குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?

//“கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது“//

ரொம்ப மெலினப்படுத்தப்பட்ட கருத்து.
குருபரனது மௌனம் கலைகிறது தொடர் இயக்க அராஜகவாதம்-உட்கட்சி ஜனநாயகமின்மைசார்ந்த படுகொலை அழிவு, அரசியலை இவ்வளவு மெலினப்படுத்திப்பார்பது மிகக் குறுகிய பார்வையாகும்.
உண்மையாக? பரம்பரைக் காரணிகள்,பண்பாட்டுணர்வு,ஐதீகம்தாம் படுகொலை-அராஜகத்தைத் தொடர்ந்து தீர்மானிப்பது?
புத்தர் அனைத்துக்கும் ஆசைதாம் காரணமென்கிறார்.ஆசை,பொருள் சார்ந்த உணர்வாகிறது.புறம் இல்லையெனில் அகவுணர்வு படிமமாக முடியாதென்பதில் புத்தர் பெருமையான சிந்தனையாளர்.ஆகையால் அவர் சொன்னார்“மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்“என.

சமீபத்து மார்க்ஸ் உரைத்தார்: „வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பது“என.

„வன்முறையுணர்வின் வேர்களை „எமது „கலாச் சாரத்திலும், ஐதீகங்களிலும்,பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது“ இத்தகைய கருத்தைக்கொண்டிருக்கும் ஒருவர் போராட்ட வரலாறு சொல்லும் அவலம் நமக்கு.“பண்பாடு-கலாச்சாரம்“ இரண்டும் முதலில் வெவ்வேறானதாகப் புரிந்தும் கொள்கிறார்;விளக்கவேண்டும் குருபரன்!
இதைத் தொடர்ந்து(அவரது கலைந்த மௌனத்தை) வாசித்தபோது, குருபரன் ஒரு பத்திரிகையாளனாகப் பலதரப்பட்ட தளத்தில் அநுபவப்பட்டிருப்பது புரிகிறது.அந்தத் தளம் அனைத்துமே அராஜகத்தால் நிரம்பிய தளங்கள்.இவை, அனைத்துமே பல அந்நியச் சக்திகளது கைகளுக்குக் கட்டுப்பட்ட தளங்களாக இருந்திருக்கிறது.
சுகமாக அவற்றைக் கேள்விகளோடு விலத்திச் சென்றுவிடும் குருபரன் பண்பாட்டிலும்,ஐதீகத்திலும் பழியைப்போட்டு விட்டுக்  கலைக்கப்படும் மௌனம் வெறுஞ் செய்திதாம்.
அஃது, அராஜகத்தின் பக்ககங்களையும்,அதன் நிகழ்வுகளையும் தொகுப்பதுதாம்.ஆனால்,நாம் அனைவருமே அறிந்த இலங்கை அரசியற் போக்குகளில் இந்திய-அமெரிக்க உளவு நிறுவனங்களது கைங்காரியம் எங்ஙனம் ஒரு இனத்தின் தலையை இயக்கங்களால் மொட்டையடித்தனவென்பதை „வரரலாற்றில் தடுக்கிக்கொண்டு“ குருபரன் இங்ஙனம் பண்பாட்டில்-ஐதீகங்களில் பழி போடுதல் இந்தியப் பார்ப்பனியப் புனைவுக்கு ஒப்பானது சார்!
சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்,அதாவது 1987 ஆம் ஆண்டு ஒரு நாவல் வாசித்தேன். ரா.சு.நல்லபெருமாளது நாவல் அது.
பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் இந்த ஆசிரியரது „கல்லுக்குள் ஈரம்“ நாவலை வாசித்துப் பெரும் மதிப்பு வைத்திருந்த நாவலாசிரியர் அவர்.அந்த ஆர்வத்தில் அவரது அனைத்து எழுத்துக்களையும் வாசிக்க ஆரம்பித்தபோது அவருக்கு நாவல் எழுதத்தெரியாதென்பதை உணர்ந்துகொள்ளும் நிலைக்குள் நான் வந்தேன்!; கூடவே,அவர் பெரு நிறுவன பார்ப்பனியத்தின் கோடியில் சாணாக்கியத்தைப் புரட்டும் நாவலாசிரியர் என்பதைப் புரிந்தும் வைத்தேன்.
ரா.சு.நல்லபெருமாளது கயமைமிகு „உணர்வுகள் உறங்குவதில்லை“ என்னும் நாவலை 1987 ஆம் வருடம் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில்அந்த நாவலூடாக, பிரமாணனது நச்சு நாக்கை உணரத்தலைப்பட்டேன்.
உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சிதைத்து அவர்களது பரம்பரைக்குணமாகக் கொலையையும்-திருட்டையும்,அராஜகத்தையும் கற்பித்த நல்லபெருமாள்,எவ்வளவுதாம் இந்த மக்கள் கல்வி கற்று உயர்ந்தாலும் அவர்களது பரம்பரைக் குணம் அகலாது.அது, ஒரு பொழுதில் மேலெழுந்து கொலை-கொள்ளையில் ஈடுபடுமென முத்திராமன் என்ற பார்த்திரத்துக்கூடாக வெளிப்படுத்துவார்.அத்தோடு நிற்காது,உயர்ந்த பிரமணர்களால் போராடிப் பெற்ற சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவானது இழி நிலையடைந்ததற்குக் காரணம் இத்தகைய பரம்பரைக் குணமுடைய-ஜீன்ஸ்சுகள் அரசியலுக்கு வந்ததே காரணமெனவும் கூறுகிறார்.
அமைப்பைக் காப்பதற்காகச் சில அரசியல் வாதிகள்மீது பழிபோடும் சினிமாக்கள் நமக்குள் அதிகம்.“நல்லவர்கள்-வல்லவர்கள்“ஆட்சிக்கு வந்தால் அகிம்சையும்,அரவணைப்புமே நிலவுமெனவும்,அமைப்பில் குழப்பமில்லையெனவும் வகுப்பெடுக்கும் இந்தியக் கருத்துநிலைகள் உலகு தழுவியதிலிருந்து பின்னப்பட்டதெனினும் பார்ப்பனியத்துக்கான சில சிறப்புக் கூறுகளும் உண்டு.அந்த“நல்லவர்கள்-வல்லவர்கள்“யாரென்று அவர்களே சொல்லும்போது பிரமாணனது பரம குருவான யக்ஞவல்க்கீயனும்-பிரவாஹானும் நம்முன் பிர்மவாதஞ் சொல்வது புரிகிறது.
குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?;கண்டுபிடித்துச் சொல்லுங்கோ!
குறைந்த பட்சமாவது ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றின் தகவல்களைச் சொல்வதற்கு முன்னாவது, சில நூல்களைக் கற்றாய்ந்து பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
„சத்தியத்தின் உரை கல் மூளையல்ல,பொருள்கள்-இயற்கைதாம் அந்த உரைகல்“.
இனியாவது,இந்த மௌனம் கலைகிற தொடரைத் தொடர்வதற்குமுன் இராகுல சாங்கிருத்தியானின்“வால்காவிலிருந்து கங்கைவரை“ வரலாற்று நூலை-கதைகளைக் கருத்தூன்றிக் கற்றுத் தொடர்வது செழுமையாக இருக்கும் குருபரன்.சமூகத்தின் இயக்கத்தைப் புரிவதற்கு இந் நூல் பெரிதும் உதவுவது.
நிலவுகின்ற சமூக வாழ்நிலைதாம் சமுகவுணவைத் தீர்மானிக்கிறது.புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டிவிடுகிறதென்பதெல்லாம் தற்போது நவகால சமூக-பொருளாதரவியல்-அரசியல் உளப்பகுப்பாய்வில் கெட்டிக்காரரானவர்களுக்குப் புரிந்து போவதில்லைதாம்.எனினும்,நமக்குள் பல ரா.சு.நல்லபெருமாளது சாதியக் கருத்தாளர்கள் நிறையவே உண்டு.
சமூகத்தை வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கண்ணோடு பார்ப்பது காலவாதியாகிப் போய்விட்டதாகப் புசத்தும் „தும்பி“களது இறைக்கை அடிப்பில்மகிழ்வுற்ற சிறார்கள், அந்தத் தும்பிகளுக்குப் பின்னே அணிவகுத்தோடுகிறார்கள்.
முத்துராமன் ஒரு நல்ல-தலைசிறந்த புதுக்கவிதை புனைவாளனாகவும், புரட்சிகரமாகக் கருத்தாடுபவனாகவும்,புரட்சிகரவாதியுமாகக் காட்டப்பட்டு இறுதியில், பரம்பரைக்குணத்தால் கொலைக்காரனாகவும், கள்வனாகவும், அராஜகவாதியாகவும் அவன் தொடர்ந்து-தொடர்ந்து இயங்குவது அவனது பரம்பரை இரத்தத்திலுள்ள குணமே-ஜீன்ஸ்சுகளே காரணமென்று பார்ப்பனிய வேதம் உரைத்த இந்திய அரசியலை குருபரனது கருத்தோடு உரைத்துக்கொண்டால் எங்கோவொரு லிங்கு கண்ணுக்குப் புலப்படுகிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2012
Werbeanzeigen

One Response to குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?

 1. kedukudy says:

  9-04-2012, 02:35
  – Posted by Solomon
  ஐயா குருபரன் அவர்களே. உங்களை இரு கை எடுத்து கும்புடுகின்றேன். (முஸ்லிம்கள் மனிதனை வணங்குவதில்லை . ஆனால் நீங்கள் ஒரு யாழ்பாநியாக இருந்தாலும் உண்மையை பேசும் ஒரு உத்தமன் என்பதால் மரியாதை நிமித்தம் கையெடுத்து நன்றி சொல்கிறேன் )

  // தாங்கள் என்ன விதமான அரசியற் சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதையிட்டு அன்றைக்கு விடுதலைப்புலிகளின் தலைமை நிதானமுடன் சிந்தித்திருக்குமேயானால் பிற்பாடு முள்ளி வாய்க்காலில் மக்களையும் தமது ”மண்ணின் விடுதலையை” மட்டுமே சிந்தித்த பல ஆயிரம் போராளிகளையும் காவு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.//

  //கருணாவினது பிளவை அரசியல்ரீதியாகவும் இராசதந்திரரீதியாகவும் எதிர்கொள்வதை புலிகளின் இராணுவவழிப்பட்ட சிந்தனை தடுத்திருந்தது. முரண்பாடுகளுக்கு எப்பொழுது ஆயுதங்களினாலேயே தீர்வைக்கண்டு வந்த கலாசாரத்தின் வன்மப்பிடியுள் புலிகள் மீளமுடியாதபடி சிக்கியிருந்தனர்.// கொலை தவிர வேறு எது சிந்தனை. இலங்கையில் சிங்களவன் கொன்ற முஸ்லிம்களையும் , ஹிந்துக்களையும் விட புலிகள் கொன்ற முஸ்லிம்கள் , ஹிந்துக்கள ஆய்ரம் ஆய்ரம்…தொகை.

  //அவர் யார் எனத் தெரியாத போதும் தயா மாஸ்ரர் இவர்தான் கிங்ஸ்லி ராஜநாயகம் எனக் காட்டியது இப்போது ஞாபகம் வருகிறது.// இதனால் தான் நல்ல மனிதன் தயா மாஸ்டருக்கு ஆண்டவன் நல்ல வாழ்வு அளிதிதிருகிறான்.

  இந்த தொடர் புத்தகமாக வரும்போது ஆயரம் பிரதிகள் நானே வாங்கி புலி குஞ்சுகளுக்கு கொடுப்பேன்.

  //தேர்தலில் வெற்றி பெற்ற கிங்ஸ்லி ராஜநாயகம் புலிகளின் அரசியற் துறை அலுவலகத்தில் ஒரு ஓரத்தில் காத்திருந்தார்.ஆனால் பா. அரியநேந்திரன் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். இதற்கு இன்னுமொரு காரணமும் அப்பொழுது புலிகளால் முன்வைக்கப்பட்டது. வன்னித் தரப்பிற்கு ஆதரவாக இருந்த அரியநேந்திரனை தோலிவியுறுச் செய்து கிங்ஸ்லி ராஜநாயகத்தை கருணா தரப்பினர் செயற்கையாக வெல்ல வைத்தனர் என்பதே அது. இந்த நிலையில் வற்புறுத்திக் கடிதத்தை வாங்கிய பின்பும் கூட புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றன// குஞ்சு அரியாந்திரன் இதனை வாசித்திருப்பார் என்று நினைக்கிறேன். சும்மா அதிருதில்ல !

  // வீட்டினுள்ளே சென்று மாடியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த அனைவரையும் காணக் கூடியதாக இருந்தது.// பள்ளிவாசலில் நிராயுத வாளிகளாக இர்ருக்கும் மக்களையும் தூகல்தில் இருப்பவர்களையும் கொள்ளும் புலிகள் தான் வீரர்கள்.. துரோகம் என்பதன் முழு அர்த்தமே புலிகள் தான்.

  // மரணங்களை இலக்கச்சட்டத்தில் உள்ள உருளைகளைப்போல் தட்டித்தட்டி எண்ணவும் பின்னர் எதுவுமே நடக்காதது போல் நமது அலுவல்களைப்பார்கவும் பழகிப்போன சமூகமாக தமிழ்சமூகம் மாறிப்போனதைக் கண்டபோது எமது விடுதலைபோராட்டம் என்னவிதமான மனித விழுமியத்தைத் தந்ததென்று திகைக்கிறேன். //வெளிநாட்ட்டு புலி ஆதரவாளகளுக்கு தமிழனின் மரணம நானே வருமானம் .

  09-04-2012, 10:00
  – Posted by Anonymous
  // சுடுகிறவர்கள் சுடுவதற்கு முன் சூரியனுக்கு சொல்லி விட்டா சுடுகிறார்கள் // முந்தி சின்னப் பிள்ளையாய் இருக்கேக்க நானும் இப்படித் தான் யோசிக்கிறனான்…. குண்டு வெடிப்புக் கூட சூரியனில் கேட்டுத் தான் முதலில் அறிந்து கொள்ளுறனாங்கள்… அருமையான தொடர் பதிவு அண்ணா நேர்மையாக எழுதுறீங்கள்… வாழ்த்துக்கள்…. தொடர்ந்து எழுதுங்கோ….
  09-04-2012, 10:01
  – Posted by Anonymous

  மன்னிக்கவேண்டும்… மேலே எழுதியவற்றுடன் கீழே உள்ளவற்றையும் சேர்த்து வாசியுங்கள்… அளவுகடந்த புலிக்காச்சலால் கருணாதரப்புக்கு மட்டும் ஆதரவான விடையங்களைத் தெரிவு செய்துவிட்டேன். பிறகு யோசித்துப்பார்த்தபிறகுதான் என்னைப்போன்ற ஒரு நடுநிலைமை வாதிக்கு இந்தக்குணம் பொருந்தாது என உணர்ந்தேன். ஒரு பனடோலைப்போட்டு விட்டுக் காய்ச்சல் தணிந்ததும் எழுதுகிறேன்..
  “ புலிகள் கருணாவின் ஆதரவாளர்களையும் அவரின் போரணிகளையும் இலக்கு வைக்க தானும் புலிகளின் குணாம்சத்தில் இருந்து எள்ளளவும் மாறுபடாதவர் என்பதை நிரூபிக்க கருணாவும் தயாரானார்.“

  …..இந்தச் செயலுக்கான நேரடி உத்தரவைக் கருணா பிறப்பிக்க அப்போது அவரின் கட்டளைத் தளபதியாக இருந்த பிள்ளையான் என்கிற சிவனேசதுரை சந்திர காந்தனின் தலைமையிலான படை நிறைவேற்றிமுடித்தது
  ….பல புலமைவாதிகள் நிறைந்திருந்த மண்டபத்தினுள் அவரைகடத்தும் துணிச்சலான உத்தரவைக் கருணா அம்மான் அரச ஆதரவுடன் வழங்கப் பிள்ளையான் அவர்கள் திறமையாகச் செய்து முடித்திருந்தார்.
  …இவரது கொலையையும் இலங்கைப் புலனாய்வுப்பிரிவின் துணையுடன் கருணா தரப்பே மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக இவரது கொலையுடன் இனியபாரதி சம்பந்தப்பட்டிருந்ததாக அப்போது பரவலாகத் தகவல்கள் கசிந்திருந்தன.”

  ஆக இந்தப்புத்தகம் வந்ததும் இன்னும் ஆயிரம் பிரதிகளை வாங்கி முதலையான் குஞ்சுகளுக்கும் கரு நாக்குஞ்சுகளுக்கும் கொடுப்பேன் என உறுதி கூறுகிறேன்…
  இது தவிர புலியும் கரு நாவுமல்லாத,ஒடுக்கப்படுகிற சிறுபான்மையினங்களின் நலன்களுக்காக போராடுகிறவர்களும் மக்களும் தாமாகவே இந்தப்புத்தகத்தை வாங்கிப்படிப்பார்கள் என உறுதிபடக்கூறுகிறேன் எனவே குருபரன் அவர்களே இரண்டாயிரம் பிரதிகள் எனக்கு இப்பவே சொல்லிப்புட்டேன்… பிறகு எல்லாம் விற்றுத்தீர்ந்து விட்டதென்று சொல்லக்கூடாது…

  இப்படிக்கு சொலமன்….
  09-04-2012, 14:11
  – Posted by Anonymous
  குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?

  //“கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது“//

  ரொம்ப மெலினனப்படுத்தப்பட்ட கருத்து.

  குருபரனது மௌனம் கலைகிறது தொடர் இயக்க அராஜகவாதம்-உட்கட்சி ஜனநாயகமின்மைசார்ந்த படுகொலை அழிவு, அரசியலை இவ்வளவு மெலினப்படுத்திப்பார்பது மிகக் குறுகிய பார்வையாகும்.

  உண்மையாக? பரம்பரைக் காரணிகள்,பண்பாட்டுணர்வு,ஐதீகம்தாம் படுகொலை-அராஜகத்தைத்த் தொடர்ந்து தீர்மானிப்பது?

  புத்தர் அனைத்துக்கும் ஆசைதாம் காரணமென்கிறார்.ஆசை,பொருள் சார்ந்த உணர்வாகிறது.புறம் இல்லையெனில் அகவுணர்வு படிமமாக முடியாதென்பதில் புத்தர் பெருமையான சிந்தனையாளர்.ஆகையால் அவர் சொன்னார்“மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்“என.

  சமீபத்து மார்க்ஸ் உரைத்தார்: „வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பது“என.

  „வன்முறையுணர்வின் வேர்களை „எமது „கலாச் சாரத்திலும், ஐதீகங்களிலும்,பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது“ இத்தகைய கருத்தைக்கொண்டிருக்கும் ஒருவர் போராட்ட வரலாறு சொல்லும்அவலம் நமக்கு.“பண்பாடு-கலாச்சாரம்“ இரண்டும் முதலில் வெவ்வேறானதாகப் புரிந்தும் கொள்கிறார்.விளக்கவேண்டும் குருபரன்!

  இதைத் தொடர்ந்து(அவரது கலைந்த மௌனத்தை) வாசித்தபோது, குருபரன் ஒரு பத்திரிகையாளனாகப் பலதரப்பட்ட தளத்தில் அநுபவப்பட்டிருப்பது புரிகிறது.அந்தத் தளம் அனைத்துமே அராஜகத்தால் நிரம்பிய தளங்கள்.இவை, அனைத்துமே பல அந்நியச் சக்திகளது கைகளுக்குக் கட்டுப்பட்ட தளங்களாக இருந்திருக்கிறது.

  சுகமாக அவற்றைக் கேள்விகளோடு விலத்திச் சென்றுவிட்டும் குருபரன் பண்பாட்டிலும்,ஐதீகத்திலும் பழியைப்போட்டு விட்டுக் கலைக்கப்படும் மௌனம் வெறுஞ் செய்திதாம்.

  அஃது, அராஜகத்தின் பக்ககங்களையும்,அதன் நிகழ்வுகளையும் தொகுப்பதுதாம்.ஆனால்,நாம் அனைவருமே அறிந்த இலங்கை அரசியற் போக்குகளில் இந்திய-அமெரிக்க உளவு நிறுவனங்களது கைங்காரியம் எங்ஙனம் ஒரு இனத்தின் தலையை இயக்கங்களால் மொட்டையடித்தனவென்பதை „வரரலாற்றில் தடுக்கிக்கொண்டு“ குருபரன் இங்ஙனம் பண்பாட்டில்-ஐதீகங்களில் பழி போடுதல் இந்தியப் பார்ப்பனியப் புனைவுக்கு ஒப்பானது சார்!

  சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்,அதாவது 1987 ஆம் ஆண்டு ஒரு நாவல் வாசித்தேன். ரா.சு.நல்லபெருமாளது நாவல் அது.

  பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் இந்த ஆசிரியரது „கல்லுக்குள் ஈரம்“ நாவலை வாசித்துப் பெரும் மதிப்பு வைத்திருந்த நாவலாசிரியர் அவர்.அந்த ஆர்வத்தில் அவரது அனைத்து எழுத்துக்களையும் வாசிக்க ஆரம்பித்தபோது அவருக்கு நாவல் எழுதத்தெரியாதென்பதை உணர்ந்துகொள்ளும் நிலைக்குள் நான் வந்தேன்கூடவே,அவர் பெரு நிறுவன பார்ப்பனியத்தின் கோடியில் சாணாக்கியத்தைப் புரட்டும் நாவலாசிரியர் என்பதைப் புரிந்தும் வைத்தேன்.

  ரா.சு.நல்லபெருமாளது கயமைமிகு „உணர்வுகள் உறங்குவதில்லை“ என்னும் நாவலை 1987 ஆம் வருடம் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில்அந்த நாவலூடாக பிரமாணனது நச்சு நாக்கை உணரத்தலைப்பட்டேன்.

  உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சிதைத்து அவர்களது பரம்பரைக்குணமாகக் கொலையையும்-திருட்டையும்,அராஜகத்தையும் கற்பித்த நல்லபெருமாள்,எவ்வளவுதாம் இந்த மக்கள் கல்வி கற்று உயர்ந்தாலும் அவர்களது பரம்பரைக்குணம் அகலாது.அது ஒரு பொழுதில் மேலெழுந்து கொலை-கொள்ளையில் ஈடுபடுமென முத்திராமன்என்ற பார்த்திரத்துக்கூடாக வெளிப்படுத்துவார்.அத்தோடு நிற்காது,உயர்ந்த பிரமணர்களால் போராடிப் பெற்ற சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவானது இழி நிலையடைந்ததற்குக் காரணம் இத்தகைய பரம்பரைக் குணமுடைய-ஜீன்ஸ்சுகள் அரசியலுக்கு வந்ததே காரணமெனவும் கூறுகிறார்.

  அமைப்பைக் காப்பதற்காகச் சில அரசியல் வாதிகள்மீது பழிபோடும் சினிமாக்கள் நமக்குள் அதிகம்.“நல்லவர்கள்-வல்லவர்கள்“ஆட்சிக்கு வந்தால் அகிம்சையும்,அரவணைப்புமே நிலவுமெனவும்,அமைப்பில் குழப்பமில்லையெனவும் வகுப்பெடுக்கும்இந்தியக் கருத்துநிலைகள் உலகு தழுவியதிலிருந்து பின்னப்பட்டதெனினும் பார்ப்பனியத்துக்கான சில சிறப்புக் கூறுகளும் உண்டு.அந்த“நல்லவர்கள்-வல்லவர்கள்“யாரென்று அவர்களே சொல்லும்போது பிரமாணனது பரம குருவான யக்ஞவல்க்கீயனும்-பிரவாஹானும் நம்முன் பிர்மவாதஞ் சொல்வது புரிகிறது.

  குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?கண்டுபிடித்துச் சொல்லுங்கோ!

  குறைந்த பட்சமாவது ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றின் தகவல்களைச் சொல்வதற்கு முன்னாவது சில நூல்களைக் கற்றாய்ந்து பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

  „சத்தியத்தின் உரை கல் முளையல்ல,பொருள்கள்-இயற்கைதாம் அந்த உரைகல்“.

  இனியாவது,இந்த மௌனம் கலைகிற தொடரைத் தொடர்வதுற்குமுன் இராகுல சாங்கிருத்தியானின்“வால்காவிலிருந்து கங்கைவரை“ வரலாற்று நூலை-கதைகளைக் கருத்தூன்றிக் கற்றுத் தொடர்வது செழுமையாக இருக்கும் குருபரன்.சமூகத்தின் இயக்கத்தைப் புரிவதற்கு இந் நூல் பெரிதும் உதவுவது.

  நிலவுகின்ற சமூக வாழ்நிலைதாம் சமுகவுணவைத் தீர்மானிக்கிறது.புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டிவிடுகிறதென்பதெல்லாம் தற்போது நவகால சமூக-பொருளாதரவியல்-அரசியல் உளப்பகுப்பாய்வில் கெட்டிக்காரரானவர்களுக்குப் புரிந்துபோவதில்லைதாம்.எனினும்,நமக்குள் பல ரா.சு.நல்லபெருமாளது சாதியக் கருத்தாளர்கள் நிறையவே உண்டு.

  சமூகத்தை வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கண்ணோடு பார்ப்பது காலவாதியாகிப் போய்விட்டதாகப் புசத்தும் „தும்பி“களது இறைக்கை அடிப்பில்மகிழ்வுற்ற சிறார்கள், அந்தத் தும்பிகளுக்குப் பின்னே அணிவகுத்தோடுகிறார்கள்.

  முத்துராமன் ஒரு நல்ல-தலைசிறந்த புதுக்கவிதை புனைவாளனாகவும், புரட்சிகரமாகக் கருத்தாடுபவனாகவும்,புரட்சிகரவாதியுமாகக் காட்டப்பட்டு இறுதியில், பரம்பரைக்குணத்தால் கொலைக்காரனாகவும், கள்வனாகவும், அராஜகவாதியாகவும் அவன் தொடர்ந்து-தொடர்ந்து இயங்குவது அவனது பரம்பரை இரத்தத்திலுள்ள குணமே-ஜீன்ஸ்சுகளே காரணமென்று பார்ப்பனிய வேதம் உரைத்த இந்திய அரசியலை குருபரனது கருத்தோடு உரைத்துக்கொண்டால் எங்கோவொரு லிங்கு கண்ணுக்குப் புலப்படுகிறது.

  ப.வி.ஸ்ரீரங்கன்
  09.04.2012
  09-04-2012, 15:46
  – Posted by AVATHAANY
  ப.வி.சிறீரங்கன் என்ன சொல்ல வந்திருக்கின்றார் என்பதை அவரே புரிந்து கொள்ளவில்லை போலிருக்கின்றது.புலிகளின் சகோதரப் படுகொலைகளை அரசியல் விவேகமற்ற நடவடிக்கைகளை ச் இவருந்தானே பலமுறை சொல்லியிருக்கின்றார்.இலக்கிச்சந்திப்புக்களில் ஒரு சிலர் இப்படித்தான் தங்களுக்கு மட்டுமே விளங்கத்தக்கதாக அதிமேதாவித்தனத்துடன் பேசுவார்கள்.அதைத்தான் ப.வி.சிறீரங்கன் கருத்துப்பதிவு என்று குழப்போ குழப்பியிருக்கின்றார்.குருபரன் தனது அனுபவத்தை எழுதியிருக்கின்றார்.புலிகளின் தவறுதான் இந்த நிலைக்குக் காரணம் என்பது உண்மைதானே.சிலர் இப்படி நினைக்கிறார்கள்;தாங்கள் மட்டுமே தவறுகளைச் சட்டிக்காட்டும் ஜாம்பாவன்களாக இருக்க வேண்டும் என்று. மற்றவர்களுக்கும் தெரியும் என்பதை ப.வி.சிறீரங்கன் உணர வேண்டும்.குருபரனின் அனுபவக் கட்டுரையை பார்ப்பாணிய தொடர்பாக நிறுவ முயற்சிப்பது இவரின் நீண்டகால சிந்தனையில் முதிர்ச்சியின்மையையே காட்டுகின்றது.
  09-04-2012, 20:30
  – Posted by Anonymous

  “கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது இது தொடர்பாகவும் பின்னர் எழுதுவேன்.”

  இது மலினப்பட்ட கருத்தல்ல . இதனை ஆழமான கருத்தெனவே நினைக்கிறேன். ஆனால் இது தொடர்பான தத்துவார்த்த வியாக்கியானங்களுக்குள் திரு குருபரன் அவர்கள் மேலும் உட்செல்லவில்லை என்றால் உடன்படுவேன்.
  பண்பாடு கலாசாரம் மற்றும் ஐதீகங்களைக் குருபரன் கருத்து முதல் வாதக் கண்ணோட்டத்தில் இருந்து அணுகமுயல்வதாக இந்தத் தொடரை வாசித்த போது எனக்குப்படவில்லை.
  அதுமட்டுமல்ல நச்சுத்தனமாக மரபணுக்கள் அல்லது பரம்பரைஅலகுகள் என்னும் குருபரன் அவர்கள் குறிப்பிடாத ஒரு சொல்லையும் புகுத்தி குருபரனின் கருத்தை கருத்துமுதல்வாதமாக சேறடிக்க முனைவது அறிவற்ற மேதாவித்தனம்.
  மனிதர்களின் பண்பாடு கலாசாரம் மற்றும் ஐதீகங்களைக் கட்டமைப்பதும் பொருளாயதச் செயற்பாடுகளே என்பதை மார்க்ஸ் உங்களுக்குச் சொல்லவில்லையா?
  மானிடமரபணுக்களில் சேமிக்கப்பட்டுள்ளவையும் கூட மானுட வரலாற்றில் நிகழ்ந்த பொருளாயதச்செயல்களின் விளைவே.
  இவற்றையெல்லாம் குருபரனின் தொடர் மறுப்பதாகத்தெரியவில்லை.
  ஆனால் குருபரன் தீவிரமான தத்துவார்த்தமொழியைப் பயன்படுத்தவில்லை எனமட்டும் இங்கே சொல்லலாம். (சிலவேளை அவர் தனது தொடர் மேதாவிகளுக்கல்ல என யோசித்தாரோ என்னவோ)
  ஒருவன் தனக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது சமூக நலன் கருதி தனது அனுபவங்களைப்பகிரும் போது அதனைச் செழுமைப்படுத்தும் நல்லநோக்கமின்றிப் பிராமணியத்துடன் லிங் பண்ண விரும்புவதை மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதெனலாம். அல்லது கடுப்பு எனலாம்.
  முட்டையில மயிர் பிடுங்கிறதுக்கெல்லாம் மார்க்ஸ்சியத்தைப்பயன்படுத்த வெளிக்கிட்டு மார்க்ஸ்சியத்தைக் கொச்சைப்படுத்தவேண்டாம்.

  மேலும் அன்னியச்சக்திகளின் சதிகளுக்குள் போய்ச் சிக்கிக்கொண்ட பலவீனத்தையும் நாங்கள் எங்களுக்குள்ளேயேதானே தேட வேண்டும்.

  குருபரன் தனது தொடர்களில் சாதீயம் தொடக்கம் பல்வேறுவிதமானா பிற்போக்குத்தனங்களை களைவது பற்றிச் சொல்லியே வருகிறார். அதனைச் செழுமைப்படுத்துவோம்.

  திரு குருபரன் அவர்கள் ஒரு இனத்தின் வரலாற்றைச் சொல்ல முயல்வதாகத் தெரியவில்லை. தான் பட்ட அனுபவங்களைத்தான் இதய சுத்தியுடன் சொல்லவருகிறார். அதனைச் சொல்வதற்கு அந்த வரலாற்றோடு கடைசிவரையும் இணைந்திருந்த தகுதியே போதுமானது.
  உங்களுக்குத் தினவிருந்தால் உங்களுடைய போராட்ட அனுபவங்களையும் இதயசுத்தியுடன் பகிருங்கள்… பொருள்முதல் வாதத்துடன் பொருந்துகிறதா அல்லது பிராமணியத்துடன் பொருந்துகிறதா என வாசகர்களாகிய நாங்கள் தீர்மானிக்கிறோம்.
  ராகுல சாங்கிருத்தியானையும் வால்காவில் இருந்து கங்கை வரையையும் சொல்லி நல்ல ஊடகவியலாளனின் தலையில் அடிக்க வெளிக்கிடுகிற அராஜகத்திற்கும் புலிகளிடமிருந்த அராஜகத்திற்கும் வேறுபாடில்லை. இந்தக்குணத்தை பரம்பரை அலகுகளில் தான் தேடவேண்டும் (பொருள் முதல் வாத அணுகுமுறையுடன்)
  திரு குருபரன் அவர்களே மனம் தளரவேண்டாம்…
  இலங்கை அரசாங்கத்துக்கு எவ்வாறு புலிகளை விட்டால் பிழைப்பு இல்லையோ அவ்வாறே எங்களிற் சிலருக்கு சாதியமும் பிராமணியமும் ஒழிந்து போய்விடால் பிழைப்பு இல்லாமல் போய்விடுமென்ற பயம் இருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் அதனுடன் ”லிங்” பண்ணிச் சேறடிக்க விரும்புகிறார்கள்.
  நண்பர்களே இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் ப.வி.ஸ்ரீரங்கன் அவர்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று தெரியுமா?
  ரா.சு நல்ல பெருமாளுக்கு குறைந்த பட்சம் தான் சொல்வதைத் தெளிவாகச் சொல்லத்தெரிந்திருக்கிறது…
  கெடுகுடி
  09-04-2012

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: