நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம்.

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம்.

கோடைகால ஜெனிவா இருக்கையின் தொடராக மூன்றாவது முறையாக ஜெனிவாவில் „திறவுகோல்“ தேடுவதென்ற நம் அரசியற் சூழலில் திரு.நிலாந்தன் அவர்கள் ஜெனாவாவைக் கையாள்வதைக் குறித்தொரு கட்டுரையை“தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?“என்ற தலையங்கத்தோடு எழுதியுள்ளார்.எப்பவும், நான் இத்தகைய கட்டுரைகளை வெறுமனவே இணையத்தில் வாசித்துவிட்டுச் செல்வது கிடையாது.அத்தகைய கட்டுரைகளைப் படியெடுத்துப் பல முறைகள்வாசித்து முக்கியமானவற்றை மீளமீளப் புரிய முனைந்தே வாசிப்பதுண்டு.நிலாந்தன் கட்டுரைக்கும் இதுவே கதி.

இதிலிருந்து:

நிலாந்தன் தனது புரிதலில் பலவிடையங்களைக் குறித்துப் பேசுகிறார்.மனந்திறந்த எழுத்தாக அஃது இருப்பதுள் சில முக்கியமான தேடலைச் சுட்டிச் சித்தரித்திருக்கும் தருணத்துள் கட்சிகள் ,இயக்கங்கள்,மற்றும்தமிழ்டயஸ்பொறாவும்,சிவில்சமூகங்களும் குறித்த மதிப்பீட்டோடு செயற்பாட்டியங்கம்,மத நிறுவனங்களதும் பங்கையும்,கூடவே,அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படிப்பாளிகள்,புத்தி ஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள்,படைப்பாளிகள் குறித்தும்,அத்துடன் இத்தகையவர்களால் செயற்படுத்தப்படும் அல்லது உருவாக்கப்படும் அபிப்பிராயங்களின் பின்னே செல்லவைக்கப்படும் சாதரணச் சனங்களையும் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ய வேண்டியதை முன்வைத்து இயங்கங் கோருகிறார்.

நல்லது!

எனது பிரச்சனைகூட எமது மக்களது மனங்களில் கேள்வியாகவிரியும் மிகச் சாதராணக் கேள்வியே.

முள்ளிவாய்க்காலுக்குப்பின்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனை என்ன?

– தமிழீழமா?,

– வடக்குக் கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி அதிகாரக்கோரிக்கையா?

– ,இலங்கை அரசால் „பண்டுதொட்டு இனப்பாகுபாட்டு முறையின்பொருட்டு“ தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்டும் இனவொடுக்குமுறையா?,

– இதுவரையான தமிழீழப் போராட்டத்தின்வழி இலங்கை அரசாலும்-புலிகளாலும் அழித்துக் குதறப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுக்கும் -உயிர் இழப்புகளுக்குமான நியாயம் கேட்கும் நிலையும்,இழக்கப்பட்டவைக்கான நஷ்டஈடும்,அபிவிருத்தியும் அதுசார்ந்த அரசியல் -பொருளாதார சுயாதிபத்யமுமா? -என்னதாம் எமது பிரச்சனை?

! அன்றி மகிந்தாவை சர்வதேச நீதிபரிபாலனத்தின்வழி தண்டிப்பதோ?

?: எதை முன்வைத்து ஜெனிவாவையும்,அந்நியத் தேசங்களையும் கையாள்வது?

உலக்தின் எங்கோவொரு புள்ளியில் இருக்கும் வளங்குன்றிய தேசமொன்றின் இனக்குழுவானது இன்றைய இந்தவுலகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமக்கானவொரு நலன்சார்ந்த நோக்குக்காக மட்டும் இந்த அந்நியத் தேசங்களைக் கையாளமுடியுமா?

திரு.நிலாந்தனே தமிழ்த் தேசியவினத்துக்குள் தற்போது உருவாகிய-திரண்ட பொருளாதார நெறி,அதன் இயக்கப்பாடு,நலன்கள் இதை முன்வைத்து அல்லது அதன் அடித்தளத்திலிருந்தெழும் கோரிக்கைகள் அதன் வழியிலான அமைப்புகள்-இயக்கங்கள் -கட்சிகள் குறித்துக் கவனப்படுத்தவுமில்லை. அப்படியொரு பொருளாதார வாழ்வே நமக்குக் கிடையாத தொனியில் வெறும் பொம்மலாட்ட ஓட்டுக்கட்சிகயாலும்,செயற்பாட்டியங்கங்களாலும்,அபிப்பிரயத்தையுருவாக்கும் சக்திகளாலும் நமக்கான கோரிக்கைகள்,அரசியல் சுயாதிபத்திய வாழ்வை, இனவொடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கானவொரு அரியல் தீர்வைக் குறித்துப் பேசுகிறார்.

இந்தச் சூழலிற்றாம் புலத்திலுள்ள ப(பி) ணப் புலிப் பினாமிகள் இலங்கையில் புதிய நிதியீடுகளைச் செய்கின்றனர்.இலங்கையின் புதிய தாரளவாதப் பொருளாதார நகர்வுள் இவர்கள் இணையுந் தருணத்திற்றாம் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பில் இராணுவத்துடனான கூட்டுக் கொள்ளையோடு வளங்களைச் சுரண்டியொரு புதிய தமிழ் உடைமையாளர்கள் உருவாகியுள்ளனர். இவர்களது நலனுக்கும், புலத்தின் புலிப்பினாமிப் புதிய நிதியீட்டாளுர்களுக்குமான முரண்பாடுகளும்,மக்கள் நலன் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கோரும் பாரம்பரிய சிறு உடமையாளுர்களுக்குமள்ள முரண்பாடுகளில் ஒரு தேசிவினமாகவெழும் தமிழ்பேசும் மக்கள்மீது செலுத்தப்படும் இனவொடுக்குமுறை-இனப்பாகுபாடுக்கான தீர்வுகள் குறித்த அரசியல் எழுகிறது.

இதன் முகம் மேற்சொன்ன உடமையாளர்கள்-நிதியீட்டாளர்கள்-புதிய முதலாளிகளது சர்வதேசத் தொடாபுகளோடிணைந்தே மேலெழுகின்ற நிலையில், நிலாந்தனின் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சக்திகள செயற்பாடுகள்,முற்றுமுழுதானதும் -பரந்து பட்டதுமான „மக்கள் நலன்“சார்ந்து இயங்க முடியுமா?அல்லது இந்திய வர்த்தக நலத்துடன் பிணைவுற்றுள்ளச் சிங்கள இராணுவவாதப் பொருளாதரப்போக்குள் ஒத்துழைத்தியங்கும்  தமிழ்ப் புதிய தரகு முதலாளிகளது இருப்புக்கான அரசியலுக்குள் பாரம்பரியமாகப் புரிய முனையும்“தமிழ்த் தேசிவினப் பிரச்சனையின்“மரபு சார்ந்த கோரிக்கைகள்,அரசியல் மற்றும் வியூகத்தின் தலைவிதி என்ன?

இந்த எதிர்வினையெழுதும் இந்நொடியில், உக்கிரையின் அமெரிக்க-ஐரோப்பிய அரசியல் நிகழ்ச்சிக்கேற்பத் தனது சுயாதீனத்தை இழந்து அவர்களது கையில் வீழ்த்தப்படும் சூழலிற்றாம் நாம் ஜெனிவாவைக் கையாள்வதில் முனைப்புறுகிறோம்.

எனவே,சிலவற்றைக் குறித்து ஏலவே பேசப்பட்ட வடிவில் மீளவும், பேசியாகவேண்டும்:

முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் „தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்“என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.இது முள்ளிவாய்க்காலில் தனது இராணுவப்பிரிவை-தலைமையை இழந்தபின் முன் தள்ளும் புதிய பொருளாதார நகர்வுகள்,இலங்கை அரசுடனான ஒப்பந்தங்கள்,ஒத்துழைப்புகள் யாவும் நமது தலைவிதியைத் தமது புதிய தேவைகளுக்கமையவும் -நட்புகளுக்காவும் மேலும்,மேலும் பல் வடிவங்களுக்குள் பிரிதியீடு செய்கின்றன.ஆனால், பாதிகப்பட்ட மக்களுக்கான எந்த அரசியல் நீதியும் இதுவரைச் சட்டபூர்வமாகக் கிடைக்கவில்லை.இந்த மக்களது இந்நிலையை வைத்தே தமிழ்ப் பொருளதாரச் சக்திகள் தமன்கானவொரு அரசியலை ஓட்டுக் கட்சிகளை முன் தள்ளி நகர்த்துகின்றனரென்பது முதலாவது பாலர் பாடம்.

புலம்பெயர்  தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும்(மேற்சொன்ன புதிய வர்த்தகர்கள்) இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.இதற்கு நிலாந்தனே சுட்டிக் காட்டிய 60 ஆண்டுகளான கொழுத்த அரசியல் -போராட்ட அநுபவமே ஆசான் என்பதும் உண்மை!இந்தப் பட்டறிவின்மீதான பாரிய கருத்தியற்றாக்குலேதாம் இனஇறு இவ் மக்களைப் புரட்டிப்போடுகிறது.இந்தப் பட்டறிவை நிர்மூலமாக்கும் அந்நியத் தேசங்களது லொபிகளேதாம் இம்மக்களின் கையறு நிலையான குறைந்தளவிலான அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூக வாழ்வியல் நெறியையும் திட்டமிட்டுச் செய்கின்றனர் அல்லது, அதையொட்டிய நகர்வை அழுத்தமாக இயக்குகின்றனர்.

பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக் காயாக்கியபடி  மக்களை அரசியல் -பொருளாதார வாழ்விலிருந்து துண்டித்தும், அவர்களையொரு ஒட்டுண்ணிச் சமூதாயமாக்கும் முனைப்பே சிங்கள இராணுவத்தின் இன்றைய முகாங்கள் வகைப்பட்ட நகர்வும் – கண்காணிப்பும்,பொருளாதாரத்துள்,வர்தகத்துள் இராணுவத் தலைமையின் செல்வாக்கும்ஆகும்!

தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தின் வளங்களைத் திருடிக்கொண்டே மக்களைத் தமது தேவைக்கேற்ப இயங்க அநுமதிக்கும் அரை இராணுப் பொருதார-அரசியல் வாழ்வில் மக்களை அரசியல் மயப்படுத்துதலென்பது பொருளாதாரச் சுயாதிபத்தியத்திலிருந்து எழும் தொழிற்சங்கள்,போராட்டங்கள் மூலமென்பது பொருளாதாரவாத்துள் ஒரு சிறு உண்மை.இதை நிலாந்தன் புரிந்திருக்க வேண்டும்.எனினும் இந்த அரசியல் மயப்படுத்தப்படாத சூழலைத் தனியே இயக்கங்கள்-கட்சிகள் மற்றும் படிப்பாளிகள்-படைப்பாளிகளுக்குள் தள்ளிவிடுதலென்பது 30 ஆண்டுகாலப் புலிகளது விதேசியவாதப் போராட்டச் செல்நெறியையும்,அவர்களது பாசிசவொடுக்குமுறையையும் தணித்துப் பேசுவதாகவும் ,அதேயளவு ஆண்டுகள் இராணுக் காட்டாட்சிகுட்பட்ட மக்கள்மீதான இலங்கை அரச பாசிசத்தின்  இக்கட்டான பௌதிக மற்றும்  உளவொடுக்குமுறை கூடவே, பொரளாதாரத்தாக்குதல் வியூகத்தையும் புறந்தள்ளுவதாவிருக்கிறது.

புலத்தைக் குறித்துப் பேசுவதானவிருந்தால்,அதாவது தமிழ் டயஸ்பொறாக் குறித்தென்று புரிக. சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் „பரந்தபட்ட மக்களது நலன்சார் போராட்டங்கள்,அரசியல் தீர்வு,இனப்பிரச்சனைக்கான ஆத்மார்த்தமான அரசியல்தீர்வுக்கான நகர்வை முன்நிபந்தனையாக்கி “ இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிஅரசியல் அணிகளைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.இவர்கள் நிலாந்தன் பார்வைக்குட்பட்ட தமிழ் டயஸ்பொறாவல்ல!

நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும்  சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் லொபிக் குழக்கள் போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.

நாம் இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க  முடியுமா நிலாந்தன்?

புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு „மாற்றுக் கருத்து மந்தைகள்“ கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன .

மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.இதுள், ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறா வலுவாக இருக்குமென்பதோ அன்றி இல்லாதிருக்குமென்பதோ பிரச்சனையல்ல!

இங்கே பிரச்சனையானது,  தமிழ்பேசும் மக்கள்சாhந்த பிரச்சனைகள், தீர்வுகள் யாவும் இத்தகைய ஜெனிவா- சட்டமன்றங்கள்-நீதிசபைகள் -பாராளுமன்றங்களுக்கு வெளியேதாம் இருக்கிறது.எனவே,நிலத்திலிருக்கும் மக்களைச் சுயமாக இயங்க அநுமதிக்கும் பொருளாத-அரசியல் வாழ்வைக் குறித்து நாம் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.

அப்படித்திருப்பும்போது தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தில் பூதாகரமாகவிருக்கும் இராணுவ முகாங்கள் மற்றும், பொருளாதார வாழ்வில் தமிழ்ப்பிரதேசமெங்கும்  இராணுவமும் அதன் துணைப்படைகளான குழுக்களின் மாபிய வழிப்பட்ட பொருளாதாரப் பொறியமைவுகமே நமது முதல் முரண்பாடுகளாக நம் விழிகள்முன விரியும்.

யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதையைக்  கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரசசார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு“ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்“எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன வியூகத்தின் வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் தமிழ் டயஸ்பொறா வகை மாதிரிக்குள் திணித்து இயக்கப்படுவதைக்குறித்து நிலாந்தன் புரிந்திருப்பார்.

இறுதியாக…

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த „தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென“ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதைத் தவிர்த்துவிட்டு, ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறாவைப் பலமானதாக்கி ,அந்நிய தேசத்தை நமக்காகக் கையாள்வதென்பது மேற்சொன்ன அந்நியச் சக்திகளது லொபிக் குழழுக்களது இருப்பையும் அவர்களது நகர்வையும் நமக்குள் உள்வாங்குவதாகவே இருக்கும்.இஃது, ஆபத்தானது.எனவே, நிலத்தில் -தாயத்தில் மக்களது சுயாதீனச் செய்பாட்டுக்கும்,வாழ்வுக்கும் அவசியமான பொருளாதாரச் சுதந்திரம் மற்றும், இராணு ஆதிக்கம் தவிர்க்கப்பட்ட அடிப்படையான எளிய ஜனநாயகச் சூழலே இப்போதைய அவசியம்.இதற்காகப் போராடுவதும் பரந்துபட்ட மக்கள் திரெண்டெழுவதும் மட்டுமேதாம் என்னைப்பொறுத்தவரை இன்று நம்முன் உள்ள ஒரே தெரிவு.இதன் அடிப்படையில் சிங்கள இராணு முகாங்கள் அகற்ப்பட்டு,அரசியல் ரீதியான சட்டவாத அரசின் ஆதிக்கமும் அதன்வழியிலான சுதந்தரமான சந்தைப் பொருளாதார நகர்வும்,உழைப்பும் தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைகொள்ளவேண்டும்.இதிலிருந்துதாம் தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல இலங்கையின் முழு மொத்த மக்களுக்குமான சட்டத்துக்குட்பட்ட அரசும்,ஜனநாயகம் உறுதிப்படும்.இது உறுதியாகதவரை தமிழ்பேசும்மக்களினதின் மீதான ஒடுக்குமுறைகள் விலகியவொரு அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கே இடமில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்

23.02.2014

ஜேர்மனி

Advertisements

40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து…

40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து…

யோசித்துப் பார்க்கிறேன்.1988 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு அன்று,தட்டச்சு செய்த வெறும் காகிதங்கள்தாம் அழைப்பிதழ். கையெழுத்துப் பத்திரிகைகள்,தட்டச்சில் எழுதிப் போட்டோப் பிரதி செய்த பத்திரிகைகளைத் தவிர நாம் ஒன்று கூடுவதற்கான அறிவிப்பை எதிலுஞ் செய்யவில்லை! எனினும்,கணிசமானவர்கள் பங்குபற்றியதும்,கருத்துப் பரிமாறியதும்,அடிபட்டதும்-குத்துப்பட்டதும் கருத்துக்களறாற்றாம்.அத்தகைய சந்திப்பு ஒரு கட்டத்தில் பிழைப்பு வாதிகளது கைகளில் ஏதோவொரு காரணத்துக்காகச் சென்றபோது அதைத் தட்டிக் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பாய் பொண் [Bonn-Germany] சோமசுந்தரம் அத்தகைய பிழைப்புவாதிகளில் ஒருவர்.இது குறித்துச் சிந்தனை ஆசிரியரோடு உரையாடினேன்.அவர்,வழமையான புன்னகையோடு மௌனித்தார்.இதே சோமசுந்தரம் நமக்கு இந்தியாவிலிருந்து ஒரு தமிழ்த் தட்டச்சைக் கொணர்ந்து தந்துவிட்டு (1989 ஆம் ஆண்டு), 1200 டொச்சு மார்க்கைப் பணமாக வேண்டினார்.துடிக்கத்துடிக்கப் பணத்துக்காய் அனைத்தையும் தப்பாகவே செய்பவர்கள் இலக்கியச் சந்திப்பை ஒரு கருவியாகப் பயன் படுத்தியது உண்டு.

இன்று,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்புக் குறித்து பௌசர் தீபம் தொலைக் காட்சியில் நிகழ்வு குறித்து நேரடியாக உரையாடி விளம்பரஞ் செய்யுமளவுக்கு நமக்குள் வசதிகள் பெருகிவிட்டன.இத்தகைய வசதிகளின்வழி, இந்த இலக்கியச் சந்திப்பில் தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட இனவழிப்புக்குறித்து ஒருமித்து முடிவொன்றை இலங்கைப் பாசிச அரசுக்கெதிராகத் தீர்மானமாக இச் சந்திபுக்குழு வெளியிட்டு , இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மை இனங்கள்மீது இனித் தொடரப்போகும் அராஜக அரசியலைக் குறித்து எச்சரித்து, அவர்களை அநாதவர்கள் எனும் தரப்பிலிருந்து அரசியல் உரிமை கோரும் விவேகமான மக்கள் கூட்டமாக மாற்றும் முன் நிபந்தனைகளாக இந்தத் தீர்மானம் அமையவேண்டும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும்.இதுதாம் ஒரு கூட்டு முயற்சிக்கான அரசியலை நமக்குள் தொடர முடியும்.இதுள் உடன்பாடுகாண முடியாதுபோயின் இச்சந்திப்பு ஒடுக்குமுறையாளர்களது நிகழ்ச்சிக்கேற்பவே பயணிக்க முடியும்.இதுதாம் இன்றைய அரசியலாகவும் நமக்குள் நிகழ்த்தப்படுகிறது.இதைக் கடக்கவே இலக்கியச் சந்திப்பு அன்று தோன்றியதும் அதை முன்வைத்த தெரிவுகளோடு பயணித்துக்கொண்டதும்“மாற்றுக் கருத்து-அரசியலை“தொடரவே!

சிங்கள இனவாத அரச யுத்த வன்முறையாலும்-பாசிசப் புலிகளது அராஜகப் போராட்டத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பல வடிவினில் பல தளத்தில் இன்றும் இலங்கை அரசால் தண்டிக்கப்படுவது நாம் அறிந்தது!

தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தமானது வரலாற்றில் மன்னிக்க முடியாதது.இன்றைய இலங்கைக்குள் இராணுவவாத அரசியல் வியூகத்தின்வழி தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய வாழ்விடங்கள், அவர்களது ஐதீகத் தேசமானது சிங்கள இராணுவச் சுற்றி வளைப்பு-மற்றும், அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்துள் கட்டுப்படுத்தப்பட்டு மெல்லத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரங்களும் மனித வளமும் சுரண்டப்படுகிறது.இதுவொரு புதிய குட்டி முதலாளியப் போக்காக, இராணுவப் பொருளாதார அசைவியக்கமாகத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் அரசியலானது மிகப் பயங்கரமானவொரு அரசியல் வாழ்வைத் தமிழ்பேசும் மக்கள்மீது இனவாதஞ்சார்ந்து சட்டபூர்வமாக ஏவியுள்ளது.

இந்த நிலையுள்,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்பானது கணிசமாகப் புலம் பெயர் அரசியல்-இலக்கியச் செயற்பாட்டாளர்களை இணைத்துச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள நிலையில் இவர்களது, இந்தச் சந்திப்பு-இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகால நோக்கை இன்னும் கடைப்பிடிப்பதாகவிருந்தால்- இலங்கையின் இராணுவ ஆட்சி குறித்தும், தமிழ்பேசும் மக்கள்மீது சட்டவாத அரசின் விழுமியங்களைத் தட்டிக் கழித்தும்-வன்முறையைப் பல தளத்தில் குறிப்பாக பௌதிக இருத்தலில் ஏவியுள்ளதென்பதையும், ஒரு குழுவினது சர்வதிகாரமாக இராணுவத் தலைமையைக்கொண்டு தமிழ்பேசும் மக்களையும் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களையும் கண்காணித்து, வன்முறை ஜந்திரத்தின்வழி ஒடுக்கும் இன்றைய அரசியலை இல்லாதாக்கும் ஆரம்பப் புள்ளிகள் குறித்து இச் சந்திப்பு தீர்மானகரமான உரையாடலையும், அது குறித்த பகிரங்கமான தீர்மானத்தை (இனவழிப்பு நிகழ்த்திய இலங்கை அரசைக் கண்டித்தும்) உலகுக்குக்குச் செய்யவேண்டும்.

இத்தகைய அரசியல் நோக்கில்-விடுதலையின் தெரிவில் அதைப் பிரகடனப்படுத்தியும் தீர்மானம் வெளியிடப்பட்டு,எதிர்கால இலக்குகளும்,இலங்கைத் தேசத்தில் ஜனநாயக ரீதியாக அனைத்து மக்களையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் ஒரு சட்ட பூர்வ அரசை மீள மலர வைக்கும் முயற்சிக்கு இந்த இலக்கியச் சந்திப்பு பணியாற்ற வேண்டும்.

இதைச் செய்யாது 41 வது இலக்கியச்சந்திப்பை இலங்கைக்கு நகர்த்துபவர்கள் இலங்கை அரச நிகழ்சிக்குடந்தையாகவே பயணிப்பர்.இதுதாம்,இன்றைய இலங்கை அரசியலின் தலைவிதி.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

31.03.2013

புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச…

வன்னியில் கொத்துக் கொத்தாக மக்களை அழித்த    இலங்கையைக் கேட்டுவைத்த சுகனார்: தூ…

=======================

Sugan Kanagasabai:

=======================

ஈழத்தமிழர்களே இப்படியான காட்டுமிராண்டித்தனமான முட்டாள்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைதானா ! உங்களுடைய எல்லாவகையான இழப்புகளையும் ,துன்பங்களையும் இப்படியான ஒரு செயல் எதுவுமில்லாமல் செய்துவிடும் ,அனைவரும் கண்டிக்கவும் அவரிடம் மன்னிப்புக் கேட்கவும் வேண்டும் நாம் தயாரா ? தமிழக புத்தியீவிகள் இந்த தமிழ் பாசிசத்தை கண்டிக்க முன்வரவேண்டும் !

(தமிழகம் வந்த புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி தமிழர்கள் …. )

Sugan Kanagasabai : பாரீர் இதுதான் தமிழர் நாகரீகம் தூ ! தூ !

==============================================

முட்டையில் மசிர் :1

==============================================

இலங்கையில் புத்த சியோனிசவாதமானது இனவழிப்பைச் செய்யுமளவுக்கு உயர்ந்து, இலங்கையின் சிறுபான்மை இனங்களை அச்சப்படுத்திச் சமுதாயக் கொலையைச் செய்யுமொரு குறியீட்டு அரசியலாகவும் இருக்கிறது.புத்த மதப் பிக்குகள் இலங்கையின் இனவாத அரசின் மிகக் கடுமையான இனவாதப்போக்கின் வடிவமாகவும்-உந்துசக்தியாகவும் இருக்கின்றனர்.இலங்கைச் சிங்கள இனத்தின் வரலாறே புத்த மதவாதச் சியோனிசத்துள் மாண்டு போய்ப் புத்தமதமென்பது இனவொடுக்குமுறையின் குறியீடாகவும்,புத்த பிக்குகள்  இனவாதிகளாகவும், ஒடுக்குமுறையாளர்களாகவுமே புரியும் சூழலுக்குள் தம்மை வளர்த்தெடுத்துத்  தமிழ்பேசும் மற்றும் , சிறுபான்மை இனங்களது மிக முன்னேறிய எதிரிகளாகத் தம்மை இலங்கையில் வடிவமைத்ததன் பயனே தமிழகத்தில் இத்தகைய தாக்குதல்கள் உணர்வு வழிப்பட்ட எதிர்ப்பாக இருக்கிறது.

இதையொட்டிக் கண்டிப்பதைவிட  முற்பகல் செய்தால் பிற்பகல் விடியுமென்பதையும் நினைவிலிருத்தும்போது வினைவிதைத்தவர்கள் அறுக்கிறார்களென்பதும் உண்மையாகிறது.

இதை, இலங்கைப் புத்தமத சபை புரிந்துவிட்டடால் இலங்கையில் பிரச்சனைகளது புள்ளி மதங்கடந்து, அரசியல் ரீதியாகத் தீரும் சந்தர்ப்பம் வாய்க்கும்.

இதைப் புரியாமல் தமிழர்கள்கள் மீது காறி உமிழ்வது,  அரசியல் புரியாதமாதிரி நடிக்கும் பிழைப்புவாதிகளுக்கே உரியது.

எது எப்படியிருப்பினும் ,இத்தகைய தாக்குதலை செய்யத் தூண்டும் உளவியலைத் தோற்றுவித்தவர்களே இலங்கைப் புத்த பிக்குகள்தாம்.எனினும்,புத்தபிக்குகள் என்பதே இனவாதிகள் எனும் குறியீடாகிய இலங்கை வரலாற்றிலிருந்து மனிதர்களாக நாம் முன்வைப்பது :“இத்தகைய தாக்குதல்கள் அநாகரீகமானது.இதைச் செய்யும் உணர்வு அரசியலை விட்டொழியுங்கள் மக்களே!;கட்சிசார் அரசியல் இலாபங்களுக்குப் பலியாகதீர்கள் இளைஞர்களே!“.

==================================

முட்டைக்குள் குஞ்சு :2

==================================

தமிழக மாணவர் கலகம் திறக்கும்   அரசியல் இலக்கு:உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை உள் நுழைக்கும் தந்திரம்!

இன்று ,உலகமெல்லாம் பிரச்சனைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பொருள்வளத்தைச் சமாந்தரமாக மேலிருந்து கீழ் பங்கீடு செய்யாமால் கீழிருந்து மேலே குவிக்கப்படும் செல்வத்தால் மையங்கொள்கிறது.இது, பலதரப்பட்ட பிரச்சனைகளையும் பகுதி, பகுதியாகவும் தொட்டுச் செல்கிறது.இதைத் தடுப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் பொலிசைப் பயன்படுத்துவதும் அதை அராஜகக் கும்பலாக்குவதும் தெரிந்ததே.எனினும் ,பொலிசின்மீது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பாத ஆளும் வர்க்கங்கள் , மெல்லச்  சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை நுழைக்க விரும்புகிறது.

இது, மேற்குலக உயர்ந்த  ஜனநாயகத் தேசங்களிலேயே இப்போது விவாதத்துக்கு வருகிறது.இதைத் தொடர்வதற்காக உள் நாட்டில் கலவரங்களைச் செயற்கையாகச் செய்யத் தூண்டும் ஆளும் வர்க்கமானது ,இதற்காகக் கணிசமான மக்களையும் பலியாக்கி வருகிறது.அவர்களது உண்மையான பிரச்சனைகளை மையமாக வைத்து இத்தகைய தகவமைப்பைச் செய்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களது கலகத்தின் வழி ,இத்தகையவொரு ஆபத்தை நாம் உணருகிறோம்.இது,தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் தொடரும் கதைதாம்.இத்தகைய கலகத்தின்வழி இராணுவம் உள்ளகக் குடிசார் நிர்வாகத்துள் மெல்ல நுழையும்.

நிரந்தரமாகவே, மக்களைக் கண்காணிக்கும் காவலரங்குகளை ஆங்காங்கே நிறுவிக்கொள்ளும்.இது,மக்களது இயல்பான வாழ்வைச் சிதைக்கும் பல புள்ளிகளைத் தொடும்.

சட்டரீதியாக இராணுவத்தை, உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் நுழைத்துப் பொலிசினது செயற்பாடுகளைத் தனி இராணுவ நிலைக்கு உயர்த்தும் பொறியைப் புரிவதென்பதுதாம் இனிமேலான சனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்கும்.

-ஶ்ரீரங்கன்

16.03.2013

ஜெயமோகன்களைவிட்டு இவர்களைக் கவனியுங்கள்!

முள்ளி வாய்கால் போரழிவுகளை மூன்றாவது ஆண்டாக நினைவு கூருகிறோம்.போரினது முகம் மிகக் கொடியதென்பதை நமது மக்கள் நேரிடையாகத் தரிசித்த“தமிழீழப் போர்“,நிச்சியமாகச் சிங்கள இனத்தின் வெற்றியாகப்பட்ட அரசியலொன்றும் புதுமையானதோ அல்லது மாபெரும் கொடுமையென்றோ எடுப்பதற்கில்லை!;இந்தவுலகத்தின் வரலாற்றில் போரும்,சாவும் வர்க்க  அரசியலாகவே விரிகிறது.

„இந்தியா இலங்கையில் மக்களைப் பாலியற் பலாத்தகாரஞ் செய்ததா, அன்றிக் கொன்றதாவென்றும்“,அன்றி,“அங்ஙனம் எதுவுமே நடக்கவில்லை.“அஃது,“தமிழ்ப் பாசிசத்தின் பொய்யுரை“ என்றுஞ் சொல்பவர்களைக் காட்டிலும் பெரும் ஆபத்தானவர்களை மிக எளிதாக அறியக் கூடியதாகவிருக்கவில்லை!

அவர்களை,எங்ஙனம் அறியமுடியும்?

இதோ,“இந்தியாவின் துணையோடுதாம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.இந்தியாவைப் பகைக்காத அரசியலைத் தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவேதாம் தமிழ் மக்களது பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைக்கவேண்டும்.இந்திய-இலங்கை அரசை குறை கூறாமல்,திட்டித் தீர்க்காமல் அவர்களோடானவொரு இணக்க-இணைவரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்திய நலனுக்குப் பாதிப்பில்லாத அரசியல் தீர்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,எனவே,அத்தகைய அரசியலுக்குள் இந்தியாவை இழுப்பது அவசியம்.“என்கின்றனரே பலர்,அவர்கள் தற்போது புலி,எலி,சிங்கம் என்ற எல்லா இயக்கத் தளங்களிலுமிருந்து இத்தகைய கோசத்தினடிப்படையில் ஒன்றாய்க் கைகோர்க்கின்றனரே,அவர்கள்தாம் இப்போது மிகப்பெரும் ஆபத்தானவர்கள்.

இத்தகைய கோசத்திலிருந்து புத்தக வெளியீடுகள்,முன்னுரைகளென எழுதித் தள்ளப்படும் இந்த இந்திய லொபிகளது இயக்கங்கள் தாண்டிய ஒருங்கிணைவானது இந்திய வல்லாதிக்கம் எங்ஙனம் அனைத்து இயங்கங்களை,அரசியல் கட்சிகளைத் தனது லொபிகளுடாகவும்,பினாமிகளுடாகவும் வழி நடத்தினரென்பதற்கு நல்ல சான்றாகிறது.

வரதராஜப் பெருமாள் தலைமையில் மண்டையன் குழுவை நிறுவிய இந்திய ரோ இறுதியில், முள்ளி வாய்க்கால்வரை அதே மண்டையன் குழுவைப் பல வடிவங்களில் நகர்த்தியது.எவரொருவர் வரதராஜப் பெருமாளை அல்லது இந்திய ரோவால் வழி நடாத்தப்பட்ட அனைத்து இயக்கத் தலைமைகளை வழிபடத் தொடங்குகிறாரோ அவர் நிச்சியம் இந்தியாவால் களத்துக்கு இறக்கப்பட்டவரே.

இந்த வரிசையில், இலங்கையில் போராட்ட அநுபவங்களைச் சொல்பவர்களும்,புலியிலிருந்து புதிய அரசியலைச் சொல்பவர்களும்,படைப்பாளிகளென்ற போர்வையில் இந்தியாவுக்கு விசுவாசமாகக் கருத்துக் கட்டுபவர்களும் ஏராளம் பேர்கள் புலத்திலும்-நிலத்திலும் கால்பதித்து வருகின்றனர்.

இந்திய இராணுவம் இலங்கையில் பாலியற் பலாத்தகாரம்,கொலை,கொள்ளையில் ஈடுபடவே இல்லை என்று வாதிப்பவர்களைக்காட்டிலும்,இந்தியாவோடிணைந்தும்,இந்திய அரசின் உதவியுடனும் தீர்வு செய்வது சாத்தியமான வழி என்பவர்களேதாம் இந்திய இராணுவத்தின் அனைத்து மனித விரோதச் செயலையும் ஒருங்கே ஆதரித்து,வரவேற்பவர்கள்!இவர்களை விட்டுவிட்டு,இந்தியப் பார்பனியத்தின் அடிப்பொடிகளை-ஜெயமோகன்களைச் சாடி என்ன பயன்?இவர்கள் தமது வர்க்க-சாதியத் திமிரில் அதைச் செய்யும் அரசியலையேதாம் பண்டுதொட்டுச் செய்தும் வருபவர்கள்.இதைக் கடந்து இவர்கள் பரந்துபட்ட மக்கள் நல அரசியலுக்கு வரவேமாட்டார்கள்.சோவை திருத்த முடியுமா?;ஜெயமோகனுக்கும் சோவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காட்டிட முடியும்?

„இந்தியாவோடு இணைந்து,இந்தியாவின் தயவில்,இந்தியாவைப் பகைக்கமால்,இந்தியாவின் தலையீட்டில்“என்று நியாயம் அளக்கும் நபர்கள்தாம் முழுமையாக இந்திய இராணுவத்தின் அனைத்து அட்டூழியத்தையும் இலங்கையில் நியாப்படுத்திக்கொள்கின்றனர்.முதலில் இவர்களது அரசியலையும்-குரலையும் கவனியுங்கள்;ஜெயமோகன்கள் நேரிடையாகவே பார்ப்பனிய நலத்தினது கருத்தியலாளர்கள்.அவர்களை விமர்சிப்பதென்பது „இந்தகைய நமக்குள் இருக்கும் “ லொபிகளைக் கவனத்திலிருந்து தவிர்ப்பதில் முடியும்.

பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, „தமிழீழ“ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,போராட்ட வரலாறு-அநுபவங்கள் தொகுப்பது,இலக்கியம் படைப்பது;அதனதன்வழியாக தாம்சார் அரசுகளுக்கு ஆலவட்டம் பிடிப்பதுவரை மக்களது அழிவுக்குக் காரணமான „ஈழப்போராட்டம்“ ஒவ்வொரு நபருக்கும் தனது அடையாளத்தைச் சொல்லும் அநுபவமாக-அரசியலாக இருக்கிறது.இப்படி தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாகவிது விரிகிறது.

இந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன , இன்று.

இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசுகளோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய-புதிய லொபிகளை உருவாக்குகிறது.இங்கே,புதியவர்கள் பழைய தலைகளது பெயரினூடாக அவர்களை மேதைகளாகவும்-மக்கள் தலைவர்களாகவும் பிரகடனப்படுத்தியபடி „படைப்பாளிகளாக-கவிஞர்களாக வலம் வருகின்றனர்.இவர்களே வரதராஜப் பெருமாளைக்கூடத் தமிழ்பேசும் மக்களுக்கான பெருந்தலைவர்களென வகுப்பெடுக்கின்றனர்.இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டு இந்திய அரசையும் அதன் கூட்டாளிகளையும் இவர்கள் காக்க முனைகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இத்தகைய நபர்களது வருகையானது பல அரசியல்-இயக்க அமைப்புகளிலிருந்தும்,போராட்ட அநுபவங்களைக் காவி வரும் படைப்பாக்க முயற்சிக்குள்ளிலுருந்தும் ஒரு நரித்தனமான கருத்தாடல் முகிழ்க்கிறது.இது,இலங்கையின் சிறுபான்மை இனங்களது பிரச்சனைகளை மெல்ல இந்திய நலன்களோடு பிணைத்துக் கருத்தாடுவதில் இந்தியாவில் வதைபடும் பல நூறு சிறுபான்மை-பழங்குடி மக்களதும் போராட்டத்தையும் அவர்களது உரிமைகளையும் ஒரு தரத்தில் குழிதோண்டிப் புதைக்கின்றனர்.இந்திய „நலனைக் காத்தல்-அதற்கு எதிரானதற்ற“ என்ற கதை பாடலினுள் இந்திய வல்லாதிக்த்தால் சிதைக்கப்படும் பல கோடி இந்தியச் சிறுபான்மை இனங்களதும் அடிப்படையுரிமையை இவர்கள் மறுத்தொதுக்கத் தயங்கவில்லை!

முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவு கூரும் மே 18 , எப்போதுமே இந்த „இந்திய லொபி“ நிகழ்ச்சி நிரலை நிராகரித்து இந்திய-மேற்கு வல்லாதிகங்களது கயமையை நேரடியாக மறுத்து மக்களுக்கான அரசியலையும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான விடுதலைப் போர் அறை கூவலாக நினைவு கூர்தல் அவசியம்.அப்படி நினைவு கொள்ளப்படும்போது மட்டுமேதாம் தேசத்துக்கெனப் போராடிய அடிமட்டப் போராளிகளது தியாகம்-அவர்களது ஆன்ம வலு நமக்குள் சமுதாய ஆவேசமாக உருவாக முடியும்.இல்லையேல் இந்திய லொபிகளது மாயமான் காட்சிகளாகவே எல்லாம் மீளவும் நீர்த்துப்போகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

19.05.2012

புலிகள் வந்தடைந்த ஆயுதப்போராட்டமானது…

„தமிழீழ விடுதலை“ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான“கொடுங் கோன்மை“மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட „இனவொடுக்கு முறை“யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கி,வியாபித்து வருகிறது.

இந்த வியாபித்த விருட்ஷத்தின் முகிழ்ப்பானது புலிகளது விதேசியவாதப் போராட்டத்திலிருந்தே தோன்றிக்கொண்டதல்ல. மாறாக,காலனித்துவக்க காலக்கட்டதிலே கட்டியெழுப்பப்பட்ட பிரித்தாளும் தந்திரமும்,அதன்பின்பு,தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு, அரசியற் போக்குமே காரணமாகிறது.பண்டா செல்வா ஒப்பந்தத் தோல்வியிலிருந்து தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு,ஏகாதிபத்திய நிகழ்சி நிரல் அரசியலை இளைஞர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான, ஜே.ஆர்.ஜெயவர்த்தினா வின் ஆர்ப்பாட்டம்- கண்டி நோக்கிய பாத ஜாத்திரையும்,தமிழ்ப் பகுதியில் அமிர்த லிங்கத்தின்தலைமையில் சிங்களச் ஸ்ரீ எழுத்து அழிப்பு,சிங்கள எழுத்துப்பலகைகள் அகற்றும் போராட்டத்துக்கும் அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.யின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது.

இந்த வரலாற்றில், புலிகள் வந்தடைந்த ஆயுதப்போராட்டமானது இறுதியில் இந்த நலன்களை வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட ஒரு அரசால் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பக்கச் சார்பிலிருந்து முடித்து வைக்கப்பட்டது.இந்த முகாங்களது பூடகமான முகாங்கள் மகிந்தாவை ஆதரித்தபோது அங்கே,இலங்கை முழுமொத்த மக்களது நலன்களைத்தாம் அவை தமக்குள் உட்கொண்டனவேயொழிய , தமிழ்பேசும் மக்களை மட்டும் மொட்டையடிக்கவில்லையென்பதை எவருணருவார்?

இங்ஙனம் புரிய மறுக்கும் புரிதலேதாம்,கியூப நாட்டுக் காஸ்ரோவையும், கடாபியையும் தமிழர்களது எதிரியாக இனம் காணுகிறது. இந்தப் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பிரிவின் ஒரு தரப்புக்குத் தலைமைதாங்கும்சீனாவும்,ருஷ்யாவும் இலங்கை இராணுவத்தளபதிக்குக் கேடயம் வழங்கியதும்,புலிகளை அழிக்க உதவியதும்,புலிகள் இன்றைய அரேபிய அமெரிக்க அடியாட்படையாகச் செயற்படும் தருணங்களை ஏலவே இனங்கண்டதன் விளைவே!

அதாவது,புலிகள்,விடுதலை அமைப்பு அல்ல.அதுவொரு அந்நிய ஏகாதிபத்தியங்களது கைக்கூலி அடியாட்படையாகவே தென்னாசியப்பிராந்தியத்தில் வளர்ந்தது.அது,இந்தியப் பிராந்திய ஏகாதிபத்தியத்தின் தயவிலிருந்து விடுபட்ட தருணமானது மேற்குலகச் சார்புகொண்ட யாழ்பாணியத்தின் கருத்தோட்டத் திசையூக்கத்தின் வெற்றியாகவே புரிந்துகொள்ளத் தக்கது.இந்த வெற்றியைத் தோற்கடித்தபோது,புலிகள் வரலாற்றிலிருந்து தொடைத்தெறியப்பட்டனர் என்பதையும் வரலாற்று வெளிச்சத்தில் வைத்து ஆய்ந்துணரவேண்டும்.

இன்றைய இலங்கையில்,புலிகளது இராணுவ வாதம் தோல்வியில் முடித்துவைக்கப்பட்டபின்,மகிந்தாவால் பரப்பப்படும் ஒரே இனமக்கள்- ஒரு தேசமெனும்  கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து ஜனநாயகக் குறுக்கல் நிகழ்த்தப் படுகின்றன.எனினும்,இலங்கையில் வெளிப்படையான அரசியலைக் கோருவதற்கும்,அதை நிலைப்படுத்தவும் எதிர்க்கட்சிகள்,சுயாதீனச் சமூகக் கட்டமைப்புகள் இப்போதும் வலுவாக இருக்கின்றன.இது,புலிகளது அரச கட்டமைப்பிலோ அல்லது அவர்களது அமைப்பு மட்டத்திலேயோ இருந்திருக்கவில்லை!தம்மைத் தவிர வேறு அமைப்புகளோ,மக்கள் மன்றங்களோ இருக்க அவர்கள் அனுமதித்ததே கிடையாது.இதனூடாகத் தம்மைத்தாமே“ஏகத் தலைமை“என்றும் அழைத்து இதை உறுதிப்படுத்தினார்கள். சகோதரப்படுகொலையூடாக,மாற்று இயக்ககங்களை அவர்கள் அழித்தபோது,இந்தியாவின் நலன்களுக்கிசைவான பக்கத்தில்நின்று, தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காட்டிக்கொடுத்தனர். அநுராதபுரத்தில் சிங்களக்கிராமத்தை; தாக்கி,பலவுயிர்களைக் கொன்று குவித்ததும்,முஸ்லீம் மக்களைக் கருவறுத்ததும்,இதன் தொடர்ச்சிகளாகும்.புலிகள் இந்தமட்டத்தில் ஒரு அடியாட்படைக் குரிய அனைத்துக் குணாம்சங்களையும் கொண்டிருந்தார்கள்.

வெளிப்படையான அரசியலைப் புலிகள் மறுத்ததன்விளைவே புலித் தலைவன் பிரபாகரனது சரணடைவும்,சாவும் இதுவரை மறைக்கப்படுகிறது.அது மட்டுமின்றி, எவரிடம்,எத்தனை கோடி மக்கள் சொத்துக்கள் முடங்கின,இறுதி வன்னி யுத்தக்கட்டத்தில் என்ன-எப்படி நிகழ்ந்தனவென்பதெல்லாம் இதுவரை எவருக்குமே தெரியாது.புலிப்பினாமிகள் அனைத்துத் தடயங்களையும் அழித்துவிட்டு,மக்கள் சொத்தைத் தமதாக்கித் தலைமறைவாகி விட்டனர்.இத்தோடு ஒப்பீட்டுரீதியாகப் பார்க்கும்போது இலங்கையின் அரச வடிவத்தின்மீதான விசாரணைகள் வெளிப்படையாக மேலெழும் தருணங்கள் அதிகமானவை.ஆனால்,புலிகளது வரலாறு,அவர்களது உறவுகள்,தவறுகள்,விடுதலையைக் கருவறுத்த சர்வதேசத் தொடர்புகள்,செல்வம் குறித்தெல்லாம் எப்போதும் எந்தத் தடயமும் கிடைக்காது.இது,பாசிசத் தகவமைப்பின்றி வேறென்ன?-மாபியாக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் இதிலிருந்து வேறுபாடுண்டா?

ஜனநாயகக் குறுக்கலது பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும்.புலிகள் ஏலவே ஜனநாயக விழுமியங்களை நசுக்கியபடித் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கிக் காயடித்த வரலாற்றிலிருந்து அவற்றைக் கற்றுணர்ந்த இலங்கை அரசானது புலிப் பாணியிலேயே இலங்கை மக்களை ஒடுக்கும்சட்டவாக்கத்தை, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அதிகாரத்தின்வழி கண்டடைகிறது.

சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்தியத் துணைக்கண்ட மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்“அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய இரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.

இனங்களுக்கிடையில் இனவாதக் குரோதத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தைக்கூறுபோடும் திசையில், தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே தப்பானது.எனினும்,இன்றைய மகிந்தா குடும்பத்து ஆட்சியின் பரிணாமமானது இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவைவிட அதிகாரத்தில் இருத்திவைக்கப்பட்ட அந்த வர்க்கத்தின் ஆட்சி-கட்சி,கட்சித் தலைமையின் அதீத சுயநலப் போக்குகளுக்கும் இசைந்தபோவதான நலன்களை வெளிப்படுத்துகிறது.இதனால்,இலங்கையின் ஆளும்வர்க்கத்துக்கு நிகராக அதிகாரத்திலுள்ள தலைவனின் நலன்களும் மேலெளும்போது இரட்டிப்பான ஒடுக்குமுறைச் சூழலொன்று வன்முறை ஜந்திரத்துக்குள் எந்த விழுமியத்தையும் கோரிக்கொள்ள முடியாது.

தேசங்கடந்த நிதிமூலதனமானது, இன்னும் ஒருபடி மேலே போய் இலங்கை-இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாகச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.இத்தகைய எச்சமே இன்னும் இனங்களுக்கிடையிலான போட்டிகளையும்,தப்பெண்ணங்களையும் உருவாக்கி அதை வலுவான முறையில் ஆயுதமாகக் கைலெடுக்க முனைகிறது.என்றபோதும்,இலங்கை அரச வடிவத்துள் நிலைமைகளுக்கொப்ப மாற்றங்கள் நிகழ்ந்து வெளிப்படையான அரசியலைக் கோரக்கூடிய சூழல்கள் நெருங்கி வரமுடியும்.

ஆனால்,அந்த வெளிப்படையான ஜனநாயகக் கோரிக்கையை இன்றைய புலம் பெயர் மக்கள் மத்தியில் செயல்படும் புலிப் பினாமிகளிடம் கோர முடியாது.அவர்கள் வெளிப்படையான பிரபாகரனது மரணத்தையே மறைக்கும்போது,திரை மறைவில் நிகழ்த அரசியல் சதுரங்கத்தை-உறவை,அடியாட் தனத்தையெல்லாம் விபரிப்பார்களா?ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் இத்தகைய பண்புகளை இனம் காணமுடியாதென்பதற்குப் புலிகள் அமைப்பே உதாரணமாக இருக்கிறது.புலிகள்ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதனாற்றாம், இலங்கை அரச வடிவம்,அதன் ஜனநாயகப் பண்புகளிலிருந்து எதையுமே செரிக்காத சர்வதிகாரத்தன்மையை இலங்கைக்கே பாடமாகக் கற்பித்தவர்கள்.இதன் தாக்கத்திலிருந்து இலங்கைக் கட்சியாதிக்கம் விடுதலை பெறுவதற்கு நீண்ட காலமெடுக் குமாயினும்,அஃது, எப்படியும் மாறிய தீரவேண்டிய பொருளாதார நகர்வுகள் இலங்கையில் முகிழ்ப்பதானது இலங்கை மக்களது குடிசார் அமைப்புகளது மீள் வரவுக்கு ஏதுவாகவே இருக்கிறது.

இந்தவகையில்,புலிகள் அமைப்பு என்பது தமிழ்பேசும் மக்களது  தொங்குசதை பிண்டங்களே.அதை அறுத்து எறியும் சத்திரச் சிகிச்சை செய்யவேண்டியது புலம் பெயர்ந்து வாழும் நமது மக்களது கடமைதாம். அதுபோன்றே,தமிழ் பேசும் மக்களது அரசியல் வாழ்வு,உரிமைகள் குறித்து இனியாவது வெளிப்படையான அரசியலோடு தமிழ்க் கட்சிகள் இலங்கை அரச ஆதிக்கத்துக்கு முகங்கொடுத்தாகவேண்டும்.இதிலிருந்துதாம் புலிகளது பயங்கரவாதச் சேட்டைகளையும்,பண மோசடிகளையும்,கொலையையும்,கொள்ளைகளையும் தடுக்க முடியும்.அவர்கள் பேசும் போலித் „தமிழர் தாயகம்“ எனும் வியாபார விளம்பரத்தையும் அம்பலப்படுத்த முடியும்.

தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயவுரிமையின் உண்மையான இலக்கை எட்டுவதற்குப் புலிகளது திரைமறைவு அரசியலே இதுவரை தடையாக இருக்கிறது.இதை உணரும்போது,புலிகளை அழித்த வரலாறானது புலிகளோடு அழிக்கப்பட்ட மக்களுக்காகவேதாம் இலங்கைமீது பழி சுமத்த முடியுமே தவிர,புலித் தலைமைக்காக அல்ல.ஏனெனில்,புலிகள் பயங்கரவாத அமைப்பென்பது இன்றைய வரலாறக நிற்பதே நிசமான அரசியலது வெளிப்படை.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2011

„தமிழீழத்தின்“ நீட்சி

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து…

„தமிழ்ச்சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய நமது சூழலானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்.“

இன்றைய காலம் பரந்துபட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.கடந்த கால அழிவுகுறித்து எந்த மதீப் பீடும் இல்லை! இதற்குள்புலம்பெயர் தமிழருள் புதுப்புதுக் கட்சிகள்,புரட்சிகரப்பாட்டும்,மக்களை அணிதிரட்டுவதுமெனக் கொட்டியபடி…

நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்,அதே இயக்க-கட்சிவாத மாயையில் நீந்தியபடி!இது எதற்கானது-எவருக்கானது?

அரச-புலி, வன்னியுத்த்துக்குப் பின்னான இன்றைய அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை. காரணம்:“நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை“என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.

இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை „நமது மக்களுக்காக“க் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும், நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் „புரட்சிகரக் குரல்“,போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!

இலங்கையில், மக்கள் தனிநபர் பயங்கரவாதத்துக்குள்தாம் சீவிப்பதாகச் சொல்லும் அரசியலானது அந்தத் தனிநபர் பயங்கரவாதக்கூறினுளொன்றான தமது பக்கத்தைப் புரட்சியென வரையறை செய்வதில் கவனமாக இருக்கின்றது.

இலங்கையின் அனைத்து அரசியல் நகர்வும், இலங்கை மக்களது சமூகசீவியத்துள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில், தனிநபர் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படும் உடனடி அரசியலானது வெறும் கிறுக்குத்தனமான அரசியலைப் பின்னணியாகக் கொண்டியங்குகிறது.அத்தகையவொரு அரசியலை வகுத்து இயக்கிவரும் அந்நிய நலன்சார் அரசியலொடுக்குமுறையின் ஒருவடிவமாகவெழும் இப்போக்கை, அதன் பின்புலத்தை மறைத்து, முதன்மைப்படுத்தலானது எதன் தயவின் தொடர்ச்சியென நாம் பார்ப்பது அவசியமாகும்.மிகத் தெளிவான அவர்களது வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் „ஈழவிடுதலை-சுயநிர்ணயம்-புரட்சி“சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இவர்களே, வன்னியில் மக்களைத் தமது தேவைக்கேற்றபடி இலங்கை அரசிடம் பலியிட்டுவருபவர்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

ஒன்றுக்கொன்று மிக வியாபாரத்தனமாகக் கருத்துக்கூறும் இன்றைய அமைப்பாகும் அரசியற்றொடர்ச்சி மிக மோசமானவொரு பின்னணியைக்கொண்டியங்க முடியும். புதுப்புது விளக்கங்கள்-சித்தாந்தங்கள் சொல்லப் பலர் முழுநேரத் தொழிலாகப் பரப்புரை செய்துகொள்ளலாம்.எனினும்,மக்களுக்கும்,அவர்களது உயிர்த்திருப்புக்கும் குழிப்பறிப்பதில் „புரட்சி-கட்சி“யெனக் கத்தி“ தனிநபர் பயங்கரவாதமாகக் குறுக்கப்படும் தமிழ் மக்கள்மீதான அந்நிய-அரசியல்ஒடுக்குமுறை வடிவங்களை முடிச்சுப் போடுவதில் கணிசமான மக்கள் அழிந்துபோனதையும் குறிக்கத்தவறுவது நியாயமாகிறதா?

ஆகணும்!

அப்படிப் பார்ப்பதே புலியழிவுக்குப் பின்னான போராட்டத்தின் தவறுகள்-குழிபறிப்புகள்-பலியிடப்பட்ட மக்களது பெறுமானம் குறித்துத் தொடராகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாகும்.

„தமிழீழத்தின்“ நீட்சி இப்போது சுயநிர்ணயவேடமாகிறது-„புரட்சிகர“ அமைப்பாகிறது!.இலங்கை அரசுக்குத் தமிழ்பேசும் மக்களது உரிமைக்குரல் எப்படிப் பயங்கரவாதமாகிறதோ அதே வண்ணத்தில்தாம் இதுவும் தமிழ்பேசும் மக்களது காதுகளில் பூச் சுற்றுகிறது?

எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது அதைக் குறித்து அழுது வடிந்தவர்களோ அந்த வலியின் தொடர்ச்சியில் அதே புலிப்பாணி அமைப்பாவதைத் தொடரும் அபத்தம் „புரட்சியின்“ முகமூடியோடு புதிய விளக்கம்பகர்வதில் அத்துமீறிய கருத்தியில் வன்முறையைத் தொடர்கிறது.இது,சாபக்கேடான அதே இயக்கவாத மாயையின் இன்னொரு வடிவமாகும்.சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் இந்த இயக்கவாதத் தொடர்ச்சியின் வருகையில் மக்களது இதுவரையான வாழ்வியிற்றேவைகளைக் கணக்கெடுப்பது புரட்சியின் பயனுறு நிலைப் பண்புக்கானதாகவிருப்பின் அதன் ஆணிவேர் மக்கள் சமூகத்தைத்தாண்டி இன்னொரு தளத்தில் வேர் அரும்புகிறதென்பதைக் குறித்துரைக்க வேண்டியதில்லை.இன்றோவிது,கடந்தகால அதே இயக்கவாத மாயயைத் தொடர்வதில் அதே பாணி அரசியலைப் புலம்பெயர் தளத்தில் புலிகளதுதெரிவில் பலர் பற்பல வடிவத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இந்த அரசியல் எவரையும் விட்டுவைக்க மறுக்கிறது.

பற்பல ரூபங்களில் இஃது, அரசியல் முனைப்பைக் கொண்டிருப்பினும் இதன் தளம் பாசிசமே.இஃது,எஞ்சிய புலத்துப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு சக்தி உருவாவதை மிகக் கவனமாகத்தடுக்கப் „புரட்சிகர“ அரசியலைக் கைலெடுத்து வைத்திருக்கிறது.கூடவே,மிகவும் கறாராக ஜனநாயக வேடந்தரித்து மாற்றுக் கருத்துச் சூழலைப் பூண்டோடு அழிப்பதில் புலிகளாகத் தமது இருப்பை நிறுவுகிறது.அனைத்தையும்“புரட்சி“என்ற சொல்லாடலாகத் தொடர்வதில் அதன் சாயம் வெளுத்துப்போவதைத் தள்ளிவைக்க முனைகிறது. இன்றைக்குப் புலிகளெனும்அடியாட் பாத்திரத்தின்இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இலங்கைமீதான மேற்குலகத்தின் அபிலாசைகளில் பிரதிபலிக்கத்தக்கதாகும்.

மறுபுறுமோ, சீன-இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய இலங்கை நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்த கட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் இன்றைய புலம்பெயர் மாற்றுக் கருத்துச் சூழல் அமிழ்ந்துள்ளது. இதற்கான முன் தயாரிப்பாக அது புலம்பெயர் மக்களைப்பலவாறாகப் பயன்படுத்துகிறது. அதிலொன்று,இன்றைய „புரட்சி-கட்சி“அமைப்பாவதென்ற தொடரில் மையங்கொள்கிறது! இதுள்,மேற்குலகத்தின் அரசியல் அபிலாசைகள் மேலும் பல முகங்களை நமக்குள் இனம் காட்டும்போது,அங்கே,வினைப் பயன் தொடராக இயக்கவாதம் மீளத் தலையெடுப்பதில் இந்திய-மேற்குலக அரசியல் உந்ததலுக்கு இருவேறு முகமில்லை.அதன் பாத்திரம் ஒன்றுடனொன்று உறவுடையது.மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.இதற்கு பெயர் „புரட்சியை நோக்கி அமைப்பாவது-மக்களை அணித்திரட்ட(…)“என்ற வாய்ப்பாடு இதுவரை இயக்கவாத மாயையின் தொடராகவே மேலெழுகிறது.மக்களை நடைபிணமாகப் பார்த்த அன்றைய இயக்கங்களின் அதே பாணிக் கருத்துக்களை மேலும்“புரட்சி-அமைப்பாவது-மக்களை அணிதிரட்ட“என்ற வர்ணமுலாம் பூசுவதால் கடந்தகாலத் தவறுகள் மறைந்துவிட முடியாது.

நமது சமுதாயத்தின்“தேசியவிடுதலை“ப்போராட்ட வரலாற்றில் கட்சி-அமைப்பு அரசியலே மறுபரிசீலனைக்குட்பட வேண்டியது.அது,குறித்துரைக்கும் போராட்டச் செல் நெறியே பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, வருடக்கணக்காக அதன் அறுவடைகள் குறித்து அலச வேண்டிய சூழலில் திடீர் கட்சி ஆரம்பித்தலென்பது மக்களைச் சுத்த முட்டாள்களாக்குவது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளில் இருந்தபடி, புரட்சிக்குப் புதுப்புது விளக்கங்களை அள்ளி வீசுகின்றனர்.

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் வாழ்வில்-சமூகப்பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் „இனவொதுக்கலுக்கு“எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க வன்னியுத்தத்துக்குப் பின்பான சூழலில் சாத்தியமாகமுடியும்.இதைக் கணித்து உள்வாங்கும் ஆதிக்கச் சக்திகள் பழைய இயக்கத் தொடர்ச்சிகளை மெல்ல உசுப்பேற்றித் தமது சேவகர்களாக்குவதில் „புரட்சி-கட்சி“எனக் மண் குதிரில் நின்று புலம்ப வைக்கிறது, நமது „தோழர்களை“ இன்று!! இந்த மண்குதிர் நம்புவதற்கேற்ற படிமங்களைப் புரட்சிகர மொழிவுகளுடாகச் சொல்லும்போது ஒரு சிலர் மயங்கவும் முடியும். எனினும்,இது ஆபத்தான விளைவுகளின் நடுவே பரிதாபகரமாக மக்களை மேலும் முட்டாளாக்குவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல!

இலங்கை மக்கள் தமக்குள் இருக்கும் அரசியல் கயர்வகளை இனங்கண்டு,அவர்களது அரசியலை மறுக்காதவரையும் எவரும் புரட்சிகரச் சக்தியாகத் தம்மை இனங்காட்டி நம்மை ஏமாற்றித் தமது தரகு வேலையைச் செவ்வனவே செய்வார்கள்.இதுவே,நமது மக்களது விடுதலைக்கு முட்டுக்கட்டையான அரசியலாகவும் மீளவும் கொலைகளைச் செய்யும் இயக்கவாதமாகவும் நகர்கிறதுக்குக் கட்டியம் கூறுகிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

22.06.10

மகிந்தாவின் யாழ்ப்பாணச்சூனியம்

மகிந்தாவின் யாழ்ப்பாணச்சூனியம்

(புனைவு)

இடையீடு: 1. இதை வாசிப்பவர்கள் எங்கோவொரு இடத்தில் „தூஷண“வார்த்தைகளைப் பச்சையாய் உணர்வீர்கள்.உண்மையைச் சொல்வது எனது கடமை.விரும்பினால் மேலே செல்லவும்.

Angst in der Nacht

Die Uhr spricht aengstlich mit dem Spinnweb an der Wand,
Am Laden reisst der Wind,
Meine flackernden Kerzen sind
Ganz vertropft  und heruntergebrannt,
Kein Wein im Glase mehr,
Schatten in allen Ecken,
Deren lange Finger sich nach mir strecken.
-Hermann HESSE.

இடையீடு:2. முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் „ஈழத்துக்கு“அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க…

அந்தத் தெருவோரமாகச் சாய்கிறேன்.கரமெதுவும் இல்லை.அம்மாக் கரம் பாலகர்களுக்குமட்டுமே.அன்னைக்குப் பாலகனாகக் காலம் பின்நோக்கிச் செல்ல என் மனத்துக்கு மட்டுமே முடியுமாகையால் நான் மௌனித்து வான் பார்க்க, பிளவுகொண்ட தேசிக்காய் குங்குமம் தரித்து என் விழிமுன்னே நர்த்தனமாட எனது மனைவி சொன்ன வார்த்தை வேலைணைச் சிவராசா சொன்ன சாஸ்த்திரத்தில் என்னை இந்த டிசம்பரில் கொல்லும் காலமாக நர்த்தனமாடுகிறது.

துவண்டு போனது எனது குரலும்,குடியும்.என்னைக் கொல்லும் காலத்தைக் கணித்து வழங்கிய சிவராசா, சேதுராமனைக் கொப்பியடித்து எண்சாஸ்த்திரம் சொன்ன அன்றைய எண்பதுகளின் முன் பகுதி வேலணை பங்களாவடிச் சந்தியில் பலரது செருப்புகள் அவன் முகத்தை முத்தமிட்டுக்கிடக்க, எனது துணைவிக்கு அவனிடம் சாஸ்த்திரம் கேட்பதில் அலாதி பிரியம்.யாழ்ப்பாணத்து ஏதோவொரு முடுக்கில் நான் மௌனித்துக்கிடந்தபடி உழைத்து ஓடாகும்போது எனது போதையில் வீடு கட்சிகட்டி எனக்கு வைத்தியம் பார்க்கிறது.நான் மரணிப்பதில் என் மனையாளுக்கு அதிக பிரியமென நான் எப்போதும் புரிய எனது போதை காலத்தை வழங்கவில்லை.

யாழ்ப்பாணச் சுடலைகள் எங்கும் பேய்,வீதிகள் எங்கும் பேய்,வீடுகளின் நடுவே சவங்கள் உருண்டு கொள்கின்றன.குத்தீட்டியாய் மந்திரக்காரன் தனது குறியில் தேசிக்காயைக் குத்தித் தமிழச்சிகளது முலையில் காண்டம் வாசிக்க யாழ்ப்பாணம் தென்னிலைங்கைப் பெருங்குடிகளுக்கு கழிப்பறை கட்டிக்கொண்டிருக்கிறது.எனக்குக் காண்டம் வாசிக்க எனது பொண்டில் எந்த மந்திரவாதிக்குத் தனது…

„செய்வினை,

சூனியம்,

பில்லி,

காண்டம்,

சாஸ்த்திரம்,

மந்திரம்,

மாயம்“

எல்லாமாக யாழ்ப்பாணியச் சாம்பிராஜ்சியத்தில் பொருள் நிலை வாழ்வு சிறப்பாக…

ஒரு நேர வயிற்றுக்கு உழைக்க வக்கற்ற எனது பொண்டாட்டி என்னைக் காலத்தில் கொல்ல, மெல்ல வலையைப்பின்ன நான் போதையில் பொருள்தேடுகிறேன்!

கொட்டை பெருசு கோவணஞ் சிறிசு: பின் சுருக்கம்1.

„வாடா சுந்தரம்,வா மச்சான்.வந்து மோட்டச் சயிக்கிளை ஸ்ராட் பண்ணு.“இவன் சுந்தரத்தை நேற்றுப் பன்னிரெண்டு மணிக்குக் கூட்டுச் சேர்த்தேன்.அவனும் என்னைப்போன்ற பெருங்குடிமகன்.

சூனியத்தையும்,சாஸ்த்திரத்தையும் அவனிடம் சொன்னபோது தன்ர மனைவியும்,மாமியும் இதில நின்று நாட்டியம் ஆடுகிறவை என்றும் சொன்னான்.தன் மனைவியும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு யாரோ போட்ட தவிட்டைத் தின்று கொழுப்பதாகவும் சொன்னான்.

இப்போது யாழ்ப்பாண பெரு இராஜ்சியத்தில் மூத்த குடித் தமிழர்கள் குடிமனைக்குள் கொள்ளிவைக்க எல்லாம் பணத்தைச் சுற்றி வீணியூற்ற நானும் எல்லாமாக மாறி எனது மனைவியிடம்“அது-சவம்“என்றெல்லாம் ஆகிப்போனேன்!எனது இருப்பு அவளுக்குச் சவமென…

போன மாதம் மகிந்தா மாவினது „ஒரே தேசம்,ஒரே மக்கள்“ அரச பரிபாலத்தில் யாழ்ப்பாணப் பெண்டிர்களுக்கு அரபுத் தேசங்களின் „வேலையெடுப்பு“வேலை வேண்டிக்கொடுக்க முகவர்கள் வந்து கொட்டகை போட்டார்கள்,அந்தக் கொட்டகை வாசலில் வந்து குவிந்த யாழ்ப்பாணியத் தமிழச்சிகள் கிளிநொச்சிவரை கியூவில் நிற்கினம்.அரபுத் தேசத்தில் பணிபுரிந்து தமது செல்வச் செழிப்பை இரட்டிப்பாக்கவென அவர்கள் கனவு விதைத்து…

இப்படியான பொழுதுகளில் நானும் காலத்தைப் பின்நோக்குவதில் அரபுத் தேச „ஆண் குறிகள்“அப்பன்,மகன்,பேரன்,மாமன்,மைத்துனன்,என வீணியகற்றிக்கொண்ட பெருவெளியில் துர்நாற்றத்தோடு அந்தச் சகதி சாக்கடையாக யாழ்ப்பாணத்தை நோக்கி ஓடி வருகிறது.சுனாமியைவிடச் சுரமொழுப்பி உயரும் அந்த அரேபியச் சுக்கிலம் எனது வீட்டின் வாசலில் இன்னொரு கொலைக்களத்தை மெல்ல எனது  அனுமதியின்றிச் செய்யத் துடிக்கிறது.

இந்தச் சங்கதியை நான் உணர முடியாதைத்யிட்டு எனது நண்பன் சுந்தரத்தோடு பேசினபோது“போடா புண்டையாண்டி,உன்ர பொண்டிலை என்ன, என்ர பொண்டிலையும்தான் அவன்கள் ஓழ்க்கப் போறான்கள்“எண்டான்.எனக்கு இது,சகஜமாகப் பேசுவதாகப் போச்சு.என்ன நடந்தது?

மானத்தோடு வாழ்ந்த மண் என்று அப்பப்ப நான் பெருமைப்பட்ட காலம் மெல்ல விடைபெற்று இருக்கிறது.எனக்கு இதில“ஆரூ ஓழ்த்தாலென்ன…“எண்ட நிலைமை சவுக்கடியாக இருக்கமாட்டேன் எண்டு சொல்கிறது.

பின்ன,இருக்காதா?

வீட்டு வளவுக்குள்,வீட்டின் ஒரு பகுதியை,மெல்ல விடுதியாக்கி-லொஜ் எனப் போட்டுப்போட்டு பணத்தைச் சம்பாதிக்கத் தென்னிலங்கைச் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்க, எனது பொண்டிலுக்கும் சரியான ஆசை அந்தப் பணத்தில்.ஆரெடுத்துக்கொடுத்த ஐடியாவோ அவள் கொண்டை முடிகிறாள் நோட்டுச்சரத்தில் அழகுபார்க்க.

இன்றும்,இன்னொரு முடுக்குவரை சுந்தரத்தின் மோட்டார் சயிக்கிளில் மெல்ல அமர்ந்து இறங்கிக்கொண்டேன்.“டேய் மச்சான் இவளிட்ட கசிப்பு மட்டுமில்லை எல்லாம் கிடைக்கும்“எண்டான் அவன்.அந்தத் தெருவுக்கு „வெள்ளான் தெருவென“வெள்ளார் சொல்லுவினம்.

மெல்லக் கடாசிய கசிப்பில் அவளது தொடைக்கு நடவில் உலகத்தின் சரிவு தோன்ற ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்தை அசைக்க முடியாதென்று எண்ணிக்கொண்டேன்.

இப்போது,மனைவியும்,அவளது சாஸ்த்திரமும் நர்த்தனம் ஆடியது.

„டிசம்பரில் உனக்குச் சாவு,நீ என்னோடு சேர்ந்திருப்பது பிள்ளையின்ர பலனில் முடியாத காரியம்.நீ பிரிந்து போ“என்கிறாள்.என்ர உயிரில அவளுக்குச் சரியான அக்கறை யாழ்ப்பாணத்து ஆமிக்காரன்கள்போல.விழிமுன்னே விரியும் அவளது ஆசை மெல்லக் குத்தும் கோரப் பற்களாய் அவளது முகம்…

முள்ளி வாய்க்காலில் மௌனித்துக்கொண்ட ஏகத்தலைமையின் பெரிய ஆயுதம் முடித்துவைத்த அதே கதையை இன்னொரு சுற்றில் இப்படி மகிந்தா துவக்கி வைத்துப்போட்டார்.அவர் „தெமிழு“ எண்டு ஏசிக்கொள்ள அவரது சிஸ்சியர்கள் அவருக்காகத் „தமிழர்கள் கூட்டத்தில் குழப்புவதாக நாடகம்“போட சிங்களவர்கள் எண்ணிக்கொண்டனரா மகிந்தா தமிழர் எதிரியென? நானறியேன் பராபரமே!அவரது கட்சியே இந்த முறையும் ஆட்சிக்கட்டிலேறுவதென அவர் „தெமிழு“மட்டும் சொல்லவில்லை.என்ர வீட்டு வாசலில் லொட்ஜ்சும் கட்டிக் கொடுக்கிறார்?

எனக்குத் தெரியாது!

இடையீடுகளும்,சுருக்கமும் சந்திக்கும் புள்ளி : 0

சுந்தரம் இப்ப மோட்டச்சயிக்கிளை உருட்டக்கூட முடியாமல் கிடக்கிறான்.நானும் „ஓட்டுவதற்கு“ முனைந்து தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறேன்.கசிப்பில சூனியத்தை  வெள்ளான் தெருக்காறி மந்திரிக்க எனக்கும் சுந்தரத்துக்கும் அவளது தொடையினது இடையில் தமிழர் தேசியம்புரியத் தொடங்கிறது.இதன் தார்ப்பாரில் நாலா புறமும் குருதி நெடில் மூக்கைத் துளைக்கிறதோ இல்லையோ யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சாஸ்த்திரிகள்,மந்திரவாதிகளது பூஜை நெடில் மூக்கைத் துளைக்கிறது.

என் பொண்டிலது தாவணியில் தொங்கிக்கொண்ட எச்சில் பேய்க்கு „மாமி“என்ற உறவு எனக்கு வேணுமாம்.

அந்த எச்சில் பேயின்ர ஈனவிரக்கமற்ற „செய்வினைகளில்“ என்பொண்டிலுக்கு என்னைப் பிரிஞ்சு கிடக்கவேணுமாம்.ஆரோட என்பதுதான் எனக்குத் தெரியாத பிரச்சனை.அவளுக்கு என்ர உயிரில அவ்வளவு பிரியமெண்டும்,தனக்கும் எனக்கும் பிரச்சனை எதுவுமில்லை எண்டும்,நான் என்ர சகோதரங்களை,எப்பவோ செத்துத் தொலைந்த என்ர தாய் தகப்பனை நினைச்சுக் குடிச்சு அழிவதாகவும், என்ர அண்ணாவுக்குப் போன் போட்டுச் சொல்லிப்போட்டாள் என்ர மனைவி.

எனக்கு அவள்மீது சரியான பிரியம் இதை அண்ணா சொன்னபோது.

என்ர குடிக்கு இது காரணமில்லையெண்டு எனக்குத் தெரியும்.அது,மகிந்தாவினது கொடைக்கரத்தின்அருங்கொடை.வீதிக்கு வீதி மதுக்கடையும்,மாதுக்குடைவிரிப்பும் யாழ்ப்பாண மண்ணில் தொடக்கி வைத்த கையோடு நான்,எனக்கே இப்போது மொட்டை அடித்தேன்.

இதோ,இந்தச்சுந்தரம் காறித் துப்புறான்.

„மோட்டச் சயிக்கிளைத் தூக்கி நிறுத்த வக்கில்லை.இதற்குள் கசிப்புக்காறிக்கு தேசியத்தை காட்டப் போனியே“எண்டு கேலிக்கு வினைவிதைக்கிறான்.நான் சாரத்தை எங்கே தொலைத்தேன் எண்டும் தெரியுதில்லை.நல்ல வேளை அவன் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை!

என்ர பொண்டிலின் இன்னொரு சாஸ்த்திரக்காரன் நடராசன் அண்டங்களைக் குடைந்த கண்டவுண்மை நான் என் பிள்ளையினது பலனின் பொருட்டு இவ்வாண்டு டிசம்பரில் என் பொண்டில் சங்கூத மரிப்பதென…

டிசம்பரில் சாகப்போகுற எனக்கு என்ன விருப்பம் இருக்கு எண்டுவேற என்ர மனைவியின்ர நண்பன் கேட்கிறான்.“சொல்லு முருகன் உனக்கு ஏதாவது விருப்பம் உண்டா“எண்டபடி ஆட்டிறிச்சியும் காய்சிச் சாரயமும் வேண்டித்தாறான் குடியென…

அவன் நேற்றுச் செய்த இந்த விருப்பு வினை,எனக்கு தூக்குத் தண்டனைக் கைதியின் நிலையை இப்போது உணர்த்துகிறது.

நான் யாருடைய கைதி?

சாஸ்த்திரக்காரரின்,சூனியத்தின்,காலத்தில்,மனைவியின்,மாமியின்-மகிந்தாவின் கைதி?

Fear at the Jaffnas night

the clock speaks fearfully with the spin Web at the wall,
at the shop tears the wind,
my flickering candles
whole dripped and down-burned,
no wine in the glass more,
shade in all corners,
whose long fingers stretch themselves for me.-Hermann Hesse.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2010

%d Bloggern gefällt das: