படிப்பகம் தாண்டிக் கலையரசன் கண்கொள்ளும் உரிமைகள்…

தமிழீழஞ் சொல்லிப் புலிகள் இலட்சக்கணக்கான மக்களை வேட்டையாடியபோதும்,இலங்கை அரசோ பயங்கரவாதமெனத் தமிழ் மக்களைக் குண்டுகள்போட்டுக் கொன்று குவித்தபோதோ வாயே திறக்காத கலையரசன்,அத்தகைய நடாத்தைகளைத் தொடர்ந்து 2009 வரை மௌனமாகவிருந்து அநுமதித்தபடி „உலக அரசியல்-சர்வதேச வரலாறுகள்“ எழுதிக்கொண்டிருந்தார்.புலிப் பாசிசம் மக்களைத் தொடர்ந்து காயடித்தபோதோ அல்லது அவர்களது குழந்தைகளைக் கட்டாயப்படுத்திக் களத்துக்கனுப்பிக் கொன்று குவித்தபோதோ வாயே திறக்காதவர் கலையரசன்!

அக்குழந்தைகளது இருத்தலுக்குரிய  உரிமை குறித்தே பேசாத கலையரசனுக்குப் படிப்பகத்தில் மின்னூலாகப் பதிவேற்றப்பட்ட நூலுரிமை பற்றிப் பேசுவதற்கென்றொரு அரசியல் இருக்கிறது!மக்கள்-வாழ்க்கை,வாழும் உரிமை குறித்தெல்லாம் இரண்டாம் வகை?

உரிமம்,வர்த்தக வடிவம் இவைதாம் உலகம்!

இந்தத் கடைந்தெடுத்த அரசியல் பிழைப்புவாதியை, மார்க்சியத்தின் பேராBildல் மார்க்சியராகக் „கலையரசனை“ எவர் குறிக்கின்றாரோ அவர் மார்க்சியத்துக்குக் கரி பூசுபவராக இருக்கவேண்டும்!

தமிழர்களுக்கு, மனிதவாழ்வை-உயிர்த்திருப்பதற்கான ஒவ்வொருவரதும்-ஒவ்வொன்றினதையும்விட“வர்த்தகக் காப்புரிமை“ பெரிதாகவே இருக்கிறது.ஏனெனில், தமிழர்களில் அதிகமானோர் வியாபாரிகளாகவே இருக்கிறார்கள்.அவர்கள் தமிழீழஞ் சொல்லிச் செய்த வர்த்தகத்தில் பெற்ற பல இலட்சம் கோடி டொலர்களது வருவாயில் கொல்லப்பட்ட மக்களது தொகை இனம்,மொழி,மதம் கடந்து மூன்று இலட்சம் என்பது ஒரு கணிப்பு!

கலையரசனுக்கு வர்த்தகவுரிமையும்,“நூலாசிரியர்“வாழ்வும் முக்கியமாவதொன்றும் எமக்குப் பெரிய அதிசயமா?,அதிசயமானது இந்த மனிதரெப்படிப் பாசிசத்தின்முன் மௌனித்துவிட்டுப் „புரட்சி“பேசுகிறாரென்பதே!

படிப்பகமானது மனிதவாழ்வுக்கு அவசியமெனக் கருதும் எவற்றையும்“வர்த்தவுரிமை“என்ற மட்டப்படுத்தலுக்குமுன்உட்படாத அனைத்தையும் பதிவேற்றிக்கொள்வது நியாயமானது.மக்களது அழிவைக் கோரும் „வர்த்தகவுரிமை“ போர் செய்து மக்களைக்கொல்வதற்கு எவர்கொடுத்தார் உரிமை?மக்களையே பலியெடுக்கும் வியாபாரிக்களுக்காகக் குரல் கொடுக்கும் கலையரசனுக்கு மக்கள்போராட்டம் குறித்து ஒரு மண்ணும் புரியவில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.06.12

Werbeanzeigen
%d Bloggern gefällt das: