ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்!

நாம் வாழும் இந்தப் புவிப் பரப்பு நமக்கானதல்ல. இன்று, தொடரும்  புவிப்பரப்பின் மீதான அனைத்துப் பௌதிக நடாத்தைகளும் அதன் இருத்தல்மீதாகப் பொழியும் இடைச் செயலானது பல்வேறு தர்க்கத்தை -தாக்கத்தைக் குறித்தக்கொண்டே வரலாறு பூராகவும் மாற்றமடைந்து செல்வதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாற்றங்கள் பலவானாலும் நமது உளவியல் மனதின்மீதான உணரழுத்தம் எமக்கான புரிதற்பாட்டின் வாயிலான வாழ்வில் – இருத்தலில் வெவ்வேறு தேவைகளோடு நம்மைச் சாகடித்து விடுவதைக் கூட நாம் உணர்வது தடுக்கப்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்துள் நாமும் ஒருவங்கமென்பதெல்லாம்  எம் மீதான மிதமானவொரு உணர்வின் (  பெருமிதம்    என்பதெல்லாம் இன்று பொருத்தமற்றது) பொருத்தமற்ற கதையாடலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.இந்நிலையிலும் இன்றைய பொருளாதார நடாத்தைகளது தயவில் உயிர்வாழ்வதென்பது அந் நடாத்தைக்கு -இயக்கத்துக்கு ; அதன் வீரியத்துக்குட்பட்டவுறவென்பதை நாம் கண்டுபிடித்துக்கூறாதுபோகினும் -அதுவே உண்மை!

பரவலாகவுணரப்பட்டவிந்தமைப்பினது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியானது இன்னொரு பாரிய அழிவை இன்றையவுலகவொழுங்குக்குள் நடாத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உலக அரசுகளுக்கிடையிலானவுறவென்பது தனியே அந்தந்தத் தேசத்து உயரடுக்கின் நலன்களென்பதாகக் குறுக்கப்பட்ட பல்தேசியக் கம்பனிகளது சட்டவாதம் மனிதவிரோத முகங்களோடு[  ‪#‎TTIP‬ ‪#‎CETA‬ ‪#‎TISA #TPP #WTO etc. ] நம்மையண்மிக்கும்போது நாம் பல்வேறுபட்ட வடிவங்களில் அழித்தொழிக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடியிலிருந்து முற்றுமுழுதாகத் திசை திருப்பட்ட உழைத்துண்ணும் நாம் பல்வேறுகைப் பிளவுகளுக்குள் சிக்க வைக்கப்பட்டபின் அதுவேயொரு குரூர மனித முகத்தை உழைப்பவருக்குள் தொடர்ந்துருவாக்கி விடுகிறது.பல்வேறு தேவைகளது நலனது காரணங்கொண்டு „தேசிய அரசுகள் ;சுயாதீனச் சமுதாயம் ;சுயாண்மை ; சுய பொருள் செய்கை ;சுயாதீனச் சட்டவாதம் „என்பதெல்லாம் இல்லாமைப் போனதென் தொடர்ச்சியை நாம் தற்போது சிரியாவில் உணரத் தக்கதான எல்லா அரசியற் காரணங்களையும் அறிகிறோம்.

இதன் தொடராக இடம்பெயரும் மக்கள் கூட்டம் பல கோடிகளாகவுயர்ந்து இந்தவிடப் பெயர்வுக்குக் காரணமான தேசங்களை நோக்கி நகர்த்தப்படுவதுகூட ஒரு வியூக வகைப்பட்ட அரசியல் „என்பதை நாம் உணர்வது மறுக்கப்படுகிறது.

உழைப்பவர்கள் இந்த நெருக்கடியில் தமக்குள் ஒன்றுபடும் தருணத்தைக்கொண்டிருந்த வேளையில் அவர்கள்மீதான நவீனத் தாக்குதலாக இந்த „அகதி“ப் பிரச்சனைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள் தமது சொந்த உழைப்பாள மக்கட்டொகுதியை இடம் /புலம் பெயரும் அப்பாவிகள் [இதற்குள் சிரியாவிலிருந்து கடத்தப்படும் ISIS உறுப்பின ர்கள் சேர்த்தியில்லை] மீது பண்பாட்டு/இனக் குரூரமாக ஏவிக்கொண்டிருப்பது உலக தழுவிய ஒருங்கிணைவைத் தடுப்பதிலான நோக்கம்  முற்கட்டமாகவிருப்பினும் தற்போது மனிதவிரோதவொப்பந்தகைளைக் கையெழுத்திட்டுச் சட்டவாக்கமாக்குவதில் தத்தமது தேசத்து உழைக்கும் மக்களது இதன் மீதான எதிர்வினையை மட்டுப்படுத்துவதில் இந்தத் தேசங்கள் வெற்றிபெற்று வருகின்றன.

அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை – ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின்  ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த  மூன்றாது  உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை  ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!

அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் „தாம் செய்வது -ஆய்வது“ எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare  ] விருத்திக்கு இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!

இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின்  குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.

ஆனால் ,இவர்களை வழி நடாத்தும் தேசங்களது உயரடுக்குக் குடிகளோ தமக்குள் முரண்பட்ட கூறுகளைக்கழைந்து ஒருமைப்படுவதில் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாசிசத் தலைவன் யுங்கரின் வார்த்தையில்  : „நாம்  ரஷ்யாவுடனா நமது உறவை அமெரிக்கா வின் கட்டளைகளைக்கிணங்கி, எதையும் உடைக்க முடியாது, நாம் ரஷ்யாவுடன் சாதாரண உறவுகளைப் பேண வேண்டும்“ (  Wir dürfen unser Verhältnis zu Russland nicht durch Befehle der USA kaputt machen, wir brauchen normale Beziehungen zu Russland! – EU-Präsident Juncker)என்று அக் கூட்டம் தமது வர்க்க தளத்தைக் கவனமாக அணுகும்போது இதுவரையான பகை முரண்கொண்ட இருசிய -சீன தேசங்களது உயரடுக்கு மக்கட்டொகுதி தமது பரம வைரியாகக்கொண்ட ஐரோப்பிய -அமெரிக்க உயரடுக்கை  பகையாளி வர்க்கமாகக் கருதுவார்களா ; அல்லது எவரை?எம்மைத்தானே -உழைக்கும் நம்மைத்தானே?

பல கோடி உழைக்கும் வலு இல்லாதொழிக்கப்படப்போகிறது. கூட்டுக் கொள்ளையை  ஊக்குவிக்கும் சட்டவாதமானது Corporate identity என்னும் பொருளில் நமக்குப் புரியவைக்கப்படும் ஒவ்வொரு மூலகமும் நமது வாழ்வைப் பறித்துக்கொண்டே  முழுவுலகப் பிரபஞ்சத்தையும் தனக்குள் செரிக்கும் இன்றைய தருணத்தில் தமிழ் மொழிச் சூழல் வசவிலக்கியத்துள்ளும்;சினிமாவுக்குள்ளும் உலகைத் தேடுவதில் முட்டாட்டனத்தின் கடைக்கோடியெல்லையிற் தம் வாழ்வை மற்றவர்கள் தகவமைக்கக் கொடுத்துவிட்டு „கொபற்ற  கொல்லையிற் குப்பை“  கொட்டுவதில் „டாக்டர்கள் ;முனைவர்கள்;கலாநிதிகள்“ எனப் பட்டம் விடுவதில் தன்னிறைவு கொள்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்

10.10.2015

Werbeanzeigen

இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…

பொது வேட்பராகிய மைத்திரிபாலவுக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்

„இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியுள்ள பொது வேட்பாளருக்கு நாங்கள் எங்களது முழுஆதரவைத் தெரிவிக்கின்றோம்.“

தற்போது,வரும் ஜனாதிபதித் தேர்தற் பரப்புரைகளைக் கவனிப்பவர்களுக்கு பல சிக்கலான கேள்விகள் மண்டையைக் குடைகிறதா?

எனக்கு மண்டை வெடிக்கும் அளவுக்கு இரத்தவழுத்தம் அதிகமாகிறது.

மகிந்தா தலைமையிலான இந்தப் பாசிச அரசைக் குறித்து நமக்கு வகுப்படுத்த பலர் முள்ளி வாய்க்காலுக்குமுன்னும், பின்னுமொரு தர்க்க நியாயத்தை வழங்கி வந்தனர்.

அதாவது,மகிந்தா அரசானது – இல்லை இன்னுஞ் சிறப்பாகச் சொல்வதானால்இலங்கை அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டதுக்குட்பட்ட அரசென்றும்,அது ஜனநாயகத் தன்மையுடைய அரசென்றும், நீதி பரிபாலனம் அங்கு ஓரளவேனும் சிறப்பாக இருப்பதாகவும் கூறிவந்தனர். இதை முள்ளி வாய்க்கால் இனவழிப்புக்குப் பின்பும் பலர் கூறிக்கொண்டனர்.

சிறப்பாகத் தலித்துவ மேம்பாட்டுக் கழகத் „தோழர்“ தேவதாசனும்,அவரது தத்துவ ஆசிரியரான நிர்மலா குழுவுறுப்பினர் அண்ணன் இரகவனும் மிக நேர்த்தியாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று,பார்த்து வழிமொழிந்தார்கள்!

நிர்மலா அம்மையார் , தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் அவரது மொழியில் இலங்கையின் மகிந்தா தலைமையிலான அரசைச் சிலாகித்துப் பேசிப் புலிப் பயங்கரவாதத்தைச் சாடிக்கொண்டே வந்தார்கள்.

புலம் பெயர் „மாற்றுக் குழுக்கள்“ தம்சார்புக்குப்  பேட்டி -உரையாடலெனத் தொலைக்காட்சி,அச்சுவூடகங்களிலும் இதையேபேசியும்,எழுதியும் வந்தனர்.தேனி என்றொரு இணையத்தளத்தை நடாத்தும் நண்பர் கங்காதரன்(ஜெமினி) தனக்குத் தெரிந்த பெரும் மேதைகளான இரத்தின ஜீவன் கூல்,இராஜன் கூல்,அழகலிங்கமெனப் பல பிரபலங்களை வைத்து, மகிந்தாவுக்குள் ஜனநாயக நீரோட்டம் இருப்பதைக் கண்டறிந்தார்.அவர்களில் இப்போது இரத்தின ஜீவன் கூல் பல்ட்டியடித்து இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு இல்லை.அங்கு சட்டம்,ஒழுங்கு இல்லாதவொரு பயங்கரவாதக் கொலைக்காரத் தலைமையிலான அரசே இருப்பதாகவும்,மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வைப்பதன் முலம் சட்டத்துக்குட்டபட்ட நீதியானவொரு அரசு மீளத் தலையெடுக்குமென்றும் கொழும்பு ரெலிக்கிராப்பில் எழுதி மகிழ்கிறார்.

டேய்,உங்களுக்கு என்னங்கடா நடந்தது? அல்ஸ்கைமர் நோய் [ Alzheimer disease /Die Alzheimer-Krankheit  ]ஏதன் இருக்கா அண்ணன்,அக்காமாரே?

சரி இனித் தமிழ் மக்களிடம் வருவோம்.இவர்கள் கூறுகிறார்கள்: சட்டத்துக்குட்பட்ட அரசு, நீதியான அரசு,ஜனநாயகப் பண்புடைய அரசு,சட்டத்தால் நிர்வாகிகக்கப்படும்  ஊழலற்ற அரசு உங்களுக்குக் கிடைக்கத் தமிழ் மக்கள் மைத்திரிக்கு ஓட்டுப்போடும்படி கோருகிறார்கள்.இரத்தின ஜீவன் முதல் நம்ம அண்ண்ன்  சுசீந்திரன்வரை கும்பிட்டுக் கேட்டுக்கொள்கின்றனர்.

இப்படியே எல்லோரும் கூறிக்கொள்ளும்போது தமிழர்கள் தலையைச் சொறிவதைத்தவிர என்ன செய்ய முடியும்?

இலங்கையை மாறி,மாறி-மாறி ஆண்ட இருபெருங்கட்சிகளும் அவையோடு கூட்டு வைத்த இடது-வலது,முரடு-கரடுகளெல்லாம் இதுவரை என்ன செய்தன?

கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழினத்தின் பூர்வீக நிலப்பரப்பில் இந்தச் சட்டவாத அரசு மூலம் ,நீதி, ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி நிலைத்திருந்ததென்பதை அறியாத-புரியாத,உணராத நமக்கு இன்று , இது என்ன சாமான்கள் என்றுதாம் எண்ணதோன்றுகிறது.

இராணுவ முகாங்களும்,பொலிஸ் நிலையங்களும் அவர்களது தார்ப்பாரும் நிலவியவொரு பிரதேசத்துள் இதை எப்படிப் புரிந்துகொள்வது நண்பர்களே?

இந்த ஓட்டுக்கட்சிகளது தலைவர்கள்,பிரதமர்கள்,ஜனாதிபதிகள் இதுவரை எமக்கு அப்படியொரு அரசவொழுக்கங்கள் இருப்பதாகக் காட்டவில்லையே!இனியும் அதைக் காட்டுவார்களென்று எந்த நாயும் வகுப்பெடுக்க முடியுமா?

 „மீள ஜனநாயத்தை,நல்லாட்சியை,சுதந்திரத்தை,நீதிபரிபாலனத்தை „க் கட்டியொழுப்ப [  return to democracy, good governance, an independent judiciary, etc. ]மைத்திரிக்கு வாக்களிக்கக் கோருபவர்களே,இவையெல்லாம் முன்னம் நமக்குள் இருந்தவைகளா?

இவை இருந்ததென்றால் ஏன் இனவொடுக்குமுறையை  காலா காலமாக நமக்குள் இந்த அரசுகள் கட்டவிழ்த்துவிட்டன?

ஏன் பல இலட்சம் மலையகத் தமிழர்கள் ஓட்டுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்?

ஏன் வருடா வருடங்கள் இனக் கலவரங்கள் தூண்டப்பட்டன?

ஏன் பல இலட்சம் துருப்புகள் நமது மண்ணை அபகரித்து ஆக்கிரமித்தன?

ஏன் சத்தியாக்கிரகக்காரர்கள் மண்டை பிளவுண்டனர்?

ஏன் நமது கோணேஸ்வரிகளது கவட்டுக்குள் குண்டுகள் வெடித்தன?

கடந்த அறுபது ஆண்டுகளாக நம்மை மொட்டையடித்தவர்கள்,நம்மிடம் வந்து, இந்த எட்டாக் கனிகளைக் குறித்து வகுப்பெடுக்கும்போது கொஞ்சமும் கூச்சமில்லையா?

சிங்கள மக்களிடம் சொல்வதைத் தமிழ்பேசும் மக்களிடமும் சொல்ல முடியுமா?

நாம் ஒடுக்கப்பட்ட அரச பயங்கரவாதமென்பதை „ஜனநாயகம்,சுதந்திரம்,நல்லாட்சி,நீதிபரிபாலனம்“ என்று சொல்லும் இந்தத் திமிரை யாரடா உங்களுக்குச் சொல்லித் தந்தது?

ப.வி.ஸ்ரீரங்கன்

04.01.2015

சனாதிபதித் தேர்தல் மோசடியை நிராகரித்து மக்கள் தம் எதிர்பைத் தேர்தலன்று…

நிறைவேற்றதிகாரமுடைய „சனாதிபதி“க்கான தேர்தல்:2015

 „மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாரம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துகு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!“

இந்த 2015 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள் நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான  ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.

இது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள்  வரும் சனாதிபதித் தேர்தலையொட்டிப் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள், புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச்                   ” சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது – உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?”அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!;இந்தச் சனாதிபதித் தேர்தலில்               [[ //  ஆள்வோரையும் – ஆள விரும்புவோரையும் வாக்களித்து தெரிவு செய்வதானது, எங்களை நாங்கள் தோற்கடிப்பதாகும். இதற்கு மாறாக அவர்களை தோற்கடிக்குமாறு இடது முன்னணி கோருகின்றது. தோற்கடிப்பது என்பது இடது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை வாக்குகள் மூலம் வெல்ல வைப்பதல்ல, மாறாக நாம் ஒவ்வொருவரும் ஆள்வோரையும் – ஆளவிரும்புவோரையும் அரசியல்ரீதியாக தோற்கடித்து வெல்லுவதாகும். வாக்கு எண்ணிக்கையை வைத்து வெற்றி தோல்வியை தீர்மானிப்பதல்ல, மாறாக எமது அரசியல் என்ன என்பது தான், வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கின்றது.// : http://ndpfront.com/index.php/175-porattam/2015-01-01-18-21-20/2730-2015-01-02-20-39-14  ]] போட்டியிடுகிறாதாம் -நமது காதுகளில் பூ வைத்தபடி!

வரும் சனாதிபதித் தேர்தல் குறித்து  நிறையப் பேசியாகி விட்டது.இந்நிலையில்  மீளவுஞ் சொல்வது என்னவெனில், “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி“  அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு[ The political legitimacy of a system of government and rule  ] மீளவுருவாகுமென்பது  சுத்த மோசடியான அரசியற் கருத்தாக்கமாகும்.இது, புதிய -உலகு தழுவிய வர்த்தக -பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும்  ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல இன்று  சட்டவாத அரசுள் வகிக்கும் பாத்திரத்தையும்  [Trading away privacy TTIP, TiSA and European data protection .Read more… :  http://www.eurozine.com/articles/2014-12-19-bendrath-en.html ]   மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க  கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.

UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில்  மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.

இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதிலிருந்து  அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை வரும் சனாதிபதித் தேர்தலின் பரப்புரைகளது வியூகத்துள்  இப்போது உய்துணர முடியும். [ இதையும் வாசிக்கவும் : https://www.facebook.com/suseenthiran/posts/10152527694685373 ]

இலட்சக் கணக்கான மக்களை”தமிழீழப்போராட்டம்”செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருக்கின்றனர்.

இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும், முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடிக்கின்றனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- இடதுசாரிய முன்னணி ; புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.

இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.இப்போது ஓட்டுக்கட்சிகளது வியாபித்த ஆதிக்கத்தைத் தமது பக்கஞ்சார்ந்து இயக்கிவரும் அந்நியச் சக்திகள் இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை மிக மென்மையான முறையில் ஏற்படுத்தும் வியூகத்துள் மக்களை வீழ்த்தியுன்னர்.

இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின்  சுயாதிபத்திய அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-முன்னாள் ஆயுத இந்நாள் ஒட்டரசியற் குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இத்தனை கட்சிகள் -குழுக்கள் ஒரு  நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில்  நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் ;மக்கள் உரிமை பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.

இதற்குத் தோதாகச் சொல்லப்படும்  >>தேர்தல் வாக்கைப் பெற்று ஆட்சியில் அமருவதற்காகவோ, பேரம் பேசுவதற்காகவோ இடது முன்னணி தன்னை முன்னிறுத்தவில்லை. மக்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த மாற்றமும் வராது என்பதை சொல்லவும், அவர்களை அணிதிரட்டவுமே தேர்தலில் நிற்கின்றது. இதன் மூலம் உண்மையான மாற்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும், சொந்த வழியைக் காட்ட முனைகின்றது. -இரயாகரன் குழு .    <<  என்பதெல்லாம் மீளவும் அதே  அந்நியத் தேசங்களது நலனுக்காகக் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.

இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இருசிய மற்றும் இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் „ஏமாற்றி அழிக்கப்பட்ட“  தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.இதைப் புரிந்து,  தக்கப்படி காய் நகர்த்தும் அந்நியச் சக்திகள் தமிழ்த் தலைமைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பின் அணி திரட்டியுள்ளனர்.இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்பதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.

இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு “தமிழ் மக்கள் உரிமைசார்” கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச  ஏகாதிபத்தியத் தேசங்களை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு  „எதிர்ப்பு -மாற்று“  அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது. இங்குதாம் இலங்கையின் இரண்டு பிரதானக் கட்சிகளும் தமிழ்க் குறுங்குழுக்களை மிக நேர்த்தியாகத் தகவமைக்கின்றன;கையாளுக்கின்றன!

இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் இனங்களைப் பிரித்தாளுவதே!இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் “புரட்சி”க்காக இடதுசாரிய மாற்றீடுகாவும் [ இது சீன -இந்திய  மற்றும் இலங்கை வியூகம்]  ,இன்னொரு பக்கம்  சனநாயகத்தை உண்டு பண்ணுவதற்காக „நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி முறையை „அகற்றுதல் என்று [இது மேற்குலக வியூகம்] பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது,புலத்துப்  பணப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிற தென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். இந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.

இந்த நிலைமையில்  புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்டுரை வரைந்த குழுவின்  கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் ஆசிய -மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.

கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து //  அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைச் சேவைகளைக் கூட மறுத்து வருகின்ற அமைப்பு முறையாகிவிட்டது // என்று இலங்கைக்குள் கொட்டாவி விடுகின்றனர்.

இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் மாபியாக் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த”புரட்சிக் குழுக்களின்”குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் கட்டுரைகள் – தேர்தல் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த “தார்ப்பார்களை” உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதுதாம் இன்றைய அரசியல் யதார்த்தம்.எனவே, இந்த சனாதிபதித் தேர்தல் மோசடியை நிராகரித்து மக்கள் தம் எதிர்பைத் தேர்தலன்று கருப்புக்கொடி ஊர்வலமாக  எடுத்தாகவேண்டும்.மோசடி ஆட்சி மாற்றம் மற்றும்  அந்நிய நலன்களது வியூகத்துக்கொதிராக வீதிக்கு இறங்க வேண்டும்.இதுவே குறைந்தபட்சம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைச்  சர்வதிகாரத்துக்கெதிராகவும் ;அந்நியத் தேசங்களது தரகர்களாக -அடியாளாகவிருக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவும் அணி திரள்வதையும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியலை முதற்கண் புரிவதற்குமான வழியாகும்.இதைவிட்டு மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாரம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துக்கு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!

ப.வி.ஶ்ரீரங்கன்

யேர்மனி,

04.01.2015

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்…

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள…

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?(1)

ப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசிலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்த மூன்று தசாப்தமாக நடைபெற்ற ஈழத்துக்கான போரின் எதிர்விளைவுகளாக இதை எடுப்பதற்கில்லை.இலங்கையின் மிக அண்மைய அரசியல் நகர்வும் அதுசார்ந்த பௌத மதவாதச் சாயம் பூசிய இனவாதத்தாக்குதல் போக்குகளும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒட்டயொடுக்கி காலப்போக்கில் அவர்களை எந்தவுரிமையுமற்ற வந்தேறுகுடிகளாக்கும் பாரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது.

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பி மகிந்த அரசைக் காப்பதற்கெடுக்கும் முயற்சிக்குப் புலிகளில்லாத இலங்கையில் „பௌத -இஸ்லாம்“மதப் பிரச்சனையொன்று திட்டமிடப்பட்டு இயக்கப்படுகிறது.

இதற்கான ஒத்திகைகளைப் புலத்துத் தமிழர்களுக்குள் இயங்கும் தலித்துவ மற்றும் பிரதேசவாதக் குழுக்களைவைத்து இயக்கிய மகிந்தா அரசு, இதை மிக நேர்த்தியாக இயக்கும் பண்பை இவர்களது ஒத்துழைப்புகளோடுதாம் மீளவும், இயக்குகிறது. இதற்காவேதாம் சிங்கள பௌத அடிப்படைவாதச் சக்திகளையெல்லாம் தலித்துவக் குழுக்கள் சந்தித்து, பகிரங்கமாக ஒப்புதலளித்தும் இருந்தனர்.

இன்று நாட்டில் பேயாட்டம் போடும் ஞானசார தேரோவுடன்
Raman Yogaratnam Asura Nathan Theva Thasan

இதன்பின் தலித்துவக் குழுவின் தலைவர் தேவதாசன்குழுவும்  மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதிகளான ஞானம் குழுவும்இணைந்த „நாம் அனைவரும் இலங்கையர்கள்“ தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்து இலங்கையை முன்னேற்ற வேண்டுமெனப் பகிரங்கமாகப் பேசவும் முற்பட்டனர்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முள்ளிவாய்கால் இனப்படுகொலையைக் குறுக்கி „பாசிசப் புலிகளை“அழித்த மகிந்தாவுக்கு நன்றியும் தொடர்ந்து தெரிவித்தனர்.

இதை யாழ்பாணம்வரை சென்று, டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் -பிரச்சாரமும் செய்தனர்.இவர்களுக்கிணைவாகப் பிழைப்புவாதி குகதாசனின் தொலைக்காட்சியும் இலங்கையில் சமாதனம் தோன்றி, ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் பரப்புரையைத் தொடர்ந்து  செய்து மகிந்தாவின் பாசிச அரசைக் காத்துவந்தனர்.

இன்றிந்த முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் பார்த்து இப்படித்தான் கருத்தாடத் தோன்றினுங்கூட இத்தகைய தாக்குதல்களின் பின்னே ஒளிந்திருக்கும் அன்னிய நலன்களும் அவை சார்ந்த அரசியல் சாணாக்கியமும் அப்பாவிகளைத் தமிழரின்- முஸ்லீம்களின் மற்றும் பௌத்த சிங்களவரின் பேரால் அழித்து வருகிறது.இதற்குடந்தையாக விடுதலைவேண்டிப் போராடப் புறப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் அனைத்துமே இருக்கின்றன. ஒவ்வொரு இயக்கங்களும்-குழுக்களும்,கட்சிகளும் தத்தமது இயக்க-கட்சி நலன்களின் அரசியலை அப்பாவி மக்களின் மீது பலிகளைச் செய்து, தமது எஜமான வேண்டுதலை நிறைவேற்றும்போது சாவதென்னவோ ஏழையெளிய மக்களே.அந்த மக்கள் தமிழைப் பேசினால் என்ன சிங்களத்தைப் பேசினாலென்ன இல்லை, முஸ்லீம் ,பௌத்தர்களாகவிருந்தாலென்ன அனைவரும் மனிதர்கள்தாம்!

சிங்களப் பேரினவாதத்தின் அதீத வெளிப்பாடுகள் மக்களை வகைதொகையின்றி வருத்தியபடி அவர்களின் உயிர்களை இனப்படுகொலையாகப் பறித்துவருவதை எந்த மனிதாபிமானமிக்க நபரும் பார்வையாளராக இருந்து மௌனிக்க முடியாது.

அப்பாவி மக்கள் முள்ளி வாய்க்காலிலோ அல்லது, அழுத்கமவிலோ சரி இனவாத அரசியலுக்குத் தீனீயாக்க முடியுமென்றால் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எந்தத் தேசத்தோடும் ஒப்பிட முடியாதளவு மோசமானவொரு இருண்ட சூழலுக்குள் இருப்பதை நாம் ஊகிக்க முடியும்.உலகம் 21 ஆம் நூற்றாண்டை மனித வேட்டை-நர மாமிசம் புசிக்கும் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.இவ் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவ்கானிஸ்தானை-ஈராக்கை அத்துமீறி அழித்து வரத் தொடங்கிய ஏகாதிபத்திய எரிபொருளுக்கான பெரு வேட்டை, கொத்துக் கொத்தாகச் சிரியாவில் , உக்கிரைனில்மனிதப் பிணங்களை உற்பத்தி பண்ணி வருகிறது.இத்தகையவொரு அரசியலை உலகம் வலிந்துருவாக்கி வைத்தபடி இன்றைய தேசிய இன முரண்பாட்டை அத்தகையவொரு சதிமிகு நலன்களுக்குடந்தையாக்கி எமது மண்ணில் குருதியாற்றைத் தொடர்ந்து ஓட வைத்திருக்கிறது.

இன்று உலகந்தழுவி எப்பகுதியிலும் மனிதர்களைக் கொல்லுதல் மிகச் சாதரணமான விடையமாகப் போயுள்ளது!

பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது.இந்த அரசியல் இலக்குக்கிசைவாகக் காரியமாற்றும் மூன்றாமுலக அரசியல் மற்றும் பெருங்கட்சிகள்கூடவே அவர்களது லொபிக் கூலிக் குழுக்கள் தமது மக்களின் உண்மையான எதிரியாக மாறியுள்ளது.இதுவொரு மிக மோசமான புறச் சூழலை அமைதியாக வாழும் இனங்களுக்கிடையில் தோற்றி வைத்து,அதுசார்ந்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளாக வளர்த்துச் சம்பந்தப்பட்ட தேசங்களின் சுய வளர்ச்சியை மெல்லச் சிதைத்து வருகிறது.இத்தகைய தந்திரம் அந்நிய நிதி மூலதனத்துக்கு அவசியமானது.

இதன் தொடர்ச்சியான விளைவுகள்,போர்,பொருளாதார அழிவுகள்,நோய்,நொடி,பட்டுணிச் சாவாக மக்களை அண்டும்போது தேசத்தின் மிகப் பொதுவான மனிதவளம் நோய்வாய்க்குட்பட்டுத் தேசத்தின் சுய ஆளுமை அழிந்து தேசம் அன்னியத் தயவில் சுயசார்பிழந்து தங்கி வாழும் இனத்தை உற்பத்தி பண்ணுகிறது.இங்கே, தொடர்ச்சியான யுத்தத்துள் இருத்தி வைப்பதற்காகவும் தமது பழைய-கழிவு ஆயுதங்களை விற்றுக் காசாக்கவுமாக மூன்றாம் உலகத்தில் செயற்கையான முரண்பாடுகளையும் அதுசார்ந்த யுத்தத்தையும் ஏகாதிபத்தியக் கம்பனிகள் தொடக்கி வைத்திருக்கின்றன.இன்றைய நிலவரப்படி ஜேர்மனிய அரசு காட்டுமிராண்டி அரசான அல்ஜீரியாவுக்கு 980 டாங்கிளை 1600 கோடிகள் டொலருக்கு விற்பனை செய்கிறதென்றால் இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

இதன் தொடர்ச்சியில் மையங்கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர அரசியலானது என்றைக்கும் மூன்றாமுலகத்தில் அமைதியும் சமாதானம் மலர விருப்பமுற்றே இருக்கிறது.இது, தான் உற்பத்தி செய்வதற்கானவொரு இனமாகத் தமது தேசத்தைக் கட்டி வளர்த்தபடி மற்றைய கீழத்தேய வலயத்தை மூலதனத்தைச் சுரண்டும் வலயங்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.இத்தகைய அரசியலைப் புரிந்து கொள்ள ஆபிரிக்கக்கண்டக் கொங்கோ தேசமே நல்ல உதாரணமாக இருக்கிறது. இன்று -இப்போது இலங்கையே நல்ல உதாரணமாகும்!

இத்தகையவொரு இருண்ட பொருளாதார நலன்சார்ந்த இனவழிப்பு -வன்முறைகள்நமது தேசத்தில் அப்பாவிக் குழந்தைகளை இனப்படுகொலையாகக் கொன்று குவிப்பதற்குச் சிங்கள-தமிழ்-முஸ்லீம் இனங்களின் நலன்களின் வாயிலாக எழும் முரண்பாடாக எவரும் பார்ப்பாராகின், எமது இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது.இது இன்னும் பலிக்குப்பலி அரசியல் வடிவத்தை எட்டி, எமது மண்ணில் என்றைக்குமே அமைதியற்றவொரு சூழலை நிரந்தரமாக்கித் தேசத்தை இராணுவச் சர்வதிகாரத்தின் கீழ் கட்டிப்போடும் அபாயம் நெருங்கி வருகிறது.இதிலிருந்து மீள்வதும், இனங்களுக்கிடையாலான முரண்பாடுகளின் மீது இலகுவாக ஆதிக்கஞ் செய்யும் அன்னிய நலன்களை வெற்றிகொண்டபடி இலங்கையில் பல்லினங்களும் பரஸ்பர நட்புறவோடு வாழ்வை முன்னெடுப்பது அவசியமானவொரு அதி மானுடத் தேவையாகவே இன்றிருக்கிறது.இதையொட்டிச் சிந்தித்ததாகச் சொல்லும் புலம் பெயர் „மாற்றுக் குழுக்கள்“எனும் போர்வைக்குள் ஒடுக்குமுறையாளர்களோடு  கைகோர்த்த தலித்துவ-பிரதேசவாதப் பிளவுவாதிகள் செய்த சதி அரசியலை எங்ஙனம் புரிந்துகொள்வது நண்பர்களே?

இனப்படு கொலை அரசியலானது அப்பாவி மக்கள்மீது பயங்கரத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது கனவைச் சிதைப்பதை நாம் தொடர்ந்து“அடிக்கு அடி-இனப் படுகொலைக்குக் கொலை“எனும்படி அனுமதிப்போமானால் இலங்கையில் எந்தவொரு இனமும் தனது நிம்மதியை-நிலைத்த வாழ்வைத் தக்கவைக்க முடியாது!இது எமது தேசத்தைக் குட்டிச் சுவாராக்க எண்ணும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கும் இலங்கையின் தரகு ஆளும் கும்பலுக்குமான வேட்டைக் காடாகவும் அவர்களின் குடும்ப நலன்களுக்கான கொலைகளுமாகப் படுகொலைகள் பரந்த அரசியல் பழிவாங்கலாக நம்மைப் பூண்டோடு அழிப்பதாக முன் நகரும்.இத்தகைய அரசியல் செல்நெறி ஒருபோதும் முஸ்லீம்களுக்கோ அல்லது ,தமிழருக்கான-இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையைத் தரப்போவதில்லை. மாறாக, நமக்கு இன்னும் பல தசாப்த காலத்துக்கு இதே அழிவு வாழ்வைத் தந்து நமது வரலாறே சுடுகாடாகும்!

இதை தடுப்பதற்கான ஒரு அரசியல், இலங்கையின் இனங்களுக்கிடையலான முரண்பாட்டை முடிவுக்குக்கொணரும் இன விடுதலைசார்ந்த சுய நிர்ணயத்தை அங்கீகரிப்பதும், சுய ஆட்சியுடைய வலயங்களை உருவாக்குவதுமே இன்றைய மூன்றாமுலகத்தின் முன் இருக்கும் அரசியல் பணி.இதைச் செய்து முடிக்கும் தகமை இனங்களுக்கிடையலான ஒற்றைமையின் இருப்பிலே சாத்தியமாகும்.இந்த ஒற்றுமையைக் குலைப்பதே அன்னிய நலன்களின் பெருவிருப்பு.நாம் இதை வெற்றிகொள்வது அவசியம்.அங்ஙனம் வெற்றி கொள்ளாதவரை முள்ளிவாய்க்காலுக்குப்பின் அழுத்கமவிலும் பின் யாழ்ப்பாணத்துக்கும் ,மட்டககளப்புவுக்குமென மதவாத வன்முறையாகவும்-இன வன்முறைகளாகவும் சுழன்றடிக்கும் இலங்கைப் பாசிச அரசின் இனவழிப்பு அரசியலாகும்.இதன்வழி மகிந்தாவின் அந்நியச் சேவை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.இதற்காவேதாம் இந்தப் புலத்து லொபிக்குழுக்கள் யாவும் தமது பிழைப்புக்காக இலங்கை மக்களைச் சாதிரீதியாக-பிரதேசரீதியாக மற்றும் மதவாத ரீதியாவும் பிளந்து குருதி குடிக்கின்றனர்.இந்தப் பயங்கரவாதிகளை வெல்வதும் இவர்களை ஜனநாயகரீதியாகத் தோற்கடிப்பதும் புரட்சிகரமான அரசியலுக்குட்பட்டதே.இதையொட்டி உதிரிகளான நாம் என்ன செய்யப் போகின்றோம்?-இது கேள்வி…

( 2)

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள…

இலங்கையில் முசுலீம் இனத்தின்மீது அரசியல் வன்முறையை ஏவி விட்டுள்ள  மகிந்தா தலைமையிலான இனவாத அரசானது „தற்செயலான வன்முறைக்கு“ப் பாத்திரமற்றது என்றொரு கருத்தைப் பலர் உரையாடுகிறார்கள்.அவர்களுள் முசுலீம் அரசியற்றலைமைகள் கூட இங்ஙனம் உரையாடுவதில் தமது பதவிகளை -அமைச்சகப் பொறுப்புக்களைக் காக்கவும் முனைகின்றனர்.இந்த சிக்கலான காலத்திற்கூட இலங்கையில் ஒடுக்குமுறைக்குட்பட்ட – உட்படும் சிறுபான்மை மக்களினங்களானவை தமக்குள் இணக்கமானவொரு அரசியலைக் கொண்டியங்க முடியாத  தடைகளாக இருப்பவைகள் என்ன?

தமிழ்பேசும் மக்களது ஒரு பிரிவான மலையக மக்கள், மலையகத்தில் ஒட்டச் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில்  பொது பல சேனாவின் முகத்தோடு அந்த மக்களையும் வேட்டையாடப்போகும் மகிந்தா அரசின் தொழிலாளர்களுக்கெதிரான அசியற்போக்ககளின் விருத்தியே இத்தகைய வன்முறையாகவெழுகின்றது.இதன் மிக நுணுக்கமான செல்நெறியானது மக்களினங்களைப் பல வடிவினில் அரசு சாரத முறைமைகளில் ஒடுக்குவதும் ,அதன்வழி தத்தமது எசமானர்களான அந்நிய முதலீட்டார்களின் நலன்களை இலங்கையில் அடைவதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவதாகவே இன்றைய மகிந்தா தலைமையிலான இலங்கை அரசின்  பண்பாக -நிலைப்பாடாகவிருக்கிறது!

இன்று முசிலீம் மக்கள்மீது இலங்கை அரசால் ஏவப்படும் சிங்கள உதிரிவர்க்கமானது தனக்கான நலன்களைப் பேணத்தக்க முறைமைகளில் முசீலீம் சிறு வர்த்தகர்களைத் தாக்கியழிப்பதில் குறியாவிருக்கிறது.மதரீதியாக -மொழிரீதியாகப் பிளவுண்ட சிறு வர்த்தக நலன்களானது இக் குழுமங்களுக்குள் மிகவும் போட்டியானவொரு சூழலைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கையாகவே உருவாக்கியது.இதன் பலாபலன்களானது ஊட்டி வளர்க்கப்படும் இன -மத வாதச் சூழலைத் தகமைத்து மக்களினங்களைப் பிளந்து  அரசுக்கெதிரான அணித் திரள்வை உடைத்தெறிவதே இலங்கை -சீன அரசுகளது தந்திரமாவிருக்கிறது.

இலங்கையில் நடாத்தப்படவிருந்த இரூனேசியப் பாணி“மக்கள் எழிச்சி“ ஒட்போரது[Otpor!] தலைமையின் தூண்டலோடு சம்பந்தப்பட்டதெனினும் அஃது மேற்குலகின் வியூகம் -ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்டதென்பதையும் கூடவே , இலங்கையில் கம்யூனிச-வர்க்கவுணர்வு அதிகமாகப் போர்க் குணமிக்க பாட்டாளிகளைக்கொண்டிருப்பதென்பதும் உலகம் அறிந்ததுதாம்.இதன் திசையில் கட்டப்படும் வியூகங்களை ஒடுக்குமுறைக்குட்படும் எந்தச் சிறுபான்மையினங்களும் சரியப்புரிந்து முன்னெடுக்கும் அரசியல் வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையை மீள மறுத்தொதுக்கும் தமிழ் „மார்க்சிய“ நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:“இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்.“ என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.

1):முள்ளிவாய்காலிற் புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.அந்நியப் பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே  அரசுக்கும் , பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இஃது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.இலங்கை -அந்நிய அரசுகளது இன்றைய இலங்கை மீதான பொருளாதார நகர்வுகள் இலங்கையின் வளங்களை ஒட்டச் சுரண்டுவதிலும் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வலயத்தை வார்த்தக -அரசியல் தேவைக்குட்பக்  கையக்படுத்தும்போது வரும் மக்களது கூட்டுத் தாக்குதலைக்கொண்ட உணர்வெழுச்சி வெடித்துக் கிளம்பாதிருக்கச் செயற்கையாக இனக் குரோதத்தைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள் .இலங்கையை மாறி மாறி ஆளும் கட்சிகளானவை இன்றைய தெரிவில் வன்முறையான சகல வடிவங்களையும் தமக்குள் உள்வாங்கிச் செயற்படுத்துகின்றனர்.

2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.

3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமாக எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)

4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).

5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.

6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலாபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.

7) : இப்போது முசுலீம் -சிங்கள இனங்களுக்கிடையில் வளர்க்கப்படும் குரோதமானது திட்டமிட்ட அந்நியச்சதி என்கிறோம். இதிலிருந்து வளர்க்கப்படும் பொதுபல சேன என்ற இனவாத அமைப்பானது இலங்கைக்குள் நிகழ்த்தப்படவிருக்கும் பல்வேறு சமூக அமுக்க வினைகளுக்கானவொரு ஆரம்பம்.இத்தகைய அரசியல் வாழ்வை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்படவேண்டிய „இனங்களுக்கிடையிலான ஐக்கியம்“ இன்று அதே சக்திகளலேயேதாம் பேசவும் படுகிறது.இவற்றை எதிர்கொண்டு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பேணும் அரசாக மகிந்தாவின் அரசை எண்ணமுடியாது.அவ்வரசு முசுலீம் மக்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து இனங்களையும் அழித்துக் கரைத்துச் சிங்கள „நாம் அனைவரும் இலங்கையர்“ என்று கதையைத் தொடர்கிறது.இந்தத் திசையில் முசுலீம் மக்கள் மத்தியில் தொடரப்படும் இன்றைய இனவாதத் தாக்குதல்களுக்கும், சீன முசுலீம் முரண்பாட்டிற்கும் பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு. சீனாவில் முசுலீம் மக்களுக்கும் சீன அரசுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவுகளை [Shaanxi (province, China)Holy War in China ]-வெளிகளை [History of Muslims in Northwest China ]ஆயும் ஒரு முன்னோட்டமாகச் சீன அரசும் இதை வளர்த்து இயக்கிப் பார்த்துக்கொள்கிறது.தற்போது இலங்கையானது சீனாவின் மட்டுமல்ல பல அந்நியச் சக்திகளது பரீட்சார்த்தக்களமாகவே இருக்கிறது.சீனாவின் சமீபத்து (2009 )முரண்பாட்டில் (ethnic tensions between Uighurs and Han Chinese )பலர் கொல்லப்பட்டார்கள்.பண்டுதொட்டுச் சீனாவின் இந்த முரண்பாடுகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதால் இதை அணுகும் பல பொறிமுறைகளை நோக்கிச் சீனா நகர்கிறது[ Read more … : Studies in Islamic History and Civilization: In Honour of Professor David Ayalon ]

எனவே, இந்நிலையில் முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள முனையுந் தருணத்திற்கூட முசிலீம் இனமானதோ அதைக் குறித்துப் பேசுவதைவிட்டுப் பண்ட்டுதொட்டுச்  சிங்கள இனவாத அரசுகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பரந்துபட்ட  தமிழ்மக்களைக் குற்றக்கூண்டில் ஏற்றுவதிலேயேதாம் முழுமூச்சாகவிருக்கிறது.இதைக் கடக்கும் அரசியலைத் தமிழ்ச் சூழலை அண்மித்த அரசியற் குழுக்கள் தற்போது முன்வைத்தாகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

19.06.2014

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம்.

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம்.

கோடைகால ஜெனிவா இருக்கையின் தொடராக மூன்றாவது முறையாக ஜெனிவாவில் „திறவுகோல்“ தேடுவதென்ற நம் அரசியற் சூழலில் திரு.நிலாந்தன் அவர்கள் ஜெனாவாவைக் கையாள்வதைக் குறித்தொரு கட்டுரையை“தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?“என்ற தலையங்கத்தோடு எழுதியுள்ளார்.எப்பவும், நான் இத்தகைய கட்டுரைகளை வெறுமனவே இணையத்தில் வாசித்துவிட்டுச் செல்வது கிடையாது.அத்தகைய கட்டுரைகளைப் படியெடுத்துப் பல முறைகள்வாசித்து முக்கியமானவற்றை மீளமீளப் புரிய முனைந்தே வாசிப்பதுண்டு.நிலாந்தன் கட்டுரைக்கும் இதுவே கதி.

இதிலிருந்து:

நிலாந்தன் தனது புரிதலில் பலவிடையங்களைக் குறித்துப் பேசுகிறார்.மனந்திறந்த எழுத்தாக அஃது இருப்பதுள் சில முக்கியமான தேடலைச் சுட்டிச் சித்தரித்திருக்கும் தருணத்துள் கட்சிகள் ,இயக்கங்கள்,மற்றும்தமிழ்டயஸ்பொறாவும்,சிவில்சமூகங்களும் குறித்த மதிப்பீட்டோடு செயற்பாட்டியங்கம்,மத நிறுவனங்களதும் பங்கையும்,கூடவே,அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படிப்பாளிகள்,புத்தி ஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள்,படைப்பாளிகள் குறித்தும்,அத்துடன் இத்தகையவர்களால் செயற்படுத்தப்படும் அல்லது உருவாக்கப்படும் அபிப்பிராயங்களின் பின்னே செல்லவைக்கப்படும் சாதரணச் சனங்களையும் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ய வேண்டியதை முன்வைத்து இயங்கங் கோருகிறார்.

நல்லது!

எனது பிரச்சனைகூட எமது மக்களது மனங்களில் கேள்வியாகவிரியும் மிகச் சாதராணக் கேள்வியே.

முள்ளிவாய்க்காலுக்குப்பின்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனை என்ன?

– தமிழீழமா?,

– வடக்குக் கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி அதிகாரக்கோரிக்கையா?

– ,இலங்கை அரசால் „பண்டுதொட்டு இனப்பாகுபாட்டு முறையின்பொருட்டு“ தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்டும் இனவொடுக்குமுறையா?,

– இதுவரையான தமிழீழப் போராட்டத்தின்வழி இலங்கை அரசாலும்-புலிகளாலும் அழித்துக் குதறப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுக்கும் -உயிர் இழப்புகளுக்குமான நியாயம் கேட்கும் நிலையும்,இழக்கப்பட்டவைக்கான நஷ்டஈடும்,அபிவிருத்தியும் அதுசார்ந்த அரசியல் -பொருளாதார சுயாதிபத்யமுமா? -என்னதாம் எமது பிரச்சனை?

! அன்றி மகிந்தாவை சர்வதேச நீதிபரிபாலனத்தின்வழி தண்டிப்பதோ?

?: எதை முன்வைத்து ஜெனிவாவையும்,அந்நியத் தேசங்களையும் கையாள்வது?

உலக்தின் எங்கோவொரு புள்ளியில் இருக்கும் வளங்குன்றிய தேசமொன்றின் இனக்குழுவானது இன்றைய இந்தவுலகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமக்கானவொரு நலன்சார்ந்த நோக்குக்காக மட்டும் இந்த அந்நியத் தேசங்களைக் கையாளமுடியுமா?

திரு.நிலாந்தனே தமிழ்த் தேசியவினத்துக்குள் தற்போது உருவாகிய-திரண்ட பொருளாதார நெறி,அதன் இயக்கப்பாடு,நலன்கள் இதை முன்வைத்து அல்லது அதன் அடித்தளத்திலிருந்தெழும் கோரிக்கைகள் அதன் வழியிலான அமைப்புகள்-இயக்கங்கள் -கட்சிகள் குறித்துக் கவனப்படுத்தவுமில்லை. அப்படியொரு பொருளாதார வாழ்வே நமக்குக் கிடையாத தொனியில் வெறும் பொம்மலாட்ட ஓட்டுக்கட்சிகயாலும்,செயற்பாட்டியங்கங்களாலும்,அபிப்பிரயத்தையுருவாக்கும் சக்திகளாலும் நமக்கான கோரிக்கைகள்,அரசியல் சுயாதிபத்திய வாழ்வை, இனவொடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கானவொரு அரியல் தீர்வைக் குறித்துப் பேசுகிறார்.

இந்தச் சூழலிற்றாம் புலத்திலுள்ள ப(பி) ணப் புலிப் பினாமிகள் இலங்கையில் புதிய நிதியீடுகளைச் செய்கின்றனர்.இலங்கையின் புதிய தாரளவாதப் பொருளாதார நகர்வுள் இவர்கள் இணையுந் தருணத்திற்றாம் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பில் இராணுவத்துடனான கூட்டுக் கொள்ளையோடு வளங்களைச் சுரண்டியொரு புதிய தமிழ் உடைமையாளர்கள் உருவாகியுள்ளனர். இவர்களது நலனுக்கும், புலத்தின் புலிப்பினாமிப் புதிய நிதியீட்டாளுர்களுக்குமான முரண்பாடுகளும்,மக்கள் நலன் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கோரும் பாரம்பரிய சிறு உடமையாளுர்களுக்குமள்ள முரண்பாடுகளில் ஒரு தேசிவினமாகவெழும் தமிழ்பேசும் மக்கள்மீது செலுத்தப்படும் இனவொடுக்குமுறை-இனப்பாகுபாடுக்கான தீர்வுகள் குறித்த அரசியல் எழுகிறது.

இதன் முகம் மேற்சொன்ன உடமையாளர்கள்-நிதியீட்டாளர்கள்-புதிய முதலாளிகளது சர்வதேசத் தொடாபுகளோடிணைந்தே மேலெழுகின்ற நிலையில், நிலாந்தனின் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சக்திகள செயற்பாடுகள்,முற்றுமுழுதானதும் -பரந்து பட்டதுமான „மக்கள் நலன்“சார்ந்து இயங்க முடியுமா?அல்லது இந்திய வர்த்தக நலத்துடன் பிணைவுற்றுள்ளச் சிங்கள இராணுவவாதப் பொருளாதரப்போக்குள் ஒத்துழைத்தியங்கும்  தமிழ்ப் புதிய தரகு முதலாளிகளது இருப்புக்கான அரசியலுக்குள் பாரம்பரியமாகப் புரிய முனையும்“தமிழ்த் தேசிவினப் பிரச்சனையின்“மரபு சார்ந்த கோரிக்கைகள்,அரசியல் மற்றும் வியூகத்தின் தலைவிதி என்ன?

இந்த எதிர்வினையெழுதும் இந்நொடியில், உக்கிரையின் அமெரிக்க-ஐரோப்பிய அரசியல் நிகழ்ச்சிக்கேற்பத் தனது சுயாதீனத்தை இழந்து அவர்களது கையில் வீழ்த்தப்படும் சூழலிற்றாம் நாம் ஜெனிவாவைக் கையாள்வதில் முனைப்புறுகிறோம்.

எனவே,சிலவற்றைக் குறித்து ஏலவே பேசப்பட்ட வடிவில் மீளவும், பேசியாகவேண்டும்:

முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் „தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்“என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.இது முள்ளிவாய்க்காலில் தனது இராணுவப்பிரிவை-தலைமையை இழந்தபின் முன் தள்ளும் புதிய பொருளாதார நகர்வுகள்,இலங்கை அரசுடனான ஒப்பந்தங்கள்,ஒத்துழைப்புகள் யாவும் நமது தலைவிதியைத் தமது புதிய தேவைகளுக்கமையவும் -நட்புகளுக்காவும் மேலும்,மேலும் பல் வடிவங்களுக்குள் பிரிதியீடு செய்கின்றன.ஆனால், பாதிகப்பட்ட மக்களுக்கான எந்த அரசியல் நீதியும் இதுவரைச் சட்டபூர்வமாகக் கிடைக்கவில்லை.இந்த மக்களது இந்நிலையை வைத்தே தமிழ்ப் பொருளதாரச் சக்திகள் தமன்கானவொரு அரசியலை ஓட்டுக் கட்சிகளை முன் தள்ளி நகர்த்துகின்றனரென்பது முதலாவது பாலர் பாடம்.

புலம்பெயர்  தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும்(மேற்சொன்ன புதிய வர்த்தகர்கள்) இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.இதற்கு நிலாந்தனே சுட்டிக் காட்டிய 60 ஆண்டுகளான கொழுத்த அரசியல் -போராட்ட அநுபவமே ஆசான் என்பதும் உண்மை!இந்தப் பட்டறிவின்மீதான பாரிய கருத்தியற்றாக்குலேதாம் இனஇறு இவ் மக்களைப் புரட்டிப்போடுகிறது.இந்தப் பட்டறிவை நிர்மூலமாக்கும் அந்நியத் தேசங்களது லொபிகளேதாம் இம்மக்களின் கையறு நிலையான குறைந்தளவிலான அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூக வாழ்வியல் நெறியையும் திட்டமிட்டுச் செய்கின்றனர் அல்லது, அதையொட்டிய நகர்வை அழுத்தமாக இயக்குகின்றனர்.

பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக் காயாக்கியபடி  மக்களை அரசியல் -பொருளாதார வாழ்விலிருந்து துண்டித்தும், அவர்களையொரு ஒட்டுண்ணிச் சமூதாயமாக்கும் முனைப்பே சிங்கள இராணுவத்தின் இன்றைய முகாங்கள் வகைப்பட்ட நகர்வும் – கண்காணிப்பும்,பொருளாதாரத்துள்,வர்தகத்துள் இராணுவத் தலைமையின் செல்வாக்கும்ஆகும்!

தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தின் வளங்களைத் திருடிக்கொண்டே மக்களைத் தமது தேவைக்கேற்ப இயங்க அநுமதிக்கும் அரை இராணுப் பொருதார-அரசியல் வாழ்வில் மக்களை அரசியல் மயப்படுத்துதலென்பது பொருளாதாரச் சுயாதிபத்தியத்திலிருந்து எழும் தொழிற்சங்கள்,போராட்டங்கள் மூலமென்பது பொருளாதாரவாத்துள் ஒரு சிறு உண்மை.இதை நிலாந்தன் புரிந்திருக்க வேண்டும்.எனினும் இந்த அரசியல் மயப்படுத்தப்படாத சூழலைத் தனியே இயக்கங்கள்-கட்சிகள் மற்றும் படிப்பாளிகள்-படைப்பாளிகளுக்குள் தள்ளிவிடுதலென்பது 30 ஆண்டுகாலப் புலிகளது விதேசியவாதப் போராட்டச் செல்நெறியையும்,அவர்களது பாசிசவொடுக்குமுறையையும் தணித்துப் பேசுவதாகவும் ,அதேயளவு ஆண்டுகள் இராணுக் காட்டாட்சிகுட்பட்ட மக்கள்மீதான இலங்கை அரச பாசிசத்தின்  இக்கட்டான பௌதிக மற்றும்  உளவொடுக்குமுறை கூடவே, பொரளாதாரத்தாக்குதல் வியூகத்தையும் புறந்தள்ளுவதாவிருக்கிறது.

புலத்தைக் குறித்துப் பேசுவதானவிருந்தால்,அதாவது தமிழ் டயஸ்பொறாக் குறித்தென்று புரிக. சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் „பரந்தபட்ட மக்களது நலன்சார் போராட்டங்கள்,அரசியல் தீர்வு,இனப்பிரச்சனைக்கான ஆத்மார்த்தமான அரசியல்தீர்வுக்கான நகர்வை முன்நிபந்தனையாக்கி “ இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிஅரசியல் அணிகளைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.இவர்கள் நிலாந்தன் பார்வைக்குட்பட்ட தமிழ் டயஸ்பொறாவல்ல!

நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும்  சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் லொபிக் குழக்கள் போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.

நாம் இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க  முடியுமா நிலாந்தன்?

புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு „மாற்றுக் கருத்து மந்தைகள்“ கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன .

மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.இதுள், ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறா வலுவாக இருக்குமென்பதோ அன்றி இல்லாதிருக்குமென்பதோ பிரச்சனையல்ல!

இங்கே பிரச்சனையானது,  தமிழ்பேசும் மக்கள்சாhந்த பிரச்சனைகள், தீர்வுகள் யாவும் இத்தகைய ஜெனிவா- சட்டமன்றங்கள்-நீதிசபைகள் -பாராளுமன்றங்களுக்கு வெளியேதாம் இருக்கிறது.எனவே,நிலத்திலிருக்கும் மக்களைச் சுயமாக இயங்க அநுமதிக்கும் பொருளாத-அரசியல் வாழ்வைக் குறித்து நாம் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.

அப்படித்திருப்பும்போது தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தில் பூதாகரமாகவிருக்கும் இராணுவ முகாங்கள் மற்றும், பொருளாதார வாழ்வில் தமிழ்ப்பிரதேசமெங்கும்  இராணுவமும் அதன் துணைப்படைகளான குழுக்களின் மாபிய வழிப்பட்ட பொருளாதாரப் பொறியமைவுகமே நமது முதல் முரண்பாடுகளாக நம் விழிகள்முன விரியும்.

யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதையைக்  கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரசசார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு“ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்“எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன வியூகத்தின் வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் தமிழ் டயஸ்பொறா வகை மாதிரிக்குள் திணித்து இயக்கப்படுவதைக்குறித்து நிலாந்தன் புரிந்திருப்பார்.

இறுதியாக…

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த „தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென“ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதைத் தவிர்த்துவிட்டு, ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறாவைப் பலமானதாக்கி ,அந்நிய தேசத்தை நமக்காகக் கையாள்வதென்பது மேற்சொன்ன அந்நியச் சக்திகளது லொபிக் குழழுக்களது இருப்பையும் அவர்களது நகர்வையும் நமக்குள் உள்வாங்குவதாகவே இருக்கும்.இஃது, ஆபத்தானது.எனவே, நிலத்தில் -தாயத்தில் மக்களது சுயாதீனச் செய்பாட்டுக்கும்,வாழ்வுக்கும் அவசியமான பொருளாதாரச் சுதந்திரம் மற்றும், இராணு ஆதிக்கம் தவிர்க்கப்பட்ட அடிப்படையான எளிய ஜனநாயகச் சூழலே இப்போதைய அவசியம்.இதற்காகப் போராடுவதும் பரந்துபட்ட மக்கள் திரெண்டெழுவதும் மட்டுமேதாம் என்னைப்பொறுத்தவரை இன்று நம்முன் உள்ள ஒரே தெரிவு.இதன் அடிப்படையில் சிங்கள இராணு முகாங்கள் அகற்ப்பட்டு,அரசியல் ரீதியான சட்டவாத அரசின் ஆதிக்கமும் அதன்வழியிலான சுதந்தரமான சந்தைப் பொருளாதார நகர்வும்,உழைப்பும் தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைகொள்ளவேண்டும்.இதிலிருந்துதாம் தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல இலங்கையின் முழு மொத்த மக்களுக்குமான சட்டத்துக்குட்பட்ட அரசும்,ஜனநாயகம் உறுதிப்படும்.இது உறுதியாகதவரை தமிழ்பேசும்மக்களினதின் மீதான ஒடுக்குமுறைகள் விலகியவொரு அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கே இடமில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்

23.02.2014

ஜேர்மனி

தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.

23 ஆண்டுகளாகச் சிறையிலுள்ள ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக  முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது.இது பார்ப்பனச் சோவினது இராச தந்திரமாகும். இது குறித்துச் சில விடையங்களை நோக்குவோம்.அப்போதுதாம் இவர்களது இரட்டை முகம் புரியத்தக்கதாக மாறும்.

    „ராஜீவ் கொலையாளிகள் விடுதலை’’ என்றலறும் ஊடகங்களும்  „தேசியவாதிகளும்“ அவர்கள் பின்னாலுள்ள இந்திய ஆளும் வர்க்க நலன்களும் புரிந்துக்கொள்ளத்தக்கவுண்மைகளை மறைக்கின்றன!இராஜீவ் படுகொலை என்பது திட்டமிடப்பட்ட இந்திய ரோவின் [Research and Analysis Wing  ]சதியாகும்.இது வொரு „புலியைப் பயன்படுத்தும் “ தந்திரமாக RAW வால் நிகழ்த்தப்பட்டது.அதாவது இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு காந்திக் குடும்ப அரசியல் ஒவ்வாது.அந்தப் பிரிவுக்குக் கணிசமான அளவுக்கு இந்திய ரோவுக்குள் ஆதரவுண்டு.அஃதுதாம் இப்போது தேர்தலில் வெற்றி சூடுமெனக் கருதப்படும் மோடிக்குப் பின்னால் நிற்கும் ஆளும் வர்க்கம்.ராசீவ் கொலையின்வழி இந்திய ஆளும் வர்க்கம் ஒரே கல்லிலிருந்து 3 மாங்காய்களைப் பறித்தது!

    1: தமிழகத்திலிருந்து ராசீவ் படுகொலை செய்யப்பட்டதன்வழி தமிழ்நாடு ஈழத்துக்காகக் கெம்பி எழுவதைத் தடுத்தது.

    2.புலிகளையும் தமிழகத்து மக்களையும் உணர்வுரீதியாகப் பிளந்து அப்புறப்படுத்தியது.

    3:இந்திய ஆளும் வர்க்கம் தன்னால் படுகொலை செய்யப்பட்ட மாகத்மா காந்தி;சய்சேய்காந்தி;இந்திரா காந்தி போன்றவர்களது வரலாற்றுப்பழியிலிருந்து விடுபட்டு ராசீவ் காந்தியின் கொலைக்குள் முழு இந்தியர்களையும் திணித்தது.

     இதைத் திட்டமிட்டு மறைக்கும் ஆளும்வர்க்கத்தின் வினையான தொகையில்:

 „ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை“.எனப் பார்பன ஊடகங்கள்,

 

 „இவையெல்லாம் நடந்தது, உங்கள் பார்வையிற் பிழையுள்ளது“ -பாதிக்கப்பட்ட நமது குரல்.

 1): குஜராத்தில் 3000  இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை  நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:“ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்“.என்றதும்,

 2):காஷ்மீரில் பாகிஸ்தான் இந்தியாவுக்கெதிராக அவர்களைத்தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

 3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்,செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும்  ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை ,எது பொய்யெனத் தீர்மானிப்பதால் „ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்“ மாற்றப் படுதல் அவரது உலகத்தில் மட்டுமே சாத்தியம்!

அதை அவர் நம்பும் தளமும் முற்றுமுழுதாக அவரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இத்தகைய மனிதர்களைப் பார்த்துப் பரிதாபப் படத்தாம் முடியுமா அல்லது மாற்றுச் செயற்பாடுகளுண்டா? ஆம் உண்டு! ஆனால் அது மானுடநேசிப்பால் மட்டுமேதாம் முடியும்.அதன்வழி ஏன்-எதற்கு- எப்படி என்ற கல்வியினாற்றாம் முடியும்.24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் மற்றும் இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரால் இது சாத்தியப் படாது! ஈழத்தில் இயக்கவாத மாயைக்குள்ளிருக்கும் ஒருவர் தாம் சார்ந்த இயகத்துக்கு வக்காலத்து வேண்டுவதுபோற்றாம் இதுவும் ஒரு உளவியல் மயக்கம்-வெறி.இந்தக் கேடுகெட்ட மயக்கத்தையேற்படுத்தும் பாரிய பரப்புரைக் கட்டுமானும் அதிகார வர்க்கத்திடம் மட்டுமேயுண்டு. இதிலிருந்து விடுபடுதல் அவ்வளவு இலகுவாக இருக்காது! எனவே, இந்த உண்மையான „இந்தியர்களும்,தமிழர்களும்“  நம் மத்தியில் மலினமாகக் காணப்படுவார்கள்.இவர்கள் எப்போது மானுடராவாரென்றால் தத்தமது வீடுகளில் குண்டுகள் வந்து கொலைகளைச் செயயும்போதா??இல்லை.மாறாக மாற்றுக் கருத்துகளுக்குச் செவி சாய்ப்பதாலும்,விவாதிப்பதாலும் மட்டுமே முடியும்.

 எனவே இன்னும் மேலே செல்வோம்.இன்றைய சந்தைப் பொருளாதாரம் மக்களை இனங்களுக்கூடாக-மதங்களுக்கூடாக-மொழிக்கூடாகக் கோடு கிழிப்பதைத் திவிர்க்க முனைகிறது,கூடவே ஒரே மொழி,மத,பண்பாட்டை வலியுறுத்தித் தனது இருப்பை உறுதிசெய்யமுனையும் பல் தேசியச் சந்தைப் பொருளாதார மூலதனச் சுற்றோட்டம் பற்பல வர்ணக் கனவுகளை இளைஞ(ஞி)ர்களிடம் கொட்டி வரும் சூழலில்இந்தியத் துணைக்கண்டம் போன்ற குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய பூர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிகளும்,கிட்லர் பாணியிலான இனவாத (பாரதீய ஜனதா மற்றும் ஆர்.ஏஸ்.எஸ் கும்பலை விழிகள் முன் கொணர்க) அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.இது அன்றைய மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இங்குதாம் நிலம் சார்ந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதியூக்கத்துக் கேற்வாறு  மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை வியூகமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காத்துக்கொண்டது-கொள்கிறது!

இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உள தேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.எனறுமில்லாதவாறு இனவாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டில் ஏறுவது மேற்குலகில்கூட தொடர்கதையாக இருக்கிறுது.இந்தியாவில் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த கிடைக்கும் வெற்றி தோல்விகள் இத்தகைய ஊசாலாட்ட ஊஞ்சற் உளவியலே தீர்மானிக்கிறது.

 இதன் அப்பட்டமான நோயே „உண்மையான இந்தியன்-பார்ப்பான் -திராவிடன் „, தமிழன் போக்குகள்.என்றபோதும் பெருந்தேசிய-ஆளுமையுள்ள இனமாகவிருக்கும்  மக்களுக்குள் நிலவும் குட்டி-தரகு முதலாளிய முரண்பாடுகள் தத்தம் நாடுகளுக்குள் நிலவுகின்ற பொருளியற்போக்குக்கேற்றவாறு வன்முறைசார்ந்தும் வன்முறைசாராததுமான ஒடுக்குமுறைகளால் சில தீர்வுகளுக்கு வருவதை தேசத்தின் நலனின் பெயர் மூலம் சித்தரிக்கின்றனர்.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிதுருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.இந்த நிலையில் இந்தியா என்ற செயற்கைத் தேசமும் இதற்கு விதிவிலக்கற்று „மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்“ தாம்!இந்தத் தேசம் நிச்சியமாக உடைந்து சிதறக் காத்திருக்கிறது.

இத்தகைய நிலை தோன்றும்போது ஆளும் வர்க்கம்“வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது. இதுதாம் ஈழத்திலும் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.தற்போதைய நிலையில் இராசீவ் படுகொலையில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களது தூக்குத்தண்டனை இரத்து -விடுதலையென்ற அரசியலுள் ,கட்சி அரசியல் செய்யும் சதி நிரம்பிய அரசியலானது தமிழ்நாட்டுப் பார்ப்பனச் சாதிய நலன்களோடு பின்னப்பட்ட அதிகாரத்துக்கான வியூகமாக மாற்றப்படுகிறது.

 இது ,மகாபாரதச் சகுனியினது பாத்திரத்தை செயலலிதாவின் அரசியல் பாத்திரத்தில் இனங்காணத்தக்கதாகவே இருக்கிறது.தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடும் இராச தந்திரத்தைச் சோவின் தொட்டிலில் கற்றுக்கொண்ட தமிழ்நாட்டு முதல்வரோ தனது கெடுதியான அரசியலை 23 ஆண்டுகள் சிறையில் வாழும் மனிதர்களது உளவியலோடு விளையாடுவது ( தூக்குத்தண்டனை இரத்துவென உச்ச நீதிமன்றம் அறிவித்தவுடனேயே அவர்களைத் தமிழ்நாடு விடுதலை செய்யுமெனப் „போட்டுக்கொடுத்து“ க் காங்கிரசுக் கயவர்களை எழுச்சிகொள்ள வைத்ததும்; அதன் விளைவால் அவர்களது விடுதலையைத் தட்டிக்கழிக்க வைக்கும் முயற்சி) மனித நாகரீகமற்றது.

இந்த மனித நாகரீகத்தை ஒரு போதும் பார்ப்பனர்களிடம் காணமுடியாது.

     ஏனெனில் ,இந்தியாவில் 230 மில்லியன்கள் மனிதர்களைத் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கி -ஒடுக்கும் இந்தச் சனாதனவாதிகளிடம் எந்த மனிதாபிமானமும் கிடையாதென்பதற்கு இந்தத் தீண்டாமைச் சூத்திரமே போதுமான ஆதாரம்.இவர்களிடமிருந்து எந்த ஜனநாயக விழுமியத்தையும் நாம் எதிர்பார்ப்பது மடமையானது.

 ப.வி.ஶ்ரீரங்கன்

21.02.2014

„எதுவரையில்?“ தொடரும் எனது விவாதம் : 3

„எதுவரையில்?“ தொடரும் எனது விவாதம் : 3

திரு.சிவலிங்கம் அவர்கள் எனது எதிர்வினைக்கான குறிப்பொன்றைத் தந்திருக்கிறார்.நடைமுறைசார்ந்து செயற்படுவதற்கான சூழல் -இலங்கையில் நிலவும் நிலவரங்கள் குறித்த அவரது கேள்விகள் ;மக்களது அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் குறித்து அதிலிருந்தொரு அரசியற் தலையீடு மற்றும் செயல் முறைசார்ந்து அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை உறுதிப்படுத்துகிறார்.அது முதலாளித்துவ சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியம் என்கிறார்.இந்த நோக்கில் தலையீடு அவசியமென்கிறார்.

இது சரியானதே.இதை மறுப்பதல்ல எனது நோக்கம்.முதலாளித்துவச் சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியாமாகும் „இந்த“  அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது ஒரு கட்டத்தில் இது  Regime change  என்றளவில் உலகெல்லாம் நாம் காணும் „மக்கள்“போராட்டங்கள் -எழுச்சிகளுக்குள் மேற்சொன்ன சாத்தியத்தை முதலாளித்துவம் அநுமதித்திருக்கிறது.அதை க் கிழக்கு ஐரோப்பியத் தேசங்களிலும் ;அரேபிய வசந்தத்திலும் ஏனிப்போது உக்கரமாக நடைபெறும் ஊக்கிரைன் „எழுச்சி“யிலும் பார்க்கத் தக்கதே.இதன் அடி நாதமாக The Center for Applied Nonviolent Action and Strategies (CANVAS) தலைவர் திரு. Srdja Popovic (Otpor!) தகவமைக்கும் „மக்கள் திரள்“போராட்டங்கள் ஏலவே பல ஆட்சி மாற்றங்களைச் செய்திருக்கிறது. திபேத்தின் தலைலாமாவுக்கும் [Dalai Lama) இந்தக் CANVAS நிகழ்ச்சி நிரலுக்குங்கூட வலு வக்கணையான தொடர்புகளும்-வழிகாட்டல்களும் [ Deutschen Buddhistischen Union (DBU), ]தொடர்கிறது.திபேத்துக்கொரு Dalai Lama இலங்கைக்கொரு சோபித தேரர் எனத் தொடரும் சந்தர்ப்பங்களைக் குறித்து கேள்விகள் -சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை.

நடைமுறைசார்ந்து இயங்குவதும்;நாம் புலத்தில் உதிரிகளாகத் தத்துவத்துக்குள்க தலை புதைத்து  மேலெழுவதும் அவசியமானதுதாம்.நமது நிபந்தனையற்ற ஆதரவு- ஒத்துழைப்புக்கள் -இணைந்த போராட்டங்கள் -மக்களை அணிதிரட்டல்கள் என்பதெல்லாம் தவறாகும் தருணங்களைக் குறித்தும் நாம் தறுவாகப் புரிந்தே ஆகவேண்டும். இதை மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில் சொன்னால் : ” எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ] என்றும் சுட்டிக் காட்டுவேன்.
வணக்கத்துக்குரிய சோபித தேரர் தம் நகர்வு ஒரு அரசியல் திருப்பு முனையாக மேலெழுவதென்பது பரந்தபட்ட மக்களது திரட்சியின் வாயிலாகவே சாத்தியமாகலாம்.அது ருனேசிய -எகிப்திய „எழுச்சிகளை“நமக்கு அறிமுகப்படுத்துமொரு சூழல் இலங்கையிலுண்டு. Professor Sudarshan Seneviratne[University
of Peredeniya  ] தலைமையில் 2011 ஆம் நடைபெற்ற உரையாடலில் (Peace and Conflict Studies ) „Participating Faculty Members “ கள் கீழ்வருபவர்கள்: Srdja Popovic[ CANVAS], Todd Armstrong, Victoria Brown, Krista Bywater, Lesley Delmenico, Brigittine French, Chris Hunter, Peter Jacobson, Suchi Kapila, Leslie Lyons, Elaine Marzluff, Jenny Michaels, Wayne Moyer,  Elizabeth Prevost, Sarah Purcell, Monty Roper, Craig Upright, Timothy Werner, Eliza Willis, Shawn Womack, Mervat Youssef. இதுள் கலந்துகொண்டவர்கள் -பங்காளர்களில் பலர்  ஓட்போரது[Otpor!] ஒத்துழைப்புக்குள் இயங்குபவர்கள்.இன்றைய இலங்கையினது ஆட்சி மாற்றம் குறித்து இலங்கை மக்கள் ஆர்வப்படுகிறார்களோ இல்லையோ மேற்குலகமும் அவர்களது அடியாட் படையான  Otpor! உம் இலங்கையில் களத்திலுள்ளன.இது மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.இதை நிச்சியம் ஒட்போர் (Otpor!) செய்தே காட்டும்.இந்தச் சூத்திரத்தைப் புரிவதில் உங்களுக்கு  என்ன சிக்கல் ?

இது,சதி நிரம்பிய காலம்.

இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?

தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.இந்த அரசியல் அமுக்க வியூகத்தத்தாம் சேர்ட்யா போப்போவிச்சும் அவரது எசமானர்களான அமெரிக்காவும் -ஐரோப்பாவும் „The Center for Applied Nonviolent Action and Strategies “ என்கிறார்கள்.இதைக் காந்தியின் பெயரால் மொழி பெயர்த்தும் வைக்கின்றனர்.நான் நினைக்கிறேன் அன்று காலனியவாதிகளுக்கு முன் இந்தியப் புரட்சிகரச் சக்திகளைக் காந்தியடிகளார் காட்டிக்கொடுத்ததுபோலவேதாம் இதையும் நாம் புரிந்தாக வேண்டுமென.

மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது[ ருனெசியா மற்றும் எகிப்தைப் இப்போது பாருங்கள்]  சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு “சட்டம்-ஒழுங்கு” ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இதைத்தாம் வண.சோபித தேரரது வெற்றி அல்லது வரவு தரமுனையும்[இதற்கு அப்பாலானவொரு தெரிவை அவருக்குப் பின்னிருக்கும் உந்து சக்திகள் அனுமதிக்குமென எவரும் நம்பிக்கொள்வது அவரவர் அறிவுக்கும் -புரிந்தலுக்கும் உட்பட்டதே!].

இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.இலங்கையின் சுயாதிபத்தியத்தைக் குலைப்பதில் மேற்குலகம் மிக வேகமாகவே காரியமாற்றுகிறது.அதற்கேற்பவே மகிந்தா குடும்பத்து கோணங்கித்தனமான அரசியலும் அவர்களுக்கிசைவாகவே [மேற்குலகத்துக்கு]இருக்கிறது!

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக [ Social space, political field and political position ]இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.இங்கு வண.சோபித தேரது பாத்திரம் என்ன?

இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.இதை வலியுறுத்தியவொரு போராட்டங்கூட மக்களை அண்மித்த அடிப்படையுரிமைகள் சார்ந்த சனநாயகக் கோரிக்கையை முன் தள்ளியே தீரும்.

ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது ,தத்தமது தேசங்களுக்குள்.

இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ் நிலைக்குள்ளிருக்கும் போதே[G.H. Peiris, Sri Lanka: Challenges of the New Millennium (Colombo: Kandy Books, 2006)  ] அதைத்  துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர்.

அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த ,பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.இந்தப் புள்ளியற்றாம்  நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமைகுறித்த கேள்விகள் -முரண்பாடுகள் செயற்கையாக முன் தள்ளப்படுகிறது.இதைப் பலமான கோரிக்கையாக -அரசியல் முரண்பாடாக மாற்றுவதில் வணக்கத்துக்குரிய சோபித தேரரது அரசியற் பிரவேசம் ஒத்துழைக்கின்றது.முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொத்துக் கொத்தாக அழித்த மகிந்தாவை அம்பலப்படுத்திப் பாசிசப் புலிகளை மக்களிடம் இருந்த அந்நியப்படுத்தும் எந்தப்போராட்டம் அல்லது கருத்தைக்கூட இவர்களால் 2009 இல் தெரிவிக்க முடியவில்லை!எனினும்,இன்றைய சூழ்நிலையில் மக்களது அடிப்படைப் பிரச்சனைகள்  அரசுக்கும் மக்களுக்குமுள்ள பாரிய முரண்பாடுகள்  சனநாயகத்தை மறுத்தொதுக்கும் மாபியாப் பொருளாதார நகர்வுகளது தெரிவின் வழியென்பதால் இத்தகையப் பொருளாதார நெறியைகக் குறித்து என்ன புரிதலை வண.சோபித தேரர் கொண்டிருக்கிறார்? ; இது ஒட்போரது காலம்[Non-violent Actions and Strategies -S. Popovic)  ]அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி வருகிறது.தேசத்தின் சுயாதிபத்தியம் என்பது மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல! விவாதம் தொடரும்…

ப.வி.ஶ்ரீரங்கன்
10.02.2014

%d Bloggern gefällt das: