இடதுசாரிய வேடம் போடும் ஆளும் வர்க்க அடிமைகள்

பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, „தமிழீழ“ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,போராட்ட வரலாறு-அநுபவங்கள் தொகுப்பது,இலக்கியம் படைப்பது;அதனதன்வழியாக தாம்சார் அரசுகளுக்கு ஆலவட்டம் பிடிப்பதுவரை மக்களது அழிவுக்குக் காரணமான „ஈழப்போராட்டம்“ ஒவ்வொரு நபருக்கும் தனது அடையாளத்தைச் சொல்லும் அநுபவமாக-அரசியலாக இருக்கிறது.

இப்படித்  தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாகவிது விரிகிறது.இன்று, பாசிசப்  புலிப் பிரமுகர்கள் தம்மைத் தொழிலாள வர்க்கத்தினது தோழர்களாகக் காட்டவும் முனைகின்றனர்.

இந்தப் பட்டியலில் ஏலவே வந்துவிட்ட புலிக் கருணாகரன்,இப்போது வரத் துடிக்கும் புலம்பெயர் புலிப் பிரமுகரும் புலியினது பரப்புரை-மற்றும் நிறுவனங்களது பொறுப்பாளருமான சிவா சின்னப்பொடி(திவாகரன்), இன்னும் எத்தனைப் புலிப் பாசிஸ்டுக்கள் இந்த இடதுசாரிய முகமூடி தாங்கி நம் மக்களை ஏமாற்றுவார்களோ அத்தனை பேரையும் „தோழர்களெனவும்“உறவு கொண்டாடி அழைக்கும் இந்தப் பார்வையிருக்கே,இதுதாம் புலிப் பாசிஸ்டுக்களையும்,புலியினது அடிமட்டப் போராளிகளையும் அடிப்படையில் வேறுபடுத்திப் புரியாது, புலிப்பாசிஸ்டுக்களையும் அடிமட்டப் போராளிகளோடிணைத்து“போராளிகள்“என்று உறவாடியபோது பாசிசமானது தமிழ்ச் சமூகமெங்கும் வேர் பரப்பித் தாண்டவமாடக்கூடிய வாய்ப்பும்-வளமும் கிடைத்தது.

Bild
இது, புலிப்பாசிசத்தின் உச்சத்தையடைந்தபோது இறுதிக் கட்ட யுத்தத்தைத் திணித்து அப்பாவி மக்களையும்,அவர்களது குழந்தைகளையுஞ் சேர்த்து மட்டுமல்ல தமக்குள்ளிருந்த அடிமட்டப் போராளிகளையும் அழித்துச் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் சரணடைந்தது.

அந்தச்  சரணடைந்த புலிப் பாசிஸ்டுகளது முகவர்களேதாம் இத்தகைய சிவா சின்னப்பொடி,கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு,என்று ஒரு பெரும் பட்டியலே விரிகிறது!

உதாரணமாக : புலிகளால் இதுவரை நடாத்தப்பட்ட இந்தப் போராட்டம்,அதாவது, ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.

இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள், புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம் காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ,அண்ணளவான ஜனநாயகத்தைப் பேணும் அரச நிறுவனத்தோடு சரணடைந்த புலிப் பாசிஸ்டுக்கள் தமக்குள் அரசிலைச் செய்துகொள்ள மக்களை அண்மிக்கும்போது- இடதுசாரிய முகாமுக்குள் தம்மை இணைக்கும்போது  மட்டுமேதாம் –  அவர்களுக்கு வாழ்வுண்டு.

ஏனெனில் ,இடதுசாரிகள் மட்டுமேதாம் பாசிச-இலங்கை-புலி ஆதிக்கத்துக்கெதிராக மக்களைச் சார்ந்தியவர்கள்.அந்த முகாமுக்குள் இணைவதால் மட்டுமேதாம் இத்தகைய கயவர்கள்“பாவ மன்னிப்புக்குள்“வந்து மீளச் சதி அரசியலை ஆளும் வர்க்கத்துக்கான தெரிவில் நகர்த்த முடியும்.

இது மிக ஆபத்தானது.

எவரை எங்கே வைப்பதென்று எவருக்கும் புரியவில்லையென்பதில்லை இது.

இஃது,வர்க்கத்தோடு வர்க்கம் இணைவது.

இடதுசாரிய வேடம் போடும் ஆளும் வர்க்க அடிமைகள் ,மக்களது நலன்களது கோரிக்கையின்வழி தமது நாடகத்தைத் தொடர்கின்றனர்.இதில் கைவந்தவர்கள் புலிப் பினாமிகள்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.09.2012

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: