அடடே,ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலின் …

அடடே,ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலின் இன்னொரு, டக்ளஸ் ஆகிட்டாரடா!


சா
ர்த்தார்(டான் ரி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளர்) அவர்களே,

எல்லோரும் ஒரு இனமாக எழுவதென்பதை மறுத்துத்தாமே வடக்குக் கிழக்கு மாகாணப்பிரிவு?

பின்பு,என்ன அரசு,புலி பிரித்தாளும் தந்திரமென்கிறீர்கள்?.

கிழக்கின் மீதான வடக்கு யாழ் மேலாதிக்கமோ அல்ல கிழக்கு முஸ்லீம்கள்-சிங்களவர்கள் மீதான கிழக்குத் தமிழரின் மேலாதிக்கமோ இரண்டும், அடிப்படையில் தவறானவை.எனவே,பிரித்தாளும் தந்திரமென்பது இப்போதுதாம் மிக நேர்த்தியாக இயங்குகிறது.இதைத்தாம் ஞானம் வகுப்பெடுக்கிறார்.ஆனால்,யாருக்காக என்பதே கேள்வி?

இலங்கை ஜனாதிபதி மகிந்தா சொல்கிறார்:

„நான் இலங்கையின் அனைத்து மக்களுடைய ஜனாதிபதி.ஒருவரையும் புறக்கணிக்கமாட்டேன்.அனைவருமே இலங்கையின் குடிகள்.நாம் அனைவரும்இலங்கையரே தவிர தமிழர்களோ,சிங்களவர்களோ,முஸ்லீம்களோ அல்ல. மாறாக,“ இலங்கையாகள்“.“

ஞானம் சொல்கிறார்(கவனிக்கவும்: இனிமேல் „அடேய், மச்சான்“ போட ஏலாது.அவன் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்தனது அரசியல் ஆலோசகர்.அரசியற் பலமுடைய அதிகாரத்தோடிருப்பவனை-„அவர்“என விளித்துக்கொண்டு…):

http://www.ustream.tv/embed/recorded/21365868

Video streaming by Ustream

„முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்குமாகாண அனைத்து மக்களுக்குமான முதலமைச்சர்,முஸ்லீம்களே அதை ஒப்புக்கொள்வார்கள்.“

இங்கே,மகிந்தாவினதும்,ஞானத்தினதும் கோசத்துள் மறைந்திருக்கும் அதிகாரமானது தாம் மையம்.இந்த அதிகாரம் எதிலிருந்து எழுகிறது?

இதுதானே யாழ்ப்பாண மைய வாதத்துக்கும் ஏலவே அடிப்படையானது?

பின்பு,வடக்குக் கிழக்கு இணைவென்பது யாழ்ப்பாணிய மேலாதிக்கமானபோது,கிழக்குக்குள்“முஸ்லீம்கள்“மீது இந்த கிழக்குத் தமிழ் அடையாள மேலாதிக்கம் காலவோட்டத்தில் அழுத்தத்தைதாம் செய்யும்.கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்புக்குக் கூறும் இந்த அனைத்து மையமான காரணிகளும் அதிகாரத்திலிருந்து எழுவதென்பதில் கிழக்குமாகாண அரச அதிகாரி ஞானம் கவனத்தைக்கொள்ளுவாரெனவும் நம்பிடலாம்.

கிழக்கு மாகாணத்தில் மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் அவரவர் வாழும் பாரம்பரியமான தாயகப் பூமி நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்டு,அந்தந்த மக்கள் கூட்டமே அதை நிர்வாகிக்கும் மாகணவுரிமை அவசியம்.

எனவே,கிழக்கிலோ அன்றி வடக்கிலோ எம்.ஆர்.ஸ்டாலினது வாதத்துக்கமைய மொழி-மத-சாதி ரீதியாக அவரவர் வாழும் வலயங்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்தச் சாதிகள்,மதங்கள்,மொழிகள் சார்ந்து அவரவர் ஆளுவதே சரி.

யாழ்ப்பாணியச் சைவ வேளாள மேலாதிக்கத்தின் வினை போன்றதே கிழக்குமாகாணத்துக்கு ஒரு தமிழன் முதல்வராவது.இது ஏற்கக் கூடியது அல்ல!அப்பாவி முஸ்லீம்களைத் தொடர்ந்து ஓரங்கட்டும் வடக்குக் கிழக்கு மைய வாதத்தை என்னால் ஏற்க முடியாது.இதை முஸ்லீம்களும் தமக்கான ஆளுமையை-முதலமைச்சரைத் தேடிக்கொண்டு,முஸ்லீம் மாகாணத்தை கிழக்கில் உருவாக்கியே தீரவேண்டும்.இதற்கு இந்தியா-அமெரிக்கா மிக நேர்த்தியாக உதவ முன்வருவார்கள்.

கிழக்கு மாகாண அரச அதிகாரி ஞானத்தின் குரலானது முற்று முழுதாகக் கிழக்கு மைய வாதமாகும்.அஃது, முஸ்லீம்களை ஏமாற்றும்.ஏனெனில்,வடக்குச் சைவ வேள யாழ் மைய வாதமானது ஞானத்தை ஏமாற்றியது.அதுபோல் ஞானத்தின் கிழக்கு மைய வாதம் முஸ்லீம்களுக்குக் “ கீல்வாதமாக“ மாறும்.ஆகையினால்,முஸ்லீம்களே உங்களை நீங்களே ஆள அநுமதியுங்கள்.

முஸ்லீம் மாகாணம் ஒன்று கிழக்கு மாகாணத்துள் உருவாகவேண்டும்.கிழக்கு மாகணத்தில் கிட்டத்தட்ட 70 வீதமானவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள்.அவர்கள் முஸ்லீம்களாகவும்,சிங்களவர்களுமாக இருப்பதால் கிழக்கு மாகாணத் தமிழ் மேலாதிக்கத்துள் அவர்கள் கட்டுண்டு போவதை ஏற்க முடியாது.

காலவோட்டத்தில் கிழக்கு மேலாதிக்கத்தின் பண்பும் அதே யாழ் மேலாதிகத்தின் பண்பாகவே விரியும்.ஏனெனில்,அதிகாரத்தின் இயல்பே ஆதிக்கத்தைத் தகவமைத்துக்கொண்டு இருப்பைக் காப்பது.எனவே,கிழக்கு மாகாண இனங்கள் யாவருக்கும் ஒரு முதலமைச்சர் என்பது அதே மகிந்தாவின் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதி எனும் அதிகாரத்தின் வடிவமே.

ஆக,அவரவரை அவரவரே ஆ(ள)ட விடவேண்டும் ஞானம்.

கிழக்கையும் „முஸ்லீம்-தமிழ்“ மாகாணங்களாகப் பிரித்து விடுங்கோ.அப்போதுதாம்,உங்கள் மேதமையை நம்போன்ற மூடர்கள் அறிந்து பின்தொடர முடியும்!

அங்கே, ஒரு முஸ்லீம் மாகாணம் உருவாகியே தீரவேண்டும். இதுதாம் உங்கள் ஞானத்தினது விருத்திக்குச் சரியானது.

வடக்கையும்-கிழக்கையும் பிரித்த உங்கள் அரசியல் அறிவுக்கு இதுவும் சரியானதாகப்பட வேண்டும்.இல்லையேல் அடிப்படையிலேயே உங்கள் அரசியல் யாருக்கோ உழைப்பதாகவும்,அந்தச் சக்திகளது பிரித்தாளும் தந்திரத்துக்கு நீங்கள் வாய்க்கால் வெட்டும் ஒரு தொண்டாரப் பயல்தாம்.

எதுவெப்படியோ,அமெரிக்காவினதும்,இந்தியாவினதும் நீண்ட காலக் கனவான „வடக்குக் கிழக்கு“ இணைவு மறுக்கும் கனவு இப்போது நனவாச்சு!

உங்களைவிட அமெரிக்காவுக்கு இது ரொம்ப மகிழ்ச்சி அன்பரே.

ஏனெனில்,இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் யாவும்,இப்போது நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது.அது இனிமேல் பிரதேசவாரியான உள்ளக முரண்களையும் கூடவே நகர்த்தி இலங்கையில் தேசியவின உருவாக்கத்தையும்,தேசியப் பொருளாதார வளர்ச்சியையும் முளையிலேயே கருக்கி நகரும்.இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் நண்ப!

இதுதாம்,அமெரிக்காவினது பெரு விருப்பு-கூடவே, நம்ம இந்திய வடக்கு ஆதிக்கத்துக்கும் இது மனமுவர்ந்த அரசியலே!!

அன்போடு,
ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.2012

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: