புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச…

வன்னியில் கொத்துக் கொத்தாக மக்களை அழித்த    இலங்கையைக் கேட்டுவைத்த சுகனார்: தூ…

=======================

Sugan Kanagasabai:

=======================

ஈழத்தமிழர்களே இப்படியான காட்டுமிராண்டித்தனமான முட்டாள்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைதானா ! உங்களுடைய எல்லாவகையான இழப்புகளையும் ,துன்பங்களையும் இப்படியான ஒரு செயல் எதுவுமில்லாமல் செய்துவிடும் ,அனைவரும் கண்டிக்கவும் அவரிடம் மன்னிப்புக் கேட்கவும் வேண்டும் நாம் தயாரா ? தமிழக புத்தியீவிகள் இந்த தமிழ் பாசிசத்தை கண்டிக்க முன்வரவேண்டும் !

(தமிழகம் வந்த புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி தமிழர்கள் …. )

Sugan Kanagasabai : பாரீர் இதுதான் தமிழர் நாகரீகம் தூ ! தூ !

==============================================

முட்டையில் மசிர் :1

==============================================

இலங்கையில் புத்த சியோனிசவாதமானது இனவழிப்பைச் செய்யுமளவுக்கு உயர்ந்து, இலங்கையின் சிறுபான்மை இனங்களை அச்சப்படுத்திச் சமுதாயக் கொலையைச் செய்யுமொரு குறியீட்டு அரசியலாகவும் இருக்கிறது.புத்த மதப் பிக்குகள் இலங்கையின் இனவாத அரசின் மிகக் கடுமையான இனவாதப்போக்கின் வடிவமாகவும்-உந்துசக்தியாகவும் இருக்கின்றனர்.இலங்கைச் சிங்கள இனத்தின் வரலாறே புத்த மதவாதச் சியோனிசத்துள் மாண்டு போய்ப் புத்தமதமென்பது இனவொடுக்குமுறையின் குறியீடாகவும்,புத்த பிக்குகள்  இனவாதிகளாகவும், ஒடுக்குமுறையாளர்களாகவுமே புரியும் சூழலுக்குள் தம்மை வளர்த்தெடுத்துத்  தமிழ்பேசும் மற்றும் , சிறுபான்மை இனங்களது மிக முன்னேறிய எதிரிகளாகத் தம்மை இலங்கையில் வடிவமைத்ததன் பயனே தமிழகத்தில் இத்தகைய தாக்குதல்கள் உணர்வு வழிப்பட்ட எதிர்ப்பாக இருக்கிறது.

இதையொட்டிக் கண்டிப்பதைவிட  முற்பகல் செய்தால் பிற்பகல் விடியுமென்பதையும் நினைவிலிருத்தும்போது வினைவிதைத்தவர்கள் அறுக்கிறார்களென்பதும் உண்மையாகிறது.

இதை, இலங்கைப் புத்தமத சபை புரிந்துவிட்டடால் இலங்கையில் பிரச்சனைகளது புள்ளி மதங்கடந்து, அரசியல் ரீதியாகத் தீரும் சந்தர்ப்பம் வாய்க்கும்.

இதைப் புரியாமல் தமிழர்கள்கள் மீது காறி உமிழ்வது,  அரசியல் புரியாதமாதிரி நடிக்கும் பிழைப்புவாதிகளுக்கே உரியது.

எது எப்படியிருப்பினும் ,இத்தகைய தாக்குதலை செய்யத் தூண்டும் உளவியலைத் தோற்றுவித்தவர்களே இலங்கைப் புத்த பிக்குகள்தாம்.எனினும்,புத்தபிக்குகள் என்பதே இனவாதிகள் எனும் குறியீடாகிய இலங்கை வரலாற்றிலிருந்து மனிதர்களாக நாம் முன்வைப்பது :“இத்தகைய தாக்குதல்கள் அநாகரீகமானது.இதைச் செய்யும் உணர்வு அரசியலை விட்டொழியுங்கள் மக்களே!;கட்சிசார் அரசியல் இலாபங்களுக்குப் பலியாகதீர்கள் இளைஞர்களே!“.

==================================

முட்டைக்குள் குஞ்சு :2

==================================

தமிழக மாணவர் கலகம் திறக்கும்   அரசியல் இலக்கு:உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை உள் நுழைக்கும் தந்திரம்!

இன்று ,உலகமெல்லாம் பிரச்சனைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பொருள்வளத்தைச் சமாந்தரமாக மேலிருந்து கீழ் பங்கீடு செய்யாமால் கீழிருந்து மேலே குவிக்கப்படும் செல்வத்தால் மையங்கொள்கிறது.இது, பலதரப்பட்ட பிரச்சனைகளையும் பகுதி, பகுதியாகவும் தொட்டுச் செல்கிறது.இதைத் தடுப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் பொலிசைப் பயன்படுத்துவதும் அதை அராஜகக் கும்பலாக்குவதும் தெரிந்ததே.எனினும் ,பொலிசின்மீது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பாத ஆளும் வர்க்கங்கள் , மெல்லச்  சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை நுழைக்க விரும்புகிறது.

இது, மேற்குலக உயர்ந்த  ஜனநாயகத் தேசங்களிலேயே இப்போது விவாதத்துக்கு வருகிறது.இதைத் தொடர்வதற்காக உள் நாட்டில் கலவரங்களைச் செயற்கையாகச் செய்யத் தூண்டும் ஆளும் வர்க்கமானது ,இதற்காகக் கணிசமான மக்களையும் பலியாக்கி வருகிறது.அவர்களது உண்மையான பிரச்சனைகளை மையமாக வைத்து இத்தகைய தகவமைப்பைச் செய்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களது கலகத்தின் வழி ,இத்தகையவொரு ஆபத்தை நாம் உணருகிறோம்.இது,தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் தொடரும் கதைதாம்.இத்தகைய கலகத்தின்வழி இராணுவம் உள்ளகக் குடிசார் நிர்வாகத்துள் மெல்ல நுழையும்.

நிரந்தரமாகவே, மக்களைக் கண்காணிக்கும் காவலரங்குகளை ஆங்காங்கே நிறுவிக்கொள்ளும்.இது,மக்களது இயல்பான வாழ்வைச் சிதைக்கும் பல புள்ளிகளைத் தொடும்.

சட்டரீதியாக இராணுவத்தை, உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் நுழைத்துப் பொலிசினது செயற்பாடுகளைத் தனி இராணுவ நிலைக்கு உயர்த்தும் பொறியைப் புரிவதென்பதுதாம் இனிமேலான சனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்கும்.

-ஶ்ரீரங்கன்

16.03.2013

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: