காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்:Theva Thasan

தலித்துத் Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு…

காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்:

Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு [ அஃது முலையில்லை - "மூலை"  என்று புரியுங்க மக்காள்] தூக்கிச்சாப்பிறாரு சீமான் பிணத்திலும் அரசியல் பிழைப்பு நடத்தும் பிணம்தின்னிகள்….

[https://www.facebook.com/shoba.sakthi.1/posts/10203054637468366?stream_ref=10  ]

“முற்றத்து வாழை குலையீன

    முத்தனும் பெண்டிலுங் கூத்தாட”

இடையீடு: முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் “ஈழத்துக்கு”அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க :

“Ich glaube an die Sonne,auch wenn sie nicht scheint.

     Ich glaube an die Liebe, auch wenn ich sie nicht spüre.

Ich glaube an Gott,auch wenn ich ihn nicht sehe.”

- Unbekannt [Quelle: Jüdische Inschrift im Warschauer Ghetto]

 “சூரியன் பிரகாசிக்காதபோதும் நான்  சூரியன் இருக்கிறதென்பதாகவே நம்புகிறேன்.

அன்பின் தடையமே அற்றிருக்கும்போதினுங்கூட நான் அஃதிருப்பதாகவே நம்புகிறேன்.

தெய்வத்தை நான் தரிசிக்காத[காணாத] போதிலும் தெய்வமொன்றுண்டென்று நான்  நம்புகிறேன்.”

-யாரோ

[வார்சோவின் கெற்ரோவெனும்  போர்வலிமிகு அச்சம் -வரலாற்றுக் குறிப்புள் எழுதப்பட்ட யூதக் கவிதை ]

 பொழிப்புரைத்தலோடு பொல்லாங்குரைத்தல் இது : “Warschauer Ghetto” என்பது, இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் போலந்துத் தலைநாகரான வார்சோவில் வாழ்ந்த யூதர்களது குடியிருப்புப் பகுதி.அதை, இப்படியேதாம் யேர்மனியக் காரியாலயங்கள் அழைத்தன.இருந்தும் ,இக் குடியிருப்பை நாசிகளே உருவாக்கினர்.பரந்துபட்ட போலந்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் குவித்து வைத்திருந்த யூதர்களை ,இலகுவாக அடையாளம்கண்டு, கொல்லும் தந்திரமாகவிதிருந்தது.

பொல்லாங்கு : இதைத் தாம் சிங்கள அரசும் இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்காக அவர்களையும் வன்னிக்குள் தனிமைப்படுத்தி ,முள்ளி வாய்க்கால்வரை துரத்தியடித்துத் துன்படுத்தியும், வருத்தியும் கொலை செய்தது.

இந்தவகைக் கொலை செய்த  பாசிச இலங்கை அரசைத் தலித்துவ முன்னணி(புலம்) தலைவர் தேவதாசன் மெச்சிக் கூத்தாடி வரவேற்றார்.

தமிழர்களைப் பயங்கரவாதப் புலிகளெனச் சொல்லிச் சிங்கள அரசு அழித்தபோது அதை, சனநாயகத்தின் முன்னெடுப்பென்றும் தேவதாசன் டான் தொலைக்காட்சியில்[Dan Tv]  20.12.2009 ஆண்டு நேரடியாவுரைத்தார்.

யாழ்ப்பாணியச் சமுதாயத்தின் சாதியவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கு”தலித்து”எனும் சாதி ரீதியாக ஓடுக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கொண்டு போராட வேண்டுமென்று தீர்மானித்துள்ள தேவதாசன், அன்றைய பேட்டியில் தலித்துவ மக்களுக்கான குரலைத் தாண்டியும் பொதுவான அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் பிரச்சனைக்கும் தீர்வொன்றைச் சொன்னார்.அவரது அக் கருத்தின் மூலமாக எனக்குள் இன்றும் கேள்விகள் எழுகிறது.அவை யெனது  நியாயத்தில் ,தேவதாசன் கொண்டிருக்கும் அரசியலின் போக்குகளை மதிப்பீடு செய்வதற்குத் தேவதாசனின் ஒவ்வொரு அரசியல் மற்றும் , கருத்துரைப்பு நகர்வுகளிலிருந்து முனைகிறது.

சாதிய ஒடுக்குமுறையென்பதை உடைத்து, அம் மக்களுக்குச் சம அந்தஸ்த்தைப் பெறுவதற்குத் ” தலித்து”  எனும் அடையாளமும்,சாதிகள் குறித்த அடையாளமும், இப்போதும் அவருக்கு அவசியப்படும்போது தேவதாசன் அதைத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனையில் பொருத்தத் தவறிவிடுகிறார்(தமிழ் – இனம் -என்றவொன்றில்லையோ?).

இலங்கையில், தமிழ்பேசும் மக்களது பிரச்சனைகளுக்குத் தமிழ்பேசும் மக்கள் “இலங்கையர்” என்ற பதத்தின் மூலம் நாட்டை முன்னேற்றும்படி அறை கூவலிடுகிறார்.நாட்டைத்தான் சொல்கிறார்(அந்த நாட்டுக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் குறித்து “இலங்கையர்கள்” என்றவுடன் அவர்களது பிரச்சனை தீர்கிறது).

நல்லது!

இதன்வழி,”சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இல்லை”  என்று சொல்கிறீர்களென நாம் எடுப்பதற்காக உங்களது வாதத்தில் “காணப்படுவதற்குள் காணாததை”த் தேடிப் பார்க்கின்றோம்.

அங்கே: -

இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையை ஏற்று,அவருக்கு நன்றி சொலவும் , உங்களால் முடிகிறது.

இந்த நன்றி, “புலிப் பாசிசத்தை”  அழித்ததென்பதற்கெனவும் சொன்னீர்கள்.அதுவும் ,பறுவாயில்லை.நீங்கள் ஜனநாயத்தின்மீதுகொண்டிருக்கும் பற்ருறுதியின்பொருட்டு இது சாத்தியமே.

ஆனால்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தால் காலாகாலமாக ஒடுக்கப்படும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள், தம்மைத் தமிழர்களாகவும்,முஸ்லீம்களாகவும்,மலையகத்தவர்களாகவும் அடையாளப்படுத்துவதை மறுத்து, இலங்கையர்களெனச் சொல்வது எங்ஙனம் சாத்தியமாகியது -உங்களுக்குத் தேவதாசன்?; இஃது, பிணந்தின்னும் மனத்துள் அடங்கதோ?

இலங்கை அரசினது சிங்கள இனவாதமும் அதன் இனவொடுக்குமுறையும் சட்டரீதியாக நியாயப்படுத்தப்பட்டு, இலங்கையில் தமிழ்பேசும் மக்களை அது வேட்டையாடி வரும்போது,இந்த இனவொடுக்குமுறைக்கும் , சாதியவொடுக்குமுறைக்கும் நீங்கள் கருத்துக்கட்டும் தளமே உங்களைச் சந்தர்ப்பவாதியாகவும்,மகிந்தாவுக்கு வக்கலாத்துவேண்டிப் பிழைக்கும், பிழைப்பு வாதியாகவும் -பிணந்தின்னும் “Cannibalist Manifesto” வரைஞராகவும் உங்களை ,நமக்குள் அன்றுமின்றுமென்றும் அறிமுகஞ் செய்கிறது- இன்னுஞ் செய்யும்?

பல்லாயிரக்கணக்கான மக்களைக்கொன்று குவித்த சிங்களப்பாசிச அரசையும் -மகிந்தாவையும் பாராட்டி,”சனநாயகத்தை”மீட்ட புரவலரென நீங்களுரைத்தபோது இல்லாத இந்தப் பிணந்தின்னும் மனநிலை, உங்களைத் தவிர்த்த மற்றவர்களுக்கு  இருக்கென்பதில் எனக்குக் குழப்பமாகவிருக்கிறது.

//  Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு தூக்கிச்சாப்பிறாரு சீமான் பிணத்திலும் அரசியல் பிழைப்பு நடத்தும் பிணம்தின்னிகள்….//

முள்ளிவாய்க்காற் குருதி சிவந்த மண்ணுலர்வதற்குள் நீங்கள் வாசுதேவ நாணயக்காராவின் முதுகைச் சொறிந்தபடி மகிந்தாவுக்கானவுங்கள் கரச் சேவையைக் குறித்து,”நாம் இலங்கையர்கள் என்று உணர்ந்துகொண்டு இலங்கையை உயர்த்தவேண்டும் ” என்றீர்கள்.

தமிழர்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லையுமென்றீர்கள்.

வேளாளரால் ஒடுக்கப்படும் “தீண்டத்தகாதவர்கள்” என்றுரைக்கப் படும் “தாழ்தப்பட்டவர்களை” விடுவிப்பதற்கு அவர்கள் ,தம்மைத் தலித்தென்று பிரகடனப்படுத்த வேண்டும் என்றீர்கள்.

ஆனால் ,சிங்களப் பாசிச அரசால் தமிழர்கள் என்பதற்காகவொடுக்கப்படும் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் “தமிழர்கள்”என்று அடையாளப்படுத்தித் தமிழ் பேசுபவர்கள் தம்மைத்தாம் விடுதலை செய்வது  நியாயமற்றதென மறுத்து ,”இலங்கையர்கள்”என்றுரைக்கும்படி சிங்கள அரசாகவே நீங்கள் உரைத்து, அவர்களை உதைக்கும்போது இல்லாதவிந்தப் பிணந்தின்னும் பிழைப்பு, எப்படிச் சீமானுக்கும் -காசி ஆனந்தனுக்கும் வந்ததென்று ஒரே குழப்பமாகவிருக்கிறது தேவதாசன்!

“சூரியன் பிரகாசிக்காதபோதும் நான்  சூரியன் இருக்கிறதென்பதாகவே நம்புகிறேன்.

   அன்பின் தடையமே அற்றிருக்கும்போதினுங்கூட நான் அஃதிருப்பதாகவே நம்புகிறேன்.

   தெய்வத்தை நான் தரிசிக்காத[காணாத] போதிலும் தெய்வமொன்றுண்டென்று நான்  நம்புகிறேன்.”

உண்மையில்,எனக்குத் தேவதாசனது”பிணந்தின்னி”த் தத்துவமானது 1930 களில் நாசிகளது பாலர் பாடசாலையில் பாடப்பட்டவொரு பாடலை ஞாபகப்படுத்துகிறது.

„Händchen falten-
 Köpfchen senken
 immer an den Führer denken.
Er gibt euch euer täglich Brot
und rettet euch aus aller Not.“ 

“கைகளைக் கட்டுங்கள்
தலைகளைத் தாழ்த்துங்கள்
எந்நேரமும் தலைவனையே நினைத்திருங்கள்
அவரே உங்களுக்கான நாளாந்த உணவைத் தருகின்றார்
அத்தோடு உங்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தும் வருகின்றார். “

இதைத்தாம் எல்லாப்பாசிசவாதிகளுமே கட்டளையாகவிடுகின்றனர்.அது நாசிகளாகட்டும் இல்லைச் சிங்கள இனவாதிகளாகட்டும் இவைகளும் தேவையில்லை -ஏன் நம் “தமிழ்த் தேசிய வாதிகளாகட்டும்” எல்லோருமே ஒரு திசையிற்றாம் காரியமாற்றுகின்றர்.

எனது கேள்வியெல்லாம்,இதுள் :

“எந்தப் பாசிசவாதிகளுக்காக நீங்கள் ,தலை தாழ்த்திக் கைகட்டி அவர்தம் நாமம் நினைத்து ,நாளாந்தவுணவுக்காகப் “பிணந்தின்னும் ” தத்துவம் உரைக்கின்றீர்கள் -தேவதாசன்?

 

-ப.வி.ஶ்ரீரங்கன்

16.02.2014

வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா? :2

“எதுவரையில்?”  தொடரும்  எனது விவாதம்…

ழ்ந்து யோசித்தால், இலங்கையில் கட்சிகள்,தலைவர்கள்,மடாதிபதிகள்தம்  வரலாறு பரந்துபட்ட மக்களுக்கு எதிரானதாகவே இதுவரை இருக்கிறது!பொதுவாகத் தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி “அடங்காத் தமிழன்” சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை  அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னானவின்றுங்கூட  நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது- மூன்று இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்ட இத்தொடர் நிகழ்வில், தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?எனினும்,இன்றைய வணக்கத்துக்குரிய சோபித தேரர்தம் அரசியல் நகர்வு-கோரிக்கைகளை வெறுமனவேயொரு “பெரும்பான்மை இனத்துள் இருந்து ஒரு முற்போக்குக் குரல்” என்றும்,தனிப்பட்ட நல்ல மனிதரது கோரிக்கையென்றும் ,அரசியல் ஜனநாயகச் செயற்பாடகக் குறுக்விட முடியுமா?

அவரது கோரிக்கையில் எது முற்போக்கானது?அனைத்து அதிகாரமுடைய ஜனாதிபதிப்பதவியை ஒழித்தலா அன்றி மகிந்தாவுக்குச் சர்வேதச சட்ட எல்லையில் வைத்துத் தண்டித்தலா?தமிழ்பேசும் மக்களது -இலங்கைச் சிறுபான்மை இனங்களது மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது பொருளாதார மற்றும் நல்வாழ்வுக்கான அடிபடைகள் குறித்த நோக்கானதா? எது முற்போக்கானது?தீடீர் திடீரெனவெழும் தனிப்பட்டவர்களதும்,கட்சித் தலைவர்களதும்”நல்ல மனது”க் கோரிக்களை வெறுமனவே நம்பிக்கொள்ளும் பற்பல சந்தர்ப்பத்தைத்தாம் இந்தப் பொருளாதாரவாழ்வில் உலகம் பூராகவுமுள்ள  மக்கள் நம்பிக்கொள்கின்றனர்.

“பாதிக்கப்பட்ட மன நிலையிலிருந்து” தமிழர்கள், பெரும்பான்மை இனத்துக்குள்ளிருக்கும் முற்போக்குக் குரல்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதென்பதைக் குறித்து நாம் வரலாற்று ரீதியாகப் புரிந்திருக்கிறோமோ?

இலங்கையின் ஆளும் வர்க்கமானது தனது எஜமானர்களான காலனித்துவக் கொடுங்கோன்மை அரசுகள்-ஏகாதிபத்தியங்கள்-பிராந்திய வல்லரசுகளோடிணைந்து பாதிப்புக்குள்ளாக்கிய இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் வாழ்வைக் குறித்து என்ன வகையான மதிப்பீடுகளோடு நாம் பெரும் பான்மை இனத்தின் முற்போக்குக் குரல்களை அணுகும்படி-அரவணைக்கும்படி கோருகிறோம்?

இலங்கையில் அனைத்து ஓட்டுக்கட்சிகளது -இயக்கங்களதும் அரசியல் வரலாறானது  இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே இன்றும் நகர்கிறது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்புங்கூட இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.இதை மிகத் தறுவாகக் கடைப்பிடிக்கும் இலங்கையை மாறி,மாறி ஆளும் கட்சிகளானவை இதுவரை இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த முடிவுக்கும் வர முடியாதிருப்பதன் பின்னணி என்ன?வளர்த்தெடுக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை மனவியல்புக்கேற்ப அரசியல் -கட்சி நகர்வுகள் பெரும்பாலும் இலங்கை ஆளும் வர்க்க நலனின் பொருட்டென்பதற்கப்பால் நம்மை அண்டிய தேசத்தினதும் அரசியல் ஸ்த்திரத்தன்மை மற்றும் பூகோள அரசியல் நலன்களைப் பின்னி வைத்திருப்பதென்பதில் இன்றைய வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?

இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருந்தது.அதன் விளைவு முள்ளிவாய்க்காலில் எந்த  அரசியலறமுமற்ற கொடும் யுத்தத்துள் தமிழ் மக்களைச் சிக்கவைத்த சிங்கள அரசு முற்றும் பாசிசப் புலிகளது அரசியலானது எவர்களது நலன்சார்ந்திருந்தது-இப்போது அதன் மிச்சசொச்சங்களதும் அரசியலது தெரிவு எது?அந்நிய நலன்களது தெரிவாக இது இருக்கவில்லையா?பிளவுண்ட உலக நிதி மூலதனங்களது பிடியுள் சிக்குப்பட்ட இலங்கையினது வரலாறாக இவை இருக்கும்போது வண.பிதா சோபித தேரர்தம் கருத்துக்களைப் பரந்துபட்ட மக்களது தெரிவுகளாக வரையறுக்கும் அவசரம் அரசியற் தற்கொலைக்கொப்பானது.இத்தகைய தற்கொலையைத் தமிழ்பேசுபவர்கள் ஏலவே புலிகளை ஆதரித்தபடி செய்துவிட்டனர்.

இன்றைய பிளவுண்ட உலக நிதி மூலதனத்துக்கு இலங்கை வேட்டைக்காடாகப் பலப் பரிட்சார்த்த களமாக இருக்கிறது.நேட்டோ[NATO -wirtschaftliche und strategische Interessen ] தலைமையில் தம்மை முன் நிறுத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலனானது இருஷ்சிய மற்றும் சீனா ,இந்திய மற்றும் பிறிக்ஸ் கூட்டமைகளும்[BRICS  ] கூடவேயான சங்காய் கூட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குள் [The Shanghai Cooperation Organisation  ]முட்டிமோதும் தருணங்கள் இலங்கையின் இனப் பிரச்சனையுள் புலிகளை அழித்துபோது கூடவே பல்லாயிரம் அப்பாவி மக்களையும் அழித்தே மோதியது.இது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி, இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும்  இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை.இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில்”பெரும்பான்மை இனத்துக்குள் இருக்கும் முற்போக்குக் குரல்”முகமூடி அவசியமென்றால் அதையும் செய்யுங்கோ சாமிகளா!.ஆனால், இந்த முற்போக்குக் குரல் நமக்குப் புதில்லை!இவைகளைவிட மிக நேர்த்தியாக லங்கா சமசமாயக் கட்சி மற்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பெருந்தலைவர்களிடமிருந்தும் இன்றைய வாசு தேவ நாணயக்காரா வரையுமாக நாம் பார்த்தும் -கேட்டும் ஆச்சு!நடந்தது என்ன?

தனிப்பட்டவர்களதோ அன்றி ஒரு கட்சியினதோ, தலைவரினதோ விருப்புக்குத் தெரிவுக்கு வெளியிலேதாம் இனப்பிரச்சனைக்கான காரணிகளுண்டு.அது, பாராளுமன்றத்துக்கு வெளியிலேதாம் உண்டு.அதை, அணுகுவதில்தாம் மேற்காணும் நலன்களைக் குறித்து பேச்சு வருகிறது.இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் இருப்புக்கு -நலனுக்குத் தெரிவாகும் அரசியல் என்ன?அது கட்சிகளது புதிய நிதியூகத்துள் மாறிவிட்ட வர்க்க அரசியலது தெரிவுக்குள் இணைவுறும் தருணங்களென்ன?மகிந்தா குடும்பமோ அன்றிப் பட்டார நாயக்க குடும்பமோ இல்லை ரணில் குடும்பமோ வெறும் அரசியல் தலைவர்களில்லை.அவர்களின்று பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களென்பதில் நாம் காணும் அரசியலென்ன-தெரிவென்ன?இவர்களுக்கும்,ஆசிய-ஐரோப்பிய நிதி மூலதனத்துக்குமிடையிலான வர்த்தகவுறுவுகள் எத்தகையானவை?இவற்றைப் புரிந்துகொள்வதிலிருந்துதாம் நாம் காணும் இலங்கையின் சட்டவாத அரசின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும்.இங்கிருந்துதாம் புதிய அணிகளது கூட்டு,அவைகளால் முன் வைக்கப்படும் கோரிக்கைகள்,அவர்கள் மக்களைச் சொல்லி, அணி திரளச் சொல்லும் கட்சிகளுக்குப் பின்னால் தள்ளும் அரசியல் அமுக்கக் குழு மனப்பாண்மையானது இத்தகைய பின்புலத்தைத் தள்ளி வைத்துவிட்டு அகவிருப்புக்குட்பட்ட தெரிவுகளால் இவைகளை நாம் ஆதரிப்பதில்லை.இந்த விவாதம் நீள்கிறது.நான்தொடரும் விவாத்தில் மேலும் தொடர்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்

09.02.2014

இனங்காண வேண்டிய மக்கள் விரோதிகள்-யார்?

 

Varathar Rajan Perumal :

//இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்து சிங்களவர்கள் சிறுபான்மையாக இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிப் பார்த்து ஒன்று, இரண்டு என வரிசையாக பத்து வசனங்களில் எழுதிப்பாருங்கள் தமிழர்கள் மத்தியில் இன்று பரவி நிற்கும் ஜனநாயகத்தின் லட்சணங்களைத் தெரிந்து கொள்வீர்கள். அதேபோல 2009ம் ஆண்டு சிங்களப் படைகள் வென்றதற்கு மாறாக புலிகள் வடக்கு கிழக்கில் சிங்களப் படைகளைத் தோற்கடித்திருந்தால் இங்கு வாழும் சிங்கள மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். தமிழர்களின் மனித உரிமை மதிப்பும் மனிதாபிமான அக்கறையும் தெளிவாகத் தெரியும்.//

 

Sivarasa Karunagaran :

//சிங்களர்களே சிறுபான்மையினர் மனோநிலையில்தான் வாழ்கின்றனர். மற்றவர்களைக் காட்டிலும் நாம் தாழ்ந்துவிட்டோமே என்ற எண்ணத்தில் எங்களைத் துன்புறுத்துகின்றனர். இதற்குக் காரணம் தமிழ்நாடுதான். இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக தமிழக மக்கள் பேசப்பேச, இத்தனை கோடிப் பேரின் ஆதரவு இலங்கைத் தமிழர்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு யாரும் இல்லை என்கிற எண்ணம் மேலோங்க எங்களைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்கிறார்கள் சிங்களர்கள்.//

http://thenee.com/html/171113-1.html

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய”அரசியல்-பொருளியல்”வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த “அலகுகள்” அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய”அலகுகளை”உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் “பொருளாதாரச் சிக்கல்கள்” அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் உரையாடல்கள்-பழி சுமத்தல்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் “மக்களை”மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.

மக்களை அவமானப்படுத்துவது முன்னாள் ஆயுதக்குழுக்களுக்கும் ,அவர்களது அரசியல் இருப்புக்கும் அவசியமாகவிருக்கிறது.

முள்ளி வாய்க்காலுக்குப் பின் மிக விவகாரமாகவுரையாடுலைச் செய்யும் புலிகளது மிச்சசொச்சங்களும்;இந்தியக்  கூலிக்குழுக்களும் கையோர்த்துச் செய்யும்  விசமத்தனமானவுரையாடலானது தமிழ்பேசும் மக்களைச் சிங்கள இனவாத்தத்துக்கும் ,இலங்கை அரச பயங்கரவாதத்துக்கும் அடிமைப்படுத்துவதாகவே இருக்கிறது.

சிங்கள ஆளும் வர்க்கத்தோடிணைந்து தமிழ் அதிகாரக் குழுக்களும், புதிய பணக்காரரும் “தமிழ்மக்களே அதிகமான இனவாதிகளாகவும்,சனநாயக விரோதிகளுமாகவும்-அராசகவாதிகளுமாக வரலாற்றில் இயங்கிக்கொண்டார்கள் ”  எனும் தோரணையில் விவாதித்துச் சிங்கள இனவாத அரசின் தமிழ் மக்கள்மீதானவொடுக்குமுறையை நியாயப்படுத்திவிடுகின்றனர்.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு, சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.

இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது -இன்றைய தமிழ்க் குழுக்கள்,இவர்கள் அனைவரும் ஏதோவொரு அந்நிய நலனுக்கான முன்நிபந்தனைகளுக்குட்பட்ட களத்தில் தமது நலன்களைக் குறித்தே இங்ஙனம் இயக்குமுறுகின்றனர்.

இங்கேதாம் நமது மரபு ரீதியான கட்சியரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் தவிர்க்க வேண்டும்.

.இத்தகையவொரு விசமத்தனமான உரையாடலனது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட “எதிர்பார்ப்புகளால்”ஆனதாகாதா?

இது காலாகாலமாக நமது அரசியல் பண்பாட்டுத் தகவமைபு;புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு மனிதனை இனம் காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.

ஓடுகாலிகளான முன்னாள் ஆயுதப் பயங்கரவாதிகள்- மக்கள் விரோதிகள் தம்மைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக முன் நிறுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும்.

இவர்கள் தூக்கி நிறுத்தும் இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில், தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.

சிங்கள இனத்தைச் சொல்லித் தமிழ் மக்கள் அவர்களைவிடப் பன்மடங்கு அராசகவாதிகள்-சனநாயகப் பண்பற்றவர்கள் என்பதெல்லாம் ஒரு விவேகமான அரசியலாகுமா?இவர்கள் எப்படி மக்கள் படும் துன்பங்களுக்குப் பரிகாரந் தேடுவார்கள்?மூன்று இலட்சம் மக்களைப் பலியெடுத்த இலங்கையின் இனப்படுகொலை வரலாற்றைச் சில விசமிகள் தமிழரது பண்பைச் சொல்லி நீர்த்துப்போக வைக்கமுடியுமா?

தமிழ்த் தேசியம்வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்பவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?

எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?

இங்கேதாம் இந்தியாவின் அதீத சாணாக்கியம் புலப்படுகிறது.

இது இனவாதத்தைப் புதுமுறைமைகளில் பேசுவதற்குத் தயாராகிறது.

இலங்கை அரசாகவிருந்தாலென்ன அல்லத் தமிழ்த் தேசியக் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்களாகவிருதாலென்ன  புதுப்புது அர்த்தத்தோடு”தேசிய மற்றும் விதேசிய”பண்புகளைக் கொட்டியபடி தத்தமது இருப்பைக் காத்து வரும்பொழுது,” இலங்கையின் நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் ” எனும் ஒரு “மொன்னைப் பேச்சு”அறிவுத்தளத்தைக் காவுகொள்ளத் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது.

இது,தமிழர்கள் அராசகம் நிறைந்த-சனநாயகப்பண்பற்ற ஒடுக்குமுறையாளர்களென்றபடி ,சிங்களவர் பக்கம் விட்டக்கொடுப்பு-சனநாயகப்பண்பு;இயைந்த வாழ்பவர்கள் என்றும் கோசமிடுகிறது. இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.

இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது-கூடவே ஆயுதத்தைக் காட்டி மக்களை ஒட்டு ஒடுக்குவதும் மிகச் ச◌ாதரணமான அன்றாட வாழ்வாகிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்
20.11.2013

உயிர்க் குவளைக்கு மூலத்தை உருவகப்படுத்தியவனுக்கும் …

” குளிர் மண்டிய கொடுமிருளுள்…” உடல் வலுவிழந்து முடக்கமுறும் வாதத்தின் கொடிய தாக்கத்தால் மூடிச்சுப்போடும் பல சந்தர்ப்பவாதக் கயமைக் கிருமிகளே வல்லாதிக்கஞ் செய்யும் வலயமாய் மாறிய உயிர்க் குவளைக்கு மூலத்தை உருவகப்படுத்தியவனுக்கும் எமக்குமான பொருத்தப்பாடு வேறாகவிருப்பினும்,ஒரு நிலையுள் அவை பொருத்தமாகியும் விடுகிறது.

ஊரைவிட்டு,தேசம் தொலைத்து,கொடுமிருள் குவிந்து போர்த்திருக்கும் இருண்ட ஐரோப்பாவுக்குள் நுழைந்தோம்.இந்தக் குளிர் தின்றக் கொடுமிருளில் நாம் அமிழ்ந்தே போய்விட்டோம்.இப்படியாகவின்று கால் நூற்றாண்டைத் தொலைத்தோம்-கண் இமைக்கும் நேரத்துள்!

“குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள்…” ஆம்!நமது கோடைகள் எப்பவுமே நீண்டவை!அவை இதப்பானவை!இனிமையானவை.எமது முகற்றில் வந்தமரும் மணல் கலந்த சோழகத்துள்(தென்காற்றுச் சோழகம்) சொல்லாத சூரியக்கதிர்கள் தொலைந்து போனதிசையுள்-  ” வெயிலொளியே சென்றுவா”என்பதைத்தவிர வேறெதுவும் விசும்ப முடியாது தத்தளிக்கும் நமது புகலிட வாழ்வில், கொல்லைப் புற கல்லுப்பாதையாய் வாழ்வில் வடிவமைப்புச் சந்தித்துக்கொள்கிறது.

ஜந்திரமயமான உற்பத்திச் சக்திகளுக்குள் மாட்டிய நமது உறவானது சாவின் அதிர்வுடன்பேரிரைச்சலிட்டு ஈனக்குரல் ஒலித்தபடி சாய்ந்து போவதை நாம் தினமும் சந்திக்கிறோம்.நேற்றுப் பூராகவும் இந்த வலி என்னைத் துரத்தியபடி…

கடினமானதும்,ஆன்மாவைக் கொல்லுவதுமான இந்த ஐரோப்பாவினது அவசரத்தனமான படைப்புருவாக்க எல்லை தினமும், புதியதைக் கேட்கிறது-புதுமைப்படுத்தலையும்,புத்திப் பிழிவையும் கோருகிறது.
முடியவில்லை!
நேர அழுத்தம்,நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத உழைப்பினது அநுபவத்தை மறுந்துபோக வைக்கிறது.மறு நாள் விட்ட குறையை நிதானமாகத் தொடரமுடியவில்லை!

என்ன செய்ய?

எனக்குச் சினம்,வெறுப்பு,நடுக்கம்.இதனால் எனது உழைப்பும்,அதை நல்கப்பட நான் உறவுகொண்ட உற்பத்திச் சக்தியும் அழகானதும்,சந்தோஷமானதுமான நாட்களை எனக்கும்,என்னைச் சுற்றியிருப்பவருக்கும் எப்பவுமே தரவில்லை!அதனால்,அந்த உழைப்பு எனக்கும் உண்மையிலேயேவொரு கொலைக்களமாக இருக்கிறது.எனினும்,அந்த உழைப்பை நிராகரிக்க முடியவில்லை!

நான் கூலியுழைப்பில் தங்கி உயிர்வாழ்வதாலும்,என்னைச் சுற்றி இன்னுஞ் சிலவுயிர்கள் தங்கியிருப்பதாலும்  இந்தப் “பயங்கரமானதும்,கடினமானதுமானதும் என்றான தவிர்க்கமுடியாதானாகிப் போன இந்தக் கூலி உழைப்பு, கோடையென்ன குளிரென்ன அனைத்துப் பொழுதுகளிலும் எனக்குள் நுழைந்து எனது சுயத்தை அழித்தே விட்டது.நான் சுயாதீனமுள்ள உயிர் ஜீவியா உலாவரவில்லை!முடக்கு வாதத்தின் அதீதமான மூட்டுக்களது அழற்சியுள் அமிழ்ந்த காச்சலும்,உடலெங்கும் வீங்கி வலிக்கும் வாழ்வுமாய் விழிகள் அழற்சியாகிப் பார்வை விலகும்போது… எனது வியாதியே-விலங்கே,எனது உடலாகிப்போனது.

அது,உழைப்பான எனது படைப்பாற்றலைக் கொள்ளையிடும் இந்த ஜந்திரோத்தோடு பொருத்தப்பட்ட தற்செயல் நிகழ்வால் அது நரகமாகிப் போய்விட்டது!ஆன்மா நித்தியத்தைத்தேடுகிறது.

திரண்ட திசையெங்கும் தேங்கிப்போன ஆன்மாவினது வலியுள் மூப்படையக் காத்திருக்கும் காலத்தை மறுத்து, என் ஆன்மா சிதைந்து போகிறது.அது, தனது காலத்தைத் தேடியபோது இருப்பை இழந்த காலத்துள் நித்தியத்திலிருந்து விலிகிக்கொண்டது! இந்த அந்நியப்பாடே எனக்கு இதயமொன்றிருப்பதென்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

இந்த நரகத்துள்இதயமிடும் ஓலம் இருப்பற்ற பொருளின்றியமைந்த ஏதோவொரு இயக்கமாய் உலாவுறும் மூலதனச் சுழற்சியுள்சிக்கிப் பிழியப்பட்ட வலிகளால் துருவ நரகத்துள் துலங்கும் சூரியன்போல்(கவனிக்க அது இன்னும் சூரியனே) என் இதயமும் உறைந்து ஓர் செந் தசையாகவே இருக்கிறது.அதனிடம் அனைத்தும் தொலைந்து போய்விட்டது!ஈய்வு,இரக்கம்,பரிவு-பாசம் என்பதெல்லாம் அதனிடம் பொய்த்துப் போய்விட்ட பொழுதில் அது வெறும் உறைந்துபோனவொரு செந் தசையாகவே இருக்கிறது.

இந்தப் பொழுதுவரை உடலங்கத்தின் ஒவ்வொரு துண்டின் வீழ்ச்சியிலும் எனது கவனத்தைப் புதைத்தே வந்திருக்கிறேன்.இந்த வீழ்ச்சி பேரிரைச்சலானது.அஃது,வீழும்போதும் பெரு விருட்சத்திலிருந்து பட்டுப்போய் விறகாகி வீழ்வதாகவே இருக்கிறது

எனக்குள் இது அச்சத்தைத் தருகிறது.எனது குழாம் நிர்மாணித்த தூக்குமேடைகூட இத்தனை செவிடானதும்,வலிமைகொண்டதுமான ஆன்மக்கொலையை இட்டுக்கொண்டதல்ல.அதுவொரு வெளியுள் விடிவெனக்கொண்டவொரு பாதையுள் இன்னொரு கொழுப்பேறிய செம்மறியாட்டின் களைப்புற்ற இடியாகவும்இருந்து வருவதை நாம் புரிந்தபோது வீழ்ந்து சிதைந்த விறகுகள் ஏராளம்.அதன் செவிட்டொலியோ சொல்லிய சேதிகள் என்ன?

நான் அறியேன்-புரியேன்!

என் திறப்பு என்னிடம் இல்லை!என்னைப் பூட்டிவைத்துச் சித்திரவதை செய்யும் காலத்தை நான் வென்றுவிடப்போவதில்லை.எனினும்,எனது மனம் சாய்ந்து வீழும் கோபுரம் போலிருப்பதில் எனது ஆன்மா நித்தியத்தைத் தேடியதால் மட்டுமே காலத்துள் தோற்கிறது.அதிலிருந்து அது நித்தியத்திலிருந்து விலகுகிறது.

அவலம் மிக்கதும்,அருவருப்பானதுமான இந்த உழைப்பு விடியல் எனக்கும் சலிப்பூட்டுகிறது.இந்தச் சலிப்பூட்டும் விடியதிர்வானதன் தாலாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே காலம் என்னைக் கழுமரத்துக்கழைத்துச் செல்லும்போது எனக்குமுன் இன்னொருவன்-இன்னொருவள் அதில் தொங்கவைக்கப்பட்டுச் சவப்பெட்டியுளிட்டு ஆணியடிக்கும்போது நானும் இடைவிடாத அந்த ஒலிக்குத் தீனிபோட இரையாக்கப்படுகிறேன்.

எனது இந்த ஊனத்துள் வரும் காலமாற்றம் எல்லாம் ஒரு சுழற்றிசைவெளியுள் சந்திக்கும் கணமாகிக்கொண்ட மாயையுள் நேற்றுக் கோடையாகிய கணமோ இதோ இலையுதிரும் இன்னொரு கணத்தைப் புதைக்கிதே இது மர்மமானதும்,மகத்தானதுமானவொரு பயண ஆயத்தத்தின்தேவையைச் சொல்லிக்கொண்டிருப்பதாற்றால்தாம் இஃது,மர்மச்சத்தமாகி ஒரு புறப்படலுக்கான மணியொலியாக ஒலிக்கிறது!

ப.வி.ஸ்ரீரங்கன்

பல்கலைக்கழக மாணவர் ஆர்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கும்,இலங்கை வன்முறை ஜந்திரத்துக்குமான முரண்பாடு “மாவீரர்” தின அநுஷ்டிப்புக்கான தார்மீகவுரிமை மறுப்பிலிருந்து தொடங்கியதாம்!

யோசித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ்பேசும் மக்களது அனைத்துப் பிரதேசமெங்கும் பல்லாயிரம் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு 14 பேருக்கு ஒரு, இராணுவத்தான்(ள்) வீதம் தமிழ்பேசும் மக்களது வாழ்விடமெங்கும் இலங்கையின் வன்முறை ஜந்திரம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இது கடந்த 20 வருடமாகத் தொடரும் நிலையாகும்.

புலிகள் அழிக்கப்பட்டு,”தமிழீழ”போராட்டம் கொலை செய்யப்பட்ட பின்னும் “அதே” இராணுவம் எந்த மாற்றமுமின்றித் தொடர்ந்து தமிழ்ப் பிரதேசமெங்கும் அனைத்துச் சிவில் சமூக நகர்வையும் தடுத்தபடியே தனது காட்டாட்சியை-இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நடாத்தி வருகிறது.

இலங்கையினது  தென் மாகாணங்களில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளும்,குடிசார் அமைப்புகளும் பலமாக இருக்க – ஜனநாயகச் செயற்பாடுகளை அவர்கள்(சிங்கள மக்கள்) ஒரளவு நுகர-வடக்குக் கிழக்கு மாகாணமானது இராணுவத்தின் நேரடியான கட்டுப்பாட்டில் அனைத்து வகைச் சமூகவசைவியத்தையும் தனக்குள்(இராணுவ ஆட்சிக்குள்) உட்கொண்டபடியேதாம் இருக்கிறது.

இங்கு,கேள்வி எழுகிறதில்லையா?

பல்கலைக் கழக மாணவர்கள் “மாவீரர் தின” அநுஷ்டிப்புக்காகத் தமது தார்மீவுரிமைக்காகப் போராடுகிறார்களா?
Bild
அப்படியாயின், சிங்கள இராணுவமானது, போர் முடிவுக்குக் கொணர்ந்து மூன்றாண்டுகள் கடந்தும் தனது கொடுங்கரத்துள் தமிழ்பேசும் மக்களைக் கட்டிப்போட்டிருக்கும் இந்தக் கொடுமையான காட்டாட்சியைக் குறித்துப் இவ்வளவு காலமும்(யாழ்ப்பாணம் சுமார் 15 வருடமாக)பொறுத்துக் கொண்டார்களா மக்கள்-மாணவர்கள்?

“இராணுவமே போர் முடிந்துவிட்டது.நீ உனது பழைய நிலைகளுக்குப் போ!”
“அரசே மக்களைச் சுயாதீனமாகச் செயற்பட விடு!”

“அரசே மக்களை இராணுவ அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் குடிசார் அமைப்புகளுக்கு வழி விடு!”

“அரசே உனது இராணுவக் காட்டாட்சியைத் தமிழ்பேசும் மக்களது வலயத்திலிருந்து அப்புறப்படுத்து!”

“அரசே,நீதியையும்,நியாயத்தையும் நிலைநாட்ட சிவில் சமூகவுரிமைகளை மதித்து அரச வன்முறைகளை நிறுத்து”

இவை போன்ற குடிசார் அமைப்பாண்மை முகிழ்க்கும் முன் நிபந்தனைக் கோசங்களை ஏன் முன்வைக்க முடியவில்லை?

மாவீரர் தின அநுஷ்டிப்பைவிட இதுவே, மக்களது அவசியமான-அதி முக்கியமான பிரச்சனையாகவிருக்கிறது.

இதை மௌனித்துக்கொண்டிருந்த ஒரு மாணவர் சமுதாயம்,மாவீரர் தினத் தார்மீகவுரிமைக்கான கோரிக்கை-உரிமையென முரண்படுவது பெரிய சந்தேகத்தைத் தருகிறது.

ஒரு புறம்,உலகத்தில் மாணவர்களையும்,மக்களையும் தமக்கேற்பப் பயன்படுத்தி அயலட்ட தேசத்துள் நிலவும் ஆட்சிகளை வீழ்த்தும்”அரபுப் புரட்சி,வசந்தம்,ஆட்டுக்குட்டி”எல்லாம் சிரியாவிலும் கிழிந்து தொங்குகிறது.

இதுவொரு ஆரம்பம்!

இலங்கையில் இனங்கடந்து மாணவர்கள் இணைகிறார்களாம்.

பார்ப்போம்,எவருக்காக,எவர் போராடுகிறார்களென்று-சாகிறார்களென்று!

அமெரிக்க,மேற்குலகுக்காகச் சாகும் சிரியாவின் மக்கள் இலங்கைக்குக் கற்றுக் கொடுக்கப் பலவுண்டு!

பிளவுபட்ட மூலதனமானது ஆசிய-மேற்குலக ஆதிக்கப் போட்டியான முகாந்திரத்துள் அனைத்துலகத்திலும் பல வடிவில் “மக்கள்-மாணவர்கள்”போராட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது!

இதுள்,”மாவீரர்”தின அநுஷ்டிப்புக்கான தார்மீகவுரிமையின் மாணவர் கலகம், எந்த ரூபத்தில் உரு மாற்றங் கொள்வதென்பதையும் காலம் உணர்த்திச் செல்லும்!

ப.வி.ஸ்ரீரங்கன்
03.12.2012

முக நூலில் வண்டியொன்று…

புரட்சி வேடத்திலே ” தோழர் “
முண்டத்தை அறுத்துச் சாக்குகளிலிட்டுச்
சல்லிக் காசுக்காய் சதி செய்யும்!
கூலிக்கு மாரடிக்கும்
குரங்குக் கூட்ட மொன்று,

நெடு நாளாப் பலரிதயம் பிளந்து
பக்காக் கிரிமினற் சேட்டைகொண்டு
கக்கத்தில் லெனினினதும்,ஸ்ராலினினதும்
களைத்த வியர்  துளிகளைத் தடவித்
தமது உழைப்பே அஃதெனச் சொல்லி,
ஆருக்கு இவர் அடுப்பெரிக்கத் தமிழ்
மண்டை “ஓடு” தேடுகின்றனர்?

புலி செத்த பின் வருடம்
எனக்குப் புது வீடு வந்தது!
புரட்சி செய்ய எனக்கொரு வாசற் கதவு.
உழைப்பென்னவோ அச்சகத்தில்
அட்டி போடல் அகதிக் கவசம் வேறு,

நிச்சாமத்துள் போன நித்திரை
கட்டன் நசனல் காசென்று அலறிக்கொள்ள
அஃதில்லை, யாழ்ப்பாணத்து விவசாகிகளது
செல்லாவுழைப்பெனவும் சிரத்தில் மோதிய இருட்டில்
எனக்குள் சிரிப்பும்,சில்லறைகளை விட்டெறிந்து
சிவசிவ கரச் சேவகர்களையெல்லாம்
எனக்குள் செரிப்பதென்பதைவிட
அத்தகை உதவாக் கரச் சேவர்களது தோளிற்
சதிப் புரட்டுக் கொடியேற்றியாவது
ஏஜமானர்களைத் திருப்பதிப்படுத்தினால்
பத்தென்ன பதினொன்றாய்க் கொட்டும் நோட்டுக் கட்டு.

இத்தனைக்கும் நான் செய்தது புரட்சி!
முக நூலில் முகடு பிளக்கும் நரிக் கிழங்கள்
நாலு வரிக்குள் ஓட்டைச் சாக்கும்
ஒன்பது மூட்டை உளுந்தையும்
உருளுவதற்கு ஓடையற்ற
நொண்டிக்குச் சொறியெண்டும்,குருடென்றும்
குரல் வளையிற் கத்தி வைத்துக்
காசுக்குப் புரட்சி செய்யும் கலியுகத்தை
பாரீர், பாரீர்! பசப்மிவர் புரட்டுச் சீ பாரீர்!

ப.வி.ஸ்ரீரங்கன்
01.12.2012Bild

கொலை செய்வேன்"ஓட்டுப் போடவேண்டும்"

கும்பிட்டுக் கேட்டகாலம்போய்,கொலை செய்வேன்”ஓட்டுப்
போடவேண்டும்” என்பதுதாம் ஜனநாயகம்.
இந்த மாகாணசபைத் தேர்தலில்

அடுத்த அராஜகத்தை-கொலைக் களத்தைத் திறந்திருக்கும் அரசியற் சூழ்ச்சியில் பலியாவது எது-என்ன?

 

குட்டி மாபியா பிள்ளையானின் உரையைக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலே நிலவும் ஆயுத அராஜகத்தின் ஆதிக்கத்தை அளக்க முடியும்.
 
  
“தமிழ்த் தேசியமானது” இப்போது பிரதேச வாதமாகச் சுருங்கிக் கொலையாடலாக மாறுகிறது.
 
வெல்லப் போவது தமிழ்த் தேசியக் கள்வர்களாக இருந்தாலும் கொலைப்படப்போவது எவரென்பதே எனது நோக்கு!
 
 
எனவே,பிள்ளையானைக் கொலைக்காரக் கும்பலாகத் தொடர்ந்திருத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கள்வர்கள் சதி அரசியலைச் செய்கின்றனர்.

 

பிள்ளையானுக்கு உரை மொழி வரவில்லையேதவிர அராஜக அரசியலது உண்மைகளைப் போட்டுடைக்கத் தெரிந்திருக்கிறது.
 
 
சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு எவ்வளவு பெரியவுதவியைத் தமிழ் அரசியல் செய்கிறதென்பதைக் குட்டி மாபியத் தலைவன் பிள்ளையான் மூலம் அறிய முடிகிறது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கயமைக் கூட்டம் இந்த மாபியத்தனத்துள் ஜனநாயக இடைவெளியைத் தொட்டுக்காட்டும் ஒரு புள்ளியில்பிரதேச வாதத்தின் திரட்சியைக் காட்டவாவது ஒரு சந்தர்ப்பத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குச் சொல்லிக் கொள்கின்றனர்.

தன்னைத் தோற்கடித்தால் கொலை செய்வேன்-அழிப்பேன் என்ற குட்டி மாபியாப் பிள்ளையானின் கொலையாடலைக் கேட்டுப் பாருங்களேன்-இதுதாம் கிழக்குக்கு வசந்தமான மந்திரம்!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி
01.09.2012

இடதுசாரிய வேடம் போடும் ஆளும் வர்க்க அடிமைகள்

பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, “தமிழீழ”ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,போராட்ட வரலாறு-அநுபவங்கள் தொகுப்பது,இலக்கியம் படைப்பது;அதனதன்வழியாக தாம்சார் அரசுகளுக்கு ஆலவட்டம் பிடிப்பதுவரை மக்களது அழிவுக்குக் காரணமான “ஈழப்போராட்டம்” ஒவ்வொரு நபருக்கும் தனது அடையாளத்தைச் சொல்லும் அநுபவமாக-அரசியலாக இருக்கிறது.

இப்படித்  தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாகவிது விரிகிறது.இன்று, பாசிசப்  புலிப் பிரமுகர்கள் தம்மைத் தொழிலாள வர்க்கத்தினது தோழர்களாகக் காட்டவும் முனைகின்றனர்.

இந்தப் பட்டியலில் ஏலவே வந்துவிட்ட புலிக் கருணாகரன்,இப்போது வரத் துடிக்கும் புலம்பெயர் புலிப் பிரமுகரும் புலியினது பரப்புரை-மற்றும் நிறுவனங்களது பொறுப்பாளருமான சிவா சின்னப்பொடி(திவாகரன்), இன்னும் எத்தனைப் புலிப் பாசிஸ்டுக்கள் இந்த இடதுசாரிய முகமூடி தாங்கி நம் மக்களை ஏமாற்றுவார்களோ அத்தனை பேரையும் “தோழர்களெனவும்”உறவு கொண்டாடி அழைக்கும் இந்தப் பார்வையிருக்கே,இதுதாம் புலிப் பாசிஸ்டுக்களையும்,புலியினது அடிமட்டப் போராளிகளையும் அடிப்படையில் வேறுபடுத்திப் புரியாது, புலிப்பாசிஸ்டுக்களையும் அடிமட்டப் போராளிகளோடிணைத்து”போராளிகள்”என்று உறவாடியபோது பாசிசமானது தமிழ்ச் சமூகமெங்கும் வேர் பரப்பித் தாண்டவமாடக்கூடிய வாய்ப்பும்-வளமும் கிடைத்தது.

Bild
இது, புலிப்பாசிசத்தின் உச்சத்தையடைந்தபோது இறுதிக் கட்ட யுத்தத்தைத் திணித்து அப்பாவி மக்களையும்,அவர்களது குழந்தைகளையுஞ் சேர்த்து மட்டுமல்ல தமக்குள்ளிருந்த அடிமட்டப் போராளிகளையும் அழித்துச் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் சரணடைந்தது.

அந்தச்  சரணடைந்த புலிப் பாசிஸ்டுகளது முகவர்களேதாம் இத்தகைய சிவா சின்னப்பொடி,கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு,என்று ஒரு பெரும் பட்டியலே விரிகிறது!

உதாரணமாக : புலிகளால் இதுவரை நடாத்தப்பட்ட இந்தப் போராட்டம்,அதாவது, ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.

இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள், புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம் காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகியது.

இந்தச் சந்தர்ப்பத்தில் ,அண்ணளவான ஜனநாயகத்தைப் பேணும் அரச நிறுவனத்தோடு சரணடைந்த புலிப் பாசிஸ்டுக்கள் தமக்குள் அரசிலைச் செய்துகொள்ள மக்களை அண்மிக்கும்போது- இடதுசாரிய முகாமுக்குள் தம்மை இணைக்கும்போது  மட்டுமேதாம் -  அவர்களுக்கு வாழ்வுண்டு.

ஏனெனில் ,இடதுசாரிகள் மட்டுமேதாம் பாசிச-இலங்கை-புலி ஆதிக்கத்துக்கெதிராக மக்களைச் சார்ந்தியவர்கள்.அந்த முகாமுக்குள் இணைவதால் மட்டுமேதாம் இத்தகைய கயவர்கள்”பாவ மன்னிப்புக்குள்”வந்து மீளச் சதி அரசியலை ஆளும் வர்க்கத்துக்கான தெரிவில் நகர்த்த முடியும்.

இது மிக ஆபத்தானது.

எவரை எங்கே வைப்பதென்று எவருக்கும் புரியவில்லையென்பதில்லை இது.

இஃது,வர்க்கத்தோடு வர்க்கம் இணைவது.

இடதுசாரிய வேடம் போடும் ஆளும் வர்க்க அடிமைகள் ,மக்களது நலன்களது கோரிக்கையின்வழி தமது நாடகத்தைத் தொடர்கின்றனர்.இதில் கைவந்தவர்கள் புலிப் பினாமிகள்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.09.2012

படிப்பகம் தாண்டிக் கலையரசன் கண்கொள்ளும் உரிமைகள்…

தமிழீழஞ் சொல்லிப் புலிகள் இலட்சக்கணக்கான மக்களை வேட்டையாடியபோதும்,இலங்கை அரசோ பயங்கரவாதமெனத் தமிழ் மக்களைக் குண்டுகள்போட்டுக் கொன்று குவித்தபோதோ வாயே திறக்காத கலையரசன்,அத்தகைய நடாத்தைகளைத் தொடர்ந்து 2009 வரை மௌனமாகவிருந்து அநுமதித்தபடி “உலக அரசியல்-சர்வதேச வரலாறுகள்” எழுதிக்கொண்டிருந்தார்.புலிப் பாசிசம் மக்களைத் தொடர்ந்து காயடித்தபோதோ அல்லது அவர்களது குழந்தைகளைக் கட்டாயப்படுத்திக் களத்துக்கனுப்பிக் கொன்று குவித்தபோதோ வாயே திறக்காதவர் கலையரசன்!

அக்குழந்தைகளது இருத்தலுக்குரிய  உரிமை குறித்தே பேசாத கலையரசனுக்குப் படிப்பகத்தில் மின்னூலாகப் பதிவேற்றப்பட்ட நூலுரிமை பற்றிப் பேசுவதற்கென்றொரு அரசியல் இருக்கிறது!மக்கள்-வாழ்க்கை,வாழும் உரிமை குறித்தெல்லாம் இரண்டாம் வகை?

உரிமம்,வர்த்தக வடிவம் இவைதாம் உலகம்!

இந்தத் கடைந்தெடுத்த அரசியல் பிழைப்புவாதியை, மார்க்சியத்தின் பேராBildல் மார்க்சியராகக் “கலையரசனை” எவர் குறிக்கின்றாரோ அவர் மார்க்சியத்துக்குக் கரி பூசுபவராக இருக்கவேண்டும்!

தமிழர்களுக்கு, மனிதவாழ்வை-உயிர்த்திருப்பதற்கான ஒவ்வொருவரதும்-ஒவ்வொன்றினதையும்விட”வர்த்தகக் காப்புரிமை” பெரிதாகவே இருக்கிறது.ஏனெனில், தமிழர்களில் அதிகமானோர் வியாபாரிகளாகவே இருக்கிறார்கள்.அவர்கள் தமிழீழஞ் சொல்லிச் செய்த வர்த்தகத்தில் பெற்ற பல இலட்சம் கோடி டொலர்களது வருவாயில் கொல்லப்பட்ட மக்களது தொகை இனம்,மொழி,மதம் கடந்து மூன்று இலட்சம் என்பது ஒரு கணிப்பு!

கலையரசனுக்கு வர்த்தகவுரிமையும்,”நூலாசிரியர்”வாழ்வும் முக்கியமாவதொன்றும் எமக்குப் பெரிய அதிசயமா?,அதிசயமானது இந்த மனிதரெப்படிப் பாசிசத்தின்முன் மௌனித்துவிட்டுப் “புரட்சி”பேசுகிறாரென்பதே!

படிப்பகமானது மனிதவாழ்வுக்கு அவசியமெனக் கருதும் எவற்றையும்”வர்த்தவுரிமை”என்ற மட்டப்படுத்தலுக்குமுன்உட்படாத அனைத்தையும் பதிவேற்றிக்கொள்வது நியாயமானது.மக்களது அழிவைக் கோரும் “வர்த்தகவுரிமை” போர் செய்து மக்களைக்கொல்வதற்கு எவர்கொடுத்தார் உரிமை?மக்களையே பலியெடுக்கும் வியாபாரிக்களுக்காகக் குரல் கொடுக்கும் கலையரசனுக்கு மக்கள்போராட்டம் குறித்து ஒரு மண்ணும் புரியவில்லை!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.06.12

பௌதிவுலகத்திலிருந்து தனித்துவமான மொழிவுகளை இழந்து வருகிறேன்.

மக்களைத் தவிர வேறெவரும் சாவதில்லை

யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த-அடையும் எந்தப் பெறுமானமும் எல்லாவகைப் புரிதற்ப்பாட்டுக்கும் இடையில் சிக்குண்டுபோன எவரையும் இதுவரை காத்துக்கொள்ளவில்லை!எனக்காகவன்றி எமக்கான”விடுதலை”என்று அறைகூவிச் செத்தவர்கள் செத்தவர்களே.செருக்கும்,தார்ப்பாரும், உள் நோக்கமும் கொண்ட பொருள்சார் உலகத்துள் ஏதோவொரு புலப்பாடு பல புள்ளிகளை அழித்தே இயக்குமுறுகிறது.இது சொல்வதற்கும்,உரையாடலுக்கும் அப்பாலுள்ள இயக்கத்துள் மலினப்படுத்தும் சுதந்திரமென்பது அர்த்தமிழந்த மனித இருத்தலுக்கொப்பானது.புரட்சிப்பயனெனப் பகரப்படும் எல்லா நியாவாதமும் நிறுவனப்பட்டியங்கும் மூலதன வியூகத்துக்கு முட்டுக்கொடுத்தவை என்பதில் எனக்கான தெரிவு மேலுஞ் சிலவற்றை நோக்கியதானது.

அ: பௌதிகவுலகமும்,உணர் அறிபுலமும்

ஆ: புறவுலகப் பருப்பொருளும்அந்நியப்பாடும்

இ: இடையுறாத காலக் குறுக்கமும்,நித்தியமும்

என்னை அச்சத்துக்குள்ளாக்குபவை.

என்னைக் காலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கையோடு, குறுகக்கப்படும் வெளியில் மதில்கள் எழும்புகின்றன.எனது கால்களுக்குக் கீழே வளைந்து நெளியும்காலம் இடமின்றித் தவித்தோட முனைகிறது.பௌதிவுலகத்திலிருந்து தனித்துவமான மொழிவுகளை இழந்து வருகிறேன்.

பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,மக்களது “உரிமை”என்ற அடைமொழிக்குட்பட்ட எதிரெதிர் கொல்வதற்கான நியாயம்,”ஜனநாயம்-புரட்சி,விடுதலை”எனப் பரப்பப்படுவதில் முதன்மைப்படுத்தப்படும் நலன்களானது மீளவும் மனிதக் கொலைகளுக்கு வழிவகுக்கும் பொருத்தப்பாடுகளையே உறுதிப்படுத்தும்போது “பௌதிகவுலகம் ” என்பதன் சாரம் என்ன?

எழுதிவைத்து உரைக்கப்படும் அனைத்துமே ஒவ்வொரு கட்டத்துக்குப் பின்னும் திருத்தப்பட்ட நிலைமைக்கொப்பான தெரிவுகளை எங்கிருந்து பெறுவதென்பதன் சுய கேள்விக்குப் பின்பான உண்மையேற்பு-உணர்வு பெறுதல் என்பதிலிருந்து என்னை விடுவித்துவருவதே எனக்கான விடுதலையெனப் பகரமுடியாதபடி என்னைச் சுற்றிய மதில்கள் பெருத்த சந்தேகங்களை கருத்தியற்பரப்புள் புதைத்து வைத்துக்கொண்ட நிலையில், நான் செத்தே போக விரும்புவதில்”சாவு”உனது உரிமையில்லையென மூன்றாவது கண்ணுரைக்கிறது!

பௌதிகவுலகத்துக்கு மூலந்தேடும் பொழுதிலிருந்து எடுக்கப்பட்ட வடிவம் சுருங்கிக்கொண்டே செல்கிறது.

Bild

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய”அரசியல்-பொருளியல்”வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த “அலகுகள்” அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய”அலகுகளை”உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் “பொருளாதாரச் சிக்கல்கள்” அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.

மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் “மக்களை”மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவ+க்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது

பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன.

இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.

இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை ஆயிரம் மக்களைக் கொன்று போட்டும் அதையே அவசியப்பாடனதும்,சரியானதுமெனச் சொல்வதிலுள்ள சட்ட-நியாயந்தாம் இன்றைய உரையாடலான வெகுஜன வெளியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கன்

Follow

Erhalte jeden neuen Beitrag in deinen Posteingang.

%d Bloggern gefällt das: