மேதின ஊர்வலத்துள் நமது தேசிய…

வழமையான கோரிக்கையோடு வழமையாக வந்து, போகும் மே தினம்!

லங்கை-இந்திய அரசுகளோடிணைந்து பிழைப்புவாத அரசியல் செய்யும் எம்.ஆர்.ஸ்டாலின் (ஞானம்),கடந்த 1994 ஆம் ஆண்டு இதே தினத்துள்(01.05.1994) திரு.சபாலிங்கம் அவர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் குறித்து, „19 ஆம் ஆண்டு நினைவு“ கூரலெனவொரு குறிப்பை எழுதுகிறார்.

அவமானகரமான அரசியலைப் பிளவு வாத வியூகத்துக்கமையப் பிரதேசஞ் சார்ந்து நகர்த்தும் ஞானம் – விஜி தம்பதியினர் ஒடுக்குமுறையாளர்களது இன்னொரு கூட்டின் அநுதாபிகளாகவும்-அடியாட்களாகவுமிருந்தபடி அன்று, ஒடுக்குமுறையாளர்களால் கொல்லப்பட்ட நண்பர் சபாலிங்கத்துக்கு „இன்று நினைவு கூர்“ குறிப்பெழுதுவதுகூட இன்னொரு சதி அரசியலாகவே இருக்கும்.

1994 ஆம் ஆண்டு, அவரது படுகொலைச் சாவு குறித்து நாம் வீடுவீடாகப் போட்ட பிரசுரத்தை எவருமே முன்வந்தெழுதாத- முடியாத சூழலில்,

 இந்தத் துண்டுப்பிரசுரத்தைப் பிரான்சிலிருந்து எழுதியவர் எவரென்று நமக்குத் தெரியுதோ இல்லையோ அதுவும் „நண்பர்கள்“ என்ற பொது அவியலில் இன்று, ஞானம் போன்றவர்கள் மேதினத்தின் பெயரால் சபாலிங்கத்துக்கு நினைவு கூரவில்லை.

அதிலிருந்து, இன்னொரு அடையாள வருகையோடு தனது எஜமானர்களுக்கானவொரு அரசியலை மீளக் கைகாட்டும் சூழ்ச்சிக்குள் ஞானம் துணிந்து நகர்த்துவது நாம் காணவேண்டிய புள்ளிதாம்.

இதைத்தாண்டி ,நாம் இன்றைய மேதின ஊர்வலத்துள் நமது தேசிய வாதிகளது கோலத்தைக் கீழே பார்ப்போம்.

இன்றைய தினமும் வழமையானவொரு தொழிலாளர் தினமாகவே சென்றது.வைத்திருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பும் அச்சொட்டாகவே நிகழ்கின்றது.வெஸ்ற்பாலின் மாநிலத்தின் தலைநகர் டுசில்டோர்ப்பில் [ Düsseldorf ]திரண்ட தொழிற்சங்கங்கள்,கட்சிகள் வழமைபோலவே தொண்டை கிழியக் கதறிவிட்டோயும்போது,தொழிங்சங்கங்கள் தொடர்ந்து, பொருளாதார வாதத்தினூடாக இந்த அமைப்பைக் காப்பதில்“வேலைக்கேற்ற ஊதியம்-அடைப்படை ஊதிய நிர்ணயம்,தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் வழங்கும் நிறுவனங்களை அகற்றுதல்“என்று வழமையாக…

நானும்,இந்தக் கேலிக்குரியதாகப் போன மேதின ஊர்வலத்துள் மார்க்சிய லெனியக் கட்சியூடாக [MLPD]ஏகாதிபத்தியத்தின் யுத்தம்,அவ்கானிஸ்த்தான்-பாகிஸ்தான் குழந்தைகளைக் கொல்லும் வானேவித் தாக்குதலையெல்லாம் அம்பலப்படுத்தியம்,விவாதித்தும் வீடுமீண்டேன்.

சென்றாண்டைப் போலவே இவ்வாண்டும் „தி லிங்க“[Die Linke] கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,உப தலைவியுமான சாரா வாகன்கினேக்ற் [ Dr.Sahra Wagenknecht] வருகை தந்திருந்தார்.அவரோடு உரையாடியபோது ஜேர்மனிய அரசின் நேட்டோ யுத்த முன்னெடுப்பின் இரட்டை முகத்தைக் குறித்தும் விவாதித்தேன்.கூடவே,நிறையவே விவாதித்தேன்.அரேபியவுலகப் போராட்டங்கள்,பாகிஸ்தானில்-அவ்கானில் வானேவிக்குச் [Drone attacks   ]சாகும் குழந்தைகள் குறித்தும், ஜேர்மனி அவ்கானில் குடிசார் அபிவிருத்தியை முன்னெடுப்பதாகச் சொல்லியபடி தற்போது கொள்முதல் செய்யும் வானேவிக்குக் காரணங் கூறும்போது,“அவ்கானில் வாடகைக்கு அமர்த்திய வானேவிக்கு வருடமொன்றுக்கு 30 மில்லியன்கள் யூரோவை வாடகையாகச் செலுத்துவதால் சொந்தமாக வானேவி வேண்டுவதென்பது“ ,முன்பு வானேவியை உபயோகித்ததென்பதுதாம்என்றும், „ஜேர்மன் அவ்கானில் அபிவிருத்திக்கு உதவுவதென்பது „யுத்தமே என்பதைக்குறித்துச் சாராவோடு விவாதித்து அவரிடம் „ஓட்டோக்கிராம் ஒன்றை“[  Autogramm ] எனது  புத்தகத்துள் பொறிக்கச் சொல்லிய நான், எனது தேசத்துப் பிரச்சனை குறித்து எதுவுமே பேசவில்லை.

அது ஏன்?

கீழ்வரும் எனது அநுபவம் மீளவும், இந்தப் பிழைப்புவாதிகளது வியாபாரப் புத்தியால் தமிழ்மக்களது உண்மையான விடிவையே  மறுக்கும் நிலையாச்சே!. இது, வேதனையானது!

இவ்வாண்டிலும் தமிழ்பேசம் மக்களது தேசிய விடுதலைக் குத்தகைக்காரர்களோடு மீளவும், முரண்பட்டேன்.

தற்போது, யாரெவரெனத் தெரியாதிருக்கும் ஒரு புரியாணிக்கடையைத்தாம் தமிழ்பேசும் மக்களது பிரச்சனையை வெகுஜன அரங்கில்பிரச்சாரப்படுத்தும்-தெளிவுப்படுத்தும் அரங்காகக் கட்டிவைத்திருந்தார்கள்,புலிவேடம் கழற்றியப் பணப் புலிகள்.

மேதின ஊர்வலம் இறுதியாக அடையும் தளத்தில் பல்வேறு கழகங்கள்-கட்சிகள்,அமைபுகளென ஒவ்வொரு தேசிய இனங்களும்,தத்தமது விடுதலைக்காக இந்தப் பிரச்சார அரங்கைத் தகவமைத்துத் தம் [ Infostände  ]அடையாளத்தைக் கொட்டையெழுத்தில் எழுதியும்,குறியீடுகளைப் பொருத்தியும்-கட்டியும் அரங்குகளை அமைத்திருந்தார்கள்.அத்தோடங்கு பிரசுரங்களைக் குவித்து வைத்துத் தமது பிரச்சனைகளை அங்கு திரண்ட பல்லாயிரம் மக்களுக்கு விளக்கியும்-தோழமை கோரியும் அரசியலை முன்னெடுக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் சில பத்துத் தமிழர்களைக் கூடியவரை சின்னஞ்சிறுசுகளை வைத்து மேதின ஊர்வலத்துக்குப்பின் நகரவிட்டுவிட்டுத் தாம் புரியாணிக்கடை போட்டு கொளுத்த வியாரஞ் செய்தனர். இதுதாம் புலிகளது இன்றைய அரசியற் பாதை!

அங்கு , நம் பிரச்சனை சொல்லும் ஒரு துண்டுப்பிரசுரமோ இருக்கவில்லை.அந்தப் புரியாணிக் கடையை எந்த மக்கள்சார்பாய், எவர் பெயராலென்றும் குறிப்பிடாது முண்டமானவொரு பெட்டிக்கடைபோலவே அஃதிருக்க, நான் மிகவும் வேதனையடைந்தேன்!

இந்தப் பிழைப்புவாதத்தை நமது சனத்துக்குள்அம்பலப்படுத்தி ,அவர்களோடு விவாதித்தேன்.

அங்கு மும்மரமாகச் சாப்பாடுகளை விற்றவர்கள் ஒருவரைக்காட்டி“இவர்தாம் புலிகளது பொறுப்பாளர்,இவரிடம் கேள்விகளை-கருத்துக்களைச் சொல்லுங்கள்“என்றார்கள்.

நானும், அந்தக் குறிப்பிட்ட நபரிடம் இதைக் குறித்துக் கேட்டபோது அவரோ „எனக்கு இது குறித்து விவாதிக்க நேரமில்லை.சாப்பாட்டுப் பெட்டிகளை இறக்கவேண்டும்.வானில் இருக்கும் பொதிகளை இறக்க வேண்டும்“என்று நகர்ந்தார்.

என்ன இது?

தமிழ்த் தேசியம் பேசி,மூன்று இலட்சம் மக்களைக் கொன்றவன்கள்,இப்படிப் பிழைப்புவாதிகளை உருவாக்கிவிட்டு,ஒடுக்குமுறையாளரோடு தம்மை ஐக்கியப்படுத்தியபோது இந்த வியாரிகள் நமது பிரச்சனைகளைச் சொல்லும் முகமாக வழங்கப்படும் இந்தத் தினத்தில் கட்டப்படும் பிரசார அரங்கைப் புரியாணிக் கடையாக்கி விட்டார்களே!இது நியாயமா?

இந்த அவமானகரமான நிகழ்விலிருந்து ஒன்றைச் சொல்வேன்:

புலத்துத் தமிழ்பேசும் மக்கள் கட்டாயம் விதேசியப் புலிகளையும்-வியாரப் புலிகளையும் நமது பிரச்சனையிலிருந்து அப்புறப்படுத்தியாகவேண்டும்.

இப்படிப் புரியாணிக்கடைபோடும் வியாபரப் பிழைப்புவாதிகளை அடுத்த நிகழ்வில் எம் மக்களது பெயரால் பிரச்சாரத் தட்டியமைக்க-அரங்கு அமைக்கவென்று  எடுக்கப்படும் இடத்தைப் புராணியாணிக் கடையாக மாற்றும்வியாபாரத் தந்திரத்தை இல்லாதாக்கவேண்டும்.

அத்தகைய நிகழ்வுக்கு, உண்மையாக மக்களுக்காக இயங்கும் பொது மக்களே ஒன்றிணைந்து இத்தகைய ஊர்வலம்-பிரச்சார அரங்கமைத்து[Infostände ] எமது பிரச்சனைகளையும்-எம்மை, ஏமாற்றிய உலக-உள்நாட்டு அரசியலையும்,இலங்கை-இந்தியப் பாசிச அரசுகளையும்,வியாபாரப் புலிகளையும் பிரசுரங்கள்-நேரடி விவாதம்-கருத்துப் பகிர்வின் மூலம்அம்பலப்படுத்தி மக்களது விடுதலைக்கு வழி செய்யவேண்டும்.

புரியாணிக்கடைக்கு சாப்பாடு வாங்க வந்த பிற நாட்டினர்-ஜேர்மனியர்கள் இது எந்த நாட்டு மக்களது அரங்கு-உங்களுக்குப் பிரச்சனை என்னவெனக் கேட்டதைக் குறித்து எதுவுமே பேசாது „ஸ்ரீலங்கா-ஸ்ரீலங்கா“ வென்றுவிட்டுப் புரியாணி விக்கும் புலிக்குக் காசில் குறியா அல்லது மக்கள் விடுதலையில் குறியா?

இணையத்தில்,“காணீ பறி போகிறது-ஆமி மக்களை அடிமைப்படுத்துகிறார்கள்,போராளிகள் சாகக் கிடக்கிறார்கள்,அங்கவீனர்களாய்-அடிமையாய் மக்களெனச் சொல்லும்“ இந்தப் புலிகள்,பல் தேசிய இன மக்களும்-கட்சிகளும் கூடும் வெகுஜனத் தளத்தில் மொட்டையாய்ப் புராயாணிக் கடைவைத்துக் காசு சேர்க்கும் கபோதிகளாகவே வாழ்கின்றனர்.

இந்த அராஜகக் கள்வர்கள்,தமிழ்பேசும் மக்களை இலட்சக் கணக்காய்க் கொன்று காசு குவித்தபோது அதற்கொரு தலைவன் மற்றும் கொடி வைத்துக்கொண்டும், மக்களது சாவை வைத்தும் அரசியல் வியாபாரஞ் செய்தனர்.இப்போது, அப்பட்டமாய் வியாபாரிகளாக மாறியவர்கள் தமிழ் மக்களது பிரச்சனையில் இனியும் தலை புகுத்தாமல் மெல்ல நகரவேண்டும்.

இல்லையேல், அவர்களை அப்புறப்படுத்தி நேர்மையாக நமது மக்களது பிரச்சனைக்கான அரசியலை நாம் பொறுப்பேர்க்க வேண்டும்.இந்தத் தளத்தில் புலத்த மக்களை வைத்தே இத்தகைய பிழைப்புவாதப் புலிகளை அப்புறப்படுத்தியாகவேண்டும்.இதுதாம் இன்றைய மேதினஞ் சொல்லும் நமக்கான அநுபவம்!

ப.வி.ஸ்ரீரங்கன்

01.05.2013

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: