இலங்கையினது ஆறாவது ஜனாதிபதித் தேர்தலும், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலமும்:

இலங்கையினது ஆறாவது ஜனாதிபதித் தேர்தலும், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலமும்:


-சில குறிப்புகள்.

„சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதி பொன்சேகா மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறது!“

நேற்று 26.01.2010 நடந்தேறிய இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா இராஜபக்ஷ 58 வீத இலங்கைச் சிங்கள மக்களதும் சில சிறுபான்மை மக்களினங்களின் ஆதரவோடு மீளவும் ஜனாதிபதியாகின்றார்.பெரும்பாலும், மகிந்தா இன்றைய இலங்கைச் சூழலுள் அநேகமாகப் பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவ்வண்ணம், மகிந்தா இராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட „மகிந்தா சிந்தனைக்கூட்டு“ யுத்தக்கிரிமினல் சரத் பொன்சேகா 40 வீத இலங்கை மக்களினங்களின் ஆதரவு பெற்று, இத் தேர்தலில் தோற்றிருக்கிறார்.எனினும்,அவர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதியாகிறார்(இது,மேற்குலகத்துக்கு மிகச் சாத்தியமான அரசியலை இனி முன்னெடுக்கும்.அஃது,மகிந்தா தலைமையிற்கூட நிகழும்).


தோல்வி சரத் பொன்சேகாவுக்கு என்றபோதும்,அஃது,குறிப்பாக மேற்குலக மூலதனத்துக்கான தோல்வியாகவும்-வெற்றியாகவும் நீடித்திருக்கும்-இருக்கின்றது.

இந்த ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா பெரும்பான்மை மக்களது ஜனாதிபதியாகவும்,சரத் பொன்சேகா தோற்றாலும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் ஜனாதிபதியாகவே „இப்போது“பிளவுபட்ட சமூக உளவியலாக உருவாகியுள்ள அரசியல் போக்கில் புரிகிறது.இது,சிறுபான்மை மக்களது“ஜனாதிபதி“சரத் பொன்சேகாவென்றும்,பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாக மகிந்தாவும் உள்ளதாக ஒரு வகைச் சமூக உளவியல் தோன்ற வாய்ப்பளித்திருக்கிறது.

இந்த உளவியலின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் அரசியல் நெருக்கடியாக எழும் என்பதே எனது அச்சம்!

இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.

இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மை என்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை நீங்கள் விட்டாலுஞ்சரி என்னை இது அச்சப்படுத்துகிறதென்பது உண்மை.

இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில், மேலும், வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும்.இதன்வழி,இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அரசியல்-பொருளியல் நெருக்கடியையும் அதுசார்ந்த அடக்கு முறைகளையும் எதிர்கொள்வது உறுதி.

இதைச் சற்றுக் கீழே(…)விரிவாகப்பார்க்கலாம்.

மகிந்தாவுக்கு எதிரான இலங்கைச் சிறுபான்மை இனங்களது பாரிய எதிர்ப்பு அரசியலது தெரிவில், பொன்சேகா சிறுபான்மை இனங்களது ஜனாதிபதியாக மாறியது சிங்களச் சமுதாயத்தின் அடையாள அரசியலை மேலும் வலப்படுத்தும் என்பதில்:

1: இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மேலும் பிளவுபட்ட-இணைக்கவே முடியாத, இலங்கைப் பெருந்தேசிய உருவாக்கத்துக்கு எதிரான முட்டுக்கட்டைகள்.

2: தமிழ்பேசும் இலங்கையர்கள்,சிங்களம் பேசும் இலங்கையர்களது தேச இறையாண்மைக்கு எதிரான இயங்குநிலைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் எனும் சமூக அச்சத்தைப் பெரும்பாண்மை மக்களிடம் விதைக்கமுனையும் இனவாதிகளுக்கு ஒத்த அரசியல்-சமூக உளவியற்றளத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்.

3: இலங்கையில் இன்றுவரை சிறுபான்மைச் சமூகங்களைக் கண்காணித்துவரும் சிங்களப் பௌத்தமத மேலாதிக்கம்.மேலும், உறுதுணையாகவிருக்கும் சிங்கள அடையாளத்துடன் பிணையும் மூலதனத்துக்காக, சிறுபான்மை இனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ,அவர்களது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும் இது உந்து சக்தியாகும்.

4: தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் தமது அடையாள அரசியலில்“தமீழம்“சார் சமூக உளவிலோடு நெருங்கியே இருப்பதாகவும்,இதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்களை மேலும் கண்காணிப்பதும் அவர்களது சுயாதீனமான தெரிவுகளை மறுத்து நிற்பதற்கும், இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் பிரிவினைவாத அபாயமும் உள்ளதாகச் சுட்டி மேலும் ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் நிலைக்க முடியும்.

5: இத் தேர்தலானது தமிழ் பேசும் மக்களது உளவியலைப் புரிவதற்கும்,அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அரசியல் புரிவதற்குமான பல தெரிவுகளை ஆளும் மகிந்தா குடும்பத்துக்குப் „புதிய உத்வேகமாக“ வழங்கியுள்ளது.

இத் தெரிவுகளது வலையில் வீழ்தப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள், தமது எதிர்ப்பு அரசியலது தெரிவில் நியமான சக்திகளைத் தெரிந்துகொள்ளாதவரை மேலும் தொடரப்போகும் சில சதிகளைப் பார்த்தால்,அஃது, இலங்கையினது இறைமைக்கு அவசியமேயென ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் அரசியலுக்கு வலுச் சேர்ப்பதில் முடியும்.

இவைகளின்வழி,தமிழ்பேசும் மக்களைப் புலிகளது அழிவுக்குப்பின்பு சோதித்தறியும் ஆசிய மூலதனம் மேலும், தமது மூலதன நகர்வுக்கேற்றவொரு சூழலில் தவிர்க்கமுடியாத சில ஜனநாயக விழுமியத்தினாலான அரசில் முன்னெடுப்பை இனிமேலும் நகர்த்த வாய்ப்பில்லாது போகிறது.

நடந்துமுடிந்த தேர்தலில் சிறுபான்மை இனங்களது தெரிவுகொண்டு,இலங்கையினது „ஒரே“ தேசவுருவாக்கத்துக்கு ஆபத்தான உளவியலைக் கொண்டிருக்கிறதென்ற முடிவில் சிங்கள ஆளும்வர்க்கம் தொடர்ந்த-தொடரும் முதன்மையான அடக்கு முறைகளை மேலும் வலுப்படுத்தும்.

இன்றும், தமிழ்பேசும் மக்கள் இணக்கமற்ற பிரிவினைவாத உளப்பாங்கோடு சமூகவாழ்வைக்கொள்வதென்ற உண்மை தெரியப்படுத்தப்பட்டு, இராஜபக்ஷ தமிழ்பேசும் மக்களது மாவட்டங்களில் தோல்வியாவது சட்டரீதியான இராணுவ ஒடுக்குமுறையை மேலும் இருப்புக்குள்ளாக்கி விடுகிறது.

ஆக,ராணுவம் மெல்ல முகாம்களுக்குச் செல்வதும்,பரந்தபட்ட தமிழ் மக்களது வரலாற்றுமண்ணில் சிவில்சமூக நிறுவனங்கள் மீளவும் தோன்றியொரு ஜனநாயகச் சூழல் அரும்பி, இயல்பு வாழ்வு வருவது இதன்வழி தடைப்பட முடியும்.

அ: தமிழ் பிரதேசங்களில் வலுவான பிரிவினைவாதப் போக்குச்சார்ந்த சமூகவுளவியற்றளம் இன்னமும் அழியவில்லை. எனவே,இராணுவம் இச் சமுதாயத்தை கண்காணித்துப் பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை இல்லாதாக்க அது மேலும் தமிழ்பேசும் மக்களது மண்ணில் நிலைகொண்டு, அச் சமுகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்கும்.

ஆ: தமிழ்பேசும் மக்களுக்குள் இல்லாதான சிவில் சமூக நிறுவனங்கள் மேலும் உருவாகாதிருப்பதற்கான ஜனநாயகவிரோதச் சட்டங்களின்வழி, அவசரகாலசட்டம் தொடரும் இக்கட்டு இதன் போக்கில் மேலெழும்.

இ: தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பும், இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பும் சட்டரீதியான அங்கீகாரத்தோடு தமிழ்பேசும் மக்களது மண்ணில் இராணுவச் சர்வதிகாரதைத் தொடர்ந்து நிலைப்படுத்தும்.

இதுவே, இறுதியானதெரிவாகும் நிலையில், தமிழ்பேசும் மக்களது எதிர்காலம் இருள்மயமானது.

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்“என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி“செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அதிகமான தருணத்தில் பாதகமான தெரிவுகளோடு அரசியல் செய்கின்றனர் என்றும்,இதுள் முக்கியமாகத் தமிழர்களே செயற்படுவதாகவும் அடக்குமுறையாளர்களது நேரடியான அத்துமீறிய வொடுக்குமுறையால், இராணுவவாதம் மயப்பட்ட தமிழ்மக்களது வாழ்வு கருகிப் போகும்.

இஃது(இனஞ்சார்) அனுமதிக்கும் „மகா“பாதகங்கள்:

# தமிழ்ப் பிரேதேசம் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்புக்குள் இருத்தி வைக்கப்படும்.

# சிவில் சமூக உருவாக்கம் வருவதற்கான ஜனநாயகச் சூழல் மறுக்கப்படும்.

# தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் தொடர்ந்தும் அச்சத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படும்-பார்க்க வைக்கும் கருத்தியல் மேலாண்மை பெறும்.

# தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவக் கெடுபிடிகளுக்குள் தமது பொருளாதார-அபிவிருத்திகளை இழந்து வருவதைத் தடுக்கும் அரசியல் பலம் இல்லாதாக்கப்படும்.

# பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஒத்துழைப்பை இவைகளுக்காகப் பெறுவதில், தமிழ் ஆளும் வர்க்கம் சிங்க ஆளும் வர்க்கத்தோடு மேலும் நெருங்கிக்கொள்ளும்.

#பரந்துபட்ட தமிழ் மக்கள் ஆட்சியிலுள்ள தமிழ் தலைமைகளாலேயே திட்டமிடப்பட்டு பழி வாங்கப்படுவர்.
இதன் வழியான அரசியல் நடாத்தையில், மகிந்தா தொடர்ந்தும் தேச பக்தனாகவும்,அதியுத்தமமான சிங்களத் தேசியத்தின் குறியீடாகவும் மாற்றப்பட்டு, தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படும்.இதைச் செய்யவே மேற்குலகம் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பொன்சேகாவுக்கு வெற்றியயைத் தமிழ் பிரதேசங்களில் குவிக்க வைத்தது.இதன்வழி இனவாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்பட்டு, இலங்கையின் சுயவளர்ச்சி முடக்கப்படும்.

மகிந்தா குடும்பம் இதையெல்லாம் தவிர்த்து நேர்மையான அரசியலைக் கைக்கொண்டு, இலங்கையில் இராணுவவாதம் ஒடுங்கிய ஜனநாயகச் சூழலை இனி ஏற்படுத்துமென எவரும் நம்பும் அரசியல் நடக்கமுடியாது.

இது, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இராணுவ ஒடுக்குமுறையை மேலும் விரிவாக்கும்.எனவே, சட்ரீதியான அரசியலாகவும் இதை மாற்றும்.இது,“தமிழ் தேசியம்“உயிர்த்திருப்பதற்கும் அதைக் கையிலெடுத்து அரசியல் பிழைப்பை முன்னெடுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்குமான அறுவடைகளையுஞ் செய்யும்.இதன்வழி ஏமாற்றப்பட்டவர்கள்-படப்போகின்றவர்கள் தமிழ்பேசும் இலங்கையர்களே.

இறுதியாக: மகிந்தாவின் வெற்றி யானது, தொடர்ந்தும் இலங்கையில் இனவாத அரசியலும்,ஒடுக்குமுறையும் சிறுபான்மை இனங்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும்போது தமிழ் பேசும் மக்களது அரசியல் இருப்புப் பலமற்றது என்று நிரூபித்திருக்கிறது.தமிழ்பேசும் மக்களது ஆதரவின்றியே ஆட்சியில் அமர விரும்பும் பெரும்பான்மை இனக் கட்சிகளுக்குச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியலும்-சிறுபான்மையின ஒதுக்குதலும் இருந்தாற்போதுமானதென மீளவும் நிரூபித்திருக்கிறது.

இனிவரும் காலத்தில் எந்தக் கருணாவும்-டக்ளசும் மகிந்தாவுக்கு அவசியமில்லை.சிங்கள மக்களைத் திருப்பதிப்படுத்தும் இனம்வாதம் ஒன்றே போதும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த அபாயமான அரசியலைப் புரிந்தபோது அச்சம் மட்டுமே எஞ்சியுள்ள உணர்வாக…

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.01.2010

Advertisements

>சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதி: பொன்சேகா

>இலங்கையினது ஆறாவது ஜனாதிபதித் தேர்தலும், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலமும்:

-சில குறிப்புகள்.

„சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதி பொன்சேகா மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறது!“

நேற்று 26.01.2010 நடந்தேறிய இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா இராஜபக்ஷ 58 வீத இலங்கைச் சிங்கள மக்களதும் சில சிறுபான்மை மக்களினங்களின் ஆதரவோடு மீளவும் ஜனாதிபதியாகின்றார்.பெரும்பாலும், மகிந்தா இன்றைய இலங்கைச் சூழலுள் அநேகமாகப் பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவ்வண்ணம், மகிந்தா இராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட „மகிந்தா சிந்தனைக்கூட்டு“ யுத்தக்கிரிமினல் சரத் பொன்சேகா 40 வீத இலங்கை மக்களினங்களின் ஆதரவு பெற்று, இத் தேர்தலில் தோற்றிருக்கிறார்.எனினும்,அவர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதியாகிறார்(இது,மேற்குலகத்துக்கு மிகச் சாத்தியமான அரசியலை இனி முன்னெடுக்கும்.அஃது,மகிந்தா தலைமையிற்கூட நிகழும்).

தோல்வி சரத் பொன்சேகாவுக்கு என்றபோதும்,அஃது,குறிப்பாக மேற்குலக மூலதனத்துக்கான தோல்வியாகவும்-வெற்றியாகவும் நீடித்திருக்கும்-இருக்கின்றது.

இந்த ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா பெரும்பான்மை மக்களது ஜனாதிபதியாகவும்,சரத் பொன்சேகா தோற்றாலும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் ஜனாதிபதியாகவே „இப்போது“பிளவுபட்ட சமூக உளவியலாக உருவாகியுள்ள அரசியல் போக்கில் புரிகிறது.இது,சிறுபான்மை மக்களது“ஜனாதிபதி“சரத் பொன்சேகாவென்றும்,பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாக மகிந்தாவும் உள்ளதாக ஒரு வகைச் சமூக உளவியல் தோன்ற வாய்ப்பளித்திருக்கிறது.

இந்த உளவியலின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் அரசியல் நெருக்கடியாக எழும் என்பதே எனது அச்சம்!

இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.

இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மை என்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை நீங்கள் விட்டாலுஞ்சரி என்னை இது அச்சப்படுத்துகிறதென்பது உண்மை.

இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில், மேலும், வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும்.இதன்வழி,இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அரசியல்-பொருளியல் நெருக்கடியையும் அதுசார்ந்த அடக்கு முறைகளையும் எதிர்கொள்வது உறுதி.

இதைச் சற்றுக் கீழே(…)விரிவாகப்பார்க்கலாம்.

மகிந்தாவுக்கு எதிரான இலங்கைச் சிறுபான்மை இனங்களது பாரிய எதிர்ப்பு அரசியலது தெரிவில், பொன்சேகா சிறுபான்மை இனங்களது ஜனாதிபதியாக மாறியது சிங்களச் சமுதாயத்தின் அடையாள அரசியலை மேலும் வலப்படுத்தும் என்பதில்:

1: இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மேலும் பிளவுபட்ட-இணைக்கவே முடியாத, இலங்கைப் பெருந்தேசிய உருவாக்கத்துக்கு எதிரான முட்டுக்கட்டைகள்.

2: தமிழ்பேசும் இலங்கையர்கள்,சிங்களம் பேசும் இலங்கையர்களது தேச இறையாண்மைக்கு எதிரான இயங்குநிலைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் எனும் சமூக அச்சத்தைப் பெரும்பாண்மை மக்களிடம் விதைக்கமுனையும் இனவாதிகளுக்கு ஒத்த அரசியல்-சமூக உளவியற்றளத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்.

3: இலங்கையில் இன்றுவரை சிறுபான்மைச் சமூகங்களைக் கண்காணித்துவரும் சிங்களப் பௌத்தமத மேலாதிக்கம்.மேலும், உறுதுணையாகவிருக்கும் சிங்கள அடையாளத்துடன் பிணையும் மூலதனத்துக்காக, சிறுபான்மை இனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ,அவர்களது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும் இது உந்து சக்தியாகும்.

4: தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் தமது அடையாள அரசியலில்“தமீழம்“சார் சமூக உளவிலோடு நெருங்கியே இருப்பதாகவும்,இதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்களை மேலும் கண்காணிப்பதும் அவர்களது சுயாதீனமான தெரிவுகளை மறுத்து நிற்பதற்கும், இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் பிரிவினைவாத அபாயமும் உள்ளதாகச் சுட்டி மேலும் ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் நிலைக்க முடியும்.

5: இத் தேர்தலானது தமிழ் பேசும் மக்களது உளவியலைப் புரிவதற்கும்,அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அரசியல் புரிவதற்குமான பல தெரிவுகளை ஆளும் மகிந்தா குடும்பத்துக்குப் „புதிய உத்வேகமாக“ வழங்கியுள்ளது.

இத் தெரிவுகளது வலையில் வீழ்தப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள், தமது எதிர்ப்பு அரசியலது தெரிவில் நியமான சக்திகளைத் தெரிந்துகொள்ளாதவரை மேலும் தொடரப்போகும் சில சதிகளைப் பார்த்தால்,அஃது, இலங்கையினது இறைமைக்கு அவசியமேயென ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் அரசியலுக்கு வலுச் சேர்ப்பதில் முடியும்.

இவைகளின்வழி,தமிழ்பேசும் மக்களைப் புலிகளது அழிவுக்குப்பின்பு சோதித்தறியும் ஆசிய மூலதனம் மேலும், தமது மூலதன நகர்வுக்கேற்றவொரு சூழலில் தவிர்க்கமுடியாத சில ஜனநாயக விழுமியத்தினாலான அரசியல் முன்னெடுப்பை இனிமேலும் நகர்த்த வாய்ப்பில்லாது போகிறது.

நடந்துமுடிந்த தேர்தலில் சிறுபான்மை இனங்களது தெரிவுகொண்டு,இலங்கையினது „ஒரே“ தேசவுருவாக்கத்துக்கு ஆபத்தான உளவியலைக் கொண்டிருக்கிறதென்ற முடிவில் சிங்கள ஆளும்வர்க்கம் தொடர்ந்த-தொடரும் முதன்மையான அடக்கு முறைகளை மேலும் வலுப்படுத்தும்.

இன்றும், தமிழ்பேசும் மக்கள் இணக்கமற்ற பிரிவினைவாத உளப்பாங்கோடு சமூகவாழ்வைக்கொள்வதென்ற உண்மை தெரியப்படுத்தப்பட்டு, இராஜபக்ஷ தமிழ்பேசும் மக்களது மாவட்டங்களில் தோல்வியாவது சட்டரீதியான இராணுவ ஒடுக்குமுறையை மேலும் இருப்புக்குள்ளாக்கி விடுகிறது.

ஆக,இராணுவம் மெல்ல முகாம்களுக்குச் செல்வதும்,பரந்தபட்ட தமிழ் மக்களது வரலாற்றுமண்ணில் சிவில்சமூக நிறுவனங்கள் மீளவும் தோன்றியொரு ஜனநாயகச் சூழல் அரும்பி, இயல்பு வாழ்வு வருவது இதன்வழி தடைப்பட முடியும்.

அ: தமிழ் பிரதேசங்களில் வலுவான பிரிவினைவாதப் போக்குச்சார்ந்த சமூகவுளவியற்றளம் இன்னமும் அழியவில்லை. எனவே,இராணுவம் இச் சமுதாயத்தை கண்காணித்துப் பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை இல்லாதாக்க அது மேலும் தமிழ்பேசும் மக்களது மண்ணில் நிலைகொண்டு, அச் சமுகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்கும்.

ஆ: தமிழ்பேசும் மக்களுக்குள் இல்லாதான சிவில் சமூக நிறுவனங்கள் மேலும் உருவாகாதிருப்பதற்கான ஜனநாயகவிரோதச் சட்டங்களின்வழி, அவசரகாலசட்டம் தொடரும் இக்கட்டு இதன் போக்கில் மேலெழும்.

இ: தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பும், இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பும் சட்டரீதியான அங்கீகாரத்தோடு தமிழ்பேசும் மக்களது மண்ணில் இராணுவச் சர்வதிகாரதைத் தொடர்ந்து நிலைப்படுத்தும்.

இதுவே, இறுதியானதெரிவாகும் நிலையில், தமிழ்பேசும் மக்களது எதிர்காலம் இருள்மயமானது.

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்“என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி“செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அதிகமான தருணத்தில் பாதகமான தெரிவுகளோடு அரசியல் செய்கின்றனர் என்றும்,இதுள் முக்கியமாகத் தமிழர்களே செயற்படுவதாகவும் அடக்குமுறையாளர்களது நேரடியான அத்துமீறிய வொடுக்குமுறையால், இராணுவவாதம் மயப்பட்ட தமிழ்மக்களது வாழ்வு கருகிப் போகும்.

இஃது(இனஞ்சார்) அனுமதிக்கும் „மகா“பாதகங்கள்:

*தமிழ்ப் பிரேதேசம் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்புக்குள் இருத்தி வைக்கப்படும்.

*சிவில் சமூக உருவாக்கம் வருவதற்கான ஜனநாயகச் சூழல் மறுக்கப்படும்.

*தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் தொடர்ந்தும் அச்சத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படும்-பார்க்க வைக்கும் கருத்தியல் மேலாண்மை பெறும்.

*தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவக் கெடுபிடிகளுக்குள் தமது பொருளாதார-அபிவிருத்திகளை இழந்து வருவதைத் தடுக்கும் அரசியல் பலம் இல்லாதாக்கப்படும்.

*பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஒத்துழைப்பை இவைகளுக்காகப் பெறுவதில், தமிழ் ஆளும் வர்க்கம் சிங்க ஆளும் வர்க்கத்தோடு மேலும் நெருங்கிக்கொள்ளும்.

*பரந்துபட்ட தமிழ் மக்கள் ஆட்சியிலுள்ள தமிழ் தலைமைகளாலேயே திட்டமிடப்பட்டு பழி வாங்கப்படுவர்.
இதன் வழியான அரசியல் நடாத்தையில், மகிந்தா தொடர்ந்தும் தேச பக்தனாகவும்,அதியுத்தமமான சிங்களத் தேசியத்தின் குறியீடாகவும் மாற்றப்பட்டு, தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படும்.இதைச் செய்யவே மேற்குலகம் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பொன்சேகாவுக்கு வெற்றியயைத் தமிழ் பிரதேசங்களில் குவிக்க வைத்தது.இதன்வழி இனவாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்பட்டு, இலங்கையின் சுயவளர்ச்சி முடக்கப்படும்.

மகிந்தா குடும்பம் இதையெல்லாம் தவிர்த்து நேர்மையான அரசியலைக் கைக்கொண்டு, இலங்கையில் இராணுவவாதம் ஒடுங்கிய ஜனநாயகச் சூழலை இனி ஏற்படுத்துமென எவரும் நம்பும் அரசியல் நடக்கமுடியாது.

இது, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இராணுவ ஒடுக்குமுறையை மேலும் விரிவாக்கும்.எனவே, சட்ரீதியான அரசியலாகவும் இதை மாற்றும்.இது,“தமிழ் தேசியம்“உயிர்த்திருப்பதற்கும் அதைக் கையிலெடுத்து அரசியல் பிழைப்பை முன்னெடுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்குமான அறுவடைகளையுஞ் செய்யும்.இதன்வழி ஏமாற்றப்பட்டவர்கள்-படப்போகின்றவர்கள் தமிழ்பேசும் இலங்கையர்களே.

இறுதியாக: மகிந்தாவின் வெற்றியானது, தொடர்ந்தும் இலங்கையில் இனவாத அரசியலும்,ஒடுக்குமுறையும் சிறுபான்மை இனங்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும்போது தமிழ் பேசும் மக்களது அரசியல் இருப்புப் பலமற்றது என்று நிரூபித்திருக்கிறது.தமிழ்பேசும் மக்களது ஆதரவின்றியே ஆட்சியில் அமர விரும்பும் பெரும்பான்மை இனக் கட்சிகளுக்குச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியலும்-சிறுபான்மையின ஒதுக்குதலும் இருந்தாற்போதுமானதென மீளவும் நிரூபித்திருக்கிறது.

இனிவரும் காலத்தில் எந்தக் கருணாவும்-டக்ளசும் மகிந்தாவுக்கு அவசியமில்லை.சிங்கள மக்களைத் திருப்பதிப்படுத்தும் இனம்வாதம் ஒன்றே போதும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்கது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த அபாயமான அரசியலைப் புரிந்தபோது அச்சம் மட்டுமே எஞ்சியுள்ள உணர்வாக…

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.01.2010

சின்னக் கண்ணன் அழைக்கிறான்…

சின்னக் கண்ணன் அழைக்கிறான்…

ன்பு நண்பர்களே,என்னத்தைச் சொல்ல!உங்களோடு பேசிவிடத்தக்கதான மனமுடக்கம்-மகிழ்வு,அழுகை,சிரிப்பு,சிணுங்கலென எனது உலகத்தில் ஒன்றின்பின்னொன்றாக எல்லாம் நிகழ்ந்தபடி…இஃது, எல்லோருக்குந்தாம்.என்றபோதும், என்னைப் பெற்றெடுத்துப் பேருவகைகொண்டு பேரிட்டு,மன்னனாகக் கண்டு மகிழ்ந்தவள் படுக்கையில் வீழ்ந்துபோனாள்.

வயது 77.

„தானுடண்டது பேய் உண்டது,பிறருண்டது சிவனுண்டது“என்று சொல்லிச்சொல்லி எமக்கூட்டியவள்-„தானுண்டவள் பிள்ளை வளவாள், தவிடுண்டவள் கோழி வளவாள்“என்று முதுமொழியுரைத்து, எமக்கு ஊட்டியவள் வீழ்ந்துபோனாள்.எப்போது இவள் மரிப்பாளென நாட்பாத்திருக்கும் நிலையாய் அவளது வாழ்வு படுக்கையில்…

அன்னை!

அற்புதங்களைச் செய்பவள்.அடுப்புக்குள் எரிந்து மீள்பவள்!அணைத்தெடுத்து அமுதூட்டியவள்.அவளை எண்ணியபோதெல்லாம், அவளாள் உறவுகளாய்ப் பிணைந்த குருதிக்கூட்டம் அகம் நிறைக்க.அக்கா-தம்பி,தங்கை-அண்ணாவென அது நீண்டுபோகும்.எப்போதெல்லாம் மனமுடக்கமோ, அப்போதெல்லாம் நான் மகிழ்ந்திருக்கும் பொழுதுகளுக்குள் என்னைப் புதைப்பது வழக்கம்.கிஞ்சித்தும் துக்கித்து இரேன்.

துக்கம்-சோகம் எனக்குரிய உணர்வு இல்லை!

என் வாழ்வில் சோகந்தரும் பாடல் எனக்கு நெருக்கமானதில்லை.அழுகையிலும் சிரித்திருக்கும் எனது மனத்துக்கு, இந்தப் பாடல் என்றுமே பிடித்தது.

கேட்டுப் பார்க்கிறேன்.சோகம் துரத்தும் ஒரு அற்புதம் இதன்வழி…

கடந்தகாலத்தில், எனது பால்யப் பருவந்தாண்டிய பொழுதில் இப்பாடலைப் பாடியிசைத்த பொழுதுகளில் காதல் மலர்ந்திருந்தது.காதலில் சுவைக்கு அதிகமாக இனிப்பிட்டவள்,இப்போ எங்கோ ஒரு மூலையில் எவன் கரம்பிடித்து…

அன்னையைப்“பேய்க் காட்டி“அவளுக்காக இசைத்த பாடல் இது.டாக்டர் பால முரளிகிருஷ்ணா எனக்காகவே பாடிய பாடலாக…இது, என்றுமே என்னால்-என்னவளால் விரும்பப்படுவது.

எனது பதின்ம வயதில், இனித்திருந்த இலங்கை வர்த்தக சேவையில் என்றுமே மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உண்டு.அவர்கள் இருவருமே எமக்கு இருவிழிகளாக…

ஒருவிழி கே.எஸ். ராஜா,

மறுவிழி பி.எச்.அப்துல் ஹமீத்.

இந்தப் பாடலில் அவர் தொகுக்கச் சிறுமி ஒருத்தி எனக்கான பாடலைப் பாடுகிறாள்.

அம்மா.

அற்புதங்கள் செய்பவள்.அடித்தாலும்,அரவணைத்தாலும் அவளாலேதாம் அனைத்தும் ஆகுவது.அவளின்றி, எனக்கு எதுவுமே ஆவதில்லை.

எனது பால்யப் பருவத்திலேயே அவளுக்காய் என்னைத் தொலைத்தவன்.அன்பு, அம்மா என்பதாக…

காதலும், கனவும் தவித்திருந்த பொழுதில் அம்மாவுக்கு மறைத்து, அகமகிழ்ந்திருந்த அர்த்தமிக்க பொழுதில் அம்மாவை ஏமாற்றிச் சிறகடித்த பொழுதின் அம்மா ஞாபகத்தில்…

அந்த அம்மா படுக்கையில் வீழ்ந்து உயிர்விடத்துடித்துக்கிடக்க…

ப.விஜயரெட்னம் ஸ்ரீரங்கன்
21.01.2010

உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்…

உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்…

டந்த ஆண்டின் இறுதியிலும்,இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் உலகக் கம்யூனிச முகாம் இரண்டு அதி முக்கியமான கோட்பாட்டாளர்களை-தத்துவவாதிகளை இழந்திருக்கிறது.கடந்தாண்டு இறுதியில்,ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் பெருஞ்சிந்தனையாளரும்,பொருளாதார அறிஞரும்,உலக ஏகாதிபத்தியத்துக் எதிரான விமர்சகருமான யூர்க் கூப்ஸ்சிமித்தை(Prof.Dr.Juerg Huffschmid) இழந்தாம்.பேராசியர் கூப்சிமித் மிக முக்கியமான கோட்பாட்டாளர். ஜேர்மனியப் பாசிசத்துக்கு எதிரான போரில் எழுபதுகளில் ஜேர்மனிய மாணவர்களுக்கு வழிகாட்டியவர்.இதற்காக ஜேர்மனிய பெருநகரான பிறீமன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மார்க்சியத்தை அரசியல் பொருளாதாரத்துறையுள் இணைத்துக் கற்பித்திருக்கிறார்.இவரது இழப்புக்குப் பின்பாக நாம் இப்போது, இழந்திருப்பது பிரான்சினது இடதுசாரியமுகாமின் செயல் வீரனும், அதிமுக்கியமான கோட்பாட்டாளரும் தத்துவவாதியுமான டானியல் பென்சாய்(franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaïd ). இரண்டாவது தடவையாகவும், பாசிச எதிர்ப்புப் போராட்டக்களம் தனது சிந்தனையாளர்களை,வழிகாட்டிகளை மெல்ல இழந்திருக்கிறது.


( Prof:Dr.Juerg Huffschmid)

கடந்த வருடம் டிசம்பர் 5.2009 அன்று ஜேர்மனிய மார்க்சியர், பேராசிரியர் யூர்க் கூப்சிமித் நோய்வாய்க்குட்பட்டுத் தனது 69வது வயதில் மரித்தார்.இது மிகப்பெரிய இழப்பாக இருந்தது.80 களில் மார்க்சிய ஆய்வு வட்டத்துக்கு(In den 80er Jahren war er Mitarbeiter des Instituts für Marxistische Studien und Forschungen(IMSF))இவர் மிகப்பெரிய பங்களிப்புச் செய்திருக்கிறார்.பல விதமான போராட்டப்பாத்திரத்தை உலகமயப் பகாசூர நிதிநிறுவனங்களுக்கெதிராகத் தொடர்ந்து நடாத்தியவர்.இவரது ஆய்வுள்,சிந்தனைகள் இருபத்தியோராம் நூற்றாண்டில் மார்க்சியத்தின் புதிய போராட்ட வியூகங்களைக் கட்டியமைத்தது.இவரது இழப்புக்குப் பின் இப்போது பிரஞ்சிய மரபு மார்க்சியர் டானியல் பென்சாய் இவ்வலகில் தனது போராட்டத்துக்கு முற்றுப் புள்ளிவைத்து, அதை உலகு தழுவியமுறையில் கையளித்துச் சென்றுள்ளார்.

12.ஜனவரி 2010.அன்று, பிரான்ஸ் இடதுசாரியவட்டத்து தத்துவவாதியம்,கோட்பாட்டாளரும் போராளியுமான டானியல் பென்சாய் இவ்வுலகில் தனது போராட்டத்தையும்,வழிகாட்டலையும்விட்டுச் சென்றிருக்கிறார்.ஐரோப்பியச் சூழலுள் 70களில், முதலாளித்துவப் பாசிச ஒடுக்குமுறைக்கெதிரான போராளிகளில் மிக முக்கியமான பேராற்றல்மிக்கவர்கள் பிரான்சிலும்,இத்தாலியிலும் இருவர்.அவர்களுள் ஒருவர் இந்தப் பிரஞ்சிய மார்க்சியரடிக்கல் டானியல் பென்சாய்.மற்றவர்,இத்தாலிய நவ மார்க்சியர் அன்ரோனியோ நெக்றி(Antonio Negri).

(Antonio Negri)

அன்ரோனியோ நெக்கிறி இன்று தனது கடந்தகால மார்க்சியப் புரிதலிருந்து-புரட்சிகர கட்சியினது போராட்ட,யுத்த தந்திரோபாயத்திலிருந்து வேறொரு பாதையில் இன்றைய பல்தேசியப் பொருளாதார நகர்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.இவரது புதிய நூல்களான Commonwealth, Goodbye Mr.Socialism போன்றவை மிகப் பெரிய சர்ச்யை இடதுசாரிய வட்டத்துக்குள் செய்தபடியிருக்கிறது.போராட்டப்பாதையில் அதன் செல்நெறிகுறித்து நிறைய மாற்றங்களைக் கோருபவராக இருக்கின்றார் நெக்றி(எழுபதுகளில் இவரது ஓப்பறாய் (Operaismus)அமைப்பு நடவடிக்கையானது மிகப் பெரிய இரத்தக்களிரியை இத்தாலியில் தோற்வித்தது.இந்தப் போராட்டமுறையானது அவருக்கு முப்பதாண்டுச் சிறையாக அமைந்து தோல்வியிலும் முடிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும்).

தற்போதைய டானியல் பென்சாயினது இழப்பு, உண்மையான போராளியினது இடைவிடாத பல்முனைப் போராட்டத்துக்கு உதாரணமாக அமைந்துபோகிறது.சதா போரிட்டுக்கொண்டு பிரான்சினது வீதிகளில் மக்களது போராளியாக-மக்களைத்திரட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்தைப் பாசிச அரசை எதிர்த்துப் போராடிய டானியல் பென்சாய், ஒரு அற்புதமான சிந்தனையாளன்.இவரது நூல்கள் ஜேர்மனிய மொழியில் முழுமையாக மொழியாக்கப்படவில்லை.குறிப்பட்ட தத்துவார்த்தத் தெரிவுகளின் ஜனநாயகம் என்றால் என்ன?மற்றும் சுயதீனம் என்றவை மிக முக்கியமான தத்துவார்த்தத் தேடலை உள்ளடக்கியது.சதா மிகப்பெரிய தத்துவப் போராட்டத்தைச் செய்த இந்த மரபு மார்க்சியப் போராளி, கோட்பாட்டுரீதியாவும் மிக முக்கியமானவர்.இடதுசாரிய வட்டத்துள் நாளாந்தம் விவாதிக்கப்படும் தத்துவார்த்தப் போக்குள் அன்ரோனியோ நெக்றி,டானியல் பென்சாய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது.

90களில் டானியல் பென்சாய்க்கும் அநன்ரோனியோ நெக்கிறிக்குமான அரசியல் நெருக்கும், நெக்கிறியின் பிரஞ்சியப் புகலிட வாழ்வில் ஆரம்பித்துக்கொண்டது. லூசியோ அல் தூசரது கொள்கைகளுக்கும் இருப்பியல்சார் கோட்பாட்டுக்களுக்கும் நாளாந்தம் டானியல் பென்சாய் பெரும் சர்ச்சைக்குரியவராகவும் அவரது போராட்டச் செல்நெறி இடதுசாரியவட்டத்துக்கு நாளாந்தம் பாரிய அடிபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.

( franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaid )

என்றுபோதும்,மிகப் பெரும் முதலாளித்து எதிர்பாளரான இந்தத் தத்துவவாதி, உலகத்தின் முன் நமக்குப் பல உதாரணங்களைவிட்டுச் சென்றிருக்கிறார்.அல்ஜீரிய யூதப் பெற்றோருக்கு 1946 ஆம் ஆண்டு பிரான்ஸ் தூலூசில் பிறந்த டானியல் பென்சாய், பிரஞ்சியக் கம்யூனிசக் கட்சியில் இருந்து வெளியேறிவர்.பிரஞ்சிக் கம்யூனிச வாதிகளது பாராளுமன்றச் சகதியையும்,எதிர்ப்புரட்சி அரசியலையும் நிராகரித்து வெளியேறிய உண்மையான புரட்சிகாரன். இறுதிவரையும் புரட்சியைக் காட்டிக்கொடாத ஒரு பெரும் பாட்டாளிய வர்க்கத் தோழன்.எதிர்ப்புரட்சியை நிராகரித்து, புரட்சிகர இளைஞர் அணியை(Jeunesse communiste revolutionnaire-Revolutionary Communist Youth) 1966 இல் தோற்றுவித்து, உலகு தழுவிய ஏகாதிபத்திய எதிர்ப்போராட்டத்தில் பங்களித்த இந்த மார்க்சியரது இழப்பு மிக அதிகமான இழப்பாக இருக்கிறது.

இந்தவுலகத்தை மாற்றுவதிலும், முதலாளித்துவப் பயங்கரவாதப் பாசிசத்தை இல்லாதாக்குவதிலும் நேரடியாகக் களத்தில் நின்ற போராளியாக இருக்கும் அற்புதமான செயற்பாட்டாளர்கள் இருவரை, இப்போது ஐரோப்பிய இடதுசாரியவட்டமும் உலகமும் இழந்துபோனது எதிர்ப்பு அரசியலுக்கான நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.

பரந்துமட்ட மக்களது அரசியல் பொருளாதார வாழ்வுக்கான போராட்டத்தில் சலியாது போராடிககோண்டு, மாற்றுக்காகச் செயற்பாட்டில் இருந்த சிந்தனையாளர்கள்-போராளிகளில் இருவரை இழந்த இவ்வாண்டு கடினமான பணியை ஏகாதிபத்திய-பாசிச எதிப்புப் போராட்டக் களத்துக்குத் தந்திருக்கிறது.இறுதிவரை சளையாது போராடுவதும்,ஆய்வதும்-அறிவதும்,அதுசார்ந்து புதிய வியூகங்களை அமைப்பதையும் நாளாந்த வாழ்வாக்கிய இவர்களது வழியில் பயணிக்கும் ஒவ்வொரு பாட்டாளியவர்க்கச் சிந்தனையாளருக்கும் நாம் தலைசாய்கிறோமோ இல்லையோ, இவர்களது வழிகளையாவது புரிந்துகொண்டு உரையாடல்களையும்,போராட்டத்தையும் முன்னெடுத்தாகவேண்டும்.ஈடு செய்யமுடியாத சிந்தனையாளர்கள் இருவரது இழப்பும் நமக்குள் வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது.

ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால்
ஜேர்மனி

18.01.2010

பெரியாரது பாதையில் பாட்டுக்கட்டிப்பாடுகிறான் மயூரன்.

„அம்மா பகவான்,சாயிபாபா,கல்கி-கடவுள்,சாமி“,அவதாரங்கள்(…) அனைத்தும் செத்துமடியும் நலிந்த சமுதாயத்தின் வடிகாலாகப்பட,பரந்தபட்ட மனிதர்கள் இவர்தம் கால்களில் செருப்புகளாகக் கிடக்கின்றனர்.மக்களது வலியைத் தமது இருப்பின் படிக்கற்களாக்கிக் கோபுரத்தில் கலசமாகத் தம்மைக் குவிக்கும் இவர்களது கலை?…

பேசப்பட வேண்டியது!கூடவே,தடுத்தும் நிறுத்தப்படவேண்டியது.சந்தியில்வைத்துச் செருப்பால் அடித்து வெருட்டப்படவேண்டிய கயவர்தாம் இவர்கள்!

„அவதாரங்கள்“

//எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்

பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?//

நாடிபிடித்து இவர்தம் நம்பிக்கை மோசடியை அம்பலப்படுத்துவது மிக அவசியமானது.மயூரன், அற்புதமாக எழுந்து,இவர்களைக் குறிவைத்துக் காறி உமிழ்கிறான்.கவிதைகொண்டு இக் கயமைமிகு மனிதர்களைக் கேள்விக்குட்படுத்துகிறான்.இது,மானுடர்தம் விடுதலைக்கு அடிப்படையான எதிர்க் கலை முயற்சி.

„கலை“.

கலை என்பது என்ன?

இக் கேள்வியின் தொடர்ச்சியுள் பற்பல தத்துவங்கள் மனிதவுணர்வுக்குள் அநுபவப்பட்டுள்ளன.கலையினது உயிரே கலைக்காகவென்றும் அது,மனிதவாழ்வுக்குச் சேவிக்க முடியாதென்றும் பற்பல வாதப்பிரதிவாதங்கள் நடந்தேறிவிட்டன.டறாக்கோனியிச(Draconian constitution)தீர்ப்புகள்,மக்கள் மடியிலிருந்து கலையைத் தட்டிப்பறித்துக்கொண்டது.இந்தக் கலைவடிவமானது மனிதப் படைப்பாற்றல் அனைத்தையுமே உள்ளடக்கிய நிகழ்த்துகை என்பது எனது புரிதல்.

இசை,நடனம்,நாடகம்,இலக்கியம்,சிற்பம் என்பதையெல்லாம் உள்ளடக்கிய நுண்கலையானது, இன்று பன்முகத் தன்மையில்வைத்து மனித ஆற்றலுடன் பேசப்படவேண்டியிருக்கிறது.கலை, மக்களுக்கானது.மக்களிடமிருந்து உருவாகுவது.ஆன்மீகங்கூட ஒரு வகையில் மனிதப்படைப்புத்தாம்.அங்கே,படைப்பாற்றலே ஆத்மீகவுறவைத்தீர்மானித்தது.இறையென்பது மனித ஆற்றலின் அற்புதமான வெளிப்பாடு.படைப்பினது உச்சத்தில் மனிதர்கள் தம்மை இறை நிலைக்கு உயர்த்துவதே இறையுட் கோட்பாடாகி இருக்கவேண்டும்!என்றபோதும்,கடவுளைவைத்துக் காசுகாணும் இழிமைத்தனத்துள் மனித உறவுகள் கீழ்மைப்பட படைப்பாற்றலைத் திருடியது ஆதிக்கம்-அதிகாரம்.அன்றைய,கிரேகத்தில் டறாக்கோனியினது அமைப்பில் நீதீயாகவும் இவை நிலைபெற்றன.

இன்று,மக்களினங்கள் தமது படைப்பாற்றலால் பிளவுப்படவில்லை.அதைச் சந்தைப்படுத்துவதில்,நுகர்வுக்குட்படுத்துவதில் பிரிவுகள்-பிளவுகள் ஏற்படுகிறது.அங்கே,ஆதிக்கம்,அதிகாரம் கலையின்மீது பண்பாட்டு மேலாதிக்கத்தை வர்த்தகக்கண்ணோட்டத்துள்ளும்,இனஞ்சார் மேன்மையிலும் உருவாக்கிக்கொண்டதன் பின்பு, இறைநிலை கடவுளாக மாற்றப்பட்டு இன்றுவரையும் இந்த அமைப்பின் விளிம்பில் இருப்பவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.அதன் துணைகொண்டு, உளவியல்ரீதியாகவும்,பௌதிகரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள்.இது,முற்றுமுழுதாக மனித ஆற்றலை அக ரீதியாகவும்,புற ரீதியாகவும் சுரண்டியபடி மேட்டிமைக் குழுவிடம் ஒரு ஆயுதமாக அவர்களுக்குச் சேவை செய்கிறது!

சமூகத்தின் மீது கணிசமான தாக்கத்தைச் செய்யும் இறைசார் வாழ்வுநிலை,மக்களின் பெரும்பகுதியை மிக மோசமாக ஏமாற்றிப் பிழைக்கும் ஒரு கூட்டத்தின் திமிர்த்தனமான ஒடுக்குமுறையாகவும்,அதிகார நிறுவனமாகவும் மாறி இருக்கிறது.இது,மனித நடாத்தையின் அனைத்துப் பரிணாமத்தையும்,கருத்தியல் தளத்தில் காவுகொண்டபடி மனித அமைதிக்கு எதிராகச் செயற்படுகிறது.

„இது மதம்!“

மதம் மக்களுக்குப் போதை.தூக்கத்திலாழ்த்திக் கட்டிய துணியையும் உருவிவிட்டு மனிதத்தை அம்மணமாக்குவது.

Ammaa Bhagavan Song Tamil from mauran on Vimeo.

அற்புதங்களையும்,அவதாரங்களையும் கட்டித்தகவமைக்கும் ஒரு நிலையாகப் படைப்பாற்றலிதனால் சீரழிந்துபோகிறது.மனிதர்கள் தம்மை ஒடுக்கும் அதிகார நிறுவனத்திடம் தமது படைப்பாற்றலைப் பறிகொடுத்து, அதனால் சுரண்டப்பட அனுமதித்துள்ளார்கள்.இது,மேலும் மனிதர்களைக் குறுக்கி அகரீதியாக ஒடுக்குவதில் இந்தக் கடவுள் நிலை மிகவீரியமான கருத்தியல் ஒடுக்குமுறை ஜந்திரமாக மதங்களைப் படைத்துக்கொண்டது.இங்கே,மகத்தான மனிதத் தேடல், அதே மனிதக் குழாத்தை வேட்டையாடுவதில் மிகப்பெரிய ஆதிக்கச் சக்தியாக-அதிகார பீடமாக நம்முன் நிலைபெற்றதன்தொடரில் அது,பொருளாதார அடிக்கட்டமானத்தின் மேல்மட்டப் பாதுகாப்புக் கவசமாக-அமைப்பாகிச் சீரழிந்து மக்களது ஆத்மீகத் தேவைக்குக் குறுக்கே நிற்கிறது.இது,பெரிதும் நோவுடைய வலி.

இந்தவலியைச் சொல்வதில்,அதே கலைத்துவப் படைப்பாற்றலுடன் மயூரன் சமூகத்தின் விளிம்பில் நிற்பவர்களோடு தன்னைப் பிணைத்து, கயமைமிகு ஆதிக்கச் சக்திகளிடம்-கடவுள் அவதாரக் கள்வரிடம் பலியாகும் தன்வர்க்க மனிதருக்காகக் குரல் கொடுப்பதில் கலகக்காரனாகிறான்.

* Is this what „God-Kalki-Samy“ purposed for me and for the rest of mankind?,

* Where can I find help to cope with my problems?,

* Is there any hope that we will ever see pease on the earth?.

இத்தகைய கேள்விகள் இவ்புவிப்பரப்பெங்கும் வாழும் மனிதர்களுக்குப் பொதுவாகப் பொருந்தியுள்ளது.

இதற்குப் பதில் பைபிளில்,பகவத் கீதையில்,குரானில் இருப்பதாகவும் இத்தகைய“அவதாரங்கள்“சொல்லக் கேட்டோம்.இஃது, பல்லாயிரம் வருடங்களாகத் தொடரும் கதை.இதை எதிர்த்த புத்தனும் கடவுளானான் இவர்களால்!என்ன கொடுமை இது!

பெரியார் வந்தார்.பேரடி கொடுத்தார்.என்றபோதும்,மதம்மீதான மடமை மீளவும் தொடர்கதையாக…

ஏன்?

சீர்திருத்தம் சமூகத்தை அடியோடு மாற்றுவதில்லை.விடை எளிமையானது.இந்தச் சமுதாய அமைப்பு முழுமையாக மாறாதிருக்கும்வரை இது தொடர்கதை.மக்கள் இவர்களிடம் பலியாவதும் தொடர்கதையே!

என்ன செய்யலாம்?

யுத்தம்,பசி,பட்டுணி,வறுமையின் கொடூரம் மனிதவாழ்வை அர்த்தமில்லாதாக்கிவிட்டுள்ளது.அனைத்தினது பெயராலும் மனித அழிவுகள் பல வடிவங்களில் பரந்துபட்ட மக்களை அண்மிக்கும்போது, அவர்கள் சோர்ந்துபோய் ஆன்மா ஒடுங்கிய நிலையில் இறுதியாகச் செல்லும் இடம் கடவுள் என்ற கருத்தியல் எல்லையாக இருக்கும்.அந்த எல்லையில், பதுங்கிக் கிடக்கும் கொடிய மனிதர்கள்,கல்கியாகச் சாயிபாபாக்களாக,ஏசுவுக்கு-கர்த்தருக்கு,அல்லாவுக்கு தூதுர்களாக,அவதாரங்களாகத் தம்மைக் காட்டியடி மக்களது வாழ்வையும் அவர்தம் உடலையும்-உள்ளத்தையும் சுரண்டிக் கொழுக்கின்றனர்.இத்தகைய திருடர்களை இந்தச் சமூகத்தின் பொருளாதார அமைப்புகள்முதல் அதிகார-ஆளும் வர்க்கம்வரை நிதியளித்துக் கட்டிக் காக்கின்றது.

மீளவும், அதே கேள்வி:“என்ன“ செய்யலாம்?

இக் கேள்விக்கு,அவர்களை அம்பலப்படுத்தியாகவேண்டும் என்பதே விடை!

ஏன்?,

இச் சமுதாய அமைப்பு புரட்சிகரமாக மாற்றப்பட வேண்டும்.
இதைவிட வேறு வழி இல்லை!
அப்படி புரட்சி நீங்கிய „மாற்றுவழி“ இருக்கவும் முடியாதாகிறது.

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அந்தக் கொடிய கடவுள் வியாபாரிகள்,மக்களது அடிமைத்தனத்தை முழுமையாக்கித் தமது எஜமானர்களுக்கு ஏற்ற கையாலாகாத மக்கள் குழாத்தை இப்புவியில் ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.இதற்காகவே, அவர்களுக்குக் கோடிக்கணக்கான செல்வத்தையும்,“மேன்மைப்பட்ட“ இனங்களது உறுப்பினர்களையும் வழங்கி,இத்தகைய கயமைவாதிகளை மக்களிடம் முன்தள்ளி,மக்களுக்கு நம்பிக்கைய இவர்கள்பால் வருவதற்கான ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இந்த ஒளிவட்டத்தை தனியார்மயப்பட்ட ஊடகங்கள்-குறிப்பாகத் தொலைக்காட்சிகள்-செய்து முடிக்கும்போது,அவர்களது தொலைக்காட்சிக்கான வரும்படியும் இரடிப்பாகிறது.இந்தச் சூத்திரம் மக்கள் நலமென எமக்குச் சொல்லப்படுகிறது.பொதுத்தளத்தில் அதுவே,பதிலாகவும் உரையாடலாகிறது.

பிறகென்ன?

ஆகா!அற்புதமான சாமி!“அம்மா-அப்பா“ சாமிகள் அகிலம் முதற்கொண்டு வணங்கப்படுவர்.

„அதோ,வெள்ளைக்காரன்-வெள்ளைக்காரி கூடச் சாமியை வணங்குகிறார்களே!,அப்போ சாமி உண்மையானவர்தான்.பொய்யர்களை வெள்ளைக்காரர் நம்ப மாட்டார்கள்.“

அம்மாடியோ,சரியாப் போச்சு.

இதுதானே இவர்கட்கு அவசியமானது?

அதைச் செய்யவே, „நிதி,வெள்ளையர்கள்,வேந்தர்கள்,நட்ஷத்திரங்கள்“ என்பது-என்பவர்கள் இத்தகைய கயவர்களிடம்(அம்மா பகவான் வகையறா) வருவிக்கப்படுபவர்கள்-தருவிக்கப்படுபவை.

„அப்பாவிகளே,அரவணைப்பற்றவர்களே,சமூகத்தின் விளிம்பில் உயிர்துறப்பவர்களே,இதோ!உங்கள் விழிகள் முன் கயவர்களது அணிவகுப்பு.அவர்களைக்கொண்டு,உங்களது மிச்சசொச்ச கோவணத்தையும் உருவப்போகிறார்கள்,கவனம்!!!“ இப்படிச் சொல்வது, நம்மால் முடியும்.ஆனால்,கலையுணர்வு,அதன் சூட்சுமம் புரிந்தவர்கள் தம்பி மயூரன்பாணியில் பாடியுய்வினை செய்வர்.

அழகான குரல்,அற்புதமான வரிகள்,செவியைக் குழையும் மெட்டு.மக்களை ஒடுக்கும் அதிகார மையத்தை இசையெனுஞ் சாட்டைகொண்டு சொடுக்குவது அற்புதமான போராட்டவடிவம்.அதுள்,காட்சியுகத்தின் உச்சம் மனிதத் தொடுநிலையைக் காவுகொடுக்கப்பட்ட உயிர்கொண்டு சொல்லுதல் இன்னுஞ் சிறப்பு!மயூரனின் சமூக உணர்வு இங்கே உச்சமான சமுதாய ஆவேசமாக இருக்கிறது.இது, ஒரு மனிதத்தொடு நிலை.தன்வர்க்கச் சுயவுணர்வு.கலைவடிவத்தின் யதார்த்தவாதம் இதுவே.குறிப்பட்ட சூழலை,குறிப்பட்ட வடிவத்தில்,குறிப்பட்ட தெரிவில் சொல்வது சோஷலிச யதார்த்த வாதம் என்பர்.இது,மயூரனிடம் சிறப்பாக வெளிப்படுகிறது.கண்டதையும்,கேட்டதையும் வாந்தியெடுக்கும் இயற்கைவாதம் அடியோடு மயூரனிடம் இல்லாது போகிறது.இதுவே,மயூரனின் பாடலின் சிறப்பு.

நாற்பது பக்கத்தில் கட்டுரை எழுதும் நமது செயற்பாட்டை, நாலே வரிகளில் அழிகாகச் சொல்லிக் கயவர்களைத் தோலுரிக்கும் மயூரன் விளிம்பு மக்களோடு நின்று, தனது கடமை எதுவெனவுரைக்கின்றான்.வாழ்வென்பது சதா போரிடுதலாக மாறியுள்ளபோது,நானோ இல்லை நீயோ தூங்கிக்கிடந்தால் எமது தலைகளைக் கொய்துவிடுவர்.நாம் காணும் ஒவ்வொரு திசையும் இந்தக் கொடிய அமைப்பு மனிதப்பாடைபாற்றலை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியபடி, அப்படைப்பாளியையே வேட்டையாடும்போது,பாத்திருப்போர் பாவிகளே-இவர்கள் வாளாதிருக்கும்போது,இவர்கட்குச் செவி எதிர்க்கு-விழி எதிர்க்கு?

கலை.

அற்புதமான மனித வெளிப்பாடு.உழைப்பின் மறு விளைவு.ஓய்வின் சுவை சொல்லும் சுக இராகம் இது!களைப்பின் வலிதொலைக்கும் ஒளடதம் இது!-இல்லை?

ஆற்றலுடைய மனிதமுயற்சி!பற்பல பரிணாமத்துள் பதிவாகிய இந்த மனித அநுபவம்,மகத்தான தேவையின்பால் மனிதர்கள் தமக்காகவே தமது உழைப்பால் உருவாக்கியது.இது,இப்புவிப்பரப்புள் அனைத்துமாகி அமரத்துவமாக மனிதர்களற்ற இப் புவிப்பரப்பில் நாளையும் இருக்கும்.ஆனால்,மனிதர்களால் கண்டடையப்பட்ட ஆன்மீக ஆயுதமான அதே மனித அகம் இப்போதும் நோவைத் தாங்கமுடியாது இன்னொரு சிறையைத் தனது படைப்பின்வழி உருவாக்கிக்கொண்டுள்ளது.அந்தச் சிறையைக் காவல் காப்பவர் பட்டுடனும்,பணத்துடனும் தமது கால்களில் இயற்கையின் அழகான கொடையாகி மலர்களையே போட்டுக் கசக்கி எடுக்கும்போது,இது திமிர்த்தனத்தின் அதீத வெளிப்பாடாகவே நான் காண்கிறேன். பனுவலில் சொல்லமுடியாத சோகத்தை காட்சிகொண்டு,இந்தப் பாடலுள் புகுத்திய மயூரனின் நோக்கு சிறப்பானதே.

நாம் அம்மா பகவான்களை-சாயி பாபாகளை,ஏசு தூதர்களை அநுமதிக்கலாமா?

இவர்களை அம்பலப்படுத்தவேண்டாமா?

மயூன் சொல்கிறார்-பாடுகிறார்,மெட்டமைத்துப் போரைத் தொடர்கிறார்!

கேட்பவர்கள் சிந்திக்கத்தக்க காட்சியை வழிமுன் நிறுத்தும் அவரது பாடற்றொகுப்பு உண்மையிலேயே மிகப்பெரும் போராட்டக்கலை ஆயுதமாகவும் நம் முன் இயங்குகிறது.

நம்பிக்கை!

வாழ்வின் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தோண்டித் துருவி அறிதலே நம்பிக்கை.இந்த நம்பிக்கை, தொடரும்போது அதிகாரமும்,ஆதிக்கமும் என்னென்ன திசையில் நம்மை நெருங்குகின்றதென்று புரிந்துவிடும்.

எம்மைக் காப்பதற்கான ஆயுதம், நமது எதிர்ப்பு நடவடிக்கை-நம்மைப் பாதுகாக்கும் உணர்வுதாம்.இதுவே,சமூக மாற்றத்தின் உந்து சக்தி.

இதோ,இந்த வழியில் „அம்மா பகவான்“என்ற தடைக் கற்பாறை கிடக்கின்றது.மயூரன் சொல்கிறான்:

//குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்

அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?//

அற்புதமான வரிகள்கொண்டு,நம்மை ஏமாற்றுபவர்களை,நமது மக்களது குரல்வளையில் தமது வலுக்கரத்தின் நகம் பதிப்பவர்களை துளைத்தெறியும் மயூரன்வழி நாம் நடக்கின்ற ஒரு பொழுதில், நாமெல்லோருமே ஒரு பெரியார் இராமசாமிதாம்.

இங்கே,எந்த டாறாக்கோனிசத்துக்கும் இனி இடமில்லை.
இருப்பவர்களது காலடியில் இலையான்களாக வீழ்வதற்கு நாம் எவருக்கும் குடி அல்ல-அல்லவே!

ப.வி.ஸ்ரீரங்கன்
18.01.2010

%d Bloggern gefällt das: