Tsunami Donation_to_Veerakesari_Journalistபாலாவின் பச்சில் ஊடகத்துறைக்குள் புகுந்து பாலா இறக்கும் வரை தொடர்பில் இருந்த வீரகேசரி பிரதம ஆசிரியராக 2006 வரை இருந்த பாலவின் ஊரவரான நடராஜா ஊடாகவே சேதுவும் வளர்க்கப்பட்டான். நடராஜாவுக்கும் பாலசிங்கத்துக்குமான செய்தி தொடர்பாளனாகவும் சமாதான காலத்தில் தனிபட்ட முறையில் சேதுவாகிய நான் செயற்பட்டிருந்தமை முக்கியமானது. 1994ம் ஆண்டுவரை அன்ரன் பாலசிங்கத்தின் அதிகமான மறைவிடங்கள் யாழில் கரவெட்டி துன்னாலைப் பகுதிகளே.
 
வீரகேசரியில் வேலை செய்த காலத்திலும் பாதுகாப்பு தரப்பினரது அனுமதிப் பட்டியல் தொடர்பான விபரங்களை பெற்று வெளியிடுவதே எனது வேலையாக இருந்தது. இலங்கையின் யுத்த முனைக்கு பிபிசி ஆணந்தியுடன் ஒரு சந்தர்பத்தில் அனுத்த ரத்வத்தை சகிதம் வன்னி களமுனைக்கு சென்று வந்தேன்.
 
Sethuruban with Rathika Kumarasamy3. ஒரு செய்தியாளன் என்ற முறையில் இலங்கை அரசும் உத்தியோகபூர்வமாக சேதுவுடன் நோர்வே வந்த நாளில் இருந்து பல்வேறு அதிகார மட்டங்களில் தொடர்பில் இருந்தது. இன்று 08 வருடங்களாக இலங்கையின் நோர்வேக்கான தூதுவராலய அதிகாரிகள் அனைவராலும் சேது அறியபட்டவராகவே இருந்தான். சேது புலியாகவோ அல்லது புலி உளவுக்காறனாகவோ இருந்திருந்தால் இலங்கை அரசால் தனது நாட்டு பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். இன்றும் எடுக்க முடியும். இங்கு வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதையும் இலங்கை தூதுவராலயம் நோர்வே அரசுக்கோ அல்லது சேதுவுக்கு எதிராக ஏன் முன்வைக்க இல்லை?
 
Sethuruban with British Parlimentarians and Councilor4. சேதுரூபன் லண்டனை விட்டு வெளியேறவில்லை எவராலும் வில்லங்கமாக வெளியேற்றப்படவும் இல்லை. சேதுரூபனாகிய நான் சட்டரிதியாக 08-11-2002 யு.எல் இலங்கை விமானத்தில் லண்டனில் உள்ள கால்ரன்லெசரில் சொந்தச் செலவில் விமானச் சீட்டைப் பெற்று இலங்கை சென்றேன்.
 
அதன்பின் 2 வாரம் கழித்து மீண்டும் அதே இலங்கை விமானத்தில் கொழும்பில் இருந்து பிரித்தானியா வந்து, பிரித்தானியாவில் இருந்து சட்டரிதியாக நோர்வே சென்றேன். நேர்வே சென்ற பின்பும் சட்டரீதியாக பல தடவை பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன்.
 
ஒருவன் நாடு கடத்தபட்டால் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றபட்டிருந்தால் பிரித்தானிய நடைமுறை என்ன என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
 
5. „Marriage of convenience மூலமாகவா சேதுரூபன் நோர்வே சென்றார்?“ என்பது கட்டுரை எழுதிய எழுத்தாளரின் சிறுபிள்ளைதனமான குற்றச்சாட்டு. சேதுரூபன் திருமணம் முடித்த நாளில் இருந்து குறித்த அதே விலாசத்தில் மனைவியுடன் சீரும் சிறப்புமாக இரண்டு குழந்தைகளுக்கும் தகப்பனாக வாழ்ந்து வருகிறேன். தன்னை புனைப் பெயரில் ஒழித்துக் கொண்டு எனது திருமணம் பற்றி கதைகட்டுகின்ற எழுத்தாளர் பத்திரிகா தர்மம் பற்றி ஊருக்கு உபதேசம் வேறு. குறித்த முறையில் திருமணம் முடித்திருந்தால் நோர்வேக்கு சேதுரூபன் சென்றிருக்கவும் முடியாது. நோர்வே நாட்டு குடிஉரிமை பெற்றிருக்கவும் முடியாது.
 
Sethuruban with UNP politician Jeyalath Jeyawardana6. புலிகள் அழிந்த பின்பு மகிந்தவுடன் தொடர்பு எடுக்க முற்படுவதாக குற்றச்சாட்டு முனைவைக்கபட்டுள்ளது. ஆனால் அது தவறு தற்போதைய வெளிநாட்டு அமைச்சர் முதல் ஜ.தே.கட்சி அமைச்சர்கள் வரை பலருடன் நான் அண்மைக் காலம்வரை தொடர்பில்தான் இருந்தேன். இன்றும் தொடர்பில்தான் இருக்கின்றேன்.
 
7. ஜரோப்பாலில் எனக்கு ரி.பி.சி விடயம் தவிர்ந்த எந்த விடயத்திலும் கிறிமினல் றக்கோட் இருந்தது இல்லை. தற்போது ரிபிசி விடயமும்கூட ஒரு சட்ட தவறாக மாறியுள்ளதால் அதை கிறிமினல் றக்கோட்டாக பார்க்க முடியுமா, முடியாதா என்பது சட்டத்தின் முன் நிக்கிறது.
 
அண்டப் புழுகுத்தனமாக கட்டுரையை எஸ் சிவரூபன் எந்தவித ஆதரமும் இல்லாமல் எழுதி உள்ளார். அதனை தேசம்நெற் விமர்சனம் என்ற பெயரில் பிரசுரித்தும் உள்ளது. தேசம்நெற் பத்திரகா தர்மம் உண்மையானது என்றால் அந்த ஆதாரங்களை வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் எஸ் சிவரூபனின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவர் இதுவரை இப்படி எத்தனை அண்டப் புழுகுகளை எழுதினார் என்பது வெளிவரும்.
 
 
கட்டுரையாளர் மனசாட்சி உள்ளவராக இருந்தால் இதற்கு ஆதாரங்களை வைக்கும் வரை தயவு செய்து எழுதுவதை – புனைபெயரில் ஒழிந்திருந்து எழுதுவதை நிறுத்த வேண்டும்.
 
http://thesamnet.co.uk/?p=18429#comment-160078

செங்கதிர் சேகரா!

போர்-„ஆசிரியர்“ பெரி-துவக்க…

புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.


வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?

இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து „உம்பால்“ ஏங்கி அழிவலோ?

இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
„எங்கணாஅ!“பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!

கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
„வருவதோர் துன்பம் உண்டு“
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!

ப.வி.ஸ்ரீரங்கன்

28.12.09

செங்கதிர் சேகரா!

போர்-„ஆசிரியர்“ பெரி-துவக்க…

புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின்
அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும்
வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர்
ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட
காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம்
நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர்
அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று
ஈழம் தன் குடிகளைக் கூஉய்க்,
துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய
கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம்
குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.


வஞ்சம் செய்தார் கல்வியர் நந்திக் கடல் அமைய
குடிவளம் கவர்ந்தார் கறைஎன் கோயாம்?
வன்னிக் குடிஅழித்தார் பொய்யும் சூதும்
வஞ்சம் செய்வோர் வடிவுஎன் கோயாம்?
விடுதலை வேட்கையும் தாயின் கனவும் இழந்தே
சரண் புகு ஒளித்தார் முகம்என் கோயாம்?

இன்புற தம்மக்காள் இடர்எரி அகம்மூழ்கத்
துன்புறா இலாபங்காண் முறுவல் வெண்பேய்கள் போல்
மன்பதை அழிந்து ஒளிய,போர்-ஆசிரியர் தவறிழைப்ப,
புதல்வரை இழந்தேன்யான் அவலம்கொண் டழிவலோ?
கல்விச்செம்மையின் இகந்தகோல் கல்வியர் தவறிழைப்ப,
இம்மையும் இசைஒரீஇ,இனைந்து „உம்பால்“ ஏங்கி அழிவலோ?

இணைய-தளபதிகள் சூதுரைத்து எவர்மாண்டார்?
„எங்கணாஅ!“பொங்கி எழுந்தாயோ பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேணிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுது நீஇப்போ பயன் யாது?
அடங்கு நீ சடங்கு முடித்து, அமுதூட்டப் படிப்புண்டு;
சிவசிவா!ஈழவக் கூத்தினுள் வந்தீண்டும்
ஆயக்கல்வியர் எல்லீருங் கேட்டீமின்;
பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி;
செங்கதிர் சேகரா!மாசுகொள் மனிதரா நாம்?-
தவறறியாரோ அல்லர்;கடுப்பாய் உரைத்தேன் காண்!

கொடுங்கோலும்,போர்க்குடையும்,
வன்னிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கோன்-தன் கொற்றவாயில்
ஒற்றாடல் நடுங்க,நடுங்கும் உள்ளமும்;
இரவு வில்லிடும்;பகல்மிக் குண்டுவிழும்
இரு-நான்கு திசையும் அதிர்ந்திடும்;
„வருவதோர் துன்பம் உண்டு“
தேசியத் தலைக்கு யாம் உரைத்தும் நின்றதன் நடுவே;
நீ சிரஞ்சொடுக்கித் தாழ்ந்தது எங்கே?சொல் சேகரரே-சொல்!

ப.வி.ஸ்ரீரங்கன்

28.12.09

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்…

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்:அரசு இனவழிப்புக்
குற்றத்திலிருந்து தப்பும் முயற்சி!

„சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசினது யுத்தக்
குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது
நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை
மெச்சவும் ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் தமிழ்பேசும் மக்களது நீதியான
உரிமைகள் அந்த மக்களுக்கு எட்டாக் கனியாகிறது!“
 
ல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, „தமிழீழ“ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாக விரிகிறது.
 
அந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன இன்று!
 
இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முற்படுகிறது. இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டுத் தப்ப முனைகிறது சிங்கள ஆளும் வர்க்கம்.
 
இவை குறித்தெல்லாம் எப்போதாவது நாம் புரிந்துகொண்டோமா?ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் கட்டும் தமிழ் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டார்களா?அல்லது, மூன்றாம் நபருக்கு ஓட்டுப்போட அறைகூவலிடும் புதிய ஜனநாயகக்கட்சி இவற்றைப் புரிந்துகொண்டதா?
 


   
சரி இவற்றுக்கும் கீழாக,நாம் கட்சி கட்டுவதும்-இயக்கம் தொடங்குவதும் குறித்து யுத்தத்துள் பாதிக்கப்பட்ட மக்களது தெரிவு எப்படியென்பது பரவலாக விளங்கிக்கொள்ளப்படுகிறதா?இதைப் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் புரிந்துதாம் ஊடகங்களில் கருத்துக்கட்டுகிறார்களா?இன்றைய நெருக்கடிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்கள் என்ன தெரிவோடிருக்கின்றனர்?
 
 
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள்மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இதைத் தேசம் நெற்றும்,ஜெயபாலனும் மிகக் கபடத்தனமாகச் செய்து முடிப்பதில் பலவகைக் கூட்டுக்களைப் பின் தொடருவதும் நாம் காணத்தக்க அரசியல்.
 
இதனது மிக உயர்ந்த போக்கு, இலங்கையில் வரும் ஜனாதிபதித் தேர்தலையிட்டு நாம் அனுபவிப்பதுதாம்.
 
இலங்கை அரசினது கடந்த வன்னியுத்தம், தமிழின அழிப்பைச் செய்த கையோடு மீளக் கட்டியமைக்கும் படுமோசமான கட்சி, அரசியலில் மிகக் கேவலமாகத் திசைவழிகளை அமைக்கும் தமிழ்க் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்கள், இந்த வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களையும் மறந்து, அரசியல் செய்யும் இந்தத் தருணத்தில்தாம் நாம் இப்போக்குகள் குறித்துக் கவனத்தைக் குவிக்கவேண்டும்.
 
எதிர்ப்பு அரசியல் நிலையோ இன்று, ஆளும் வர்க்ககங்களுக்கிசைவாகப் பிற்போக்குச் சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது.மக்களை மிக இலகுவாகத் தமது வலுக்கரங்கள்மூலம் வரும் தேர்தலில் மகிந்தாவுக்கு ஓட்டுப்போட முயற்சிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளது சுயதேவை மக்களது அழிவின்மூலம் நிறைவேற்றப்படுகிறது.

 
இவற்றைப் பல தளங்கிளில் புரிந்தாகவேண்டும்:
 
அ: அழிவு யுத்தத்தினூடாகத் தமிழ்பேசும் மக்களது சமூக சீவியம் நிர்மூலமாகியுள்ளது,
 
ஆ: அவர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டது,
 
இ: தமிழ்ச் சமுதாயத்துள் குடிசார் அமைப்புகள் இல்லாதாக்கப்பட்டது,
 
ஈ: மக்களது ஆளுமையை அரை இராணுவ ஆட்சியின்வழி செல்லாக் காசாக்கியது,
 
உ: நேரடி ஜனநாயகத் தன்மையோ அன்றி மறைமுகமான ஜனநாயகத்தன்மையையோ இலங்கையின் இராணுவ-கட்சியாதிக்க-குடும்ப அரசியல் விட்டுவைக்காதது,
 
ஊ: தமிழ்பேசும் மக்களைத் திறந்தவெளிச் சிறைச் சாலையிலும்,மூடிய சட்டரீதியான சிறைச் சாலைகளிலும் அடைத்துவைத்துக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவது,
 
எ: தமிழ்பேசும் ஒரே காணத்தால் பெண்கள் பாலியில் ரீதாயாகச் சுரண்டப்பட்டு, நிர்பந்தமாக இராணுவத்தின்முன் தமது சுயதேர்வை,மரியாதையை இழந்து நிற்பது,
 
ஏ: தமிழ்பேசும் சிறார்கள் உளரீதியாக ஒடுக்கப்பட்டு,அவர்களது சுய ஆளுமையை உடைத்து,சமூகப் பொறுப்பற்று வாழ்வதற்கேற்ற வகைகளில் பண்பாட்டுச் சிதைவை ஏற்படுத்துவது,
 
ஐ: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது குடும்ப வாழ்வுமுறைகளில் ஏற்படுத்தப்பட்ட வெடிப்புத் தொடர்ந்து நிலவுவதற்கேற்ற முறைமைகளில் அவர்களது பூர்வீக வாழ்விடங்களை மறுத்து, முட்கம்பி முகாங்களென்ற“கொன்சன்ரேஷன் காம்புகளில்“வாழ அனுமதிப்பது.அதைச் சட்டரீதியாக நியாயப்படுத்துவது.
 
இத்தகைய நிலைமைகளைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் இலங்கை அரசானது, தேர்தல்மூலம் இவற்றைத் தீர்த்துவிடுவதாகப் பரப்புரை செய்கிறது.இது,தேர்தல் கோசமாக மாறியுள்ளபோது இதைவிடக்கொடுமை உலகில் நடக்க முடியாது.
 
தமிழ்பேசும் மக்களை ஒடுக்கி வந்த சிங்களப் பேரினவாதமானது இவ்வளவு கொடுமைக்கும் பொறுப்பாக இருக்கும்போது,இத்தகைய செயல்களுக்காககத் தண்டிக்கப்படவேண்டி நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற வகையில் மகிந்தாவை மக்கள் நலக் காவலாகக்காட்டத் தமிழ்க் கட்சிகளைப் பயன்படுத்துகிறது சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள்!
 
அதன் தெரிவிலேதாம் இத்தகைய தேர்தல் வியூகத்தின்மூலம் உலகை ஏமாற்றுகிறது.இத்தகைய ஏமாற்று வேலைகளுக்காகத் தமிழ்க்கட்சிகளைப் பயன்படுத்துவதனால் இலங்கை அரசு யுத்தக்கிரிமினற் குற்றத்தை நீர்த்துப்போக வைக்கிறது.இதற்கு உடந்தையாக அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் தமது வர்க்க நலனின் அடிப்படையில் ஒத்தூதுகின்றன.
 
இந்நிலையில், இவர்களின் முன்னே கண்ணீர்விட்டுத் தமது நிலையை விளக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது பரிதாப நிலை!
 
தொழில் வளர்ச்சியடைந்த தேசங்களினது இன்றைய தேசிய இனங்களின் எதிர்காலக் கனவு, தத்தம் தேசியத்தின் முன்பாய்ச்சலையும்,முன்னணி வகிக்கும் உலகப் பொருளாதார வலுவையும் கோரிக் கொள்ளும்போது,அங்கே நிலைத்திருக்கும் அரசியல் மற்றைய பலவீனமான சிறுபான்மை இனங்களை குதறுவதிலேலே குறியாக இருக்கிறது.தமக்குப் போட்டியற்ற இனக்குழுக்களாக்கிவிடத் துடிக்கும்“உலகச் சமூக ஒழுங்கில்“உயிர் வாழும் மானுட உரிமையைக்கூட தமது பொருளாதாரக் கனவுகளின் சாத்தியப்பாட்டோடுதாம் அனுமதிக்கும் வர்க்க நிலைமைகளில் இவர்கள்“ஜனநாயகம்“பேசுகிறார்கள்.அல்லது, அதற்கிசைவான விளக்கத்தை முன் வைக்கிறார்கள்.இன்றைய சிங்களப் பேரினவாதமும் இதற்கு விதிவிலக்காகச் செயற்படவில்லை.
 
தமிழர்களைத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய சிங்கள மையவாதத்தைக் கேள்விக்குட்படுத்தாத இந்தத் தமிழர் „ஜனநாயகவாதிகள்“ இதுவரை தொடர்ந்த போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திரணியற்றவர்கள்.இது சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும் சிறுபிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் தொடர்ந்தும் அடிமைப்படும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இது.இதனால் இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல், மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.
 

 
டக்ளஸ் போன்ற தமிழ்க் கட்சி அரசியல் தலைவர்கள், தம்மை மக்களது நலனுக்காக அர்ப்பணித்ததாகவும்,அவர்களது வாழ்வாதாரத்தைச் செப்பனிடுவதாகவும் தேர்தலை முன்வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்.தமது பங்களிப்புகளைப் பட்டியல்போட்டு மகிந்தாவினது பரோபகாரமாகவும் சொல்லுகிறார்கள்.இஃது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனமில்லையா?
 
சிங்களப் பேரினவாத யுத்தக் கரிமினல் அரசு,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பு யுத்தத்தால் பலிகொள்ளப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின்முன் குற்றவாளியாக நிற்பதும்,அது தமிழர்களுக்கு ஏற்படுத்திய கொடூரத்துக்குத் தண்டிகப்படவேண்டியதும் இப்போது செயலிழக்க வைக்கப்படுகிறது.மக்களது வாழ்வைச் செப்பனிடுவதும்,அவர்களுக்குக் காலகாலத்துக்குமான நஷ்ட ஈடுவழங்குவதும் இலங்கையை ஆளும் அரசுகளுக்கான தார்மீகக் கடமையாகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்துக்குத் தகுந்த அரசியல் தீர்வை முன்வைத்த பின்புங்கூட அவர்களுக்கான சிறப்புச் சலுகைகளை(வரிவிலக்குத் தொடங்கி யுத்தத்தால் கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நஷ்ட ஈடு வழங்குதல்)வழங்கியாகவேண்டும்.இஃது, ஜேர்மனியில்(ஜோமனியத் தேசியவாதம் சிந்தி-ரோமா மக்களை முதலாம்-இராண்டாம் உலக யுத்தத்தில் கொன்று குவித்து இனவழிப்புச் செய்தது.) சிந்தி ரோமா மக்களுக்கு இன்றும் வழங்கப்படுகிறது.இலங்கை அரசு சட்ட ரீதியாகப் பதிலுரைக்க வேண்டிய கடமைகளிலிருந்து தப்பவைக்கப்படுகிறது.இதைச் செய்பவர்கள் இன்றைய தமிழ்த் தலைமைகள் என்பது எவ்வளவு கொடுமையானது!
 
தமிழ்பேசும் மக்களுக்கு அரசு செய்வேண்டிய நிர்மானப் பணிகளை, தானே செய்து முடிப்பதாகச் சொல்லி விளம்பரம் தேடும் டக்ளஸ் போன்றவர்களே இன்று இலங்கையின் யுத்தக் குற்றத்தை மறைத்து, மகிந்தாவுக்காக ஓட்டுக் கேட்கிறார்கள்.இது, சாபக்கேடா இல்லை வர்க்கம் வர்க்கத்தோடுதாம் சேருமென்ற சமூகப் புரிதலா?
 
எமது மக்களின் அமைதி வாழ்வுக்கும்,அடிப்படை வாழ்வுரிமைகளுக்கும் எம் மக்களால் பரிந்துரைக்கப்படும் நியாயமான வாழ்வியல் தேவையிலிருந்து- கோரிக்கைகளிலிருந்து, இலங்கைத் தேசம் அரசியல் தீர்வுக்கான முன் பரிந்துரைகளை எமது மக்களுக்கு முன்வைத்தாக வேண்டும்.இதுவே, எமது மக்கள் இலங்கைத் தேசத்துக்குள் வாழும் மற்றைய இனங்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான பாரிய முன் நிபந்தனைகளை இலங்கையிடம் கையளிப்பதாகவும் கொள்ளத்தக்கது. இதைச் செய்ய வக்கற்ற இந்தத் திடீர் அரசியல் கூட்டுக்கள்-தலைமைகள் நமது மக்களின் எந்த நியாயமான உரிமைகளையும் நிஷத்தில் முன்னெடுக்க முடியாது.
 
இவர்கள் மறுதலையாக, இலங்கைப் பேரினவாத அரசை யுத்தக் குற்றத்திலிருந்து தப்புவிக்க முனைகிறார்கள்.இதைத் திட்டமிட்டுச் செய்யும் இந்தியச் சாணாக்கியமே நேரத்துக்கு முந்திய ஜனாதிபதித் தேர்தலூடாக அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் மகிந்தாவுக்கும்,பொன்சேகாவுக்கும் பின்னால் செல்லவிட்டு,அவர்கள்மூலமே யுத்தக் கிரிமனல்களை மக்கள் தலைவர்களாகக்காட்டி, இலங்கையின் இனவழிப்பை நியாயப்பத்தி யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட தமிழினத்தை ஏமாற்றி வருகிறார்கள்.இதை எந்த மனிதர்களும்-அரசும்,மனிதவுரிமை அமைப்புகளும் பாராமுகமாக இருக்கின்றனர்-இருக்கின்றன!
 
மே.18 இயக்கங்கட்ட அவசரப்படுபவர்கள், இலங்கையின் யுத்தக் கரிமினல்போடும் சதி அரசியலை எங்ஙனமும் தொடரவே உலக உளவு நிறுவனங்களுடனிணைந்து காரியமாற்றுகின்றனர்.இத்தகைய தொடர் இயக்கக் கட்டுமானத்தினூடாக மக்களது உண்மையான நீதி மறைக்கப்பட்டு,அவர்கள் தொடர்ந்தும் ஆதிக்கச் சக்திகளிடம் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.இதற்காகவேனும் மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சென்றாக வேண்டும்.அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைப்பதற்கான வழி முறைகளை நாம் தொடர்ந்தாற்றவேண்டியிருக்கிறது.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.12.2009

தேவதாசன்,டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி…

தேவதாசன்,டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி…

-காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் டன் தொலைக்காட்சிக்கு ஒரு நேர்முகப் பேட்டியளித்திருக்கிறார்.நாம் அதைப் பார்க்கக் கூடியதாக இன்று 20.12.09 ஒளிபரப்பினார்கள்.இப் பேட்டியில், தேவதாசனின் கருத்துக்களோடு-பல விதத்திலும்-தாழ்தப்பட்ட மக்கள்சார் நலத்துடன்-நாம் ஒத்துப்போகும் கோரிக்கைகளையும்,கடந்தகாலப் புறக்கணிப்புகளையும் குறித்துத் தேவதாசன் உரையாடினார்.அதன் தர்க்கத்தில் முரண்பட வேண்டுமென்றில்லை.இலங்கையில் ,அதுவும் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையில் ஏற்படும் வடு அவரது கருத்தின் நியாயத்தைக் குறைக்கவில்லை.அது, எம்மால் பல தளத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது.

பொதுவாகச் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகவும்,இன்று தாழ்த்தப்பட்ட அந்த மக்களது சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் தம்மைத் தகவமைத்துப் போராடுவது அவசியமே.அதற்காக அவர்கள் ஒரு அடையாளத்தை“தலித்து“என்று ஏற்றுக்கொண்டு,அதன்வழி இலங்கையில்-யாழ்ப்பாண மாவட்டத்தில் சாதியம் துப்பாக்கி நிழலில் மறைக்கப்பட்டதென்றும் ,இப்போது சாதியம் அதன் குணத்தை மேலும் வலுவாக்கி வருவாதகாவும் ஏற்றுப் போராடுகிறதற்கான தெரிவுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள்சார்பாக சபைகள்,கழகங்கள்,முன்னணிகள் அமைக்கிறார்கள்.அது நியாயமும்கூட.

யாழ்ப்பாணியச் சமுதாயத்தின் சாதியவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கு“தலித்து“எனும் சாதி ரீதியாக ஓடுக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கொண்டு போராட வேண்டுமென்று தீர்மானித்துள்ள தேவதாசன், இன்றைய பேட்டியில் தலித்துவ மக்களுக்கான குரலைத் தாண்டியும் பொதுவான அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் பிரச்சனைக்கும் தீர்வொன்றைச் சொன்னார்.அவரது அக் கருத்தின் மூலமாக எனக்குள் கேள்விகள் எழுகிறது.அவை எனது நியாயத்தில் தேவதாசன் கொண்டிருக்கும் அரசியலின் போக்குகளை மதிப்பீடு செய்வதற்கு முனைகிறது.

தமிழ்நாட்டின் தலித்துவ முன்னணிகள்-கட்சிகள் எங்ஙனம் ஒடுக்கு முறையாளர்களோடு தோழமைகொண்டு,அவர்களும் அதன் உறுப்புகளானார்கள் என்பதற்கு, நமக்கு விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் நல்ல உதாரணம்.அவ் வகையுள், தேவதாசன் தலைமையில் கட்டப்பட்ட தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கும் ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் நிலவுகிறதென்று இப்பேட்டியின் வழி அவர் சொல்லிச் செல்கிறார்.

சாதிய ஒடுக்குமுறையென்பதை உடைத்து, அம் மக்களுக்குச் சம அந்தஸ்த்தைப் பெறுவதற்குத் தலித்து எனும் அடையாளமும்,சாதிகள் குறித்த அடையாளமும், இப்போதும் அவருக்கு அவசியப்படும்போது தேவதாசன் அதைத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனையில் பொருத்தத் தவறிவிடுகிறார்(தமிழ்த் தேசிய இனம் என்ற ஒன்றில்லையோ?).

இலங்கையில், தமிழ்பேசும் மக்களது பிரச்சனைகளுக்குத் தமிழ்பேசும் மக்கள் „இலங்கையர்“ என்ற பதத்தின்மூலம் நாட்டை முன்னேற்றும்படி அறைகூவலிடுகிறார்.நாட்டைத்தான் சொல்கிறார்(அந்த நாட்டுக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் குறித்து „இலங்கையர்கள்“ என்றவுடன் அவர்களது பிரச்சனை தீர்கிறது).

நல்லது!

இதன்வழி,சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இல்லை என்று சொல்கிறீர்களென நாம் எடுப்பதற்காக உங்களது வாதத்தில் „காணப்படுவதற்குள் காணாததை“த் தேடிப் பார்ப்போம்.

இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையை ஏற்று,அவருக்கு நன்றி சொலவும் உங்களால் முடிகிறது.இந்த நன்றி, புலிப் பாசிசத்தை அழித்ததென்பதுற்குவெனவும் சொன்னீர்கள்.அதுவும் பறுவாயில்லை.நீங்கள் ஜனநாயத்தின்மீதுகொண்டிருக்கும் பற்ருறுதியின்பொருட்டு இது சாத்தியமே.

ஆனால்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தால் காலாகாலமாக ஒடுக்கப்படும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள் தம்மைத் தமிழர்களாகவும்,முஸ்லீம்களாகவும்,மலையகத்தவர்களாகவும் அடையாளப்படுத்துவதை மறுத்து, இலங்கையர்களெனச் சொல்வது எங்ஙனம் சாத்தியமாகிறது?

இலங்கை அரசினது சிங்கள இனவாமும் அதன் இனவொடுக்குமுறையும் சட்டரீதியாக நியாயப்படுத்தப்பட்டு, இலங்கையில் தமிழ்பேசும் மக்களை அது வேட்டையாடி வரும்போது,இந்த இனவொடுக்குமுறைக்கும் சாதியவொடுக்குமுறைக்கும் நீங்கள் கருத்துக்கட்டும் தளமே உங்களைச் சந்தர்ப்பவாதியாகவும்,மகிந்தாவுக்கு வக்கலாத்துவேண்டிப் பிழைக்கும், பிழைப்பு வாதியாகவும் நமக்குள் உங்களை அறிமுகஞ் செய்கிறது.

இலங்கைப் பேரினவாத அரசு, தமிழ்பேசும் மக்களை இனரீதியாக ஒடுக்கியபோது,அது ஒருபோதும் சாதி பார்த்துக் குண்டுவீசவில்லை,எறிகணைவீசவில்லை.பொதுவாகத்“தமிழினம்“எனும் அடையாளத்தின் வழி அது தனக்கான நியாய யுத்தத்தைச் செய்தது.இப்போதும், செய்து வருகிறது.இதை நீட்டி முடக்கத்தேவையில்லை.வன்னி நிலைமையும்,தமிழ்சமுதாயத்தின் குடிசார்நிலைமையும் இதைச் சொல்லும்.என்றபோதும், நீங்கள் „தமிழர்கள்-இலங்கைத் தமிழர்கள்“என்பதைவிட“நாம் எல்லோரும் இலங்கையர்கள்“என்றும், ஒற்றுமையுடன் நாட்டைக்கட்டியெழுப்ப வேண்டுமென்கிறீர்கள்.இங்கு, நாடு என்பதற்குள் அனைத்துப் பிரச்சனையும் முடிந்துவிட்டாதாக அர்த்தமாகிறது(வர்க்கப் போராட்டுத்துக்குள் சாதியப் போராட்டமும் உள்வாங்கப்பட்டு, நடாத்தப்படுவது நியாயமென மரபு மார்க்சியர்கள் சொல்லும்போது உங்களால் ஏற்க முடியாது „தலித்துவ“அடையாளத்துக்கு உங்களை இழுத்துச் செல்கிறது.இது, கவனத்துக்குரியது).

இதையே தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பொருத்தி“ஒன்றுபட்டு“ தமிழ்ச் சமுதாயத்தின் சுயநிர்ணயவுரிமையை, சிங்களப் பேரினவாதம் ஏற்கச் செய்வதற்கான அரசியல் போராட்டத்தைச் செய்ய மறுக்கிறீர்கள்.அங்கே,சாதியம் என்பது ஒருபோதும் ஒன்றுபட்டு அகற்றமுடியாது,அது மறைமுகமாக இன்னும் ஒடுக்குகிறது,புலியினது அழிவில் நேரடியாகவும் ஒடுக்குகிறதென்கிறீர்கள்.இது சரி.


ஆனால்“நாம் எல்லோரும் இலங்கையர்கள்“என்று „தமிழ் அடையாளம்“ மறுத்துச் செயற்படச் சொல்லும்போது,இலங்கை அரசு மறைமுகமாகவோ அன்றி நேரடியாகவோ இனவொடுக்குமுறையைச் செய்யவில்லையென இதன்மூலம் சொல்கிறீர்கள்.அதனால்தாம் மகிந்தாவே ஆட்சிக்கு மீள வரவேண்டுமென அவருக்காகப் பிரச்சாரஞ் செய்கிறீர்கள்.

தலித்துவப் „போராளி“ சுகன் பாணியில் உங்களைக் கட்டுடைத்தால்:

1: தலித்துவ அடையாளம் அவசியம்:தமிழ்ச் சமுதாயத்துள் சாதியவொடுக்குமுறை நிலவுகிறது. எனவே, சாதியத்தை முறியடிக்க,

2: தமிழர்கள் என்ற அடையாளம் தேவையில்லை: எனவே, தமிழ்பேசும் மக்களுக்கு இலங்கையில் இனவொடுக்குமுறை இல்லை என்கிறீர்கள்,

3: மகிந்தா இன்னுமொரு முறை வருவது நல்லது:அங்ஙனமென்றால்,இதுவரை மகிந்தா செய்த அரசியல் நியாயமானது,வன்னியுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் மகிந்தாவால் கொல்லப்படவில்லை என்றாகிறது,

4: மகிந்தாவை அதாரிப்பதன் உங்கள் தெரிவில்: மகிந்தா தலைமையிலான இலங்கை அரசு,இதுவரையான தமிழ்ப் பிரதேசங்களை முற்றுகையிட்டு,அனைத்துக் குடிசார்வுரிமைகளையும் சிதைத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் சமூக சீவியத்தையே இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடி, ஒரு இனத்தைத் தொடர்ந்து கண்காணித்து அதை உளவதைக்குள் தள்ளுவதும் தலித்துவ விடுதலைக்கு அவசியம் என்றாகிறது.

5: இத்தகைய அரசு,புலிகளை மட்டுமேதாம் அழித்தது.மக்களையோ அன்றி அவர்களது வாழ்வாதாரங்களையே அழிக்கவில்லை என்பதும் மகிந்தாவுக்குச் சொல்லும் நன்றியுள் அடங்குகிறது.

இப்படி „அற்புதமான“ கருத்துக்களை நீங்கள் சொல்வதுவரை „உங்கள் தலித்துவ“ச் சமூக மேம்பாட்டு முன்னணியும் இலங்கை அரசியலில் தமிழ்பேசும் மக்களுக்குக் குழி தோண்ட வந்து நிற்கிறது.

…ம்… நடாத்துங்கோ! நாலு வார்த்தை நாம் பேசுவதற்குகந்த சூழல் இப்போதிருக்கிறதென்ற தொனியுள் மகிந்தா மாமாவுக்குக் குடை பிடித்து…

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

21.12.2009

%d Bloggern gefällt das: