ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்!

நாம் வாழும் இந்தப் புவிப் பரப்பு நமக்கானதல்ல. இன்று, தொடரும்  புவிப்பரப்பின் மீதான அனைத்துப் பௌதிக நடாத்தைகளும் அதன் இருத்தல்மீதாகப் பொழியும் இடைச் செயலானது பல்வேறு தர்க்கத்தை -தாக்கத்தைக் குறித்தக்கொண்டே வரலாறு பூராகவும் மாற்றமடைந்து செல்வதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாற்றங்கள் பலவானாலும் நமது உளவியல் மனதின்மீதான உணரழுத்தம் எமக்கான புரிதற்பாட்டின் வாயிலான வாழ்வில் – இருத்தலில் வெவ்வேறு தேவைகளோடு நம்மைச் சாகடித்து விடுவதைக் கூட நாம் உணர்வது தடுக்கப்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்துள் நாமும் ஒருவங்கமென்பதெல்லாம்  எம் மீதான மிதமானவொரு உணர்வின் (  பெருமிதம்    என்பதெல்லாம் இன்று பொருத்தமற்றது) பொருத்தமற்ற கதையாடலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.இந்நிலையிலும் இன்றைய பொருளாதார நடாத்தைகளது தயவில் உயிர்வாழ்வதென்பது அந் நடாத்தைக்கு -இயக்கத்துக்கு ; அதன் வீரியத்துக்குட்பட்டவுறவென்பதை நாம் கண்டுபிடித்துக்கூறாதுபோகினும் -அதுவே உண்மை!

பரவலாகவுணரப்பட்டவிந்தமைப்பினது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியானது இன்னொரு பாரிய அழிவை இன்றையவுலகவொழுங்குக்குள் நடாத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உலக அரசுகளுக்கிடையிலானவுறவென்பது தனியே அந்தந்தத் தேசத்து உயரடுக்கின் நலன்களென்பதாகக் குறுக்கப்பட்ட பல்தேசியக் கம்பனிகளது சட்டவாதம் மனிதவிரோத முகங்களோடு[  ‪#‎TTIP‬ ‪#‎CETA‬ ‪#‎TISA #TPP #WTO etc. ] நம்மையண்மிக்கும்போது நாம் பல்வேறுபட்ட வடிவங்களில் அழித்தொழிக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடியிலிருந்து முற்றுமுழுதாகத் திசை திருப்பட்ட உழைத்துண்ணும் நாம் பல்வேறுகைப் பிளவுகளுக்குள் சிக்க வைக்கப்பட்டபின் அதுவேயொரு குரூர மனித முகத்தை உழைப்பவருக்குள் தொடர்ந்துருவாக்கி விடுகிறது.பல்வேறு தேவைகளது நலனது காரணங்கொண்டு „தேசிய அரசுகள் ;சுயாதீனச் சமுதாயம் ;சுயாண்மை ; சுய பொருள் செய்கை ;சுயாதீனச் சட்டவாதம் „என்பதெல்லாம் இல்லாமைப் போனதென் தொடர்ச்சியை நாம் தற்போது சிரியாவில் உணரத் தக்கதான எல்லா அரசியற் காரணங்களையும் அறிகிறோம்.

இதன் தொடராக இடம்பெயரும் மக்கள் கூட்டம் பல கோடிகளாகவுயர்ந்து இந்தவிடப் பெயர்வுக்குக் காரணமான தேசங்களை நோக்கி நகர்த்தப்படுவதுகூட ஒரு வியூக வகைப்பட்ட அரசியல் „என்பதை நாம் உணர்வது மறுக்கப்படுகிறது.

உழைப்பவர்கள் இந்த நெருக்கடியில் தமக்குள் ஒன்றுபடும் தருணத்தைக்கொண்டிருந்த வேளையில் அவர்கள்மீதான நவீனத் தாக்குதலாக இந்த „அகதி“ப் பிரச்சனைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள் தமது சொந்த உழைப்பாள மக்கட்டொகுதியை இடம் /புலம் பெயரும் அப்பாவிகள் [இதற்குள் சிரியாவிலிருந்து கடத்தப்படும் ISIS உறுப்பின ர்கள் சேர்த்தியில்லை] மீது பண்பாட்டு/இனக் குரூரமாக ஏவிக்கொண்டிருப்பது உலக தழுவிய ஒருங்கிணைவைத் தடுப்பதிலான நோக்கம்  முற்கட்டமாகவிருப்பினும் தற்போது மனிதவிரோதவொப்பந்தகைளைக் கையெழுத்திட்டுச் சட்டவாக்கமாக்குவதில் தத்தமது தேசத்து உழைக்கும் மக்களது இதன் மீதான எதிர்வினையை மட்டுப்படுத்துவதில் இந்தத் தேசங்கள் வெற்றிபெற்று வருகின்றன.

அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை – ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின்  ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த  மூன்றாது  உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை  ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!

அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் „தாம் செய்வது -ஆய்வது“ எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare  ] விருத்திக்கு இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!

இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின்  குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.

ஆனால் ,இவர்களை வழி நடாத்தும் தேசங்களது உயரடுக்குக் குடிகளோ தமக்குள் முரண்பட்ட கூறுகளைக்கழைந்து ஒருமைப்படுவதில் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாசிசத் தலைவன் யுங்கரின் வார்த்தையில்  : „நாம்  ரஷ்யாவுடனா நமது உறவை அமெரிக்கா வின் கட்டளைகளைக்கிணங்கி, எதையும் உடைக்க முடியாது, நாம் ரஷ்யாவுடன் சாதாரண உறவுகளைப் பேண வேண்டும்“ (  Wir dürfen unser Verhältnis zu Russland nicht durch Befehle der USA kaputt machen, wir brauchen normale Beziehungen zu Russland! – EU-Präsident Juncker)என்று அக் கூட்டம் தமது வர்க்க தளத்தைக் கவனமாக அணுகும்போது இதுவரையான பகை முரண்கொண்ட இருசிய -சீன தேசங்களது உயரடுக்கு மக்கட்டொகுதி தமது பரம வைரியாகக்கொண்ட ஐரோப்பிய -அமெரிக்க உயரடுக்கை  பகையாளி வர்க்கமாகக் கருதுவார்களா ; அல்லது எவரை?எம்மைத்தானே -உழைக்கும் நம்மைத்தானே?

பல கோடி உழைக்கும் வலு இல்லாதொழிக்கப்படப்போகிறது. கூட்டுக் கொள்ளையை  ஊக்குவிக்கும் சட்டவாதமானது Corporate identity என்னும் பொருளில் நமக்குப் புரியவைக்கப்படும் ஒவ்வொரு மூலகமும் நமது வாழ்வைப் பறித்துக்கொண்டே  முழுவுலகப் பிரபஞ்சத்தையும் தனக்குள் செரிக்கும் இன்றைய தருணத்தில் தமிழ் மொழிச் சூழல் வசவிலக்கியத்துள்ளும்;சினிமாவுக்குள்ளும் உலகைத் தேடுவதில் முட்டாட்டனத்தின் கடைக்கோடியெல்லையிற் தம் வாழ்வை மற்றவர்கள் தகவமைக்கக் கொடுத்துவிட்டு „கொபற்ற  கொல்லையிற் குப்பை“  கொட்டுவதில் „டாக்டர்கள் ;முனைவர்கள்;கலாநிதிகள்“ எனப் பட்டம் விடுவதில் தன்னிறைவு கொள்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்

10.10.2015

Advertisements

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்…

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள…

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?(1)

ப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசிலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்த மூன்று தசாப்தமாக நடைபெற்ற ஈழத்துக்கான போரின் எதிர்விளைவுகளாக இதை எடுப்பதற்கில்லை.இலங்கையின் மிக அண்மைய அரசியல் நகர்வும் அதுசார்ந்த பௌத மதவாதச் சாயம் பூசிய இனவாதத்தாக்குதல் போக்குகளும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒட்டயொடுக்கி காலப்போக்கில் அவர்களை எந்தவுரிமையுமற்ற வந்தேறுகுடிகளாக்கும் பாரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது.

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பி மகிந்த அரசைக் காப்பதற்கெடுக்கும் முயற்சிக்குப் புலிகளில்லாத இலங்கையில் „பௌத -இஸ்லாம்“மதப் பிரச்சனையொன்று திட்டமிடப்பட்டு இயக்கப்படுகிறது.

இதற்கான ஒத்திகைகளைப் புலத்துத் தமிழர்களுக்குள் இயங்கும் தலித்துவ மற்றும் பிரதேசவாதக் குழுக்களைவைத்து இயக்கிய மகிந்தா அரசு, இதை மிக நேர்த்தியாக இயக்கும் பண்பை இவர்களது ஒத்துழைப்புகளோடுதாம் மீளவும், இயக்குகிறது. இதற்காவேதாம் சிங்கள பௌத அடிப்படைவாதச் சக்திகளையெல்லாம் தலித்துவக் குழுக்கள் சந்தித்து, பகிரங்கமாக ஒப்புதலளித்தும் இருந்தனர்.

இன்று நாட்டில் பேயாட்டம் போடும் ஞானசார தேரோவுடன்
Raman Yogaratnam Asura Nathan Theva Thasan

இதன்பின் தலித்துவக் குழுவின் தலைவர் தேவதாசன்குழுவும்  மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதிகளான ஞானம் குழுவும்இணைந்த „நாம் அனைவரும் இலங்கையர்கள்“ தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்து இலங்கையை முன்னேற்ற வேண்டுமெனப் பகிரங்கமாகப் பேசவும் முற்பட்டனர்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முள்ளிவாய்கால் இனப்படுகொலையைக் குறுக்கி „பாசிசப் புலிகளை“அழித்த மகிந்தாவுக்கு நன்றியும் தொடர்ந்து தெரிவித்தனர்.

இதை யாழ்பாணம்வரை சென்று, டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் -பிரச்சாரமும் செய்தனர்.இவர்களுக்கிணைவாகப் பிழைப்புவாதி குகதாசனின் தொலைக்காட்சியும் இலங்கையில் சமாதனம் தோன்றி, ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் பரப்புரையைத் தொடர்ந்து  செய்து மகிந்தாவின் பாசிச அரசைக் காத்துவந்தனர்.

இன்றிந்த முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் பார்த்து இப்படித்தான் கருத்தாடத் தோன்றினுங்கூட இத்தகைய தாக்குதல்களின் பின்னே ஒளிந்திருக்கும் அன்னிய நலன்களும் அவை சார்ந்த அரசியல் சாணாக்கியமும் அப்பாவிகளைத் தமிழரின்- முஸ்லீம்களின் மற்றும் பௌத்த சிங்களவரின் பேரால் அழித்து வருகிறது.இதற்குடந்தையாக விடுதலைவேண்டிப் போராடப் புறப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் அனைத்துமே இருக்கின்றன. ஒவ்வொரு இயக்கங்களும்-குழுக்களும்,கட்சிகளும் தத்தமது இயக்க-கட்சி நலன்களின் அரசியலை அப்பாவி மக்களின் மீது பலிகளைச் செய்து, தமது எஜமான வேண்டுதலை நிறைவேற்றும்போது சாவதென்னவோ ஏழையெளிய மக்களே.அந்த மக்கள் தமிழைப் பேசினால் என்ன சிங்களத்தைப் பேசினாலென்ன இல்லை, முஸ்லீம் ,பௌத்தர்களாகவிருந்தாலென்ன அனைவரும் மனிதர்கள்தாம்!

சிங்களப் பேரினவாதத்தின் அதீத வெளிப்பாடுகள் மக்களை வகைதொகையின்றி வருத்தியபடி அவர்களின் உயிர்களை இனப்படுகொலையாகப் பறித்துவருவதை எந்த மனிதாபிமானமிக்க நபரும் பார்வையாளராக இருந்து மௌனிக்க முடியாது.

அப்பாவி மக்கள் முள்ளி வாய்க்காலிலோ அல்லது, அழுத்கமவிலோ சரி இனவாத அரசியலுக்குத் தீனீயாக்க முடியுமென்றால் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எந்தத் தேசத்தோடும் ஒப்பிட முடியாதளவு மோசமானவொரு இருண்ட சூழலுக்குள் இருப்பதை நாம் ஊகிக்க முடியும்.உலகம் 21 ஆம் நூற்றாண்டை மனித வேட்டை-நர மாமிசம் புசிக்கும் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.இவ் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவ்கானிஸ்தானை-ஈராக்கை அத்துமீறி அழித்து வரத் தொடங்கிய ஏகாதிபத்திய எரிபொருளுக்கான பெரு வேட்டை, கொத்துக் கொத்தாகச் சிரியாவில் , உக்கிரைனில்மனிதப் பிணங்களை உற்பத்தி பண்ணி வருகிறது.இத்தகையவொரு அரசியலை உலகம் வலிந்துருவாக்கி வைத்தபடி இன்றைய தேசிய இன முரண்பாட்டை அத்தகையவொரு சதிமிகு நலன்களுக்குடந்தையாக்கி எமது மண்ணில் குருதியாற்றைத் தொடர்ந்து ஓட வைத்திருக்கிறது.

இன்று உலகந்தழுவி எப்பகுதியிலும் மனிதர்களைக் கொல்லுதல் மிகச் சாதரணமான விடையமாகப் போயுள்ளது!

பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது.இந்த அரசியல் இலக்குக்கிசைவாகக் காரியமாற்றும் மூன்றாமுலக அரசியல் மற்றும் பெருங்கட்சிகள்கூடவே அவர்களது லொபிக் கூலிக் குழுக்கள் தமது மக்களின் உண்மையான எதிரியாக மாறியுள்ளது.இதுவொரு மிக மோசமான புறச் சூழலை அமைதியாக வாழும் இனங்களுக்கிடையில் தோற்றி வைத்து,அதுசார்ந்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளாக வளர்த்துச் சம்பந்தப்பட்ட தேசங்களின் சுய வளர்ச்சியை மெல்லச் சிதைத்து வருகிறது.இத்தகைய தந்திரம் அந்நிய நிதி மூலதனத்துக்கு அவசியமானது.

இதன் தொடர்ச்சியான விளைவுகள்,போர்,பொருளாதார அழிவுகள்,நோய்,நொடி,பட்டுணிச் சாவாக மக்களை அண்டும்போது தேசத்தின் மிகப் பொதுவான மனிதவளம் நோய்வாய்க்குட்பட்டுத் தேசத்தின் சுய ஆளுமை அழிந்து தேசம் அன்னியத் தயவில் சுயசார்பிழந்து தங்கி வாழும் இனத்தை உற்பத்தி பண்ணுகிறது.இங்கே, தொடர்ச்சியான யுத்தத்துள் இருத்தி வைப்பதற்காகவும் தமது பழைய-கழிவு ஆயுதங்களை விற்றுக் காசாக்கவுமாக மூன்றாம் உலகத்தில் செயற்கையான முரண்பாடுகளையும் அதுசார்ந்த யுத்தத்தையும் ஏகாதிபத்தியக் கம்பனிகள் தொடக்கி வைத்திருக்கின்றன.இன்றைய நிலவரப்படி ஜேர்மனிய அரசு காட்டுமிராண்டி அரசான அல்ஜீரியாவுக்கு 980 டாங்கிளை 1600 கோடிகள் டொலருக்கு விற்பனை செய்கிறதென்றால் இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

இதன் தொடர்ச்சியில் மையங்கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர அரசியலானது என்றைக்கும் மூன்றாமுலகத்தில் அமைதியும் சமாதானம் மலர விருப்பமுற்றே இருக்கிறது.இது, தான் உற்பத்தி செய்வதற்கானவொரு இனமாகத் தமது தேசத்தைக் கட்டி வளர்த்தபடி மற்றைய கீழத்தேய வலயத்தை மூலதனத்தைச் சுரண்டும் வலயங்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.இத்தகைய அரசியலைப் புரிந்து கொள்ள ஆபிரிக்கக்கண்டக் கொங்கோ தேசமே நல்ல உதாரணமாக இருக்கிறது. இன்று -இப்போது இலங்கையே நல்ல உதாரணமாகும்!

இத்தகையவொரு இருண்ட பொருளாதார நலன்சார்ந்த இனவழிப்பு -வன்முறைகள்நமது தேசத்தில் அப்பாவிக் குழந்தைகளை இனப்படுகொலையாகக் கொன்று குவிப்பதற்குச் சிங்கள-தமிழ்-முஸ்லீம் இனங்களின் நலன்களின் வாயிலாக எழும் முரண்பாடாக எவரும் பார்ப்பாராகின், எமது இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது.இது இன்னும் பலிக்குப்பலி அரசியல் வடிவத்தை எட்டி, எமது மண்ணில் என்றைக்குமே அமைதியற்றவொரு சூழலை நிரந்தரமாக்கித் தேசத்தை இராணுவச் சர்வதிகாரத்தின் கீழ் கட்டிப்போடும் அபாயம் நெருங்கி வருகிறது.இதிலிருந்து மீள்வதும், இனங்களுக்கிடையாலான முரண்பாடுகளின் மீது இலகுவாக ஆதிக்கஞ் செய்யும் அன்னிய நலன்களை வெற்றிகொண்டபடி இலங்கையில் பல்லினங்களும் பரஸ்பர நட்புறவோடு வாழ்வை முன்னெடுப்பது அவசியமானவொரு அதி மானுடத் தேவையாகவே இன்றிருக்கிறது.இதையொட்டிச் சிந்தித்ததாகச் சொல்லும் புலம் பெயர் „மாற்றுக் குழுக்கள்“எனும் போர்வைக்குள் ஒடுக்குமுறையாளர்களோடு  கைகோர்த்த தலித்துவ-பிரதேசவாதப் பிளவுவாதிகள் செய்த சதி அரசியலை எங்ஙனம் புரிந்துகொள்வது நண்பர்களே?

இனப்படு கொலை அரசியலானது அப்பாவி மக்கள்மீது பயங்கரத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது கனவைச் சிதைப்பதை நாம் தொடர்ந்து“அடிக்கு அடி-இனப் படுகொலைக்குக் கொலை“எனும்படி அனுமதிப்போமானால் இலங்கையில் எந்தவொரு இனமும் தனது நிம்மதியை-நிலைத்த வாழ்வைத் தக்கவைக்க முடியாது!இது எமது தேசத்தைக் குட்டிச் சுவாராக்க எண்ணும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கும் இலங்கையின் தரகு ஆளும் கும்பலுக்குமான வேட்டைக் காடாகவும் அவர்களின் குடும்ப நலன்களுக்கான கொலைகளுமாகப் படுகொலைகள் பரந்த அரசியல் பழிவாங்கலாக நம்மைப் பூண்டோடு அழிப்பதாக முன் நகரும்.இத்தகைய அரசியல் செல்நெறி ஒருபோதும் முஸ்லீம்களுக்கோ அல்லது ,தமிழருக்கான-இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையைத் தரப்போவதில்லை. மாறாக, நமக்கு இன்னும் பல தசாப்த காலத்துக்கு இதே அழிவு வாழ்வைத் தந்து நமது வரலாறே சுடுகாடாகும்!

இதை தடுப்பதற்கான ஒரு அரசியல், இலங்கையின் இனங்களுக்கிடையலான முரண்பாட்டை முடிவுக்குக்கொணரும் இன விடுதலைசார்ந்த சுய நிர்ணயத்தை அங்கீகரிப்பதும், சுய ஆட்சியுடைய வலயங்களை உருவாக்குவதுமே இன்றைய மூன்றாமுலகத்தின் முன் இருக்கும் அரசியல் பணி.இதைச் செய்து முடிக்கும் தகமை இனங்களுக்கிடையலான ஒற்றைமையின் இருப்பிலே சாத்தியமாகும்.இந்த ஒற்றுமையைக் குலைப்பதே அன்னிய நலன்களின் பெருவிருப்பு.நாம் இதை வெற்றிகொள்வது அவசியம்.அங்ஙனம் வெற்றி கொள்ளாதவரை முள்ளிவாய்க்காலுக்குப்பின் அழுத்கமவிலும் பின் யாழ்ப்பாணத்துக்கும் ,மட்டககளப்புவுக்குமென மதவாத வன்முறையாகவும்-இன வன்முறைகளாகவும் சுழன்றடிக்கும் இலங்கைப் பாசிச அரசின் இனவழிப்பு அரசியலாகும்.இதன்வழி மகிந்தாவின் அந்நியச் சேவை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.இதற்காவேதாம் இந்தப் புலத்து லொபிக்குழுக்கள் யாவும் தமது பிழைப்புக்காக இலங்கை மக்களைச் சாதிரீதியாக-பிரதேசரீதியாக மற்றும் மதவாத ரீதியாவும் பிளந்து குருதி குடிக்கின்றனர்.இந்தப் பயங்கரவாதிகளை வெல்வதும் இவர்களை ஜனநாயகரீதியாகத் தோற்கடிப்பதும் புரட்சிகரமான அரசியலுக்குட்பட்டதே.இதையொட்டி உதிரிகளான நாம் என்ன செய்யப் போகின்றோம்?-இது கேள்வி…

( 2)

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள…

இலங்கையில் முசுலீம் இனத்தின்மீது அரசியல் வன்முறையை ஏவி விட்டுள்ள  மகிந்தா தலைமையிலான இனவாத அரசானது „தற்செயலான வன்முறைக்கு“ப் பாத்திரமற்றது என்றொரு கருத்தைப் பலர் உரையாடுகிறார்கள்.அவர்களுள் முசுலீம் அரசியற்றலைமைகள் கூட இங்ஙனம் உரையாடுவதில் தமது பதவிகளை -அமைச்சகப் பொறுப்புக்களைக் காக்கவும் முனைகின்றனர்.இந்த சிக்கலான காலத்திற்கூட இலங்கையில் ஒடுக்குமுறைக்குட்பட்ட – உட்படும் சிறுபான்மை மக்களினங்களானவை தமக்குள் இணக்கமானவொரு அரசியலைக் கொண்டியங்க முடியாத  தடைகளாக இருப்பவைகள் என்ன?

தமிழ்பேசும் மக்களது ஒரு பிரிவான மலையக மக்கள், மலையகத்தில் ஒட்டச் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில்  பொது பல சேனாவின் முகத்தோடு அந்த மக்களையும் வேட்டையாடப்போகும் மகிந்தா அரசின் தொழிலாளர்களுக்கெதிரான அசியற்போக்ககளின் விருத்தியே இத்தகைய வன்முறையாகவெழுகின்றது.இதன் மிக நுணுக்கமான செல்நெறியானது மக்களினங்களைப் பல வடிவினில் அரசு சாரத முறைமைகளில் ஒடுக்குவதும் ,அதன்வழி தத்தமது எசமானர்களான அந்நிய முதலீட்டார்களின் நலன்களை இலங்கையில் அடைவதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவதாகவே இன்றைய மகிந்தா தலைமையிலான இலங்கை அரசின்  பண்பாக -நிலைப்பாடாகவிருக்கிறது!

இன்று முசிலீம் மக்கள்மீது இலங்கை அரசால் ஏவப்படும் சிங்கள உதிரிவர்க்கமானது தனக்கான நலன்களைப் பேணத்தக்க முறைமைகளில் முசீலீம் சிறு வர்த்தகர்களைத் தாக்கியழிப்பதில் குறியாவிருக்கிறது.மதரீதியாக -மொழிரீதியாகப் பிளவுண்ட சிறு வர்த்தக நலன்களானது இக் குழுமங்களுக்குள் மிகவும் போட்டியானவொரு சூழலைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கையாகவே உருவாக்கியது.இதன் பலாபலன்களானது ஊட்டி வளர்க்கப்படும் இன -மத வாதச் சூழலைத் தகமைத்து மக்களினங்களைப் பிளந்து  அரசுக்கெதிரான அணித் திரள்வை உடைத்தெறிவதே இலங்கை -சீன அரசுகளது தந்திரமாவிருக்கிறது.

இலங்கையில் நடாத்தப்படவிருந்த இரூனேசியப் பாணி“மக்கள் எழிச்சி“ ஒட்போரது[Otpor!] தலைமையின் தூண்டலோடு சம்பந்தப்பட்டதெனினும் அஃது மேற்குலகின் வியூகம் -ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்டதென்பதையும் கூடவே , இலங்கையில் கம்யூனிச-வர்க்கவுணர்வு அதிகமாகப் போர்க் குணமிக்க பாட்டாளிகளைக்கொண்டிருப்பதென்பதும் உலகம் அறிந்ததுதாம்.இதன் திசையில் கட்டப்படும் வியூகங்களை ஒடுக்குமுறைக்குட்படும் எந்தச் சிறுபான்மையினங்களும் சரியப்புரிந்து முன்னெடுக்கும் அரசியல் வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையை மீள மறுத்தொதுக்கும் தமிழ் „மார்க்சிய“ நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:“இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்.“ என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.

1):முள்ளிவாய்காலிற் புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.அந்நியப் பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே  அரசுக்கும் , பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இஃது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.இலங்கை -அந்நிய அரசுகளது இன்றைய இலங்கை மீதான பொருளாதார நகர்வுகள் இலங்கையின் வளங்களை ஒட்டச் சுரண்டுவதிலும் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வலயத்தை வார்த்தக -அரசியல் தேவைக்குட்பக்  கையக்படுத்தும்போது வரும் மக்களது கூட்டுத் தாக்குதலைக்கொண்ட உணர்வெழுச்சி வெடித்துக் கிளம்பாதிருக்கச் செயற்கையாக இனக் குரோதத்தைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள் .இலங்கையை மாறி மாறி ஆளும் கட்சிகளானவை இன்றைய தெரிவில் வன்முறையான சகல வடிவங்களையும் தமக்குள் உள்வாங்கிச் செயற்படுத்துகின்றனர்.

2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.

3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமாக எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)

4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).

5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.

6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலாபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.

7) : இப்போது முசுலீம் -சிங்கள இனங்களுக்கிடையில் வளர்க்கப்படும் குரோதமானது திட்டமிட்ட அந்நியச்சதி என்கிறோம். இதிலிருந்து வளர்க்கப்படும் பொதுபல சேன என்ற இனவாத அமைப்பானது இலங்கைக்குள் நிகழ்த்தப்படவிருக்கும் பல்வேறு சமூக அமுக்க வினைகளுக்கானவொரு ஆரம்பம்.இத்தகைய அரசியல் வாழ்வை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்படவேண்டிய „இனங்களுக்கிடையிலான ஐக்கியம்“ இன்று அதே சக்திகளலேயேதாம் பேசவும் படுகிறது.இவற்றை எதிர்கொண்டு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பேணும் அரசாக மகிந்தாவின் அரசை எண்ணமுடியாது.அவ்வரசு முசுலீம் மக்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து இனங்களையும் அழித்துக் கரைத்துச் சிங்கள „நாம் அனைவரும் இலங்கையர்“ என்று கதையைத் தொடர்கிறது.இந்தத் திசையில் முசுலீம் மக்கள் மத்தியில் தொடரப்படும் இன்றைய இனவாதத் தாக்குதல்களுக்கும், சீன முசுலீம் முரண்பாட்டிற்கும் பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு. சீனாவில் முசுலீம் மக்களுக்கும் சீன அரசுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவுகளை [Shaanxi (province, China)Holy War in China ]-வெளிகளை [History of Muslims in Northwest China ]ஆயும் ஒரு முன்னோட்டமாகச் சீன அரசும் இதை வளர்த்து இயக்கிப் பார்த்துக்கொள்கிறது.தற்போது இலங்கையானது சீனாவின் மட்டுமல்ல பல அந்நியச் சக்திகளது பரீட்சார்த்தக்களமாகவே இருக்கிறது.சீனாவின் சமீபத்து (2009 )முரண்பாட்டில் (ethnic tensions between Uighurs and Han Chinese )பலர் கொல்லப்பட்டார்கள்.பண்டுதொட்டுச் சீனாவின் இந்த முரண்பாடுகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதால் இதை அணுகும் பல பொறிமுறைகளை நோக்கிச் சீனா நகர்கிறது[ Read more … : Studies in Islamic History and Civilization: In Honour of Professor David Ayalon ]

எனவே, இந்நிலையில் முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள முனையுந் தருணத்திற்கூட முசிலீம் இனமானதோ அதைக் குறித்துப் பேசுவதைவிட்டுப் பண்ட்டுதொட்டுச்  சிங்கள இனவாத அரசுகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பரந்துபட்ட  தமிழ்மக்களைக் குற்றக்கூண்டில் ஏற்றுவதிலேயேதாம் முழுமூச்சாகவிருக்கிறது.இதைக் கடக்கும் அரசியலைத் தமிழ்ச் சூழலை அண்மித்த அரசியற் குழுக்கள் தற்போது முன்வைத்தாகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

19.06.2014

ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து…

ஜெயபாலன் கைது-விடுதலையின் பின்னான புலத்து அரசியல்-சோபாசக்தியையும் தாண்டிச் சில குறிப்புகள்!

ன்று, தேவையற்ற தேவையெனப் பேசப்படும் ஜெயபாலனது இலங்கை விஜயமும், கைதும் பரவலாகப் பகரப்பட்ட இலங்கை அரச லொபிகளது நையாண்டிச் சேட்டையைத்தாண்டிப் பலருள் இலங்கை அரச „ஜனநாயகம்“குறித்தும், அதைப் பரவாலாகச் சிலாகித்துப் பேசும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை அரச லொபிகள்-சேவகர்கள்ஆகிய „மாற்றுக் கருத்தாளர்கள்-புரட்சியாளர்கள்“ தம் மனிதவிரோதப் பக்கங்களது குரலை மிக நேர்த்தியாக அம்பலப்படுத்தியவொரு செயலாக ஜெயபாலனது கைதின் வழியான இலங்கை அரச நடாத்தை மிகத் தெளிவாகவொரு செய்தியைத் தந்திருந்தது.

அது,பரவலாகத் தனிபட்ட நபர்களது வாழ்வில் எத்தகையவொரு அதிகாரத்தைச் செய்யும் நிலையில் இலங்கை அரச ஜந்திரமும்,கட்சி அரசியலும் செயற்படுகிறதென்பதையும், அதை நேசிக்கும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை லொபிகளது நடாத்தையும் பரவலாக அம்பலமானது.சாதரணப் போராளிகள் விசயத்தில் தலையீடு செய்யும் குறுக்கு வழித் தமிழ் மாபியாக்களது அரசியல் நடாத்தையானது பல்லாயிரக்கணக்கான போராளிகளை இலங்கை இராணுவம் கொலை செய்யும் ஊக்கத்தைக் கோரியது முள்ளிவாய்க்கால் வரலாற்றில்!.

அதே போன்று,இன்றுவரைச் சிறையில் வாடும் இளைஞர்களது தலை விதிக்கு யார் யாரெல்லாம் காரணமென்பதையும் ஜெயபாலனது கைதின்வழி அறியத் தக்கதாகவே இருக்கிறது.

ஒரு கெடுதியான காலத்துக்குள் தமிழ்ச் சமூகம் மூழ்கியுள்ளது.

இந்தச் சமுதாயமானது எந்தவொரு தர்க்க நியாயத்துக்கும் இடம் கொடுக்க முடியாது தடுக்கப்பட்ட சிந்தனையாலும்-அரசியல் வாழ்வாலும்தன்னைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது.அதன்,ஜீவ மரணப் போராட்டத்தைத் தமது எஜமானர்களுக்கொப்பவே தகவமைக்கும் தமிழ் அரசியல்-ஆயுத மாபியாக்கள் அந்த மக்களது குரலாக ஒலிக்கும் எவரையும் விட்டு வைக்காது மேய்வதற்குத் தயாராகும் நடாத்தையாகவே ஜெயபாலன் கைது இன்னொரு செய்தியையும் குறித்து வைத்திருக்கிறது.

இதுள்,ஜெயபாலன் கைதைப் பரிகாசித்து நையாண்டி புரிந்தவர்களான  இந்த இலங்கை அரச லொபிகள்தாம் கிழக்குக்கும்-வடக்குக்கும் வசந்தம் வரவழைக்க மகிந்தாவுக்குப் பின்னால் கூஜாத் தூக்கி அலைவதைப் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் இப்போதெல்லாம் பரவலாக அறியத் தக்கதாகவே இருக்கிறது.

இந்த இலங்கை அரச லொபிகளது எந்த நகர்வும் அறிவார்ந்த மக்கள் பிரிவால் அங்கீகரிக்க முடியாதவொரு இடர் நிறைந்த,முட்டுக்கட்டையிடும் செயலூக்கமாகத் தொடர்கிறது.பாசிச அரசின் கொடிய அடக்குமறையை மிகவும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டுத் தனி நபர்களைக் கொடியவர்களாகவும்-கோமாளிகளாகவும் வர்ணிக்கும் அரசியலை இவர்களுக்கு வழிவகுத்துக்கொடுத்த சூழ்நிலைதாம் என்ன?

இன்று, பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும்,இலங்கை இனவாத அரசும் அதற்குத்துணையாகியுள்ள புலத்து „மாற்று அரசியல்“மாபியாக் குழுக்களும்  அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு „அரசியல்“செய்கின்றன.

இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் „அரசியல் இலாபத்துக்குள்“மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்தவர்கள் அன்று.இன்றும், அதே கொலைவெறியும்,குறுக்கு வழிப் பலாத்தகார அரசியலும் தனிநபர்கள்மீதான அடக்குமுறையை இவர்களிடம் கோரிக்கொள்வதால் இவர்களது லொபிகளான புலத்து மாயாக்களது மன வக்கிரமே ஜெயபாலன்மீதான நையாண்டியாக சூழ்ச்சிமிக்க பரப்புரையானது.இதை, அப்வப்போது ஆமோதித்த “ நபர்கள்-புரட்சிகரப் படைப்பாளிகளென“ க் கூறுபவர்கள் செய்த அரசியலானது அப்பட்டமான அயோக்கியத்தனமானது.

கண்ணெதிரகண்டால் கோப்பையை எடுத்து உணவு போடும் இந்தக் கூட்டம், காணதிருக்கும்போது முதுகுக்குப் பின்னால் கத்தியைக் குறிவைத்து வீசிக்கொண்டிருக்கிறது.இது,ஜெயபாலனது கைதின்பின் நமது „மாற்றுக் கருத்து மனிதாபிமானிகள் “ செய்த நையாண்டி அரசியலிலும்,இலங்கை அரசுசார் கருத்தூன்றல்களிலுமாக நாம் அனைவரும் உணரத்தக்கவொரு வெளியைத் தொடர்ந்து இனங்காட்டியது.இந்த வெளிக்குள் இயங்குபவர்களைக் குறித்தே நாம் அச்சப்படவேண்டும்.இவர்கள்,நமக்குள்ளேயேதாம் நாமாக நட்பாடுகிறார்கள்-புரட்சி-விடுதலை பேசுகிறார்கள்.இலங்கை அரசின்“ஜனநாயகத்தை“க் குறித்துப் பரவலாகச் சிங்கள மக்களது அக நெறியுள்-மனோபாவத்துள் வைத்து விளக்கி அஃது,தமிழ்ச் சமூகத்தின் அராஜகப் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டவொரு உயர்ந்த பண்பாகப் பேசவும் -இயங்கவும் முனைகின்றனர்.

இவர்கள்,தமிழ் மக்கள் சமுதாயத்தைக் அராஜகவாத-ஜனநாயகப் பண்பறியாக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கின்றனர்!

தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச ஒடுக்குமுறையை,அதனால் மக்கள் பட்ட-படும் வலியை,வாழ்வுச் சிக்கலையெல்லாம் புறந்தள்ளும்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் புலம் பெயர்  இலங்கையரசின் லொபிகளால் „மக்களை“மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய முடியவில்லை.மாறாக, இவர்கள்,அரச-இயக்க வாதக் குழுவாதத்துள் இயங்கியபடி மக்களைக் கருவறுக்கு அரசியற் கருவூலத்தைத் தமது இலக்காகவே வரிந்துகொண்டனர்.இதை,அச்சொட்டாக முன்வைத்த சந்தர்ப்பத்தை கவிஞர் ஜெயபாலனது கைதின் பின்னே நாம் பரவலாகப் புரியும் தருணத்தை இவர்களே நையாண்டி எழுத்துக்களது வழி அராஜக அரசியலை மிக நேர்த்தியாக நகர்த்தினர்.இதைப் புரிய மறுக்கும் ஒவ்வொரு நபரும் இவர்களுக்குடந்தையாகவே இயங்குவதில் துணைபோகின்றார். சோபாசக்தியின் முக நூல் நிலைத் தகவலில் கைதாகி விடுதலையான ஜெயபாலனை நோக்கி „இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?“ என நையாண்டிய பேசிய கருத்துப்படம்பிரசுரிமானது.இதைப் பரவலாக அனைவரும் பார்த்திருப்பார்கள்.அதன் அரசியல் என்னவாக இருக்கும்?

இத்தகைய அரசியலானது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.ஒருவரது வாழும் உரிமையையே இது தட்டிப் பறிப்பதற்கெடுக்கும் முயற்சியல் நையாண்டித்தனமாகவுரையாடிக் கொண்டு முகதுக்கு நேரே நல்ல „தோழமை“முகமூடி தரித்து நிற்கிறது.

ஒடுக்கப்படும்-ஓடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக்காக- அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.ஜெயபாலனது கைது குறித்துப் பேசப்பட்ட உரையாடல்கள் இலங்கையின் அரசியல்வறுமையை எடுத்துரைக்கிறது-நமது தோழமைசார்ந்த அக வயக் குறைப்பாட்டு அரசியலைத் தெட்டத் தெளிவாக்கியது.இது,ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுக்காது ஒடுக்கு முறையாளர்களோடு சமரசமாகப் போவதன் அரசியலைப் பல தளத்தில் வைத்துரையாடியது.அங்கே,இயக்க-குழுவாத மாயையும் அதன் விசுவாசத்தின்மீதான தனிநபர்கள்-தலைவர்களது விருப்பின் பயன்வினைகளாக வலம் வந்தனர் புலம் பெயர் கருத்துக் கந்தசாமிகள்-லொபிகள்!

புலம் பெயர்ந்து வாழும் நமக்குள்-மாற்றுக் கருத்து மந்தைகளுக்குள்  எது நடந்தாலும் „தப்பித்தல்“ சாத்தியமாகிறது. அல்லது ,ஏலவே „தீர்மானிக்கப்பட்ட“அனுமானங்களுக்காகச் சகிப்புத் தன்மையை(ஜால்றா)மனமுவந்து ஏற்றுக் கொள்கிறது.இது புத்திஜீவிகளிடம் மிகுதியாகக் காணக்கூடியது.ஜெயபாலன் கைது குறித்து கமுக்கமாகவிருந்த நமது „பேராசிரியர்கள்“படைப்பாளிகள் எனப் பெரும் பழைய நண்பர்கள் கூட்டம் புலத்தில் அம்பலப்பட்ட கையோடு அது,இப்போது முகத்துக்கு நேரே தோழமை வலியுரைக்கிறது.இதன் தொடரிற்றாம் சோபாசக்தியும் இணைவுறுவதாக நான்குறித்துரைக்கின்றேன்.

சமூகத்தில் இன்று நிகழும் „வன் கொடுமைகளை“ இந்த ஸ்த்தானத்தில் இருக்கும் மனிதவுள்ளத்திடம் ஆப்பு வைத்தும் எடுத்துரைக்க முடியாது.இந்த வன்கொடுமை தவிர்க்க முடியாத „அத்துமீறிய“அறமாகப் பண்பாக எடுத்துரைக்கக் காத்திருக்கும் இந்த மனித மனம்.இலங்கை அரசின் வன் கொடுமைகளை நகைப்புக்கிடமானவொரு உரையாடலாக்கும் சூழலை வைத்தியக்கும் ஒரு கூட்டம் சொல்லும் „தோழமை“என்பது என்ன அர்த்தத்தோடு நமக்குள் இயக்கமுற முனைகிறது?

புலிகளது அராஜக அரசியலை ஒப்பிட்டு ஆளும் „மகிந்த அரசுக்கு- அது செய்யும் மக்கள் நல அபிவிருத்திக்காக -ஜனநாயகச் சூழலுக்காக“ எதுவும் செய்யலாம் எனும் ஒரு „மொன்னைப் பேச்சு“அறிவுத்தளத்தைக் காவுகொண்ட பின் இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும். சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனித வளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் செல்லாக் காசாகிறது.இதுவே,நமது „தோழர்கள்“தம்அன்றாட நடாத்தையில் வைத்துப் புரியத் தக்கது.

இந்தப்  புலத்துத் தாதாக்களுக்குமுன் எந்தப் பெரிய புரிதலும் ஈடு கொடுக்க முடியாது சேடம் இழுக்கிறது.அப்படியொரு நியாயமற்ற பண்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அவர்களது உரையாடல்கள் யாவும் இலங்கை அரசுக்கு-கட்சி அரசியலுக்கு லொபிகளாக மாற்றப்பட்ட குழுக்களது மலினப்பட்ட புனைவாக எடுக்கப்படாது.மாறாக, இது திட்டமிட்டவொரு அரசியல் பண்பாக நம்மெல்லோரது அகத்திலும் கட்டியமைக்கப்பட்ட கருத்தியல் போராட்டமாக முன்னெழுகிறது.

இதை ஒப்பேற்றுபவர்கள் வெறும் சாதாரண மனித நடவடிக்கையில் ஈடுபடவில்லை மாறாக, ஒரு இனத்தைச் சீரழிக்கும் „கிரிமனல்கள்“ எனும் படி சொல்லலாம்.

அந்தளவுக்கு மக்களைத் தமக்கேற்ற முறைமையில் தயார்ப்படுத்தி அவர்களை உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் வருத்துவதை எந்தத் தளத்திலும் எவரும் நியாயமெனச் சொல்லமுடியாது.இது திட்மிட்ட சதி,மக்களைக் காவுகொள்ளும் மனிதவிரோதச் செயல் முறை.ஜெயபாலனது கைதுக்குப் பின்நாம் தெளிவாக இனங்கண்வுண்மையானது,  புலம் பெயர் இலங்கை அரச-இந்திய அரச லொபிகளது தளமாகவே இந்த „மாற்றுக் கருத்து“தளம் மாற்றப்பட்டு உருவாகியுள்ளது என்பதே!

இதுள், கணிசமான „படைப்பாளிகளிள்,மனிவுரிமைவாதிகள்-பேராசியர்கள்-புரட்சி காரர்கள்“  எனப் பெரும் சதிக் காரர்களே நமக்குள் நாமாக வலம் வருகின்றனர்.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

29.11.2013

>நடந்தேறும் ஜனாதிபதித் தேர்தல்

>அந்நியச்சக்திகளது சதுரங்க ஆட்டம் இலங்கையில்

தேர்தற் களம்:

இன்றைக்கு, இலங்கை அரசியலில் நடந்தேறும் ஜனாதிபதித் தேர்தல்-அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளைபயனாக மேன்மேலும் விருத்தியாக அறுவடையாகிறது.இந்த அரசியல் ஈழத் தமிழனை ஒண்டிக் கொள்ள இடமற்றதாக்கியபின் அகதிக் கோலத்தோடு அடுத்தவர் தெருக்களில் அலையவிட்டுப் புலிகளின் „தமிழீழத்தில்“ புடம்போட்டு ஈழத்தைக் கனவுகாண வைத்தது அன்றும்-இன்றும்!

„KRIEG BEDEUTET FRIEDEN
FREIHEIT IST SKLAVEREI
UNWISSENHEIT IST STAERKE“-Dahn

யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக…

இறுதியான „ஈழயுத்தம்“ இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் „ஈழம்“மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான“தீர்வு“த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு…

கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை „நமது அரசியல்“ இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது.இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதிகள்தாம்.எனினும்,கடந்தகாலத்தில் புலிகளின் போராட்டச் செல் நெறி நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு உத்தியாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது.

இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி, அதை வெறும் புலிப்பயங்கரவாதமாக்கி இலங்கையை ஒட்டச் சுரண்டுவதற்கும் அதன் கடல் வளத்தையும்,இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் இந்திய-சீனா மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்காகப் பயன்படுத்துவதையும் இலக்காகக் கொண்டே வளர்த்தெடுக்கப்படுகிறது.ஆனால், இந்த இலக்கைத் திட்டமிட்டு மறைத்து வரும் ஊடகங்கள்,நம் மக்களை நம்ப வைத்து நலம் அடிக்கும் அரசியலை „மகிந்தாவின் மனிதாபிமானித்தை“ பேசியும்-எழுதியும் தமது எஜமான விசுவாசத்தைச் செய்கின்றன.

வரும் ஜனவரி 26.2010, ஜனாதிபதித் தேர்தலில், சரத்துக்கும்,மகிந்தாவுக்கும் நன்றி விசுவாசமாக இலங்கை மக்கள் அனைவருமே இருக்க வேண்டுமெனக் கட்டளையிடும் இனம்சார் கட்சிகள், தமது எஜமானர்களது தயவில் தமது கட்சி இருப்பைக் குறிவைத்து இயங்குகின்றார்கள்.அண்மையில் அழித்தொழிக்கப்பட்ட புலிகளது போராட்டம் அந்நிய அடியாட் சேவையாக இருந்தது.அஃது, பிழையான வகையில் தமிழ் மக்களது எதிர்ப்பு அரசியலைக் கொண்டியங்கியது. சிங்களப் பேரினவாதத்தின்முன் ஒடுங்கி-அழிந்துபோகாதிருப்பதற்காகப் போரிட்ட தமிழ்பேசும் மக்களது நியாயமானபோர்- இனவொடுக்குமுறைக்கெதிரான போர் பரிதாபகரமாத் தோல்வியாகியது. இப்போது,அவ்வெதிர்ப்பு அரசியல் பாசிசப் புலிகளது அழிவுக்குப்பின் பயங்கரவாதமாகப் போயுள்ளது.இதைச் செவ்வனவே முள்ளிவாய்க்கால்வரைச் செய்து ஒப்பேற்றிவிட்டுப் புலிப்பினாமிகள் இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானமென வம்பளக்கும்போது,துன்பமும் துயரமும் மேலும் தொடர்கதையாகப் போகிறது, இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களுக்கு.

நமது மக்களோ இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள்.இத்தகைய நம்பிக்கை வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலை பெறுகிறது.இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள்.இவையெல்லாம் புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.மகிந்தாவோ அல்லது சரத்தோ நமது மக்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் அல்ல!மாறாக,இன்றைய நிதிமூலதனத்திடம் சரணாகதி அடைந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவில், அந்நியர்களே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானித்துச் செயற்படுகின்றனர்.அந்த வைகையற்றாம் இன்றைய முள்ளிவாய்க்கால் இனவழிப்புடனான புலி அழிப்பு நடந்தேறியது.

அந்நியச்சக்திகளது சதுரங்க ஆட்டம் இலங்கையில்:

இலங்கைத் தீவில் எண்ணை வளமோ அன்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குக் கனிப் பொருள் வளமோ கிடையாது.எனினும், இலங்கையின்மீது அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் நீண்ட நாள் கனவொன்றிருக்கிறது.அஃது, இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த துறைமுகங்களும் இலங்கையின் புவிகோள இருப்புமேயாகும்.

இந்தக் கனவில் அமெரிக்காவுக்கான நலனை முதன்மைப்படுத்தும் அந்தக் காரியம்(அமெரிக்க ஆதிக்கம் வலுத்த இலங்கையும் அதன் துறைமுகங்கள் அமெரிக்கக் கடற்படைத் தளங்களாவதும்) நிகழ்ந்துவிட்டால் அமெரிக்காவினதும் மற்றும் மேற்கு ஐரோப்பாவினதும் வணிகத்துக்கு இன்னும் வலுக்கூடிவிடும்.இந்த வலு இலங்கையின் இராணுவ முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்கள்மீதான ஆதிக்கத்தைச் சார்ந்தே இருக்கிறது.இங்கு,மகிந்தா தலைமைதாங்கப்போகும் ஐக்கிய இலங்கைக்கு ஒரு இராணுவ யுத்தப்பேய் சரத் பொன்சேகாவடிவில் அமெரிக்காவுக்கான தெரிவாக, பாசிச மகிந்தா குடும்பத்தின்முன் சவால் விடுகிறது.இது,தமிழ்பேசும் மக்களது குரல்வளைகளில் பதித்த தனது கொடியபற்களை தேர்தலுக்குப்பின் மெல்லக்காட்டி மக்களைப் பயமுறுத்தும் காலமொன்றும் உருவாகலாம்!

இன்றைய வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை.உற்பத்தியானது இப்போது மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன.இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்“மார்க்“ வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும்.இங்கே, இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது.இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினதும்,இந்தியாவினதும் பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியாவுக்கு இக்கிழமை வருகை தந்த பங்காளதேஷ் அதிபரின்(Premierministerin Sheikh Hasina Wajed)முன் வாக்களிக்கப்பட்ட இந்தியக் கடன் நூறுகோடி டொலர்களாகும்.இந்தியா பங்காளதேஷ் இலங்கைபோன்ற நாடுகளைத் தனது அரைக் காலனியாகவே பயன்படுத்தி வரும்.இதற்காக அது,தனது பிராந்திய நலனுக்கிசைவான இராஜபக்ஷா குடும்பத்தை எப்பாடுபட்டும் காக்கும்.


புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.என்றபோதும், இந்தியா-சீனா மற்றும் அமெரிக்கா,ஐரோப்பாவுக்குமான இலங்கை மீதான அரசியல் இலாபங்கள்-எதிர்பார்ப்புகள் முற்றிலும் முரண்பாடானது.இதுள், இத்தகைய நாடுகள் முரண்படும்போது கட்சிசார் அரசியல் நடாத்தையில் வலுக்கள் கூடும் குறையும்.இதை நாம் பற்பல வடிவங்களில் கடந்த காலத்துள் எதிர்கொண்டோம்.இந்தியா இலங்கையைத் தனது வழிக்குள் கொண்டுவருவதற்காக விடுதலை இயக்கங்களைத் தனக்காகப் பயன்படுத்தியதும் பின்பு இலங்கையோடு ஏற்பட்ட உடன்பாடுகள்-தேன் நிலவோடு இயக்கங்களை நிராயுதபாணிகள் ஆக்கியதும்,இதுபோலவே புலிகளை மேற்குலகமும் அமெரிக்காவும் நிதி கொடுத்து வளர்த்ததும் பின்பு புலிகளது முதுகை உடைத்த ஆசிய மூலதனத்திடம் ஏமாந்ததும் இன்றைய வரலாறு!புலிகள் என்றவொரு அதி தீவிர வலதுசாரியப் பாசிச இயக்கமொன்று அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது.அஃது, இப்போது ஆசிய மூலதனத்தால் அழிக்கப்பட்ட இடத்துக்குச் சரத் பொன்சேகாவாக வரமுடியும்.எனவே, புலிகள் இல்லாத தமிழ் அரசியலை ஈடுகட்ட யுத்தக்கிரிமனல் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதுதாம் புலிகளது வெற்றிடத்தை நிரப்பும் அரசியல் முன்னெடுப்பாகிறது.ஒருபோதும் அமெரிக்க நலன்-ஐரோப்பிய நலன் இலங்கையை முற்றுமுழுதாக ஆசியப் பிராந்திய வல்லரசுகளிடம் மண்டியிட அனுமதியாது.இதைப் பண்டார நாயக்காவின் கொலையில் உரைத்துப் பார்க்க முடியும்.பாகிஸ்தானில், இந்துநேசியாவில் தாய்லாந்தில் எப்படி இராணுவ ஆட்சிகள் நடக்கிறதோ அவ்வகைப் பாணியிலான அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயத்தை இப்போது சரத் பொன்சேகாவினது அரசியல் பிரவேசத்தில் இனங்காண முடியும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது விடுதலைக்கு எதிரானதும்,அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கான தடைக் கற்களாகவுமே இருக்கும்.

ஆசிய-மேற்கு உலகங்களது மூலதனம்:

இங்கே,ஆசிய மூலதனமானது இந்தச் சூதாட்டத்தில் இலங்கையின் சிறுபான்மை இனங்களது முரண்பாடுகளை அரசியல்-பொருளாதார முறைமைகளோடு தீர்க்க முனையாதபோது இவ் முரண்பாடுகளைச் சாதகமாக்கிக்கொள்ள மேற்குலகத்துக்கு முடியும்.புலம் பெயர் தேசங்களிலுள்ள அனைத்துப் புலிக்கட்டமைப்பும் இத்திசைவழியில் மேற்குலகுக்குப் பயன்பாடானவர்கள்.புலம் பெயர்ந்த ஈரானியர்கள் இன்றைய ஈரானுக்கு எதிராக இருப்பதுபோல்.இந்நிலையில்,சங்காய் ஓர்க்கனேசேசன் கோப்பிரேசன் தனது தெரிவாகப் புலியை அழித்தபின் அவர்களோடு சேர்த்துத் தமிழ்பேசும் மக்களது நியாயமான அரசியல் கோரிக்கைகளை அழித்ததாகக் கனவு காணுமா அல்லது அரசியல் தீர்வை முன்வைக்குமா என்பதற்கு மகிந்தாவினது வெற்றியின்பின் சில தீர்மானகரமான முடிவுகளை எட்டியே ஆகவேண்டும்.

1: இலங்கை பூராகவும் இனப் பாகுபாடற்ற பொருளாதார முன்னெடுப்புகள்-அபிவிருத்திகள் நடந்தே ஆகவேண்டும்.யுத்தத்தால் பாதிப்படைந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள் அவர்களது வாழ்வுக்கானதாகப் பயனெட்டுவதும்,குடிசார் அமைப்புகள்
சமூக வாழ்வைச் செப்பனிடுவதும்,குடும்பங்களை இணைப்பதும் அவசியம்.இதற்காகக் குடிசார் அமைப்புகள் செயலிழந்த கடந்தகாலத்தைத் தொடைத்து எறியவேண்டிய நிலையில் இலங்கை ஜனநாயகம் தன்னைப் புதிப்பித்தாகவேண்டும் இல்லை உயிர்த்திருக்க வேண்டும்.

2: இராணுவவாதம் மங்கி,குடிசார் நிறுவனங்களுக்குள் அரசியல் ஆதிக்கமும்,சிவில் சமூக ஆளுமைiயும் இணைந்துகொள்வது.அரசியல் ரீதியான இனஞ்சார் அதிகாரப்பரவலாக்கம் பொதுவான ஒருகிணைந்த இலங்கை அரச சட்டயாப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.இதுவே,தடையற்ற பொருளாதார முன்னெடுப்புகளை மேற்குலக மூலதனத்திடமிருந்து பாதுகாத்து ஆசிய மூலதனத்துக்குச் சாதகமான தெரிவுகளை வலுப்படுத்தும்.இது,மாகண சபைகளுக்கு சட்டரீதியான அதிகாரங்களைக் கையளித்தே ஆகவேண்டும் என்ற பொருளில் புரிக.


இவையிரண்டும் நேராதிருப்பதற்கான தெரிவுகளாக எதிர் தரப்பை மேற்குலகம் பயன்படுத்தும்போது,அதைப் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்தே முன்னெடுப்பர்.இதைத் தடுப்பதற்கு முனையும் ஆசிய மூலதனத்துக்கு, இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் ஒருகிணைந்த இலங்கைக்குள் தேசிய இனமாக்கிக்கொள்வது அவசியமாகவே இருக்கிறது.இதைத்தாம்“நாம் அனைவரும் இலங்கையர்கள்,சிறுபான்மை இனங்கள் என்பது கிடையாது“என்ற மகிந்தாவின் கோரிக்கைக்குள் இனங்கண்டாக வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தப் பொருளாதார நகர்வுகள்-முரண்பாடுகள் மக்களினங்களை வலு கட்டாயமாக ஒரு தேசத்து நிலவரையறைக்குள் ஒன்றிணிக்கவே முனைகின்றன.இதைப் புரிய ஐரோப்பியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தையும்,ஐரோப்பிய மூலதனத்தின் போட்டிகளையும்,தனித்தனியாக ஐரோப்பிய நாடுகள் இருந்தபோது நேர்ந்த அரசியல்-போராட்டங்களையும் உற்று நோக்குவது அவசியம்.இதற்குப் „பழைய ஐரோப்பா“என்ற பதம் ஒரு குறியீடாக உலகத்துள் இன்றும் இருக்கிறது.

கண்டம்விட்டுக் கண்டம் பாயும் மேற்குலக நிதி மூலதனமானது மத்திய ஆசியாவின் எரிவாயு-மற்றும் மசகு எண்ணையோடும் மற்றும் கனி வளங்களோடும் சம்பந்தப்பட்ட இராணுவக் கேந்திர வலயமொன்றை இலங்கையைச் சுற்றி பின்னிவைத்திருக்க விரும்புகிறது.இது வளர்ந்துவரும் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தித் தமது உற்பத்திக்கு எதிரான போட்டியிலிருந்து தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியலோடு பின்னப்பட்ட விய+கமாகும்.இதற்காக இலங்கையை முற்று முழுதாக இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கத்திலிருந்து விடுபட வைத்தாகவேண்டும்.அதற்கானவொரு அருமையான தேர்வாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகவாயும்,தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் மேற்குலகம் பயன்படுத்துகிறது.அவ்கானிஸ்த்தானது மேற்குலக யுத்தத்தில் இலங்கையானது மேற்குலகச் சார்பு கட்சியால் அரசபரிபாலனஞ் செய்யப்பட்டால் தென்னாசியக் கடற் போக்குவரத்து மேலாண்மைக்கு மேலும் வலுக்கூடி இரட்டிப்பு வெற்றியை அவ்கான் யுத்தத்தில் எட்ட முடியும்.இது,பரவலான மேற்குலகப் புவிகோள வியூகமாகவே விளங்கத்தக்கது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக மேற்குலகச்சார்பு ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்றுத் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவது அமெரிக்காவினது தெரிவு.இஃது,இலங்கை அரசின்மீதான இந்திய-சீனா ஆதிக்கத்துக்கு விழுந்த பாரிய அடியென்பதை இந்திய ஆளும் வர்க்கம் உடனடியாகவே புரிந்து கொண்டது.தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து இந்தியா,சீனா போன்ற இரண்டு பொருளாதார ஆதிக்கச் சக்திகளைத் தனிமைப்படுத்தும் அரசியலை அமெரிக்காவும் மேற்குலகமும் முழு முயற்சியாகச் செய்து வருகிறது.இந்தியாவின் சந்தையை வெற்றிகொண்ட மேற்குலகமும் அமெரிக்காவும் அதன் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதாரச் சந்தையையும் மெல்ல உடைப்பதின் ஒரு அங்கமே சரத்,ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளது கூட்டு.இலங்கையில், இந்தியா-சீனா போன்ற நாடுகள் அதிகமாக ஆதிக்கத்தைச் செலுத்தி, இலங்கையை இந்தியாவினது-சீனாவினது செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக்கவே புலியழிப்பைக் கொள்கையாக வகுத்தது சங்காய் ஓக்கனேசன் கோப்பிரேஷன்!இங்கு, இவ்வமைப்பின் செல்வாக்கு என்பதன் மறுவடிவம் இந்திய-சீன,இருஷ்சிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடு என்பதன் பொருளைக் குறித்து நிற்பதென்பதை இந்த மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொண்டது.இத்தகைய நாய்ச் சண்டையில் அடியாளாக இருக்கும் ஒவ்வொரு இனம்சார் கட்சிகளும்,அமைப்புகளும்- இயக்கங்கங்களும் தத்தமக்குரிய வேலைகளைத் தமது எஜமானர்களுக்காச் செயற்படுத்தும்போது“இலங்கைத் தேசியம்,தமிழ்,ஜனநாயகம்,மக்கள் நலன்,பசிபோக்குதல்,நிவாரணம்,மீள்கட்டுமானம்,பேச்சுரிமை,வாழ்வாதாரம்“என்று பற்பல முகமூடிகளைப் போட்டுக் கொள்கின்றன.புலம் பெயர் புலி மாபியாக்கள் இன்னமும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கூடாகத்“தமிழீழ“வரைபடம் காட்ட முனைதலும் இதன் ஒரு அங்கமே.

இயற்கை:

ஆசிய மூலதனம் ஒரு புறமும்,மறுபுறம் மேற்குலக மூலதனமாகப் உலகத்தின் கனிவளங்கள் சில குடும்பங்களது சொத்தாக மாறிவிட்டென.இதைச் சுற்றித் தேசங்களது அரசியல்,மக்களது அழிவுகள் நடந்தேறுகிறது.இயற்கை அனர்த்தங்களாக சீறிச் சொல்கிறது மனிதத் தவறுகளை.கெயிட்டியில் இலட்சம் மக்களது உயிர் கடந்து மூன்று நாட்களுக்குமுன் பறிக்கப்பட்டது.புவி அதிர்வு!

சுனாமி வந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூலதனத்து முரண்பாடாக…

உலகத்தின் இன்றைய பொருளுற்பத்தியினது நோக்கமென்ன? அதன் இலாபவேட்கையானது மனித நாகரீகத்தை எங்ஙனம் காப்பாற்றப்போகிறது?

„இன்றைய மனிதர்கள் இப்படிக் கணக்கு வழக்கற்று கனிவளத்தை எடுக்கின்றார்கள்,இயற்கை வழங்க மறுக்கும் தறுவாயிலும்!நிச்சியமாக நாளையிந்த இயற்கையானது இதே கணக்கில் எடுக்கப்போகிறது மனிதர்களின் அனைத்தையும், கூடவே அவர்களது உயிரையும்-அவர்கள் வழங்காதபோதும்!!.“இந்தப் புவிப்பரப்பில் நாம் 100.000.தலைமுறைகளாக வாழ்ந்துவிட்டோம்,எனினும், இந்தத் தலைமுறைக்கு நன்றாகவே தெரியும் தாம் மட்டுமே இந்த 100.000. தலைமுறைக்கு இறுதியாகப்போவது.

என்ன செய்வோம்?

எங்கும் இயற்கை அனர்த்தம்- யுத்தம்!

அதீத பொருள் உற்பத்தி,கனிவளச் சுரண்டல் அதற்காக அணுயுத்தம்…விடுதலை-தேசியவிடுதலை,அந்த விடுதலை,இந்த விடுதலை!ஆனால், சூழலும் மனிதர்களும் அழியும் விளிம்பில்…உழைப்பவர்கள் ஓட்டாண்டியாகிப்போய் ஓய்வின்றி உலகமே உழைப்பென்றொடுங்கும் நிலை.ஒரு பருக்கை சோற்றுக்கே உழைப்புப் போதாத நிலை!இந்த அவலத்தில் நாம் வாழும் „இந்த இயற்கை“ இன்னும் எவ்வளவுக்கு நம்மைத் தாங்கும்?

இயற்கை தாங்காது அழிவுகளாக அள்ளிச் செல்கிறது மனிதவுயிர்களை,இது போதாதற்கு அணுமின்சாரம் அதன் கழிவுகள் உலகத்தைப் பூண்டோடு அழித்து மனித நாகரீகத்தைப் பாடைகட்டி அனுப்பத் தயாராகிவிட்டது.இதில் எனது தேசமென்ன உனது தேசமென்ன?

உழைப்பவர்களுக்குத் தேசமுண்டா?வீடுண்டா,காடுண்டா?

எதுவெப்படியோ நாளொன்றுக்கு இந்தப் பொருளாதார அமைப்பானது 100 மில்லியன்கள் தொன் „கரியமில வாயு“வை மூலப் பொருள்களைப் பொருளாக்குவதில் இந்த வளிமண்டலத்தில் கொட்டுகிறது.இது வளிமண்டலத்தில் இருக்கின்ற அளவில் ஐந்து மடங்கு அதிகமானது.எதை நோக்கிச் செல்கிறோம்?இந்தப் புவியைச் சிதைத்த பொருளாதாரம் எமக்கு வேறொரு உலகத்தைத் தயாரிக்க முடியுமா? இது கேள்வி.இந்தப் புவிப் பரப்பில் என்றுமில்லாதவாறு பொருளாதாரப் போட்டிகள் ஆரம்பமாகிறது.இனியொரு யுத்தம் ஆயுதங்களால் உருவாக முடியாது.அது இயற்கை அழிவால் ஒப்பேறுமென்றே கருதமுடியும்.

உலகத்தில் பொருள் உற்பத்தியானது மூலவளத்திலும்,சக்தியிலுமே தங்கி இருக்கிறது.இந்தச் „சக்தி“ என்பது எரிபொருள்மட்டுமல்ல மிகவும் அவசியமான மின்சாரத்திலுமே அர்த்தம் பெறுகிறது.இங்கே மின்சாரமானது தொழிற்சாலைகளின் தேவைக்கேற்றளவு எந்த நாட்டாலும் தயாரிக்க முடியாத நிலையில் அணுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனைத்து நாடுகளும் முனைகின்றன.ஆனால் இந்த அணு மின்சாரமானது மனித நாகரீகத்தையே அழிப்பதற்கு „நேரக் குண்டாக“நேரம் குறித்திருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிகத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகிறது.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.

2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.

3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.

5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

– ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் „நம் கூட்டுழைப்பு“ நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?

„நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று „சேட்“பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்“ நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?

இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?

அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய „எச்5 என்1″வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!

எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே

.இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:“தாவரத்திலிருந்து சக்தி“ எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:“இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே“அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்

இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய „கொன்சேர்ன்களின் பங்காளிகள்“ மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை.கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லையென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இறுதியாக ஜனாதிபதித் தேர்தல் குறித்து:

இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி „ஏதோ எப்படியோ“சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு செற்பட வேண்டும்.

தேர்தல்கள்,வாக்குச் சீட்டுகளால் நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனினும்,அத்தகைய தேர்தல்களே ஜனநாயகத்தின் இருப்பை உரைத்துப் பார்க்கும் வழியாகவும் இருக்கிறது.நாம் மக்களது திறந்த விவாதத்தைக் கோருகின்றாம்.அவர்களது பிரச்சனையை அவர்களே பேசுவதற்கூடாக மக்களது ஆளுமையை வலுப்படுத்திடலாமென்பது எனது புரிதல்.இலங்கையில் மக்கள் யுத்தத்தாலும்,தேர்தல் நாடகங்களாலும் ஆளும் வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டுப் பலியிடப்பட்டார்கள்.மக்களது உரிமைகளை அவசரகாலச்சட்டம்-பயங்கரவாதம் என்ற கொடும் ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளால் இல்லாதாக்கினர்கள்.

இதற்கு உடந்தையாகக் குரல் கொடுத்த தமிழ்க் கட்சிகள் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தபடியேதாம் தமது கட்சிகளை அந்நிய நலன்களுக்காக வளர்தார்கள்.எந்தவொரு ஓட்டுக் கட்சித் தலைவனும் தமது எஜமானர்களாக நம்பிய அந்நிய அரசுகளையும் அவர்களின் நலனையும் முதன்மைப்படுத்தியே தமது நலன்களை மக்களுக்கான நலனாகக் காட்டிக் கொண்டார்கள்.

இதன் தொடர்ச்சியானது இலங்கையில் வாழ்ந்து,தத்தமது தொழில்களைத் தாமே தீர்மானிக்கும் இலங்கையின் இறமைசார்ந்த அனைத்து நகர்வுகளும் மிகக் கவனமாக அழித்து வரப்பட்டது.இதன் உள்நோக்கமே „ஈழம்-தமிழீழம்“எனும் அரசியற் கருத்தாக்கமாக விரிந்தது.எதையும் அந்நியச் சக்திகளின் தயவில் ஆற்றி வந்த ஓட்டுக் கட்சிகளுக்கு இந்த ஈழக்கோசமானது மிக அவசியமான இருப்பைத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலைப்படுத்தியது.அத்தகைய அரசியற்றேவைகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளுக்குத் தீனீபோடும் அரசியற் கருத்து நிலையாகவும்,தந்துரோபாயமாகவும் இருந்தது. இவைமிக அவசியமானவொரு இந்தியப் பாத்திரத்தை இலங்கைக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தும் இந்திய நோக்கங்களின் பிறப்பே தவிரத் தமிழ்பேசும் மக்களின் கோசங்களாகவோ அன்றி உரிமையின் வெளிப்பாடாகவோ இருக்கவில்லை.

இன்றுவரை தொடரும் தான்தோன்றித்தனமான அரசியல் மற்றும் கோரிக்கை முறைமைகளுக்கு, இத்தகைய நலன்களை வெவ்வேறு அமைப்புகள் தத்தமது எஜமான விசுவாசத்துக்குச் சார்பாக ஆற்றும்போது இவை மக்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுப்பதாகவும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைச் செம்மையுற வைப்பதற்காகவுமெனத் திட்டமிடப்பட்ட ஏமாற்றும் அரசியலாக விரிகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் வியூகங்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சேவகத்துக்காக ஆற்றப்படும் தந்திரத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் அந்த வியூகத்துள் இலங்கையை ஆளும் கட்சிகளின் உயிர்த்திருப்போடும் மிகவும் பிணைந்த நலன்களைக் கொண்டிருக்கிதென்ற உண்மை மிகக் கறாராக விளங்கத் தக்கதாகும்.

மூன்றாம் உலகக் கட்சிகள் மட்டுமல்லை வளர்ச்சியடைந்த உலகங்களின் கட்சிகளும் இன்றையப் பொருளாதார உலகப் பங்கீடுகளுக்கும் பாரிய தொழிற் கழகங்களுக்குமான சேவகர்களாகவே தொடரமுடியும்.ஏனெனில், இத்தகைய கட்சிகளே இன்றைய உலகத்தில் மிகப் பெரும் தொழில் துறைகளைக் கொண்டு இயக்குகின்றன.இந்தக் கட்சிகளே முதலீட்டாளர்களாக இருக்கும் போது அவைகளின் வர்க்க நலனானது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப் பழையபாணியிலான பூர்ச்சுவாத் தன்மைகளைக்கடந்து புதிய பாணியிலானவொரு முக மூடியை“அமைதி,சமாதானம்,திறந்த பொருளாதாரச் சுதந்திரம்,மக்கள் நலன்“போன்ற வார்த்தைகளுக்கூடாகக் காரியப் படுத்தும் நிறுவனங்களாக இருக்கிறன.என்றபோதும், ஒவ்வொரு ஐந்தாண்டும ஜனநாயகம் போதித்துத் தேர்தல்கள் வந்துபோகின்றன.ஆனால்,இத்தகைய தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட மக்களது எந்தத் தேவையும் எந்தக் கட்சித் தலைவனாலும் பூர்த்தி செய்யப்பட்டதாக வரலாறு இல்லை.ஓட்டுக்கட்சித் தலைவர்களை நம்பித் தேர்தலில் ஓட்டளிக்கும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.எனீனும் வாக்களிப்பது மக்களது உரிமை.ஆனால்,எவருக்கு வாக்களிப்பது?

இதைத் தீர்மானிப்பது மக்களது தெரிவு.அவர்களது பிரச்சனையை இந்த முதலாளிய அமைப்புக்குள் எவரும் தீர்க்கப் போவதில்லை.ஆனாலும் இவ்வமைப்பை உடனடியாக மாற்றவும் முடியாது.எனவே,அதிகாரத்திலுள்ளவர்கள் தாம் சார்ந்த முதலாளியக் கூட்டுக்கேற்றபடியேதாம் இயங்குவார்கள்.அவர்களில் இப்போது இலங்கையின் அபிவிருத்திக்கேற்றவர்கள் எவர்?

மேற்குலக மூலதனமா இல்லை ஆசிய மூலதனமா?

இரண்டினது இயல்பும் ஒன்றாகவேதாம் இருக்கும்.ஆனால்,ஆசிய மூலதனம் தன்னை நிலைப்படுத்தும் முன் தெரிவில் இலங்கையில் குடிசார் உரிமைகளைக்கொணர்ந்தே ஆகவேண்டும்.இது,மக்களது அழிவுகள் குறித்துக் கவனமெடுத்தே ஆகவேண்டும்.ஆனால்,மக்களைக் கொன்றுகுவித்த யுத்தக்கிரிமினல்களது பக்கம் இத்தகைய ஆசிய-மேற்குலக மூலதனங்கள் ஒளிந்து இயங்குவதால் இலங்கை மக்கள் எவரை ஆதரித்தாலும் அது விடிவைத் தரப்போவதில்லை.

தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுகளைக் குறித்துச் செயற்படுவதாகவிருந்தால் இத் தேர்தலில் தமது ஓட்டுக்களை எதிர்ப்பு அரசியலாக்க முடியும்.அது ஜனநாயக உரிமையினது அடிப்படையில்.அப்போது,உண்மையான மக்கள் பிரதிநிதியாக-மக்களுக்காக உழைப்பது,குரல்கொடுப்பதென்று சிவாஜிலிங்கம் முனைந்தால் அவருக்கு ஓட்டுப்போடலாம்.அவரைப்போல் விக்கிரபாகு கருணரெத்தினாவுக்கும் போடலாம்.ஆனால்,அவர்கள் எவரும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாகவிருந்தால் இந்தப் பாராளுமன்றப் பண்டித் தொழுவத்தைக் கேலி செய்து மக்களை வர்க்க உணர்வோடு அணிதிரடி இனவழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியாகத் தேர்தலைப் பகிஸ்கரித்து மக்களோடு மக்களாக முன் நின்றிருப்பர்.எனவே, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் இத் தேர்தலில் நாட்டங்கொள்ளத் தேவை இல்லை.இதைப் பகிஸ்கரித்துத் தமது அழிவுக்கு நீதி கேட்கும் நாளாக தேர்தல் தினத்தில் ஆர்பாட்ட ஊர்வலுஞ் செய்யலாம்.அப்படிச் செய்யும்போது இலங்கையின் அரச பாசிசத்தை உரைத்தும் பார்க்கலாம்.இதைவிட இலங்கை ஜனநாயகத்தில் நம்புவதற்கு வேறென்ன உண்டு?

மகிந்தா மானுடன் நேயன் என்றால்,நான் இவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களது பிணத்தில் அரசியல் செய்து, அண்டிப் பிழைப்பவனே.இல்லை, „பொன்சேகா தமிழருக்குத் தீர்வு தருபவன்“ என்றால், இலங்கைப் பாசிச இராணுவத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறையையும்-பாசிச் சேட்டையையும் நியாயப்படுத்திப் பிழைக்கும் மனிதவிரோதி என்பதே சரியானதாகும்!

„இந்தக் கணம்வரை எதுவும் என்னிடமில்லை,
எனது சிந்தனையைத்தவிர தங்குதடையற்ற
என் ஆன்மாவை உலகத்துள் ஊற்ற முனைகிறேன்!
ஒவ்வொரு நாளியும்,கண்ணிமைக்கும் கணமும்
மகிழ்ந்திருப்பதென்பது இடையுறாத போராக…“

Fuer alle:

„KRIEG BEDEUTET FRIEDEN
FREIHEIT IST SKLAVEREI
UNWISSENHEIT IST STAERKE“-Dahn

யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக…

„…..“

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
16.01.2010

P/S:
இக்கட்டுரைக்காக வாசிக்கப்பட்ட நூல்கள்,தளங்கள்:

http://www.uni-kassel.de/fb5/frieden/regionen/Bangladesch/indien2.html

http://www.imi-online.de/

Neues Deutschland, 14. Januar 2010

http://www.imi-online.de/download/EU-Studien-30-2007.pdf

# Vgl. Hantke, Martin (2008): »Alles wieder offen «. Georgienkrieg und imperiale Geopolitik. IMI-Studie 2008-10. Tübingen.

# Vgl. Wagner, Jürgen (2009): Gas-OPEC und afrikanische Nabucco.

http:// http://www.imi-online. de/download/JW-Gas-OPEC-Nabucco.pdf

# Kreimeier, Nils & Wetzel, Hubert (2007): EU und USA zittern vor neuer »Opec«, Financial Times Deutschland, 06.03.2007.

# U.S. Senate Committee on Foreign Relations, Senator Richard G. Lugar Opening Statement for Hearing on Oil, Oligarchs and Opportunity: Energy from Central Asia to Europe, 12.06.2008.

http://www.bmu.de/atomenergie_sicherheit/dossiers/doc/2708.php

Ausstieg aus dem Atomausstieg?:

http://www.greenpeace.at/406.html

http://www.bundestag.de/dokumente/textarchiv/2009/23866757_kw12_atomausstieg/index.html

http://mitglied.multimania.de/jenswahnfried/atomausstieg.pdf

%d Bloggern gefällt das: