புலிப் பினாமிகளும்,இளையராசாவும் இசை வியாபாரமா?

புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.அதை மேலும் நிலைப்படுத்தும் அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,“மாவீரர்“தினமெனவும்,தமிழர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதி இளையராசா இசை நிகழ்ச்சி வர்த்தகத்தில் தமது இலாபங்களை நோக்கிக் கேள்விகளையும்-காய் நகர்த்தலையுஞ் செய்கிறார்கள்!

சுத்த மானங்கெட்ட வியாபாரிகள்!இலட்சம் மக்களை அழித்துச் செல்வஞ் சேர்த்த புலிப் பினாமிகளுக்கு இப்போது நிதியீடு தேவையாகவிருக்கிறது.இதற்காகச் சகல வடிவிலும் முனைகிறார்கள்.மானங்கெட்ட தமிழ்ச் சினிமாக் குத்தாட்ட நிகழ்ச்சிகூட இந்த மானங்கெட்ட புலிகளுக்கு விதிவிலக்கல்ல! இவர்கள்தாம்“ஈழத்தில் சினிமாப் பாட்டுக்குத் தடை விதித்தவர்கள்!இப்போது பிழைப்புக்கு ஒரு இளையராச!தூ…

இத்தகைய புலிப் பினாமிகளது பிளவுபட்ட புலி இயக்கவாதக் குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது புலிப் பினாமிக் கூட்டம்!

தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் „வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட“ அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.

புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது!

இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடியபோது, வெளிநாடுகளில் அலையும்பினாமிப் புலிகள் தம்மிடம் சேர்ந்துள்ள மக்கள் பணத்தைக் காப்பதற்காகவும்-பெருக்கவும்“மாவீரர்“பயனையோடு அனைத்து விரோத நிகழ்வுகளையும்  செய்து மீளவும் தொடர்ந்து மக்களைக் காயடிக்கிறார்கள்!

இவர்களது ஒரு தரப்பு, முழு வர்த்தகத்தில் மக்களைக் கொள்ளையடித்த  பணத்தோடு  இயங்குவது சகலரும் அறிந்தது.

ஐங்கரன் நிறுவனத்தின் முழுச் சொத்தும் புலப் புலிப்  பினாமிகளது சொத்தாகவும்,அந்தப் புலிப் பினாமிகள் „தமிழீழஞ்“சொல்லி மக்களைப் பலோத்தகாரப்படுத்திப் பறித்த சொத்தோடு தம்மைப் பெரும் வர்த்தகர்களாக்கியுள்ளனர்.

அனைத்துச் செல்வமும் புலிகளுடையது கிடையாது-அவை மக்களுடையது.

இவற்றைச் சேர்ப்பதற்கு எத்தனை ஆயிரம் இளைஞர்களது உயிரைப் பறித்திருப்பார்கள் இந்தப் பாசிசவ் புலிகள்!

இவர்கள் நேர்மையானவர்கள்?

இவர்கள், சீமானைக் கேள்வி கேட்கும் தகமையுடையவர்கள்?

கேடுகெட்ட தெரு பொறுக்கிக் கூட்டமான பாசிசப் புலிப் பினாமிகள் இன்று ஜனநாயக வேடமிட்டுச் சீமானைக் கேள்வி கேட்கின்றனர்!

நமது மக்களது அழிவில் செல்வஞ் சேர்த்த புலிப் பொறுக்கிகள், தமிழ்நாட்டு அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சீமானைச் சிறையிட வைப்பதில் எவரது நலனைப் பேணுகிறார்கள்?

அத்தோடு இந்தப் புலிப்பினாமி வர்த்தக மாபியாக்கள் தமது நிறுவனப்பட்ட அராஜகத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் நிலைப்படுத்தி, மக்களை உளவியல் ரீதியாகவும் அச்சத்துக்குள்ளாக் கின்றனர். இப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து, அச்சமூட்டபட்டும், அராஜகத்தின் மூலமும் தமிழ் விதேசிய வாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்படுகிறது.இது பாசிசமின்றி வேறென்ன?

குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று இதுவரை பலியாக்கியது தியாகமாக இருக்க முடியுமா? எவருக்கான-எதுக்கான“மாவீரர்“தினம்?வர்த்தகஞ் செய்வதற்காகவா?இதுள் முரண்பட்ட இருவேறு புலிப் பினாமிகள் சகல வடிவிலும் மக்களை வேட்டையாட முனையும் வினையுள் இளைஞராசா நிகழ்சியும் ஒன்று!

புலிப் பணப் பினாமிகள் குறித்து நாம் மனசாட்சியோடு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

ஏனெனில் இலட்சம் உயிர்களோடு விளையாடியவர்கள்இந்தப் பொறுக்கிகள்.

தமிழ்ச் சிறார்களது அளப்பரிய வாழும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள் இந்தக் கேடுகெட்ட புலிப் பாசிஸ்டுக்கள்!இவர்களுக்கெதற்கிந்தச் சினிமாத் தனப் பிழைப்பு?

இவர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காகப் பொறுப்புணர்வோடு செற்பட்டார்களா?அல்லது, மக்களது அழிவுக்குத் தார்மீகப் பொறுப்பெடுத்து மன்னிப்புக் கோரினார்களா?இவையெல்லாவற்றையும் தள்ளிவிட்டுத் தமது வர்த்தகத்துக்காகத் „தமிழ் மக்கள்“ நலன்-சீமான் எதிர்ப்பென வகுப்பெடுக்கும் இந்தத் தெரு நாய்களை ஒட்டு வெருட்டியாகவேண்டும்!

இவர்களும்,அழிந்து சாம்பாலய்ப்போன இவர்களது பொம்மைப் புலித் தலைமையும் சமூகக் குற்றவாளிகள்.

அத்தகையப் புலிப் பணப் பினாமிகள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானவர்கள்.

புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள்.இவர்களுக்கு, இளையராசவின் இசையில் இப்போது செல்வஞ் சேர்க்கும் அவா!பிழைப்புவாத நாய்கள்!தூ…

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

20.10.2012

Advertisements

புரட்சிப்பரப்புரையும்"பொழுதில்"பந்திகொள்ளும்!

புலிகளைத் தூக்கி நிறுத்தப் புரட்சிப்பரப்புரையும்“பொழுதில்“பந்திகொள்ளும்!

தீபந் தொலைக்காட்சியில் சேனன்,நாவலன் கூடுகிறார்கள்-அனஸ் கேள்விகள் தொடுக்கிறார்.சுற்றிச் சுற்றிப் புலிகளது“தேசிய“-விடுதலைப் போராட்டங் குறித்துச் சின்னப் பயல் சேனன் தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்குமே வகுப்பெடுக்கிறான்.பொழுதுக்கு „இரண்டு“ வார்த்தையில் நாவலன் புலிகளையும்சாடிப் புலிவழியிலானவொரு தெருவில் தனியாக நடந்து போய்க்கொண்டிருக்கப் பல புலி விசுவாசிகள்-கரச் சேவகர்களான முருகாநந்தன்-முருகதாசு-பக்த கோடி-கேடிகள் உட்பட அதே புலிப் புராணம்.இதுவொரு வகையிலான புலம்பெயர் அரசியல் நகர்வாச்சு!இதை மீறியவொரு நடப்பு-நியாயம் பேசுதல் இல்லாதத் தமிழ் மனவெளியில் „மக்கள்-மக்கள்“என்ற ஒரு மந்திரவுச்சரிப்பும்,“மகிந்தா-மகிந்தா“வென்ற பேய் ஓட்டும் வேப்பிலையடியுந்தாம் „தேசியவிடுதலைப் போராட்டம்“தோல்வியடைந்த சூழலுள் புலிவழிப் போராட்டம் பற்றிய புரிதல்!இன்று,நாவலன்கூடப் பிரபாகரனது அழிவில் மௌனித்திருக்கும் புலிப்பினாமிகளது பணமூட்டைப் பாதுகாப்புக் கவசந்தரித்த „தேசித்தலைவர் சாகவில்லை-ஒருநாள் தமிழ் மக்கள் முன் தோன்றுவார்“ எனுந்தந்திரோபாயத்துள்கவனங் குவித்திருக்கும்போது,இதையே முள்ளி வாய்க்காலுக்குப் பின் கேள்வியாக்கித் தொண்டைத் தண்ணீர் வற்றியவர்கள் பெருவாரியாக இருகக் காண்கிறோம்.எது“அரசியல்-சாணாக்கியம்“எனப் புரிந்து போகதளவுக்குப் புலியினது உயில்,உரிமைக்காக எங்கெங்கோ,எப்படியெப்படியோவெல்லாம் வியூகம் வகுக்கிறது காலம்!

எனவே,புலிகளது பாத்திரம் என்னவென்பதைத் தொடர்ந்து கால் நூற்றாண்டாகக் கண்டுபிடிக்காதவொரு சேனனுக்கு எரிக் சொல்கைம் குறிப்புணர்த்தும்போது சேனனுக்குச் சொறியுது.அந்தச் சொறிவில் குத்துகிறார்.குடைகிறார்.போதாதற்குச் சண்முகதாசனைக்கொணர்ந்து புலியைக் காத்துக் கக்கத்தில் வைக்கிறார் சேனன்.அவரைத் தூக்கிப் பையில் போடும் புலிப்பணப் பினாமிகளுக்கும் „சேனன்“ என்பது தெருச் சில்லறையென்பதைவிட நாவலன் தாராளமான தேசியப் பேச்சாளரென்பதும் நிலைமைக்கொப்ப புரியவேண்டியதுதானே நாவலன்?கடந்த காலத்தைக் குறித்து ரொம்பவும் கவனமாகக் கையாளும் பல பத்துப் பேருள் நான் எப்போதும் „அங்கேயும் இல்லை-இங்கேயும் இல்லை!“

புலிவழித் „தேசியவிடுதலை“ப் போராட்டத்துக்குக் காரணமான தமிழ்த் (வி)தேசிய அரசியலுள்“தமிழீழம்“ என்பது அழிவு அரசியலின் விபரீத விளையாட்டாகும்.அது,புலிவழி முள்ளிவாய்க்கால்வரைத் தேசியவிடுதலைப் போராட்டமென்றும்,தடுப்பு யுத்தமென்றும் பற்பல மொழிகளுடாகப் பரப்புரைக்குள்ளாகியது.எனினும்,இவ் யுத்தம் மொத்தத்தில் சமூகவிரோதமானதென்று வரலாறு இன்றுரைக்கும்போது,சேனன்-நாவலன் வட்டமேசைத் தீபந் தொலைக்காட்சியுரையாடல்அதற்குத் தார்மீக நியாயங் கற்பிக்கின்றது?

சீச்சீ… நாவலன் கடந்த காலத் தவறுகள் குறித்து நியாயமான-உண்மைகளை விஞ்ஞான பூர்வமாக வெளிக்கொணரவேண்டியதற்காகக் குரல் கொடுக்கும்போது“நியாயங் கற்பித்தல்“என்பது மெல்ல உலக அரசியல் நிலவரத்துள் புலிகளது அரசிலாகவேதாம் தமிழ் மக்களது தலைவிதி அமையும் என்று சேனன் மந்திரித்துச் சொல்லியாடும் கலையில் கலைந்தது நமது புரட்சிப் பிணைவு!இதுதாம் „தேசியவிடுதலைப் போராட்டம்-2“.

எனினும்,உலகு தழுவிய புரட்சிபேசும் தோழரிடம் இப்படியான“புலிமனது“ எங்ஙனம் தோன்றுகிறது.இங்கேயும்,அங்கேயும்“உலகு தழுவிய“ஓரங்கமான புரட்சிக்குரிய காகத்தின் வர்க்கக் கூட்டிலென்னவோ குயில் முட்டையிட்டுக் கொண்டு  தமது தரப்பு நியாயத்தைப் புலிகளது அழிவு யுத்த்தினூடாக வரையறுப்பதுதாம் கொடுமை? சீச்சீ-கடுமை!

புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது! „இல்லை மடையா-இல்லை!புலிகள் செய்தது,சிங்களப் பேரினவாத அரசினது-ஆளும் வர்க்கத்தினது தமிழினவொடுக்குமுறைக்கெதிரான“தடுப்பு யுத்தம்“.சாரம்சத்தில் அதுவேதாம் உலக நடப்பிலுங்கூடத் தேசியவிடுதலைப் போர்!“-ஓங்கிக் கத்துகிறான் சேனன். கடுமையாகக் குலப்பன் அடிக்குது!கசாயம் காச்ச நொச்சியிலையும்,தூதுவளையும் இல்லை நம்மிடம்!

இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடும்போது, புலிகள் தமது தலைமையைக்காப்பதற்காக அப்பாவி மக்களது குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று முள்ளிவாய்க்கால்வரை பலியாக்கியதென்பதை எரிக் சொல்கைம் சொன்னாற்றாமென்ன-இல்லை அவருக்கு முன் உலகமே சொன்னாற்றமென்ன-நாம் அதை எப்போதாவது செவிசாய்ப்பதற்குத் தயாராகவிருந்தோம்?இப்போதும், அஃதுதானே தொடர்கதை-விக்கிரமாதித்தன் தொடர்ந்தும் தோளில் தொங்கப்போட்ட வேதாளத்துடன் முருக்க மரம் ஏறி…

இதை மறக்காது-எந்த வகைத் தத்துவங்களுக்குள்ளும் திணித்துப் புரட்டாது,நியாயமாக நெஞ்சைத்தொட்டுப் பதிலளிக்க வேண்டும்.இப்பதில் புலிகளைத் தியாகிகளாவும் மாற்றுக் குழுக்களைத் துரோகிகளாக்கவும் எமக்குச் சேனன்அவசியமே இல்லை!-அல்லது,சண்முகதாசனும் அவரது புலிகளை ஆதரித்த“அந்தக் காலமும்“அவசியமேயில்லை!!இப்போது சீனத்து வெடியில் „தைப்பொங்கல்-தீபாவழி“ கொண்டாட முழுவிலங்கை மக்களும் பழக்கப்பட்டுவிட்டார்கள்!அவர்களது எதிர்பார்ப்பெல்லாம் அளக்கின்ற அரிசியைச் சிங்களவன் அளந்தாலென்னத் தமிழன் அளந்தாலென்னக் கல்லற்ற, புழுத்தலற்ற அரிசியாய் உலை வெந்தாற் சரி!தமிழரது அரசியலுக்குச் சரியாக“அரிசி“தாம் பதிலைத் தந்துவிடும்!அந்த அரிசியில் தீர்வைக் கண்ட சீனனுக்குச் செருப்படியைப் புலம்பெயர் புலிகள் தினமும் வழங்க நிலத்துத் தமிழனது உலையில் தமிழீழமானது அரிசியாக வெந்துவரும் காலமிது-இங்கே,எந்தத் தாயும் தனது பிள்ளையைத் தட்டிப்பறித்துப் போருக்கு அனுப்பும் புலிச் சர்வதிகாரத்தைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை!அவளது பிள்ளைகள் அடுப்படியில் சோறு வேகும்வரை அணிவகுத்துக் காத்திருக்கின்றனர் வட்டிலுடன்!

எரிக் சொல்கைம் சொல்வதுபோல்- புலித் தலைமை சமூகக் குற்றவாளிகள்?

அவர்கள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானவர்கள்-சமூகவிரோதிகள் மட்டுமல்ல உலக மனித விழுமியங்கள் அனைத்துக்குமே விரோதிகள்!

„மக்கள் விடுதலையை-புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள் புலிகள்“ என்பது, இன்று முள்ளி வாய்க்காலில் கிடைக்கப்பெற்ற அறிவுரை.

புலிகள், முள்ளிவாய்க்கால்வரை எமது மக்களின் பாலகர்களை போலிக் கோசத்தின் வாயிலாகக் காயடித்தும், கடத்தியும் அழிவு யுத்தத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தவர்கள்.இவர்களது இறுதிவரையான இந்த அழிவுப் போராட்டம் தியாகமெனும் போர்வையில் துரோகத்தை மறைக்கும் அழிவு அரசியல்.இது,கைக்கூலி அரசியல்-காட்டிக்கொடுக்கும் அரசியல்.கயவர்களின் கூட்டோடு நடாத்தப்பட்ட துரோக யுத்தம்.இது,சொந்த இனத்தையே கருவறுத்த அந்நியச் சகத்திகளுக்கு உடைந்தையான தமிழின விரோதிகளது அழிவு அரசியலின் விளைவுதாம் எரிக் சொல்கைமின் கூற்றும்-நடாத்தையும்!

புலத்துப் பணப்புலிகள் தமது தவறான வரலாற்றுப்பாத்திரத்துக்கு இப்போது தியாகங் கற்பிக்கத் „தோழர்களை“ பலவூடகங்களுடாகப் பயன்படுத்துகிறார்களாவென நம்மை  ஐயுற வைக்கும் தீபந்தொலைக்கட்சிச் „சேனன்-நாவலன்“உரையாடலானது மிகுந்த உச்சம்பெற்ற பொய்யுரையைக் கொண்டியக்குகிறது!

„புரட்சிகர“ ச் சக(க்)திகள் நமக்குள் வரலாற்று மோசடிகளைச் செய்வது இன்னும் நம்பகத் தன்மையைக் கடாசி, அந்நியச் சக்திகளின் நோக்குக்குச் சார்பாகவே இருக்கிறது.இந்தச் சேனன் என்பது வெறுங் குறியீடுதாம்.

நிலத்து மக்கள் பாவப்பட்ட மக்கட்டொகுதியாகுமா?

அவர்கள், தமது கரங்களை நம்பிக்கொள்ள முடியாதளவுக்கு அதிகாரத்தின் தொங்குசதைகள் மக்களை இன்னும் மொட்டையடிக்கும் பாத்திரத்தை எடுக்கின்றார்கள். இஃது,ஏனிங்ஙனம் நடந்தேறுகிறது?-புலத்தில்நேரத்துக்கு நேரம் சூழ்நிலைகளுக்கமைய மாற்றுமுற்றுக் கட்டங்கட்டமான கூட்டுக்கள் தொடர்வதும்,திசைமாறுவதுமாக இருக்கும் இந்தத் தருணத்துள் அரசியல் அறம் என்பது என்ன?

„தமிழீழம்“எனும் பொய்க்கோசத்தை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகத் திணித்தும்,அவ் மக்களது சமூகவுளவியலாக்கி அதையே அரசியல் முன்னெடுப்பாகச் செய்த  புலிகள், முள்ளிவாய்க்கால்வரை இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்துள்ளார்கள்.பல இலட்சம் கோடிச் சொத்துக்களையும்,பாரம்பரியமாக வாழ்ந்த பூமியையும்விட்டுத் தமிழ்பேசும் மக்கள் நாடோடிகளாகியிருப்பதற்கும் இவ்வீழப்போராட்டமே காரணமானது.ஈழமென்பது சாத்தியமற்றதென்று தெரிந்தும் அதைத் தமது இருப்புக்காக உசுப்பேத்தி இதுவரை ஏழைமக்களின் குழந்தைகளைப் பலியாக்கிய புலிகள் துரோகிகளா இல்லைத் தியாகிகளா?இனிமேலும் புலிவழியான போராட்டக் கோசமும்,பொய்த்“தமிழீழ விடுதலை“எனும் சுத்துமாத்து விபரீத அரசியலும் யாருக்கானது?மேற்குலகுக்குச் சேவகஞ் செய்யும் ஒவ்வொரு தருணமும் இந்த விபரீதமான கோசம் அரசியற் பரப்புள் கோலாச்சுகிறது.அந்த விபரீதமான அரசியலது கடந்த காலத்துள் பல இலட்சம் மக்கள் தமது உயிரைப் பறிகொடுத்துச் சிதைந்து சாம்பலானதைக் குறித்து நம்மிடம் சரியான மதிப்பீடுகளுண்டா?-பதிவுகள்,வரலாற்றாய்வுகள் உண்டா?பேருக்குப் பின்னால் பட்டங்கள் போட மட்டுமா இலங்கையில் பல்கலைக்கழகங்கள் உண்டு?இதச் சோம்பேறித்தனத்தின் உச்சத்தில் கோலாச்சும் சேனன்-நாவலன் உரையாடல் ஒரு புள்ளியில் இருவரையும் இணைத்து இணக்கவுரையாடலாகவே அமிழ்ந்து போவதில் ஊக்கம்பெறுவது மீளவும், அதே புலிவழியிலான சதி அரசியலைத்தவிர வேறென்னவாகவிருக்கும்?

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக: இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்கள் தமிழ்த் தேசியத்தின் வாயிலாகப் புரட்சிபேசக் கற்றுக்கொண்டவர்கள். ஈழஞ்சாத்தியமெனப் புரிந்துகொண்டவர்கள்.முழு இலங்கைக்குமான புரட்சியை நிராகரித்தவர்கள்.சோசஷலித் தமிழீழம் சார்ந்த கருத்தியல் தளம் உருவாக்கிவிடும் „மனத்தளத்திலிருந்து“ நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் „தனித்தன்மையை“ நாம் அறிவது சுலபம்.புலம்பெயர்ந்து இப்போது, ஐரோப்பாவில் வாழ முற்படும் இளைஞர்கள் அதே புலிவழியிலான போராட்டத்தையும்“தமிழீழத்தையும்“ குறித்து இன்னொரு பிரபாகரனது வருகைக்காக மனக்கதவை திறந்தே வைத்திருக்கின்றனர்.அவர்களைக்குறித்து நம்ம“புரட்சியாளர்கள்“ அதிக அக்கறையோடு அரசியல் பின்னுகிறார்கள்!அதுள் ஓரங்கந்தாம் சேனன்?

எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை, உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடாத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை  எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக, அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.

சமூகத்தில் கருத்தியல் மனதின் தொடர்ச்சியானதை தனிநபர் அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் அரசியற் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற „கருத்தின்பால் உந்தப்பட்ட“ மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இஃதே புலிகளுக்குத் தியாகிப்பட்டம் கொடுக்க அழிவு யுத்தத்துக்கு இலட்சியம் கற்பிக்கிறது!

சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்ததே!

சமீப காலமாகப் „புரட்சிகர“ச்செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலை கீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பதென்பதெல்லாம் நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது, பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.

இலங்கையானது தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது, ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.அல்லது இலட்சியம்-தியாமெனத் தனக்குத் தானே தீர்ப்புக் கூறுகிறது!

நாம்,இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் உதிரிகளாக வாழ்ந்துவரும் சூழலில்,பௌதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் புலம்பெயர் தமிழ்க் குழுமத்திடம் உணரமுடியும்.

அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகளாக-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் புரட்சி-விடுதலை, ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இவைகளே இலட்சம் மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் படுகொலை செய்த அழிவு அரசியலை முன்னெடுப்பவர்கள்.இன்று புலிக்கு வக்காலத்துவேண்டும் சீமானுக்கும்-சேனனுக்கும் குறைந்தது மூன்று வித்தியாசமாவது சுட்டிக்காட்ட முடியுமா நாவலன்?

மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடிய இந்தப் போர்கள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக உருமாற்றம் கொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்த „ஈழப்போராட்டம்“செய்து முடித்தது.அதைக் குத்தகைக்கு எடுத்த புலிகள் முள்ளிவாய்க்கால்வரை பலியாக்கிய போராளிகள், தியாகிகளாகவும்,இலட்சியவாதிகளாகவும் உருவாக்கங் கொள்ளும் அரசியல் இங்ஙனமே நடந்தேறுகிறது.இது,மறுதளத்தைத் துரோகமென வர்ணிக்கும் செயலே இன்றைய புலிவழித் தேசியத்தின் மறுவுருவாக்கமாக மாறும் அபாயம் நமக்குள் அரும்புகிறது!சேனனிடமிருந்தும்,நாவலனது மௌனத்திலிருந்தும் இதைவிட எதையும் புரிந்துக்கொள்ளக்கூடிய அறத்தை அவர்கள்குறித்துரைக்கவில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

20.10.2012

மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா?

சிங்கள இராணுவக் குடிப் பரம்பல் கண்டு,
மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா?

“ மனிதர்கள் உன்னதமாகவிருக்கவேண்டும்
கருணை நிறைந்ததும் மற்றும் சிறப்புமாகும் இது.
இந்தவொன்றே அவர்களைமற்றெல்லா உயிரினத்திடமுமிருந்து வேறுபடுத்திக் காட்டும் .“ -Goethe

[„Edel sei der Mensch,
hilfreich und gut!
Denn das allein
unterscheidet ihn
von allen Wesen,
die wir kennen.“- Goethe]

இங்கு திரு.மனோ கணேசன் அவர்கள் தொட்டிருக்கும்-சுட்டும் பிரச்சனைகள் கடந்த 20 வருடங்கட்கு முன்னமேவுணரப்பட்டது!புலிவழிப் போராட்டமென்பது புதிய இராணுவக் குடியேற்றங்களைச் செய்யுமென்பதை யாழ்“இடப் பெயர்வோடு“அதிகமாகவழுத்திச் சொன்னோம்.50 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர்  காலவோட்டத்தில்50 ஆயிரம் குடும்பங்களை அமைப்பதும்,அதன் வழி இராணுவக் குடியிருப்புகள் குடும்பங்களாகிக் குடிசார் இணக்கத்துள் வரும்போது அவை ஒரு இனத்தினால் விடப்பட்டு,பாழாய்ப்போன வாழ்விடங்களுக்குள் உள்வாங்கப்படும்.அப்போது,சிங்களமயப்படுத்தலது விருட்ஷம் நமது முகத்தில் ஓங்கியறையும் என்றாகச் சொல்லியே „தமிழீழப்போராட்டம்“வழி தந்துரோபாய இடப்பெயர்வு-தள மாற்றமெனப் புலிகள் செய்த போராட்டத்தைக் குறித்து விமர்சனம் வைத்தோம்.
சிங்கள இராணுவம் கூலிப்படையாகவிருந்த 80 இன் ஆரம்பப்பகுதிகளுக்குள்“தமிழீழப் போராட்டக்காரர்கள்“தம் போராட்டம் வெகுவாகவுயர்கிறது!அங்கே,தமிழ்க் குடியிருப்பு-கிராமம்,நகரம்,மாவட்டமென நகர்ந்த புலிவழி இராணுவத்தாக்குதல்கள் மக்களைக் குடிப்பரம்பலிலிருந்து சிதறடித்துக்கொண்டது-கொன்றது!உயிர்காத்து ஓடவைத்தது.
இராணுவமானது முகாமை விட்டுக் குடியிருப்புகளுக்குள் நுழையவும்,அங்காங்கே உறுப்புத் தளங்களை அமைக்கவும் ஒத்திசைவாகவிருந்த இந்த „ஈழப்போராட்டமானது“தமிழ்ச் சமுதாயத்தின் குடிசன மதிப்பீட்டையும்,அவர்களது வாழ்விடங்களையும் ஒருபோதும் கணக்கெடுத்ததே கிடையாது!
இதன் உச்சம்: „ஒரு தமிழன் உயிருடன் இருக்கும்வரை போர் தொடரும்,விழ விழ எழுவோம்“
என்று கதை விட்டவர்கள்,தாம் எந்தக் காட்டுக்குள் இடம் பெயர்கிறார்களோ அதுதாம் தமிழர்களது வாழ்விடம்-வலயம் என்று மக்களையும் துரத்தி அடித்துத் தம்மோடு அழைத்துச் சென்றனர்(இதைத் தட்டிக் கேட்டால், “ இதுதாம்மக்கள் போராட்டம்.மக்கள்தாம் புலிகள்,புலிகள்தாம் மக்கள்“ என்று படம் காட்டினார்கள்!).யாழ் இடப்பெயர்வும் அப்படியேதாம் நிகழ்ந்தது. எனினும், சில மாதங்களிலேயே கணிசமான மக்கள புலியிடமிருந்து தப்பி;, இராணுவம் தங்கிய-பிடித்த யாழ்ப் பாணத்துக்குள்ளே தமது இயல்பு வாழ்வை ஏற்படுத்தலாகினர்.இத்தகைய மக்கள் புலிகள் வன்னிக்குள் „தமிழீழ அரசு அமைத்து ஆட்சி“ நடாத்தியபோது தமக்கும்,இதற்கும் சம்பந்தமில்லாமலே துண்டுபட்டு வாழ்ந்தனர்.இது முதல் வெற்றி அரசுக்கு!மெல்லக் குடியேற்றம்,கூடிக் கலத்தல்,மணவழி ஒன்றித்தலென தமிழ்த் தேசியவின அடையாளமெல்லாம் மெல்லத் தகர்ந்தன(இனக் கலப்பும்,ஒன்றிந்துப் போதலையும் நான் வரவேற்பேன்.வரலாறு பூராகவும் மனிதர்கள் கலந்து போயினர்).
இத்தகைய தருணத்துள்,அரசோடு ஒத்துழைத்த தமிழ்க் குழுக்கள்,பிளவுபட்ட புலியுறுப்புகள் யாவும் ஒரு புதிய இலக்காகக் கண்டடைந்த பிரதேசரீதியான பிளப்பு ஏலவே இந்திய-அமெரிக்க விருப்ப அரசியல் வியூகமாகவிருந்தபோது அதை அவர்கள் இத்தகைய தமிழர்வழி மிக நேர்த்தியாக அரசிலாக்கினர்.இதன்வழி , „கிழக்கு-வடக்கினால் ஒடுக்கப்படுவதாகப்பாடிப்“ பிளவை அரசியல்ரீதியகச் சட்டமாக்கினர்.இஃது, தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தின் இதயத்தைப் பிளப்பதென்பதும்-இருப்பை அசைக்குமென்பதும் அனைத்துக் கிழக்கு வாதிகளுக்கும் தெரியும்.எனினும்,தமது வருமானங்கட்காகத் தமிழர்களது தலையிற் நெருப்பை அள்ளிக் கொட்டியதுமல்லாமற் முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனத்துக்குமே அது கொள்ளிக் கட்டையாகுமென அவர்கள் புரிந்திருந்தும் தமது நல்வாழ்வுக்காக அதைப் புறந்தள்ளினர்.எதிரி,ஒரு கையில் ஆயுதத்தையும்,இன்னொரு கையில் அரசியல் வியூகத்தையும் வைத்துச் செய்த சாணாக்கிய தந்திரத்துள் பலியானவர்கள் முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனங்களே.
இவர்களது இன்றைய கட்சி அரசியலானது மீளவும் சிங்கள மயப்படுத்திய சமூக அசைவாக்கத்துள் சட்டரீதியான உறுதிப்பாட்டையும்,அதற்கான தார்மீக நியாயத்தையும் சிங்கள அரசுக்கு உறுதிப்படுத்துவதும் அதுசார்ந்த இயக்கத்துள் இலங்கையில் பெரும்பான்மை மக்கள் தமக்கான ஐதீகப் பாரம்பரியப் புவியிற்றொhடர்ச்சியைக் காலப்போக்கில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்த நிலத்தில் வரலாற்று ரீதியாகவுறுத்திப்படுத்தும் அரச ஆதிக்கத்துக்கும் துணையாகவே நிற்கின்றனர்.எனவேதாம் சிங்கள அரச அதிகாரத்தைக் கிழக்கு மாகாணத்தின் வசந்தமென ஞானம்-பிள்ளையான் கூட்டு அதிகமாக வகுப்பெடுத்தனர்.டக்ளஸ் அதை வடக்குக்கும் வசந்தமாக மொழி பெயர்த்தார்.
இத்தகையவொரு மிகக் கெடுதியான அரசியற் சூழ்ச்சிக்குள் சிக்குண்ட தமிழ்பேசும் மக்கள், தமது வாழ்விடங்கள்-வரலாற்று ரீதியாகத் தம்மால் உணரப்பட்டதும்,உறவாடப்பட்டதென்பதற்கும்மேலாக அவற்றின் இன்றைய அவலத்தை உணர்வுரீதியாவுள்வாங்குகின்றனர்.
தமிழ்பேசும் மக்களது சுகவாழ்வுக்கான மண்,சிங்கள ஆதிக்கத்தினது அதிகாரத்தின் தொடர் ஆக்கிரமிப்புக்கு மத்தியில்“தமக்கான வலயமாக“ இல்லாதாக்கப்படுஞ் சூழலையும்,அந்த வலயத்துள் தமக்கான பொருண்மிய வாழ்வு இல்லாதாகப்படுவதும்,அந்த ஆதாரங்களைக் கட்டியமைக்காது திட்டமிடப்பட்ட சதியால் பின்தள்ளப்படும் புனரமைப்பு,அபிவிருத்தியானவை தமிழ் பேசும் மக்களது வாழ் சூழலைப் பலமாகப் பாதிக்கிறது.இது யுத்தத்தைவிட மோசமானது.
இத்தகைய சூழல் தொடர்ந்து நிலவும்போது, மக்கள் கப்பல் மூலமென்ன கால் நடையாகவாவது தாம் வாழ்வதற்கும்,தமது சுக வாழ்வுக்காகவும் எங்கும் இடம்-புலம் பெயர்ந்தே தீருவார்கள்.
அதைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம், தமழ் பேசும் மக்களது வாழ்விடங்கள் யாவும் அவர்கள் உழைத்து உண்ணக்கூடிய வலயமாக முதலில் மாறியாகவேண்டும்.அதன் காரணமாகத் தொழில்ரீதியான முனைப்புகள் சிறிய குடிசார் அமைப்பாண்மைக்கு வித்திடும்.அப்போது இந்த மக்கள் அச்சமின்றி தாம் ஒரளவு வாழ்வதற்கான சூழல் தமக்கு வாய்த்ததாகவுணரும்போது இடப்பெயர்வு இல்லாமற் போகமுடியும்.
யாழ்ப்பாணத்தவர்கள் எப்போதும்,தமது மண்ணினது நிலைமைக்கேற்ப இடம்பெயர்ந்து உழைத்துப் பழக்கப்பட்டவர்கள்.குடும்பத்தைவிட்டுக் கொழுப்பிலும்,கண்டியிலும்,காலியிலும் பிழைக்கச் சென்ற அதே அகக் காரணிகள் இப்போதைய காலத்துக்கேற்கக் குடும்பங்களையும் துணைக்கழைத்து வெளி நாடுகளுக்கு இடம் பெயர்வதொன்றும் குற்றமானதல்ல!
„எங்கு மனிதர்கள் சுதந்திரமாக உழைக்க,உயிர்த்திருக்க,பாதுகாப்பாக வாழ முடியுமோ அந்தத் தேசமோ-வலயமோதாம் தாயகம்.அதைவிட்ட அனைத்தும் பொய்யானது-சேர்க்கையானது!“
இதுள் புலம் பெயர்ந்தவர்களை-பெயருபவர்களை நொந்தென்ன-கடிந்தென்ன? காலந்தாம் அனைத்தையும் பதிலாக்கி வைத்திருக்கிறது.அதுள் நமது கடந்த-நிகழ்காலப் பாத்திரங்கள் என்ன பங்குடன் நம்மைக் கடக்கின்றனவென்பதே உணரப்படவேண்டியது.இதுள் புலிவழி (வி)தேசியவாதப் போராட்டத்தைக் குறித்து நிறையவே உணரப்படவேண்டும்.அப்போதுதாம் சிங்கள அரச ஆதிக்கத்தையும் அதன் அதிகாரத்தையும் புரிந்துகொள்ள முடியும்.மனோ கணேசன் அவர்கள் அந்த பக்கமும் மெல்லக் கவனித்துவுணர்வது ஒடுக்கப்படும் சிறுபான்மை இலங்கை மக்களுக்கு அவசியமானது.மனோ கணேசனது இக் குறிப்பு அந்த வகையில்முக்கியமான-அவசியமான குறிப்பாகவே பர்க்கிறேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.10.2012
%d Bloggern gefällt das: