புலிப் பினாமிகளும்,இளையராசாவும் இசை வியாபாரமா?

புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.அதை மேலும் நிலைப்படுத்தும் அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,“மாவீரர்“தினமெனவும்,தமிழர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதி இளையராசா இசை நிகழ்ச்சி வர்த்தகத்தில் தமது இலாபங்களை நோக்கிக் கேள்விகளையும்-காய் நகர்த்தலையுஞ் செய்கிறார்கள்!

சுத்த மானங்கெட்ட வியாபாரிகள்!இலட்சம் மக்களை அழித்துச் செல்வஞ் சேர்த்த புலிப் பினாமிகளுக்கு இப்போது நிதியீடு தேவையாகவிருக்கிறது.இதற்காகச் சகல வடிவிலும் முனைகிறார்கள்.மானங்கெட்ட தமிழ்ச் சினிமாக் குத்தாட்ட நிகழ்ச்சிகூட இந்த மானங்கெட்ட புலிகளுக்கு விதிவிலக்கல்ல! இவர்கள்தாம்“ஈழத்தில் சினிமாப் பாட்டுக்குத் தடை விதித்தவர்கள்!இப்போது பிழைப்புக்கு ஒரு இளையராச!தூ…

இத்தகைய புலிப் பினாமிகளது பிளவுபட்ட புலி இயக்கவாதக் குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது புலிப் பினாமிக் கூட்டம்!

தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் „வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட“ அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.

புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது!

இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடியபோது, வெளிநாடுகளில் அலையும்பினாமிப் புலிகள் தம்மிடம் சேர்ந்துள்ள மக்கள் பணத்தைக் காப்பதற்காகவும்-பெருக்கவும்“மாவீரர்“பயனையோடு அனைத்து விரோத நிகழ்வுகளையும்  செய்து மீளவும் தொடர்ந்து மக்களைக் காயடிக்கிறார்கள்!

இவர்களது ஒரு தரப்பு, முழு வர்த்தகத்தில் மக்களைக் கொள்ளையடித்த  பணத்தோடு  இயங்குவது சகலரும் அறிந்தது.

ஐங்கரன் நிறுவனத்தின் முழுச் சொத்தும் புலப் புலிப்  பினாமிகளது சொத்தாகவும்,அந்தப் புலிப் பினாமிகள் „தமிழீழஞ்“சொல்லி மக்களைப் பலோத்தகாரப்படுத்திப் பறித்த சொத்தோடு தம்மைப் பெரும் வர்த்தகர்களாக்கியுள்ளனர்.

அனைத்துச் செல்வமும் புலிகளுடையது கிடையாது-அவை மக்களுடையது.

இவற்றைச் சேர்ப்பதற்கு எத்தனை ஆயிரம் இளைஞர்களது உயிரைப் பறித்திருப்பார்கள் இந்தப் பாசிசவ் புலிகள்!

இவர்கள் நேர்மையானவர்கள்?

இவர்கள், சீமானைக் கேள்வி கேட்கும் தகமையுடையவர்கள்?

கேடுகெட்ட தெரு பொறுக்கிக் கூட்டமான பாசிசப் புலிப் பினாமிகள் இன்று ஜனநாயக வேடமிட்டுச் சீமானைக் கேள்வி கேட்கின்றனர்!

நமது மக்களது அழிவில் செல்வஞ் சேர்த்த புலிப் பொறுக்கிகள், தமிழ்நாட்டு அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சீமானைச் சிறையிட வைப்பதில் எவரது நலனைப் பேணுகிறார்கள்?

அத்தோடு இந்தப் புலிப்பினாமி வர்த்தக மாபியாக்கள் தமது நிறுவனப்பட்ட அராஜகத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் நிலைப்படுத்தி, மக்களை உளவியல் ரீதியாகவும் அச்சத்துக்குள்ளாக் கின்றனர். இப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து, அச்சமூட்டபட்டும், அராஜகத்தின் மூலமும் தமிழ் விதேசிய வாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்படுகிறது.இது பாசிசமின்றி வேறென்ன?

குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று இதுவரை பலியாக்கியது தியாகமாக இருக்க முடியுமா? எவருக்கான-எதுக்கான“மாவீரர்“தினம்?வர்த்தகஞ் செய்வதற்காகவா?இதுள் முரண்பட்ட இருவேறு புலிப் பினாமிகள் சகல வடிவிலும் மக்களை வேட்டையாட முனையும் வினையுள் இளைஞராசா நிகழ்சியும் ஒன்று!

புலிப் பணப் பினாமிகள் குறித்து நாம் மனசாட்சியோடு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

ஏனெனில் இலட்சம் உயிர்களோடு விளையாடியவர்கள்இந்தப் பொறுக்கிகள்.

தமிழ்ச் சிறார்களது அளப்பரிய வாழும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள் இந்தக் கேடுகெட்ட புலிப் பாசிஸ்டுக்கள்!இவர்களுக்கெதற்கிந்தச் சினிமாத் தனப் பிழைப்பு?

இவர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காகப் பொறுப்புணர்வோடு செற்பட்டார்களா?அல்லது, மக்களது அழிவுக்குத் தார்மீகப் பொறுப்பெடுத்து மன்னிப்புக் கோரினார்களா?இவையெல்லாவற்றையும் தள்ளிவிட்டுத் தமது வர்த்தகத்துக்காகத் „தமிழ் மக்கள்“ நலன்-சீமான் எதிர்ப்பென வகுப்பெடுக்கும் இந்தத் தெரு நாய்களை ஒட்டு வெருட்டியாகவேண்டும்!

இவர்களும்,அழிந்து சாம்பாலய்ப்போன இவர்களது பொம்மைப் புலித் தலைமையும் சமூகக் குற்றவாளிகள்.

அத்தகையப் புலிப் பணப் பினாமிகள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானவர்கள்.

புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள்.இவர்களுக்கு, இளையராசவின் இசையில் இப்போது செல்வஞ் சேர்க்கும் அவா!பிழைப்புவாத நாய்கள்!தூ…

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

20.10.2012

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: