புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்- மறுவாசிப்பு!

புலம் பெயர் தமிழரது „புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்“- மறுவாசிப்பு!

 

ன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.
1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.
பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான சிங்களவரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.
புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக்காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.
அவர்களுடன், உடன்பாடுகொண்டு“இந்த இலக்கியச் சந்திப்பும்“ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.
ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.இதுள்,எனது ஊரவளான விக்கினா பாக்கியநாதன்கூட முக்கியமாகச் செயற்பட்டவளே.
இப்போது தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்கின்றனர்.இதுள்,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின்,தேவதாசன்,சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க புலம்பெயர் தமிழர்கள்.
இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன்நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் „புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி“ என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப்,பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது.அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் சுடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சக் கூலிக்கு?).
அவ்வண்ணம், தம்மைத்தாமே புத்திசீவிகளாக வர்ணிக்கும் சுசீந்திரன்,மு.நித்தியாநந்தன் போன்றவர்களும் ஊரெல்லாம்-உலகெல்லாம் பறந்து நிகழ்வுகளில் உரை செய்கின்றனர்.இந்த அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.
சீசீந்திரனுக்கு,அவரைத் தத்தெடுத்த ஜேர்மனிய முது தம்பதினரால் வீடுவளவு இனமாக வந்தது.அந்தத் தம்பதியினர் தமது சொந்த உறுவுகளுக்கே-குழந்தைகளுக்கே அந்த முதிசத்தைக் கொடுக்காது இவருக்கு வழங்கிச் செத்தனர்.அதன் பெறுமதி அண்ணளவாக அரை மில்லியன் யூரோக்களைக் கொண்டது.இந்தச் சுசீந்தரனுக்குச் சொந்து வந்திருப்பினும் அதைப் பராமரிக்கும் செலவெனப் பல நூறு யூரோக்கள் மேலதிகமாகவும்,குடும்பச் செலவெனவும் மாதம் 2000€  யூரோத் தேவையாகவே இருக்கிறது.எந்த வேலை வெட்டியுமற்ற இந்த வெட்டிப் பயல், இந்தப் பணத்தை எவர் மூலம் பெறுகிறார்.?-எனக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.மொழி பெயர்ப்பாளரென்பது வெறும் குசும்பு!இப்போது எவருக்கும்,எவரும்“முழி“ பெயர்க்கலாமே தவிர மொழி பெயர்க்கத் தேவையில்லை!
அண்ணன் நித்தியாநந்தன் தன்னைப் பேராசிரியர்,டாக்டர் என்றழைக்கும்போது உச்சி மகிழ நிகழ்வுகளில் உட்கார்ந்திருக்கிறார்.ஒரு சாதரண விரிவுரையாளன்,எங்கும் டாக்டர் பட்ட ஆய்வைச் செய்து உச்ச தொழிலில் ஈடுபடாத இவருக்குக் கனடாவரை சென்று உரை நிகழ்த்த  எப்படிப் பணம் புரளுகிறது?எங்கே-எந்த நிறுவனத்தில் வேலை புரிகிறார்.மாதக் கணக்கில் இந்தியாவில் தவங் கிடந்து மீண்ட இந்த மனிதருக்கும் வசதிகள் பெருகுகிறது?-எப்படி?
ஞானத்தையும்,சுகனையும்,தேவதாசனையும்,சோபாசக்தியையும் விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!
ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்“படைப்பாளிகள்“சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?
இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது“மக்கள்“நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன?
தொடர்ந்தும்,எமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
ஒரு புறம் புலி மாபியாக்கள்“தேசியம்-தேசியம்“என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி என்ற புலிவால் அம்பலப்படுத்தியதுபோல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று  எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?
நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.12.2012
Werbeanzeigen

One Response to புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்- மறுவாசிப்பு!

  1. சுசீந்திரன் says:

    சிறீரங்கன் அவர்களுக்கு,
    மேலே நீங்கள் பெரும் பணக்காரனாகச் சித்தரிக்கும் சுசீந்திரன் ஆகிய நான், என் பற்றிய முற்றிலும் தவறான பல தகவல்களை உங்களைப் போன்றவர்கள் உலகெங்கும் சுழலவிட்டுக் கொண்டிருப்பதால் வேதனையடைந்தேன். அதனாலேயே இச் சிறு விளக்கத்தை எழுதவேண்டிருக்கின்றது.

    என்னைத் தத்தெடுத்த ஜெர்மன் தம்பதிகள் மிகவும் சாதாரண ஏழைத் தொழிலாளர்கள். எனது தத்துத்தாயாருக்குத் தந்தை தெரியாது. அவரது தாயாரை அவர் 2 வயதாக இருக்கும்போது ( காரணம் என்ன என்று தெரியவில்லை, ஆனால் தாய் ஜெர்மன் மொழியைப் பிழையாப் பேசுகின்றாரே என்று தான் நினைத்ததுண்டு என்றும் சிலவேளை அவர் ரஷ்ஷிய மொழி பேசியிருக்கலாம் என்று என் த்துத் தாயார் குறிப்பிட்டார்) நாசி ஆட்சியாளர்கள் பிடித்துச் சென்ற காட்சி தன் நினைவில் இருப்பதாக என்னிடம் கூறியிருக்கின்றார். தனது சின்னத் தம்பியுடன் ஒரு பராமரிப்பு இல்லத்தில் வளர்ந்தவள். தனது இரண்டாவது ஆண் பிள்ளையைக் கஸ்டத்தினால் வளர்ப்புக்குக் கொடுத்தபின், தனது சசோதரங்களையும், வளர்க்ககொடுத்த பிள்ளையும் மீண்டும் கண்டுபிடித்து விட எடுத்த எல்லாமுயற்சிகளிலும் அவள் தோற்றுப்போனாள். தந்து சொந்தத் தாயைத் தேடிய அந்த வளர்புக்குக் கொடுக்கப்பட்ட குழந்தை, அவள் இறந்தபின் நான் இட்ட பதிவிலிருந்தே எங்களைத் தேடி வந்து அறிமுகமானர் என்பது சோகங்கள் பல நிறைந்த வேறொரு அத்தியாயம். எனது தத்துத் தந்தை எந்த தொழிலும் கற்றுகொள்ளாத வெறும் கூலி வேலையாளாகவே சிறிய சம்பளத்தில் வேலை செய்தார். அவரது குடும்பமும் ஓபர் சிலேசியன் என்ற இடத்தில் இருந்து 1950களில் அகதிகளாக வந்து குடியேறியவர்கள். இறுதியில் எப்படித்தான் சிக்கனமாக வாழ்ந்தபோதும் அவரது பென்சன் காசு அவருக்கு போதுமானதாக இருக்கவில்லை. எனது பிறந்த நாளுக்கு 10 யூரோக்கள் கொண்டுவந்து தந்தார். நல்ல உணவு சமைத்தால் நாங்கள் அவரை அழைத்து உண்ணக்கொடுப்போம். எனது தத்துத்தாயாரும் தத்துத்தந்தையாரும் சில வருடங்களுக்கு முன்னர்தான் காலமானார்கள். தத்துத்தந்தையார் இறந்தபோது அவருக்கிருந்த சிறிய, வங்கிக் கடன்தொகையை அவர்களது மகளே கட்டிமுடித்தாள். அவர் வாடகைக்கு இருந்த அவரது 3 அறை அப்பாட்மெண்டைத் திருத்திய பின்னரே, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் புதிய வாடகைச் சட்டத்தின் அடிப்படையில் பிள்ளைகள் நல்லவேளை விலக்களிக்கப்பட்டோம்.

    உறவினையும், ஒரு பாதுகாப்பு மனோதிடத்தினையும் தவிர அவர்களிமிருந்து நாங்கள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. நானும் எனது மனைவியும் இந்த வாடகை அப்பாட்மெண்டில் தான் இருக்கின்றோம். முழு வீட்டையும் பராமரிக்கும்( வாராவாரம் சுத்தம் செய்வது, பனி கூட்டுவது, பல்ப் மாற்றுவது…) „Hausmaeister“ என்ற வேலையில் எங்களுக்கு 160 யூரோக்கள் தரப்படுகின்றன. அந்த வேலையை நாங்கள் செய்யும்வரைதான் இந்த வீட்டில் வாடகை கட்டிக் குடியிருக்கலாம் என்ற நிபந்தனை வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனது மனைவி வயோதிப நோயாளர்கள் பாராமரிப்பாளராகத் தொழில் புரிகின்றார். அவருக்கு மட்டுமே நிரந்தர வருமானம்.குடும்பதிற்கென்று ஒரு கார் இருக்கின்றது. குசினி திருத்த வேண்டும். மிகவும் மோசமாக இருக்கின்றது. எங்கள் துணி துவைக்கும் இயந்திரம் 1989 இல் வாங்கியது. இப்பொழுது விமானம் ஓடி எழும்பும் சத்தமே அதிலிருந்து வருகின்றது. புதியதொன்று வாங்குவதற்கு சிறுசிறு தொகையாகச் சேமித்து வருகின்றோம். இன்னும் பல மாதங்கள் செல்லும்.

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: