என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்…

என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்-ஓடியாருங்கோ,ஓடியாருங்கோ!

நான், பிறருக்கு „உதவும்-உதவிக்கு“ப் பின் எனது எதிர்பார்ப்புகளை ஒரு  corporate ethics முறையில் தரச் சொல்லி பார்த்திபன் கேட்டிருக்கிறார். அங்ஙனம்,வழங்கும்போது என்னால் நடுச் சந்தியில் ஆசீர்வதிக்கப்படுபவர்களுக்கு(குறிப்பாக: என்னிடம்“உதவி“ பெறுகிறவர்களுக்கு) வசதியா இருக்குமென்பது மேன்மை மிக்க பார்த்திபனது வேண்டுகோள்.

அவ்வண்ணமே,நான் எனது முகநூல் நிலைத் தகவலில் எழுதிய குறிப்பைப் பார்த்திபன் தனக்கேற்ற வகையில் இதை ஒரு பாரிய சுற்றுக்குவிட்டும்[corporate social responsibility ]கூடவே, யசீகரனது சகோதர-சகோதரிகளுக்கும் அனுப்பிவைத்து இப்படியொரு நல்ல வேலையைச் செய்திருக்கின்றதால் யசீகரனது சோதரி ஜெயகலாவும் எனக்குத் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து, „எனது எதிர்பார்ப்பு“ [ corporate ethics ]அறிதற் பெருவிருப்பையும் தெரிவித்திருக்கிறார்.

எனவே,நான் கண்டிப்பாக எழுத்து மூலம் „corporate ethics-சை“  தெரிவித்தே ஆகவேண்டியவொரு சூழலுக்கு „என் முன்னைய பாமர விருப்பான „என்வீட்டிற்கும் வந்திருக்கலாம்“ என்றவணர்வினது[Aspects of Intellectual Property Rights  ] வெறுப்பில் கொண்டித்தீர்த்த இந்த நாய்-பேய் வார்த்தகளால் பாதிக்கப்பட்ட பெரு மனிதர்களது கேள்விகள்-எதிர்பார்ப்புகள் கொணர்ந்திருக்கின்றது!

எனவே, அவர்களது கருத்துக்களும்“எனது „எதிர்ப்பார்பு  „code of business ethics “ பரவலாக வெளிப்படும்போது,எனது எதிர்பார்பினது  corporate ethics  நிறைவடையும்.அதனால் இது பொதுவெளில் வைக்கப்படுகிறது.

ஜெயகலா,உங்கள் மின்மடலுக்குப்

[ வணக்கம்,

உங்களைப் போன்ற நண்பர்களின் உதவியினால் இன்று சுவிசில் வாழும் ஜசி, வளர்மதியின் சகோதரி. உங்கள் குருதியின் பங்களிப்பினை பார்த்திபன் மூலமாக பெற்றுக்கொண்டவள். எங்கள் சுமைகளை நீங்களும் உங்களைப் போன்ற நண்பர்களும் உங்கள் தோள்களில் சுமந்த அவ்வேளை முகம் தெரியா உங்களை நினைத்து பெருமைகொண்டு நின்றோம். மனிதம் மரணிக்கவில்லை என மகிழ்வு கொண்டு நின்றோம். தாமாக முன்வந்துசெய்த உதவியினால் நெஞ்சம் நெகிழ்ந்து நின்றோம். நிச்சயம் உங்களைப் போன்ற
நண்பர்களின் உதவியே எனது சகோதரனையும் மனைவியையும் மீட்டது. இன்றும் அவ் உதவிக்கு நாம் தலைவணங்குகின்றோம்.

face book இல் நீங்கள் பறையறைந்த செய்தி கண்டேன். இந்தக் கணமும் உங்கள் உதவியை நாம் மதிக்கின்றோம். உங்கள் உண்மைக்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் பறையறைந்திருந்த செய்திகளை
முன்பே ( உதவி செய்யும் போதே) தெரியப்படுத்தியிருந்தால் எங்களுக்கும்
உதவியாயிருந்திருக்கும். உங்கள் குறிக்கோளை உணர்ந்து கொண்டிருப்போம். யாவற்றுக்கும் நன்றி.

பெறுமதியற்ற பிண்டமாகிய நாய்கள்.
ஜெயா,
இலங்கை.                                                                                             ]

 பதிலெழுதவேண்டுந்தாமாவென மனதுள்பட்டாலும் ஏதோவொருணர்வு, எழுதவேண்டுமென மனதில் தைக்கிறது. „உதவி-உதவுதல்“ எனும் வார்த்தையே சகிக்கமுடியாதளவுக்குத் துஷ்ப்பிரயோகஞ் செய்யப்பட்ட சமுதாயத்தின் உறுபினர்களாகிய நாம் பெரும்பாலும் மனதவுறகளில் மகத்துவமுடையவர்களெனக் கொள்ள முடியாதுதாம். நான் அப்படியானவொரு „எதற்கும்“ ஒரு எதிர் பார்ப்புடைய-நலன் நோக்கும் Code of Ethics காரியவாதி.

பலரை இப்படி „இறால் போட்டுச் சுறாவாகப் பிடிப்பதில்“நான் ஒரு வியாபாரி.

இத்தகைய எனது,“உதவி“க்குக் குறிக்கோள் அறியவேண்டுமென்பது உங்களது நோக்கென்பது நான் எழுதிய குறிப்பொன்றின் மூலமாக எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

எனது,நிலையோ „எல்லோருக்கும் விலாசங்காட்டி உதவுது“,அதை வைத்து நல்ல மனிதர் வேடம் பூணுவது, இந்த இலக்கிலிருந்தபடியே அரசியலொன்றை நகர்த்தவது.அதன் செழுமைக்கு இத்தகைய உதவிகளை விளம்பரப்படுத்தி, சமூகத்துள் காலூன்றுவதன் பயனாக மக்கள் மத்தியிலொரு அரசியல் அறுவடையைச் செய்வதே இலக்கு.

எனவேதாம் „எவருக்கும்  மனமுவந்து உதவுவதுபோல் உதவி“அதை விளம்பரப்படுத்துவது.

பின், அதைவைத்தே கண்ணீர் வடித்துச்  சுயதம்பட்டம் அடிக்கும்போது „தியாகி-கொடை வள்ளல்“ என்ற பெயரோடு“அழியாப் புகழ்“ வந்தடையும் வரலாற்றைக் குறித்தெனதிலக்குகள் பயணித்துக்கொண்டிருக்கிறது.

இதைப் பரவலாகப் பகிரங்கப்படுத்துவதால் என்னிடம்“உதவி“ கேட்பவர்களும்-நானாக உதவுவதாக நாடகமிட்டு உதவும்போதும்“ சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

11.01.2013

Werbeanzeigen

2 Responses to என் எதிர்பார்ப்புக்குள் முகிழ்க்கும் உதவிகள்…

  1. Maalai says:

    Thanks for the information… I really love your blog posts… specially those on Local Tamil News

  2. Maalai says:

    Thanks for the information… I really love your blog posts… specially those on Local Tamil News

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: