இனங்காண வேண்டிய மக்கள் விரோதிகள்-யார்?

 

Varathar Rajan Perumal :

//இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்து சிங்களவர்கள் சிறுபான்மையாக இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிப் பார்த்து ஒன்று, இரண்டு என வரிசையாக பத்து வசனங்களில் எழுதிப்பாருங்கள் தமிழர்கள் மத்தியில் இன்று பரவி நிற்கும் ஜனநாயகத்தின் லட்சணங்களைத் தெரிந்து கொள்வீர்கள். அதேபோல 2009ம் ஆண்டு சிங்களப் படைகள் வென்றதற்கு மாறாக புலிகள் வடக்கு கிழக்கில் சிங்களப் படைகளைத் தோற்கடித்திருந்தால் இங்கு வாழும் சிங்கள மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். தமிழர்களின் மனித உரிமை மதிப்பும் மனிதாபிமான அக்கறையும் தெளிவாகத் தெரியும்.//

 

Sivarasa Karunagaran :

//சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் வாழ்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோமே என்ற எண்ணத்தில் எங்களைத் துன்புறுத்துகின்றனர். இதற்குக் காரணம் தமிழ்நாடுதான். இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக தமிழக மக்கள் பேசப்பேச, இத்தனை கோடிப் பேரின் ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு யாரும் இல்லை என்கிற எண்ணம் மேலோங்க எங்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்கிறார்கள் சிங்களர்கள்.//

http://thenee.com/html/171113-1.html

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய“அரசியல்-பொருளியல்“வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த „அலகுகள்“ அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய“அலகுகளை“உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் „பொருளாதாரச் சிக்கல்கள்“ அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் உரையாடல்கள்-பழி சுமத்தல்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் „மக்களை“மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.

மக்களை அவமானப்படுத்துவது முன்னாள் ஆயுதக்குழுக்களுக்கும் ,அவர்களது அரசியல் இருப்புக்கும் அவசியமாகவிருக்கிறது.

முள்ளி வாய்க்காலுக்குப் பின் மிக விவகாரமாகவுரையாடுலைச் செய்யும் புலிகளது மிச்சசொச்சங்களும்;இந்தியக்  கூலிக்குழுக்களும் கையோர்த்துச் செய்யும்  விசமத்தனமானவுரையாடலானது தமிழ்பேசும் மக்களைச் சிங்கள இனவாத்தத்துக்கும் ,இலங்கை அரச பயங்கரவாதத்துக்கும் அடிமைப்படுத்துவதாகவே இருக்கிறது.

சிங்கள ஆளும் வர்க்கத்தோடிணைந்து தமிழ் அதிகாரக் குழுக்களும், புதிய பணக்காரரும் „தமிழ்மக்களே அதிகமான இனவாதிகளாகவும்,சனநாயக விரோதிகளுமாகவும்-அராசகவாதிகளுமாக வரலாற்றில் இயங்கிக்கொண்டார்கள் “  எனும் தோரணையில் விவாதித்துச் சிங்கள இனவாத அரசின் தமிழ் மக்கள்மீதானவொடுக்குமுறையை நியாயப்படுத்திவிடுகின்றனர்.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு, சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.

இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது -இன்றைய தமிழ்க் குழுக்கள்,இவர்கள் அனைவரும் ஏதோவொரு அந்நிய நலனுக்கான முன்நிபந்தனைகளுக்குட்பட்ட களத்தில் தமது நலன்களைக் குறித்தே இங்ஙனம் இயக்குமுறுகின்றனர்.

இங்கேதாம் நமது மரபு ரீதியான கட்சியரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் தவிர்க்க வேண்டும்.

.இத்தகையவொரு விசமத்தனமான உரையாடலனது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட „எதிர்பார்ப்புகளால்“ஆனதாகாதா?

இது காலாகாலமாக நமது அரசியல் பண்பாட்டுத் தகவமைபு;புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு மனிதனை இனம் காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.

ஓடுகாலிகளான முன்னாள் ஆயுதப் பயங்கரவாதிகள்- மக்கள் விரோதிகள் தம்மைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக முன் நிறுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும்.

இவர்கள் தூக்கி நிறுத்தும் இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில், தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.

சிங்கள இனத்தைச் சொல்லித் தமிழ் மக்கள் அவர்களைவிடப் பன்மடங்கு அராசகவாதிகள்-சனநாயகப் பண்பற்றவர்கள் என்பதெல்லாம் ஒரு விவேகமான அரசியலாகுமா?இவர்கள் எப்படி மக்கள் படும் துன்பங்களுக்குப் பரிகாரந் தேடுவார்கள்?மூன்று இலட்சம் மக்களைப் பலியெடுத்த இலங்கையின் இனப்படுகொலை வரலாற்றைச் சில விசமிகள் தமிழரது பண்பைச் சொல்லி நீர்த்துப்போக வைக்கமுடியுமா?

தமிழ்த் தேசியம்வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்பவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?

எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?

இங்கேதாம் இந்தியாவின் அதீத சாணாக்கியம் புலப்படுகிறது.

இது இனவாதத்தைப் புதுமுறைமைகளில் பேசுவதற்குத் தயாராகிறது.

இலங்கை அரசாகவிருந்தாலென்ன அல்லத் தமிழ்த் தேசியக் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்களாகவிருதாலென்ன  புதுப்புது அர்த்தத்தோடு“தேசிய மற்றும் விதேசிய“பண்புகளைக் கொட்டியபடி தத்தமது இருப்பைக் காத்து வரும்பொழுது,“ இலங்கையின் நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் “ எனும் ஒரு „மொன்னைப் பேச்சு“அறிவுத்தளத்தைக் காவுகொள்ளத் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது.

இது,தமிழர்கள் அராசகம் நிறைந்த-சனநாயகப்பண்பற்ற ஒடுக்குமுறையாளர்களென்றபடி ,சிங்களவர் பக்கம் விட்டக்கொடுப்பு-சனநாயகப்பண்பு;இயைந்த வாழ்பவர்கள் என்றும் கோசமிடுகிறது. இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.

இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது-கூடவே ஆயுதத்தைக் காட்டி மக்களை ஒட்டு ஒடுக்குவதும் மிகச் ச◌ாதரணமான அன்றாட வாழ்வாகிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்
20.11.2013

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: