டான் ரீ.வீ: இரு பிரமுகர்களது பேட்டிகள்.

Dan Tv : இரு பிரமுகர்களது பேட்டிகள்.

சில கருத்துகள்.

ன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே „இலக்கிய-புத்தக வெளியீட்டுச் சந்திப்பு“ச் செய்பவர்களாகவும் ,எழுத்தாளர் மாநாடு செய்பவர்களாகவும்,அவை-மேம்பாட்டு முன்னணி,சாதியச் சங்கம்,தலித்துவப் பேரவை,சங்கம்,கழகம்,கட்சி அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது „துரோகிகள்“ தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.

இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறுவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவேண்டும்.

சமீபத்தில் இலங்கையிலிருந்து இராகவன் மற்றும் தேவதாசன் போன்றோர்களது பேட்டிகள்,அவர்களது வாயினால் கொட்டபட்ட நச்சு அரசியலானது தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் மகிந்தாவின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவே இருக்கிறது.இவர்களது வெகுளித்தனமான அரசியலானது இன்றைய காலத்தின் திசை நகர்வில் தமிழ்பேசும் மக்களது மத்தியமான அரசியல் நகர்வின் தொடர்ச்சியாவும் அதுசார்ந்த குழுவாதமாகவும் சுருங்கிப் போகிறது.கூடவே,இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார இலக்குக்காக உருவாக்கப்பட்டு,இறுதியில் அதன் தேவையோடு இல்லாதாக்கப்பட்ட அரசியலில் புலிகளது மிச்சசொச்சங்கள் மக்களையும் குழப்பித் தம்மையும் குழப்பித் தமது வளங்களைக் குறித்தே இயங்குகிறார்கள்-அரசியல் செய்கிறார்கள்,இவர்களிற் கணிசமானவர்கள் மகிந்தாவோடு கூட்டுப் பிராத்தனை செய்கிறார்கள்.இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை இவர்களது பணி தொடர்ந்தே இருந்தது.இப்போதும், அதையே இன்னொரு வழியில் பின்பற்றுகிறார்கள்.

இன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம்.இங்கு அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில் இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.

இலங்கை அரசானது திமிர்த்தனமாகக் காரியம் ஆற்றுகிறது.தமிழ் பேசும் மக்களைக் கூட்டாகப் புலிகளோடு கொன்றுகுவித்த அரசானது தனது யுத்த வன் கொடுமைகளை மறைக்கவும் அதுசார்ந்த யுத்தக் குற்றங்களை இல்லாதாக்கவும் பெரும் படையெடுப்போடு கருத்தியற்போரை தொடக்கி வைத்திருக்கிறது.இதன் பகுதியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் கணிசமானவர்களை அது பயன்படுத்த முனைவதன் தொடரில் இராகவன்(முன்னாள் புலித் தலைவர்களில் ஒருவர்),தேவதாசன்(தலித்து மேம்பாட்டு முன்னணி-பிரான்ஸ்) போன்றவர்களை பயன்படுத்துகிறது.அவர்களும், „வேளளர்கள் தாழ்தப்பட்ட மக்களது குடியிருப்பைக் குலைத்து வெளியேற்றுவது“ குறித்துப் பேசுவதற்கான புள்ளியில் கருத்தாடும்போது இதைவிடப் பல்லாயிரம் மடங்கு கொடுமை செய்த இலங்கைப் பேரினவாதம் குறித்துக் கிஞ்சித்தும் வாய் திறப்பதில்லை.இங்கு கவனிக்க வேண்டியது பல பத்தாண்டுகளாக நமது மக்கள் தலையில் குண்டுகள்போட்டும்,குடியிருப்புகளைக் குலைத்தும் ,பாலியல் வன் கொடுமையூடாக நமது மகளிர்களை மானபங்கப்படுத்தியவர்களும்,நமது மக்களது பூர்வீக வாழ்விடங்களைப் பூரணமாக அழித்துப் பெரும் இனவழிப்பைச் செய்தவர்களும் மிக இலகுவாக இந்தத் தலித்து மேம்பாட்டு முன்னணி தேவதாசன்களிடம்,மற்றும் இராகவன்களிடம் மறந்து போய்விடுகிறது.ஆனால்,சாதிய ஒடுக்குமுறை“வடூ“ நிலைத்து நினைவைத் துரத்துகிறது.

சாதியவொடுக்குமுறைக்கெதிராகச் சளைக்காது போராடியே தீரவேண்டும்.அதைப் போலவேதாம் நமது பேரின வாதப் பேயோடும் போராடியே தீரவேண்டும்.இதில் ஒன்றை அங்கீகரித்தபடி இன்னொன்றை எதிர்ப்பது நியாயமற்றது.விடுதலை என்பதைக் கொச்சைப்படுத்துவது-நாணயமற்றது.இலங்கை அரசு தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப் போவதாகவே இருக்கும்.

அராஜகங்களுக்குத் துணைபோவதும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடும் நட்புறுவை வளர்த்துக் கொண்டுள்ள இந்தக்கூட்டம்,அன்று, தம்மை இலங்கை அரச யுத்தக் கிரிமினல்களுக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. எனவேதாம் திடீரெனப் பாசிச மகிந்தாவின் பின் அணிவகுக்க முடிந்திருக்கிறது.இதுவரை இலங்கை அரசினது இனப்படுகொலையை எதிர்காது புலிவழியான அழிவுகள் குறித்து டான் தொலைக்காட்சியல் பேசுகிறார்கள்-நீலி கண்ணீர் வடிக்கின்றார்கள்.பேரழிவு குறித்துத் தமது கவலைகளைத் தெரிவிக்கிறார்கள்.புலிகளால் இவை நேர்ந்துவிட்டதால் அது புலிகளது அழிவோடு போகட்டுமெனச் சமாதானஞ் சொல்லும் போது,இவற்றைச் செய்வதற்குக் காரணமான இலங்கை அரச பயங்கரவாதத்தைக் குறித்து மௌனிக்கிறது எதன் பொருட்டு?

எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது!

இலங்கை அரசினது திட்டமிடப்பட்ட தமிழினப்படுகொலையை எந்தச் சந்தர்ப்பத்திலுங் கேள்விக்குட்படுத்தாத இக்கூட்டத்தின் திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சியானது தீர்மானங்களினூடாக மிகக் கறாராக இலங்கை-இந்திய அரசியல் அபிலாசைகளின் தெரிவாகவே நம் முன் கொட்டப்படுகிறது.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு „ஜனநாயகம்“சொல்கிறது இத்தக்கூட்டம்.அதுவும், யாழ்ப்பாணத்திலிருந்தபடி…இதுவே இலங்கை அரசினது வெற்றியாக மாறுகிறது.அது உலகுக்கு இவர்களின்வழி தன்னை நியாயப்படுத்துகிறது.

இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு,அ ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது. இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே „தீர்மானங்களும்“-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர்.இத்தகைய பண்பினது விருத்தியால்
பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.

இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும். இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக்கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.இங்கே,ஓராயிரம் சாதியச் சங்கங்கள்-அமைப்புகள் உருவாக்கப்படும்.

அதில் ஒரு முனையை ஏந்துபவர்கள் இந்த இராகவன்-தேவதாசன் போன்றோர் என்பது உண்மையாக இருக்கலாம்-யார் கண்டார்?

உண்மையில் மக்களுக்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்தால் நிச்சியம் இலங்கையைக் குற்றக் கூண்டில் நிறுத்துவார்கள். இனவழிப்புக்கு எதிராகத் தமது குரலைப்பதிவு செய்வார்கள்.அட,பெருந்தொகையாக மக்கள் அழிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள்ளேயே இவர்கள் இப்படிக் காவடியெடுத்தால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்களது வாயில் „இனப்பிரச்சனை என்பது“ என்னவென்ற கேள்வியாக மாறலாம்.இதுதாம், இன்றைய முன்னாள்புலி-தலித்துவ அரசியலது ஸ்த்தானம்.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

01.11.2010

Werbeanzeigen

வரலாற்றில் கந்தரோடையும்,பௌத்த அடையாளமும்:

ந்தோரடை அகழ்வின்வழி கிடைக்கப் பெற்ற பௌத மத அடையாளம் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களே…

றுதியான „ஈழயுத்தம்“ இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் „ஈழம்“மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது விக்கிரமசிங்கே-சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான“தீர்வு“த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு…

இன்னும் பலரோ இப்போது போடும் பட்டியலானது புலிகள்-சிங்கள அரசுகள் கேடயங்களாகக்கொண்ட தமிழ் மக்களது நிலைமைகளில் எவரிடம்,எவர் மக்களை விடுவிப்பதற்குக் கோரிக்கை வைத்து நின்றாரென்பது.

இந்திய-சீன மற்றும் மேற்குத்தேசங்களது இலங்கைமீதான பொருளாதார யுத்தத்தில் இப்போது கேடயங்களாக வைக்கப்பட்ட முழு இலங்கை மக்களையும் விடுவிக்க எவரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை… போங்கடாப் …. மக்களே!

நமது வடக்குக் கிழக்கு மக்களோ, இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து, நல்லூர்த் தேரிழுத்தும்,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.

கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் இராகவன் போன்ற மூத்த புலி உறுப்பினர்கள்(முன்னாள்) நம்புகிறார்கள்(அன்றைய ஆயுதம் ஏந்தும் சூழல் இன்று அவசியம் இல்லை எனப் பகுப்பதிலிருந்து…).

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் அண்ணா பேட்டி வழங்கியதொரு திசையில்“புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென“ வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன் அண்ணா சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!

முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது.

„பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம்“

பேய்க்குப் பேன் பார்த்த பேய்ப்… னாக்கள்!

இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?

பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே…

பாவலர் துரையப்பாப்பிள்ளை,கணபதிப் பிள்ளை, பத்தம நாதனைக் கடந்து, டாக்டர் இந்திரபாலாவிடம் வருபவர்களுக்குத் தமிழ்ப் பிரதேசமென இப்போது வகுத்திருக்கும் எல்லை மேலும் எங்கோ விரிவதும் புரியத்தக்கது.தமிழ்ப் பௌத்தர்கள் வாழ்ந்திருக்கவும் காண்பர்.பேராசிரியர் சிற்றம்பலம் நமது வரலாற்றுப் புரிதல்களைப் பார்த்துத் தூக்குக் கயிறு ஏந்தாது இருந்தால் அதுவே பெரிய புண்ணியம்.

இத்தகைய நம்பிக்கை(யாழ்ப்பாணத்தில்-கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த அடையாளங்களது வழியில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் வடக்கில்…) வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள்(மாற்று-மாற்றுக் கருத்தாளர்களிடம்) நிலை பெறுகிறது.வரலாற்றை மகாவம்சம் கற்றுக்கொடுக்கும்வழி புரிய முடியுமா?அல்லது ,ஜனநாயகம்,விளிம்பு,பல்-கல்-புல்,அல் கொல்லெனப் புரிய முடியுமா?

இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத்துக்கொள்வே பயன்படும்.

சிங்களப் பேரினவாதம் எங்கெங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியுமோ அங்கெல்லாம் இப்படிக் கயிறுவிடும் கோணங்கிகளையும் வைத்துக்கொண்டு தன் காரியத்தை நிறைவாகச் செய்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

30.10.2010

„தமிழீழம்“என்றைக்கோ அமையத்தாம் போகிறது.

அருள் எழிலனது ஜீ.ரி.வி(G.tv) ப் பேட்டி குறித்த எனது „கிண்டல்“  எதிர்வினை மீது இரமணிதரன் எழுப்பிய கேள்வியை முன்வைத்துச் „சில“ புரிதலுக்காக:

நாம் என்ன புலியை ஆதரிப்பது – எதிர்ப்பதென்றதிலா தொங்கி நிற்கிறோம்? „தமிழீழம்“ என்ற மாய மானை மீள உயிரூட்டிச் சிதை கொடுக்க எவரும் இனி முன் வருவாரென எந்த முட்டாளும் தீர்மானகரமானவொரு கருத்துக்கு உணர்வூட்ட முடியாது.

எமது மக்களுக்கு, என்ன தேவை-தேவையில்லை என்பதை எவரும் புறத்திலிருந்து  புகட்ட முடியாது.அவர்கள் தம்மைத் தாமே போராட்டத்துள் இணைத்து அதற்கு விடைகாண அனுமதிப்போம்.

இதனடிப்படையிலேதாம் அருள் எழிலன் மீளவுமுரைத்த „தமிழீழம்என்றோ ஓர் நாள் சாத்தியமாகும்“ என்பதையும் மறுப்பதற்காக அப்படியொரு சிறு குறிப்பில் நான் தொங்கினேன்.

மலரப் போகும் „தமிழீழம்“ அந்நிய தேசத்துக்குச் சார்பானதா அல்லது ஈழ மக்களுக்குச் சார்பானதவெனத் „தான் கவலை“ கொள்வதாகச் சொல்லும்போதே „தமிழீழம்“சாத்தியமென்று மீளக் கயிறு திரிக்கும் அருள் எழிலனது புலிகள்மீதான புரிதலைத்தாம் சுட்டிக் காட்டினேன்.எமது பிரச்சனையை உணர்வு பூர்வமாகப் புரியாதவர்கள்-சமூக ரீதியாக விளங்க முற்படாதவர்கள்போன்று அவர் உரையாடியதைவைத்து, எனது எதிர்வினையை அப்படிச் சொன்னேன்.

நெடுகச் „சீரியஸ்“ பாணியில் விமர்சிப்பது அலுக்க,அங்ஙனம் உரைத்தேன்.

அடுத்து- புலியை ஆதரிப்பது-எதிர்ப்பதென்பது, தமிழ்ச் சமுதாயத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பரந்து பட்ட மக்களது நலனிலிருந்தே ஆரம்பிக்கிறது.

புலிகளது போராட்டத்துள், சிங்களப் பேரினவாதத்தின் தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் இருக்கிறது(அதை அவர்கள் கையப்படுத்தித் தமது நோக்குக்கிணைவாகப் பயன்படுத்தியிருப்பினும்).

அதை ஆதாரித்தோம்.

சிங்கள பேரினவாத அரசின் இனவொடுக்குமுறைக்கெதிரான தமிழ் பேசும் மக்களது எதிர்ப்புப் போராட்டத்தைத் தமது இலக்குத் தோதாகப் பயன்படுத்திய புலிகள் சார் வர்க்கத்தின் இந்த நோக்கைத் திட்டமிடப்பட்ட வகையில் எதிர்த்தோம்.

அங்கே,புலிகளது அராஜகம் மட்டுமல்ல அவர்களது வர்க்க சார்பையும்,அந்த வர்க்கத்தின் அந்நியச் சார்பையும் எதிர்த்தோம்.

ஒரு கட்டம் ஆதரிக்கும் நிலை,

இன்னொரு கட்டம் எதிர்த்தே ஆகவேண்டிய நிலை.

இதுள், அருள் எழிலன் மீதான கிண்டல் அவரது அரசியல்-பொருளாதாரப் புரிதலிலிருந்து, ஆரம்பமாகிறது!எமது போராட்டத்தை-தமிழ்பேசும் மக்களது அரசியல்-சமூக அசைவியக்கச் சூழல்மீதான பார்வையைக் குறித்தான புரிதலைகொண்டியங்குவதற்கு மாறாக, அவரது புரிதல், மிக மோசமான தமிழ் நாட்டு ஓட்டுக் கட்சிகள் போலவே இருந்ததால் அதை கிண்டல் செய்தேன்.

இதில் புலியை எதிர்ப்பது-ஆதரிப்பதென்பது சரியானவொரு தளத்தின் புரிதலிலிருந்து அரும்ப முடியும்.

அதைவிடுத்து இயக்க விசுவாசம்-தமிழ் மக்கள்மீதான இனப்பாசம்,பச்சோதாபங்களால் எவரும் எமக்குப் பங்களிக்க முடியாது.

நாம் ஒரு போராட்டத்தை செய்து தோல்விகளது வலியிலிருந்து இன்னொரு கட்டத்தை எட்டுகிறோம்.அருள் எழிலன் இதற்குள் எங்கிருந்து, எந்தத் தளத்தில் விமர்சனத்தை நகர்த்துகிறார்? அதே புலிகளது விசுவாசிகள்,புலம்பெயர் புலிப் பினாமிகள் போலவே அவரும் உரையாடுகிறார். ஒரு வகையில் இது அதே புலிவால்கள் கொண்டிருந்த புரிதலை மீறிச் செல்லவில்லை! இறுதியில் எல்லாம் முடிந்தவுடன் புற்றுக்குள் நுழைந்து காணாமற்போன எத்தனையோ புலிவால்களது இன்னொரு முகமாக அருள் எழிலன் கட்டமைக்கும் கருத்துக்கள் எவருக்கு அவசியம்? நமது மக்களை மீளவும் முட்டாளாக்கவா? போதும்!

மீளவும், இந்தியாமீதும்,தமிழ் நாட்டு மக்கள்மீதும் கட்டமைக்கும் அரசியல் சும்மா-சும்மா (உபயம்.சயந்தன்).

புலம் பெயர் தமிழர்களது உணர்வோடு விளையாடாமல் இருந்தாலே போதும்.இதுதாம் எனது கிண்டலது உண்மை முகம்!மற்றும்படி யாரை,யார் எதிர்ப்பது-ஆதரிப்பது இரமணி?

ஸ்ரீரங்கன்

27.10.2010

தமிழ்த் தேசியத்துள் இணைய மறுக்கும் தலித்து

மிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமியில்திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்களா,அன்றிப் புலிகள்வழித் தமிழ்த் தேசியத்துக்கான அணைவா,தமிழீழத்துக்கான தார்மீக ஆதரவா,எதுவானாலும் மொத்தமான“பொத்தாம் பொதுவான“தமிழ் அடையாளப்படுத்தல்களை நிராகரிக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் கணிசமான மக்கட்டொகையின் அரசியல் எதிர்ப்பார்ப்பும், அதுசார்ந்த அவர்களது முன்னெடுப்பும் மேலாதிக்கத் தமிழ்ச் சமூகவெண்ணவோட்டத்துக்கு எதிரான திசையில் பயணிப்பது தற்செயலானது இல்லை.அதுபோல்,இலங்கைச் சிங்களப் பேரினவாதத்தோடான சமரசப் போக்கும் பண்டுதொட்டுத் தொடர்வன அல்ல.வரலாற்றில் அரசியற் பலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்,உழைப்பவர்கள் இத்தகைய சமரசப் போக்கைத் தமது மொழிசார் அடையாள வெளிக்கு அப்பால் செய்வதற்கான வெளி அவர்களுக்கு இருக்கவும் இல்லை.

சிதறிப்போன தலைமகள்,ஏற்றத்தாழ்வுகளினாலும்,அகவொடுக்குமுறைகளாலும் பிளவுண்டு-பிரிந்து கிடக்கும் தமிழ் மக்களைக் கூட்டாகத் தேசிய கும்மிக்கழைத்த „ஏதோவொரு“ தேவையையொட்டிய யாழ்பாணிய விருப்பு(எமது விருப்பு) இனி, மீண்டெழுவதற்கில்லை!

அதன் விருப்பத்தின் தெரிவு“தரகு-தொங்கு“மூலதனவூக்கமேயென உணரப்பட்டபின் தமது தங்கத் தலைவரையே முட்டுச் சந்திக்குள் வைத்துத் துவைத்தெடுத்தது இந்த இனம்.யார் யாரோடு கூட்டுச் சேர வேண்டாமெனப் பலரைப் போட்டுத் தள்ளியதோ அவர்களோடு சேர்ந்தே தமது தங்கத் தலைவரது தலையைப் பிளந்தது.இந்த „யாழ்ப்பாணிய விருப்பு“இப்போது எதையெதையோ கற்பனை பண்ணிக் கொண்டு, வேலியில் போனவோணானைப் பிடவைக்குள் மறைத்தபடி குடையுது,கடிக்குதெனச் சொல்வது சத்தியமாக உருப்படாத குணம்.

புலிகளாகிவுருவாகிறதாகச்சொன்ன“தமிழீழம்“முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டபோது,மேற்சொன்ன போட்டா போட்டிகளைத் தயார் படுத்திய இந்த இனம் தன்னை ஒருங்கமைப்பதற்குள் வீதியில் கூடித் தேரிழுத்துப் பார்த்தபோது, தனக்குள் தொடர்ந்த பிரிவினையானது தொடர்ந்து அகலித்து வருவதை இனம் காண மறுத்தபோது அதை இனம் கண்டவர்கள் இந்தத்“தமிழ்த் தேசிய“இனத்தின் பகைவர்களே.

மூன்றாமுலகக் கன்றாவிக் கதைகளுக்குள் எப்பவும் போலிப் புனைவுகள் அதிகமாகத் தலையைக் கொய்யக்கொடுப்பதில் ஒரு பிரபாகரன் சமீபத்து உதாரணம்.கடந்தகாலம் ஒரு முன்னூறு பேரோடு கடலிறயங்கிய வஸ்கொடகாமாவுக்கு முழு இந்தியத் துணைக்கண்டமே அடிமையானது.இப்படியாக…

தமிழ்த் தேசியத்தை மறுப்பதென்பதும் ஏற்பதென்பதும் தமிழ் மொழியைப் பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் தான் வாழும் வாழ்நிலை தந்த அநுபவத்தின் வழியே இயலுமாக இருக்க முடியும்.

மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் வாழமுனையும் இந்த மக்கள் பிரத்தியேகமாகத் தமக்குள் சாதிரீதியாகவும்,மதரீதியாகவும் பிளவுண்டே கிடக்கின்றனர்.இந்தவுண்மையில் எம்மால் சிதறிடிக்கப்பட்ட இந்த அகவொடுக்குமுறை ஜந்திரத்தை ஏற்பதில் எமது பாதிப்படையாத மனோ நிலையைப் பாதிப்படைபவர்களுக்கும் பொருத்துவதுதாம் இன்றைய முரண்நகை.
எம்மால் பாதிப்படைபவர்களை எமது நண்பர்கள்-எதிரிகள் யாவரும் தத்தமது நலனுக்கொப்பப் பயன் படுத்துவதையெண்ணி எமக்குக் கொதிப்பு மேலிடுகிறது.

அடடே, நமது தேசியச் சொத்துக்கள்-அலகுகள்,வாழிடங்கள்,வரலாற்று மண் பறிபோகிறதே,நமது இருப்புக்கு எதிராகக் குடியேற்றங்கள் நிகழ்கிறதே என்று அங்கலாய்ப்பதால் என்ன பலன் வந்தது?

யாழ்ப்பாணிய விருப்பானது தன்னை முன்நிலைப்படுத்தத் தனக்குள் இருக்கும் மெலியவரை ஒடுக்கியபடி மேற்சொன்னவற்றுக்காகப் பழிசுமத்தும் தரப்பைத் தம்மை இதுவரையான ஒடுக்குமுறைக் குள்ளாக்கிய ஆதிக்கத்தின் பக்கமே தள்ளிவிடும் இந்தச் சமூகவுளவியலானது இன்னொரு புறமான ஒடுக்குமுறையே. ஆகத் தாழ்த்தப்பட்டவர்கள் – ஒடுக்கப்பட்டவர்கள் விளிம்பு நிலை மக்கள் அனைவரும் ஒரு பக்கத்தில் யாழ்ப்பாணிய மேலாதிகச் சாதியக் கொடுமையையும், இன்னொரு புறம் தாம்சார் மொழிவழியான அடையாளத்துக்கான „தமிழர்கள்“என்பதாலும் இனவொடுக்கு முறைக்கும் முகம் கொடுக்கிறார்கள்.

இது, அநேகமாக ஐரோப்பியக் காலனித்துவக் கொடுமையின் கீழ்ப்பட்ட அதே முறைத் தாக்குதல்களை இந்த ஒடுக்கப்பட்ட மக்கள்-தாழ்த்தப்பட்ட சாதிய அடையாளமுடைய மக்கள் எதிர்கொள்கின்றனர்.இதைக்குறித்துச் சமூகரீதியான புரிதல் தமிழ்த் தேசிய கருத்தூக்கத்தின்வழி பாரா முகமாகத் தொடர்ந்து இருத்தி வைக்கமுனைகின்றபோது, அந்த மக்களைத் தமது தேவைக் கேற்றபடி பயன்படுத்தி, அவர்களுக்கு நமது சமுதாயம் வழங்க மறுக்கும் சில அடிப்படைத் தேவைகளையும்-மானுட அங்கீகரிப்புகளையும் எமது பகைவர்கள் அவர்களுக்குச் சலுகையாக வழங்கும்போது, தமிழ்த் தேசியக் குடைக்குள் அவர்கள் ஒதுங்க முடியாது திணறுவது எமது தவறுகளாலானவை என்றெப்போது உணர்கிறோமோ அன்றே ஒருபடி மேலெழ முடியும்.

„இதை வேறு நேரத்தில் தீர்க்க முடியும்,இப்போது தேசியப் பிரச்சனையே முதன்மையான பிரச்சனை“ என்று புலிகள் பாணியிலுரைத்துக்கொண்டே மேற் சென்றால் நமது நிலைமை எப்படியாக இருக்கும்?

சுருங்கக் கூறினால் மூன்றாமுலக மக்கள் சமுதாயம் உருப்படாது. சிதறுண்டுபோன நமது தலைமைகள்,போட்டா போட்டி,பழமைவாத ஏற்ற தாழ்வுகள் என்றெல்லாப் பிரச்சகைளோடும் முட்டி மோதும் நாம், நமக்குள்ளேயொரு தீர்மானகரமான முடிவுக்குள் வராதவரையும் இந்த நம் அபிலாசை(தமிழ்த் தேசிய இனம் விடுதலை அடைவது) கானல் நீராகவே இருக்கும்.

சாதிரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும்,மதரீதியாகவும்,உயிரின ரீதியாகவும் நமக்குள் பொருந்திவர முடியாத பல தடைகள் இருக்கின்றன.அவை ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு வகையான மீள் படைப்பாக மாற்றமடைகிறதேயொழிய அதை இல்லாதாக்கி, அணி வகுக்கும் எந்தச் சந்தர்ப்பமும் கட்டியொழுப்ப முடியவில்லை.பழமை பேணிகளான மேட்டுக்குடி யாழ்ப்பாணிய வேளாள மனமானது தான் சிங்கள அரசின் காலடியில் வீழ்ந்தாலும் சாதிய ஏற்றதாழ்வையகற்றத் தயாரில்லாது கிடக்கிறது.இந்த இரட்டை நிலையையே தலித்துக்கள் என்று தம்மை அழைக்கக் கோரும் அமைப்புகளது அரசியலாகவும் விரிகிறது.இவர்கள் தமிழ்த் தேசியம் சிதைந்து சின்னா பின்னமானாலுஞ்சரி தம்மை அடிமையாக்கும் வேளாள மேலாண்மைக்கு நிகராகத் தம்மை உருவாக்க எவரது காலிலும் வீழ்ந்து, அந்த மேன்மையை-அபிவிருத்தியை அடைய முனைகின்றனர். இங்கே,அதிகார வர்க்கங்களே அனைத்துக் குழுக்களையும் அரவணைத்துத் தமது நலன்களை எட்ட முனையும்போது ,அவர்களால் எந்த மேன்மையும் எவருக்கும் முழுமையாக வரமுடியாது-ஒரு சில தனி நபர்கள்,குடும்பங்கள் சிலவேளை தமது நிலைமைகளைச் சீர் செய்ய முடியும்.முழுமையான சாதியக்கட்டுமானச் சிதைப்பு-அகல்வு நடைபெறும் சந்தர்ப்பம் குறைவாகவும்,அந்த மக்களில் பலர் மீளவும் ஆதிக்கச் சக்திகளது காலடியில் மடிந்துபோகும் அபாயமும் நீடிக்கிறது.

„தமிழ்த் தேசிய விடுதலை“ என்பது பற்பல சிக்கல்களுக்குள் கட்டுண்டு கிடக்கிறது.தமிழ்பேசும் மக்கள் தமக்குள் நிலவும் அகரீதியான முரண்பாடுகளைச் சீர் செய்வதிலிருந்தே ஒரு பொருண்மைசார் „தேசிய இன“அடையாளத்தோடான நட்புறவும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான செயலூக்கமும் கருக்கொள்ள முடியும்.

சாதியவொடுக்குமுறை,
பிரதேசவொடுக்குமுறை,
மதஞ்சார் காழ்ப் புணர்வு,
மலையக „இழிமை“-ஈழ „மேன்மை“சார் பாகுபாடுகள்,
பெண்சார் கற்பிதங்கள்,
கல்விசார் ஏற்றதாழ்வு,

என்ற விசக் கிருமிகளே தமிழ்த் தேசியவினத்தின் கருவையே சிதைக்கும் புற்று நோயக இருக்கிறது.இதை எங்ஙனம் புரிந்து,அந்தந்த நோய்க்கான ஒளடதங்களைப் பயன்படுத்த முனைகிறோமோ,அதையொட்டியப் புரிதலே இன்றுவரை நோய்வாய்ப்பட்டுக்கிடக்கிறது.

என்ன செய்ய?

தமிழீழம் அல்லது தமிழர்களுக்கான பிரிந்துபோகும் உரிமை என்ற வரையறையுள் உள்ளோட்டமாக நிகழும் சமூக ஆண்மையானது தமிழ்ச் சமுதாயத்தின் வசதிபடைத்த மேல்தட்டினது விருப்புகள்-தேவைகள்,சமூக ஆதிக்கம் தொடர்பாக உருவாக்கி வைத்திருந்த இது நாள்வரையான புலிவழித் தமிழ் தேசிய அடையாளமானது சாரம்சத்தில் சாதியப் பிளவுகளை மேலும் அகலிக்க வைத்ததேயொழிய அதைச் சுருங்க அனுமதிக்கவில்லை! அத்தகையவொரு தேவையில் கவனத்தைக் குவிக்காதிருந்தபோதும் பழமை பேணிகளான வேளாளச் சாதியத் திமிர், இந்தக் கோலத்தில் சிங்களப் பேரின வாதத்தோடு சமரசஞ் செய்கிற போக்கில் பிரபாகரனப் புதைத்துக்கொண்டது (பிரபாகரனோடு பாடையிற் போனவர்களில் அதிகமானோர் கீழ்த் தட்டு இளைஞர்களே என்பதும் கவனிக்கத் தக்கதே).அதன் அக விருப்பில் பிரபாகரனையே அவர்கள் சகிக்க முடியாதவொரு உள நெருக்கடிக்குள் இருந்தார்கள் என்றவுண்மையை நாம் எப்போது புரிவோம்?

இந்தப் புள்ளியிற்றாம் சோபாசக்தி,தேவதாசன் போன்றோர்கள் தலித் அமைப்பு-கட்சியென வடிவமெடுக்கும் ஒரு புற நிலையான யதார்த்தம் உருவாகிறது.தேவதாசனது தலித்துவ அமைப்புக்கு ரோ பின்புலமாக இருக்கோ இல்லையோ ,அவரது கோரிக்கை,அதுசார்ந்து நகரும் அரசியல் வியூகத்துக்குக் கடந்த காலத் தமிழ்ச் சமுதாயத்தின்(இந்தியத் துணைக்கண்டத்தினது-சிறப்பாகச் சொன்னால் இந்துமத வர்ண தர்மம்) நான்காம் உலகக் காலனித்துவக் கொடுமைகளே ஆசானாக இருக்கிறது.எனவே,எவ்வளவு சரிவுகள்-வசைவுகள் நேரிடும்போதும் அவரது கோரிக்கைகள் பரவலான ஒடுக்குமுறைக்குள்ளாகும் மக்களது அவசரமான மானுடவுரிமையாக நம்முன் திரண்டெழுகிறது.இதைச் சாதகமாக்கவே இப்போது சிங்களப் பேரினவாதம் சலுகைகள் தரச் சம்மதிப்பதும்,உறுதியளிப்பதுமாகக் காலத்தைக் கொண்டோடுகிறது.

இங்கேதாம் புலிவழித் தமிழ் தேசியத்தை மறுத்தும்,திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றம் பற்றி எதுவும் அலட்டாமல் அவர்கள் தமது முன் நகர்வை முன்னெடுக்கின்றனர்.இங்கே, தமிழ்க் கட்சிகளாலும்,நம்மாலும் சொல்லப்படும-உணரப்படும் பெரும் அபாயமான திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றம் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் சனத் தொகையில் சரி அரைவாசியாக இருக்கும் தாழ்தப்பட்ட மக்களால் உணர்வு ரீதியாகவே உணர முற்படாத அல்லது அதை உதாசீனப்படுத்தும் எதிர் கருதியலாக அவர்களால் அணுகப்படுகிறது.

„வேளாளன் தனது ஊருக்குள்ளேயே ஒரு முழத் துண்டுக் காணி தராதவன்,நம்மைக் குடியிருக்கப் புறம்போக்கு நிலத்தைத் தரச் சம்மதிக்காதவன்… “ என்ற வடூ தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருக்கிறது-நிலைக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2010

நானும்,எனது படைக் கலங்களும்…

நானும்,எனது படைக் கலங்களும்.

-என் சுயஞ் சொல்லும் என்சுயசரிதை.

பொதுவாக ஒன்றை ஏற்பதும்,ஏற்காததும் என்பதற்கு அப்பால் என்னால் ஒருவிடயம் பகரப்பட்டு நான் அதுள் தவறிழைத்திருப்பின் அதை ஒத்துக்கொள்வது-நியாயப்படுத்தலையுந்தாண்டி உண்மைகளை ஏற்பதென்றே கருதுவதில் தப்பிருக்க முடியுமா?

ஒன்றை நம்ப வைப்பதற்கு அல்லது ஏற்க வைப்பதற்கெடுக்கும் முயற்சியில் எத்தனையோ „சமூக நடாத்தைகள்“ பொதுத் தளத்தில் ஒன்றோடொன்று பின்னப்பட்டுக் கதை எழுதுவது எதற்காக?

சமூகத்தில் நடப்பது அனைத்துக்கும் அந்தச் சமூக அமைப்பினதும் அதுசார்ந்து வாழும் ஒழுங்குகளுக்குமிடையிலான பொதுப்பண்பு(பொருளாதார முறைமை)சார்ந்த நெறியே காரணமாகிறதென்பதால் அனைத்தையும் அது சார்ந்து பார்ப்பது நியாயமானதுதாம்.என்றபோதும்,மொட்டாக்குக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப்போட்டு என்னை நான் நியாயப்படுத்தும்போது எனது போலித்தனமும்,என் கேவலமான சதியும் நேர் எதிராக என்னைச் சிதைக்கிறது!

நான் நாணய வாதியாக என்னை உரைப்பதற்கு பல வழிகளிலும் எதையெதையோ பின்னிப் புனைகிறேன்.எதுவும்,எனது நேர்மையீனத்தை மறைப்பதற்கில்லை!நான் தப்புச் செய்யாத தூய தருணங்களைச் சொல்ல எனது பல்லக்கை மற்றவர்களும் சுமக்கக் கட்டளை-ஆலோசனை பகிர்கிறேன்.அவர்களும் எனது சமூக நடவடிக்கையும் அதுள் நான் கடந்த பாதைகளையும் எடுத்து தீர்க்கமான படம் வரைகிறார்கள்.அந்த ப்படத்துக்குப் போடப்படும் சட்டகம் „மக்களது விடுதலைக்கு-நலனுக்கானதெனச் சொல்லும்“ குறிப்பானாக எனது சதிமிக்க அரசியற் பாத்திரம் புரட்சிக்கான காலவர்த்தமானத்தை நிர்ணயிக்கும் ஒரு சந்து பொந்தாகப் பகிரப்படுகிறது.இதை நானே வெறுத்தொதுக்க முனைகிறேன்.எனினும்,என் முகமூடி கிழிந்து சந்தியில் கோர முகத்தோடு நான் நிற்பது எனது எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்துகிறது.இது,என்னைத் துரத்துகிறது.

„எங்கெங்கோ விழுந்து,எதிலெதிலோ பட்டுத் தெறிக்கும் மழை நீராக“ நான் ஆட்டுவிக்கப்படுகிறேன்!என்னால் எனக்காகச் செயற்படுவதையும்விட என்னை ஆட்டுவிக்கும் புரவலர்களுக்காகத் தினமும் இணையங்களை உலாவந்து தகவலளிப்பதிலிருந்து வேறென்னத்தைப் பெரிதாகச் செய்தேன்?

நான் வெறும் குறிப்பான்!


எனது நாமத்தில் கோலமிடும் எல்லா வகைப் புனைவும் எனக்குள் முகிழ்த்திருப்பதெனவெவராவது யோசித்தால் எனது முழுவாழ்வில் „நாள்முழுதும்“ கணினித்திரையியே இருக்க வேண்டும்.இந்தவுண்மையைக்கூடப் புரியாதவர்களது கூட்டுதாம் என்னை மீளத் தகவமைக்க முண்டுகளாக வரவேற்கப்படுகின்றன.இதன் தொடரில் பேணப்படும் தொடர் நாடகங்களை எவராவது உலுப்பியெடுக்க முன், அவர்களது தலையைக் கொய்வதற்கேற்ற படையணிகளை உசார்ப்படுத்துவது சாத்தியமாக இருக்கும்.

என்றபோதும்,என் இருப்பு எப்படியும்-எதானாலும் அழியுமா?

என்னால் இது குறித்தெப்போதும் சகிக்க முடிகிறதே இல்லை!

நான் யார்?-எனக்கும் மக்கள் திரள் போராட்டத்துக்கும் எந்த வகையில் உறவிருக்கிறது?

எனது நலன்களைக் காவும் ஏதோவொரு திசையில் மக்களுக்குள் நான் பிணைக்கப்பட்டேன்!எனது கடந்த காலத்தை உரைப்பதற்குத் தோதான தகவல்களை நானே சொல்லிவிட்டேன்.இது நானறியச் சொல்லப்பட்டதே இல்லை!நான் பொய்யன்.பொய்யனது எண்ணங்கள் செயற்பாடுகள் நீண்ட காலத்துக்கு உண்மைகளது திசையில் நிலைக்க முடியாதன்ற இயக்கப்பட்டில் எனது அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.

எனினும்,அதை புரட்டி மீளவும் என்னை முன் நிறுத்தியே தீருவேனென நான் முயல்கிறேன்.அது ஓரளவுக்கு மேலே என்னை மீளப் பொய்யனெப் பகரப்போகிறது.அது பலதரப்பட்ட தளத்தில் என்னை வலுவாகச் சிதைப்பினும் ஒரு குறிப்பட்ட வட்டத்திலாவது நான் நிலைக்க விரும்புகிறேன்.

அந்த வட்டம் எனக்கு நற்சான்றிதழ் தருவதற்காக எத்தனையோ ஆய்வுகளை கூறப்பட்ட வரிகளுக்குள்ளிருந்து புலனாய்வு செய்வதில் நீதியையும்-நியாயத்தையுங் குறித்து எந்த மனசாட்சியும் எனக்கு இல்லையென மீளப் பகர்வதை நான் உணர்வுரீதியாக ஏற்கமாட்டாது தடுமாறுகிறேன். என்னால் புணரப்படும் நியாயம் என்னைச் சுற்றிய அரசியல் வாழ்வில் என்னையே சவக் குழிக்குள் தள்ளும்போது அதையும் எனக்கேற்ற முறையில் மற்றவர்களுக்கும் பொருத்தி எனது நடாத்தைகளைச் சமூகத்தின் முதுகில் ஏற்றிவைக்கவே ஆசைப்படுகிறேன்!

நான் உண்மையானவனென என்னை நானே உரைத்துப்பார்க்க எனக்கு அவசியமென்ன?

பொய்யனாக இருப்பதில் அறிந்தே தொடரும் எனது உணர்வு நிலைக்குள் என்னை உரைப்பது கடினம்.என்னை நான் உரைக்காத தருணமே என்னை மற்றவர்கள் உரைத்துப் பார்ப்பதில் முடிந்துள்ளதென்றவுண்மையையும் நான் ஏற்க மறுக்கிறேன்!

இந்தப் புள்ளியே எனக்குள் சதா புனைவுகளைச் செய்யத் தூண்டுகிறது.

ஒன்றை மறைப்பதற்கு இன்னொன்றை அரங்குக் எடுத்துவருகிறேன்.அது இதற்குள்ளும்,அதற்குள்ளுமாக வேஷங்கட்டும்போது எனக்கு எந்த வெட்கமுமில்லை!ஏனெனில்,“தில்லு முல்லும் உள்ளமெல்லாம் எனக்குக் கல்லு முள்ளும்.“ இதுவென் சுயமாகமாறிய எனது சமூகப் பாத்திரமேவின்று எனது இருப்பை அசைக்கிறது.நான் இதிலிருந்து மீண்டுவிட முனைகிறேன்.எனது இருப்பை எப்பாடுபட்டாலுங் காப்பதற்கேற்ற எல்லா வகை அஸ்த்திரங்களையும் உபயோகிக்க எனது படையணிகளுக்கு ஆலோசனை முன் வைக்கிறேன்.அவர்களும் தமது அநுபவத்துக்கேற்ற தெரிவுகளில் அஸ்திரங்களை எய்கின்றனர்.இது,பரவலாக எல்லா நியாயங்களையும் என்னைச் சுற்றி மதிலெழுப்புவதில் மற்றவர்களுக்கும் எனது பணிபோன்றவொன்று இருக்கிறது.அதில் நானே முக்கியமானவனாக இருக்கிறேன் என்பதைச் சொல்லிச் செல்வதையும் கவனமாகக் கவனிப்பதில், நான் எப்போதும்போல செயலூக்கத்தோடு இருக்கிறேன்.இந்தச் செயலூக்கம் ஒரு தியான நிலையாக எனக்குள் பழக்கப்பட்டுவிட்டது.எனவே,நான் எதையிட்டுங் கவலையுறேன்.

இதை மறுத்து,பண்பு ரீதியாக மாற்றம் வர, அளவு ரீதியான மாற்றம் ஏற்பட்டாகவேண்டும்.எனக்குள் இருக்கும் அளவுகோல் மாறாதவரை எனது பண்பில் எந்தக்கொம்பரும் மாற்றங்கோர முடியாது-எந்தெதிரெழுத்தும் எனக்குள்ளிருக்கும் அளவை மாற்றமுடியாது.

ஏனெனில்,எனது வாழ்நிலையே எனது அளவைத் தீர்மானிப்பதால் அது புறத்திலிருந்து என்னக்கதை உருவாக்கி இயக்கிறது.எனது வாழ்நிலை மாறத்துடிக்கும் சமூகத்துக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதென்றால் அதை யாரால் மாற்றமுடியும்?

என் வாழ்நிலையோடு தீர்மானமாகும் எனது சமூகவுணர்வு எனக்குள் பேசப்படும் புரட்சிகர நடவடிக்கையென்பது என்னளவில் உணர்வுரீதியாக உள்வாங்க முடியாது. ஏனெனில்,நான் புரட்சிகர நடவடிக்கைகளை-முன் நிபந்தனைகளை எனக்குத் தோதாக மாற்றும்-பொருத்தும் தளத்தில் எனது புரிதற்பாட்டைச் சிதைக்கும் எந்தத் தரவையும் அதன் நியாயத்தன்மையில் வைத்து மாற்றி,மாற்றியமைக்கும் எண்ணங்களது தெரிவில் நான் இருப்புக் குறித்துச் சதா இயங்குவது எனது பண்பினது தொடர்.

இதைப் புரியாதவர்கள் எனக்குப் பாடம் நடாத்த முனைந்தால் அது அவர்களது தப்பில்லை.மாறாக, அது அவர்தம் அறியாவுலகம்.

அவ்வளவுதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.10.2010

அவ்கான் அமெரிக்காவால் வளர்கிறது!

அவ்கான் அமெரிக்காவால் வளர்கிறது!

மெரிக்க-நேட்டோத் துருப்புகள் அவ்கானில் ஜனநாயகத்தைக் கட்டி வளர்க்கிறார்கள்:

இதோ சாட்சி; இந்த வீடியோ அவர்களது சமூக சேவையைச் சொல்கிறது.

அவ்கானிஸ்த்தானில் நேட்டோ சமாதானத்தையும்,பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகிறது.அது தலிபான் „பயங்கரவாதிகளிடமிருந்து“ அவ்கானிஸ்த்தானைக் காத்து வருகிறது.

அந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தையும்,பொருளாதார சுபீட்சத்தையும்,மீள் கட்டுமானத்தையுஞ் செய்வதென்று ஒரே கத்துக்கத்தும் ஜேர்மனி,பிரான்ஸ்சு-அமெரிக்கா இங்கே அம்மணமாகிறது.

1990-2000 ஆண்டுகள்வரை அவ்கானில் 90.000.கெக்டரில் போதைப் பயிர் பயிரடப்பட்டது.

2001 ஆம் ஆண்டு, தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் போதைப் பயிர் வெறும் 7500 கெக்டரில்தாம் பயிரிடப்பட்டது.

அனைத்தையும் அழித்து அவ்வகானைப் போதைப் பயிரிலிருந்து அவர்கள்(தலிபான்கள்) காத்தார்களாம்.

அந்த 7500 கெக்டர் பயிரும் அமெரிக்கா காலூன்றிய இடத்திலேயே பயிரடப்பட்டிருக்கு.

நேட்டோ தலிபான்களை மலையடிவாரத்துக்குத் துரத்தியபின் 2004 ஆம் ஆண்டு அப் போதைப் பயிர் செய்கை 131.000.ஹெக்டரில் செய்பட்டும்-2007 ஆண்டு 193.000. ஹெக்டரில் பயிரிடப்பட்டு பெருமளவு உலக மக்களைக் கொல்ல, அமெரிக்கா தனது இராணுவத்துக் கூடாக இவ் வியாபாரத்தைத் தொடர்ந்தது-இன்றும் அமோகமாகத் தொடர்கிறது!

இன்று, இது பல இலட்சம் ஏக்கரில் அமெரிக்க இராணுவத்தால் பயிரடப்படுகிறதாம்.செய்ப்படும் போதைப் பயிர் உஸ்பிஸ்த்தானுக் கூடாக அமெரிக்க இராணுவத்தால்கடத்தப் பட்டு, இருஷ்சியாவை வேட்டையாடுவது எதனால்?எந்த மக்களைத கருவறுக்க? அமெரிக்காவுக்கு இதுவுமொரு ஆயுதம்!கவனிக்கப்பட வேண்டியது இது…

இந்த வீடியோவைப் பாருங்கள்-கேளுங்கள்.இதன் மொழி புரியாதவர்களுக்காக இதை வேறொரு தினத்தில் முழுமையாக மொழிமாற்றிச் சொல்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.10.2010

"நான்-நான்"-Ethical egoism

மீண்டுமொருமுறை இந்த முறைமையிலான பண்டுதொட்டுப் பேசப்படும்- மொழிவழி செயற்படும் அதிகாரத்துவ,ஆணவ ஆதிக்க உளவியல் குறித்வொரு குறிப்பு அவசிமாக இருக்கிறது.காலாகாலமாக மரபுவழிப் புரிதற்பாட்டினது உளவியற் பரப்பிலிருந்து முற்று முழுதாகி விட்டு விடுதலையாகும் ஒரு மனிதருக்கும் -அதன் வழி இதுவரை செயற்பட்டுவரும் எழுத்து வடிவத்துக்கும் மதிப்பீடாக எந்த வொரு சாத்தியப்பரப்பையும் இதனுள் நிறுவாது-இது முற்றுமுழுதானவொரு உளப்பரிமாற்றமாகவும் நட்பினது ஆகக்கூடிய தோழமையை உறுதிப்படுத்துவதற்கான முனைவாகவும் இருந்தால் அதுவே எமது தோழமையினது வெற்றியாகும்.

„நான்தான் தனித்து ஆப்பு இழுத்தேன்,

நான் தான் மார்க்சிசம் பேசினேன்,

நான் தான் தனித்து உருட்டிப் புரட்டினேன்“

புலம்பெயர் பத்திரிகை-இணைய ஊடகத்துள் இந்த முத்துக்களை மலிவாகக் காணமுடிம்.இந்த „நான்“சாகடிக்கப்படமால் நானிலித்துக்கு நன்மை பயக்குமெனக் கருத முடியுதோ?-;இல்லையே!

„நானே குரல்-நானே ஜீவன்“ -„நானே புதியஜனநாயகத்தை புலம்பெயர் சூழலில் அறிமுகப்படுத்தினேன்“. சுப்பரடா-சுப்பா!

1986 இன்ஆரம்பத்திலிருந்து நூரன் பேர்க்குக்கு இலங்கையிலிருந்து சென்று தமிழ்நாட்டில் வாழ்ந்த „என் குரு“( சிவகுரு ஐயாவுக்கு அன்று எழுபது வயது.அவரது மகள் ஜனகா அக்கா இன்று பிரான்சில் இருக்கிறாள்) மூலம் நேரடியா எடுத்து நாமும் வாசித்தோம்-நேரடியான சந்தாதாரராயும் இன்றுவரை இருக்கிறோம்.புலம்பெயர் மொத்தச் சமூகத்தையும்“நான்-நான்“க்குள் புதைக்க முடியுமா? சமூக மாற்றத்துக்காக எல்லோருந்தாம் உழைக்கின்றனர்.சிலர் பொதுவான எண்ணவோட்டத்துள் மூழ்கி வினைமறுப்பில் இயங்க,அதைப் பயனாக வைத்து „நான்“ முன்னுக்கு வர முடியுமா?

இந்த „நான்“ தொலையவேண்டுமெனச் சொன்னவர் சிவகுரு ஐயா.அவர் எனக்கு மு.வரதராஜன் அவர்களது கரித்துண்டு நாவலை வாசிக்கும்படி நச்சரித்தார்.தமிழ்நாடு பூராக அந்த நாவலைத் தேடியெடுக்க முனைந்தார், அன்றவர்.அவரும்,அவர்தம் புதல்வி ஜனகாவும் அன்று(1986-1993) தமிழ்நாட்டில் தத்தளித்த நமது மாணவர்களைப் படிப்பிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டனர்!நாம் அவர்களக்கு அணிலாக இருந்தோம்(சிறந்த சமூகசேவை-புரட்சியாளன் எனது குரருவென்று இன்றும் பணிவேன்!சிவகுரு ஐயா இப்போது உயிரோடு இருக்க வேண்டுமென அவாப்படுகிறேன்.ஆனால், அவர் பற்றி எதுவும் அறியமுடியவில்லை!).

ஓய் மிஷ்டர் „நான்“:

நாம் செயற்படும் தளமானது நமது சொந்த வாழ்வினது வட்டமில்லை,மாறாக இதுவொரு சமுதாயத்தினது தளத்தின் உள்ளகத்தில் நின்றுகொண்டு அதன் இதுவரையான செயற்பாட்டின் மீது விமர்சன ரீதியாக முன்வைக்கப்படும் எழுத்துக்களோடு நாம் வருகிறோம்.

இதற்கு வழிவழி வரும் தனிநபர் வாத உளப்பாங்கைக் கருவறுத்து உலகு தழுவிய நேசிப்பும்-எமக்கு முன் வாழ்ந்த எம் முன்னோர்கள் தந்த அறிவுப்பரப்பில் நின்று நிதானிக் முனையும் ஒருவர் நிச்சியாக தன்முனைப்பிழந்த „நாம்“ என்ற சுட்டலுக்குள் வந்து விடுதல் தவிர்க்கமுடியாத இயக்கப்பாடாகவேயிருக்கும்.

ஒரு தனிநபர் தன்னால் முடிந்தது என்பது, அறிவுவாத புரிதற்பாடற்ற தன்முனைப்பினது நோயாகவே இது வரை நோக்கப் படுகிறது.இங்கே“நான்“க்கு முக்கியத்துவம் தன்னிலை இருப்பபுக்கு அவசியமெனப் பார்த்தால் தனிமரமானது தோப்பாகினாற்றான் தேருக்குதவும்- சூழலுக்கும் மிஞ்சும்!இது சகல மட்டங்களிலும் பரவாத நிகழ்வுப்போக்கால் நாம் இதன் தளத்தைத் தவிர்த்து விட்டுள்ளோம்.

எதற்கெடுத்தாலும்“நான் சொன்னேன்-நான் செய்தேன்,என்னால் முடிந்தது“ என்பது தனிநபர் சார்ந்தவொரு செயற்பரப்புக்கு வேண்டுமானால் சரியாகலாம் ஆனால் அதுகூட இன்னொரு துணையின்றி நிகழ முடியாது!

இது ஒரு குழு வாழ்வு.குழுவென்றவுடன் பல்பத்துப்பேர்களோடு திட்டமிட்டவொரு செயற்பாங்கென்று கற்பனைசெய்தால் அது தப்பு. நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்குமானால் அதன் சுட்டல் சரிவரும் பரப்பு ஒற்றை மானிட வாழ்வுக்குப் பொருந்தும்.அதுவே கூட்டு வாழ்வாய் மலர்ந்து சமுதாயமாக நாம் வாழும் இன்றைய வாழ்சூழலில் நமது என்பது செத்து நான் என்பது வெறும் குறிப்பானாக இருக்காது „தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே „தான்“ எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது. இதன் வெளிப்பாடு குடும்ப மட்டத்தில் துணைவனின் இழப்பில் துணைவியும் தன் வாழ்வு முடிந்ததாக எண்ணுவதும்,அது சமுதாயமட்டமானால் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காதாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.

இந்த „நான்“ இழப்பினது அவசியமென்பது வெறும் கருத்துருவாக்க சொற் கோர்வையற்ற சமுக உளவியற்போக்குக்கும் அதன் வாயிலான கூட்டுமுயற்சிக்கும் அவசியமானதென்பதை நம் முன்னோர்கள் நன்றாகவே அறந்துள்ளார்கள்.இதற்கொரு உதாரணம் கூறுகிறோம்(கூறுகிறேன்):

பண்டைய தமிழகத்தில் மன்னனொருவன் ஒரு ஞானியைச் சந்திப்பதற்காக அந்த முனிவரின் குடிசை(பங்களாவல்ல) நோக்கிப் போகின்றான்.போனவன் அவர்தம் குடிசையின் கதவைத் தட்டுகிறான்.பதிலுக்கு ஞானி கேட்கிறார்“யார் அங்கே?“,மன்னன் கூறுகிறான்“ நான் வந்திருக்கிறேன் உங்களைப் பார்க்க“. ஞானியின் பதிலோ“நான் இறந்த பின் வருக!“ மன்னனுக்கு எரிச்சில் அதிகமாகி „நீர் இறந்த பின் எப்படி உம்மை த் தரிசிக்கிறது?“ என்ற கடுகடுப்பு. ஞானியோ மௌனமாக.

இது எதைக் குறித்துரைக்கிறதென்பதை அந்த மன்னன் மட்டுமல்ல இன்றைய „நான்“ களும்தாம்அறிந்துள்ளனரென்றாலும் அவர்தம் இருப்பு அவர்களை அதையொட்டிச் சிந்திக்கவிடுவதில்லை!

சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி „தலைவரே,தலைவரே“ போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் „சுப்பர் மேன்“ கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.

„நானென்றும் தானென்றும்
நாடினேன்!நாடலும்
நானென்று தானென்று
இரண்டில்லை என்று
நானென்ற ஞான
முதல்வனே நல்கினான்
நானென்று நானும்
நினைப்பொழிந் தேனே“ -என்கிறார் திருமூலர்

எனவேதாம் „நான்“ சாகடிக்கப்பட்டு „நாம்“,“நாம்“ பிறக்கிறது:

இப்போது,அதீதத் தனிநபர் வாதம் முன்வைக்கும் இன்னொரு கேள்வி:

„சுய விமர்சனஞ் செய்-மக்களுக்கு என்ன செய்தீர்? சுயநலமாகச் சிந்திப்பதைத் தவிர?“

புத்தகமும் கையுமாக,பேரெடுக்கும் மாணவர்களாகவும்,தமது குடும்பத்துக்கு-தனக்கு மட்டும் பொருள் தேடும் கனவோடு,பல்கலைக்கழகஞ் சென்று „பட்டம்“ பெற்று நல்ல சீதனத்தில் பெண்ணெடுக்கும்“யாழ்ப்பாண நடுத்தர வர்க்க மனோபவமானது ஒரு பொழுதில் புழுதிதோய்ந்த கல்லொழுங்கை வழியாகப் பாய்ந்து காடுமேடெல்லாம் அலைந்தது.தனக்காக வாழ்ந்த இந்தத் தீவு வாழ்வைக் கிடுகு வேலி பிரித்து வெளியேறிப் புதியவுலகுக்காக மனமுவந்து கொடுக்க முன் வந்தது. இந்த மன இராச்சியத்தில் ஏற்பட்ட மாற்றஞ் சாதாரணமானதொன்றோ?-சொல்லுங்கள்! அங்கே,சுய நலமும் அதையொட்டிய குவிப்பு மனமும் இருந்ததா?எல்லாவற்றையுந் தாரவார்த்துக்கொடுத்து விட்டுத் தேசத்துக்காகச் செத்தவர்கள் பல்லாயிரம்பேர்கள்.அவர்களது உயிரைத் துஷ்பிரயோகஞ் செய்த இந்த இயக்க வாதமே மீளக் கேட்கிறது“சுய விமர்சனஞ் செய்- மக்களுக்கு என்ன செய்தீர்கள்?“-மக்களுக்காக என்ன செய்தீர்களென.

இந்தத் தனி நபர் வாதமானது தன்னைச் சுற்றிப் பாதுகாப்பு அரணைக் கட்டுவதற்கே இந்தக் கேள்வியோடு உலகைப் பார்த்துக் கொட்டாவி விடுகிறது.இன்றைய மக்களது அவலத்துக்கு அன்றைய தவறான தெரிவுகளே காரணமாகின.அந்தத் தவறான தெரிவுகளது எச்சம் மீளவும் மக்களது பெயரால் ஈனத் தனமாகப் புலம்புகிறது.இதைச் சுட்டிவதற்கு பற்பல காரணிகள் நமக்குள் நடந்துவிட்டன.எனினும், இந்தச் சுய பாதுகாப்பு அரண் அதீத தனிநபர் வாதத்துக்கு முண்டு கொடுப்பதற்கான தெரிவில் மக்களைச் சுட்டியே தமது இருப்பை உறுதிப்படுத்துகின்றன.இந்த இருப்பு எதற்காக?

இந்தக் கேள்வியே பிரதானமானது:

தத்தமது இருப்போடு நிகழ்த்தப்படும் இயக்கவாத மாயையானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒருகிணைவைத் தடுத்தே வருகிறது.அது கூட்டு வேலைக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது மட்டுமல்ல எல்லோரையும் சிதைத்துத் தமது தேவைக்கான அரசியலைப் பொதுவான மக்கள் நல அரசியலாகவேறு வற்புறுத்தி ஏற்க வைக்கப்படாதுபாடுபடுகிறது!

இந்தப் புள்ளியற்றாம் அனைவர்மீதும் அவதூறு விதைக்கப்படுகிறது.நான் அறியப் புலம் பெயர் தளத்தில் அரசியல் செயற்பாட்டிலுள்ள 99.999999 சத வீதமானவர்கள் அவதூறின்வழி கழிசடையாக்கப்பட்டனர்.இதுள் கணிசமானவர்கள் இதே சமூகச் சாக்கடையில்தாம் பிறந்தோம்.இந்தச் சமூகத்தின் அனைத்தும் எமக்குள் பிரதிபலிக்கின்றனவென்பதை இலகுவில் மறந்துவிடும் பொய் அரசியல்-„புரட்(டு)சீ“க்கு எத்தனை விதமான ஏமாற்று வித்தை தெரிந்திருக்கோ அத்தனையையும் அது „புரட்(டு)சீ“யால் செய்து முடிக்கத் துடிக்கிறது.

இதுவொரு தளத்தில் அம்பலப்பட்டு முட்டுச் சந்தியில் நின்றாலும் அதன் அடுத்த ஆட்டம் தொடராகவரும் „புரட்சிக் கீதத்தில்“ தன்னைக் கழுவு முனையும்.இது,மீளவும் அதே குழிப் பறிப்பின் தொடராக விடப்போகும்“பீலா“எல்லோருக்குமான சவக் குழியை வெட்டி வைக்க முனையும்.ஆனால்,அது உண்மையாக மக்கள் அரசியலைப் பேசாது போலியாக நடிக்கும் „எதிர்ப் புரட்சியில்“ எப்பவும் அம்பலப்படும். உண்மையான புரட்சிக்காரனுக்கு எந்தத் தொங்கு சதையும் தேவையற்றது.அவ்வண்ணமே, எந்தப் பக்க வாத்தியமும் தேவையற்றது.

நீதியும்,நேர்மையும் எமது விலங்கை நாமே ஒடிப்பதற்கான திசை வழியில் வார்க்கப்படும்போது „உன்னை“ எந்தக் கொம்பனாலும்-குழுவாலும் எதுவுஞ் செய்துவிட முடியாது.

எனக்குள் நிகழ்வது உனக்குள்ளும்,உனக்குள் நிகழ்வது எனக்குள்ளும் நிகழ்வது இந்த வாழ்நிலைப் பயனே!வாழ்நிலைதாம் மொத்தமான மனிதநிலையையும் உருவகப்படுத்துகிறது அதிலிருந்து தாம் எனது „;இருப்பும்“என்னால் உணரப்படுகிறது.பருப்பொருள்-பருப்பொருள் என்று படாதபாடுபட்டுப் புரிந்துகொள்ள முனைகிறோமே அது நாம் உணரும் நிலையைக்கடந்து மொத்தமான முகிழ்ப்பில் அரும்புகிறது?

எனக்கு,என்னுடைய புலனுணர்ச்சிகளால் தரப்படுக்கின்ற புறநிலையான யதார்த்தத்தைக் குறிக்கின்ற „புரிதற்பாட்டு“ வகையினமே பருப்பொருள் எனப்பகரப்பட்டும்.எனக்குமுன் விரிந்து கிடக்கும் புறநிலையான மெய்ப்பாட்டிலிருந்து சுதந்திரமாகத் திரண்டு புலனுணர்ச்சிகளால் பிரதியெடுக்கப்படும் இந்தப் படம் எப்படிப் பிரதிபலிக்கிறது?

நாம் திருமூலரிடம்போவோம்.அவரைக் கடாசியவர்களும் அவரது ஆன்ம விசாரணைகளில் சில பொருத்தமான புரிதல்கள் உலகவியத்துக்குத் தோதான வகையினத்துள் வருவதைக் கணக்கெடுகலாம்:

„மண்ணொன்று தான்பல
நற்கலம் ஆயிடும்
உண்ணின்ற யோனிகள்
எல்லாம் இறைவனே
கண்ணொன்று தான்பல
காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணம்
ஆகிநின் றானே!“ – திருமூலர் திருவாக்கு

பருப்பொருளுக்கு லெனின் கூறிய விளக்கத்தை இத்தோடு பொருத்திப்பார்த்தால் நமது வாழ்நிலையின் சமூக உணர்வு நிலை வடிவமைத்த பண்பு இன்னும் ஆழமாகப் புரிந்துபோகிறது.எனது உணர்வுக்கு வெளியே சர்வப் பொதுக் குணாம்சத்தைக் கொண்டியங்கும் இந்தப் புறவுலகு, எனக்குள் பொதுப்மைப்படும் சந்தர்ப்பத்தில், திருமூலர் சின்ன வரிக்குள் பல்லாயிரம் பக்க விளக்கத்தைக் கொட்டி வைத்திருக்கிறார்.இது,மனித முயற்சிகளது தெரிவில் மனிதர்கள் பொதுவான நிறை-குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களில்லை என்ற சிறிய புரிதல் விழிமுன் கொணரப்பட்டுத் தனி நபர்களது எல்லைகiளுயும் அதுசார்ந்த ஒழுக்கங்களையும் இந்தச் சமூகச் சாக்கடையில் உரைக்கச் சொல்கிறது.

எனவே,“நான்-நான்“மகா ராசாக்கள் மலிந்த இந்தக் காலக்கட்டத்தில்“நாம்-நாம்“கிடைப்பதற்கரிய அமிழ்தம் என்பதில் என்னதான் வேடிக்கை?

எனவே, நாம் நிற்கும் தளமானது ஒருமைத் தோற்றுவாயின் பன்மையான பயன்களே.இதுள் அவன் காசைப் பறித்தாலென்-இவன் பெண்டிரைப் புணர்ந்தாலென்ன?எல்லாம் இந்தச் சமுதாயச் சாக்கடையின் பிரதிபலிப்புத்தாம்.அதை மாற்றியமைப்பதறஇகு இந்தக் குறைபாடுடைய மனிதர்கள்தாம் முயற்று,முயன்று தம்மைத் தகவமைத்தபடி மேலே செல்லவேண்டும்.அதுவரையும்“நானும் பொய்யன்-நீயும் பொய்யன்“தாம்!

இதன் தாத்பரியம் „மாற்றானை நேசி மனமே“ என்பதுதாம்.

இதுவன்றி வேறு மார்க்கம் மானுடர்கட்கு மகத்துவம் அளிப்பதில்லை.

கருத்துகட்கு மேலான மனிதநேசிப்பு மதங்களின் பால் மையங்கொண்ட மாயை அல்ல. இது மகத்துவமான அறிவின் வெளிப்பாடு.

ஆதலால், மனித மாண்புக்கு நிகராக எந்தக் கருதுகோளும்- தத்துவங்களும் எம்மை ஆட்கொள்ள முடியாது.

அப்படி ஆட்கொள்ளத்தக்க தத்துவங்களும்-தேச விடுதலைப் பரிமாணங்களும் நம்மிடமிருந்தால் காட்டுங்கள், அந்தக் கோட்டைக்குள்ளும் நுழைந்து மானுட மாண்பைப் பார்ப்போம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.10.2010

%d Bloggern gefällt das: