மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா?

சிங்கள இராணுவக் குடிப் பரம்பல் கண்டு,
மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா?

“ மனிதர்கள் உன்னதமாகவிருக்கவேண்டும்
கருணை நிறைந்ததும் மற்றும் சிறப்புமாகும் இது.
இந்தவொன்றே அவர்களைமற்றெல்லா உயிரினத்திடமுமிருந்து வேறுபடுத்திக் காட்டும் .“ -Goethe

[„Edel sei der Mensch,
hilfreich und gut!
Denn das allein
unterscheidet ihn
von allen Wesen,
die wir kennen.“- Goethe]

இங்கு திரு.மனோ கணேசன் அவர்கள் தொட்டிருக்கும்-சுட்டும் பிரச்சனைகள் கடந்த 20 வருடங்கட்கு முன்னமேவுணரப்பட்டது!புலிவழிப் போராட்டமென்பது புதிய இராணுவக் குடியேற்றங்களைச் செய்யுமென்பதை யாழ்“இடப் பெயர்வோடு“அதிகமாகவழுத்திச் சொன்னோம்.50 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர்  காலவோட்டத்தில்50 ஆயிரம் குடும்பங்களை அமைப்பதும்,அதன் வழி இராணுவக் குடியிருப்புகள் குடும்பங்களாகிக் குடிசார் இணக்கத்துள் வரும்போது அவை ஒரு இனத்தினால் விடப்பட்டு,பாழாய்ப்போன வாழ்விடங்களுக்குள் உள்வாங்கப்படும்.அப்போது,சிங்களமயப்படுத்தலது விருட்ஷம் நமது முகத்தில் ஓங்கியறையும் என்றாகச் சொல்லியே „தமிழீழப்போராட்டம்“வழி தந்துரோபாய இடப்பெயர்வு-தள மாற்றமெனப் புலிகள் செய்த போராட்டத்தைக் குறித்து விமர்சனம் வைத்தோம்.
சிங்கள இராணுவம் கூலிப்படையாகவிருந்த 80 இன் ஆரம்பப்பகுதிகளுக்குள்“தமிழீழப் போராட்டக்காரர்கள்“தம் போராட்டம் வெகுவாகவுயர்கிறது!அங்கே,தமிழ்க் குடியிருப்பு-கிராமம்,நகரம்,மாவட்டமென நகர்ந்த புலிவழி இராணுவத்தாக்குதல்கள் மக்களைக் குடிப்பரம்பலிலிருந்து சிதறடித்துக்கொண்டது-கொன்றது!உயிர்காத்து ஓடவைத்தது.
இராணுவமானது முகாமை விட்டுக் குடியிருப்புகளுக்குள் நுழையவும்,அங்காங்கே உறுப்புத் தளங்களை அமைக்கவும் ஒத்திசைவாகவிருந்த இந்த „ஈழப்போராட்டமானது“தமிழ்ச் சமுதாயத்தின் குடிசன மதிப்பீட்டையும்,அவர்களது வாழ்விடங்களையும் ஒருபோதும் கணக்கெடுத்ததே கிடையாது!
இதன் உச்சம்: „ஒரு தமிழன் உயிருடன் இருக்கும்வரை போர் தொடரும்,விழ விழ எழுவோம்“
என்று கதை விட்டவர்கள்,தாம் எந்தக் காட்டுக்குள் இடம் பெயர்கிறார்களோ அதுதாம் தமிழர்களது வாழ்விடம்-வலயம் என்று மக்களையும் துரத்தி அடித்துத் தம்மோடு அழைத்துச் சென்றனர்(இதைத் தட்டிக் கேட்டால், “ இதுதாம்மக்கள் போராட்டம்.மக்கள்தாம் புலிகள்,புலிகள்தாம் மக்கள்“ என்று படம் காட்டினார்கள்!).யாழ் இடப்பெயர்வும் அப்படியேதாம் நிகழ்ந்தது. எனினும், சில மாதங்களிலேயே கணிசமான மக்கள புலியிடமிருந்து தப்பி;, இராணுவம் தங்கிய-பிடித்த யாழ்ப் பாணத்துக்குள்ளே தமது இயல்பு வாழ்வை ஏற்படுத்தலாகினர்.இத்தகைய மக்கள் புலிகள் வன்னிக்குள் „தமிழீழ அரசு அமைத்து ஆட்சி“ நடாத்தியபோது தமக்கும்,இதற்கும் சம்பந்தமில்லாமலே துண்டுபட்டு வாழ்ந்தனர்.இது முதல் வெற்றி அரசுக்கு!மெல்லக் குடியேற்றம்,கூடிக் கலத்தல்,மணவழி ஒன்றித்தலென தமிழ்த் தேசியவின அடையாளமெல்லாம் மெல்லத் தகர்ந்தன(இனக் கலப்பும்,ஒன்றிந்துப் போதலையும் நான் வரவேற்பேன்.வரலாறு பூராகவும் மனிதர்கள் கலந்து போயினர்).
இத்தகைய தருணத்துள்,அரசோடு ஒத்துழைத்த தமிழ்க் குழுக்கள்,பிளவுபட்ட புலியுறுப்புகள் யாவும் ஒரு புதிய இலக்காகக் கண்டடைந்த பிரதேசரீதியான பிளப்பு ஏலவே இந்திய-அமெரிக்க விருப்ப அரசியல் வியூகமாகவிருந்தபோது அதை அவர்கள் இத்தகைய தமிழர்வழி மிக நேர்த்தியாக அரசிலாக்கினர்.இதன்வழி , „கிழக்கு-வடக்கினால் ஒடுக்கப்படுவதாகப்பாடிப்“ பிளவை அரசியல்ரீதியகச் சட்டமாக்கினர்.இஃது, தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தின் இதயத்தைப் பிளப்பதென்பதும்-இருப்பை அசைக்குமென்பதும் அனைத்துக் கிழக்கு வாதிகளுக்கும் தெரியும்.எனினும்,தமது வருமானங்கட்காகத் தமிழர்களது தலையிற் நெருப்பை அள்ளிக் கொட்டியதுமல்லாமற் முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனத்துக்குமே அது கொள்ளிக் கட்டையாகுமென அவர்கள் புரிந்திருந்தும் தமது நல்வாழ்வுக்காக அதைப் புறந்தள்ளினர்.எதிரி,ஒரு கையில் ஆயுதத்தையும்,இன்னொரு கையில் அரசியல் வியூகத்தையும் வைத்துச் செய்த சாணாக்கிய தந்திரத்துள் பலியானவர்கள் முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனங்களே.
இவர்களது இன்றைய கட்சி அரசியலானது மீளவும் சிங்கள மயப்படுத்திய சமூக அசைவாக்கத்துள் சட்டரீதியான உறுதிப்பாட்டையும்,அதற்கான தார்மீக நியாயத்தையும் சிங்கள அரசுக்கு உறுதிப்படுத்துவதும் அதுசார்ந்த இயக்கத்துள் இலங்கையில் பெரும்பான்மை மக்கள் தமக்கான ஐதீகப் பாரம்பரியப் புவியிற்றொhடர்ச்சியைக் காலப்போக்கில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்த நிலத்தில் வரலாற்று ரீதியாகவுறுத்திப்படுத்தும் அரச ஆதிக்கத்துக்கும் துணையாகவே நிற்கின்றனர்.எனவேதாம் சிங்கள அரச அதிகாரத்தைக் கிழக்கு மாகாணத்தின் வசந்தமென ஞானம்-பிள்ளையான் கூட்டு அதிகமாக வகுப்பெடுத்தனர்.டக்ளஸ் அதை வடக்குக்கும் வசந்தமாக மொழி பெயர்த்தார்.
இத்தகையவொரு மிகக் கெடுதியான அரசியற் சூழ்ச்சிக்குள் சிக்குண்ட தமிழ்பேசும் மக்கள், தமது வாழ்விடங்கள்-வரலாற்று ரீதியாகத் தம்மால் உணரப்பட்டதும்,உறவாடப்பட்டதென்பதற்கும்மேலாக அவற்றின் இன்றைய அவலத்தை உணர்வுரீதியாவுள்வாங்குகின்றனர்.
தமிழ்பேசும் மக்களது சுகவாழ்வுக்கான மண்,சிங்கள ஆதிக்கத்தினது அதிகாரத்தின் தொடர் ஆக்கிரமிப்புக்கு மத்தியில்“தமக்கான வலயமாக“ இல்லாதாக்கப்படுஞ் சூழலையும்,அந்த வலயத்துள் தமக்கான பொருண்மிய வாழ்வு இல்லாதாகப்படுவதும்,அந்த ஆதாரங்களைக் கட்டியமைக்காது திட்டமிடப்பட்ட சதியால் பின்தள்ளப்படும் புனரமைப்பு,அபிவிருத்தியானவை தமிழ் பேசும் மக்களது வாழ் சூழலைப் பலமாகப் பாதிக்கிறது.இது யுத்தத்தைவிட மோசமானது.
இத்தகைய சூழல் தொடர்ந்து நிலவும்போது, மக்கள் கப்பல் மூலமென்ன கால் நடையாகவாவது தாம் வாழ்வதற்கும்,தமது சுக வாழ்வுக்காகவும் எங்கும் இடம்-புலம் பெயர்ந்தே தீருவார்கள்.
அதைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம், தமழ் பேசும் மக்களது வாழ்விடங்கள் யாவும் அவர்கள் உழைத்து உண்ணக்கூடிய வலயமாக முதலில் மாறியாகவேண்டும்.அதன் காரணமாகத் தொழில்ரீதியான முனைப்புகள் சிறிய குடிசார் அமைப்பாண்மைக்கு வித்திடும்.அப்போது இந்த மக்கள் அச்சமின்றி தாம் ஒரளவு வாழ்வதற்கான சூழல் தமக்கு வாய்த்ததாகவுணரும்போது இடப்பெயர்வு இல்லாமற் போகமுடியும்.
யாழ்ப்பாணத்தவர்கள் எப்போதும்,தமது மண்ணினது நிலைமைக்கேற்ப இடம்பெயர்ந்து உழைத்துப் பழக்கப்பட்டவர்கள்.குடும்பத்தைவிட்டுக் கொழுப்பிலும்,கண்டியிலும்,காலியிலும் பிழைக்கச் சென்ற அதே அகக் காரணிகள் இப்போதைய காலத்துக்கேற்கக் குடும்பங்களையும் துணைக்கழைத்து வெளி நாடுகளுக்கு இடம் பெயர்வதொன்றும் குற்றமானதல்ல!
„எங்கு மனிதர்கள் சுதந்திரமாக உழைக்க,உயிர்த்திருக்க,பாதுகாப்பாக வாழ முடியுமோ அந்தத் தேசமோ-வலயமோதாம் தாயகம்.அதைவிட்ட அனைத்தும் பொய்யானது-சேர்க்கையானது!“
இதுள் புலம் பெயர்ந்தவர்களை-பெயருபவர்களை நொந்தென்ன-கடிந்தென்ன? காலந்தாம் அனைத்தையும் பதிலாக்கி வைத்திருக்கிறது.அதுள் நமது கடந்த-நிகழ்காலப் பாத்திரங்கள் என்ன பங்குடன் நம்மைக் கடக்கின்றனவென்பதே உணரப்படவேண்டியது.இதுள் புலிவழி (வி)தேசியவாதப் போராட்டத்தைக் குறித்து நிறையவே உணரப்படவேண்டும்.அப்போதுதாம் சிங்கள அரச ஆதிக்கத்தையும் அதன் அதிகாரத்தையும் புரிந்துகொள்ள முடியும்.மனோ கணேசன் அவர்கள் அந்த பக்கமும் மெல்லக் கவனித்துவுணர்வது ஒடுக்கப்படும் சிறுபான்மை இலங்கை மக்களுக்கு அவசியமானது.மனோ கணேசனது இக் குறிப்பு அந்த வகையில்முக்கியமான-அவசியமான குறிப்பாகவே பர்க்கிறேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.10.2012
Advertisements

வர்க்கங்களைக் கடந்து, உலக மக்கள்…

ஊடக வலுவும்,மக்கள் தோல்வியும்.

ற்போதைய இலிபிய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.இவற்றையெல்லாம் மக்களுக்கான ஜனநாயகப்படுத்தலெனப் பெரும் ஊடகங்கள் தினமும் சொல்கின்றன.

என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற் கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது. இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய,புதிய யுத்தக் களங்களைத் திறக்கிறது.இந்த யுத்தக் களங்களை நியாப்படுத்தும் துறைசார் கல்வியாளர்களும்,பெரும் ஊடக நிறுவனங்களும் அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளது லொபிகளாக மாற்றப்பட்டுக் கல்வி துறையே பெரும் ஊழற்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரும் அரபுலக மற்றும் ஆபிரிக்கக் கண்ட யுத்த முகாம் அனைத்தும் மூன்றாவது உலக யுத்த வடிவமாகும்.வடிவத்தில் புதிய வகை உலக யுத்தமாகும்.இவ் யுத்தமானது கடந்த முதலாவது,இரண்டாவது யுத்த வடிவதைத் தகர்த்து இன்றைய நிதி மூலதனத்துக்குத் தலைமைதாங்கும் பெரு வங்கிகளது தலைவர்களது புதிய வடிவமாகும்.இதைப் பழைய பாணியில் புரிந்து கொள்ளவே முடியாது.

இங்கே புதிய வகை யுத்தக் கூட்டணியானது நேட்டோ தலைமையில் இயங்கும்போது அது உலகு தழுவிய யுத்தக் கூட்டணியை மேற்குலகத்துக்கு வழங்கியுள்ளபோது,சுயாதீனமான சிறிய தேசிய அரசுகள் இத்தகைய கூட்டணியால் நிர்மூலமாக்கப்பட்டுக் கொள்ளை யிடப்படுகிறது.இந்த யுத்தங்களுக்குப் பின்னால் மேற்கு மூலதனத்தின் இன்றைய சரிவுகளைத் திட்டமிட்டுச் சரி செய்வதற்கான உலகக் கொள்ளையில் அடுத்துப் பலியாகப்போகும் ஈரான் தேசத்தை அம்போவெனக் கைவிடப்போகும் சீன-இருஷ்சிய வியூகம் ,மேலும் வலுவான பொருளாதார ஒப்பந்தகங்களை மேற்கிடமிருந்தும், அமெரிக்காவிடம் இருந்தும் எதிர்பார்க்கும்போது,இருவேறு துருவமாக இருந்த மூலதன வர்க்கமானது கூட்டாகக் கொள்ளையிடும் குவிப்புறுதியீனூடாகச் சிறிய தேசங்களைப் பலியிட்டுத் தமது நலன்களை அடைவதாகவே நான் கணித்துக் கொள்கிறேன்.


இன்றைய பொருட் குவிப்பின் தொடர்ச்சியில் ,உலகத்துள் நிலவும் எரிபொருள் இருப்பைத் தமதாக்கும் முழுமுயற்சியில் அமெரிக்க வல்லாதிக்கும் முனையும் ஒவ்வொரு நகர்விலும் ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜேர்மனியினதும் ஒத்துழைப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கிசைவாகவே இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியான உலகப் பங்கீட்டு அரசியல்-போர் வியூகங்களுக்கு மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவையும் மிக அவசியமான அமெரிக்க சார்பு அரசியலை மிகக் கண்ணியமானவொரு மக்கள் நல அரசியலாக ஐரோப்பாவுக்குள்ளும் அதன் மக்கள் கூட்டத்துள்ளும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் திணித்து வருகின்றன.இவை, மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் குழிதோண்டிப்புதைக்கின்றது.ஒரு புறம் வளர்ச்சியடையும் தேசங்களை யுத்த்தால் கொள்ளையிட்டுச் சிதைப்பதும்,அதேபோன்றல்லாது தமது தேசத்து மக்களை நிதி மூலதனதிரட்சியின் வழியாக எழும் சட்டங்களால் கட்டுப்படுத்தி, அனைத்து வகைகளிலும் மூலதனத்துக்கீழ் அடிமையாக்குவதாகும்.அதன் தொடர்ச்சியே கிரேக்க அரசுக்கு உதவி-ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும், யுரோ நாணயத்துக்கும் அமைக்கப்பட்ட நிதிக்காப்பு[Euro-Stabilitätspakt ] குடையாகும்.

உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் அறிவாகும்.

இன்று, இடம் பெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் [அரபுத் தேசங்களிலும்,ஆபிரிக்காவிலும் ] மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் அடாவடித்தனமான ஆட்சி மாற்றங்கள், நாடு பிடித்தல்கள் யாவும் உலகத்தில் அதீதமாகத் தேவைப்படும் மூலப்பொருள்களுக்கான அரசியலாக விரிகிறது.இதன் தொடர்ச்சியாக நாம் பல் வகையான யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.

அமெரிக்க இராணுவவாதம் மேலும் விரிவடைய-விரிவடைய அதன் ஆதிக்கம் தொடர்ந்து அந்தத் தேசத்தை கடன் நிலைக்குள் தள்ளும். இது, உலகத்தை இன்னும் வேட்டைக்குட்படுத்தும் அரசியலையே அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு வழங்கும்.எண்ணைவளத் தேசங்களைக் கொள்ளையடிப்பதால் வரும் உபரியைக்கொண்டு தனது இராணுவத்துக்குத் தீனீபோடும் அமெரிக்க அரசானது, உலகத்தைத் தனது ஆதிகத்துக்குள் இருத்தும் குறைந்த காலவகாசத்தையாவது இந்த இலியக் கொள்ளையால் அதன் ஆளும் வர்க்கத்துக்கும் வழங்கிவிடுகிறது.

இனிவரும் காலங்களில் அமெரிகத்தலைமையில் இஸ்ரேலிய அரசின்வழி நடை பெறப்போகும் ஈரான்மீது நடாத்தப்படும் யுத்தமானது,பிறிதொரு தடைவையில் அணுயுத்தமாகச் சீனாவை அண்டும்போது, இந்த உலகத்தின் இறுதிக்கட்டம் நெருங்கி விடுவதற்கான புள்ளிகளே தென்படுகின்றன.

இதைத் தடுக்கும் எந்த அரசியல் ஆற்றலும் பொருளாதாரக் கூட்டு ஒத்துழைப்பால் வல்லரசென இருக்கும் மாற்று முகாம்(சீனா-இருஷ்சியா)போன்ற தேசங்களுக்கு இல்லாதாகப்பட்டு, கடந்த இலிபிய யுத்தத்தில் இது உறுதிப்பட்டுள்ளது.


இத்தகைய புள்ளியை உள்வாங்குவதே கஷ்டமாக இருக்கும்போது இந்தப் பலாத்தகார யுத்தக் கூட்டணிக்கு எதிராக உலக மக்கள் அணி திரள்வதைத் தவிர வேறெந்தத் தேச அரசும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாதென்பதற்கு இலிபியாவே ஒரு சாட்சியாக இருக்கிறது.

ஆனால்,உலக மக்களைக் கட்டிப் போடும் மாபெரும் ஊடக வலுவைக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் மூலதனக் கும்பலிடம் தோல்வியுற்றது உலக மக்களைத் தவிர வேறெந்தத் தேசமும் இல்லை!

மக்களே தோல்வியில் நிற்கிறார்கள்.அவர்களை மீட்பதென்பது இன்றைய நவீன ஊடக வலுவை எவர்கள் கைப்பற்றுகிறார்களோ, அவ் வர்க்கமே இறுதியில் வென்றவர்கள் ஆவர்.

வர்க்கங்களைக் கடந்து, உலக மக்கள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.உலகப் பெரும் மூலதனமானது ஒரு சில பெருவங்கித் தலைவர்களது கட்டுப்பாட்டில் ஒரு சிறிய சேவைத் துறையைக்கொண்டு இயக்கப்படுகிறது.இங்கே, வர்க்கப் போராட்டம் என்பது மீள் பார்வைக்குட்படுத்தப்பட்டு,மூலதனத்தாற் பலாத்தகாரப்படுத்தப்படும் தேசிய மூலதனமுடையவர்களும் [ இன்று கிரேக்கத்தில் பழிவாங்கப்பட்ட உடமை வர்க்கத்தைக் கவனிக்க ] பழிவாங்கப்பட்ட உழைப்பாளருடம் கை கோற்பதைத்தவிர வேறு வழியில்லை. வங்கிகளைச் சோவியற்றாக்க வேண்டும்.இல்லையேல் அவை முழுமொத்த மக்களையும் வேட்டையாடிவிடும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.11.2011

இலிபியா,அடுத்து ஈரான்?

இலிபியா,அடுத்து ஈரான்?

காதிபத்தியம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் உட்பட்டுள்ளது.அமெரிக்கா தனது பெரு இராணுவத்துக்குத் தீனிபோடுவதற்குத் திண்டாடுகிறது.அதைத் தக்கவைப்பதால் நெருக்கடிக்குள்ளாகும் சந்தையைக் காக்க முனைகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் பெறுபேறாக இணைந்த ஐரோப்பியக் கூட்டமைப்புத் தன்னைத் தக்கவைப்பதில் ஐரோப்பிய மக்களது வாழ்வைப் பலியாக்குவதில் இணைந்த“ ஐரோப்பா-யூரோ“ எதிர்காலத்து வேலைவாய்ப்பின் அவசியமாக அனைத்து ஜனநாயக அலகுகளையும் நசுக்கிவிடுகிறது.லீசபொன் ஒப்பந்தத்தின் [ Treaty of Lisbon]பின்னான ஐரோப்பா, உலகம் முழுவதற்குமான நெருக்கடியை உருவாக்குவதில் முன்னணியிலுள்ளது.

இந்தப் புள்ளிகள் ஈரான்வரை மிகப்பெரிய யுத்தத்தைச் செய்துகொள்ளும்வரை முடிச்சுகளாக விரிகிறது.

சீன அரச எரிபொருட்கூட்டுத்தாபனம் ஈரானிய முதலீடுகளை மெல்லக் குறைத்துக்கொள்ள[ China drosselt Öl-Investitionen in Iran]முனைகிறது.இது ஈராக்கைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிக்கு வழிவிடுவதாக இருக்கிறது[Die chinesischen Geschäftemacher drosseln ihr Tempo in Iran offenbar nicht zuletzt auf Druck der USA. Peking versuche, die US-Regierung zu beschwichtigen, sagten Insider gegenüber Reuters].

கூட்டாகக் கொள்ளையிடப்படும் [Beuteverteilung in Paris]

லிபியா யுத்தம், தனது கொள்ளையைப் பங்கு போடுவதில் பாரிஸ்சில்கூடிக்கொண்டது.ஈராக் யுத்தத்துக்கு எதிராகத் திரண்ட மக்களது புரிதல்,லிபிய யுத்தத்தில் இல்லாதாக்கப்பட்டுள்ளது.இந்தக் கருத்தியில் வெற்றியானது ஈரான் போருக்குத் தயாராக்கப்படும் கருத்தியல் ஆளுமையை ஏகாதிபத்தியத்துக்கு வழங்கிவிடுகிறது.

கடாபிக்கு எதிரானதென்பதில் லிபியாவின் சுயாதிபத்தியம் பலியாக்கப்பட்டதுபோல ஈரானுக்கு எதிரானதென்பதை அஹ்மாடிநெட்சாத்துக்கு[Mahmud Ahmadinedschad]

எதிரானதெனச் சொல்லிக்கொள்ளப்போகும் மையக் கருத்தியலுக்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லை யென்றாகிறது. ஏகாதிபத்தியத்தின் ஊடாக வலு அவ்வளவு பெரியது.அதன் ஆயுதப்பலத்தைவிட அதன் கருத்தியல் ஆயுதமே மிக வலியது.இதை எதிர்த்து இயக்கமுறும் மாற்றுக் கருத்துவலு மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகிறது.

கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,ஈராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.என்றபோதும்,லிபிய யுத்தத்தின் பின்இதில் மீனவும் மாற்றங்கள் நிகழ்கிறது.சீனா தொடர்ந்து தன்னை இராணுவரீதியாகப் பலப்படுத்துவதும் இதன் தொடர்ச்சியே.சீனாவனது மிக நுணுக்கமாகத் தனது கையையே நம்ப முனைகிறது.இந்தக் கூட்டுக்களையும்-ஒப்பந்தங்களையும் அது இரண்டாம் பட்சமாகவே கணிப்பதில்“சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம்“கூட நிலைமைக்கொப்ப ஒரு பொருட்டல்ல.

இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான[ Shanghai Cooperation Organization (SCO)] சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.எனினும்,இந்தக் கூட்டின் பிரதான இரு தேசங்களும்(இருஷ்சியா-சீனா)அமெரிக்க,ஐரோப்பியத் தேசங்களது சந்தையிலும்,அந்த வலையத்தின் தொழிற்சாலைகளது வெளி உற்பத்திதத் தேவைகளிலுமே தங்கியுள்ளன.இதன்பொருட்டு இந்தச் சங்காய்க்கூட்டுக்கூட வெறும் காகிதப் புலியாகவே காலப்போக்கில் மாறிவிடும்.

என்றபோதும்,ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.

சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து இதுவரை காரியமாற்றியது.ஈரானில் முதலீடுகளைத் தவிர்ப்பதிலிருந்து இன்றைய அமெரிக்க மூலதனத்தின்அதிர்வுகளிலிருந்து சீனா தன்னைத் தக்கவைக்க அமெரிக்காவினது விருப்புக்குத் தலையசைப்பதாகவே உண்மை நம்முன் எழுகிறது.

புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்கா-ஐரோப்பியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே சீனா ஈரானில் முதலீடுகளை மெல்லக் குறைப்பதாக அமைகிறது.இந்தத் ததிரோபாயமானது „தி கிரான்ட் செஸ்போர்ட்டை“ [The Grand Chessboard: American Primacy and Its Geostrategic Imperatives ]எனக்குள் ஞாபகப்படுத்துகிறது.இதன் சூத்திரதாரி சீப்பினிக் பிரசென்ஸ்கியின் அடுத்த நகர்வுகள் இங்ஙனம் அமைக்கப்படுகிறது:

1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,

2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,

3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.அல்லது அதனோடு இணைந்து [Russen und Amerikaner starten Mega-Ölprojekt in der Arktis]எதிர்ப்பைத் தணித்தல்,பின் தனிமைப்படுத்தல்.

4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,

5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.

6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,

7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,

8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,நீண்டகால நோக்காக இருந்துவந்தபோதும்,லிபியாவின் எண்ணையைக் குறுகியகாலத்தில் கொள்ளையிடுவதற்காக ஜேர்மனிய அரசு,இருஷ்சியாவுக்கு விட்டுக்கொடுத்து South Stream எண்ணைக் குழாய் ஒப்பந்தம் கைச்சாத்தாயபோதும்,லிபியாவை அம்போவெனவிட்ட இருஷ்சியவோ இழக்கப்போது பலமடங்கு என்பதை ஈரானிய யுத்தத்தில் இரஷ்சியாவின் சார்பிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,இதன் விளைவாக நடந்தேறிய லிபிய யுத்தம் அதைத் தக்கபடி நகர்த்துவதின் உண்மையை ஆதாரமாகக்கொள்ளலாம்.

10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).

இந்நிலையில்,ஈரான்மீதான அமெரிக்க-ஐரோப்பிய அத்துமீறிய போரொன்றை எங்ஙனம்,இருஷ்சியா-சீனா அணுகப் போகின்றன வென்பதற்கு அவர்களது மூலதனத்தின் தொங்கு நிலைகளே தீர்மானிக்க முடியும்.எனவே,ஈரானிய அதிபர் தனது இன்றைய நட்பு நாடுகளாலேயே காலை வாரப்படுவார் என்பது கண்கூடாக மலாந்துவிடப்போகும் இன்னுஞ் சில காலத்தில்.

இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி [Zbigniew Brzezinski ]என்பது உலகறிந்த உண்மை.

ப.வி.ஸ்ரீரங்கன்

04.09.2011

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்

நிலையெடுக்கும் அரச ஆதிக்கமும் அதன்வழி அரங்கேறும் இனவொதுக்கற் குடிப் பரம்பலும்.

 

-சில கருத்துக்கள்

வரலாற்றில் புலிப்போராட்டம்:

புரட்சி,விடுதலை,சோசலிசம்-சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் ப(பி)ணப்புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது.

இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்(இனியொருவில் அத்தகைய கருத்தாடலுக்கான வெளியைக் கோருவதிலிருந்து புதியதிசைகள் நோக்கிய பாதையை மெல்ல உருவாக்கிக்கொள்ள முடியும்).

புலிகள், இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது, தமது அரசியல்-போராட்ட நெறிமுறைகள்தாம் „மக்களின் விடுதலைக்குச் சரியான தெரிவு“ என்று „மாற்றுக் கருத்துக்கு“ மரணத்தண்டனையோடு மக்கள் விரோத அரசியலைச் செய்து, இலங்கையில் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு-சோற்றுக்குப் பலியாக்கியது புலி அமைப்பு!

இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்த முள்ளிவாய்க்கால்வரையிலான புலிப்போராட்ட இரகசியப் பேரங்கள்-சரணடைவுகள்,வரலாற்றில் புலிகள் குறித்த மர்மத்தை மட்டும் விட்டுச் சென்றுள்ளது.இந்த மர்மத்தின் மறு விளைவு தமிழ்பேசும் மக்களை இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்துகு அடிமையாக்கியது மட்டுமல்ல சிங்கள மக்களின் சாதாரணக் குணாம்சத்திலும் தமிழ்பேசும் மக்கள் குறித்து ,ஏளனமான பார்வையைத் தோற்றுவித்திருக்கிறது.

தமிழ்பேசும் அடிமைகள்?:

அடிமைகளைக் கைக்கொள்ளும் நிலைகளில், சிங்கள இராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விவகாரங்களும் நமது மக்களைக் காலவோட்டத்தில் மனத் தாழ்ச்சிக்கும் அடிமைத்தனத்துக்குமான சூழலுக்குள் தள்ளிவிடப்போகிறது.இதிலிருந்து மனவூக்கத்தைச் செய்யும் திறவுகோல் புலம்பெயர் தமிழ்பேசும் மக்களது கைகளிலேயே தங்கியிருந்தும் அப்படியானவொரு செயற்பாட்டை-முன்னெடுப்புகளை இந்த மக்கள் செய்வதற்கேற்ற ஒழுங்கமைந்த தலைமைக்குள் ஒருமைப்பட முடியவில்லை.புலிக்கு மாற்றானவொரு புரட்சிகரக் கட்சி எந்தவகையிலும் உருவாகிவிட இயலாதளவுக்குச் சிக்கலானவொரு சூழல் தளத்திலும்,புலத்திலும் நிலவுகிறது.

புலியினது (வி)தேசிய விடுதலைப் போராட்டம்இன்றோ இருந்த இடம் தெரியாது பூண்டோடு அழிக்கப்பட்டு வருடம் இரண்டாகிறது!எனினும்,தமிழ்பேசும் மக்களது விடுதலைகுறித்த இயக்கப்பாடு,ஒருகிணைவு,மக்களை ஸ்தாபனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் ஒரு ஒழுங்கமைந்த புரட்சிகரக் கட்சியால் இலங்கையில் மேற்கொள்ள முடியாதிருக்கிறது. பேருக்கு மார்க்சிய-லெனியக் கட்சிகள்-புதியஜனநாகக் கட்சிகளென“அப்பன் கொல்லைக்குள் இல்லை“என்றபாட்டில் தளத்திலும்-புலத்திலும் முன்னணிகள் முளைக்கின்றன. இந்தச் சூழலிற்றாம் புதியதிசைகளை நோக்கிய கருத்தாடல்களும்-செயற்பாடுகளும் அவசியமாகி நம்முன் சூழல் எழுகிறது.இதை,எங்ஙனம் எதிர்கொண்டு காரியமாற்றுவது?

மேலுஞ்சரிந்து வீழ்ந்துள்ள தமிழ்பேசும் மக்களது ஆண்மை,அவர்களது எதிர்கால வாழ்வுக்கு நெருப்பை அள்ளித் தலையிற்போட்டபாடாய் புலிகளது மர்ம அரசியலது தொடர் நடவடிக்கைகள்“நாடுகடந்து அரசாங்கம்“அந்தக் குழு இந்தக் குழுவென மீளத் தகவமைக்கும் அதே மர்ம அரசியலை என்னவென்பது? இந்த அரசியலை வரலாற்றில் தொடைத்தெறிந்து புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பது நம்மால் முடியாததா?

அதே புலிவழியான அராஜக அரசியல்:

சகிக்க முடியாது வஞ்சனை அரசியல் இது.கண்மண் தெரியாத கற்றுக்குட்டிகளால் கடுகளவுகூட நாணயமற்ற கொலைகள் நடந்தேறியது.இதையும் விடுதலை எனும்பெயரால் நடாத்தியவொரு பாசிச இயக்கம் இன்று தமிழ்பேசும் முழு மக்களையும் அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள நிலையில் முளையரும்பும் அனைத்துப் புரட்சிகர முன்னெடுப்பையும்“புலி-புலி“எனக் கை காட்டும் அரசியலை முன்னெடுக்கும் போலிப் புரட்சிகர சக்திகள்மீது நாம் கோபங்கொள்வதோடு நமது முயற்சியும் சரியாகி விடுமா?

புலிகளின்போராட்டத்தைப் பெரிதாக்கி ஊத வைத்த சக்திகள் அதைப் பூண்டோடு அழிக்கும் அரசலையும் கொண்டியங்கியதையும் நாம் இன்று புரிந்துணரும்போதுகூட,இன்றைய மர்மப் பணப்புலிகளது (நாடு கடந்த அரசாங்கம்,நெடியவன்-கே.பீ.குழு வென இன்னபிற…)தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் அரசியல் சூதாட்டத்தை ஜெயலலிதாவடிவில் அரவணைக்கின்றன.

அழிவது மக்கள் என்பதையும்பாராது,இந்திய மத்திய அரசும் அதன் எஜமான இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கை இராணுவத்தை ஏவித் தனது அறுவடைச் செய்ய முனையும் இந்தச் சூழலிற்கூட புலிகள் குறித்த சீரிய பகிரங்க விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை!

„தலைவர் வருவார்,வரலாறு விடுதலை செய்யுமென“ப் போலி வாதங்களுக்குள் மக்களை கட்டிப்போடும் இந்தப் போக்குகள் ஜெயலலிதாமீது நம்பிக்கையைக்கொள்ளும்படியும் நமது மக்களை முட்டாளாக்குகிறது.

மிகவும் கண்டிக்கத்தக்கது இது.இதை அம்பலப்படுத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்தைத் தனிமைபடுத்தி, நமது மக்களின் விடுதலைக்கு வழிசமைக்கத் தெரியாதவொரு தமிழ்க் கட்சிகளது மூடத்தலைமைகளை நம்பிக் காவடி தூக்கும் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி அழிவில் முடியப்போகிறது.

தேசியத் தலைவரை இதுவரை நம்பச் சொன்ன பணப்புலிப் பினாமிகள் இப்போது தமிழ் நாட்டுச் சினமாக்கூட்டத்தையும் அந்த மாநிலத்தின் ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது தயவைiயும் நம்பும்படி மக்களைப் பேயர்களாக்குகிறார்கள்.

அழிவு அரசியலை நியாயப்படுத்தும் போக்கு:

சொந்த மக்களின் பலத்தை நம்பாத புலிகள்,தமது எஜமானர்களின் அரசியல் சதுரங்கத்துக்குத் தம்மைப் பலியாக்கியதை எத்தனை பக்கங்களில் நியாயப்படுத்தினார்கள் -படுத்துகிறார்கள்?அதை நியாயப்படுத்த எத்தனை சேரன்கள்-உருத்திருகுமார்கள் இன்னும் நமுக்குள் முளைத்துக்கொள்வார்கள்?

கேடுகெட்ட இந்த இயக்கவாதத் தனிநபர்வாத மாயை நமது வாழ்வைக் குட்டிச் சுவாராக்கியதை மறுத்து இனியும் தம்மால் நமக்கு விடுதலை சாத்தியமெனக் கதைவிடுவது உலகத்தின் முன் பெரும் சமூக விரோதமாகும்.

போராட்டத்தை முட்டுச் சந்தியில் நிறுத்திவிட்டுச் சரணடைந்த புலிகளால் எழிச்சியடைந்த சிங்களக்கூலிப்படையோ இப்போது சிங்களத் தேசியப்படையாக மாறிவிட்டது.இதையெல்லாம் செய்வதில் புலிகளின் இயக்கம் காரணமாகப் போகிறதென்ற அன்றைய விவாதங்களை எள்ளி நகையாடிய மேட்டுக்குடி ஈழஅரசியல் „துரோகி“ சொல்லி பலரைப் போட்டது.தெருவில்-லைட்கம்பத்தில் பொட்டு வைத்துத் தமது அரசியலை நியாயப்படுத்தியது.

இன்றோ பெருங் கூச்சலிட்டுத் தமிழ் பேசும் மக்களைக் காக்கத் தமிழகத்தை உருகி அழைக்கிறது-அல்லது அவர்களிடம் ஏதோவொரு எதிர்பார்பைச் செய்யும்படி மக்களைத் தூண்டுகிறது.இங்கே, ஜெயலலிதா அம்மையார் தமிழ் பேசும் மக்களது விடுதலைத் தேவதையாக ஒளிவட்டம் கட்டப்படுகிறது.இன்னும் சிறிது காலத்தில் ஜெயலலிதா தேசியத் தலைவியாகவும் போற்றப்படலாம்.இந்த விவஸ்த்தையற்ற கருத்து வெளிக்குள் நாம் மீளவுஞ் சரிந்துவிடுவோமா அல்லது உண்மையான விடுதலைக்கு பங்களிக்கப் போகிறோமா?பெரும் படையணிகளோடு ஈழ மண்ணைக் காப்பதாகக் கயிறு திரித்த ப(பி)ணப்புலிகள் மக்களைக் கொல்வதற்குத் தளபதிகளைத் தயார்படுத்தியளவுக்குச் சிங்கள மேலாதிக்தை-அரச ஆதிக்கத்தை உடைத்துப் போராட்டத்தை முன்னெடுக்கத் தக்கபடி மக்களை அணிதிரட்டிப் பெரும் படையணியாகக் கட்சியை- இயக்கத்தைக் கட்டமுடியாது, தேசியத் தலைவரைச் சுற்றி ஒளிவட்டம் அமைத்தார்கள்.இப்போது, அதே பாணியில் ஜெய லலிதாவையும் நோக்கி மக்களைத் தள்ளித் தமது பிழைப்பை மேலும் மெருக்கேற்றுவதற்கும்,இருப்பை வலுப்படுத்தவும் ஒரு ஆயுதமாகப் பார்க்கும் பணப் புலிகளுக்கு விடுதலை-தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமை குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது.இதை நிர்மலன்போன்ற புலிப் பினாமிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

புலிகளது தவறுகள்,சிங்களமயப்படும் எதிர்காலம்:

புலிகள் இயக்கம் தனது வர்க்கத் தளத்துக்கு-குணாம்சத்துக்கேற்ப எப்போதும் தவறிழைத்தவர்களல்ல!தமது வர்க்கத்து இசைவாகவும்-நியாயமாகவே தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காய் அடித்தார்கள்-காட்டிக் கொடுத்தார்கள்.அவர்கள் தவறிழைத்தது பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது நலனின்மீதே.அத்தகைய இலக்கில் புலிகள் செய்தது பாரிய வரலாற்றுப் பழி!

இந்தப் புரிதலோடு முரண்பட்டவர்கள்,புலிகளது கடந்தகாலத்துத் தவறுகள் தற்செயலானதென்று கூறுமிடத்து, அவரது அரசியல் புரிதலில் ஊனமிருப்பது அவருக்கே பிரச்சனையானதாக மாறும்போது, உண்மையெது என்பதை அத்தகைய மனிதர் உணர்வு பூர்வமாகத் தரிசிக்கும்போது ஒரு தலைமுறை அழிந்தோய்ந்து விடுகிறது.இது, வன்னியில் (இப்போது) நிசமாகி வருகிறது.வன்னி நிலப் பரப்பெங்கும் புதிய குடியேற்றத் திட்டங்கள் மெல்லச் சிங்கள அரசால் ஏற்படுத்தப்படுகிறது.இதையெல்லாம் நியாயப்படுத்த கே.பி.போன்ற பணப் புலிகள் புலத்திலும் உண்டு-தளத்திலும் உண்டு!

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த „தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென“ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்பேசும் மக்கள்பண்டுதொட்டு வாழ்ந்த நிலப்பிரதேசங்களை இழப்பதற்குரிய முன்னெடுப்போடு செய்யப்படும் இந்த இராணுவவாத முன்னெடுப்பு, முதலில்தமிழ் பேசும் மக்களுக்கான பாரம்பரிய நிலப்பரப்பின் அடையாளங்களை மெல்லத் தடயமின்றி அழித்து(புத்த விகாரை ஒரு சிறிய உதாரணம்), அவர்களைப் புதிய புதிய இடங்களுக்கு இடம்மாற்றிச் சாவின் விளிம்பில் தள்ளுவதற்கான மிகப் பெரிய அரசியல் வியூகத்தைச் செய்வதற்குப் பணப் புலிகளது மர்மமும்,நமது கட்சி அரசியல்வாதிகளது சுய இலாபங்களும் முக்கிய வகிபாகத்தை இந்த முள்ளி வாய்க்காற் தோல்வியின் பின் சாத்தியமாக்கிறது.மக்களை எதை நோக்கியும் சிந்திக்க விடாது,தனியே உணவுக்காகக் கையேந்தும் பிரதேசிகளாக்கியபடி ஓட்டுக் கட்சிகள் மெல்ல முன்னெடுக்கும் இந்த நரித்தனமான அரசியலை அம்பலப்படுத்தி, மக்களை விளிப்புணர்வுகொள்ள வைக்கும் எந்த முயற்சிக்கும் தடையாக,சிங்கள இராணுவத்தின் கண்காணிப்பும்,ஓட்டுக் கட்சிகளது ஏமாற்று அரசியலும் ஒரே தளத்தில் இருவேறு வியூகமாக விரிகிறது!இதுவே,இன்றைய நவலிபரல் கொள்கையின் இன்னொரு முகமாகும்!இதைப் புரிவதற்கு நோமிக் கிளைன் எழுதிய[The Shock Doctrine-By Naomi Klein ] எனும் நூலில்சில பக்கங்களைப் புரட்டினாலே போதும்!

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்:

புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு „மாற்றுக் கருத்து மந்தைகள்“(தேசம் ஜெயபாலன்,தேனி ஜெமினி-கங்காதரன்,கீரன்,கொன்ஸ்சன்ஸ்ரையன்,சுகன்,தேவதாசன்,சோபாசக்தி,நிர்மலா-இராகவன்,சுசீந்திரன் இன்னபிற…) கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.

யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதியைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரச சார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு“ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்“எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன மந்தைகள்வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் சில கீரன்களை-கொன்ஸ்சன்ஸ்ரையன்களை, நம்முன் உலாவிடுகிறது.இது ஆபத்தானது-அனைத்தைக்காட்டிலும்!

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும் இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.

பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக்காயாக்கியபடி புரட்சி முன்நகர்வதல்ல.

சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் „போராட்டம் புரட்சியை நிபந்தனையாக்கியபடி“ இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிப்படையைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.

நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும் சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் கீரன்போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க முடியுமா?

முள்ளி வாய்க்காலில் அழிந்துபோன புலிகளோடு புலிச் சித்தாந்தமென்பது தமிழ் மேட்டுக்குடியினது சித்தாந்தமேயென்பதும் மிக இலகுவாகப் புரிந்து போச்சுதா? இதிலிருந்து மீள்வதற்குத் தயக்கமென்ன?புரட்சிகரமாகச் சிந்திக்கும் ஆற்றலை இளைய தலைமுறையினருக்குக்கற்றுக்கொடுப்பதென்பது காலத்தின் கடமையாக இருக்கும்போது அதை இத்தகைய லொபிக் குழுக்களோடிணைந்து உரையாடுவதால் சாதிக்க முடியுமா? சஞ்சீவ் ராஜ் போன்றோர் இது குறித்து பதில் கூறவேண்டும்.

இலங்கைப் பாசிச இனவொடுக்குமுறை அரசியலால் நாம் இழந்தவை பல்லாயிரம் மனிதவுயிர்களாகும்!இதை மறுத்து மகிந்தாவுக்குக் கூஜாத் தூக்குவது மக்களுக்கு எதிரானது.

இன்றுவரை,நமது சமூக சீவியம் உடைந்து,நாம் உதிரிகளாக அலையும் வாழ்வுதாம் நமக்கு வாய்க்கப் பெற்றுள்ளது.இந்தக் கொடிய இலங்கை-இந்திய அரசுகளால் எமது வாழ்வாதாரங்களை இழந்த நாமே,அதைப் பெற்றுத் தருவது-காப்பது இத்தகைய அரசுகள்தாமென வாதாடும்போது நாம் யார்? கீரன்-கொன்சன்ஸ்ரையன்,தலித்துவ மேம்பாட்டு முன்னணி,இராகவன்-நிர்மலா,எனத் தொடரும் இந்த நீண்ட லொபிக் குழுக்களால் நிகழப்போகும் அபாயம் புலிப்பாசிசத்தைவிடப் பன்மடங்கானதென்பதே எனது கணிப்பு!புலிகள் நேரடியாகவே மக்களது எதிரிகளென மக்களுக்குத் தெரிந்தளவுக்கு இந்த மர்ம மனிதர்களை இலகுவாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை!இனவாத ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்பேசும் மக்கள் அன்று போராடியபோது-புரட்சிகரமாக அணிதிரண்டபோது,பாசிசப் புலிகள் மூலமாக அனைத்தையுஞ் சிதறடித்த அந்நிய-இந்திய நலனானது இப்போது அதே பாணியில் இத்தகைய லொபிக் குழுக்களை வைத்து மீளவுருவாகும் புரட்சிகரமான அணித்திரட்சியை-உணர்வை உடைப்பதில் கவனமாக இருக்கிறது.இவர்களே அனைத்து வழி முறைகளையும் கைப்பற்றி அதைச் சிதைப்பதில் திறம்பட இயங்குகிறார்கள்.

தேசிய விடுதலையை நேசிக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் இனிமேல் கவனப்பட வேண்டிய முக்கிய போக்கானது இது :

“ முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் „தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்“என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.அது,நமது அடிமை விலங்குங்கூட என்பதே!“

எனவே,நாம் புரட்சிகரமான அணுகுமுறையைத் தொடர்ந்து உள்வாங்குவதும் அதன் வழி அணித் திரட்சியடைவதும், இலங்கையில் சிறுபான்மை இனங்களின் விடுதலையை-செல் நெறியை திறம்படச் சாத்தியமாக்குவதற்கும், இத்தகைய லொபிக் குழுக்களை ஓட விரட்டவும், புரட்சிகரமாக இயங்குவதே அவசியமான காலக் கடமை.இனவாத ஒடுக்குமுறைக்குள் தமது அடையாளங்களைத் தொலைக்கும் ஒரு தேசிய இனத்துக்கு இதைவிட வேறு வழியிருக்கா?

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.06.2011

சாதியம்-தீண்டமை" என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?

தமிழ் பேசுவதால் தமிழர்களா?;
„சாதியம்-தீண்டமை“ என்ன தமிழர்களின் தனிக் கூறுகளா?

 

“ தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள் வெறும் கருத்துக்களால் நிலை நிறுத்தப்படவில்லை.அவை குறிப்பிட்ட அதிகாரத்தின் மைய ஆளுமையை நிலைப்படுத்துவதற்கான சிந்தனைத் தளத்தைக் கொண்டிருப்பதற்காகக் கட்டபட்ட ஒரு பெரும் நிறுவனமான இந்துத்துவப் பார்ப்பன நிறுவனத்தின் நீட்சியாகும்.“

ழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை, நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.

அங்கே , „பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும்“ நாம் அறிந்ததுதாம்.

வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால் , அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தருணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.

இக்கட்டுரையே,தீபம் தொலைக்காட்சி“கேள்வி நேரம்“உரையாடலில் கீரன் முன்வைக்கும் அல்லது அவர் குரலூடாக முன் தள்ளப்படும் ஒரு வரலாற்றுப் பழி குறித்தான பார்வையை எப்படிப் புரிவதென்ற முயற்சியின் நறுக்கே!

„சாதியம்-தீண்டாமை“ எனும் கருத்துப் பிரிப்பில்(சமூக உளவியல்) இயக்கப்பாட்டை மனோவியற்றளத்தில் பண்பாட்டு ரீதியாகப் புரிய வற்புறுத்துகிறார்.அவ்வளவு இலகுவாக இதைப் புரிவது கஷ்டமான காரியம்.எனினும்,முழுமொத்தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில் இதை எதிர்கொள்வது எப்படி?என்ற சிக்கலை எல்லோரும்தட்டிக்கழித்துப் புரட்சி பேசுகிறோம்.பண்பாட்டு இடைவெளிகள் பூர்ஷ்சுவாக் கருத்தாக்களது வழியுள் அவர்களது நலன்களைத் தக்கவைக்கும் முயற்சியில் அது நிலைபெறத் தொடங்கும்போது எஞ்சியது பூர்ஷ்சுவாப் பண்பாட்டு ஒடுக்குமுறைதானே?

ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தியில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் இத்தகைய கீரன் போன்றவரது கருத்துக்கள் எப்பவுமே தட்டிக்கழிக்க முடியாதவை.ஆனால்,இக் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன் முன்வைக்கும் சாதியப் பிரச்சனைகள் அவ்வளவு இலகுவாக நீர்த்துப் போக முடியாதவை என்றே நான் கருதுகிறேன்.

தனித் தமிழ்அரசு-ஆளுதல்:

„ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்குது“

இந்தச் சமூக உளவியலையுடைத்துப் புரியும்போது சில நூற்றாண்டாக மூன்றாம் உலகத்தில் நிலவிய காலனித்துவக் கட்டத்தைக் குறித்துச் சில புரிதலுக்கு வந்தாக வேண்டும்.காலனித்துவ வாதிகளது கருத்தாளுமையானது
தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு-அந்நியர்களால்- இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இத்தைய உள்ளகக் காலனியத் தொடர்ச்சியின் வழியாகவாவது தமிழ் மேட்டுக் குடியின் ஆளும் மனவிருப்புப் „பூர்த்தியாகும் மனநிறைவு“ தொடர்ந்து தனக்குள் மெலியவர்களைக் கொத்தடிமையாக்குவதில் ஒருவித ஆளுமை வெளிப்பாடாக உருப் பெற்றிருக்க வாய்ப்புகள் வரலாற்றில் அதிகமாகவே தென்படுகிறது.இதைத் திட்டமிடப்பட்ட ஆய்வுகளின் வழி நிறுவது கடினமாயினும்,மனோவியற் புரிதலில் வெட்ட வெளிச்சமாக வகுத்துக்கொள்ள முடியும்.

தனியுடமைச்சமுதாயத்ததுள்,நிலவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்,அதையொட்டிய ஒடுக்கு முறைகளும் அரசியல் அதிகாரம் என்பதற்கு ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞானபூ ர்வமாகப் புரிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே, தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.

காலனித்துவத்துக்குப் பின்பான நவ காலனித்துவ-பல் தேசிய மயக் காலகட்டத்து இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள், மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாக வூன்ற வைத்துள்ளன. இவற்றைக் கடந்து நாம் இந்தப் பாழ் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட புதிய பாட்டாளிய வர்க்கப்பண்பாட்டை,பன்மைத்துவ சிறு அடையாளங்களை,பொருந்தாத் தன்மையிலான சிறு சமூக அமுக்கக் குழுமங்களாக உருவுறும் வேறுபாடுகளை இணைக்கும் பண்பாட்டைப் படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.ஏனெனில் , வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.அவர்கள் இந்தியப் பார்ப்பனப் பண்பாட்டு ஒடுக்குமுறைக்குப் பலியாகும் சாதிய வேறுபாடுகளால் பிளவுண்டு போகமுடியாது.கீரன் இத்தகைய பிளவை மிக வன்மமாக வற் புறுத்துகிறார்.இதற்குப் „பாகிஸ்த்தானைப் பிரித்தது ஜின்னாதாமென“ப் புலம்பித் தனது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்.அகண்ட பாரதம்,ஆபத்தானதெனக்கொள்ளும் நவ காலனித்துவம் இப்படி, காந்தி-ஜின்னா வழியூடாக வேறு வரலாற்றைச் சொல்ல வைத்திருக்கிறது.அதை,வாந்தியெடுப்பது அனைவருக்குமான விடுதலையைத் தந்துவிடப் போவதில்லை!

பாண்பாட்டு ஒடுக்குமுறை வரலாறு:

வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது இல்லையா கீரன்?

அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினூடாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.சாதியத்தை வேரறுப்பதற்கான முதற்படி இங்கிருந்துதாம் தொடங்க முடியும்(இதைவிட்டு இனவாதத்துக்கு எதிரான எழிச்சியைப் போராட்டத்தைக் கூறுபோடுவது அல்ல என்பதையும் இதில் புரிந்தாகவேண்டும்!).

அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக தமிழ்ச் சமூகத்தின்உரிமைகளைச் சிதைக்கும் காரியத்தில் புலம்பெயர் தலித்துவக் குறுக்கல் வாதம் தொடர்ந்து தன்னை விருத்திக்கிட்டுச் செல்கிறது.இதைக் கீரன்போன்ற இலங்கைச் சிங்கள அரசுக்குப் பலிபோன கடாக்களது வழி புரியும்போது,இவர்கள் குறுக்கே நின்று தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய உரிமை மீது கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய இவர்களிடமிருந்து உழைக்கும் மக்களது வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.

ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!

இதைக்கடந்த எந்த உறவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இன்றைய பெரு மூலதன நகர்வில் ஐரோப்பிய அரசுகள் செய்யும் லிபியா மீதான அழிவு யுத்தம் நல்ல உதாரணமாக முடியும்.இதையுங் கடந்து „கிரேக்க அரசுமீது சுமத்தும் அழுத்தம், கிரேக்க உழைக்கும் வர்க்கத்தின் மீதான அதீத ஒடுக்குமுறையை ஜேர்மனிய டொச்சு வங்கி பிரேரிக்கும்போது“ அந்தப் பிரேரணையை ஜேர்மனிய அரசு தனது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கிறது.இவையெல்லாம் வர்க்கங் கடந்த அரசியலை வற்புறத்தவில்லை.இதைக்கடந்து தலித்துவ அரசியலைப் புரிந்து கொள்வதில் வரலாற்று ஒடுக்குமுறையென்பதை முன் நிறுத்துவதில் தமிழ்ச் சமுதாயத்தில் சமூக வளர்ச்சி-சிதைவுகுறித்த புரிதல் கவனித்தில் இருத்தப்படாது தட்டிக் கழிக்கப்படுவதன் உள் நோக்கம் என்னவாக்க இருக்கமுடியும்?

தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில் கீரன் முன் வைக்கும் சாதியப் பிரச்சனை,அது குறித்து“ஆய்வு“ரீதியான உரையாடலுள்“சாதியம் இருக்கிறது-தீண்டாமை விலகுகிறது“என்ற புள்ளியில் மீளவும் தமிழ்ச் சமுதாயத்திள் மொத்த சமூக வளர்ச்சிக் கட்டங்கள் குறித்துச் சரியான புரிதலை மறுப்பதில் முழுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் சாதியவொடுக்குமுறையைத் தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிறுத்துகிறார்.யாழ்ப்பாணம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிதியீடாகும் ஒரு குறு நிலப்பரப்பு.அதைத் தாண்டிய சாதியவொடுக்குமுறை முழுமொத்தத் தென்னாசிய இனக் குழுமங்களுக்குள்-தேசிய இனங்களுக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும் பண்பாட்டின்மீது வைக்கவேண்டியதும்,அந்தப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தும் பொருளாதாரத்தைக் கேள்விக்குட்படுத்தாது,ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் கீரனது அறிவின்மீது ஆணி அடிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?

சாதியத்தின்மீத கீரனது பார்வையை இந்தியாவுக்குள்ளும்,சிங்களச் சமுதாய அமைப்புக்குள்ளும் பொதுமைப்படுத்திப் பார்த்தோமானால்
கீரன் சிறுபிள்ளைத் தனமாகவும், அப்பாவித்தனமாகுவம் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுக்க அல்லது அதை நியாயப்படுத்த முனைந்து தனது அறிவிலப் புலம்பலை முழுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கெதிராகச் செய்து சிங்கள இனவாத முன்னெடுப்புகளைத் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்.

யாருக்கு யார் குரலிடுவது?:

யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?

பாடசாலைகளில், இலங்கை மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா? இந்தக் கல்வியைக் கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு குறித்தும், அதன் சாதியப் பிளவு அரசியல் குறித்தும் கண்டிய-கரையோரச் சங்களச் சமுதாயத்தின் சாதிய வேறுபாட்டிலிருந்து புரிவதும் அவசியமில்லையா?கொய்கமச் சாதியத்தின் வரலாறு என்ன?அதன் பொருளாதார ஆதிக்க நலன்கள் எவையாக இருக்கின்றன கீரன்?

அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை(வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது-மார்க்ஸ் /The history of all hitherto existing Society is the history of Class Struggles).அஃது, தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது. வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் „தற்காப்புத் தேசியவாதம்“என்று.

இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.

என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்?

சாதியத்தை; துடைத்தெறியும்-சமூக மேம்பாடு என்ற திசைக்கும் நிலவும் மறைமுகமான அவமானப்படுத்தல்கள்-தொடர்ந்தும் சாதியத்தை நிலைப்படுத்தும் அடையாளங்கள் யாவும் ஒரு முனையில் இன்னொரு வகை அகவொடுக்குமுறையைச் செய்கிறதேயொழிய பண்பாட்டு மாற்றத்தைக்கோரவில்லை!அத்தகைய நிலையில்,தொடர்ந்தும் அவர்களது கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?

இதிலிருந்து தலித்துவக் கோரிக்கைகளைப் பிரித்துப் பார்க்க முடியுமா?

இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்“சாதகம்-பாதகம்“என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்?.

பேரினவாதம் சாதி பார்த்தா தமிழ் பேசும் மக்கள்மீது குண்டிறிந்தது?தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரு காரணத்துக்கு மட்டுமா சிங்கள இராணுவம் தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயக் கோரிக்கையைச் சிதைத்தது?தமிழ்பேசும் மக்களது விடுதலையோடு இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களதும் விடுதலை பின்னிப் பிணைந்திருக்கவில்லையா?ஏன் தென்னாசியப் பிராந்தியத்தின் விடிவெள்ளியாகக் கூட இப்போராட்டம் இருந்திருக்காதா? இதையுணர்ந்ததாற்றாமே பாசிப் புலிகளை வளர்த்தெடுத்தனர்-புரட்சிகரக் கட்சிகளை அழித்தனர்?

ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் கீரன்-தேவதாசன் போன்றோரிடம்இவற்றைக் குறித்த புரிதல்கள் இல்லாமலா இருக்கும்?அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை!

ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகௌரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அது ஒடுக்கப்பட்ட மக்களது பொதுமையெனப் புரிந்துகொன்னவேண்டும்!ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து சாதிகளுக்குள்ளும் இருப்பவர்களே!

அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த „சைவப்பிரகாச வித்தியாலயம்“எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?

இது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள்-உழைப்பாளர்களது பிள்ளைகள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது? தனியே சாதியத்திமிரா அல்லது வர்க்க நலனா?

ஒரு தேசிய இனமெனும்பொழிவு, புலப்படும்சிந்தனை :

எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய விய+கம் அடிபட்டுப்போகிறது.

எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.

கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஙனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?

எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.இதைத்தாம் இப்போது கீரன் மற்றும் தலித்துவ மேம்பாட்டு முன்னணி வகையறாக்கள் பேசுவதில் முடிந்துள்ளது!

இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுவது?

இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா?

அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?

இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் குறை வளங்களாலேயே (சாதியம்-பெண்ணடிமை,மத வேறுபாடு,மொழி வேறுபாடு-பிராந்திய வேறுபாடு இத்தியாதி) முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தருணத்தில் எங்கே செல்லும்?

கீரன் பேசும் சாதியறுப்புக்கான கருத்துக்கள் எந்த வகையிலும் சாதியத்தை வேரறுப்பது அல்ல. மாறாக, அது இலங்கைப் பாசிச அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற-அவர்களால் தகவமைக்கப்பட்ட கருத்தாடலே.இது, ஒருபோதும் தலித்துவ மக்களுக்கான விடுதலையையோ அன்றி முழுமொத்த தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணய உரிமைக்கோ எந்த விதத்திலும் உதவாது, அடக்கு முறையாளர்களது தயவுக்காக நக்கிப் பிழைக்கும் கருத்தாடலாகவே காணப்படும்.இஃது, காலப் போக்கில் நிகழும்போது இத்தகைய தலித்துவக் கோரிக்கைகள் காணாமற் போவது மட்டுமல்ல,யாருக்காகப் போராடுவதாகச் சொன்னார்களோ அந்த மக்களே தம்மை ஒடுக்கு முறையாளர்களது வலையிற் சிக்க வைத்து மேலும் வதைப்படுவர்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.06.11

தீபத்தில்: கேள்வி – நேரம்!

தீபம் தொலைக்காட்சியில்இடம் பெற்ற „கேள்வி-நேரம்“ பீ.ஏ.காதர்- கீரன்,சேனன்,புதிய திசைகள் மாசில் பாலன் போன்றோரது உரையாடல்கள் குறித்துக் கவனத்தைக் குவிக்கிறேன்.அவர்களது உரையாடலில் பல தளத்தில் உடன்பாடான கருத்துக்கள் விரிந்து கிடக்கும்போதும்,வர்க்க அரசியலில் வர்க்க நலன் குறித்த பார்வைகள் மிகவும் பலவீனமான புரிதலூடாக உள்வாங்கப்படுகிறது.இது குறித்துச் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களை நண்பர்கள் புனைகின்றார்கள்-குறிப்பாக நிமலன்-யோகலிங்கம்போன்றோர்.

இதுள், தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது,அல்லது விற்கப்படுகிறது. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத் தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட „நிகழ்வுகள்“சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.

இங்கே, தீபம் தொலைக்காட்சியில் உரையாடப்பட்ட விடையங்கள்கூட புலியரசியலது நீட்சியை வற்புறுத்தும் தந்திரத்தோடு கட்டியமைக்கப்படுவதில் மேலுஞ் சில ஞாபகங்களைச் சொல்லிச் செல்கிறது! உதாரணமாக: இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-இயக்கங்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்தும், தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்ககுநிலையிலிருந்து இந்த“புலம் பெயர் குழுக்களின்“குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும்குறியீட்டு அரசியல் நல்ல உதாரணமாக இருக்கின்றன.இது குறித்து நாவலனது சிறு குறிப்பு சிறப்பான பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது.அது,கிட்லரது காயடிப்பு அரசியலது வினைவரை பேசுகிறது.

=>

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்“மாற்றுக் கருத்து“என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய அழிவு-அரசியல் நிலையில், இத்தகைய „கேள்வி நேரம்“முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச்(கீரன்போன்றோர்) சென்றுவிடுகிறதென்ற உண்மையில், அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்

==>>

புரட்சிகரமான நிலைப்பட்டை முன்வைத்து, அதன் வாயிலாக நமது இந்தக் கோலங்களையெல்லாம் சிறிதுசிறிதாக அகற்றி நம்மை சமுதாயத்தில் கால்பதிக்கவைக்கும் வர்க்கவுணர்வைத் தொடர்ந்து இயங்கவைப்பது ஒரு புரட்சிகரமான வேலைத் திட்டமே.அதைப் பூண்டோடு கைகழுவிய இந்த நண்பர்கள் இப்போது தனிநபர்களாகக் குறுகிச் சிதைவுறுவதைக்கூட மக்கள்சார்ந்த மதிப்பீடுகளால் நியாயப்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் கவலையுறவேண்டியிருக்கிறது.

அன்றாடச் சிக்கல்களாக இவர்களுக்குள் உருவாகிய இத்தகைய மனவிருப்புகள்-தெரிவுகள்(சாதியப் பிரச்சனை குறித்த கீரனது புரிதல்) எப்போதும்போலவே மக்களைக் குதறும் இயக்க-குழுவாதத்தை மறைமுகமாக ஏற்று இயங்குகிறது.இதை இனம்கண்டு தகர்க்காதவரை “ இவர்களால் எந்த முன்னெடுப்பும் அதிகாரமையங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட முடியாது. மாறாக, அத்தகைய மையங்களை மேன்மேலும் வலுப்படுத்துவதில் தமக்குள் உள்ளவரை வேட்டையாடிக் குலைத்து அதிகாரத்துக்கு உடந்தையான-துணைபோனவர்களாகவே இருப்பார்கள்“ என்றுதாம் சொல்வேன்!

தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர் நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல்-சேட்டைகள் இத்தகைய „கேள்வி நேரம் “ புலம் பெயர் ஊடகச் சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் „மாற்றுக் கருத்து“எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணகருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமையையே தகர்க்கும் சாதியப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது!

இதன் வழி மக்களைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.எவரிடமும் புரட்சிகரமான பணியைச் சார்ந்தியங்கும் மனத்தை-நடுத்தரவர்க்க எண்ணங்களை இல்லாதாக்கிய புரட்சிகர மனது உருவாகிவிடவில்லை!

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்“பன்மைத்துவக் கருத்து“என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!

நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து உள்வாங்கவேண்டிய தேவை இருக்கிறது.இதை „கேள்வி-நேரம்“வழியாகக் கூடக் கடக்க முடியும்!என்றபோதும்,அதை ஏதோவொரு பெரு எண்ணவோட்டத்துக்கேற்பத் தகவமைப்பதுபோன்ற சூழலையும் கவனிக்கத் தக்கதாகவே இருக்கிறது!இந்தப் பெரும் எண்ணவோட்டம் எந்த வர்க்கத்தைச் சார்ந்தியங்குகிறதென்பதே எனது கேள்வி!

இப்போது,மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத(புலி-ரெலோ…) வரலாறு எப்பவும்போலவே தனித்த“தார்ப்பார்களை“உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இதை கீரன்-நிமலன் போன்றோரிடமிருந்து இனங்காண முடியும்.

இதன் தொடர்ச்சியான போக்குகளால் மனிதவுரிமை என்பதை வெறும் வெற்றுச் சொல்லாடலாக்கிய சிங்கள-தமிழ்அதிகாரவர்க்கமானது இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது. இஃது, சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு“தேசத்தின்“இறைமையாகக் கையளித்தது.இதன் ஆரம்பம் மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற இராணுவாதம் அவ்வரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக ஒரு பகுதி மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை ஆளும்வர்க்கங்கள்.

எனவே,இன்றைய இலங்கையை கீழ்வரும்படி புரிந்து விடலாம்:

1: மகிந்தா தலையிலான இலங்கை அரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒரு குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும், மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.ஆனால், இலங்கை அரசினது இன்றைய பாத்திரமானது பெரும்பாலும் இலங்கை ஆளும்வர்க்கத்தினதும்,வெளியுலக-பிராந்திய ஆளும்வர்க்கங்களது தெரிவை இலங்கைக்குள் நடாத்திமுடிப்பதில் அதன் அரசியல் நடாத்தை எல்லைதாண்டிய ஆளும்வர்க்கங்களது நலனோடிணைந்த கொடுங்கோன்மையாகவிரிகிறது-இஃது,இராணுவச் சர்வதிகாரத்தின் புதிய வடிவமாக இலங்கை „ஜனநாயகத்துள்“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,அரச அதிபராகவும் மகிந்தா தலைமையை இனங் காட்டுகிறது!அதற்கேற்பப் புலம்பெயர் தளத்தில் கருத்துக்களைக் கட்டுவதில் கீரன்-இடது-வலது எனக் கோடிப் பயல்கள் பற்பல வடிவங்களில்…

2: ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பி வருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(அடிப்படையுரிமை-குடிசார் அமைப்புகள் ,இன்பிற) தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இந்தக் குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய கட்சி அரசியல்வாதிகள் நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர்.

இங்குதாம்,சேனன்,புதிய திசை பாலன் போன்றோரது கருத்துக்களைக் கூhந்து நோக்க வேண்டியுள்ளது.இத்தகைய சூழலது மதிப்பீட்டுக்கு வரமுடியாத எந்த உரையாடலும் வெறும் வினையகற்றிய போலிப் போராட்ட வடிவங்களுக்குள் மீளவும் நம்மைத் தள்ளிவிடும் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.

21.06.2011

மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?

முப்பது இலட்ச முழு நிதியும் மார்க்சிய கட்சிக்கே போய் சேரட்டுமென முதலாளி…

 

Der Mythos des Michael May_Sisyphos

ரலாறு பூராகவும் இந்த மனிதவாழ்வுக்கு அர்த்தங்கள் பல கற்பிக்கப்படுகிறது.எந்தக் கற்பித்தல்களும் மனித வாழ்வைப் பூரணமான-சுதந்திரமான புரிதல்களோடு நியாயப்படுத்தவில்லை!

ஏன் வாழவேண்டும் என்பதும்,எதற்குச் சொத்துச் சேர்க்க வேண்டுமென்பதும் நியாயப்படுத்தும்படியாக எப்போதும்இருக்க முடிவதில்லை!

„Absurd“ முற்றிலுமாக விரிகிறது,வாழ்வை எண்ணி!

குடும்பம்-பிள்ளை,குட்டி எனக்கொண்ட உறவொடு விரிந்து போகும் விருப்புக்கு குவிப்புறுதிகொள்வதில்மனித வாழ்வு அதிகம் சலித்துப் போகிறது.எதிலும் நம்பகத் தன்மை இல்லை-எங்கும் போலித் தனமும்,நம்ப வைத்துக் „கழுத்து அறுப்பும்“ நிலவுகிறது.

நான், எந்த நோக்கமுமற்ற வினைகளுக்குள்த் தினமும் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

„unsinnig“ அர்த்தமற்ற உலகமாகப்பட்ட மனித வாழ்வு அழிவிற்குள்…அது,“தவறான-தப்பான,நியாயமற்ற“சட்டங்களால்- ஒழுங்குகளாற் தினமும்இந்த வாழ்வை அழிப்பதில் முடிகிறது.மீள,மீளத் துரத்திவரும்“அபத்தம்(Absurditaet)பயனற்ற,அர்த்தமற்ற செயலை ஊக்குவிக்கிறது.இவற்றை எதிர்க்கும்“மனநிலை“ அபத்தவாதத்தின் தெருக்கோடியில் தஞ்சம் கொள்ளும்வரை எனது பௌதிக இருத்தலின் தஞ்சம் „Diskrepanz“ இணைவின்மையாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றாய் விரியும்போது, அபத்தமாகவே உலகும் தோன்றுகிறது.இந்த உலகு எதுவரை?

ஒரு இனத்தை வியாபாரத்தனமாகக் கொன்று குவித்துவிட்டுத் தாமும் மண்டியிட்டுத் தலையைப் பிளக்கக் கொடுத்த புலிகளைக் குறித்து விளங்க முடிதல்சிசிப்போவுக்கு முன் கட்டளைப் போட்ட கடவுளது வேலைக்கொப்பவே இருக்கிறது.

நான் தரையிலிருந்து மலை உச்சிக்குத் தாவும்போது எனது இன்றைய அனைத்து ஊக்கமும் இமையசைக்கும் முன்னமே தரைக்கு வந்து விழுந்து நொருங்கும்போது இதை எதிர்த்தல்-வீராப்புப் பேசலாக சமூகத்துக்குள் கொட்டிவிடுகிறேன்.சிசிப்போ கடவுளைவிடப் பன்மடங்கு பலமானவன்.அவன் உணர்வு நிலை அர்த்தமற்றதை“ஒழுங்கை!க் கடைப்பிடித்தல்-ஒப்புக்கொள்ளலென அர்த்தமுள்ளதாக்குவதாகப் புரியும்போது இந்த மாபெரும் மனிதர் Michael May ஆக மேலெழுகிறது.

கடந்த கால் நூற்றாண்டாகப் பொறியியலாளனாகப் பணிபுரிந்த இந்த மனிதர் பெரும் கட்டுமானத்துறையில் செல்வம் குவித்து வைத்திருக்கிறார்.பல மில்லியன்களுக்குச் சொந்தக் காரனான இந்த மிகேல் மாய்க்கு என்ன நிகழ்ந்தது?

உலகத்தின் அதியுச்சத்தில் கோடிக் கணக்கான சொத்துக்களோடு வாழ்ந்து கீழ் நோக்கிய பார்வை எப்படி வந்தது?

இதுவொரு Absurd !

அனைத்தையும் தலை கீழாக்கிப் பார்க்கும் மன நிலை.அவர் தன்னைப் பிரபலப்படுத்த விரும்பாது இருக்கிறார்.ஆனால்,அவர் பேசப்பட வேண்டியவர்.

நம்மில் எத்தனை மனிதர்கள் இந்த மிகேல் மாய் போன்றிருக்கிறோம்?;ஏன் அப்படி இருக்க வேண்டும்??

மக்களிடம் போருக்குச் சேர்த்த,அபிவிருத்திக்குச் சேர்த்த பணத்தைப் புலிப் பினாமிகள் தமது சொத்தாக்கிவிட்டுச் செல்வந்தாகளாக இருக்கும்போது,இப்படியெல்லாம் அபத்தம் நம் முன் நிழலாட நாமும் அதே அபத்த்தின் இன்னொரு முனையில் நிற்க திருவாளர் மிகேல் மாய்வழி செய்கிறார்.

சிசிப்போவுக்குக் கடவுளது இரகசியமான பரிசு கிடைத்திருக்கலாம்.

அவன் மரணத்தை அரிவாள் சங்கிலித் தொடருக்குமேல் வைத்துவிட்டு மரக்கட்டையை உருட்டினான் என்றால் அவனது உணர்வு எத்தகைய ஒழுங்கைக் கொண்டிருக்கும்?

தனது மனைவியினது அன்பைப் பரிசோதிக்கச் சிசிப்போ கடவுளது அர்த்தமற்ற கட்டளையை ஏற்று, உச்சிக்கும் மடுவுக்குமாகக் குற்றியோடு போராடுவதிலிருந்து இந்த அபத்தவுலகை விளக்க வேறொரு பாணி இருக்குமோ?

அதைத்தான் திரு மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

மலை உச்சியை நோக்கிய வெற்றிகொள் போர் ஒரு மனிதனது இதயத்தை நிறைத்திருக்குமாயின், சிசிப்போவை இந்தவுலகத்தின் மிக மகிழ்வுக்குரியவனாகவும்,மதிப்புக்குரியவனாகவும் அபத்தத்தின் முகத்தில் ஓங்கி உதைத்தவனுமாகவே நான் பார்ப்பேன்! அதையேதாம்,இந்த மிகேல் மாயும் செய்திருக்கிறார்.

தான் இதுவரை சேர்த்த செல்வத்தை மட்டுமல்ல தனது பெற்றோர் வழி முதிசத்தையும் இந்த மனிதர்கொண்டிருந்தார்.

மிகேல் தனது செல்வத்தையும்விடப்பலமானவர்.சிசிப்போ தான் உருட்டும் பாரிய குற்றியையும்விடப் பலமானவனாகவே பார்க்கத் தக்கவன்.அதனாற்றாம் இரண்டு செயலும் மிக வீரியமானவை!

மிகேல்(பெரும்முதலாளி) கூறுகிறார்: „முதலாளியம்மக்களுக்கு உலகச் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்குத் தகுதியற்றது („Der Kapitalismus ist unfähig, die Menschen am Reichtum teilhaben zu lassen.“ ) .

பிற்குறிப்பு : திரு மிகேல் மாய்(Michael May)இதனக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களையும்( 3.059.167.00 € ),கிட்டத்தட்ட முப்பது இலட்சம் யூரோவையும் ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சிக்கு நிதியாக-அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு (மார்க்சியக் கல்வியாளர்களைப் பயிற்றுவிக்கவும்,பெண்களைத் தொடர்ந்து போராட்டக் களத்துக்குத் தயார் படுத்தவும் தனது நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனப் பரந்த மனதுடன்…), வாடகை வீட்டில் மாதம்1365.யூரோ பென்சன்-ஓய்வூதியத்தைக்கொண்டு மிக எளிமையாக வாழ்கிறார்.தன்னைக் குறித்த பிரபல்யப்படுத்தலை விரும்பாமல் இருக்கும் ஒரு சாதரண மனிதரானார்.

மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.06.2011

%d Bloggern gefällt das: