(இ)லீனா மணிமேகலைக்கு "எவர் " காட்டுவார் "ஆதாரம்"?

சிங்கள-இந்திய ஆளும் வர்க்கங்கள் „ஈழத்தில்“ நடந்த இந்திய-இலங்கை-அரசுகளினது யுத்தக் குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை மற்றும் தென்னாசியப் பிராந்திய மேலாதிக்க இந்திய ஆளும் வர்கத்தின் கொடிய மனிதவிரோதச் செயற்பாடுகளை  மெச்சவும் அரசியல் -உளவுப் படைகளை முடுக்கிவிட்ட இன்றைய நிலையுள், இந்திய ரோவானது பல உப கூலிகளைக் கிழ்வரும்படி தகமைத்து இயக்குவது பரவலாகப் புரியவேண்டும்.

ஒரு நோக்கு நிலைக்குட்பட்டு  பல்வேறுபட்ட செயற் தளத்தில் தத்தமக்கான கூலிகளை ஏற்படுத்தியிருப்பதை இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட இலங்கையின் இற்றைவரையான அரசியல் போக்கில் பலரது புதிய-பழைய வருகையும், புலிகளுக்குள்ளிருந்து புறப்பட்ட „கலைஞர்கள்-படைப்பாளிகள்-விமர்சகர்கள்“ வரையும் கூடவே, இந்தியாவின் அரசியலுக்குத் தகவமைக்கப் போதாதெனப் தமிழக்கத்துப் பல „புரட்சியாளர்கள்-குறும்படக் கோணங்கிகளென“ க் கூடிக்கொண்ட அரசியல் அரங்கில், இந்தச் சுண்டங்காய்ப் பெண்ணு, லீனா மணிமேகலை போடும் தனது தனிப்பட்ட“மானப் பிரச்சனை“ இந்தியாவால் ஈழத்தில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்களது உயிருக்கான நஷ்ட்ட ஈடு கோரிக்கொள்ளும் யுத்தக் கிரிமனல்களாகவிருக்கும் இந்திய-இலங்கைத் தலைவர்களை எந்தக் கோட்டில் நீதிக்காக அழைத்துக்கொள்ளாலாம்?

லீனா மணிமேகலை கட்டியமைக்கும் „தூய படைப்பாளி“,மற்றும், வேலைக்கான ஊதியம் பெற்றுச் செயற்படும் அவரது „நாணயம்“ தனிப்பட்ட தொழில் ரீதியான முனைப்பு-ஆளுமை-செயற்பாடென்பது வரைப் புடுங்கி அடுக்கும் மணிமேகலை ,ஈழத்தில் ஒரு தேசியவினத்தின்மீதான படுகொலை அரசியலைச் சுற்றிக் கட்டிப்போடும் படைப்பு இரகசியம் வெறும் மனிதாபிமானமெனும் போக்கில் வரலாற்றைப் பதிந்துவிடத் துடிக்கும்-தவிக்கும்  ஆளும் வர்க்கத்துக்கான கரச் சேவைக்கு „ஆதாரம் இருந்தால் காட்டு,இல்லையோல் மான நஷ்ட ஈட்டு வழக்குத் தொடுப்பேன்“  என்ற அரசியலுக்குள்  இந்திய ரோவினது நல்ல பிற்புலம் -ஒத்துழைப்பு இருக்கத்தாம் வேண்டும்.

உலகெல்லாம் வேவு பார்த்தும், பல நூறு உலகத் தலைவர்களை ஒட்டுக்கேட்டும் அம்பலப்பட்டுப்போன அமெரிக்க ஏகாதிபத்தியமோ“எங்கே ஆதாரம் இருந்தால் காட்டு“என்று திமிர்த்தனமாகப் பாதிக்கப்பட்ட தேசங்களைப் பார்த்துக் கேட்பது போன்றுதாம் இந்திய ரோவுக்குப் பின்னால் ஒழிந்து „கலைப் படைப்பு-எதிர்ப்பு அரசியல் படம்“பண்ணும் லீனாவினதும் குரலும் ஓங்கியொலிக்கிறது.

இந்த, இந்திய ஆளும் வர்க்கத் திமிருக்கு முட்டுக் கொடுக்க-ஒத்தூதவொரு கைப் பாவைகளை ஏலவே ஈழத்தில் தயாரித்த இந்தியா வரதராஜப் பெருமாளையும் ,ஆயுதக் குழுக்களையும் மட்டுமல்ல புலிகளுக்குள்ளும் பற்பல இந்தியக் கூலிகளை அது உருவாக்கியதுள் முள்ளி வாய்க்கால் படுகொலை நிகழ்வுக்குப் பின் ஓங்கியொலிக்கும் புலிக் „கலைஞர்கள்-படைப்பாளிகள்-விமர்சகர்கள்“ என்போரெல்லாம் இந்த இந்தியக் கைக்கூலிகள் என்பதுமட்டுமல்ல புலத்திலும் இவர்களுக்கொப்பானவொரு குழுவை இந்திய-இலங்கை உருவாக்கி அவர்களைப் „புரட்சிக்காரர்கள்-மாற்றுக் கருத்தாளர்கள்-ஜனநாயக வாதிகள்“எனும் முகமூடி போட்டு அழகு பார்த்து இயக்கிக்கொண்டிருக்கிறது.

இந்திய ரோவுக்காக „எதிர்ப்பரசியல் படம்“காட்டும் லீனா மணிமேகலையின் உடலில் சிறு துரும்பு  உட்கார்ந்தாலும் அதை தட்டித்  தூய்மைப்படுத்தப் புலத்திலொரு கூஜாத் தூக்கிக் கூட்டத்தையும் தயாரித்த பின் இந்தியப் பிராந்திய நலனின் அரசியலானது „ஈழத்தில்“அருமையானவொரு தீர்வாகவும்,ஜனநாயகத்தேவையாகவும் படம் காட்டும் பல வரதாராஜப் பெருமாள்கள் ஈழத் தேசத்துள் இப்போது மலிந்துவிட்டபோது, லீனா மணிமேகலைக்கேது தயக்கம்-அச்சம்- இலங்கை சென்று „எதிர்ப்பரசியல்“படம் பிடிக்க?

இந்தத் தளத்தைப் புரியாதவரை நாம் லீனாவின் சேட்டைக்கு அஞ்சி அழுது புலம்ப வேண்டியதுதாம்!

இவை குறித்தெல்லாம் எப்போதாவது நாம் புரிந்துகொண்டோமா?

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.

இந்திய – இலங்கை அரசுகளினது கடந்த வன்னியுத்தம், தமிழின அழிப்பைச் செய்த கையோடு மீளக் கட்டியமைக்கும் படுமோசமான கட்சி, அரசியலில் மிகக் கேவலமாகத் திசைவழிகளை அமைக்கும் தமிழ்க் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்கள், இந்த வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களையும் மறந்து, அரசியல் செய்யும் இந்தத் தருணத்தில்தாம் நாம் இப்போக்குகள் குறித்துக் கவனத்தைக் குவிக்கவேண்டும்.

ஒடுக்குமுறை வர்க்கத்துக்கெதிரான,அவைகளின் அரசுகளுக்கெதிரான எதிர்ப்பு அரசியல் நிலையோ இன்று, ஆளும் வர்க்ககங்களுக்கிசைவாகப் பிற்போக்குச் சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது.மக்களை மிக இலகுவாகத் தமது வலுக்கரங்கள் மூலம் ஆளும் வர்கத்தினது அதிகாரத்துக்குள் கட்டிப்போட வைக்கும் „ஜனநாயக“ உரையாடல் மற்றும்,  காட்சிப் படிமத்தின் வழியிலான நியாயப்படுத்தல்கள்-பொதுமைப் படுத்தல்கள்“ கலை-படைப்பு-தொழில் தர்மம்-மனிதாபிமானம்“ எனும் கவசத்தோடு நமது வாழ்வைச் செல்லரித்துச் செல்கிறது! இதுள், லீனா மணிமேகலை என்பது  பல இந்திய ரோவின் எடுபிடிகளில் ஒன்றென்பதைத்தவிர வேறெதுவைத் தெரிவாக்கி வைத்துரையாட முடியும்?

இந்தப் பிழைப்பு வாதக் கூலிகள் கேட்கும்“ஆதாரம் இருந்தால் காட்டு“ என்பது அமெரிக்க அரசு கேட்கும் “ அமெரிக்கா உளவு-வேவு பார்த்ததற்கு என்ன ஆதாரம்? “ என்பதற்கும் இருவேறான தெரிவுகள் இருக்குமா?-இரண்டும் ஒரே நோக்கு-நலத்தின் வழியிலான செயற்பாடுகள்தாம்.

இதுள், லீனா மணிமேகலை காட்டும் பூச்சாண்டிதாம் பெரும் வேடிக்கையானது-வேஷமானது-விவகாரமானதுங்கூடவே! இஃது, இந்திய ஆளும் வர்க்கத்தின் திமிரினது பரந்துபட்ட தொடர்ச்சிதாம்!

இவற்றைப் பல தளங்களில் புரிந்தாகவேண்டும்: புரிந்தால், இந்தப் பாவமன்னிப்புக் கோருதல்களினது அர்த்தமும் புரிந்து போகும்!

Leena Manimekalai hat ihr Profilbild  geändert.

 [இந்தப் படம் இலீனா மணி மேகலையினது உருவப்படம்.அவரது முக நூலிலிருந்து எடுக்கப்பட்டது.நன்றி]

இற்றுவரை ஈழத்தில் மூன்று இலட்சத்து நாற்பதினாயிரம் உயிர்கள் ஈழக்கோசத்தால் பலியிடப்பட்டுள்ளார்கள்.சுமார் 4.5 றில்லியன் ரூபாய் பெறுமதியான உடமைகள் போரினால் நாசமாக்கப்பட்டும்,முப்பதினாயிரம் பெண்கள் விதவைகளாகவும்,கிட்டத்தட்ட அதே தொகை சிறுவர்கள் முடமாக்கப்பட்டும் இந்தத் தமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!முள்ளிவாய்க்கால்வரை ஒரு பிரபாகரனின் முடிவில், இலட்சக்கணக்கான மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டன.இனிவரப்போகும் பிரபாகரன்கள் இன்னும் எத்தனை புதைகுழிகளைத் தோண்டுவார்களோ அது  எவருக்குமே இப்போது புரியாது,அந்த ஆண்டவரைத் தவிர!

இத்தகைய சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமனலாக இருக்கும் அந்நியத் தேசத் தலைமைகளை அண்டிப் பிழைக்கும் இந்த லீனா மணி மேகலை போன்ற „கலைஞர்கள்“ தங்கள் கூஜாத் தூக்கும் தொழிலில்“தூய்மை“ வேடங்கட்ட „ஆதாரம் இருந்தால் காட்டு இல்லையேல் அஃது,அவதூறென்பது “  கூட ஒரு விதமான அரசியல்தாம்.

இவர்களுக்கு முன்னோடி சாணாக்கியன்-பின்னாற்றான் அமெரிக்க ஏகாதிபத்யம்!

ப.வி.ஸ்ரீரங்கன்

02.12.2013

P/S:

Leena Manimekalai :

 

ஊடறு டொட் கொம் நீங்கள் „வெள்ளை வேன் கதைகள்“ குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதிய சந்தியா இஸ்மாயிலின் தொடர்பு இலக்கம், இமெயில் விபரங்கள் வேண்டும். அப்படி ஒருவரே இல்லையெனில், நீங்கள் அந்த பொய் அறிக்கையை உடனே நீக்கி, படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

@கீற்று, நீங்கள் இந்த மொட்டை அறிக்கையோடு என்னைப்பற்றி பல அவதூறு கட்டுரைகளை உங்கள் தளம் முழுவதும் நிரப்பி வைத்திருக்கிறீர்கள். ஆபாச கமெண்டுகள் வேறு , என் அனுமதியில்லாமல் லே அவுட் செய்த என் படங்கள் வேறு. உங்களை வழக்கறிஞரோடு சந்திக்கிறேன்.

Shoba Sakthi : ஊடறு டொட் கொம் அவதூறையும் பிரசுரித்துவிட்டு அது குறித்து அவதூறால் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பும்போது ஊடறு ஆசிரியர்கள் ரஞ்சி (சுவிஸ்) தேவா (ஜெர்மனி) ஆழியாள் ஆகியோர் நெடிய கள்ள மவுனத்தைச் சாதிப்பதன் பொருளென்ன? அவதூறு பரப்புவது மட்டும்தான் அவர்களது வேலையா? அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டாமா? என்ன இழவு இதழியல் இது!

M R Stalin Gnanam :  தே வா (ஜெர்மனி) ஆழியாள் ஊடறு ஆசிரியர்கள் ?

Shoba Sakthi  : M R Stalin Gnanam ஆம். ஊடறு இணையத்தளத்தினுள் போய் INFO பகுதியை சொடுக்கினால் இப்படித்தான் இருக்கிறது.

info

editors: ranji (swiss) , theva (germany)

co-editor : aazhiyal (australia)

contact : udaru@bluewin.ch

Werbeanzeigen

Kommentar verfassen

Trage deine Daten unten ein oder klicke ein Icon um dich einzuloggen:

WordPress.com-Logo

Du kommentierst mit Deinem WordPress.com-Konto. Abmelden /  Ändern )

Google+ Foto

Du kommentierst mit Deinem Google+-Konto. Abmelden /  Ändern )

Twitter-Bild

Du kommentierst mit Deinem Twitter-Konto. Abmelden /  Ändern )

Facebook-Foto

Du kommentierst mit Deinem Facebook-Konto. Abmelden /  Ändern )

Verbinde mit %s

%d Bloggern gefällt das: