ஒன்றுபடும் இந்திய நலன்சார் அரசியல் தரகர்கள்:

இந்த நூற்றாண்டானது தமிழ்பேசும் மக்களது உரிமைகளைப் பகிரங்கமாகவே காட்டிக்கொடுக்கும் நூற்றாண்டாகும்.இதுவரை ஆயுதப் போராட்டத்தின்வழி தமிழ்பேசும் மக்களை மொட்டையடித்த இந்தியா,இப்போது நேரடியாகவே தனது அநுதாபிகளைக் களத்தில் இறக்கி இந்திய அரசியல் நலன்களைத் தமிழ்பேசுபவர்களது நலனாகக் காட்டுகிறது.

புலிகளுக்குள் இருந்த இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும்,முகவர்களும் பகிரங்கமாகவே இந்தியப் பிராந்திய வியூகத்தின் நிகழ்ச்சி நிரலைப் பேசுகிறார்கள்.அவர்களில் கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு போன்றோர் மிக ஆபத்தாகவே தமிழ்பேசும் மக்களது நலனைப் பற்றிய உரையாடல்வழி இந்திய அரசியலை தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கின்றனர்.

இவர்களும்,இந்தியக் கைபாவைகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்.வரதராஜப் பெருமாள்,புஷ்பராஜா குடும்பத்தவரோடு கை கோர்ப்பதில் புதிய வகை மாதிரியான அரசியலைப் பேசுகிறார்கள்.

கடந்த காலத்தில் எதிரும் புதிருமாகக் காட்டிக்கொண்டவர்கள் இவர்கள்.ஆனால்,இந்திய சாணாக்கியமானதுகடந்தகாலத்துள் தனது முகவர்களை எங்ஙனம் அனைத்து அமைப்புக்குள்ளும் பிரித்துப் பிரித்து உள் தள்ளியிருப்பதென்பதற்கு இவர்களே சாட்சி.

இவர்கள், அனைவருமே இந்திய முகவர்களாக இருந்துகொண்டு மக்களைப் பல தளங்களில் மொட்டையடித்திருக்கின்றனர்.

புஷ்பாராணியின் போராட்ட அநுபவ நூல் வெளிவருகிதாம்(„ஈழப் போராட்டம்,தமிழர் உரிமைப் போராட்டமெல்லாம் இவர்களது குத்தகையென்பதையும் புலிகள் ஏற்றிருப்பது வரவேற்கத் தக்கதே.இதற்குப் புலிவால்களது கள்ள மௌனமே சாட்சி இந்தப் புலம்பெயர் தளத்தில்!).

அதற்குப் புலிப் பிரமுகக் கவிஞர் கருணாகரன் நீண்ட முன்னுரை வழங்கியுள்ளார்.திடீரென இந்த எதிரும்-புதிரும் சந்தித்துக் கொள்ளவில்லை.அல்லது, இது தற்செயல் நிகழ்வுமில்லை.

இவர்கள் அனைவரும் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட தமிழ்அரசியல் முகவர்கள்.இவர்களே நமது மக்களை இன்றுவரை ஏமாற்றித் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்குத் தடையாக இருக்கிறார்கள்.

எங்கு பார்த்தாலும் இந்திய முகவர்களது அரசியல் நாடகமே இப்போது „விடுதலை,சுதந்திரம்,தமிழீழம்,புரட்சி“ என்று பேசிக்கொள்கிறது.

இவர்களைக் குறித்து மௌனித்திருப்பதென்பது சமீபகாலமாகப் புலிக்குமுன் மண்டியிட்டதற்கு ஒப்பானது.அப்பாவி மக்களது இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடிய இந்தக் கேடுகெட்ட அரசியல் இப்போது“இலக்கியம்-போராட்ட வரலாறு“என்று தொகுப்புகளிட்டுத் தமது விசுவாச அரசியலில் தமக்குள் ஒன்றிணைகிறது.புஷபராஜாவின் விருப்பு மெல்ல நிறைவேறி வருவதால் அவரது ஆத்மா இப்போது சாந்தியடைந்திருக்கும்.

 „ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தைத் துவங்கிவைத்தவர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இன்றைக்குப் புலிகள் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக இருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் ஈழச் சமூகத்தின் மீதான பெரும் பொறுப்பு புலிகளின் மீது சுமத்தப்பட்டு இருக்கிறது. ஒற்றை அமைப்பாக ஈழ விடுதலையைச் சுமக்கும் புலிகள்தான் எதிர்காலத்தில் ஈழத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் கொண்டுவர வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் லிருந்து புலிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஈழத்தின் அருகில் இருந்து இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டிய இந்தியா, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, ஆக்ரமிக்க முயலும். எப்போதும் அந்நிய சக்திகளைவிட, ஈழப் பிரச்னையில் இந்தியா நேர்மையுடனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தலையிடுவதைத்தான் போராளிகள் விரும்புவார்கள். என் விருப்பமும் அதுதான்!’’ – புஷ்பராஜா.

ப.வி.ஸ்ரீரங்கன்.
06.05.2012

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: