ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்!

நாம் வாழும் இந்தப் புவிப் பரப்பு நமக்கானதல்ல. இன்று, தொடரும்  புவிப்பரப்பின் மீதான அனைத்துப் பௌதிக நடாத்தைகளும் அதன் இருத்தல்மீதாகப் பொழியும் இடைச் செயலானது பல்வேறு தர்க்கத்தை -தாக்கத்தைக் குறித்தக்கொண்டே வரலாறு பூராகவும் மாற்றமடைந்து செல்வதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாற்றங்கள் பலவானாலும் நமது உளவியல் மனதின்மீதான உணரழுத்தம் எமக்கான புரிதற்பாட்டின் வாயிலான வாழ்வில் – இருத்தலில் வெவ்வேறு தேவைகளோடு நம்மைச் சாகடித்து விடுவதைக் கூட நாம் உணர்வது தடுக்கப்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்துள் நாமும் ஒருவங்கமென்பதெல்லாம்  எம் மீதான மிதமானவொரு உணர்வின் (  பெருமிதம்    என்பதெல்லாம் இன்று பொருத்தமற்றது) பொருத்தமற்ற கதையாடலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.இந்நிலையிலும் இன்றைய பொருளாதார நடாத்தைகளது தயவில் உயிர்வாழ்வதென்பது அந் நடாத்தைக்கு -இயக்கத்துக்கு ; அதன் வீரியத்துக்குட்பட்டவுறவென்பதை நாம் கண்டுபிடித்துக்கூறாதுபோகினும் -அதுவே உண்மை!

பரவலாகவுணரப்பட்டவிந்தமைப்பினது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியானது இன்னொரு பாரிய அழிவை இன்றையவுலகவொழுங்குக்குள் நடாத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உலக அரசுகளுக்கிடையிலானவுறவென்பது தனியே அந்தந்தத் தேசத்து உயரடுக்கின் நலன்களென்பதாகக் குறுக்கப்பட்ட பல்தேசியக் கம்பனிகளது சட்டவாதம் மனிதவிரோத முகங்களோடு[  ‪#‎TTIP‬ ‪#‎CETA‬ ‪#‎TISA #TPP #WTO etc. ] நம்மையண்மிக்கும்போது நாம் பல்வேறுபட்ட வடிவங்களில் அழித்தொழிக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடியிலிருந்து முற்றுமுழுதாகத் திசை திருப்பட்ட உழைத்துண்ணும் நாம் பல்வேறுகைப் பிளவுகளுக்குள் சிக்க வைக்கப்பட்டபின் அதுவேயொரு குரூர மனித முகத்தை உழைப்பவருக்குள் தொடர்ந்துருவாக்கி விடுகிறது.பல்வேறு தேவைகளது நலனது காரணங்கொண்டு „தேசிய அரசுகள் ;சுயாதீனச் சமுதாயம் ;சுயாண்மை ; சுய பொருள் செய்கை ;சுயாதீனச் சட்டவாதம் „என்பதெல்லாம் இல்லாமைப் போனதென் தொடர்ச்சியை நாம் தற்போது சிரியாவில் உணரத் தக்கதான எல்லா அரசியற் காரணங்களையும் அறிகிறோம்.

இதன் தொடராக இடம்பெயரும் மக்கள் கூட்டம் பல கோடிகளாகவுயர்ந்து இந்தவிடப் பெயர்வுக்குக் காரணமான தேசங்களை நோக்கி நகர்த்தப்படுவதுகூட ஒரு வியூக வகைப்பட்ட அரசியல் „என்பதை நாம் உணர்வது மறுக்கப்படுகிறது.

உழைப்பவர்கள் இந்த நெருக்கடியில் தமக்குள் ஒன்றுபடும் தருணத்தைக்கொண்டிருந்த வேளையில் அவர்கள்மீதான நவீனத் தாக்குதலாக இந்த „அகதி“ப் பிரச்சனைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள் தமது சொந்த உழைப்பாள மக்கட்டொகுதியை இடம் /புலம் பெயரும் அப்பாவிகள் [இதற்குள் சிரியாவிலிருந்து கடத்தப்படும் ISIS உறுப்பின ர்கள் சேர்த்தியில்லை] மீது பண்பாட்டு/இனக் குரூரமாக ஏவிக்கொண்டிருப்பது உலக தழுவிய ஒருங்கிணைவைத் தடுப்பதிலான நோக்கம்  முற்கட்டமாகவிருப்பினும் தற்போது மனிதவிரோதவொப்பந்தகைளைக் கையெழுத்திட்டுச் சட்டவாக்கமாக்குவதில் தத்தமது தேசத்து உழைக்கும் மக்களது இதன் மீதான எதிர்வினையை மட்டுப்படுத்துவதில் இந்தத் தேசங்கள் வெற்றிபெற்று வருகின்றன.

அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை – ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின்  ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த  மூன்றாது  உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை  ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!

அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் „தாம் செய்வது -ஆய்வது“ எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare  ] விருத்திக்கு இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!

இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின்  குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.

ஆனால் ,இவர்களை வழி நடாத்தும் தேசங்களது உயரடுக்குக் குடிகளோ தமக்குள் முரண்பட்ட கூறுகளைக்கழைந்து ஒருமைப்படுவதில் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாசிசத் தலைவன் யுங்கரின் வார்த்தையில்  : „நாம்  ரஷ்யாவுடனா நமது உறவை அமெரிக்கா வின் கட்டளைகளைக்கிணங்கி, எதையும் உடைக்க முடியாது, நாம் ரஷ்யாவுடன் சாதாரண உறவுகளைப் பேண வேண்டும்“ (  Wir dürfen unser Verhältnis zu Russland nicht durch Befehle der USA kaputt machen, wir brauchen normale Beziehungen zu Russland! – EU-Präsident Juncker)என்று அக் கூட்டம் தமது வர்க்க தளத்தைக் கவனமாக அணுகும்போது இதுவரையான பகை முரண்கொண்ட இருசிய -சீன தேசங்களது உயரடுக்கு மக்கட்டொகுதி தமது பரம வைரியாகக்கொண்ட ஐரோப்பிய -அமெரிக்க உயரடுக்கை  பகையாளி வர்க்கமாகக் கருதுவார்களா ; அல்லது எவரை?எம்மைத்தானே -உழைக்கும் நம்மைத்தானே?

பல கோடி உழைக்கும் வலு இல்லாதொழிக்கப்படப்போகிறது. கூட்டுக் கொள்ளையை  ஊக்குவிக்கும் சட்டவாதமானது Corporate identity என்னும் பொருளில் நமக்குப் புரியவைக்கப்படும் ஒவ்வொரு மூலகமும் நமது வாழ்வைப் பறித்துக்கொண்டே  முழுவுலகப் பிரபஞ்சத்தையும் தனக்குள் செரிக்கும் இன்றைய தருணத்தில் தமிழ் மொழிச் சூழல் வசவிலக்கியத்துள்ளும்;சினிமாவுக்குள்ளும் உலகைத் தேடுவதில் முட்டாட்டனத்தின் கடைக்கோடியெல்லையிற் தம் வாழ்வை மற்றவர்கள் தகவமைக்கக் கொடுத்துவிட்டு „கொபற்ற  கொல்லையிற் குப்பை“  கொட்டுவதில் „டாக்டர்கள் ;முனைவர்கள்;கலாநிதிகள்“ எனப் பட்டம் விடுவதில் தன்னிறைவு கொள்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்

10.10.2015

10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காக…

“வடக்கும்,கிழக்கும் “பிரிவதற்குப் புலிகளே காரணம்!

பிள்ளையானுடன் ஞானம்

42 வது இலக்கியச் சந்திப்பு : பிள்ளையான்-கருணா கம்பனியின் பிரச்சாரகப் பீரங்கி ஞானம் தரும் மாகாணசபை குறித்த விளக்கந்தாம் என்ன-ஏன்?

இலங்கை-இந்திய அரச லொபிகாளாலும் ,மேற்குலக என்.ஜீ.ஓ.களது[Non-governmental organization ] தயவில் உயிர்வாழும் தமிழ் விசமிகளாலும் நடாத்தப்பட்ட பேர்ளின் 42 வது இலக்கியச் சந்திப்பு முற்றுமுழுதும் இந்த விசமிகளாலேதாம் நிறைக்கப்பட்டது.இதை ஏலவே புரிந்துகொண்ட பலர் இதைத் தவிர்த்துக்கொண்டனர்.இந்த இலக்கியச் சந்திப்பானது அதை உருவாக்கியவர்களால் நிராகரிப்பட்டு, இறுதியாவிருந்த ஒரு சிலரும் அதைவிட்டு ஒதுங்கும் அரசியலாக இந்த இந்திய-இலங்கை லொபிகளது கை மேலோங்கி வருகிறது.

இன்று,இந்த இலக்கியச் சந்திப்பு முன்னெடுப்பும்;நகர்வும் ஒருவரையொருவர் கேவலமாகப் பழிவாங்கும் அரசியலாக மாறியுள்ளது. புலத்தில் எல்லோருக்கும் தத்தமது அரசியல் நலன் சார்ந்தும்-பொருள் சார்ந்தும்;இருப்புச் சார்ந்தும் ஏதோவொரு குழுக்கட்டல் தேவையாகி,ஒவ்வொருவரும் சிறு சிறு தீவுகளாக இருந்துகொண்டே குழுவோடு ஐக்கியமாகியுள்ளார்கள். இவர்களிடம் ஒருவரையொருவர் தலைவெட்டல் நோய் அதிகரித்துள்ளதற்கான ஆதாரமாக,பேர்ளின் “42வது இலக்கியச் சந்திப்பு” க்குச் சொந்தங்கொண்டாடும் ஜீவமுரளி, நிர்மலா,இராகவன்,ஞானம்,தேவதாசன், போன்றோரது நயவஞ்சக வலைவிரிப்பு நல்லவுதாரணமாகிறது.குழுக்கட்டல் எந்த வகையிலும் பாரிய மாற்றத்தைத் தரப்போவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இத்தகைய தலித்துவ வேடாதாரிகள்-நபர்கள்-குழுக்கள் எப்போது ‘நல்ல’ மனிதர்களாக,முற்போக்காளர்களாக மாறினார்கள்?

இப்போதைய அவர்தம் முன்னெடுப்புகளின் அவர்தம் அரசியல் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.இவர்கள் செய்த காரியத்தால் ஞானம்போன்ற பணத்துக்கு அலையும் வேடதாரிகள் ,கொலைக்காரன் கருணாவோடிணைந்தும்,பிள்ளையானுக்கு ஆலோசகராக மாறியும் தமிழர்களது பாரம்பரிய பூமியை அந்நிய நலன்கள் துண்டாடுவதற்கிசைவாகக் கருத்தியற் பரப்புரையைச் செய்து பிரதேசவாதத்தைக் கிளறி மக்களைக் கூறு போட்டுக்காட்டிக் கொடுத்தார்கள்.இதன் தொடராக மாகாண சபைகள் குறித்தும் அதன் இருப்பு-வளர்வு குறித்தும் வகுப்பெடுப்பதில் ” 42 வது இலக்கியச் சந்திப்பு”, இந்திய லொபிகளது அரங்காக மாறிக்கொண்டது.இந்த, இலக்கியச் சந்திப்புக் குறித்துப் பேசுவதைவிட மாகாணசபை எனும் இந்திய நலனுக்குட்பட்ட சிங்களப் பேரினவாதத்தின் ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் அதன் போக்கை ஏன் ஞானம் போன்றோர் நியாயப்படுத்துகின்றனரெனப் பார்ப்பதுதாம் அவசியமானது.

வடக்குக் கிழக்கு மாகாணங்களும் அதன் வளர்ச்சிக்கும்,செயற்றிறனுக்கும் ,முன்னேற்றத்துக்குமென வகுப்பெடுக்கப்படும் கருத்துக்கள் இலங்கை இனங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டைக்குறித்து ஒரு மொன்னைத் தனமாக விளக்க முற்படுகிறது.

இலங்கைப் பேரினவாத அரசியலது கையாலாகாத்தனம் இலங்கைச் சிறுபான்மை இனங்களை மொட்டையடித்த வரலாறு இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-மற்றும், பொருளாதார நலன்சார்ந்த முரண்மிக்க அரசியல் உரிமைவழி கட்டப்பட்டதெனினும் இனத்துவ அடையாள அரசியலானது அன்றைய காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முழுமொத்த மக்களையும் காலனித்துவத்தின் பின் விளைவுகள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்காகக் கட்டப்பட்டது.இதைச் செய்த பிரித்தானியக் காலனித்துவாதிகள் நமக்குள் இன்றும் தமது சிந்தனைவழி நம்மை கூறுபோடுவதில் நவ காலனித்துவத் தொடராக வெளிப்படுகின்றனர்.ஆனால், அவர்களது முகங்கள் நமது முகத்தோடு மேலெழுவதைக் குறித்துப் பேசியாக வேண்டும்.சந்தர்ப்பம் வரும்போது இது குறித்து விரிவாகப் பேசப்படவேண்டும்.ஏனெனில், ‘வடக்கு ஆதிக்கம்-யாழ்பாணியம்’ எனும் உளவியற் கருத்தாக்களது அரசியலானது அன்றைய காலனித்துவத்தின் வார்ப்புக்குள் உருவாக்கப்பட்ட அரசியலென்பதைக் குறித்து நீண்டவுரையாடலைச் செழுமையான மொழிவழியாகக் குறித்தாக வேண்டும்.

ஸ்ரீமா-சாஸ்த்திரி

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தங்களுக்குள் முக்கியமாகப் பேசப்பட வேண்டியது ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தமே.இதுதாம் “தமிழர்களது உரிமையைத் தமிழர்களை வைத்தே துவசம் செய்ததன் முன்னோடி” ஒப்பந்தம்.

இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்துப்பேசும் ஞானம் அரசியல் அநாதையாக இந்தியப் பிராந்திய நலனை எமக்குள் திணிப்பதில் கருத்தற்றவொரு கோழைத்தன அரசியலைப் பேசுகிறார்.

ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்பதைப் புரிந்துகொள்ள முனையும் ஒரு அரசியல் மாணவனுக்கு இந்தப் பிரச்சனையின்(மலையக மக்களுக்கான குடியுரிமை நீக்கம்)முக்கிய கூறு பார்ப்பனியம் போற்றும் இந்தியத் தேசத்தினது சதியென்பதையும்,அதற்கான காரணம் இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தனது கைகளுக்குள் வைத்திருந்து தமிழரை கருவறுக்கவுமான பிராந்தியப் புவிகோளரசியலின் பிரதிபலிப்பு-அபிலாசை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இலங்கையின் இடதுசாரிகளின் [குறிப்பாக JVP ]வரலாற்றில், அவர்கள் செய்த மாபெரும் துரோகம் மலையமக்களை ‘இந்தியாவின் விஸ்தரிப்புக்கு உழைக்கும் கைக் கூலிகள்’என்று காட்டிக் கொடுத்தது.

அன்றைக்கே மார்க்சியப் பார்வையற்ற இந்த இடதுசாரிகள் சிங்களப் பூர்ஷ்சுவாக்களின் கைகளைப் பலப்படுத்தியதன் விளைவு இன்றைக்கும் சிங்களப் பாசிசத்தைக் காப்பதற்குத் துணைபோனபடி.1949இல் கொண்டுவரப்பட்ட பிராஜவுரிமைச்சட்டம் ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் முழு நிறைவுகண்டது.

இவ்வொப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்கு நடந்தேறிய அரசியல் கூட்டுக்கள்,டட்லி-செல்வா ஒப்பந்தங்கள்,கூட்டரசாங்கத்தில் பங்குகொண்ட தமிழ் அரசியல் வாதிகளின் பதவி ஆசைகள்,அவர்களுக்கு இந்தியா ஆசைகாட்டிய முறைமைகள் யாவுந்தாம் காரணமாகிறது.இதையெல்லாம் மறைத்தபடி எவனொருவனால் மாகாணசபை குறித்து விவாதிக்க முடியும்?அதன் தோல்விக்குப் புலிகள்மட்டுமே காரணமென்றும், மாகாணசபைகளது அபிவிருத்திக்கும் அதன் வாயிலாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துள் பங்குறுவதாலும் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றும், இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் அதன் தெரிவில்-பங்கு பெறுதலில் உரிமைகள் பெறும் வாய்பு அதிகமெனவும் எந்தவொரு மூடனாலும் ஞானம்போல் விவரிக்க முடியாது.

இதிலிருந்த நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இத்தைகய வலையில் பொருட் குவிப்புக்காக ஞானம் போன்ற இளைஞர்கள் பலியாகியதுதாம் நம் காலத்துத் துர்ப்பாக்கிய நிலை!இதுதாம் இந்தியப் பார்ப்பனியத்தின் வெற்றி.அதன்ஆதிக்கமானது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தோடு பின்னப்பட்டது.இதை இந்தியா திணித்த மாகாணசபை மற்றும் அதன் அடித்தளமான ஒப்பந்தங்கள் வரை நாம் அறிய முடியும்.

பொன்னம்பலம்,செல்வநாயகம்,திருச்செல்வம்

1949 இல் கொணரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் 10 இலட்சம் மலையக மக்களை நாடற்றவர்களாக்கியதற்காகவும், பொன்னம்பலம் அதை ஆதரித்தார் என்பதற்காவும் அன்று அக்கட்சியைவிட்டு வெளியேறிய செல்வா, தமிழரசுக்கட்சியை அவரது சகாக்களுடன் அமைத்தபோது உண்மையில் அக்கட்சி மாபெரும் இயக்கமாக மாறியது.ஆனால், அக்கட்சி 1965 ஆம் அண்டில் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததே அங்கேதாம் தவறும்,அரசியல் வெகுளித்தனமும் தொடங்குகிறது.இதுதாம் அந்நிய அரசுகளதும் குறிப்பாக, அமெரிக்க வல்லாதிகத்தின் தெரிவில் லொபிகளாக மாறிய தமிழ் அரசியற்றலைமைகளைக் குறித்துப் புரியும்போது இன்றைய பிள்ளையான்-கருணா கம்பனியின் சேவகர் ஞானத்தையும் அவரது கருத்துக்களையும் நாம் இலகுவாகப் புரிய முடியும்.

அன்றைக்குத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதியாக எம்.திருச்செல்வமும்,தமிழ்க்காங்கிரசு சார்பில் எம்.சிவசிதம்பரமும் சபாநாயகராக இருந்து நமது தலையில் நெருப்பை அள்ளிப்போட்டது உண்மை.இங்கேதாம் ஞானத்தின் எஜமானர்களான கருணா-பிள்ளையான் போன்றவர்களது இந்தியக் கைக்கூலித்தனத்தின் அரசியலையும் ,திருவாளர் ஞானம் அவர்களுக்காகப் பேசும்-பிரச்சாரப்படுத்தும் மாகாண சபைகளது அரசியல் நியாயமும் புட்டுக்கொண்டோடுகிறது!

தமிழ்பேசும் மக்கள் எப்போதும்போலவே நடாற்றில் கிடக்க,இந்தத் தலைமைகள் வழமையாக மக்களைக் குட்டிச் சுவராக்கினார்கள் -தற்போது அதேயேதாம் இத்தகைய ஆயுத மாபியாக்களும் -அராஜகக் குழுக்களும் செய்து வருகின்றனர்.இதை அனுமதித்து, இத்தகைய அரசியலை செய்யத் தூண்டும் இந்தியப் பிராந்திய நலன்சார்ந்த இந்திய அரசினது அரசியல் வியூகமானது சாரம்சத்தில் இலங்கைத் தேசத்தின் இறையாண்மை மீதே தனது அரசியலை முன்னெப்போதுமில்லாத அதீத அழுத்தத்தோடு விரித்து வைத்திருக்கிறது.இதை மறைத்து, இலங்கை மாகாண சபையானது மக்கள் உரிமைபெறும் வழிமுறையென வகுப்பெடுப்பது, இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பிரச்சனையின் தீர்வு இருப்பதென்று வகுப்பெடுப்பதைப் போன்றது.

இங்கே, இனவுணர்வென்பது ஓட்டுக்காகவே தவிர உரிமையை வென்றெடுப்பதற்கானதல்ல.இதுள் பாதிக்கப்படுவது மலையக மக்களாக இருந்தாலென்ன இலங்கைப் பூர்வீகத்தமிழரென்று குறிப்பிடும் மக்களாக இருந்தாலென்ன-எல்லோரும் ஒரு நிலமைக்குள்தாம் அன்று இருந்தார்கள்.மாறி மாறி ஆசிட்சிப்பீடம் ஏறும் அரசுகளோடு இந்தத் தலைமைகள்(தொண்டைமான் உட்பட)கூட்டு வைத்துத் தத்தமது பதவிகளை காத்ததென்பது இந்த அமைப்பில் மிகச் சாதரணமானது.ஏனெனில்,இத்தகைய தலைமைகளில் எவர் மக்கள் நலனில் அக்கறையோடு-மக்களுக்காக அரசியல் செய்கிறார்கள்?வடக்கையும்,கிழக்கையும் பிரித்த அமெரிக்க விருப்புக்குட்பட்ட தெரிவில் அண்மித்திருந்த இந்திய-இலங்கை அரசுகள் வடக்கையும்,கிழக்கையும் உணர்வு ரீதியாகவும்,சட்டரீதியாகவும் பிரிக்க முற்பட்டபோது அதைக் கிழக்குக்கு வசந்தமென வகுப்பெடுத்தும்,கிழக்கில் வடமாகாணத்து மக்கள்மீதான கலவதை;தைத் தூண்டியும்,வடக்கின் ஆதிக்கத்துக்கெதிரான நடவடிக்கை இதுவெனவும் பரப்புரை செய்த ஞானம் போன்றவர்கள் இப்போது புதிய கதை விடுகிறார்கள்.

வடக்கும்,கிழக்கும் பிரிவதற்குப் புலிகளே காரணமெனவும்,அன்றை வடக்குக் கிழக்கு மாகாணசபை இயங்கியிருந்தால் இது சாத்தியமின்றிப் போயிருக்குமென விளக்கும் அரசியலானது, இந்திய விஸ்த்தரிப்பை இயங்க அனுமதித்திருப்பது குறித்து பேசுகிறது.இந்தியாவின் பிராந்திய நலனுக்காக இலங்கைப் பேரினவாதத்தால் நசுக்கப்படும் ஒரு இனம் தனது ஐதீக உரிமையைக்கூட விட்டுவிட வேண்டுமென்கிறார் ஞானம்.மிகப் பெரும் அரசியல் பிழைப்பு வாதியாக மாறிய ஞானம், மிக ஆபத்தான அராஜகக் குழுவின் பிரச்சாரப் பீரங்கியாகவிருந்து நடந்து முடிந்த “42 வது இலக்கியச் சந்திப்பில் ” இதையே தொடர்கிறார்.தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்தியப் பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!இதற்காக நமக்குள் சாதியப் பிளவுகளையும்,பிரதேச வாதத்தையும் கூர்மைப்படுத்திச் செயற்கைய மக்களைப் பிளந்து அவர்களது உரிமைகளுக்கு வேட்டு வைப்பதிலிருந்து தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக்குழுக்களும், கழகங்களும்,தனி மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் நியாயமான வடக்குக் கிழக்குப் பாரம்பரிய நிலப்பரப்பையும் அதன்வழியான சுயநிர்ணய வாதத்தையும் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.

இதற்கு இந்த தலித்துவக் காரர்களும்,இலக்கியப் பசப்பாளர்களும்,எக்ஸ்சில் ஞானம்போன்ற அதி சதிகார இயக்க அராஜகவாதக்கூட்டணியும் என்று, எல்லோருமே பொறுப்பாளர்கள்.இவர்களை வரலாறு என்றைக்குமே மன்னிக்காது!ஒருபக்கம் புலிப்பாசிசமும் மறுபக்கம், இந்த அந்நிய நலனது கூஜாத் தூக்கிகளுமாக இலங்கைப் பாசிச அரசின் காலடியில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை வீழ வைத்து அடிமையாக்கினர்.

dalit_Front_Franceஇவர்கள் பேசும் தலித்துவம்கூடப் பிழைப்புவாதம் என்பதற்கு இவர்கள்பேசும் மாகாணசபையை உருவாக்கத் துணை புரிந்த இந்தியாவின் தலித்துகளின் நிலைமையே சாட்யானது!இங்கு திருமாவளவன் வகையறாக்களது அரசியலது விருத்தியே இலங்கையிலும் ஒரு மொன்னைத் தனமான தலித்துவக் குழுக்கள் இந்தியப் பிராந்திய நலனின் பொருட்டு உருவாக்கப்பட்டார்கள்.

இன்றைய இந்தியாவில் 237 மில்லியன்கள் மக்கள் நடுத்தெருவில் காலம் தள்ள-தீண்டத்தகாதவர்களாக இருத்திவைக்கப்பட்டுச் சுரண்டப்படும்போதும்,அந்த மக்களைக் காவு கொள்ளும் அரசியலானது அரசியல்வாதிகளைக் கோடிஸ்வரர்களாக்கியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகிறது? ஏனிந்த மக்களுக்கு வாழ்வாதாரவுரிமை இந்தியாவில் கிடையாது? இந்தியக் குடியுரிமை இருந்துவிட்டால் சகலதும் சரியாகிவிடுமா?அல்லது, கூட்டாக’ஜன கண மண்ணாங்கட்டி…’பாடினால் இந்தியர்களாகிவிட முடியுமா?

மனிதர்களைக் கூறுபோட்டுக் கொல்லும் ஒரு சாதி அரசியலுக்கும்,அந்த அரசியலால் எழுந்த சட்ட நிர்ணயங்களுக்கும் இவற்றால் பாதுகாக்கப்படும் இந்திய பொருளாதாரத்துக்கும் எந்த மக்கள் நலனும் கிடையாது.

இதை இலங்கை அரசியலுக்குள்ளும் பொருத்திப் பார்க்குமிடத்தில் ‘துரோகம்’குறித்த குழப்பம் நீங்கி,மக்கள் நலனோடு முன்னெடுக்கும் அரசியல்-அமைப்புகள் விருத்தியாகும் அவசியம் புலப்படும்.

இதைவிட்டு யாழ்ப்பாணத்தான் துரோகமென்ற மொன்னைத்தனமான விவாதம் உருப்புடியாக எதையுஞ் செய்யாது.மாறாக,இன்னும் காழப்புணர்வைக் கொட்டி இந்திய இலங்கை அரசுகளுக்குச் சேவை செய்வதில் உச்சம் பெறும்.

வடக்கு ஆதிக்கம் என்பதன் சமூக உளவியலுக்குள் கட்டி வளர்க்கப்படும் இந்திய-பார்ப்பனிய அரசியல் ஆதிக்கமானது இலங்கைப் பேரினவாதவொடுக்குமுறைக்கு மறைமுகமாகத் துணை போவதென்பதிலிருந்து இந்திய ஆளும் வர்க்க நலனை இலங்கையில் அடைய முனைவாதாகப் பார்க்கப்பட வேண்டும். அதுள், ஞானம் போன்றவர்களது ஏஜமானர்களான கருணா-பிள்ளையான் கம்பனியானது அவர்களது சட்டபூர்வ அடியாட்கள் மட்டுமல்ல மாறாக, இலங்கை மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் எதிர்ப் புரட்சிகரச் சக்திகளென்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி
24.05.2014

பிதிர்க் கடன்!

முள்ளி வாய்க்காற்

குருதி வரண்ட பின்பும்
வெட்டிச் சாய்த்த கனவுகளுக்குத்
தடுதாட்கொண்ட சனியோ
மெல்லத் துரத்தும் எல்லை வைத்து.
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்-பிதிர்க் கடன் பாக்கியுண்டு!

தொப்புள்க் கொடித் தொந்தரவு;
சிங்களத்துச் சோதரர்;பாரத மாதாக் கடாட்சம்;
உருவமிழந்த சில நட்பு வெளிகள்
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில் நாம்!

முகமிழந்த காலங்களைக்
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு
மூச்சு முட்டும் நாயோட்டம்
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும் உளைச்சல்

கோலமிட்ட முற்றும்
கொடு நிலவு முறித்த இரவு
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்
காலங்கள் தொலையக் காத்திருந்த
திருவெம்பாவை கடந்த பொங்கல்
இப்போது பிதிர்க் கடன்!

அன்றும்
இப்படி எல்லாம் தொலைத்து;
எல்லாம் தொலைய
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி!

காணாத மனிதரைக் கண்டு
கட்டிய வழி உறவென்றெண்ணி
காணிக்கைகேட்டு
கட்டிய புடவைக்கு மாற்றெடுத்தோம்

எச்சில் இலையாய்
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு
தெருக்களில் எடுத்த பிச்சை
குத்தியது கள்ளத் தோணியென்று!

நட இப்படி
கிட அப்படி
எடு இப்படி
எல்லா ஏவல்களும்
முகத்தில் எழுதும் இரவல் நாடென-இலங்கையிற் கூடாவா?

பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைய
மொட்டெறிந்த மனிதக் கூடு
குருதியில் தாழ்ந்து அமுங்கியது-இதன் பிதிர்க் கடன்?

இத்தனைக்கும் பிறகு
ஏய்ப்பதற்கொரு புலிப் பூச்சாண்டி
ஊர் நிறைத்த சிங்களத்து ஆதிக்கம்
பிதிர்க் கடன் பாக்கி வைத்த தீர்வுப் பொதி,
கோத்தபாய தீர்க்கும் சண்டித்தனம்!

கோடாலிக் காம்பாய்Sri Rangan Vijayaratnams Foto
குடிகளைக் கெடுத்த இயக்க வாதம்
கோதாரி மாபியாக் கூட்டம்
அன்னையத் துயில் கலைக்க வைத்துக்
கூத்தடிக்கும் ஒட்டுக் குழுக்கள்
பிள்ளையான் கருணா பு….டை ஆண்டிகள்

உலகை ஏமாத்தும்
உயிர் பிரிந்த தேசியத் தலை
ஊரைச் சுத்தும் அவரது உதவாக்கரைகள்
தேசத்தைச் சொல்லி
சேர்த்த மூட்டைகள் பிரித்து
வானொலி,தொலைக்காட்சி நிறுவல்கள் கொண்ட
வர்த்தகத்தின் தொடராய்
மகிந்தாதம் பாதந் தாங்கும்!

பணத்தை இலக்கு வைத்து
பாடைகள் காவும் ஒரு கூட்டம்
பல்லை இளித்துக்
குதறம் இன்னொரு வம்புப் படை
வாய் கிழியும்
வரம்பிட்ட வெருட்டல்கள்!;
மாத்தையாமார்களது மடிகளுக்குள் மல்லிகளது கைகாட்டல்கள்

இப்படியாகத்
தேசமே தொலைந்த பொழுதில்
தோணீயேறிய அந்தக் கணத்தில்
தொலைந்தது அனைத்தும்
துப்பிக்கொண்ட வெற்றிலைச் சாற்றைப் போல்!
என்ற போதும்,
பிதிர்க் கடனுக்காய்
தலைவிரித்துக் கண்ணீர் சிந்துவாள் தமிழச்சி!

Sri Rangan Vijayaratnams Foto

>Asyl இந்த வார்த்தை…

>அகதி!

கதி என்றே தெளிவாக-உரமாகப் பிரகடனப்படுத்து!!இதிலிருந்துதாம் மற்றெல்லாவுரிமைகளும் வென்றெடுத்தாகவேண்டும்.உலகத்தின் திமிர்த்தனமான யுத்தங்கள் தினமும் பல நூறு மக்களைக் கொன்றும்,பல்லாயிரம் மக்களை அகதியாக்கியும் வருகிறது.

எனினும் மக்கள் உயிர்வாழப் போராடியும்,கண்டம் தாண்டிக் கையில் பிடித்தவுயிருடன் அகதி நாமம் தேடிக் கொள்வதும்,துரத்தப்படுவதும் நிகழ்கிறது.

அகதியால் அகதிகளின் கதைகள் தொகுப்பதும்,அதன் வாயிலாக மானுடவுரிமையென்பதைக் கேவலமாக்கும் பாரிய தொழிற்கழகங்கள், சட்டம்,நிர்வாகம்,அரசுகள்-அமைப்புகள் பற்றித் தெரிந்திருப்பதும்,அநுபவமாக்கிப் போராடக் கற்பதும் நமக்கு அவசியமானது.

நாமே நமது விலங்கொடிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை!

எதற்காக நான் அகதியானேன்?

இது கேள்வி மட்டுமல்ல!-தேசத்தின் இருப்பையும் அதன் தன்மானத்தையும் பேசுவது.

இந்தச் சூழலை மறுதலித்துவிட்டு எனது ஜேர்மனியப் பிராஜாவுரிமையோடு என்னைக் கழுவிக் கொள்வதில் நாட்டமில்லை.நம்மில் பலர் தம்மை அகதிகள் என்பதைக் கேட்கச் சகிக்க மாட்டார்கள்.

என்றபோதும் பத்துத் தலைமுறை தாண்டினாலும் நானும் எனது தலைமுறைகளும் அகதியே!-இது பிரகடனம்.

தேசம் தொலைத்தவனின் வயிறு எரியும் மனப் போராட்டம்.தான் வளர்ந்து மண்ணளைந்த பூமியைப் பார்க்க முடியாது தவிக்கும் வாழ் சூழல் இந்தவுலகத்தின் அனைத்து ஒடுக்கு முறையிலும் மிகக் கொடியது.இந்தவுணர்வைத் தேசத்தில் உழையாது,பிறர் பணத்தில் உண்டு ,ஏப்பமிட்டுத் தனக்கு பக்கத்தில் உடல் உழைப்பை நல்கும் மனிதர்களைச் சாதி சொல்லித் திட்டும் ஏப்பத்தால் உணரமுடியாது.-இது ஒரு தேச அவமானம்.தேசம்!…

உயிர் வாழும் வலையம்:

மனித அவலம் தொடர்கிறது.

பல்லாயிரம் மக்கள் இடம்பெயரப் பூமியின் பெரும் பகுதி அகதிகளின் பெருக்கத்தைக் காண்கிறது.

இன்றைய மதிப்பின் படி புவிப்பரப்பெங்கணும் 370 கோடிகள் மக்கள் அகதியாகியுள்ளார்கள்.

இந்தப் பெரும் மனித அவலமானது மனிதவுயிர்வாழும் சூழலுக்கானவொரு போராட்டமாக வெடித்துக்கொண்டிருக்கிறது.இந்தப்போரில் நம்மிடம் நவீனச் சுடு கருவிகளோ அல்லது தாங்கிகளோ,ஆட்லெறிகளோ கிடையாது.அல்லது நம்மிடம் மதமோ இல்லை எந்த மொழிவாரி,இனவாரிக் கோசங்களோ கிடையாது.மாறாக நம்மை உயிர் வாழ-உழைத்துண்ண விடு,என்ற தார்மீகக் கோசமே ஆயுதமாக இருக்கிறது.இதைக் கண்டு அஞ்சும் நிலை ஆளும் வர்கங்களின் விழிகள் முன் வருகிறது.வாழும் சூழல் இல்லாதாகும்போது மனிதர்கள் வாழக்கூடிய சூழலை நோக்கி இடம் பெயர்வது சாத்தியமே!

இது உலகத்தில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்தே தொடங்கி விட்டது.வலுவுள்ளது மட்டும் வாழுமென்பது உயிரியலுக்கும் அன்றையச் சமூகவாழ்வுக்கும் பொருந்தட்டும்.ஆனால் இன்றைய நவீன மனிதர்களுக்கு இது பொருந்தத் தேவையில்லை.

நாம் இன்று பின் நவீனத்து சமூகக் கட்டமைப்புக்குள் வாழ்கிறோம்.இன்றைய சமூகப் பொருளாதார உற்பத்தித் திறனாது மனிதர்களின் எந்த நிலையானவர்களுக்கும்(ஊனம்,பலமற்றவர்கள்…)சமூகக் காப்புறுதியையும் தீவனத்தையும் உயிர் வாழும் தகுதியையும் கொடுக்க முடியும்.இதுதாம் இன்றைய பின்தேசிய அடையாளமாக(postnationalen Identitaet) விரியும் உற்பத்தித் திறன்மிக்க இனங்களுக்குள் முகிழ்க்கும் பொதுவறித் தளமாக விரிகிறது.

இதை எமது முன்னோர்களின் அறிவே நிலை நாட்ட உதவுகிறது.சதா தன்னைச்(சுய சோதனைக்குள் தம்மை ஈடுபடுத்திய விஞ்ஞானிகள்) சிதைத்து கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலறிவு குறிப்பிட்டவொரு இனத்துக்கோ அல்லது தேசத்துக்கோ-தொழிற்கழகத்துக்கோ சொந்தமில்லை.இது முழுமொத்த மனித இனத்துக்கும் பொதுவான சொத்து.இங்கே மானுடம் உயிர்வாழப் போராடும் இழி நிலை.

வாழும் இருப்பிடம்,கிராமம்,நகரம்;-பயிர் விளையும் மண் நாசமாகிறது!-நஞ்சாகிறது.நீர் நிலைய+ற்றுக்குள் வற்றி வரண்டுபோகிறது.நதி நீர் நஞ்சாக்கப்படுகிறது.இங்கே மீளவும் கனிவளங்களை வேட்டையாடிக் கொள்ள மேற்குலகத் தொழிற்கழகங்கள் யுத்தம் நடாத்தக் குண்டுகள் வெடிக்கின்றன.வாழும் வலையம்(Lebensraum)சிதைக்கப்படுகிறது.இதற்கு நல்லதொரு உதாரணம் நர்மதா அணைக்கட்டு விவகாரம்.இதுகுறித்துப் பேசும்போது, நாம் நமக்கு அருகினில் பிரச்சனையிருப்பதை இன்னும் அதிகமாகவே உணர்கிறோம்.

யாருக்காக
யார் வாழும் இடங்களைப்
பறிகொடுப்பது?

„Laenger als ein halbes jahrhundert haben wir geglaubt,dass die grossen Staudaemme die Bewohner Indien von Hunger und Armut befreien wuerden.Das Gegenteil ist eingetreten.“-(Arundhati Roy,indische Schriftstellerin)

„இந்தியக் குடிமக்களின் பசியையும்,பட்டுணியையும் நர்மதா அணைக்கட்டு போக்கிவடுமென அரை நூற்றாண்டுக்கு மேலாக நம்பிக்கொண்டோம்.ஆனால் நடந்ததென்னவோ எதிர் நிலைதாம்.“என்கிறார் அருந்ததி ரோய்.

மனிவுரிமைச் சங்கத்தின் 2000 ஜுனிக்கான(ஜுனி என்பதை ஜுன் என்று வாசிக்கவும்,ஜேர்மனிய மொழிப் பயன்பாட்டின் வெளிப்பாடது.) மனிதவுரிமைக்கான கோரிக்கையின் அறிவுப்பு நர்மதா மனித அவலத்தை மேத்கா பட்டர் மூலம் அறிவிக்கிறது.அது பொருளாதாரத்தின்மீதே கோரிக்கைகளை முன்வைத்துச் செல்கிறது.(ISBN 3-89290-044-2 என்ற சர்வதேச நூற்சுட்டியின் மூலம் இவ் நூலைப் பெறமுடியும்.)

1.5 மில்லியன் மக்கள் குஜராத்,மகாரிட்ஷ்ரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அகதிகளாகப்பட்டு வருகிறார்கள்.இவர்கள் தமது வாழ்விடங்களைப் பறி கொடுப்பதும்,அகதிகளாக உருப்பெறுவதும் பாரிய தொழிற்சாலைகளின் மின்சாரத் தேவைக்காவேதாம்.1993 ஆம் ஆண்டளவில் நர்மதா அணைக்கட்டுக்கு உலக வங்கி உதவி வழங்கி மக்களை அகதிகளாகத் திட்டம் தீட்டியது!அது தனது வாலைச் சுருட்டிப்பதுங்கும் நிலைக்கு மக்கள் நலக் குழுக்களின் தீவிரமான போராட்டம் காரணமானது.எனினும் 2000 க்குப் பிறகு அதே உலக வங்கி 450 மில்லியனகள்; டொலர் நிதி உதவியை வழங்கி மீளவும் தனது வலுக்கரத்தை இந்த அப்பாவி மக்கள்மீது வைத்து,அவர்களை அகதிகளாகி அநாதையாக்கிறது.இது நர்மதாவின் கதை.

ஒரிசா மாநிலத்தில் 1993 இலிருந்து ஆதிவாசி மக்கள் துரத்தியடிக்கப்பட்டும்,கொல்லப்பட்டும் அவர்களது நிலங்கள்-வாழும் வலையங்கள் பல் தேசியக் கம்பனிகளின் கால்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்படுகிறது.இந்தியாவிலேயே ஒரிசா மாநிலமானது மிகவும் தனிச் சிறப்பான தாதுப் பொருட்கள் நிரம்பிய-கனிவளமிக்க மாநிலமாகும்.இந்த மாநிலத்தை அந்நியத் தொழிற்கழகங்கள் வேட்டையாட ஆதிவாசி மக்கள் தமது வாழ்வைப் பறிகொடுப்பதில்போய் முடிகிறது.பாலங்கள்,கட்டுமானங்கள்,தொழில் முன்னெடுப்பு என்று, பல்வகைக் காரணங்களால் இவ் மாநிலம் மக்கள் வாழும் உரிமையைப் பறிக்கிறது.உட்கால் அலுமெனியம் (Utkal Alumina) எனும் பாரிய தரகு முதலாளிய நிறுவனம் ஒரிசாவை அந்நியக் கம்பனிகளான நோர்வே நாட்டு நோஸ்க் கைட்ரோ(Norsk Hydro)மற்றும் கனேடிய அல்கான் அலுமெனியம்(Alcan Aluminium) தொழிற்கழகங்களோடு சேர்ந்து ஒரிசாவின் தாதுப் பொருட்களைத் திருடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய அலுமெனியம்(INDAL Ltd.)உதவி வழங்கிக் கொழுத்து வருகிறது! லார்சன் அன்ட் ரூப்புரோ(Larsen &Toubro)என்ற மாபெரும் தொழிற்சாலை இந்தியாவின் மிகப் பெரும் ஜந்திரத் தொழிற்சாலை.இது அந்நியக் கம்பனிகளின் கூட்டுக்கொள்ளை நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள்தாம் போராடும் மக்களை அரச மற்றும் தனியார் படைகளை வைத்துக் கொல்கிறது.அப்பாவி மக்களின் வாழ்விடங்களைப் பலாத்தகாரமாகப் பறிக்கிறது.இந்திய மத்திய அரசோ அந்நியக் கம்பனிகளால் நிர்வாகிக்கப்பட்டு மக்கள் நல அரசியலைப் பறி கொடுத்து அந்நியக் கம்பனிகளின் தயவில் வாழ்கிறது.இதை ராபி மிஸ்ரா போன்றோரின் கைதுக்கும்,விடுதலைக்குப் பின்பும் அவர்களே ஒப்புக்கொண்டு கருத்துக் கூறினார்கள்.தாம் கைது செய்யப்பட்டது தனியார் படையின் மூலமாகவும்,அது உட்கால் அலுமெனியத்தின் அடியாட்படையென்பதாகவும்.(Persecuted for challenging injustice,Human rights defenders in India.)

இதைப்போன்றோதாம் இன்று ஆசிய, ஆபிரிக்க,மத்திய ஆசிய மற்றும் பாரசீக வளைகுடாவெங்கும் மக்கள் வாழும் வலையங்களைப் பறி கொடுத்து, அகதிகளாக்கப்படுகிறார்கள்.

உலக வர்த்தகக் கழகத்தின்(;(WTO)சேட்டில் மாநாட்டில் மனிவுரிமைச் சங்கம் வாய்கிழியக்கத்திய“Multinationale Investoren haben die Verpflichtung zum Schutz der Menschenrechte,unabhaengig davon, in welchem Lande sie taetig werden“ சுலோகத்தை இவர்கள் மதிப்பதுமில்லை,காப்பதும் இல்லை!

„எந்த நாட்டில் பல்தேசிய நிதியீட்டாளர்கள் இயங்கினாலும் மனிவுரிமையைச் சுதந்திரமாகக் காத்து இயங்குவது அவர்களது கடமை“என்பதெல்லாம் நீரில் எழுதப்பட்ட எழுத்துக்களாகும்.

கடந்த 45 ஆண்டுகளாக நடைபெறும் சூடானிய யுத்தத்தால் 2.5 மில்லியன்கள் மக்கள் கொல்லப்பட்டு,5 மில்லியன்கள் மக்கள் உள் நாட்டில் அகதியாகியும் அந்நியத் தொழில் நிறுவனங்களின் எண்ணை வேட்டை தொடர்கிறது.மக்கள் வாழ்விடங்களைப் பறிகொடுத்து அகதியாக அல்லல்படும் இழி நிலை! ஒரு மில்லியன் மக்களுக்கு மேலாக மேற்குலகத்துக்குள் அநாதைகளாக நுழைந்துள்ளார்கள்.செல்வம்(கனிவளம்) கொழிக்கும் நிலத்தின் மக்கள் அதை அநுபவிக்க முடியாது,அநாதைகளாகி-அகதியாகி…

1956 ஆம் ஆண்டளவில் சூடானில் யுத்தம் வெடித்தது.இது உள்நாட்டு யுத்தமாகவே வர்ணிக்கப்பட்டது.ஆனால் அதன் கதை கனிவளங்களை-எண்ணையை மையப்படுத்தியே போர் ஆரம்பமாகியது.

அங்கு கேட்கப்பட்ட கேள்வியானது:

„யார் எண்ணையை-அந்த ஊற்றை சொந்தமாக வைத்திருப்பது,எவர் அதனால் இலாபம் அடைவது“என்பதே!

அந்நியக் கம்பனிகளின் கனிவளச் சுரண்டலால்,அவர்களுக்காக நடாத்தப்படும் யுத்தத்தால் சுடுகாடாக மாறிப்போனது சூடான்!

இங்கே சூடான்மட்டுமல்ல சமீப ஆவ்கானிஸ்த்தான் முதல் ஈராக்வரை இது தொடர்கதை!

எனவே „அகதி“ என்பது சர்வதேச அரசியல் முரண்பாட்டின் அதியுச்ச அரசியற் கோசமாகிறது.இது நமக்குக் கடந்த கால் நூற்றாண்டாகப் புதுப்புது அர்த்தங்களைச் சுட்டிக் கொள்கிறது!

(2)

„ASYLUM“-Asyl , இந்த வார்த்தைகள் உலகத்தில் பிரபலமான அளவுக்கு மற்றெந்த வார்த்தைகளும் பிரபலமடைந்திருக்க முடியாது!அவ்வளவுக்கு மனிதர்களின் இடப்பெயர்வு நிகழ்ந்து வருகிறது.இன்றிந்தக் கோணத்தில் இடப்பெயர்வு நிகழுந் தறுவாயில்,இத்தகைய இடப் பெயர்வுக்குக் காரணமான ஐரோப்பிய-அமெரிக்க அரசுகள் தமது எல்லைகளை இறுக மூடிவைத்துவிட்டு,அசூல் எனும் வார்த்தைக்குப் புதுப்புது அர்தங்களை அள்ளி வழங்குகிறார்கள்.அகதி எனும் கோசம் „அரசியல் கோரிக்கையாக-உயிர்வாழ்வை காத்து,எம்மை வாழவிடு“என்ற மிக வலுவான மனிதாபிமானக் கோரிக்கையாக,மனிதவாழ்வின் அடிப்படையுரிமையாக விரிந்து செல்லும்போது,இத்தகைய நாடுகள் அதை மிகக் கேவலமாகத் தமது மக்களுக்குப் பரப்புரை செய்கிறது.

„Schein Asylanten.“பொய் அகதிகள் என்று ஜேர்மனிய ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இந்த மனித அடிப்படையுரிமையைக் கேலிக்குள்ளாக்குகின்றனர்.இவர்களே தமது தேவைக்காகவும்,வசதிக்காகவும் உலக யுத்தங்களை நடாத்தியபோது,இவர்களுக்கு இந்த அரசியல் சட்டவுரிமைக் கோரிக்கை அவசியமானதாக இருக்கிறது.இவர்கள் தமது நாடுகளை மீளக்கட்டியமைக்கும் தேவைக்காக தமக்குள் உடன்பாட்டுடன்-சமாதானத்துடன் மற்றைய கண்டங்களிலுள்ள நாடுகளை யுத்தத்தால்-கொடும் சுரண்டலால் அழிக்கும்போது,உயிர்ப்பலியெடுக்கும்போது,யுத்தத்துக்குள் சிக்கி உயிர்காக்கப் புலம்பெயரும் மக்கள் வெறும் பொய் அகதியாகி விடுகிறார்கள்,இந்த ஐரோப்பியத் திமிருக்கு.

27.08.06 இல் கரீபியன் தீவுகளில் கால்பதிக்க முனைந்த ஆபிரிக்க அகதிகள் கடலில் படகு கவிழ நீரில் மூழ்கிப் பலியானார்கள்.இதுள் பல பத்துப் பேர்கள் பலியானதை மேற்குலக ஊடகங்கள் செய்தியாக அறிவித்தன.இந்தப் படகுப் பயணமானது ஐரோப்பாவை நோக்கி வாழ்சூழல் பாதிப்படைந்த ஆபிரிக்கக் கண்ட மக்களால் தினமும் நடாத்தப்படுகிறது.தமக்குமுன் போன பல படகுகள் கவிழ்ந்ததையறிந்தும் இந்தப் பயங்கரமான கடற் பயணம் தொடர்கிறது.எனினும் ஐரோப்பா தனது கதவுகளை இறுக மூடிக்கொண்டு மனிதாபிமானம் பேசுகிறது.மொரோக்கோவுக்கும் இஸ்பெயினுக்குமான „போடர்“புலம்பெயரும் மக்களுக்கு மூடப்பட்டபின்,ஆபிரிக்க மக்கள் இத்தகைய விபத்துகளில் தினமும் பலியாகி வருகிறார்கள்.இந்தாண்டுக்குள்-இதுவரை அண்ணளவாக15.000.அகதிகள் இப்படி வந்து,மரணித்தும், அடித்தும் விரட்டப்பட்டுமுள்ளார்கள்!மொரோக்கோவுக்கு வரும் கருப்பின அகதிகளை மொரோக்கோ இஸ்பெயினுக்குள் நுழையவிடாது அடித்து விரட்டுவதற்காக ஐரோப்பிய ய+னியனானது பல மில்லியன்கள் யுரோவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.இது ஏலவே பேர்ளின் போடரை மூடுவதற்கு அன்றைய கிழக்கு ஜேர்மனிக்கு மேற்கு ஜேர்மனி வழங்கிய தொகையைவிட அதிகமானதென அகதிகளைப் பராமரிக்கும் பொது அமைப்புக்;(Wohlfahrtspflege fuer Fluechtlinge e.v) கூறுகிறது.

இன்றைக்கு இந்த ஐரோப்பா தனது தொழிற்சாலைகளை நல்லபடியாக இயக்கிப் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது.அதற்கான மூலப் பொருள்களை 90வீதம் ப+ர்த்தி செய்யும் கண்டம் ஆபிரிக்கக்கண்டமே.இந்த நிலையில் இவர்களே அகதிப் பெருக்கத்துக்கான மூலகாரணமாக இருந்தும்,தம்மால் இயற்றப்பட்ட அரசியல் தஞ்சக் கோரிக்கைச் சட்டங்களை மதிப்பதில்லை.அந்தச் சட்டம் தமக்குத் தேவையென்றால் மட்டுமே நடைமுறைக்கு உகந்ததாகக் கணிக்கும் மேற்குலகம்,அதை மதிப்பதில் இரட்டைவேஷம் போடுகிறது.

இத்தகைய சட்டங்களை எதற்காக ஐ.நா.முன்மொழிந்து வரைந்தது?அதன் உள்நோக்கம் எதுவாக இருந்தது?

முன்னாள் நாசிய ஜேர்மனி 20ஆம் நுற்றாண்டுகளில் இரண்டு உலகயுத்தங்களில் சுமார் 80 மில்லியன்கள் அப்பாவி மக்களை வேட்டையாடியது.இந்த ஈனத்தனத்திற்குப் பின் ஐரோப்பிய மனிதவுரிமை ஆணையகம் மற்றும் ஜெனிவா அகதிகள் ஆணையகமும் சில வரைவுகளை -ஒப்பந்தங்களை செய்துள்ளார்கள்இஇந்த வரைவுகள் ‚சட்டத்தின் முன் சகலரும் சமனம்’என்றபடி எதையுரைத்ததோ அஃது இவ்வைரோப்பியரசுகளால் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.

அரசியல் தஞ்ச உரிமை சட்மாக்கப்பட்ட வரலாறானது 1946 இல் ஆரம்பமாகிறது,ஐ.நா.சபையின்
பொதுக்கூட்டம் சர்வதேச அகதிகள் கழகத்தை மேற்கூறிய ஆண்டில் ஆரம்பித்தது. இக்கழகமானது முதலில் நான்கு வருடங்களும் அதன்பின் மீள இரண்டாண்டுகளும் தொடர்ந்தியங்கியது,ஆரம்பத்தின் நோக்கம் உலகயுத்தத்திற்குப் பின்பான சமூகப்பிரச்சனையை
ஓரளவு தீர்க்கக்கூடியமாதிரி இது இலக்கு வைத்து மீள் குடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றங்களை யும் அதுசார்ந்த தேவைகளுக்காக இயங்கிக் கொண்டது.

எனினும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் யுத்தத்தை இரண்டாவது உலக யுத்தத்தோடு நிறுத்தி விடவில்லை,மாறாகத் தனது குருதிதோய்ந்த வலுக்கரத்தை உலகம் பூராகவும் விரிகத் தொடங்கியது.இதன் போக்கால் இந்த அகதிகள் பிரச்சனை ஒரு தொடர் இயக்கமாக இயங்கிக்கொள்ள ஐ.நா.சபை அகதிகளுக்கான உயர் ஸ்தானிக சபையை உருவாக்கிச் சட்ட வரைவைச் செய்தது.

பொதுவான மனிதவுரிமை விளக்கப்படி 10.12.1948ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட சட்டம்:Art.14 Abs 1″Jeder Mensch hat das Recht, in anderen Laendern verfolgungen Asyl zu suchen und zu genießen.“(வேறொரு நாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்கும்,அதை அனுபவிப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.) இந்த அழகான வார்த்தை ஜாலம் அதை குடிசார் சட்டவாக்கத்திற்குள் அடக்காது நாடுகளினது கடமையாக -அவர்களே அதை நிறைவேற்றும்படி அரசியல் யாப்புச் சட்டத்தில் அடக்கியதன் விளைவு இப்போது ஒவ்வொரு நாடுகளும் தாம் நினைத்தபடி தார்ப்பார் காட்டிக்கொள்கிறது.

இந்தத் தவறைச் சரிக்கட்ட 1951ஆம் ஆண்டு யூலாய் 28 பிரேரிக்கப்பட்டு 22.04.1954 இல் அமூலுக்கு வந்த ‚அகதிகளுக்கான சட்ட அமூலாக்க ஒப்பந்தம்‘ ஜெனீவா ஒப்பந்தமாக அறியப்படுகிறது.இதுவே அரசியல் தஞ்சம் கோருபவரின் காரணத்தைக் குறித்து இந்திந்தக்காரணம் மட்டுமே அரசியல் தஞ்சம் கோர உரித்துடையதென வகுத்து வைத்துள்ளது.

இதன்பிரகாரம் ஒரு தனிநபர் தனது மதஇஇனஇபிரைஜாவுரிமை இவைகளின் பொருட்டு அல்லது தனது அரசியல்இசமூகக் காரணிகளால் பாதிக்கும்போது வேறு நாட்டிற்குள் சென்று புகலிடம் கோர உரித்துடையவராகிறார்.

ஆனால் இன்று நடப்பதோ அனைத்தும் தலைகீழ்! 29.08.2006 செவ்வாய்க் கிழமை, கிழக்கு ஜேர்மன் மாநிலமான சக்ஷன் மாநிலத்தின் உள்துறை மந்திரி போட்டலா கூறுகிறார்:“இணைந்து வாழ்வதென்பதற்குப்பதில் வதிவிடவுரிமையற்ற வெளிநாட்டார்களைப் பிடித்து அவர்களது தாய் நாட்டுக்கு அனுப்புவதுதாம் சரி.அதைவிட்டு இணைந்து வாழ்தல்,கலந்து வாழ்தல் என்றபடி சட்டங்கள் இயற்றுவது தப்பு.குடும்பமாக இருப்பவர்களுக்கு,அவர்களது குழந்தைகளுக்குப் பாடசாலை செல்ல ஒழுங்கு செய்து கொடுப்பது நல்லது“என்று சக்ஷன் மாநிலத் தினசரி ஒன்றுக்குப் பேட்டியளிக்கிறார்(Volkszeitung vom 29.08.2006).


எனது மகன் ஒரு பேப்பர் கட்டிங்கோடு பதறியடித்து வந்தான்.அவனது வகுப்பு மாணவனின் பெற்றோர்கள் அந்தப் பத்திரிகை நறுக்கை இவனிடம் கொடுத்து,“இதை தமிழ் இணையங்களில் பிரசுரிக்கவும்“என்று.அவர்கள் ஜேர்மனியப் பெற்றோர்.மிகவும் பொறுப்பானவொரு காரியத்தை செய்திருந்தார்கள்.

அந்தப் பத்திரிகையில் இருந்த வாசகம்:

Abschiebung:Tamile fuerchtet um sein leben.

Vimalathas Kurunathpillai hat Angst.“Ich weiss nicht, was passieren wird,wenn ich aus dem Flugzeug in Clombo steige.“sagt der junge Mann.(Wuppertaler Zeitug)

நாடுகடத்தல்:தனது உயிருக்கு ஆபத்தென்று தமிழர் அச்சம்.விமலதாஸ் குருநாதபிள்ளைக்கு அச்சம்.“ நான் விமானித்திலிருந்து இறங்கிக் கொழும்பில் கால்வைக்கும்போது,எனக்கு என்ன நடக்குமென்றே புரியவில்லை.“இந்த இஞைர் இங்ஙனம் கூறுகிறார்.

விமலாதாஸ்(வயது 23) வூப்பெற்றாலில் இருப்பவர்.1997 இல் ஜேர்மனிக்குள் கால் வைக்கும்போது 14 வயது.இந்த நகரத்தில் அவரது சகோதரர்,சகோதரி இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாது சட்டம் சதிராடுகிறது.இப்போது இவர் பொதுத் திருச்சபை நிறுவனம் ஒன்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்.

(3)

இனவாதமும்;,இணைவின்மையும்:

தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும்,பட்டுணியும்,மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள்,வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் ப+ர்வீகக் குடிகளோடு கலந்தும்,இணைந்தும் வாழமுடிவதில்லை.

இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் ப+ர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் ப+ர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.

இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(…Durch Kategorisierugen…z.B.“die Auslaender“,“die Schein Asylanten“…usw..)“ வெளிநாட்டார்கள்“பொய் அகதிகள்“என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;(„passiver“Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு(„aktiver“Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.

இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.

இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் „பொது ஐரோப்பியச் சட்டம்;“(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.

உதாரணமாக இன்றைய நோர்த்தன் வெஸற்;பாலின் மாநிலத்து(Nordrhein-Westfalen)முதல்வர் திரு.யுர்கன் றுட்கார் கடந்த 2001 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சாத்வீக இனவாதக் கோசத்தை முன்வைத்துப் பிரசாரம் செய்தார்.“.“Kinder statt Inder“(இந்தியர்களுக்குப் பதில் குழந்தைகள்)எனும் தேர்தல் கோசம் பட்டி தொட்டியெல்லாம் ஒட்டப்பட்டன.இது ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் இந்தியக் கணினி மென்பொருள் வல்லுனர்களை எதிர்த்து முன்வைக்கப்பட்ட கோசமாகும்.இந்தியர்களுக்குப்பதிலாக „நமது குழந்தைகளை-அதுவும் நீல விழிகளும் பொன்னிறத் தலைமுடியும் கொண்ட வெள்ளைக் குழந்தைகளை இப்போதே படிக்க வைத்துத் தயார்படுத்து“ என்பதே அதன் பொருளாக இருந்தது.இதன் பின்பு ஜேர்மனிய நாசியக் கட்சிகள் யாவும் இத்தகைய வெளிநாட்டார்-அகதிகள் எதிர்ப்பை மிகவும் வலுவாகச் சட்டப+ர்வமாக முன்னெடுத்தார்கள்.

ஏலவே பற்பல படுகொலைகளைச் செய்திருந்த இனவாதிகளுக்கு இத்தகைய ஓட்டுக்கட்சிகளின் அடவாடித்தனம் மிகவும் பயனுள்ள செயலாகத் தெம்ப+ட்டியது.(நாங்கள் தமிழ்பேசும் மக்கள்.இலங்கையின் இனவாத அரசியலிலும்,அதன் இனவாதக் கருத்தியலிலும் அநுபவம் பெற்றவர்கள்.எமக்குள்ளும் மாற்று இனங்கள் குறித்த இந்த சாத்வீக இனவாத்தின் ஆதிக்கம்-அநுபவம் இருப்பதை உணரவேண்டும்.இதுவேதாம் செயலூக்க இனவாதிகளை யுத்தத்தில் உருண்டு பிரண்டு கிடக்கத் தூண்டுவதையும் நாம் மறக்கப்படாது.)இவர்கள் அகதிகளுக்கு-வெளிநாட்டார்களுக்கெதிரான தாக்குதல்களைத் தொடுத்துத் தினமும் மனிதர்களைக் காயப்படுத்தியும்,கொன்றும்,அகதிகளின் வதிவிடங்களைத் தீ மூட்டியும் அகம் மகிழ்கின்றார்கள்.

கடந்த 26.05.1993 ஆம் ஆண்டு அகதிகளுக்கான சட்டம்(Art.16 des Grundrecht auf Asyl)ஆர்ட்டிக்கல் 16 ஐ மாற்றிய மூன்றே நாளில் 29.05.1993 ஆம் ஆண்டு ஜேர்மனியின் இரும்பு நகரான சோலிங்கனில்(29.Mai 1993 wurden in Solingen fuenf tuerkische Frauen ermordet.) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து துருக்கியப் பெண்மணிகள் நித்திரைப்பாயில் அவர்களின் வீடெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.அடுத்த சில மாதங்களில் இன்னும் இரண்டு குழந்தைகள் மோல்ன்(;(Moelln)எனும் கிராமத்தில் தீ மூட்டிக் கொல்லப்பட்டார்கள்.இத்துடன் இத்தகைய அகதிகள்-வெளிநாட்டார்கள் வெறுப்புத் தணியவில்லை.அது தொடர்ந்து, நாளும் பொழுதும் பெரும் தீயாய் பரவி அகதிகளை அடித்துக் கொல்கிறது-மரணப்படுக்கையில் கிடத்துகிறது.கிழக்கு ஜேர்மனியில் நாளொன்றுக்கு இருவராவது நாசிகளால்-சாமானிய ஜேர்மனியர்களால் உடற் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

மிகச்சமீபத்தில்,16.04.2006 அன்று கிழக்கு ஜேர்மன் சக்ஷன் மாநிலத்தின் தலைநகரமான பொட்ஸ்டாமில்(;(Potsdam)இஒரு நைஜீரிய அகதிப் பொறியியலாளர் அடித்துக் கோமாவில் கிடத்தப்பட்டார்.இத்தாக்குதல் குறித்து நாடு தழுவியவரையில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பேர்ளினிலிருந்து தினமும் அகதிகள் தாக்கப்படுவதை“முதலாம் தேதியிலிருந்து முப்பத்யோராம் தேதிவரையும்“ ஆவணமாகத் தொகுத்தது „Konkret“எனும் இடதுசாரியச் சஞ்சிகை.இவற்றுக்கு ஜேர்மனியப் பொலிசாரே உடந்தையாக இருப்பதையும் அது அம்பலப்படுத்தியது.இங்ஙனம் நிர்வாகத்துறையிலும்,அமைப்பு நெறியாண்மைக்குள்ளும் இடையாக இந்த“சாத்வீக இனவாதக் கட்டமைப்பு வேரோடியுள்ளது((Besondere Aufmerksamkeit werden wir auf rassistische Strukturen innerhalb des Verwaltung-und Organisationapparates…z.B. wie Sri Lanka/Tamil Eelam.).

இவையெல்லாம் இந்தப் பொருளாதாரத்தின் மறுபக்கச் செயற்பாடாக விரிகிறது.அகதிகள்மீதான ஐரோப்பிய இனவெறியாளர்களின் தாக்குதலைப்பட்டியல் போடுவதற்கு ஒரு ஆயுள் போதாது.தினமும் ஒருவராவது ஒரு நகரத்தில் உடல்ரீதியாகத் தாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது,ஜேர்மனியில்.

இந்த நிலையில் யுத்தங்களால் மக்கள் புலம் பெயர்ந்து அகதியாகும் கீழ்வரும் அறிக்கையைப் பார்த்தால் உலகம்ப+ராக மக்கள் அகதியாகி மடிந்துவிடுவார்களோவென அஞ்சவேண்டியுள்ளது.உலகத்தில் நடைபெறும் அனைத்து நாசகார யுத்தங்களும்,உயிர் கொல்லி ஆயுதத் தளபாடங்களும், நிதி மூலதனமும்,பாரிய தொழிற்சாலைகளும் மனிதர்களை அகதியாக்கி வரும் இந்த அட்டவணை மிகவும் அச்சமூட்டுகிறது.

„2003 ஐக்கியநாட்டுச் சனத்தெகை பற்றி அறிக்கை ஒன்றில் ,உலகத்தில் 17.5 கோடிகள் மக்கள் தத்தமது நாட்டுக்கு வெளியில் வாழ்வதாகக் கூறியுள்ளது. 10 பேர்களுக்கு ஒருவர் சொந்த நாட்டடை விட்டு வெளியேறுகின்றார். முன்னேறிய நாட்டை நோக்கிப் பன்தங்கிய நாட்டைச் சேர்ந்த 23 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் புலம் பெயர்கின்றனர். 1975க்குப் பின் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து வெளியேறியவர்களின் புலம் பெயர்வு இரண்டு மடங்காகியுள்ளது.

இந்த புலம் பெயர்வு வட அமெரிக்காவி;ல் 5 கோடியும், ஐரோப்பாவில் 4.1 கோடியும், ருஷ்சியாவில் 5 கோடியமாகும். முன்னேறிய நாடுகளில் ஒவ்வொரு 70 பேருக்கு ஒருவர் வெளிநாட்டவராகியுள்ளனர். 1995-2000 இடையிலான 5 வருடத்தில் 1.2 கோடி பேர்கள் முன்னேறிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மொத்தம் 23 இலட்சத்தால் அதிகரிக்கும் வெளி நாட்டவாகளில் 18 சதவீதம் பிறப்பினால் உருவாகின்றது. மொத்தில் வட அமெரிக்கா 14 இலட்சமும,; ஐரோப்பாவில் 8 இலட்சமுமாக அதிகாரிக்கின்றது. மொத்தில் 9 வீதம் பேர்கள் அகதி அந்தஸ்தைப் பெறுகின்றனர்.

வருடந்தம் 2000 முதல் 2050 வரையான காலத்தில் வெளிநாட்டவரின் புலம் பெயர்வு சராசரியாக:

அமெரிக்காவை நோக்கி 11 லட்சம்
ஜேர்மனி 2.11 லட்சம்
கனடா 1.73
இங்கிலாந்து 1.36
அவுஸ்ரேலியா 0.83

வருடாந்தம் அகதிகளின் புலம் பெயர்வு இலட்சத்தில்:

சீனா 3.03
மெக்சிக்கோ 2.67
இந்தியா 2.22
பிலிப்பைன்ஸ் 1.84
இந்தோநேசியா 1.8
– (புள்ளி விபரக்குறிப்புக்கு நன்றி:தமிழரங்கம்)“

மேற்காணும் இந்தப்பட்டியல் சொந்த நாடுகளில் அகதிகளானவர்களின் பட்டியலை இணைக்கவில்லை.இன்றைய நிலவரப்படி வெளிநாடுகளிலும்,சொந்த நாடுகளிலுமாக „உலக மக்கள் தொகையில் 50வீதமானவர்கள“; அகதிகளாக வாழ்கிறார்கள்-வதைபடுகிறார்கள்.

(4)

நாடுகளும்,யுத்தமும்- உதவியும்.

லெபானானுக்கான நிதி வழங்கும் கூட்டம் இன்று இஸ்ரொக்கோல்ம் சுவீடனில் நடைபெறுகிறது.அறுபது அரசுகளும்,அமைப்புகளும் பங்குபெறும் இக்கூட்டத்தில் ஜேர்மனி 22மில்லியன்கள் யுரோவை லெபனானுக்கு உதவுவதாக உறுதிகூறியிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமாக 500.மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்குவதாகச் செய்தியொன்று கூறுகிறது.

இன்று ஈரானுக்கான காலக்கெடு முடிவுக்கு வருகிறது.

அணு குண்டைத் தயாரிப்பதற்கான“Uran-235(யுரேனியம-;235, வெடிப்புச்சக்தி பிளப்பு மூலமானது!(Explosionsenergie aus der spaltug von Uran -235 oder Plutonium-239)இதனாலான குண்டு கீரோசீமாவின் மீது கொட்டப்பட்டுப் பரிசோதித்த அமெரிக்கா ஓப்பன்கைமர்,சினைடர்(goldene Liste) பயங்கரவாதிகளால் உலக அணுவல்லரசானது.)Plutonium- 239(இந்த மூலகத்தால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு நாகசாகிமீது விழுந்து வெடித்தது.இதையும் அமெரிக்கா பரீசீலித்துக் கொண்டது.கீராசீமாவில் யுரேனியம-;235 ம்,நாகசாகியில் புளுட்டோனியம்-239 ம் குண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.)போன்றதைப் பெற்று அணுக்குண்டைத் தயாரித்துவிட ஈரான் முயல்கிறது.

இதைத் தடுத்துவிட உலக வல்லரசுகள் முயல்கின்றன.(1939 இல் கோதாரி பிடித்த நீல் போரும்,ஜோன் ஆர்ச்சிபெல் வீலரும் அணுப்பிளப்புத் தியரியை விளங்க முற்படும்போது,ஓப்பன்கைமரும் அவனது கூட்டாளிகளும் அணுக்குண்டைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையில் அமெரிக்க அரசோடு முனைந்தான்.கீரோசீமாவிலும்,நாகசாகியிலும் பல்லாயிரம் மக்களைக் கொன்று பரிசீலிக்கப்பட்ட அணுக் குண்டுகளால் வேதனையடைந்த திரு.வீலர் சொல்கிறார்:“நான் அதை மீளத் திரும்பிப் பார்ப்பேனானால்-அதாவது நானும் போரும் இணைந்து உருவாக்கிய அணுப்பிளப்புத் தரவுகளை-எனக்குள் நான் கவலை கொள்கிறேன்.“ஓப்பன் கைமர் கூறுகிறான்:“யுத்தம் செய்யும் உலகுக்கு அணுக்குண்டு புதிய ஆயுதமாக ஆயுதக்கிடங்குக்குள் இருக்கும்,அல்லது ஆயுதக்கிடங்கிலிருந்து நாடுகள் யுத்தத்துக்குத் தயாராவார்கள்,அப்போது லோஸ் அலாமோஸ் எனம் பெயரும் கீரோசீமாவின் சபிப்பும் மனித கணங்களுக்குள் வரும்.“-லோஸ் அலோமாஸ் விஞ்ஞானிகள் சந்திப்பின்(16.10.1945) உரை.)

ஈரானிய ஜனாதிபதி அமாடினெட்ஷா கூறுகிறார்:“நாங்கள் எங்கள் வரலாற்றுத் தேவையை தவிர்க்க முடியாது.நாம் அணுத் தேவையை யாருக்காகவும் தவிர்ப்பதற்கில்லை.“

அமெரிக்கப் பயங்கரவாதி புஷ் உடனடியாக பதறியடித்துக் கத்துறான்:“நாங்கள் ஈரான் அணுக்குண்டு தயாரிப்பதை அநுமதிக்க முடியாது.“

நல்லது!

லெபனானுக்கு 500 மில்லியன்கள்,
ஈரானுக்குப் பொருளாதாரத்தடை?

சமீபகாலத்தில் சதாமின் ஈராக்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத் தண்டனை ஐந்து இலட்சம் பாலகர்களைப் பாடையில் அனுப்பியது.வைத்தியர்களின் விழிகள்முன்னே நோய்க்கிருமி தாக்கிய பாலகர்கள் சிறிது சிறிதாகச் செத்து மடிந்தார்கள்.இக் குழந்தைகளுக்கு „அன்ரிபாற்றிக்“(எதிர்ப்பு நுண்கிருமி)கொடுப்பதற்கு ஒரு துளியும் ஈராக்கில் இருக்கவில்லை.

தலை சுற்றுகிறது.

ஈரான் எவ்வளவு குழந்தைகளை இழக்கும்?

இன்றைய ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளையும் யுத்தச் சம நிலைகளையும் அணுவால் சம நிலைப்படுத்த முனைகின்றன.உலகிலுள்ள மனிதர்கள்தம் நலன்களை மையப்படுத்திய எந்த நோக்கு நிலையும் நிதி மூலதனத்துக்கும் அதன் இலாபத்துக்கும் கிடையாது.அங்கே யுத்தங்களே மனிதர்களைக் கொல்வதற்கான கருவியாகப் பயன்படுகின்றன.இவை முற்றுமுழுதாகப் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையான தேவையாக இருக்கிறது.

லெபனானைக் அடித்து நொருக்கிறது அமெரிக்காவின் அடியாள்.பின்பு அதே அமெரிக்கக் கூட்டு அபிவிருத்தியுதவியாகச் செயற்பட முனைகிறது.

எதற்காக இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்?

இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாறியது எதற்காக?

எல்லாம் கனிவளத்தின் „பாதுகாப்பு-எடுத்தல்-சொந்தமாக்கிக்கொள்ளல்-தடங்கலற்ற கடற்பாதை.“என்று மூலப்பொருள்களுக்கான தொடர் வினைகளே இவ்யுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது.இங்கே லெபனானுக்குள் வந்திறங்கவிருக்கும் தத்தமது இராணுவத்துக்கான செலவுகளுக்கே இவ் உதவி வழங்கப்படுகிறது.ஆனால் பெயரென்னவோ மீள்கட்டுமானத்துக்கான உதவி.இந்த உதவியை லெபனான் வட்டியுடன் கட்டியாகவேண்டும்.அதாவது ஐ.நா.துருப்புகளின் செலவுக்கு ஒரு நாடு கடன்படுகிறது.

ஜேர்மனி சொல்கிறது.:“Die Bundesregierung stelt 22 millionen Euro fuer den wiederaufbau des Lebanon.das Geld solle fuer die Verbesserung von Grenzkontrollen und den wiederaufbau der wasser vorsorgug eingestzt werden.-N.TV Nachrichten.““ஜேர்மனிய அரசு 22மில்லியன்கள் யுரோவை லெபனானின் மீள்கட்டுமானப்பணிக்காக இடுகிறது.இப்பணத்தை லெபனானின் எல்லைப் புறங்களை சிறப்பாகக் கண்காணிப்பதற்கும் குடிநீர் விநியோக மீள் கட்டுமானத்துக்கும் பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.“

ஆதிக்கவாதிகள் தமது நலன்களை மெல்ல இத்தகைய வார்த்தைகளுக்கூடாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.லெபனானின் கடல் குடா 250 கி.மீ.தூரம்.இது மத்திய கடலுக்குள் இருக்கிறது.இதைக் கண்காணிக்கும் பொறுப்பு ஜேர்மனியக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.உலகத்தில் அதி நிவீன நீர்மூழ்கிக் கப்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 600 மில்லியன்கள் யுரோவுக்கு உருவாக்கிய நாடு ஜேர்மனி.இப்போது புரிகிறதா?எவரிடம் எதைக் கொடுக்கவேண்டுமென அமெரிக்க மாமாக்களுக்குப் புரிந்தே இருக்கு!“G3,MP5,HK21″(Heckler&Koch) இவைகளின் தாய் நாடல்லவா!இவர்கள்தாம் பணத்தைத் தமது கடற்படையின் செலவுக்கு வழங்கிவிட்டு,அதையே வட்டியுடன் அறவிடப் போகிறார்கள்.நல்ல வியாபாரம்.

மக்கள் தொடர்ந்து யுத்தங்களால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரப்போகும் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தாக்குதல்-யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொள்ளப் போகிறது.கூடவே பல இலட்சம் மக்கள் அகதியாகி உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமாக அவதிப்படப் போகிறார்கள்.

அண்மைய எண்ணைக்கான யுத்தமும்,போர்த்துக்கீசிய கொலனித்துவச் சுரண்டல் போரும் அங்கோலா((Angola)என்ற எண்ணை மற்றும் வைரம் நிறைந்த நாட்டைச் சுடுகாடாக்கியுள்ளது.1992-1994 இருவருடமாக நடந்த யுத்தில்மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.சிறார் இராணுவம்,மிதிவெடிப்பலி,அகதிகள்,அவநம்பிக்கை,மற்றும் எல்லா வகைச் சமூக விரோதங்களும் மலிந்த இந்த அங்கோலாவில் ஒருவர்கூட யுத்தத்தைத் தவிர வேறெதையும் வித்தியாசமாக அநுபவிக்கவில்லை.இது போர்த்துக்கீசிய கொலித்துவத்தின் முடிவுவரைத் தொடர்ந்தது.இப்போதும் அந்த நாட்டுக்கு இதே கதைதாம்.

இங்கு நடந்த யுத்தங்களெல்லாம்(1961 இல் காலனித்துவ வாதிகளுக்கு எதிரான யுத்தமும் சேர்க்கப்பட வேண்டும்.ஏனெனில் பல் வகை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றி அவை தமக்குள் அடிபட்டுக் கொண்டதும் வெளி நாடுகளுக்காகவே- அங்கோலா மக்களுக்கான விடுதலைக்கல்ல.) எண்ணைக் கச்சாப் பொருளான மசகு எண்ணைக்கும்,வைரத்துக்குமானதாகும்.

எவரொருவர் யுத்தத்தின் கொடுமையை உணரவேண்டுமானால் அங்கோலாவைப் பார்க்கவேண்டும்!

வீதியல் செல்லும்போது ஒவ்வொரு நான்காவது மனிதரும் ஒற்றைக்காலுடன் அல்லது கையுடன் நடப்பதைப் பார்க்கலாம்.குண்டு துளைக்காத சுவர்களோ கிடையாது.இப்படி முழுமொத்தத் தேசமும் மதிவெடிகளால் விதைக்கப்பட்டு,மனித நடமாட்டத்துக்கு உதவாத மண்ணாக அங்கோலா மாற்றப்பட்டுவிட்டுது.

இது யாரால்?

இதே ஐரோப்பிய தொழிற்சாலைகளால்!

90களில் அமெரிக்க உளவுப்படையானது அங்கோலாவின் எதிர் புரட்சிப்படைகளுக்குப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிப் போலிச் சோஷலிச இராணுவத்துக்கெதிராகப் போராட வைத்தது.MPLA-அரசு எதிர்த்துப்போராடி அனைத்தையும் அடக்க முடியவில்லை.இறுதியாக ஐ.நா.வின் கூற்றுப்படி மூன்றாவது யுத்தத்துக்குக் காரணமானது யுனிற்ரா.எல்லாமாக அங்கோலா தனது மக்களை அகதியாகக் கண்டது.

இதுவரை இருபது இலட்சம் அகதிகள் உலகம் ப+ராகவும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.நாடு மதி வெடிகளால் நிரம்பி வழிகிறது.சிறார்களின் கைகளில் பழைய குண்டுகள் விளையாட்டுப் பொருளாகக்கிடக்கிறது.தனிமையில் சற்று நடந்தால் மிதிவெடி வெடித்து மக்களைப் பலிகொள்கிறது.உள்நாட்டில் பல இலட்சம் மக்கள் அகதியாகிப் பட்டுணியுடன் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துக்கும் அந்நிய ஆர்வங்களின் யுத்தமே காரணமாகிறது.

கொங்கோ:

அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக்குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள்.ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா,என்று கூறுபோட்டு ஆளுகின்றன.பெயருக்கு ஒரு கபிலா கொங்கோ ஜனாதிபதி.கண்துடைப்புத் தேர்தல்,ஐ.நா.துருப்புகள்…என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! கேக்கைப் பங்கிட்டதுபோன்று ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.

இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி…பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.

அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!

„…Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun.“-bedrohte Voelker.seite:15.

„கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்.“அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.

அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள்.உதாரணத்துக்கு: பெம்பாசின்;“Mouvement de la Libe´ration du Congo“ போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும்,சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.

இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.

கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.

யுரேனியம்,

தங்கம்,

வைரம்,

கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.

பெற்றோலுக்கான மசகு எண்ணை.

கடந்த ஜுலை மாதம் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி…

ப.வி.ஸ்ரீரங்கன்

09.2006

(மீள்பதிவு)

%d Bloggern gefällt das: