ரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு!

பாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற ரேகன்  மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு!

புலி மாபியாக்கள் தமக்குள் கொலைப்படுகின்றனனர்;பணம்-மக்களிடம் ஆயுதமுனையில் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களைத் தமதாக்கும் முயற்சியில் பெரிய வெட்டுக் கொத்தாவிருந்த இந்தச் சூழல் இப்போதைய நிலவரப்படி துப்பாக்கிச் சூட்டில் கணக்குத் தீர்த்து ஐந்தொகை எழுதுகிறது!;அனைத்தும் மக்கள் பெயரால்.
இவர்கள் இதுவரைப் பிறரை-மக்கள் நலன்விரும்பிகளை-மக்களைப் போட்டுத் தள்ளினர்.ஏனென்று கேட்டவரையெல்லாம்“துரோகிகள்“எனச் சொல்லிப் போட்டனர்.இவர்கள் வைத்த பொட்டுக்கள் ஆயிரமாயிரம்!அதே பொட்டுக்களைத் தமது சகாக்களால் தாங்குபவர்கள் குறித்து மக்கள் எதற்காகக் கண்ணீர்விட வேண்டும்?மக்களையே வேட்டையாடியவர்கள் மக்களது சொத்துக்காகவே இப்போது அடிபட்டுச் சாகின்றனர்.
இத்தகைய பருதி போன்ற கேடிகளைக் குறித்துக் கவலைப்படுதலென்பது வன்னியில் புலிகளாலும் ,அரசாலும் கொல்லப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும்!
பாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற[பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) ] மாபியா கொல்லப்பட்டதை வைத்து நடாத்தப்படும்“ஆய்வுகள்“,சும்மா „அரசு“வெனக் கதைவிடுதல்பொதுப் புத்தியாச்சு!
பெரிய-பெரிய புலிப் பினமிகளே அரசோடிணைந்து „அரசியல்“ செய்யும்போது இத்தகைய வால்களை அரசு கொல்லவேண்டியிருக்குமா?
இதைப் புரிந்துகொள்வதற்குமுன் புலிகளுக்குள் இருக்கும் பல இலட்சம் கோடி இரூபாய்களது உரிமையையெந்தப் புலி மாபியாக்குழு ஆதிக்கஞ் செலுத்துவதெனத் தொடரும் போரில் இஃது, எந்த வகையானது?
ஏதோ பருதியொரு மக்கள் போராளி,மக்களுக்காகப் பாடுபட்டவனெனக் கருத்தாடுவதில் என்ன நியாயமிருக்கு?
எத்தனை ஆயிரம் மனிதர்களைப் புலிகள் இங்ஙனம் கொன்றார்கள்?
அதே பாசிஸ்ட்டுக்கள், தமக்குள் அடிபடும்போது இதையும் „மக்கள்-விடுதலை“ எனும் பெயரால் நாம் உரையாடிவிடும் சந்தர்ப்பமிருக்கே,அஃதுதாம் கயமைத்தனமானது!
வினை விதைத்தவர்கள் அறைவடை செய்கின்றனர்.
அடியுதை,அராஜகமென வெறும் மாபியாக்களாக வலம் வந்த புலம்பெயர் புலிப்பினாமிகள், தமக்குள் அடிபட்டுச் சாகும்போது அந்தச் சாவை மக்களது இழப்பாகச் செய்யும் அரசியலானது சுத்த மோசடியானது.
இந்தப் பருதிக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு?
முன்னால் போராளிகளது இன்றைய மோசமான வாழ்வுக்காக இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்?
கோடிக்கணக்கான டொலர்களைப் பதுக்கி வைத்துவிட்டு அந்தப் போராளிகளை அம்போவென விட்ட கயவர்கள்,மக்களைக் கொன்று சொத்துச் சேர்த்த வரலாறுவொன்றும் மக்களது விடுதலைக்கான போராட்டமில்லை!
வரலாற்றை உண்மையோடு ஏற்க வேண்டும்.அல்லது, வரலாற்றிலிருந்து அனைவருமே காணாமற் போவோம்!
ப.வி.ஸ்ரீரங்கன்
09.11.2012
Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: