எது பயங்கரவாதம்?

எது பயங்கரவாதம்?

அதிகாரம் என்பது வியூகமாகுமா?

உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ,வர்க்கப்போரும், இன்று மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் இந்த வேளையில் அதிகாரத்தையும் -ஆதிக்கத்தையும் தக்க வைத்தலே மேலானவொன்றாக அமெரிக்க -ஐரோப்பியப் பாசிச அரசுகளுக்கு மாறியுள்ளது.அதன் நோக்கமானது ஒரு தேசத்தை அடியோடு சாய்ப்பதற்கு -ஆட்சிமாற்றத்தை செய்வதற்கு போரிட்டும் ;மக்களை  அச்சப்படுத்திக் கொன்று குவித்தும்; இடம் பெயர வைத்தும்  நிலை நாட்ட முடியுடிமென்பதற்கு சிரியா நல்லதொரு உதாரணமாகப் போகின்றது.இதன் மூலம் ஒரு இனத்தின் தேசிய -வரலாற்று அடையாளங்களைக் கூட அழித்து ஆதிக்கத்தை நிலைப்படுத்தி விடுவதில் ஈராக் மீதான அழிவு யுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து நடாத்தியபடி சிரியாவில் அதன் உச்ச இலக்கை எட்ட முனைகிறது.இதற்காக இத்தேசத்தைப் பயங்கரவாதிகளது கூடராமாக்கி விட்டுள்ளது.இந்தப் பயங்கரவாதிகளேதாம் வொசிங்டனின் வெள்ளை மாளிகைக்குள் நவீனத் தலைவர்களாகவும் அரபு நாடுகளில் ISIS பயங்கரவாதிகளாகவும் மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.

ஆனால் ,பரந்துபட்ட மக்களுக்கு இந்த அதிகாரத்தைத் தோற்கடித்தல் என்பது முன்நிபந்தனைச் சிந்தனை,அரசியல் நடைமுறைப் பயிற்சியில். அதிகாரத்தைக் குறித்துச் சர்வதேச அளவில் பேசும்போது,அது நீண்டவொரு கருத்தாளுகையைக்கொண்டவொரு தளத்துக்கு நம்மை நகர்த்திச் செல்வதாகும்.இன்று,நாம் மூன்றாவது உலக மகா யுத்தத்தின் அழிவைச் சந்திக்க இருக்கிறோம்.

அமெரிக்க-ஐரோப்பிய அதிகாரத்தின் மையவலு அழிப்பு யுத்தத்தின் வெற்றிவரை அவர்களை அழைத்துச் செல்வதை ஈராக்-அவ்கான்-லிபிய மற்றும் சிரியா -உக்கிரைன் யுத்தங்கள்வரை உணர்ந்துகொண்டோம்.இந்த அதிகாரமானது முழுக்கமுழுக்கப் பொருளாதரத்தைச் சுற்றிய இலாபவேட்கை-தொடர் மூலவளக் கொள்ளையென அதன் அத்துமீறிய தளங்களிலான ஆதிக்கமானது வளர்ந்த தொழில்நுட்பப் போரர் தளவாடங்களின் வருகையோடு உலக மக்களைக் கணிசமாகக் கொன்று நிலைப்படுத்தி ,விரிவாக்கப்படுகிற இன்றைய தருணத்தில்தாம் உலகத்துள் 60 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உலகெங்கும் அலைகிறோம்.

இத்தகக் கேடுகெட்ட பாசிச ஆதிக்கவாதிகளது தேவைகள் என்னத்தைத்தாம் நடக்கு விட்டு வைக்கும்?

,Ein Tropfen Öl ist uns einen Tropfen Blut wert“  [ எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும் ] -அமெரிக்காவில் இருந்து ,1918 இல் பிரஞ்சுப் பிரதமர் Clemenceau   ஒரு உரையாற்றலில் கூறிய மிகப் பிரபல்யமான சொற்றொடர், இஃது.

எண்ணை கிடைக்காத பட்சத்தில் இராணுவ போர் ஜந்திரம் நின்றநிலையில் நிற்கவேண்டியதுதாம், வியாட்நாமில் அமரிக்கத் தோல்விக்கும் இந்த எரிபொருள் சக்தியும் ஒரு காரணமென்பதை நவீன போரியல் வல்லுனர்கள் இன்றும் கூறுகிறார்கள்.முதலாம்,இரண்டாம் உலகப்போர்கள் எண்ணை வளத்தை பெருமளவில் கணக்கிலெடுத்தே ஆரம்பிக்கப்பட்டது.எண்ணை விலை,எண்ணை வள கட்டுப்பாடு யாவும் உலகை வெற்றிகொள்ளல் மூலம் தம்மால் கையகப்படுத்தமுடியுமென ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கருதியது,முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்பு அமெரிக்கா எண்ணை வளத்திற்காக [ „Oil is much too important a commodity to be left in the hands of the Arabs.“ –Henry Kissinger ] பேய்போல் அலைந்து  துரகிழக்கு – அண்மைக் கிழக்கு நாடுகளை தினமும் வேட்டையாடி வந்தது;இன்றும் ஈராக் , அவ்கானித்தான், இலிபியா, சிரியா, உக்கிரைன் என்று நேட்டோ பயங்கரவாதக் கூட்டணியூடாகப் பாசிசப் போரை அப்பாவி மக்கள்மீது  அமெரிக்க -ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் கட்டவிழ்த்து விடுகிறது.

இஃது சமகால -நிகழ்கால வரலாற்றைக் கடந்து , நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினத்தும் வாழ்வாக நம் முன் அச்சத்தைத் தருகிறது..

11 செப்ரெம்பருக்குப் பின்னோ பற்பல அரசியற் கருத்தியற் வியூகங்கள்  உலகரங்குக்கு வந்தன..அமெரிக்க| ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் இதன் படைப்பாளிகள்.இவர்கள் ஈராக், அவ்கானித்தான், இலிபியா, சிரியா, உக்கிரைன் என்று பல் தேசங்களை அழித்தபடி இருசியாவோடு அணுயுத்தம் நடாத்தக் கருத்துக் கட்டுவதில் தமது அனைத்து வளங்களையுமின்று பயன்படுத்துகின்றனர். இதுவே தற்போதைய நிகழ்ச்சி நிரலாகவுங் கூட இருக்கின்றது.

‚இது பயங்கரவாதத்திற்கு எதிரானபோர்[ The War on Terror and  „Global War on Terrorism“ ]!, இஸ்லாமுக்கெதிரானதோ அன்றி ஒரு இனத்திற்கெதிரானதோ அல்ல.‘ ஒரு கையில் உயிர் கொல்லி ஆயுதம் மறு கையில் உணவுப்பொட்டலமும் கூடவே பைபிள் சார்ந்த அரசியற் தத்துவ விளக்கமும்,மேல்நிலை வல்லரசு அமெரிக்காவிடம் அதன் நேட்டோக் கூட்டணிப் பயங்கரவாத அரசுகளிடம் இருக்க, நமது அப்பாவிகளோ முளைத்து மூன்றிலை விடுவதற்குள் அமெரிக்காவுக்கான அடியாளாகப் போவதில் நாட்டமாகின்றனர்.இந்த அமெரிக்காவனது உலகத்துள் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தித்தித் தனது காட்டுமிராண்டித் தனத்தைத் தொடர்ந்து நியாயப் படுத்திவிடுகிறது.இதற்காக எவரையும் – எந்தக் குஞ்சு குருமானையும் அது தனக்கேற்பத் தயார் செய்து ஒவ்வொரு துறைகளுக்குள் தொடாந்து நுழைத்து விடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள 13 வயதுத் தமிழ்ச் சிறுவனின் பெயரில் வந்த இந்த நாவலும் ( Flug-747) தற்போது சாட்சி!

“ Amir Hassan ist kein gewöhnlicher Terrorist.Er kennt sich mit nuklearen Waffen aus.Die ganze Welt fürchtet sich davor,was passieren könnte,wenn Atomwaffen in die Hände von Terroristen geraten.““ Flug-747 By Sagithjan Surendra

“ Wenn Sie jetzt für die hundert Menschen Amir Hassan freilassen,wird er raus kommen und Tausende töten! “ – Flug-747

“ Im Kampf gegen Terrorismus haben wir schon oft gewonnen.Aber gegen unsere eigenen Leuten verlieren wir jedes Mal.“ – Flug-747

உலக ஆளும் வர்க்கம் தனது வர்க்க தோழமையுடன் கூட்டாகப்போரிடும் இன்றைய சூழலில்,எப்படியெல்லாம் கருத்துக்களை முன்தயார்படுத்தி அவர்தம் ஊதுகுழல்கள் மூலம் நமக்குள் கொட்டுகின்றார்கள்!

இன்றைக்கு அமெரிக்க அரசை முதலாவது „அதிவல்லரசு“ என்றால் இரண்டாவது அதிவல்லரசு இருசியவோ அன்றிச் சீனாவோ அல்ல என்கின்றார் சுவிச்சர்லாந்து வரலாற்றுப் பேராசிரியர் டானியல் கன்செர் ( Prof.Dr. Daniele Ganser).மாறாகப் பொது அபிப்பிராயத்தைக் கட்டுப்படுத்தி உருவாக்குபவர்களே இராண்டாவது பெரிய வல்லாதிக்கம் என்பது அவரது கருத்து.இது சரியானது.மார்க்சு கருத்தியற் போராட்டங் குறித்து மிக விரிவாகவும் அதன் பலத்தையும் நமக்குச் சரியாகவே சொல்லிச் சென்றதால் இது ஆச்சரியமில்லை!

இந்த அளவுகோலுக்குட்பட்டு அமெரிக்க – ஐரோப்பியர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் அழிந்தால்-அழிவுக்குள் நேர்ந்தால் இந்த அழகிய „மனிதாபிமானம் „உலக அரங்குக்குள் வரும்.இதுவே அவ்கானிஸ்தானில் மானுடம் அழிந்தாலென்ன ,ஈராக்கில்அழிந்தாலென்ன? இவையெல்லாம் யுத்த அளவுகோலாம்! இந்நாடுகளில் மரணிக்கும் மானுடர்களுக்கு மௌன அஞ்சலியை இந்த ஐரோப்பிய நாடுகள்,அவர் -தம்தொழிற்சாலைகள்-கல்விக் கூடங்கள்-மதாலயங்கள்-பாராளுமன்றங்கள் செய்யவே செய்யா.ஆனால் Charlie Hebdo மீது தாக்குதல் தொடக்கப்பட்டால் உடனே உலகைக் கூட்டி „Je Suis Charle“ எனக் கத்தும் உலகப் பயங்கரவாத நேட்டோ அணியானதுதாம் ஈராக்கில் ஐந்து இலட்சம் குழந்தைகளைப் பொருளாதாரத் தடையாற் கொன்றழித்தவர்கள்; இப்போது ஈரானிலிருந்து இருசியாவுக்குத் தமது பொருளாதாரத் தடைகள் மூலம் மனிதாபிமானத்தை வகுப்பெடுக்கின்றனர்.

ஆனால்‘ 11 செப்ரெம்பர் ‚ என்பது கலாச்சாரமட்டத்தில் கருத்துக்களாக்கப்பட்டுள்ளது,அகராதியில் சொற் களஞ்சியமாக்கப்பட்டுள்ளது.இந்த‘ பதினொன்று‘ மனித குலத்துக்கு விரோதமான பயங்கரவாதிகளின் தாக்குதல்,சமாதானமாக வாழும் சுதந்திரத் திறந்த சமூகத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தாக்குதல் எனும் விளக்கமும் வேறு.இதைச் செவ்வனவே மேலே சொன்ன நாவல் அருமையாக நகர்த்துகிறது!

அமெரிக்காவில் நெறிகட்டினால் ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவில்கூட நோவு வந்துவிடுகிறது. புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களது குழந்தைகளையே விட்டுவைக்காது அவர்களையும் ;அவர்களது திறமைகளையும் கணக்கிலெடுத்து அமெரிக்கப் புலானாய்வுத் துறை தன் தேவைக் கேற்ப அவர்களையும் தயார்ப்படுத்துகிறது.இந்நிலையில் , உயிரிழப்புகள் எங்கு நேரிடினும் நாம் நொந்துகொள்வோம்.அதுவே மானுடப் பண்பு.’யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ எம் மூதோர் கூறியதும் இஃதே!

ஆனால் மானுடநேயம் மட்டுமல்ல இந்தப்பூமிப்பந்தின்மீதுள்ளனைத்து விடயங்களுமே வர்க்கம் சார்ந்தது.இதனால் ஆளும்வர்க்கம் தனது வலியை எமதாக்க முனைகிறது,இதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. தனது சுமையை எமக்குள் அமுக்கி மூலதன நெருக்கடியை உலக மொத்தமக்களுக்குமான நெருக்கடியாக்கி வெற்றியும் கண்டுவிட்டன இந்த உலக ஆளும் வர்க்கப்பேய்கள்.இதனாற்றாம் கீழ்வரும் நாவலின் கருத்தை CIA இன் குரல் என்கிறோம்.

(“ Amir Hassan ist kein gewöhnlicher Terrorist.Er kennt sich mit nuklearen Waffen aus.Die ganze Welt fürchtet sich davor,was passieren könnte,wenn Atomwaffen in die Hände von Terroristen geraten.““ Flug-747 By Sagithjan Surendra)

இது எப்படிச்சாத்தியமாச்சு? ,இந்த ‚உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்‘ எனும் அரசியற் கருத்தாக்க உளவியலுக்கும் இந்தத் தமிழ்ச் சிறுவனுக்கும்  என்ன தொடர்பு?, இது சார்ந்து மேற்கொள்ளப்படும் செயற்தந்திர வியூகத்திற்கும் போருக்கும் என்ன தொடர்பு?சிரியாவில் தொடர்ந்து நடாத்தப்படும் பயங்கரவாதக் கூட்டணிகளது தாக்குதலுக்கும் உக்கிரைனில் நெறிகட்டும் நேட்டோவின் இராணுவ முஸ்த்தீப்புக்கும் (Military exercise/War game )என்ன தொடர்பு???

‚யுத்தத்தினது நோக்கை அரசியற் கோரிக்கைக்குள்ளும் அரசியற்கோரிக்கையை பொருளியல் நலன்களுக்குள்ளும் தேடணும்‘

இன்று நடைபெற்று வரும் உலகுதழுவிய அதி நவீன யுத்தமானது வெறும் பொருளீட்டு நோக்குடையதன்று,மாறாக பற்பல நோக்கத்தை மையமாகக்கொண்டு வியூகங்கொண்டுள்ளது. இதை மனதிலிருத்தி க்கொண்டால் மட்டுமே இந்த ஜனநாய முகமூடியின் பின் எந்த முகமுள்ளதென அறியமுடியும். அப்போதுதாம் நமது சிறார்களைக்கூட இந்தப் பாசிசப் பயங்கரவாத அமெரிக்காவிடமிருந்து காக்க முடியும்.

அவ்கானில்-ஈராக்கில் பல்லாயிரம் உயிர்கள் பலியாக்கப்பட்டது எதற்காக?; இதுவரை சிரியாவில் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்படுவது  எதற்காக.??உலகத்துள் 60 மில்லியன்கள் மக்கள் அகதிகளாப்பட்டு அலைவதும், 13 மில்லியன்கள் குழந்தைகள் ஆரம்பப் பாடசலைக்குச் செல்ல முடியாது துரத்தப்பட்டதும் எதற்காக???

எது பயங்கரவாதம்? அமெரிக்க -ஐரோப்பிய பொருளாதார -ஆதிக்க வன்முறைக்குப் பலியாகப்பட்ட இத்தகைய அரச பயங்கரவாதத்தை அமுக்கிவிடுவதற்கு அல்லது திசைதிருப்பிவிடுவதற்கு ஒரு சதாம்–பின்லாடன் மற்றும் The Islamic State வகையறாக்கள் தேவைப்படுகின்றது.

வரலாறுதோறும் வினை விதைத்தவர்கள் கீரோசிமாவையும்–நாகசாகியையும் சமீபகால வியாட்நாம் மற்றும் ஈராக்,யுக்கோஸ்லாவியா,அவ்கானிஸ்தான் என்று பல் இன-நாடுகளை கொடும் அணுயுத்தம் செய்து இன-கலாச்சாரஅழிவுக்குள் தள்ளிய ஐரோப்பிய அமெரிக்கர்கள் இப்போது இவ் கொடூரமான, மானுடவிரோத யுத்தத்தை, பயங்கரவாதத்தை-ஆளும்வர்க்க பாசிசத்தை’யுத்த அளவுகோல்‘ என்று விவாதிக்கிறார்கள். இது பயங்கரவாதமில்லையாம்! மாறாக யுத்தநெறியாம்,(ஜேர்மனிய-அமெரிக்கப்பத்திரகையாளர்கள்) அதாவது ஐரோப்பாவும்,அமெரிக்காவும் செய்வது யுத்த அளவுகோல்|சமன்:யுத்தநெறி. அதையே மற்றய  இனத்தவர்கள் செய்தால் பயங்கரவாதம்.

“ Wenn Sie jetzt für die hundert Menschen Amir Hassan freilassen,wird er raus kommen und Tausende töten! “ – Flug-747

(…)

ஆளும்வர்க்கங்கள் தமது முரண்பாட்டை-ஆட்சிக்கு வரும் முரண்பாட்டை,நெருக்கடியை தீர்க்க எப்பவும் யுத்தத்தை நடாத்துவார்கள். உலக மேலாதிக்கத்திற்கேற்பட்ட நெருக்கடியைத் தீர்க்க உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதல் பயன்பட அனைத்து தேசிய விடுதலை மற்றும் பொருளாதாரவாத எதிர்ப்புப் போராட்டங்களும் பயங்கரவாதப்பட்டியலில் போய் சேர இனவொடுக்குமுறை நிலவும் நாடுகளெல்லாம் ஜனநாயக நாடுகளாயின.

வரலாறு நெடுக மூலதனமானது  தன் கரங்களை குருதியில் நனைத்தபடியே…இன்று சிரியாவில் ; உக்கிரைனில்  புதிதாய் குருதியாற்றைத் தோண்டவில்லை. என்றபோதும்,ஆளும்வர்க்கச் செயற்பாடுகள் கடந்த காலங்கள்போன்று இன்றில்லை.இது மிகவும் கவனத்தக்குரியது.

மூலதனத்தைப் பெருக்கிட,சந்தைவாய்பை காத்திட, உலகப்பொதுச்சொத்தான மூலவளங்களைத் தாமே தொடர்ந்து கொள்ளையிட யுத்தம் செய்யும் இன்றைய சூழலுக்கு வேறு வகையான தந்திரங்களைக் கட்டவிழ்துவிடுகிறார்கள்.

அமெரிக்க-ஐரோப்பிய கூட்டுக்கள்  நடாத்தும் இன்றைய அதிநவீன தாழ் அணுயுத்தங்களுக்கு ‚பயங்கரவாதத்திற்கெதிரான போர்‘ என்ற அரசியற்-சமூக உளவியற் கருத்தாக்கம் ( “ Im Kampf gegen Terrorismus haben wir schon oft gewonnen.Aber gegen unsere eigenen Leuten verlieren wir jedes Mal.“ – Flug-747
) வலுவாக்கப்பட்டுள்ளது.

இது சாரம்ஸமான ‚ஜனநாயகம்‘ என்ற கோட்பாட்டு உத்தியை மறைமுகமாகப் பிரதிநித்துவம் செய்கிறது ,முதலாளித்துவ உற்பத்திப்பொறிமுறை இதனாற்கட்டிக்காக்கப்படுகிற முகாந்திரம் வலுவாக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரையான ‚ஜனநாயகத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகள்’எனும் கருத்தாக்கம் இப்போது ‚பயங்கர வாதத்திற்கு ஆதரவான நாடுகள்‘ என்பதில் போய்முடிந்துள்ளது.

இதன்படி பார்ப்போமானால் இன்று நடைபெறும் அனைத்து யுத்தங்களும் வர்க்க ஒடுக்குமறையாக விரிந்து உலகு தழுவி உழைப்போரை ஒடுக்குதலே!

ஆக , நடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்:

இன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய மற்றும் லிபியா -சிரியா  – உன்கிரைன் ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா,  ஈரான்-வடகொரியா யுத்தங்களும் மற்றும் இருசிய -சீனா மீதான மீள்-பனிப் போரும் இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின் நடைபெற்ற 184 பாரிய-சிறிய அளவிலான யுத்தங்களும் பழைய முதலாம்,இரண்டாம் யுத்த வடிவத்தை தகர்த்து விட்டு புதிய மகாயுத்த வடிவத்தை எடுத்துள்ளது! ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதாம்.தோற்றத்தில் இஃது உலக மகாயுத்தமாக இருக்காது,ஆனால் 1945 க்குப் பிறகு நடைபெறும் அனைத்து யுத்தங்களும் இந்த மூன்றாவது உலக மகாயுத்தத்தின் புதிய வடிவத்தைக்கொண்டே நடைபெறுகிறது. இதன் சாரம் மூலதனப் பாச்சலுக்கெதிரான அனைத்து நாடுகளையும்-இயக்கங்களையும் கொய்தெறிவதே.

இந்த யுத்தங்களின் விருத்தி ‚பயங்கர வாதத்திற்கெதிரான யுத்தக் கூட்டு‘ என்ற முக மூடியைத் தாங்கி உலக மகாயுத்தமாக நடைபெறுகிறது, இதுதாம் உண்மை!

ஏகாதிபத்திய ,நவகாலனித்துவ பல் தேசியக் கம்பனிகளுக்கெதிரான செயற்பாடுகள்,போர்கள்,தேசியயெழிச்சிகள்,இடைவிடாத தன்னெழிச்சியான எதிர்ப்புகள், உலக தழுவிய தன்னார்வக் குழுக்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள், இவற்றுக்கும் பல் தேசியக்கம்பனிகளுக்கும் நேர்|எதிராகவும் பகை முரண்கள் நிறைந்திருப்பினும் இவ் எதிர்ப்பியக்கங்களுக்குள் ஊடுருவிய பல்தேசியக் கம்பனிகளின் புத்திஜீவிகள்-மாபியாக் குண்டர்படைகள் குறிப்பிட்ட எதிர்ப்பியக்கங்களை ‚பயங்கரவாதிகளின் கூட்டு’வடிவமாச் சித்தரிப்பதில் வெற்றியீட்டியு;ள்ளன.

இது 11 செப்டம்பருக்கு பின் வெள்ளையின கவ்போய் மூலதனவாதிகளுக்காக உருவாக்கப்பட்ட விச வடிவிலான அராஜகக் கூட்டுணர்வு.

Advertisements

வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்…

வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? என „எதுவரை?…“ இணையவலைஞ்சிகை கேட்டிருக்க ,நானும் கீழ்காணும்  எதிர்வினையொன்றை அதற்கு எழுதியுன்ளேன்.

கருத்துக்களை வரவேற்று ,ஆரோக்கியமானவொரு உரையாடலை நோக்காகக்கொண்டதென்ற தொனியைப் பரவலாக்கும் இந்த வட்டத்திலிருந்து எனது எதிர்வினை இன்னும் வெளி வரவில்லை.

இருந்தும் ,பரவலாகக் கருத்துக்களை முன்வைப்பதும் அதையொட்டிய சிந்தனைக்கு ஊக்கப்படுத்துவதும் எமது நோக்கில் ஒன்று.இன்றைய கட்சி அரசியலையும் ,அதுசார்ந்த ஆதிக்கத்தையும் மதிப்பீடு செய்வது-வரையறுத்துக்கொள்வது அவசியமே!

ஆளுங் கட்சியாக வருபவை மட்டுமல்ல இன்றைக்கு அனைத்துத்  தரப்புமே நிதிமோசடி -வரி ஏய்ப்பு;வளத்திருட்டெனக் கொண்டே நிதியைத் திரட்டும் சட்டத்தை இயற்றுகின்றன.இங்கு ,கட்சித் தலைவர்கள் -அரச தலைவர்களென வரும் பதவிகளனைத்தும் குவிக்கப்பட்ட நிதிகளுக்குச் சட்ட அங்கீகாரத்தை வளங்குவதில் பெரும் பகுதி மக்களது அனைத்து உரிமைகளையும் காலிற் போட்டு மிதிக்கும் சந்தர்ப்பமே தமது நிதயைப் பாதுகாக்க  இன்னொரு அடியாளாக வரையறுக்கப்படும் பாதுகாப்புப் படைகள் ,அரச அதிகாரத்துள்ளும் ;அதன் வன்முறை யந்திரத்துள்ளுங் கூடவொரு வியாபார வளங்கொண்ட தலைமையை  உருவாக்கியுள்ளது.

இது, அனைத்துச் “ சிவில் சந்தைப் பொருளாதாரத்தையுங் “ கூட இராணுவப் பொருளாதார போக்குள் அமுக்கி, இலங்கையில் பாரிய வர்த்தகத்தை இலங்கை அரச யந்திரமே கையகப்படுத்தியுள்ளது.இதைப் பழைய பாணி அரச முதலாளித்துவமாகப் புரியப்படாது.சுய முரண்பாட்டாலெழாத முதலாளியத்துள் அரச முதலாளியமாகவிருந்த இலங்கை , சமீபகாலத்துப் பல்தேசிய மற்றும் நவ தாரளவாதப்போக்குகளால் [Response to Neoliberalism and Globalization  ]சில குடும்பங்களது கையில் அந்த அரச முதலாளியத்தை வீழ்த்தியுள்ளதென்பதைப் புரியந் தருணங்களையே நாம் விவாதிக்க வேண்டும் என்கிறேன்.

schroedingervspavlow
இதுவேதாம் ,கட்சித் தலைவர்கள்;மந்திரிகள்;இராணுவத்தளபதிகள் என ஒவ்வொருவரையும் சொத்துடமைவாதிகளாக்கிய பின் அவர்களே ஆளும் வர்க்கமாகச் சட்டவாத அரசுக்குள் நேரடியான அதிகாரத்தையும்; ஒடுக்குமுறையையும் உழைப்பவர்கள்மீது திணிக்கின்றனர்.இந்த முரண்பாட்டைக் குறித்து விவாதித்தாகவேண்டும்.

இதைவிட்ட அனைத்தும், அதாவது „நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையைப் பிடித்த சனியன் விடுபட முடியுமென்பது சுத்த மோசடியான விவாதம்.இது, புதிய பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும்  ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல அது சட்டவாத அரசுள் வகிக்குப் பாத்திரத்தையும் மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க  கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.

UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில்  மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.

இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.இங்கு, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதற்கு மேலாகக் கண்டடையவேண்டிய இன்றைய இலங்கைபோன்ற தேசங்களது நிதி திரட்சி மற்றும் அத்தகைய நிதியைக்கொண்டியக்கும் சக்தி எவைகள் என்பதைக்குறித்த புரிதல் மிக அவசியமாகிறது!

தமக்குள் ஒன்றுபட முடியாத இனக் குழுக்களோடும், சிதிறிய தலைமைகளோடும்  முட்டிமோதும் மூன்றாம்மண்டலத் தேசங்களுக்கேகுரிய பண்போடு திரண்ட நிதிகள் கட்சித்தலைவர்கள் – மந்திரிகளது குடும்பச் சொத்தாக மாறுவதற்கான சட்ட நியாயங்களைக் குறித்து நோக்குவது அவசியமானதாகும்.நவதாரளவாதப் பொருளாதார நகர்வுக்கும் இலங்கை அரசுக்கும் 1948 ஆம் ஆண்டிலிருந்தே பாரிய தொடர்புகள் இருக்கிறது.யூ.என்.பீ. கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் நிரந்தரமானவொரு மென்பர் சீட்டை மெளன் பெலாரின் சொசைட்டி [Mont Pelerin Society  ]வழங்கிவருவதை இன்றும் நாம் காணமுடியும்.இங்கு,வகைமாதிரியாக வளர்ந்துவிட்ட பொருதார ஆதிக்கமானது முழுக்க முழுக்க மக்களது வரிப்பணத்தையும் ,தேசத்தின் வளங்களை அந்நியத் தேசங்களோடு கொள்ளையடிப்பதையுமே ஆளும் கட்சிக்கும் அதன் தலைமைக்குமான பாத்தியமாகச் சட்டவரம்புகள் வளைக்கப்பட்டுள்ளன.இதுவேதாம் இலங்கைக்குமட்டுமல்ல இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் உண்மையாக இருக்கிறது.தமிழ் நாட்டையே எடுங்கள் அங்கு என்ன வாழ்கிறது?எதேச்சதிகாரமும் கட்சித் தலைவரையும் கண்முன் நிறுத்துங்கள்.ஜெயலதிதாவின் அதிகார -ஆவணவுச்சம் மகிந்தா குழுவையே விஞ்சும் அளவுக்கு இல்லையா?

ஆக, குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிக்கத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி [CDU/SPD]என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி.[ARD] மற்றும் சற்.டி.எப் [ZDF]ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.[SPD]யையும் மற்றது சி.டி.யூ.[ CDU]வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.எனவே, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதும்,நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முநைதாம் இவற்றுக்குக் காரணமென்பதும் ;ழுமையான புரிதலில்லை.பிரஞ்சு தேசத்தை எடுங்கள் ,அத் தேசத்தின் அதிபருக்கு உலகிலுள்ள எந்தத் தலைவருக்குமற்ற நிறைவேற்று அதிகாரமுண்டு.இன்றைய நிலவரப்படி,ஆசிய-ஐரோப்பிய மூலதன முரண்பாடுகள் ஆட்சி மாற்றத்தைக்கோரும் உலகத் தேச நடப்புள் இலங்கையும் அதன் தர்க்கத்துள்,வியூகத்துள் உள் நுழைந்திருப்பதை நாம் இந்த மதத் தலைவரது கருத்துக்களிலிருந்து கவனிக்கமுடியும்.இன்றுள்ள உலக நிலவரங்களைத் தொடர்ந்து கவனித்தால் இத்தகைய நிலவரத்துள் இலங்கையில் மேற்குலகத்துக்கேற்பவொரு அரசியல்வரை படம் அவசியமாகவிருக்கிறது!

மேற்குலக – ஆசிய மூலதனமும் அதன் பங்காளிகளுமாக இலங்கைக்குள் தொடரும் அதே மேற்குலகத் தாரளவாதப் பொருளாதாரப் போக்குள் முற்றுமுழுதுமாக இலங்கைக்குள் ஆதிகப்பரீட்சார்த்தமாகக் கட்சிகளது பின்னாள் மக்களைத் திரட்டுமொரு வியூகத்தைக் கொண்டிருக்கிறது.அங்கே,இத்தகைய உரையாடல்கள் ஏதோவொரு தர்கத்துள் சிக்குப்பட்டு மக்கள் நலனாக வெளிப்படுத்தும் அரசியலானது அரைவேக்காட்டுத்தனமாகும்.
அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
09.02.14

அதிகாரம்: …பூப்காவின் பாத்திரம்(2)

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்(2)

சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல்.

(அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!)

(2)

பொனபாட்டிசம்

தமிழ்ச் சூழலில் மிக அவசியமான ஆய்வுத் தன்மையுடன் கூடிய கட்டுரைகள் வரவேண்டுமென எனக்குள் எண்ணுவதுண்டு.இந்த வகைப்பட்ட கட்டுரைகள் அதிகமாக வருவதற்கான ஆய்வுத்தகமை சமகால நிகழ்வோட்டத்துடன்,அதுசார்ந்த மிகுந்த புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இந் நிலையுள்,சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!

அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர்வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?அல்லது,மிகேல் பூவ்காவினது பரந்துபட்ட புரிதலுள் புலிகளது இயக்கவாத-அந்நிய அடியாட்படைச் சேவையை ஒடுக்கப்படும் இனத்தின் எதிர்ப்புப் போராட்டமாகவும்-அதுசார்ந்தெழுகிற அதிகாரமாகவும் பார்க்க முடியுமா?

எவன்(ள்),எந்தெந்தத் திசையில் அதிகாரம் குறித்த பரந்துபட்ட புரிதலுள்புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.

இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப்பினாமிகள், மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது மீளவும், „தமிழீழவிடுதலை“யின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

இந்தப் புரிதலிருந்துதாம் அதிகாரம் குறித்த தேடுதலை வைத்துப் புலிகளது பாசிசச் சேட்டையை,சகோதரப்படுகொலைகளை நியாயப்படுத்தும் நம்மை, நாம் கேள்விக்குட் படுத்தியாகவேண்டும். சிங்கள அரசு தமிழினப்படுகொலையை மிக மும்மரமாக நடத்தியபோது,நாம் ஒருங்கிணைந்து பொதுவெதிரியைத் தாக்கி வெற்றிகொள்வதைத்தடுத்து, நமது சகோதரர்களையே நாம் பொதுவெதிரியைவிட மிகமோசமாகத் தாக்கி அழிப்பதென்பது,பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்புப் போராட்டமாகாது.அங்கு பூவ்கா குறித்துரைத்த உயிரதிகாரமானது உயிர்வாழுவதற்கான தனது சகோதரர்களது பௌதிக இருப்பை நிராகரித்துவிட்டு, பொதுமைப்பட்ட அரசியல் வாதத்தைத் தகவமைக்க முடியாது-பேரினவாதத்திடம் ஒடுக்குமுறைக்கெதிரான நியாயமான போராட்டத்தைச் செய்யும் அறத்தையும் உலகுக்கு ஒப்ப முடியாது.எங்கு ஒடுக்குமுறை நிலவுகிறதோ,அதற்கு எதிரான போராட்டம் நிலவியே தீரும்.இரண்டினது தளமும் அதிகாரத்திலிருந்து எழுகின்றபோதும்,ஒடுக்கும் அதிகாரம் பலதரப்பட்ட நிறுவனங்களாலும்,பொருளாதார மேலாதிக்கத்தாலும் தொடர்ந்து தன்னைத் தக்கவைக்கிறது.மற்றதோ,நிலைப்புக்கான உயிர்ப்போராட்டத்துள் முழுவதுமாக ஒடுக்கப்படும் உடல்களை-மக்களை நம்பி எழுகிறது.அதுவே,ஒருகட்டத்தில் அந்த நம்பிக்கைக்கு எதிராகத் திரும்பும்போது,ஒடுக்கும் அதிகாரம் ஏதோவொரு வகையில் எதிர் அதிகாரத்தின்-போராட்டத்தின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டிருப்பதையே புலிகளதும்,மாற்று இயக்கங்களதும் இதுவரையான மக்கள் விரோத ஆயுத அராஜகம் புலப்படுத்தியது.அந்த ஒடுக்கும் அதிகாரம் ரோ வடிவிலும்,சி.ஐ.ஏ வடிவிலும் மட்டுமல்ல எம்.ஜீ.ஆர்-கருணாநிதி,பிரமதாச,ரணில் வடிவிலும் நம்மிடம் புலப்பட்டுக்கொண்டது.இந்தப் பெயர்கள் வெறும் குறியீடு மட்டுமே.

அல்லது, பூவ்கா கூறியமாதிரி“ஒடுக்குமுயைக்கு எதிரான போராட்டம் எங்கிருக்கிறதோ அங்கு அதிகாரம் வெளிப்படுகிறது“என்று இதற்குச் சமாதானஞ் செய்யமுடியாது!இது முற்றிலும் தவறான புரிதல்.எனவே,நாம் ஆதிகாரம் குறித்து மேலும் புரிதல்களை வளர்த்தாகவேண்டும்.

இந்தத் தவறான புரிதல்கள், தவறானவை என்பதைத்ச் சொல்வதல்ல எனது இந்தத் தொடரின் நோக்கம்.இது,பரந்துபட்ட தளத்தில் எமது எதிர்ப்பு அரசியலது எதிர்காலம் குறித்து நோக்க முனைகிறது.சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து தமிழ்பேசும் மக்களையும்,ஏனைய சிறுபான்மை இனங்களையும் ஒடுக்கும் சட்டரீதியான அடியாளாகச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கும், இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் செயற்படுகிறது.

இலங்கையின் அரைத் தேசியப் பொருளாதாரமானது,அதன் வர்க்கக் குணாம்சத்துக்கொப்ப இலங்கைச் சிறுபான்மை இனங்களையும்,தனக்குள் செரித்துவிட முனைகிறது.இது,இலங்கைக்கானவொரு மொழி,ஒரு மதம்,அதுசார்ந்த பண்பாட்டுருவாக்கத்தைக் கணித்துச் சிறுபான்மை இனங்களை முற்றிலுமாகச் செரிக்கும் பொருளாதார-அரசியல் நகர்வு மிக வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்டபோது, புலித்தலைமையைக் காட்டிக்கொடுத்த புலிப்பினாமிகளோ அதற்குப் புதிய விளக்கங்கொடுத்து மக்களுக்கான „அபிவிருத்தி-பாதிக்கப்பட்ட மக்களுக்கான கஞ்சி“ என சிங்கள மேலாதிக்கத்தைப் பட்டுக்குஞ்சங்கட்டி வரவேற்று, அரச ஆதிக்கத்தை வலுவாகத் தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய பூமியில் மறுநிலைப்படுத்தும்போது,அதை எதன் பெயரால் புலிவிசுவாசிகள் புரிந்துகொள்கிறார்கள்?தனியே துரோகி சொல்லியா? இந்தத் துரோகியோடு அரசியல் ரீதியான எதிர்ப்பு அரசியலது நியாயம் சரியாகி விடுகிறதா?அடுத்த கட்டம் என்ன?

எனவே,இந்தத் திசையில், விவாதவுரை பகுப்பாய்வு(Diskursanalyse) அவசியமாகிறது-அதிகாரங் குறித்த விவாத ஆய்வுப் பண்பு தமிழுக்கு இதுவரை செறிவான முறையில் எட்டவில்லை.ஆராய்ச்சி முறையியல்(Methodologie) முற்றிலும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியப்பட்டிருக்கிறதென்பதால் அதிகாரங்குறித்த புரிதலை ஒருவர்மீது சுமத்தி „நீ பூவ்காவை படித்துவிட்டுப் புலிகளது அதிகாரங்குறித்துப் பேசு“ என ஓங்கி உரைக்கிறது.இந்த மொழிக்குள்: „மற்றவர்களுக்கு ஆங்கிலமோ அன்றி வேறு அந்நிய மொழியோ தெரியாதென்றும்,புலம்பெயர் இடதுசாரிகள் தமிழகத்து „விரல்சூப்பி“ப் பேராசிரியர்கள் தமிழ்படுத்தியதைமட்டும் வாசித்துவிட்டு,அதிகாரங்குறித்துப் பேசுவதாகவும் புரிந்துகொள்ளச் சொல்கிறது“. இது,அடுத்த மோதாவித்தனத்தின் அண்ணன்(சிறு-மெலினப் பட்ட குரல்களை ஒட்ட மட்டந்தட்டும் பார்ப்பன உளவியல்என்று சொல்ல வருகிறேன்). நாம்,இதிலிருந்து சிலவற்றை பகுப்பாய்வு நிலையைகொண்டு பூவ்கா முதல் காபர்மாஸ்வரை அதிகாரம் குறித்து நோக்குவோம்.முதலில் சில வரையறுப்புகள் அவசியமாகிறது.

பகுப்பாய்வு சார்ந்து:

மேற்குலகப் பல்கலைக்கழகத்துள் பூவ்காவின் நிலை என்ன என்பதிலிருந்து,

1 : பேராசிரியர் மார்டின் நொன்கோவ் (Martin Nonhoff,Professsor für Politikwissenschaft an der Universitaet Bremen குறித்தியங்கும்“பகுப்பாய்வின் கேள்விகள்,அதிகாரம்,மேலாதிக்கம்“ஆய்வுமுறையியல் மற்றும் கோட்பாடுகள்சார்ந்து நான்,வரையறுத்த ஒரு புள்ளியல்(இதை இத்தொடரின் இறுதில் விசாலமாகச் சொல்வேன்) கீழ்வரும் தொகுப்பு நிரையை வழங்கி மேற் செல்வேன்:

2: மிகேல் பூவ்கா (Michel Foucault,1926-1984),உலகளவில் அறியப்பட்ட முக்கியமான நவகாலச் சிந்தனையாளர்,பிரான்சின் சிந்தனைப் பாரம்பரியத்தின் அமைப்பியல்(Strukturalismus) அறிஞர்.அவரது பிரதானத் தெரிவானது“பன்முகக் கருத்துவினைப்பாட்டு உரையாடல்“(Diskurs)அதுசார்ந்த பரிசீலித்தலாகும்.பூவ்கா எதையும் பரிசீலிப்பதையே தனது இறுதி முடிவாக எடுத்துக்கொண்டவர். எந்தவொரு தனது சிந்தனைப் போக்கையும்-கருத்தையும் முடிந்த முடிவாகச் சொல்லாமற்றவிற்றபோது,தான்கண்டடைந்தவுண்மைகள் ஒரு வடிவத்துக்குட்பட்ட தத்துவமென எப்போதும் சொல்வதை நிராகரித்துவிட்டுத் தன்னைப் பரிசீலிப்பாளன்-பரிசோதனையாளன் எனக் கூறிக்கொண்டார் (Ich bin ein Experimentator und kein Theoretiker.-Michel Foucault Gespraech mit Ducio Trombadori,Die Hauptwerke-seite:1585/86).அவரது சிந்தனைக்குட்பட்ட புரிதலுள்அதிமுக்கியமாக எடுத்தாளப்பட்ட வார்த்தை Als Dispositiv/disposition முடிவு, ஒழுங்கு அல்லது ஆணை ,இதை விளங்க முற்படுவதில்தாம் சிக்கலே எழுகிறது.இந்தச் சிக்கலை அவரே பல இடங்களில் கைவிரித்துவிட்டார்.இதுவொரு தடை. Tabu… எனது வாசிப்பு உட்பட்ட,
„Die Ordnund der Dinge“ 1966
„Archaeologie des Wissen“1973
„Ueberwachen und Strafen“1974
„Sexualitaet und Wahrheit“ 1977 bis 1986
„Der Wille zum Wissen „1977
„Foucaults Philosophie der Kritik-Die Hauptwerke
Analytik der Macht“ 1970 bis 1983(Analytik der Macht. Frankfurt am Main, 2005 )

Gouvernementalitaet என்பது „அரசு-எண்ணங்கள்“அனைத்து நிறுவனமயப்பட்ட நிறுவனங்களையும் அரசு-தனிமனித நிலை ளிலுமாகப் பன்முகப்பட்ட புரிதலோடு நகர்வது.எனினும் அது, முழுமையற்றது.அதை 1977-78 இல் Collège de France இல் அவரது வகுப்புச் சகாக்களான Daniel Defert, François Ewald, Jacques Donzelot, Giovanna Procacci, Pasquale Pasquino ஆகியோரது துணையோடு முன்நிலை வாசிப்பை/விரிவுரையைச் (Die Vorlesung)செய்துகொண்டபோதும் அதைத் தொடர்ந்து விருத்திக்கிட்டபடி மேலும் விருத்தி செய்யும் தருணத்தில் அவரது மரணம்(1984)அதைத் தடைப்படுத்திவிட்டிருக்கிறது.

3: அடுத்து,அரச ஆதிக்கம்,அர ஜந்திரம் குறித்தான புரிதலில் அதி முக்கியமானவொருவரும்,உரையாடலுக்கான பொதுவெளியைக் குறித்து அழுத்தமாகப் பேசுபவரமான யுர்கன் காபர்மாஸ்.

Juergen Habermas 1929, ஜேர்மனியில் பிறந்தவர்.1956 ஆம் ஆண்டிலிருந்து வருகைதரு பேராசிரியராக தியோடர் வே.ஆடர்னோ கல்லூரில் (Theodor W.Adorno am Institut fuer Sozialforschung in Frankfurt ) கடமையாற்றியவர்.அவரது இன்றைய அனைத்துச் சிந்தனையும் ஒழுங்கமைந்த முதலாளித்துவச் செழுமைப்பட்ட ஒழுங்கை வேண்டுவது.அதிகாரத்துள் நிலைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைக் குறித்துத் தொடர்ந்து விமர்சிப்பதால் அவரை அரசு குறித்துப் புரிவதில் அதிகமாகத் தொடர்ந்திருக்கிறேன். என்றபோதும்,“நோய்வாய்ப் பட்ட முதலாளியக் குழந்தையின் வைத்தியன் காபர்மாஸ்“என்று கூறிய ஜேர்மனிய இடதுசாரியத் தோழன் இதிலும் என்னை எச்சரிக்கின்றான்.

அவரது முக்கிய நூல்கள்:
“ Theorie des Kommunikativen Handelns“ in 2 Baenden 1981
„Moralbewusstsein und Kommunikatives Handelns“ 1983
„Erlaeuterungen zur Diskursethik“1991
„Faktizitaet und Geltung“ 1992

4: Chantal Mouffe 1943, பேராசிரியர் கன்ரால் மூவ்பே வகுப்பெடுக்கும் அரசியல் விஞ்ஞானப் புரிதலில்அவர் தனது நண்பர் லூக்லாவோடு(Ernesto Laclau: wurde 1935 in Buenos Aires geboren und war zuletzt an der University of Essex im Bereich Politische Theorie tätig. Er sieht sich selbst als Vertreter des Postmarximus.) இணைந்தெழுதிய „Hegemonie und radikale Demokratie zur Dekonstruktion des Marxismus“ -1985.தொடர்ந்து பேசத் தக்க வெளிகளை அதிகாரத்தின்மீதான புதியவகைத் தேடல்களை பூவ்கா செல்லாத வெளிகளில் வைத்துரையாடுகிறார்(Chantal Mouffe: wurde 1943 in Belgien geboren, ist heute als Professorin für Politische Theorie an der University of Westminster in London tätig. Gemeinsam mit Laclau publiziert sie 1985 „Hegemonie und radikale Demokratie. Zur Dekonstruktion des Marxismus“).

நவ காலச் சிந்தனைமுறைமைகளுக்கப்பால் எடுத்தாளப்படவேண்டிய முக்கியமானவொரு சிந்தனையாராக நான் இனங்காண்பவர் ஜேஆன் ஜாக்கோப்-றுவ்சேவ் (Jean-Jacques Rousseau),1712 இல் இருந்து 1778 வரை வாழ்ந்திருக்கிறார்.ஜெனிவா,இத்தாலி,பிரான்ஸ் என வாழ்ந்த மனிதரது சிந்தனை அன்றைய காலத்து சமூகவியற் போக்குகளை மிகச் சிறந்த புரிதலில் உரைப்பது.அவரது பிரதான தத்துவார்த்தப் போக்கானது „இயற்கையிடம் மீளச் செல்லல்“என்பதாகும். மனிதர்களுக்குக்கீழ் சமமற்ற நிலைகளைக் குறித்தும், மனிதர்களுக் கிடையிலான சமூக வளர்ச்சிப் போக்குகள், இயற்கைக்கும் மனிதர்களுக்குமானவொரு சீரழிவின் நிலையைக்கண்டு சிந்திக்க முனைந்திருக்கிறார்.அவரது முக்கிய-பிரதான நூல்களும் எனது புரிதலுக்குட்பட்டதன் தெரிவில் கீழ்வருவன:

„„Emile oder über die Erziehung“ 176
„Der Gesellschaftsvertrag“ 1726
„Abhandlungen über die Wissenschaften und Künste“ 1750
„Abhandlung über Ursprung und Grundlagen der Ungleichheit unter den Menschen“ 1753

இந்த மொழிவின்வழி,வளர்ச்சியடைந்த ஐரோப்பியச் சமுதாயங்களின் அதிகாரங்குறித்த-அரசு குறித்த அறிவின் நிலவரம்பற்றிய தேடலை நமது சூழலுக்கொப்ப புரிந்துகொள்வதன் அடிப்படைகளை மேற் சொன்ன தெரிவினது தருக்கத்திலிருந்து மேலும் வளர்க்கலாம். சர்வதிகாரப்போக்குடைய பெரும் உரையங்களின் நடுவே,இந்த எழுத்தாக்கத்தின்வழி „ஈழவிடுதலை“ப் போராட்டத்தின் சக்திகளையும்,அதைத் தலைமேற் ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களது உள-உய்வுத் தூண்டலையுங் குறித்து பேசவதுதாம் அதிகாரத்தின் திசைவழிகளை-புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை எமக்குள் மெல்லச் செரிக்க முடியும்.பொருளாதாரஞ் சார்ந்தியங்கும் வாழ்நிலை சமூகவுணர்வைத் தகவமைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அந்தவுணர் விலிருந்து சிந்தனைப்போக்கு ஒரு அறிகுவியத்திலிருந்து இன்னொரு தளத்திலான அறிகுவியத்துக்கு மாறிக்கொண்டே இருக்கிறதெனக் கொண்டால் இந்த நிகழ்வூக்கத்துக்குள் நிலவுவது அதிகார நிலைப்பட்ட வடிவ மாற்றங்கள்தாம்.பண்புரீதியாகவும்,வடிவரீதியாகவும் இவை மாறும் கட்டங்களைக் குறித்து நோக்குவதில் அதிகாரத்தால் ஒதுக்கப்பட்ட-பட்டுள்ள-விளிம்பு நிலையிலுள்ளவொரு சமுதாயமாக மாற்றப்பட்டுள்ள தமிழ்பேசும் சமுதாயத்தின் தலைவிதியைக் குறித்த கருத்து வினைப்பாடானது தனக்குரிய வீரியத்தையும்,தேம்பலையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கிக்கொண்டிருப்பதால் இதைப் புரிகிற வெளியையாவது நாம் புரிந்துகொண்டால், அடுத்த கட்டம் புலப்படும்.கருத்து வினைப்பாடு என்ற பூவ்காவின் பரிசீலனைப் புள்ளியில் காபமாஸ் கருத்துவினைப்பாட்டைப் புரிந்துகொள்ளல் எனும் தளத்தில் கொஞ்சம் அகலிக்க விரும்பும் தளத்தில்“விருப்பத்துக்குரிய விவாதச் சூழலை“ உருவாக்க விரும்புவதுதாம் எனது புள்ளி.

தொடரும்…

முதற் பகுதியை இங்கே வாசிக்கவும்…

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.12.11

அதிகாரம்: …பூப்காவின் பாத்திரம்

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்!

சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல்.

(அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!)

(1)

லங்கைச் சிறுபான்மை இனங்கள் ஒரு சிக்கலான காலக்கட்டத்துக்குள் புதிய ஆண்டில் நுழையப்போகிறார்கள்.இலங்கை அரச ஆதிக்கத்தின்-அதிகாரத்தின் பதில் விளைவுகளாகப் பின்னப்பட்ட புலியழிப்புப் போராட்டத்துக்குப் பின் இலங்கையின் பொது அரசியற் சூழலானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றுக் கருத்தியல்-வெகுஜனக் கணிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.இலங்கை அரச ஆதிக்கத்தைப் புரிந்துகொள்வதென்பதும்,அரச வன் முறை-வன்முறைசார ஜந்திரங்களின்வழி பின்னப்பட்டிருக்கும் அதிகாரமென்பது பெரும் பான்மை மக்களையும்,அவர்களது சுதந்திரத்தையும் „விடுதலை-சுதந்திரம்-இறைமை-தாயகம்“ எனும் மந்திரச் சொற்களால் எங்ஙனம் பறித்துவிட்டிருக்கின்றவென்பதும் பெரும் வியப்படையத் தக்க குறிப்புகளாகும்.இதுள் தமிழீழ விடுதலைக்காகப் போராடியதாகச் சொல்லப்பட்ட புலிகளது பாத்திரத்தில் அவர்களுக்குட்பட்ட அரஜந்திரத்துள் நிலவிய அதிகாரமென்பது குறித்தும்,அதன் மறுவிழைவாக முழு இலங்கையின் உழைக்கும் மக்களும் இலங்கை அரசினது ஆதிக்கத்துக்கும்-ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கும் அடி பணிந்து போவதென்பது நடை முறைச் சாத்தியமாகுமா?

இன்றைய இந்தத்(புலிகளது தேசியவிடுதலைப்போராட்ட தோல்விக்குப்பின்) தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்தமிழ்மக்களது அரசியல் சக்திகளால் நிகழவில்லை. இதற்கானவொரு „பொதுச் சூழலை“எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும், இன்றைய சூழலில் இத்தகைவொரு போராட்ம் என்றுமில்லாவாறு அவசியமானது.எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.எனவே,ஒடுக்கப்படும்-நசுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை மக்களினங்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும். இந்தத் தருணத்தில்தாம் அதிகாரம் குறித்துப் பரவலாகப் பேசுவதற்கு நண்பர்கள் முனைகிறார்கள். அவர்களும் அதிகாரங் குறித்துப் பேசுவதில் பூப்காவை-நீட்சேயை முன் தள்ளி ஒற்றை வார்த்தை உதிர்ப்பதில் இடதுசாரியப் போராட்டத் திசையமைவுகளையே நொருக்குவதாகக் காட்சிப்படுத்தியும் விடுகிறார்கள்.மார்க்சை-லெனினைச் சொல்லி இக் கட்டுரைத் தொடரை நான் நகர்த்தப் போவதில்லை!

அதிகாரம் குறித்தும்,நிலவும் இலங்கை அரச இனவொடுக்கு முறையும்,அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்தின்வழி அதிகாரத்தை நிலைப்படுத்தும் சிங்கள-தமிழ் அதிகார வர்க்கங்களின் சட்டரீதியான அதிகாரத்துவ மையங்களை நோக்கி,எதிர் போராட்டங்கள் தனக்கான அதிகாரத்துக்குட்பட்ட வகைகளில் எழுவேண்டிய தருணங்களைப் புரிந்துகொள்வதற்கும் நாம் கடக்கவேண்டிய தூரம் அறிவுப் பாதையின்வழி நீண்ட தூரமாகும்.

புலிவழியான போராட்டச் செல்நெறியானது மக்களது செழுமையான பலத்தைப் பொருட்படுத்தாதென்பதை முதன்மைப்படுத்திச் சொல்வதிலும்,ஒருவகையான அந்நிய „கூறுபோடும்“ தந்திரத்தையுரைப்பதாகப் புரிந்துகொள்ளச் சொல்லித் தொடரலாம்.

„Macht,Herrschaft, Gewalt.“-அதிகாரம்,ஆதிக்கம்,வன்முறை போன்றவைகளின் வரலாற்று ரீதியான கண்ணோடத்தைக் குறித்தான புரிதல்களை அவசியப்படுத்துகிறேன்.இதற்காக மக்ஸ் வேபர் எழுதிய உலக தழுவிய கண்ணோட்த்துள் அதிகாரத்துவ வடிவங்கள்: சட்டரீதியான அதிகாரத்துவ அலகுகளும் (Herrschaftsformen in universeller historischer Perspektive –
Max Weber: Typen der legitimen Herrschaft) பரவலாகப் புரியப்பட்ட பின்னணியோடு நான்வொல்வ்காங் சோவ்ஸ்கியின் அதிகாரம் என்பது சமூக வடிவங்களாக என்பதை புதிய வகையான தேடதலின் வகைப்பட்ட கருத்தாடலுக்கும் (Macht als soziale Figuration – Wolfgang Sofsky u. Rainer Paris: Figurationen sozialer Macht ) எடுத்தாள்வதில் இலங்கையின் இனவொடுக்குமுறைத் தகவமைப்புகளை விளங்கிக்கொள்வதற்காக நவலிபரல்களது அதீதமான அதிகாரவேட்கையின் சூட்சுமத்தை விளங்கிக்கொள்வதற்கு மிக்கேல் பூவ்கா குறிரைத்த:

„Die Macht ist nicht etwas, was man erwirbt, wegnimmt, teilt, was man bewahrt oder verliert; die Macht ist etwas, was sich von un-zähligen Punkten aus und im Spiel ungleicher und beweglicher Beziehungen vollzieht.“-Michel Foucault[Überwachen und Strafen]

//Capillary power, governmentality, bio – politics குறித்து மேற்கத்திய சூழலை முன்வைத்து ஃபூக்கோ விளக்கியவற்றை விளங்கிக் கொள்ள முற்பட்டு, அதன்பாற்பட்டு புலிகளின் “வன்முறை” குறித்து பேச முன் வந்தால் வரவேற்கலாம்!மேற்கத்திய சூழலில் ஃபூக்கோவும் இன்ன பிறரும் முன்வைத்த ஆய்வுகளை தெற்காசியச் சூழலின் தனித்துவங்களைக் கணக்கில் கொண்டு புரிந்துகொள்ளப் பிரயத்தனப்பட Bernard Cohn ஐயும் Nichols Dirks ஐயும் வாசித்திருக்க வேண்டும், அறிவு வாளிகள் போல பாவனை செய்யும் முட்டாள்கள்!//

by Valar Mathi

அதிகாரமென்பது கையகப்படுத்தி,பகிர்ந்துகொள்வதற்கான அலகு போன்றிருக்க வாய்ப்பில்லை,மனிதர்கள் காத்துக்கொள்வதற்கும்,இழப்பதற்கும்.அதிகாரமானது சமனற்ற விளையாட்டில் எண்ணிக்கைக்குட்படாத பல புள்ளிகளைக் கொண்டிருப்பதையொத்த தன்மைக்குட்பட்டிருக்கிறது. இது, சாதகமானதாகவும்,பாதகமானதாகவுமே இருபக்கங்கங்கட்கு உட்பட்டிருப்பதாகக் கருதும் பூப்கா வரலாற்று ரீதியாக உருவாகிய அதிகாரமென்பதை ஒரு ஸ்த்துலாமான புள்ளியில் நிறுவுவதை மறுத்துரைக்கும் சந்தர்பங்களை விளங்கிக்கொள்வதற்காக நாம்அவரது அனைத்துப் பிரதான எழுத்துப் பதிப்புகளையும் உள்வாங்கிக்கொண்டு தொடருவதும் தவிர்க்கமுடியாத ஒரு பளுத்தாம்.நவலிபரல்களின் முக்கிய மேட்டிமைக் கூட்டணியுள் –மௌன் பிலெரின் செசைட்டியுள் [Mont Pelerin Society ]அதிகாரத்துக்கான அதீத முனைப்புகள் திரண்டிருந்தபோது,கார்ல் போப்பரோடு[Karl Popper] கூடித் திரிந்த ஜேர்மனிய சந்தைப் பொருளாதாரச் சிந்தனையாளன் லூவிட்க் ஏர்ஹார்ட்டும் [Ludwig Erhard ],பிறீட்டிறிக் ஹாய்க்ட்டும்[Friedrich August von Hayek ] பூப்காவை மதித்தேம்பியழைத்திருந்தபோது அவரது அதிகாரம் குறித்த சிந்தனைதாம் அதன் அர்த்த புஷ்டியான வாய்ப்பை நல்கியது.வரலாற்றுக்கட்டமான புரிதலைச் செழுமைப்படுத்துவதிலிருந்து அதை அரூப நிலைக்குத் தள்ளியதிலிருந்து அதிகாரம் என்பது பல தளத்திலிருந்து:

Historische und gesellschaftliche Prozesse folgen für Michel Foucault keiner inneren Entwicklungslogik und ihnen liegt daher auch keine sinnhafte Ordnung zugrunde. Sie sind vielmehr das Ergebnis von andauernden Machtkämpfen. Für Foucault ist Geschichte „Machtverhältnis, nicht Sinnverhältnis“ (M. Foucault: Dispositive der Macht, Berlin 1978, S. 29).

வரலாற்று ரீதியான சமூப் படிமுறைவளர்ச்சியானதன் விளைவுகள் பூப்காவைப் பொறுத்தவரை உள் தர்க்கத்துக்கு உகந்ததல்ல.அதேவழியில் அடிப்படையான அர்த்தத்துக்கு உட்பட்டதுமல்ல என்றாகிறது.இவைகள் அதிகம் பேசுவதானால்,தொடர்ந்து நிலவும் அதிகாரத்துக்கான போராட்டத்துள் சில வெளிப்பாடுகள் மட்டுமே.இந்தப் புள்ளியில் தாம் நாம் புலிகளது அதிகாரத்தைப் புரிந்துகொள்ள முனையவேண்டுமெனச் சொல்லப்படுகிறதுபோல் தெரிகிறது.இதை நாம் புரிந்துகொள்வதும்,தொடரும் அதிகாரத்திசையமைவுகளை மிகக் கறாராக வரையறை செய்வதில்இலங்கை அரச ஆதிக்கத்தின் வழி நசுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனங்களது வாழ்வாதாரவுரிமையைப் பின் தள்ளுவதிலிருந்து அவர்களது சுயநிர்ணயத்துக்கான அதுசார்ந்த உரிமைக் குரல்களை ஓரங்கட்டியொதுக்குவதில் புலிகளது எதிரதிகாரத்தின் வினை பயன் என்னவென்பதைக் குறித்துப் பார்ப்பதில் அவசியமான தேடுதல்கள் உருவாக வேண்டுமெனவும் கோருகிறேன்.

//ஃபூக்கோ கொடுத்த தெளிவுகளில் அடிப்படையான ஒன்று, அதிகாரம் என்பது “அரசு” என்பதாக இடதுசாரிகள் கற்பனை செய்துகொண்டிருக்கிற அரசு எந்திரம் என்று சொல்லப்படுவதின் ஒன்றில் மட்டுமே குவிந்திருப்பன்று என்பதுவும்!
இந்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாத மாற்றுக் கருத்து முட்டாள்கள் இனவெறி அரசுக்கு எதிராகச் செயல்பட்ட ஒரு இயக்க்கத்தை “அதுவும் அதிகார மையச் செயல்பாடுதான்” என்று விமர்சிப்பதில் அடிப்படைக் கோளாறு இருக்கிறது!முதல் கோளாறு, அதிகாரம் என்பது “பிற்போக்கானது – அதனால் எதிர்க்கப்பட வேண்டியது” என்ற மடப்புரிதல்.//

by Valar Mathi

எமது சிந்தனைத் தளம் புனரமைக்கப்பட்டு,அது விவேகமாக நிர்மாணிக்கப்படவேண்டும்.இந்த நிர்மாணம் எமது தேசிய இன அடையாளத்தின் இருப்பை வலுவாக நிர்மாணிக்க வேண்டும்.எமது வரலாற்றுத் தாயகத்தை நாம்(இங்கே, பாசிசப் புலிவழிப் போராட்டத்தைக் கற்பனை செய்யவேண்டாம்) இழந்துவரும் இன்றைய காலத்தில் எங்கள் மனங்களும் புனரமைக் கப்படவேண்டும். இங்கே, புலிகளின் தவறுகளைக்கொண்டே நம்மை நெருங்கிவரும் இந்திய வலுக்கரம் முறியடிக்கப்படவேண்டும்.இதற்கு நமது மக்களின் பூரணமான பங்களிப்பு அவசியமாகிறது.மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே! மக்கள் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது. எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை,அந்நிய மேற்குலக ஏகாதிபத்தியங்களின் புவிகோள நலனை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.

இதன்தொடர் புரிதலில்தாம் இந்த அதிகாரம் குறித்த புரிதலை மிக நுணுக்கமாக விளங்கும் ஜேர்மனியச் சிந்தனைக்குள்ளிருந்து புரிந்துகொண்டதன்வழி நம்மைப் புரிந்துகொண்டு அடுத்த கட்டதைத் தொடர்ந்து முன் தள்ளுவதில் இக்கட்டுரைத் தொடர் சாதகமாகச் சில புரிதலை வழங்க முடியமெனக் கருதுகிறேன்.

தொடரும்…

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.12.11

%d Bloggern gefällt das: