ஜீ.ரீ வியில்[GTV] "பேசாப் பொருள்

ன்று 29.12.2012 இரவு 21:30 மணிக்கு , ஜீ.ரீ வியில்[GTV] „பேசாப் பொருள்“ குறித்தவுரையாடலொன்று நிகழ்ந்தது.

திரு.சம்பந்தனது „ஸ்ரீலங்கா இராணுவத்தை“தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறத் தேவையில்லையெனும் பாராளுமன்றப் பேச்சின்மீதான  உரையாடலாகப் பேசாப் பொருள் நிகழ்வையின்று  நிகழ்த்தினார்கள்.

நிகழ்வுக்குத்  தோழர் நாவலன் வந்தார். நேற்றே என்னைப் பங்குபற்றும்படி கேட்டார்.ஆம் என்றேன்.

இன்றும், உரையாடலைச்  செய்வதற்குமுன்  அதுள் என்னையும் தொலைபேசி வாயிலாகவுரையாடும்படி நிகழ்வேற்பாட்டளரான  தயாநந்தாவும்,நாவலனும் வேண்டிக்கொண்டனர். நானும்,ஆம் என்றேன்.

கட்சிசார் அ ரசியலை விமர்சிப்பதும்,ஒரு கட்சியென்பது என்னவென்பதும் சொல்லியாகவேண்டும். பரந்துபட்ட  „மக்களது உணர்வுக்கு“  அப்பாற்பட்டு, அதை விளக்கும் தேவையும் உண்டு.எனவே,ஆவலோடு „ஆம் “ என்றேன்.

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(பொதுவாக அனைத்துக் கட்சியின் என்பதே சரியானது) நோக்கங்களையும்,சாரம்சத்தையும் மதிப்பிடுவதற்கு, கட்சிகள் முன்வைக்கும் அவர்களது“ செயற்றிட்டம் „என்பதை ஆராய்வதைக்காட்டிலும்  வரலாற்றில் அவை என்ன செய்தனவென்றும்,மக்களை அண்மிக்கும் பல்வேறு பிரச்சனைகளில் எந்த முறையிலான அணுகுமுறையோடு எப்படியான தீர்வுகளைச் செய்கின்றனவென்றும் நாம் நோக்க வேண்டும்.

வர்க்க  மக்கள் சமுதாயத்துள் பல்வேறு வர்க்கங்களின், (விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள்,நிலச்சுவாந்திரர்களுப்பட்ட) இதரர்களது சீவியத்தின் பிரதான முரண்பாடுகளில் கட்சிகள்  எப்படி நடந்துகொள்கின்றனவென்பதிலிருந்தே  ஒரு கட்சியின் மீதான ஆய்வை முன் வைத்தாகவேண்டும். இதுதாம் மார்க்சிய-லெனினிய ஆய்வு முறையாகும்.

பேசப்பொருள் நிகழ்வில் இது குறித்து நாவலனோ அன்றி எந்த நேயருமோ உரையாடவில்லை!

என்னைப் பேச வேண்டுமெனக் கேட்டவர்கள்,பின் என்னையும் ஒரு நேயரின் நிலைக்குட்படுத்திப்  பொதுவான தொலைபேசியழைப்புக்கு வரவேண்டுமென்றார்கள். நானும் ஒரு மணி நேரமாக முயற்சித்தும்  அழைப்புக் கிடைக்கவில்லை.மணியொலிக்கும் நேரம் எனது தொலைபேசியை எடுக்காதிருக்கின்றனர்.பின் அழைப்பையிட்டால் அழைப்பில் மற்றவர்கள் நிற்கின்றனர்.

எனது கருத்தையும் அவசியமாகக் கருதியிருந்தால் அவர்களே அழைப்பைச்  செய்திருக்க முடியும்.

தமிழ் அரசியலுக்கு ஏமாற்றத் தெரிவதென்பது சொல்லியா ஆகணும்?

என்னுடைய 25 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இப்படி எங்கும்-எதுக்கும் ஏமாறிய வரலாறு தொடர்ந்து நிகழ்கிறது.

எவரையுமே நம்பமுடியவில்லை-நம்ப முடியவில்லை!

ஸ்ரீரங்கன்

30.12.2012

Werbeanzeigen

2 Responses to ஜீ.ரீ வியில்[GTV] "பேசாப் பொருள்

  1. முக நூல் நண்பர்களின் உரையாடல்-பின்னூட்டுக்கள்.Iniyavilamban Senthamilon G TV என்றால் ஜிங்கிரிதாள TV இதிலபோய் கருத்துசொல்ல காத்திருந்தவரை என்னவென்று சொல்வது ?vor etwa einer Stunde · Gefällt mirNettikkan Nakkeeran கொடுமை! ஏன் அண்ணா எல்லோரும் உங்களை இப்படி ஆக்குகின்றாங்கள். நாவலன் கூட உங்களை கண்டுகொள்ளவில்லையே?vor etwa einer Stunde · Gefällt mirNettikkan Nakkeeran அண்ணே…நாவலன் அசோக் போன்றவங்கள் உங்களை தங்கடை தேவைக்கு பாவிக்கிறாங்கள் ; இந்த உண்மையை விளங்கிக்கொண்டால் சரி.vor etwa einer Stunde · Gefällt mir · 1Ko Maalikal "முகம் தெரியாதவருக்கு ஒரு துளி மரியாதை கிடையாது." என்று ஸ்ரீரங்கன் எழுதிய கல்வெட்டை "ஜிரிவி" படிச்சிருக்கிறாங்கோ.vor etwa einer Stunde · Gefällt mirசபா நாவலன் சிறீ ரங்கன்,ஜிரிவி ஸ்டூடியோவிற்கும் இணைப்பகத்திற்கும் நேரடியான தொடர்புகள் இல்லை. இடைவேளையின் போது உங்களது தொலைபேசி வரவில்லை என்றார்கள். இறுதி இடைவேளைக்குப் பின்னர் அவர்கள் அழைப்பதாக அவசர அவசரமாக நிகச்சித் தொகுப்பாளர் இளையதம்பி தயானந்தாவிடம் உங்கள் இலக்கத்தை வாங்கிச் சென்றார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் இணைப்புக்கிடைக்கவில்லை என்றார்கள். இலக்கத்தை நான் திரும்பப் பார்த்த போது அதனை தவறாக எழுதியிருந்தார்கள். இதே நிகழ்ச்சியை வேறு ஒருவரோடு அடுத்தவாரம் செய்யும் போது உங்களை அழைப்பதாக தயானந்தா சொன்னார். வீட்டுக்கு இப்போதான் வந்தேன். இதை எல்லாம் பேஸ்புக்கில் போட்டு நீங்கள் விவாதிப்பது அதிர்ச்சியாக இருந்தது.மற்றப்படி நான் எனக்குக் கிடைத்த நேரத்தில் சொல்ல முற்பட்டதெல்லாம் கூட்டமைப்பு மட்டுமல்ல புலி சார் அமைப்புக்களும் ஒரு நேர்கோட்டில் ஏகாதிபத்தியங்கள் சார்பாகப் பயணிக்கின்றன என்பதை மட்டுமே.vor 37 Minuten · Bearbeitet · Gefällt mir · 1Ko Maalikal மேடை போடுகிறவர்களும் ஆடை இழந்தவர்களும் வரிசையில் வருக.கற்கால ஆயுதங்களுடன் புரட்சித் தயாரிப்புகள் செய்கிறோம்.vor 15 Minuten · Gefällt mirSri Rangan Vijayaratnam சபா நாவலன் நாவலன் இது உங்கள் தரப்பில் சரியாகவிருக்கலாம்.எனது தரப்பு நியாயமானது தயாநந்தா என்னை ஏமாற்றியுள்ளார் என்பதே.[எனது போனில் 30 தடவைகளுக்குமேலே போன் செய்திருக்கிறேன்.அதுள், ஆறு தடவைகளுக்கு மேல் இணைப்புக்கிடைத்து மணியொலித்து ஓய்ந்ததுதாம் மிச்சம்.கிட்டத்தட்ட உங்களது உரையாடல் முடிவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும்போதுதாம் நான் இந்தப் பதிவை எழுதி இதுள் திணித்தேன்.]நான் பொதுவாக இத்தகையவுரையாடலுக்குச் செல்வதில்லை.15 ஆண்டுகளுக்கு முன் தாசிஸ் ஐயாவினது[IBC] வானொலியில் அடிக்கடி பங்கு பற்றுவேன்.பின்னால் ,அது புலிக்கு மாறியபின் இவற்றையெல்லாம் தவிர்த்துள்ளேன்.நீங்கள் கேட்டதுக்கிணங்கவே பங்குபெற இசைந்தேன்.மற்றும்படி, தயா நந்தாவே சொன்னபடி "நாடு கடந்த அரசுக்கு"இசைவான ஊடகமென்பதும் அந்த வகையில் புலி அரசியலை அடுத்த இருபதாண்டுக்கு அசைக்க முடியாதென்பதுமென்ற கட்டளையின் கீழ்"பார்த்து-அடக்கி"வாசிப்பது எனக்குச் சரிப்பட்டுவராது.நான் யாருக்கும் -எந்தத் தமிழ் ஊடகத்துக்கும் கருத்துக் கூறும் நேயரில்லை!எனது "ஆம்"என்ற முடிவு உங்களது வேண்டுகோளுக்கிணங்கியென்பதைப் புரிந்தால்சரி.இதை இணையத்தில் வைத்துரையாடுதலென்பது நம்மைத் தொடர்தேமாற்றும் கருத்துக் கந்தசாமிகளை எதிர்கொள்வதும் ,அவர்களது போலி அரசியல் வெளியை மறுப்பதென்பதுமே எனது நோக்கு.நான் வெறும் மனிதன்.என்னைத் தயவு செய்து என்பாட்டில் விட்டுருங்கோ!vor 6 Minuten · Gefällt mir

  2. முக நூல் நண்பர்களின் உரையாடல்-பின்னூட்டுக்கள்-2_தொடர்ச்சி…Iniyavilamban Senthamilon இதுக்குதான் சொல்கிறது புலியின்ர கவடுவரைக்கும் கையைவிட்டு விமர்சிக்ககூடாது என்று, நாவலனை மாதிரி வாலைமட்டும் தடவிக்கொண்டிருந்திருந்தால் சான்ஸ் கிடைத்திருக்குமோ இல்லையோ ?vor 11 Stunden · Gefällt mir · 1Sri Rangan Vijayaratnam Iniyavilamban Senthamilon செந்தமிழன் யாரய்யா நீர்,நம்மையெல்லாம் நேரில் தெரியுமா?-பழைய காய்மாதிரித்தாம் கிடக்கு!ஆனால்,சந்தில புகுந்து இந்தச் சாத்துச் சாத்திறீரே!vor 11 Stunden · Gefällt mir · 2Maaran Chelvan மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கப்படாது அண்ணரே… தங்களுக்கது தெளிவுவென நம்புகின்றேன்.ச்சும்மா விட்டுத்தள்ளுங்க… ஏமாற்றம் நிலையல்ல (ஏ) மாற்றம் வரும் காத்திருங்க."காற்று திசையினை மாற்றும் மாற்றும், அப்ப தூத்துங்க உமிய… "இஃதுங்களுக்கு:ஆகுவதாகும் காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்போகுவதயலே நின்று போற்றினும், போதல்திண்ணம்;சேகறத்தெளிந்தோர் நின்னில்யார் உளர்? வருத்தம் செய்யாதேகுதி; "அவர்தமை" நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்! (கால் நூற்றாண்டாக அரசியலில்)இஃதவர்க்கு:(தமிழ்) மக்களையேய்த்துத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்டரசியல் செய்மானிடரே கேளுங்கள்; கூடுவிட்டு இங்காவிதான் போன பின்யாரோ அனுபவிப்பார் பாவி காளந்தப் பணம்?நன்றி.vor 2 Stunden via Handy · Gefällt mir nicht mehr · 2Maaran Chelvan உங்கள் பதிவின் நிறைவு வாக்கியம் மிகப்பிடித்துள்ளது.vor 2 Stunden via Handy · Gefällt mir · 1Sri Rangan Vijayaratnam Maaran Chelvan இதுதாம் உண்மை! மூன்று இலட்சம் மக்களைத் தூக்கிக் காடாத்திவிட்டு நாம் செய்யும் அரசியலிருக்கே >>அது<< இன்னும் பல உயிர்களைப் பலியெடுக்கும் .அப்போது, இலங்கையின் தமிழ்ப் பகுதியெங்கும் ஒரு நீர் கொழும்புச் சூழலை இனங்காண்போம்.vor 2 Stunden · Gefällt mir · 2Maaran Chelvan தவிர்க்கமுடியாத உண்மை, நீங்கள் குறிப்பிட்டது போல் தற்போதே நிலமை மிக மோசமாகிவிட்டது போல் தெரிகிறது. நிலை கைமீறிவிட முன் இது குறித்துச் சிந்திப்பதும் விரைந்து செயலாற்றுவதும் அனைவரதும் கடமை. தங்கள் எதிர்வுகூறலை முன்னொருமுறை கூட " ஷங்காய் கூட்டின் புலியழிப்பு முனைப்பு" பற்றிய ஆய்வொன்றின் மூலம் அறியமுடிந்தது. எனினும் இம்முறை அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட பிறக்கும் புதிய ஆண்டில் முயற்சியெடுப்போமாக.நன்றி.

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: