புலத்து இடதுசாரிகள்தாம் புரட்சியாளர்கள்!

ந்தச் சூழலுள்  தமிழ்பேசும் மக்களாகிய நமது  அரசியல் வாழ்வு குறித்து யோசித்தோமானால்,“நாம் எப்படித் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்?இந்த ஏமாற்று வேலையை எமக்குள் இருந்து மிகக் கச்சிதமாக நடாத்தி முடிப்பவர்கள் எவர்கள்?“ என்று கேள்விகள் தொடர்கின்றன!

நாம் எங்ஙனம் ஏமாற்றப்பட்டோம்?

 „தமிழீழ“ விடுதலை,சுதந்திரம்-சுய நிர்ணயமென்றதெல்லாம் எப்படிப் போயுள்ளது?

புலம் பெயர் புலிகளதும்-மாற்றுக் குழுக்களதும் நாணயம் எந்த வகையானது?

இவர்களது அரசியலது தெரிவில் மலிந்துலாவும் நலங்கள் என்ன-தமிழ் „இடதுசாரி“யர்களாகத் தம்மை வலிந்து நிறுவும் குழுவாத மனிதர்கள் எமது மக்களுக்கெதை வழங்க முடியும்?

இவர்கள் ஒருதரையொருவர் கழுத்துவெட்டக் கங்கணம் கட்டிச் செய்யும் சதி வலைகள் எத்தகையவை?

இவைகள் குறித்தான குறைந்தபட்சப் புரிதாலாவது ஒரு பொதுவெண்ணவோட்டமாக உருவாகாதா?

புலத்துப் „புரட்சி-இடதுசாரிய“ மாபியாக்கள்  பாணியிலான சூழ்ச்சி அரசியலைப் பின்னப் பற் பலக் குள்ள நரி „இடது போலிகள்“ஒவ்வொரு திசையிலும் நமது மக்களது நலன்கள் குறித்து வகுப்பெடுக்கின்றன.இத்தகைய மனித விரோதிகளது தெரிவுக்கு „எது-எப்படி“ ப்  பலியாகிறதென்றவுண்மை „மக்கள்“ நலன் எனும் முகமூடியோடு சதா நம்மை எட்டுகின்றன.

பார்க்கும் இடமெங்கும் போலி „இடது சாரிகளது“ கை மேலோங்கியிருக்கிறது. அவர்கள், புலிகளது பினாமிகளாக இருந்த அன்றைய அதே, அரசியலோடின்றும் பொதுத் தளத்தில் மயிர் பிடுங்கும் விவாதமெனத் தள்ளும் எழுத்துக் குப்பைகள் அற்பத் தனமாக மக்களை ஏமாற்றுவதென்பதையெவருமிலகுவில்  அறிய முடியாதபடி தகவமைக்கப்படுகிறது „புரட்சி வேடம்“ தாங்கும் காலம்!.

முன்னிலைச் சோசலிசக்கட்சியினதும் அதன் லொபிக் குழுவான சமவுரிமை இயக்கத்தினதும் பெயரால் தொடர்ந்து, ஏமாற்றப்படும் இளைஞர்களைப் புது வகையாக மொட்டையடிக்குமொரு  ஒடுக்குமுறைச் சூழலைப் புரிந்துகொள்வதென்பது , இதற்கு மாற்றான வழியொன்றைத் தேடுவதென்று நம்பவேண்டாம்.குறைந்த பட்சம் போலிகளது வலையிற் சிக்காதிருக்க விழிப்படைதலென்றே பொருள்!

இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களது உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங்கண்டாக வேண்டும்.

புலம் பெயர் மண்ணிலிருந்தபடி „புரட்சி“ பேசும் இந்தப் போலிகள் தாம் வாழும் நாட்டு இடதுசாரியப் பாரம்பரியத்தோடு துளியளவும் தொடர்பற்ற போலிகள்-பொய்யர்கள்!இவர்களது எஜமானர்கள் நிலத்தில் முன்னெடுக்கும் „பின் ஈழப்போராட்ட ஆயுதக் கலாச்சாரமானது“ மீளவும்,கொலையைக் குறித்தே இயங்குகிறது.இதைச் சாத்தியப்படுத்திவிடப் புலத்திலிருந்தபடியே கை காட்டும் இந்த „;இடதுசாரி-மாற்றுக் கருத்து“ மாபியாக்கள், எப்பயெப்படியோ „எவரையும்“  போட்டுத் தாக்கித் தம்மை நிலைப்படுத்துவதில் பல பக்கப் „புரட்சிகர“  வர்ண ஜாலக் கட்டுரைகளோடு கடந்த 25 ஆண்டுகளாக நம்மையெல்லாம் ஏமாற்றும்போது இவர்களது வரும்படியும்-இந்த எதிர்ப் புரட்சிகரப் பாத்திரமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருக்கிறது.

தாம் வாழும் நாட்டின் எந்தப் போராட்டத்திலும் தம்மை இணைக்காத இந்தக் கூட்டம் தமக்கும் புரட்சிக்கும் வரலாறிருப்பதாக ஏப்பம் விடுகிறது.இதை, நம்பும்படி மக்களை வற்புறுத்துகிறது-மற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்க முனைகிறது.முன்னிலைச் சோசலிசக் கட்சியின் உடைவை மறைத்து மீளவும், மக்களை முட்டாளாக்கித் தமது தொடர் சேவையைச் செவ்வனவே செய்ய மற்றவர்களைக் கொச்சைப்படுத்துகிறது, இந்தப் புலத்து இடதுசாரி மாபியாக் கூட்டம்.

இத்தகைய ஏமாற்று அரசியலுக்குப் புலத்து-நிலத்துத் தமிழ் இளைஞர்கள் எங்ஙனம் பலியாகினார்கள்?

இன்றைய நமது போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புலிகள்தான் காரணம் என்ற ஒற்றைப் பதில் நியாயமாகத் தெரியவில்லை.எனவே,புலிகளை முன்னே தள்ளியபடி அவர்களின் பின்னே, மறைந்திருக்கும் சக்தி எது-ஏன் எம்மைப் புலிகளினூடாகத் தோற்கடித்தார்கள்-கொன்றொழித்தார்கள்?

இந்த அழிப்புக்கும் மேற்காணும் புலம்பெயர் போலி „இடது-வலதுகளுக்கும்“ எத்தகைய தொடர்புகள் இருந்தன-இருக்கின்றன?

இக் கேள்விகளுக்கு நாம் பல்வேறு கட்டுரைகளுடாகப் பதில் கூறியிருக்கின்றோம்,கடந்த இரு பத்தாண்டுகளாக!

ஆனால்,அதைவிட,இன்றைக்கு அனைவரும் சுயமாகப் பதில்களைத் தேடி இந்த மாபியாக்களது எதிர்ப் புரட்சிப்  போராட்டம்குறித்து மீள் மதிப்பீடுகள் செய்வது அவசியம்.

நம்மைப் புலிகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் ஏமாற்றிவிட்டார்கள்.

இவர்களை வைத்து நம்மை வேரோடு மொட்டையடித்த அந்நியச் சக்திகள் இன்று தமது நலன்களை இலங்கையில் எட்ட முனைகின்றன.

அந்த முயற்சிக்குப் பங்கம் ஏற்படாத முறையில் அவர்களது  சேவர்கள்“இடது-புலம்பெயர் புரட்சிகர அணிகள்-மாற்றுக் கருத்தாளர்கள்“எனும் போர்வையில் தமக்குள் முட்டிமோதுகின்றன.

 

இந்தப் போலிகளில் எவரும், மக்களது நலனை முதன்மைப் படுத்தும் எந்தவொரு அமைப்பையும் நிறுவ முடியும்.அதன் வழியாக நமது மக்களது சுயவெழிச்சியை வேட்டையாட முடியும்.இது,மிக ஆபத்தான காலம்.ஒரு முன்னிலைச் சோசலிசக் கட்சி விழுந்தால், இன்னொரு போலி அணியை முன் தள்ளும் அனைத்துப் பலமும் இலங்கை-இந்திய ஆளும் வர்க்கங்களுக்குண்டு.அந்தப் பலத்தோடு புலத்தில் „புரட்சி“ வேடங் கட்டப் பல நூறு இரயாகரன்களும் உண்டு-உண்டு!!!

எல்லாமே, மக்களது நலன்வழியானதென இத்தகைய எச்சில் பேய்கள் கூக் குரலிடுகின்றன.இதுள், முன்னணியில் எவருள்ளார்கள் என்பதிற்கூடப் பல போட்டிகள்.

தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல முழுமொத்த மனித சமுதாயத்துகே எதிரான போக்கில் இந்தக் குழுக்கள் இயங்குகின்றனவென்ற சிறியவுண்மைகூடப் பகிரங்கமாகப் பேசப்படுவதில் பல சிக்கல்கள்!இவர்களால் முன் தள்ளப்படும் சந்திப்புகளும்,வெளியிடப்படும் தொகுப்புகளும்-பகிரங்கவுரையாடல்களும் ஒடுக்குமுறையாளர்களது தயவிலும்-நிகழ்சிக்குட்பட்டுமே இயக்கப்படுகிறதென்றவுண்மையைப் பரவலாகப் பேசப்பட வேண்டும்.

இதன் வழிகொண்டு, “ புரட்சி-விடுதலை “  என்ற மோசடி மாய்மாலங்களை புரிந்தோமானால் வருங்காலத்திலாவது  „குறைந்த பட்சமாவது மனிதர்களாய் வாழ்வதற்குத் தமிழ்பேசும் ஈழ மக்களுக்கு“  இப் புவிப்பரப்பில்  உரித்துண்டாகலாம்!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

05.12.2013

Advertisements

சோபா சக்தி : நாம்"அரசுகளுக்குள்"வாழ்வதைப் பார்க்க மறுத்தல்…

சோபா சக்தி : நாம்“அரசுகளுக்குள்“வாழ்வதைப்  பார்க்க மறுத்தல்…

// பிரசுரத்தின் தலைப்பே சம உரிமை இயக்கத்தின் அரசியல் பண்பைச் சொல்லிவிடக் கூடியதாக அமைந்திருக்கின்றது. ” அனைத்து தேசிய பிரஜைகளும்  சம உரிமையை பெற்றுக் கொள்வதற்கான அத்தியாவசிய நுழைவு” என்பதே அப்பிரசுரத்தின் தலைப்பு. அனைத்து ‘தேசிய இனங்களிற்குமான’ சம உரிமை எனச் சொல்லாமல் அனைத்துத் ‘தேசியப் பிரஜைகளிற்குமான ‘ சம உரிமை எனச் சொல்வது தேசிய இனங்களின் இருப்பையே மறுப்பதாகும். நாட்டின் மொத்த சனத்தொகையில் முக்கால்வாசியாக இருக்கும் சிங்கள தேசிய இனத்தின் இருப்புக்கு முன்னால் பலவீனமாகச் சிதறிக் கிடக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் இருப்பை ‘தேசியப் பிரஜைகள்’ என்ற கருத்தாக்கம் சிதைத்து, பெரும் தேசிய இனத்திற்குள் கரைத்துவிடும் அபாயமிருக்கிறது. இன்னொருவகையில் ஒடுக்கப்படும் இனங்கள் தங்களது இன அடையாளங்களின் அடிப்படையில் அரசியல் சக்திகளாகத் திரளும் உரிமையையும் இது மறுப்பதாகும்.// By Shoba Sakthy

சோபா சக்தியின் இந்தக் கட்டுரை பலதரப்பட்ட நியாய அரசியல் அறத்துக்குட்பட்ட கேள்விகளை இலங்கைச் சிறுபான்மையினங்களது „அரசியல்-உரிமை “ சார்ந்த இருப்பிலிருந்து எழுப்புகிறது.அதையொட்டிய பல தரவுகளுடாக இலங்கை அரசினது இனவாத அரசியல் ஊக்கத்தையும்,இனவொடுக்குமுறையின் முலம் தம்மைக் காத்துவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் வரலாற்றுத் தரவுகளோடு பேசுகிறார் சோபாசக்தி.மிக நேர்த்தியான அரசியல் அறக் கேள்விகளை முன்னிலைச் சோசலிசக் கட்சியின் முன்னும் அதன் சம உரிமை இயக்கத்தின்“இன ஐக்கிய“அஜந்தாவின் முன்னும் வைத்திருக்கிறார்.

இதுவரை,தமிழ்பேசும் மக்களது பலதரப்பட்ட அரசியற்றலைமைப் பீடங்களே பாராமுகமாகவும்,புலத்து இடது சாரிகளெனத் தம்மை அழைத்துக்கொள்ளும் முக்கால்வாசிப் பேர்களும் முன்னிலைச் சோசலிசக் கட்சியை நியாயப்படுத்தி அரசியல் செய்யும்போது சுவிஸ் மனிதம் இரவிக்குப் பின் சோபாசக்தியின் இந்தக் கட்டுரையே முழுமையானவொரு தேர்ந்த கேள்விகளைச் சுயநிர்ணயஞ் சார்ந்து எழுப்புகிறது.இது,அவசியமானவொரு இடைவெளியினை நிரப்பும் அறக் கேள்விகளது அரசியலை முன்னெடுப்பதில் எம்மிடமிருந்தவொரு வெற்றிடவுளவியலை அழித்து, மக்களை அண்மித்து, அவர்களது அரசியலுரிமைசார் மானிடவுரிமைகளைப் பேசுகிறது.

இன்று,முன்னிலைச் சோசலிசக் கட்சியையும்,அதன் வாலாக நீண்டுயரும் சம உரிமை இயக்கத்தையும் சேர்த்து இலங்கையில்“ இன ஐக்கியம்“ உரைக்கும் பலருள், முன்னணியில் இருப்பவர்கள் இரயாகரன் குழுவே.இக் குழுவின் இன்றைய அரசியலோ,இலங்கைச் சிறுபான்மை இனங்களது அடிப்படை உரிமைகளையுறுதிப்படுத்தக் கூடியதும்,பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து தம்மைக் காக்கக்கூடியதுமான நசுக்கப்படும் தேசியவினங்களது ஒரே அரசியல் ஆயுதமான சுயநிர்ணயத்தை இந்த முன்னிலைச் சோசலிக் கட்சியின் நட்புக்குப் பின் மறுத்தொதுக்கின்றது.

இரயாகரன் குழுவின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவரான திரு.தேவகுமார் சுவாமிநாதன் எம்மைப் பார்த்துத் தமது இன்றைய நிலைப்பாட்டைச் சரியென்பதற்காக இப்படியுரைக்கிறார் :

„இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கே சுயநிர்ணயத்தைச் சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அவர்களது எஜமானர்களும் வழங்க மறுக்கும்போது,சிங்கள மக்களே சுய நிர்ணயமின்றி இருக்கின்றனர்.சுயநிர்ணயவுரிமையற்றச் சிங்கள மக்களிடம் போய்த் தமிழர்கள் சுயநிர்ணயவுரிமை குறித்துக் கேட்பதென்பது ஒரு வகையில் இனவாமே.“ என்று தத்துவஞ் சொல்கிறார்.

ஆனால்,சோபாசக்தியின் இந்தக் கட்டுரை மிகவும் நேர்த்தியாகவே இலங்கைச் சிறுபான்மை இனங்களது உரிமைகள் குறித்துப் புரிய முனைகிறது.வரலாற்றியக்கத்தில் இலங்கையின் இடதுசாரிய-வலதுசாரிய அரசியல் கோரிக்கைகள்,நடவடிக்கைகள் சார்ந்து கடந்தகால அரசியலை மிகச் சாதுரியமாக இன்றைய வெகுளித்தனமான முன்னிலைச் சோசலிசக் கட்சிசார் உரையாடலுக்குமுன் பொருத்திச் சிறுபான்மை இனங்களது மெலினப்பட்ட குரலை அரசியல் ரீதியாகப் பலமாக்குகிறார்.இந்தத் தளத்தில் சோபாசக்தியின் இந்தக் கட்டுரைக்கான உழைப்புப் பாராட்டத்தக்கது.

இக்கட்டுரையின் இலங்கைசார் உள்ளக அரசியல் புரிதலில் முரண்பட எதுவுமில்லை!.குறிப்பாகச் சோபாசக்தி வரையறுக்கும் சிறுபான்மை இன மக்களது இருப்புக்கான அரசியல் புள்ளியைச் சுட்டுவதென்பதைச் சொல்கிறேன்.

ஆனால்,சோபா சக்தி, நான் உங்கள்மீதும்,உங்கள் அரசியலோடும் சமீபத்தில் முரண்பட்டவன் என்றபோதும், இந்தவகையான அரசியல் உரையாடலில் நீங்கள் பெரும்பகுதி மக்களது அரசியலது அறத்தைப் பேசுகிறீர்களென்று பகிரங்கமாக இக்கட்டுரையை முன்வைச்துச் சொல்கிறேன்.அத்தோடு,இதைத் தாண்டி இன்னொரு விடையத்தைச் சுட்டிக் காட்டுவது மிக அவசியமானது.

இக்கட்டுரையானது ஒரு வகையில், முழுமையானதல்ல. இக்கட்டுரையூடாக,  இலங்கை அரசு-ஆளும் வர்க்கத்தின் அரசியல் ஊக்கம்-மற்றும் அதன் அரசியல் ஆதிக்கஞ்சார் திசைகளில் நீங்கள் பிரமிப்பான தேடுதலைச் செய்திருப்பதை வரவேற்றுக்கொண்டாலும்,நாம் இன்றையவுலகத்தில் ஒரு அரசு என்ற அமைப்புக்குள் வாழ நிர்பந்திக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இன்றையவுலகப் பொருளாதாரப் பொறியமைவில் நாம் „அரசுகள்“அவை சார்ந்த பொருளாதாரச் சட்டங்களுக்குட்பட்ட பொறியமைவுக்குள்-அரசுகளின் அமைப்பாண்மைக்குள்  இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.

கடந்த கால இரத்தஞ் சிந்திய சிங்கள இனவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்பேசும் மக்களது போராட்டமும்,அதை உருவாக்கியதற்கான இலங்கையின் அரசியலும் அந்நியத் தேசங்களது நலன்களிலிருந்தே முகிழ்த்தன.அவை, தமக்கான நலன்களது தெரிவில் செய்யப்பட்ட அரசியலானது நமது தலை விதியையே மாற்றி முள்ளிவாய்க்கால்வரை ஒரு தேசியவினத்தை வருத்திச் சென்று அழித்திருக்கும்போது, நாம், முன்னிலைச் சோசலிசக் கட்சியின் இன்றைய அமுக்க அரசியலது வினையாற்றல்களைத் தனியே இலங்கை அரசியல் வட்டத்துக்கையும் அதன் அரசியல் ஆதிக்கத்துக்குள்ளான நிலப்பரப்புக்குள்ளும் முடக்கிப் பார்க்க முடியாதென்பதை நீங்கள் வலுவாக அறிந்திருந்தும் இது குறித்தொரு துரும்பைத் தன்னும் இக்கட்டுரைவழி பேச முற்படவில்லை. ஜே.வி.பி.யினால்,மலையக மக்கள் மீது சுமத்தப்பட்ட „இந்திய விஸ்தரிப்பு வாதம்“சார் பார்வையைத் தவிர நீங்கள்,அந்நிய வியூகங்களது இன்றைய அரசியல் அணித் திரட்சிகள் அதன் திறன்சார் அரசியலைப் பேச மறுப்பது எதனால்?

இஃது ,இக்கட்டுரையின்குறையாகவே இருக்கிறது.

இதன் தெரிவில், முழுமையின்றி இருக்கும் இவ் விமர்சன ஊக்கமானது இன்றைய இலங்கைக்குள் முட்டிமோதும் இருவேறு அந்நியத் தேசங்களது முகாங்களின் அரசியல் விஸ்த்தரிப்புப் பொருளாதார இலக்குகளின் நலன்சார் விஸ்த்தரிப்புகளுக்கமைய நகர்த்தப்படும் இலங்கையின் உள்ளக அரசியல் இயக்கப்பாட்டை இவர்களை விட்டுப் புரிந்துகொள்வது முழுமையில்லை என்றே சொல்வேன்.இதைவிட்டு அரசியல் பேசுவது நமது தலைவிதியை மீளவும் அந்நியர்களே தீர்மானிப்பதில் போய் முடியும்.இதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துள் நடாத்தப்பட்ட „மாவீரர்களுக்கான நினைவு விளக்கேற்றும்“ அரசியலது புள்ளியில் வைத்து மீளவும் உறுதிப்படுத்துகிறேன்.அந்தக் கலகத்தைத் தகவமைத்த கம்பி கடல்கடந்து நீண்டுசென்று டெல்லியில் முடிச்சிட்டதையெவர் மறுப்பார்-இராயாகரன் குழுவைத்தவிர?

இன்றையதும்,இனித் தொடரப்போகும் இலங்கையின் அரசியல் முரண்பாடுகள்,அதுசார்ந்த நடாத்தப்படும் கட்சி-இயக்க வலதுசாரி-இடதுசாரி அரசியலானது அந்நியத் தேசங்களது கண்காணிப்புக்குக் கீழேதாம் நடாத்தப்படுவதென்பதை எவருமே மறுக்கப்படாதென்பது எனது கருத்து.

நாம்,இது சார்ந்து உலகை நோக்கும்போது அதன் உண்மையான முகங்களை கிழக்கைரோப்பியச் சோசலிச முகாங்களது வீழ்ச்சியோடு, யுக்கோ ஸ்லோவிய-சேர்பியாவூடாகச் சென்று அரேபியவுலகில் நமது கவனத்தைக் குவிக்கும்போது இலங்கையின் அரசியலிலும்-கட்சிசார் அரசியல் உந்துதலிலும் நிரூபணமாகும் அந்நியச் சக்திகளது நலன்கள் புரிகிறதல்லவா?

சேர்பிய „ஒற்போர்-எதிர்ப்பரசியல்“,அதன் நிறுவனர் சேர்ட்யா பொப்போவிச்சும் [Srđja Popović_Otpor!  ]எத்தனையோ முடிச்சுகளை அவிழ்த்து மேற்குலக ஆதிக்கத்தைத் தனிக் குழுவுக்குள் முடக்கிக் காப்பதில் விடியும் உண்மைகளைத் தரிசிக்கும் ஊடக வலுவில் நாம் இருந்தும், இலங்கையில் விடியும் அரசியலது வினைகளை இலங்கைக்குள் மட்டும் பார்க்கும் அரசியலைப் என்னால் புரிய முடியாதிருக்குச் சோபா சக்தி.

இந்திய-சீன மற்றும் மேற்குலக வியூகங்கள் இந்தச் முன்னிலைச் சோசலிசக் கட்சியின் இன்றைய அதிவேகப்“புரட்சிகர“ப் பாத்திரத்துள் எங்காவது மையங்கொள்ளாது[Srdja Popovic Revolution als Business. http://www.tagesspiegel.de/politik/widerstandsguru-der-serbe-srdja-popovic-betreibt-revolution-als-business/3946482.html  ] விட்டுவிடுமாவென கேள்வி கேட்டுச் சந்தேகிப்பதைவிட அதை அந்நியத் தேசங்களை மதிப்பிடும் சர்வதேச அரசியல் வியூகத்தில் வைத்துப் புரிந்துகொள்வதைத்தாம் வலியுறுத்துகிறேன்.

P/S: சோபா சக்தியின் கட்டுரையில்( காமினி பாஸ் தவறு செய்துவிட்டார்) மீளவும் மேய்ந்து பார்த்தபோது அதுள் கட்சியை மதிப்பிடுவது குறித்துப் பிழையான தெரிவைச் சொல்கிறார்.ஓர் கட்சியின் முற்போக்குப் பாத்திரத்தையும் ,எதிர்கால இயங்கு திசையையும் கட்சியின் வேலைத் திட்டத்தில் வைத்து மதிப்பிடுவதே சரியானதென்கிறார் சோபாசக்தி.

இது முற்றிலும் தவறான கருத்து.ஒரு கட்சியை மதிப்படுவதென்பது அதன் வேலைத் திட்டத்திலென்றால் இன்றைக்குச் சகல கட்சிகளுமே பலதரப்பட்ட திட்டத்தையும் ,வரைவையும் வைத்து மிக வேகமாக மக்களிடஞ் செல்கின்றன.அந்தக் கட்சிகளது வேலைத் திட்டத்தை வைத்து க் கட்சிகளை மதிப்படுவது சமூகவியங்கியலுக்கும்,மார்க்சிய ஆய்வு முறைக்கும் விரோதமானது.

பூர்ச்சுவாக் கட்சிகளாலுஞ்சரி இல்லைப் புரட்சிகரக் கட்சிகளாலுஞ்சரி அவற்றை மதிப்பிடுவதென்பதை அவை பலதரப்பட்ட வர்க்க மக்களது முரண்பாடுகளில் எப்படிச் செயற்படுகின்றனவென்றும் அவற்றைத் தீர்ப்பதில் எத்தகைய அணுகுமுறைகளைக் கடைப் பிடிக்கின்றனவென்பதிலுமிருந்ததாம் கணிப்பிட முடியும்;மதிப்பிட்டுச் சரியான தெரிவுக்கு வரவேண்டும்.

பல்வேறு வர்க்கங்கள் ,வர்க்க அரசியலையே தீர்மானிக்கின்றன.வர்கச் சமுதாயமானது வர்க்க அரசியலைத் தவிர்த்த விமோசனமில்லையென்பதால் நாம் கட்சிகளைக் குறித்து மதிப்பீடு செய்வதென்பது அதன் நடாத்தையிலிருந்தும்;முரண்பாடுகளில் அவை செயற்படும் விதத்திலிருந்தும் மதிப்பீட்டையுருவாக்குவது அவசியம்.வர்க்க நலன்கள் முட்டிமோதும் போது அவற்றில் எத்தைகைய முறையில் இக் கட்சிகள் நடைமுறை சார்ந்தியங்குகின்றனவென்பதைக் கூர்ந்து கவனிப்பதும் அவை முரண்பாட்டின்மீதும்-பிரச்சனைகள் எழுகின்ற நிலையில் தீர்வகளுக்காக ஆற்றும் கட்சியாதிக்கத்தின் செயற்பாட்டிலுமே கட்சிகள் குறித்து கணிப்பீடு-மதிப்பீடுகள் எழவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்.

ஜேர்மனி

09.02.2013

மனோ கணேசன் வரைத் தொடரும் இரயாகரன் குழுவினது சதி!

//இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்க்க, மனோகணேசனிடம் உள்ள அரசியல் வழிமுறை தான் என்ன? மக்களைச் சார்ந்து போராடும் அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கின்றாரா? இல்லை. மாறாக ஊடகத்தைச் சார்ந்து இனவாத அறிக்கைகள் விடுவதும், தர்க்கங்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டி, தேர்தல் மூலம் பிழைப்பு அரசியல் நடத்துவதை குறிக்கோளாக கொண்டவர். இனப்பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றால், ஆளும் மக்கள் விரோத கூட்டத்தைச் சார்ந்து நிற்பதைத் தாண்டி, மக்களை சார்ந்து வழிகாட்ட எதுவும் அற்றவர். இதைவிட இது போன்ற இனவாதிகளிடம் வேறு மாற்றுவழி எதுவும் கிடையாது.//  -பி.இரயாகரன்

ன்னத்தைச் சொல்ல? இரயாகரனுக்குத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது அழிவிலும்,பாசிசத்துக்குள் அவர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதிலும் ஒரு வசதியான வாழ்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்ததைத் தக்க வைத்தாகவேண்டுமானால் தமிழ்பேசும் மகளுக்கெதிராகச் செயற்பட்டாகவேண்டும்.இதைத்தாம் இரயாகரனது எஜமானர்கள் விரும்புகிறார்கள்.“இதைத் தொடர்ந்து மிக நுணுக்கமாகச் செய்யும் இரயாகரன், பலதரப்பட்ட அரசியல் முறைமைகளில் தன்னைப் புரட்சியாளனாகவும்,மார்க்சியவாதியாகவும் காட்டிக்கொள்வதற்குப் படாதபாடு பட்டுக்கொண்டு மக்கள் விரோத அரசியலைத் தொடருகிறார்“ என்று, அடித்துக் கூறுவதற்கு மனோ கணேசன் மீதான அவரது காட்டிக்கொடுப்பு-குலைப்பு அரசியல் சாட்சியாகிறது. இத்தகைய, மக்கள் விரோத அரசியலை இவர் கைவிடாதவாறு இவரை வழி நடாத்தும் அந்நிய முகவர்கள் மிக நுணுக்கமாகவே புரட்டுப் புரட்சியை இரயா மூலம் அவிழ்த்து விடுகின்றனர்.இப்போது,இலங்கையில் தோன்றியவொரு „அடுத்த பெயர்ப் பலகை“, முன்னிலை சோசலிசக் கட்சியென்ற லொபிக்குழுவை ஆதரித்துக்கொண்டு புதிய முகமூடி தரிக்கும் இராயாவை வினவுதளம் சரியாகவே எடைபோட்டுக்கொண்டதும் வரலாறு.

இதையவர், தொடராத பாதைகளின் வழியெல்லாம் வலிந்து உட்புகுந்துகொள்வதற்கேற்ப எவரையெல்லாம் சிதைக்கவேண்டுமோ சிதைத்துப் புரட்டுசீ பண்ணுவது தொடர்கதையாகிறது.

தமிழ்பேசும் மக்களை ஒடுக்குபவர்களுக்கு ஒட்டுரஞ்சிக்கொண்டு „புரட்சி“ பேசிய இந்த அரசியலானது 1986 இல் ஆரம்பமானது. புலிகளால் கைது பண்ணிக் காவலில் இருந்து தப்பியதென்ற ரீல் படச் சுருளோடு இந்த மனிதன் வெகுவேகமாகவே தமிழ்பேசும் மக்களது எதிர்கால விடுதலைக்கெதிரானவொரு பாத்திரத்தைத் தேர்ந்துகொள்கிறார்.அதைத் தொடருவதற்கேற்ப அவரிடம் ஒதுங்கிய பல கோடி இரூபாய் சொத்தானது, யாழ்ப்பாண மக்களது சிறுகச் சேர்த்த செல்வத்தைக் கற்றன் நசனல் வங்கிக் கொள்ளையாகக் கொண்ட „இவரது“ இயக்கச் ஸ்ரான்ட்!

கட்ட நசனல் வங்கிக் கொள்ளையின் வழி யாழ்ப்பாண அப்பாவி மக்களது இந்தப்பணத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தந்திரத்தின் வழியாகவொரு காட்டிக்கொடுப்பு அரசியல் புலிகளது பேரத்துள் உருப்பெற்றது.இதன் தொடர் நிகழ்வானது அனைத்தையும் குலைத்தல்,முடியாதபோது உள்வாங்கிச் சிதைத்தலெனும் மரபுக்குட்பட்டது.புலம் பெயர் வாழ்வில் நாம் இவரது அரசியலை வைத்துரைக்கும்போது அதன் இருண்ட பக்கங்களை நாம் பலமாகக் கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளோம்.

இரயாகரனுக்கு நிகராகத் தமிழ்ச் சமூகத்தில் மிகுதியாகப் „புரட்சி“ பேசிய பல சுத்துமாத்துப் பேர்வழிகள் இரயாவைக் குறித்து மௌனித்திருப்பது தமது சொந்த நரகல் வாழ்வினது அச்சமாகவே!

இன்று,மாற்றுக் கருத்து,மண்ணாங்கட்டியெனவும்,புரட்சியெனவும் பசப்பும் இந்தக் கூட்டமானது புலம்பெயர் வாழ்வில் சீரழிந்து சின்னா பின்பட்டு நிற்கும் அரசியலுக்குப் பாத்திரமானது.இந்தப் பிசாசுகள் செய்யும் மக்கள் விரோத அரசியலின் அதியுச்ச வடிவமானது இரயாகரனது „புரட்சி“ வேசத்துக்குள் மையங்கொள்வதென்பது பலமிழந்து ஒடுங்கிக்கிடக்கும் தமிழினத்துக்கான குரலாகத் தென் இலங்கையில் ஒலிக்கும் ஒரே குரலான மனோ கணேசனைப் பதம்பார்ப்பதிலிருந்து மிக யதார்த்தமாகப் புரியத் தக்கதாகும்.

கடந்த 25 ஆண்டுகளாக இரயாகரனெனும் குறியீட்டுப் பெயருக்குள் ஒளிந்திருக்கும் பெருஞ் சதிகாரக் கூட்டமானது ஒரு தனிநபரை முன்தள்ளிக்கொண்டு தமது ஒற்றன்-குழுச் சதியை மறைத்து வருகிறது.தனிநபர்களது அரசியற் தன்னார்வத்துள் முடுக்கிவிடப்படுவதுமாதிரியானச் சதி அரசியலானது உலக ஒடுக்குமுறை ஜந்திரங்களது ஒரு உறுப்பாகவே இருக்கிறது.இது பேசும் புரட்சியானது வெறும் புரட்டு.“தமிழீழ“ ப் போராட்ட வரலாற்றுள் ஒடுக்குமுறையாளர்களால் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒற்றர்களது நயவஞ்சக வலையே இந்த இரயாகரன் எனுங் குறியீடாகும்!இஃது,தன்னால் தூற்றப்பட்டவர்களையே பின் தூசு தட்டிப் புரட்சியாளர் „தோழர்“ என்று கயிறு திரிக்கும்.சமீத்து உதாரணம்: „பேராசிரியர்“ சி.சிவசேகரம் என்று நான் குறிபிடத் தேவையிருக்காதென்று எண்ணுகிறேன்.

கிழக்கைப் பிரிக்கக் கருத்தியல் வலுக்கொடுத்த ஞானத்தையோ அல்லது, தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சாதி வெறியர்களாக் காட்டித் தமிழ்பேசும் மக்களுக்குள் நிலவிய-நிலவும் சாதி முரண்பாட்டைக் கூர்மைப்படுத்திய தேவதாசன்,சோபாசக்தி போன்றவர்களையோ இதற்கும் மேலாக இரயாகரனையோ அம்பலப்படுத்தி, மக்கள் நலன்சார்ந்த அரசியலைச் செய்யும் தகுதி எந்த “ மாற்றுக் கருத்தாளருக்கும்“ இல்லாதிருப்பது தற்செயல் நிகழ்வல்ல!

புலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களாகவிருந்தாலுஞ்சரி அல்லது தேசிய விடுதலைப் போராட்டஞ் செய்த புலிப் பாசிசமானாலுஞ்சரி மக்களுக்கு விரோதமாகவே தமது அரசியலை வகுத்துக்கொண்ட புள்ளில் ஒன்றுபடும்போது எவரை,எவர் அம்பலப்படுத்த? இதுதாம்,இன்றைய அனைத்து மோசமான சூழலுக்கும் காரணமானது.

நமது மக்கள் இலட்சக்கணக்காக இவர்களாலும்,சிங்கள இனவாத அரசாலும் அழிந்து நாசமான பின்பும் இவர்கள் செய்யும் குழுவாத அரசியலும் அதுசார்ந்த கயமைக் காட்டிக்கொடுப்பும்,குழப்புதல்-குலைத்தல் எனும்அந்நியச் சக்திகளது நரித்திட்டமாகும்.இது, நமது மக்களைத் தொடர்ந்து அநாதைகளாக்குவதாகும்.இவர்கள்,எங்கு திரும்பினாலும் „புரட்சி,புரட்சி,புதிய ஜனநாயகயகம் “ என்பதெல்லாம் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் அந்நியச் சக்திகளது லொபி அரசியல் நிகழ்ச்சிக்குட்பட்டதென்று நாம் கணித்தாகவேண்டும். எனவேதாம், தமிழகத்து மக்கள் கலை இலக்கியக் கழகமானது இவர்களது உறவைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி, இவர்களைத் தள்ளி வைத்திருக்கிறது.ஆனால்,புலம் பெயர் தளத்தில் அத்தகைய அரசியலைச் செய்யுந்தறுவாயில் எவரும் இல்லாதிருப்பதென்பது எல்லோருமே, மோசமான இயக்க வாதத்துக்குட்பட்ட மாபியாத் தனமான அரசியலுக்கும், அந்நிய ஆர்வங்களது அரசியல் நிகழ்ச்சிக்கும் உட்பட்டுக் கிடப்பதனாலாகும்.இவர்களே,தொடர்ந்து மாறி மாறிப் புரட்சி புடலங்காயென வகுப்பெடுத்து, நிலத்து மக்களைத் தொடர்ந்து இலங்கையரசின் இராணுவக் காட்டாட்சிக்குள் இருத்தி வைக்க முனைகின்றனர்.

இந்தப் புள்ளியை உடைக்கும் அரசியலை மனோ கணேசன் மிக நிதானமாக நகர்த்துகிறார் என்றே இன்றைய சூழலுள் நம்பியாக வேண்டியிருக்கிறது.வெளிப்படையானவொரு அரசியலை அவர் மட்டுமே வெளிப்படுத்துகிறார்.நேரடியான எதிர்புக் குரலை இராணுவ ஒடுக்குமுறைக்குட்பட்ட மக்களது அடிப்படையுரிமையின்வழி தொடரும்போது எங்கே இனவாதம் வருகிறது?

அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களது குடிசார் அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் பரந்துபட்ட மக்களை அண்மித்துக்கொள்வதென்பது இவர்களது நரித்தனமான திடீர் புரட்சிகர வர்க்கஞ்சார்ந்ததல்ல!அந்நியச் சக்திகளாலும்,சிங்கள இனவாத அரசாலும் பாதிப்படைந்த பலதரப்பட்ட வர்க்கத்தின் நலன்களும் இதுள் கலந்தே இருக்கும்.இத்தயைவொரு சூழலானது யுத்தத்துக்குப் பின் பல தேசத்துள் நாம் பார்த்ததுதாம்.இரயாகரன் போன்றவர்களது எஜமானர்கள் இப்போது அச்சமடைகின்றனர்.இந்த மனோ கணேசனது அரசியலானது பிளவுபட்ட உலக மூலதனத்துள் எந்தப் பக்கஞ் சாயுமென்பதிலுள்ள நெருக்கடியே இப்படிப் „புரட்டுசீ“ பேசி அவரை விமர்சிக்கிறது.

மனோ கணேசனுக்குப் புரட்சிகர முகம் அவசியமில்லை. சமவுடைக் கோட்பாட்டுத் தத்துவமும் தேவையில்லை!அதற்கவர் உட்பட்டாகவேண்டுமென விரும்புபவர் மனோ கணேசனது வர்க்கவுணர்வையும் ,அவரது அரசியல் வருகையையும் புரியாதவராகவே இருப்பர்.

என்றபோதும்,ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது குறைந்த பட்சக் குரலாகவிருக்கும் மனோ கணேசனது அரசியற் பாத்திரமானது இன்றைய சூழலில் அதி முக்கியமானதென்பது பாதிக்கப்பட்ட-பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது தெரிவாகும்.இந்தப் பாத்திரம் அதே மக்களுக்கெதிராகவும் மாறிக்கொள்ளும் அல்லது மக்களைச்சார்ந்து முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்கட்காக நகர்ந்து கொள்ளும்.இதைத் தீர்மானிப்பது மக்களது குடிசார் அமைப்பாண்மைக்குட்பட்ட பொருண்மிய வாழ்வாகும்-அதன் நிலையாகும்!பஞ்சப் பரதேசிகளான தமிழ்பேசும் மக்கள் தமது வலயத்துள் அனைத்து வாழ்வாதாரத்தையுமிழந்து, தொடர்ந்திருக்கும் பல்லாயிரம் இராணுவத்துக்கேற்ப உற்பத்தியைச் செய்து, அதை இராணுவத்துக்கே தாரவார்க்கும் „உறுப்புகளாக“ வைத்திருக்கும் இலங்கையின் அரச ஆதிக்கத்துள் மக்களது வாழ்நிலை „இராணுவப் பொருளாதாரவுற்பத்திச் சக்திகள்-உறவுகளெனும் நிலைக்குள்“ முதலாளிய வர்க்க விளக்கம்-உணர்வு-உறவுகள் குறித்த உரையாடல்கள் புரட்டுத் தவிர வேறென்ன? இது, கடைந்தெடுத்த கயமைத்தனம்.

புலிகளது அழிவுவாத அரசியலது தெரிவில் இலங்கையரசானது பல மடங்கு அராஜகவாதக் கட்சியாதிக்கத்தை இலங்கைக்குள் சாத்தியமாக்கியது.புலி வழியான போராட்டமானது இலங்கைக் கட்சி, அரசியல் வரலாற்றில் அனைத்துப் பூர்ச்சுவாக் கட்சிகளையும் பெரும் நிதி மூலதனதைக்கொண்ட கட்சிகளாக்கி விட்டது.ஆயுதக் கொள்வனவிலிருந்து போராட்ட-எதிர்ப்போராட்ட அரசியல்வரைப் பல பில்லியன் இரூபாய்கள் வருமானமிக்க அரசியலாக இலங்கை அரசியல்நிலவரம் மாற்றப்பட்டபின் அனைத்துக் கட்சிகளும்,அமைப்புகளும், பிளவுபட்ட உலக நிதி மூலதனத்தோடான தமது சமரசத்துக்குட்பட்ட அரசியலது தெரிவில் தொடர்ந்து மக்களை ஒட்ட மொட்டையடிக்கும்போது மனோ கணேசனது பாத்திரம் எங்ஙனம் அமைய வேண்டுமெனப் புலம் பெயர் மண்ணிலிருந்து புரட்சி, நிதிவைத்துப் பிரசுரங்கள்,கட்சி நிதிகளெனச் செய்துவரும் ஒரு மாபியாக் கூட்டமானது வகுப்பெடுப்பது எவ்வளவு மோசடியானது?

இலங்கைப் பாசிச இராணுவத்தால் சூழப்பட்ட இலங்கை மக்களது குறைந்த பட்ச ஜனநாயத்துக்கான குரலாகவும்,அவர்களது நலன்களையுயர்த்திப்பிடிப்பதற்கான தெரிவில் அன்றாட நெருக்குதலைத் தடுத்து, உலகுக்கு அம்பலப்படுத்தும் சிறு பொறியாவிருக்கும் மனோ கணேசனைப் பிழைப்புவாதியெனப் பாயும் இரயாகரனை என்னவென்பது?

 இப்படி எத்தனை மனிதர்களைக் குலைத்துச் சிதைத்துத் தமது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்களது எதிர்காலத்தையே நாசமாக்கினர்?, இந்தக் கூட்டம் புலியினது சதி அரசியலுக்கு மகுடஞ் சூட்டவில்லையா?,முள்ளி வாய்க்காலில் புலி – அரச போர் ஜந்திரங்கள் மக்களை வேட்டையாடியபோது அதைத் தியாகமெனப் பறைகொட்டிய பிழைப்புவாதிக்கு நிகராக இன்னொருவர் உண்டா?

முட்டாள்த்தனமாக மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு,இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதாரப் பொறிமுறைகளையும் அதன் உட்பிரிவுகளுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும் புரியாதவொரு பின் தங்கிய புரட்டல்வாதிக்குத் தனது எஜமானர்களது கட்டளைக்கேற்ப இயங்குவது அவசியமாகிறது. மக்களுக்கான குரலை-மக்களது இயலாமைச் சூழலின் முன் நகர்த்தும் நிலத்து அரசியற் சிறு பொறிகளையும் சீரழித்துச் சிதறிடிப்பது அவசியமாகவிருக்கிறது.இந்த இரயாகரனது பினாமித்தனமான செயற்பாடானது மக்களைத் தொடர்ந்து அடிப்மைப்படுத்தும் அந்நிய வியூகங்களால் வழி நடாத்தப்படுவதென்பதை நாம் எப்போது புரியப்போகிறோம்.

இன்னும்,எத்தனை விதமான வேட்டைகள் மூலம் நமது மக்களது குறைந்த பட்ச அரசியற் குரல்களை இந்த இரயாகரன் வேட்டையாடப் போகின்றார்?

புலிவழி நிர்க்கதியாக்கப்பட்ட நிலத்து மக்களும்,புலத்து மாற்றுக் கருத்தாளர்களென்ற இயக்கவாத மாபியாக்களால் பழிவாங்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட புலத்து அகதித் தமிழர்களும் திடீர் புரட்சிக்குத் தயாராகி, மகிந்தாவைச் சாய்க்க வேண்டுமோ?புலத்தில்,அனைத்தையும் குழப்பி, அதி வேகத்தில் குழுவாதப் பெயர்ப் பலகைக் கட்சிகட்டிய( புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ) தேவையே அந்நிய எஜமானர்கள் தம்மைத் தொடர்ந்து ஏஜென்டுகளாகக் கருதிக்கொள்வதற்கும், எதிர் புரட்சிக் கோட்டாவைத் தம்மிடமே தந்து நம்பியிருக்கவுமென்பது நாம் அறியாததா?

30 ஆண்டுகால நரவேட்டைக்குட்பட்டவொரு இனமான தமிழ்பேசும் மக்கள் தம்மை நிலைப்படுத்திக் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களையே தரிசிக்கவிடாது புரட்சி, யுத்தம் எனப் படம் காட்டி இலங்கைப் பாசிச இராணுவத்தின் இருப்புக்காகக் காரியமாற்றும் இந்தக் கபோதிகள் மனோ கணேசனைக் குறித்துப் பேசும் அரசியல் தார்மீகந்தாமென்ன?

இரயாகரனால் பிழைப்புவாதிகளெனச் சொல்லப்பட்டவர்கள் பலர். குறிப்பாகப் பேராசிரியர் சிவசேகரம் இப்போது, இரயாகரனது நிதி வழங்கலுக்குட்பட்டவொரு தோழராகியுள்ளார்.அவரோ இரயாவின் எஜமானர்களுக்கு “ இரயாகரன் தொடர்ந்து செய்யும் சதி அரசியாலானது பலரை உட்கொண்டு சிதைக்கும் தொழிலை (இரயாகரன் குழுவினது எதிர்ப் புரட்சி ) மிகச் சாதுரியமாக நடாத்துகிறார்“ என்று, அந்த எஜமானர்கள் நம்புவதற்கானவொரு குறியீடாகிப்போனார். இதன்வழி, இரயாகரன் குழுவினது எஜமானர்கள் தொடர்ந்து தமது சதி அரசியலைச் செய்ய இராயாவுக்குத் தொடர்ந்து பட்டயமெழுதிக்கொடுத்திருப்பதற்கு மேலாக இவர்களென்ன புரட்சியா செய்யப் போகின்றனர்?அதே குலைப்புச் சிதைப்பு-மக்கள் விரோதச் சதி அரசியல்!,பாதி வழிவரை கூட்டிச் சென்று கொலை செய்யும் இந்தக் கூட்டமா புரட்சிக்குரிய புற நிலவரத்தைப் புரிந்து நடக்கும்?

„மக்கள் விரோதிகளைத் தொடர்ந்தும் மௌனிப்பதால் நாம் வளர்த்து வடிவமெடுக்க விடுகிறோமென்பதைப் புரியும்போது அனைத்தும் ஓர் நாள் அம்பலத்துக்கு வரும்.அப்போது,வரலாற்றில் இத்தகைய சதியாளர்கள்,மக்களைக் காட்டிக்கொடுப்போர் இருந்த இடமே தெரியாது மறைந்து போவார் “ களெனச் சொல்லும் காலமும் தொலைந்தே போச்சு-இதுதாம் இன்றைய அவலம்!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

05.12.2012

புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்- மறுவாசிப்பு!

புலம் பெயர் தமிழரது „புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்“- மறுவாசிப்பு!

 

ன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.
1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.
பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான சிங்களவரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.
புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக்காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.
அவர்களுடன், உடன்பாடுகொண்டு“இந்த இலக்கியச் சந்திப்பும்“ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.
ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.இதுள்,எனது ஊரவளான விக்கினா பாக்கியநாதன்கூட முக்கியமாகச் செயற்பட்டவளே.
இப்போது தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்கின்றனர்.இதுள்,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின்,தேவதாசன்,சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க புலம்பெயர் தமிழர்கள்.
இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன்நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் „புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி“ என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப்,பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது.அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் சுடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சக் கூலிக்கு?).
அவ்வண்ணம், தம்மைத்தாமே புத்திசீவிகளாக வர்ணிக்கும் சுசீந்திரன்,மு.நித்தியாநந்தன் போன்றவர்களும் ஊரெல்லாம்-உலகெல்லாம் பறந்து நிகழ்வுகளில் உரை செய்கின்றனர்.இந்த அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.
சீசீந்திரனுக்கு,அவரைத் தத்தெடுத்த ஜேர்மனிய முது தம்பதினரால் வீடுவளவு இனமாக வந்தது.அந்தத் தம்பதியினர் தமது சொந்த உறுவுகளுக்கே-குழந்தைகளுக்கே அந்த முதிசத்தைக் கொடுக்காது இவருக்கு வழங்கிச் செத்தனர்.அதன் பெறுமதி அண்ணளவாக அரை மில்லியன் யூரோக்களைக் கொண்டது.இந்தச் சுசீந்தரனுக்குச் சொந்து வந்திருப்பினும் அதைப் பராமரிக்கும் செலவெனப் பல நூறு யூரோக்கள் மேலதிகமாகவும்,குடும்பச் செலவெனவும் மாதம் 2000€  யூரோத் தேவையாகவே இருக்கிறது.எந்த வேலை வெட்டியுமற்ற இந்த வெட்டிப் பயல், இந்தப் பணத்தை எவர் மூலம் பெறுகிறார்.?-எனக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.மொழி பெயர்ப்பாளரென்பது வெறும் குசும்பு!இப்போது எவருக்கும்,எவரும்“முழி“ பெயர்க்கலாமே தவிர மொழி பெயர்க்கத் தேவையில்லை!
அண்ணன் நித்தியாநந்தன் தன்னைப் பேராசிரியர்,டாக்டர் என்றழைக்கும்போது உச்சி மகிழ நிகழ்வுகளில் உட்கார்ந்திருக்கிறார்.ஒரு சாதரண விரிவுரையாளன்,எங்கும் டாக்டர் பட்ட ஆய்வைச் செய்து உச்ச தொழிலில் ஈடுபடாத இவருக்குக் கனடாவரை சென்று உரை நிகழ்த்த  எப்படிப் பணம் புரளுகிறது?எங்கே-எந்த நிறுவனத்தில் வேலை புரிகிறார்.மாதக் கணக்கில் இந்தியாவில் தவங் கிடந்து மீண்ட இந்த மனிதருக்கும் வசதிகள் பெருகுகிறது?-எப்படி?
ஞானத்தையும்,சுகனையும்,தேவதாசனையும்,சோபாசக்தியையும் விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!
ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்“படைப்பாளிகள்“சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?
இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது“மக்கள்“நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன?
தொடர்ந்தும்,எமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
ஒரு புறம் புலி மாபியாக்கள்“தேசியம்-தேசியம்“என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி என்ற புலிவால் அம்பலப்படுத்தியதுபோல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று  எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?
நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.12.2012

>வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான…

>போராட்டமென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.

(வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான ஆதரவு-எதிர்க்கருத்தாடல்கள் தொடக்கிவரும் கதையாடல்கள் குறித்து விளங்க முற்படுதல்)

ர்க்கப் போராட்டமென்பதும், ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழு நாளையுஞ் செலவு செய்தே வருகிறது.

லீனா மணிமேகலையது படைப்புச்சார்ந்து வினவுத் தளத்தில் எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில்புரட்சிகர-எதிர் நடவடிக்கையென சுற்றமுனையுந் தருணங்களில் அனைத்தையும் குத்தகையெடுப்பதன் தொடர் நிகழ்வாக மாறும் மனித சுதந்தர மறுப்பில்,அவற்றை நோக்கிச் செல்வது சாத்தியமே.ஏனெனில்,போராட்டமென்பது தற்செயல் நிகழ்வல்ல.அது,பல் முனைகளில் தினமும் இயங்குவது.

இன்று பேசத்தக்க பிரச்சனைகள் இரண்டு.அவை, நவ காலனித்துவத்துக்குப்பின்பான தமிழ்ச் சமூச நகர்வுக்குள் நிகழ்பவை.

ஒன்று,தமிழ்ச்சமூகத்தில் காலகாலமாக நிறுவனப்பட்ட பெண்சார்ந்த மதிப்பீடு-முரண்பாடு,மற்றது, பல்தேசியக் கம்பனிகளது தெரிவில் புதிய மூலதன இயக்கத்தில்சிதைந்த தமிழ்பேசும் மக்களது சமூகவாழ்வு.இதுள், இப்போது நான் முனைவது பெண்சார் மதிப்பீடு அல்லது, முன் தீர்ப்புக் குறித்த விவாதப்போக்கு என்பதன் நகர்வில் என்வரையான புரிதல் அல்லது உரையாடலென…

உடமை வர்க்கம் தனது அதிகாரத்தின்வழியே சிந்திக்க முனையும் சிக்கலில், தமது இருத்தலைக் குறிவைத்துச் சிந்திப்பது.இதனிடம் எந்தத் திருத்தமும் நடைபெறுவதற்கான சூழலை அவர்களது வாழ்நிலை(சமீபத்தில் ஜேர்மனிய ஜனாதிபதி கோஸ்ற் கோலர் மக்களிடம் உண்மையொன்றைப் போட்டுடைத்தார்.அவ்கானில் ஜேர்மனியத் துருப்புக்கள் வர்த்தகக் காரணங்களுக்காவும் களத்தில் நிற்பதாகவும்,பொருளாதார ஆர்வங்களது நலனும் சம்பந்தப்பட்டதெனச் சொன்ன மறுநிமிடம் அவர் பதவி விலக வேண்டி வந்ததை ஞாபகப்படுத்தும்போது இந்த அதிகாரங்களது வர்க்கச் சார்பு எதுவரையென்பது புரியும்) வழங்காது.சமூக வாழ்நிலையே மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.என்பதன் நியாயக் கூற்றின்வழி எவன்(ள்) சிந்திக்கிறான்(ள்) என்பதைவிட,ஒவ்வொருவரும் பூச்சுற்றும், „விடுதலை,சுயநிர்ணயவுரிமை,புரட்சி“என்பது குறித்துச் சாமானிய மக்கள் இனிப் புரிந்தாகவேண்டும்!நாம் வர்க்க சமுதாயத்தில் வர்க்க அதிகாரங்களுக்குள் வாழ்கிறோம்.இங்கே,மனிதர்களது தேவைகள் உடமை சார்ந்தும் அதிகாரங்களைக் கடைப் பிடிக்கிறது.இது, பொதுவான மனிதர்களுக்கானவொரு அதிகாரத்தை மானுட நோக்குக்காகக் கடைப்பிடிப்பதில்லையென்பது உண்மையானது. இது பொருட்காப்பு-அதிகரிப்பு,சந்தையாக்கல்-மறுவுற்பத்தி எனத் தனது அதிகாரத்தைக் கட்டியுள்ளது.

இந் நிலையில்,பெண்ணடிமைப் போராட்டம் எப்போதும் பொருளாதாரத்தோடு பின்னப்பட்டுள்ளது.பெண்களின் அன்றாட வாழ்வுக்கான அடிப்படை உழைப்பை நிலைப்படுத்தும்போது „இத்தகைய பெண்மதிப்பீடு உடைவதற்கான வாய்யுண்டு என்பவர்கள்“ கயவர்கள். பண்பாட்டுமாற்றத்தைக்கொண்டியங்கும் பொருளாதாரவுறவுகள் மெத்தனமாக மொழித்தார்ப்பார் குறித்து மௌனிக்கிறது.இது பற்பல தளங்களில் நிறுவனப்பட்ட தொடர்ச்சியை வற்புறுத்துகிறது.அதை உடைப்பதற்கு லீனா மணிமேகலையது கவிதையுலகு தமிழ்ச் சமூகத்தில் சில வினைகளையாற்றுவதை மறுப்பதென்பது சரியானவொரு பார்வையாகாது.

சமுதாயத்தை மாற்றத்துடிக்கும் முயற்சியிலுள்ளவர்கள் வானத்திலிருந்து நேரடியாகப் புவியுள் குதிக்கவில்லையென்பது உண்மைதானே?இதை லீனாவினது திசையில் பொருத்துவதில் என்ன தவறுள்ளது?

கயவர்கள் இந்தவுலகத்துள் மதவாதிகளாகவும்,போலிப் புரட்டற் „புரட்சி“ பேசுபவர்களாகவும்,தேசியவெறியர்களாகவும்,இனவாதிகளாகவும்,அப்பட்டமான கொடிய சுரண்டற்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆக,இந்தச் சமுதாயத்தில் நிலவும் அனைத்துப் பரிணாமமும் எல்லோரிடத்திலும் உள.

இஃது,வெவ்வேவாறான சூழ்நிலைகளுக்கிணங்க உணர்வினது உந்ததுதலால் உருவங்கொண்டு வெளிப்படும்.அஃதே,ஒருவரை அளக்கும் அளவுகோலாக இருக்கமுடியாது.ஏனெனில், நாம் இயக்கத்திலிருக்கிறோம்(இஃது அமைப்பைச் சொல்லவில்லை. மாறாக, காரண காரிய-இயக்க விதிக்கமைய என்பதாக விரிவுறும்).எனவே,நம்மிடம் இருக்கும் அனைத்தும் யதார்த்தமாகச் சமூகத்துள் இருப்பவை-நிலவுவை.இதிலிருந்து மீண்டு,நாம் காணும் („கற்பனையுள் வடிக்கப்பட்ட மனிதர்“)அந்தத் மனித நிலை உருவாகுவதற்கு நீண்ட காலம் நமக்குள் போராட்டம் நிகழுகிறது.

இதற்குள் நமது ஆயுள் முடியலாம்.

We learn to accept ourselves,when we are accepted by others the way we are.

இதற்கு மேல் நீங்களோ நானே எவ்வளவு முனைந்தும் எமது நிலையைத் தாண்டிவிடத் தருணங்களில்லை.

நாம் வாழும் நிலை அத்தகையது.

எம்மினத்துள் ஊடுருவியுள்ள கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாகப் பெண்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.இது,புரட்சியைச் சொல்லிப் பெண்ணினது சுதந்திரத்தைக் குறிவைக்கிறது.தாம் காணும் „மாதிரிப் பெண்ணை“உருவாக்குவதற்கு முனைகிறது.பெண்சார் சிந்தனையைத் தமது நோக்கிற்கிணங்கப் புரிய முனைகிறது. தேர்வே இல்லாது, ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள „மேற்கோள்கள்“அவர்களுக்கேற்பட்ட அநுபவம்“விடுதலை“என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,புரட்சியாக இருந்தாலென்ன அல்லது,எதிர்ப் „புரட்சியாக“இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு பெண்விடுதலை நிமித்தம் பேசிக் கொள்ளலாந்தாம்.இதன் அபத்தமான புரிதல் வினவுத் தளத்தில் அதிகமான வாசகர்களது கருத்திலிருந்து புரிந்துணரத்தக்கதாகவேயிருக்கிறது. பற்பல ஆணாதிக்க உடலானது தத்தமது குடும்ப“ப் பெண்ணினது தோளில் அமாந்தபடி கொண்டையில் பூவைப்பதில் புரட்சிகர நியாயங்களை அடுக்குவது சரியாகாது.

இன்று, லீனாக் குறித்தான புரிதலானது நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்க வாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான உளவியலாகும்.இதை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இஃது,பேசுவது புரட்சியும் இல்லை-பெண்விடுதலையுமில்லை.இத்தகை விவாதங்களின் பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்துடனும்,புரட்சிகரமான நகர்வுக்கும் எதிரான இயங்குதிசையில் தகவமைக்கப்பட்டு உருவாகிறது.ஒடுக்குமுறைகள் நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் பெண்நிலைசார் கருத்துக்களது தெரிவில் லீனாவினது கவிதைகளுக்கான சில குறியீடுகள் உண்டாகிறது.அதை மறுப்பதில் எந்தப் புரட்சி பெண் நிலையில் மாற்றத்தைப் பண்ணிவிடும்?

இத்தகைய களவாணிப்பேர்வழிகளைப் புரிவதான தருணத்தைச் சொல்வதாகவிருந்தால்“ சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப் பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு வாழ்பவர்கள் தமக்கேயுரிய இறுமாப்போடு உலகைத் தமக்குள் தகவமைக்கின்றனர்“எனப்பகர முடியும்.“இத்தகையது“என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய „அறிதலில்“தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் மட்டுப்படுத்தப்பட்ட பெண்நிலைசார் புரிதலென்பது சம்பந்தப்பட்டவர்தம் புரிதலேயொழிய அஃது, சமூகத்தில் இயங்கும் பெண்நிலை குறித்தான பெண்களது எதிர் செயற்பாட்டினது(லீனாவினது கவிதைகள்வகைப்பட்ட சொல்லாடல்கள்) குற்றமில்லை.

இதற்கேற்ற சுதந்திரத்தை இவ்வமைப்பு வழங்கும்போது இதன் சமூக யதார்த்தம் தனிநபர்வாதமாக மாற்றப்படுகிறது.அதன் உச்சம்தாம் தற்போதைய லீனாமணிமேகலைப் பிரச்சனையிலும் மையங்கொள்கிறது!

இஃது, தனது ஆயுதமாக வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு புரட்சி-பெண்விடுதலை வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்-போலிப் புரட்சிபேசும்!

எனவே, நாம் மிகவுமொரு கொடிய ஆதிக்கக் கருத்துக்குள் முடங்கியுள்ளோம்.நமது சிந்தனா முறை மிக மிகத் தனிநபர் வாதக் கண்ணோட்டமாக விருத்தியுறுகிறது.இதிலிருந்து எந்தச் செம்மையான செல்நெறியும் வெற்றி கொள்ள முடியாதுள்ளது!

இதுவொரு இருண்ட காலத்தை நமக்கு வழங்கிவிடுகிறது.

இந்த கருத்தியற் போரானது பல தளங்களிலும் முன்னெடுக்கப் படுகிறது.பத்திரிகை-செய்தித் துறை,வானொலி-வானொளி,கல்வித்துறை மற்றும் இணையத்தளமென இது விரிந்து கிடக்கிறது.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய“திறந்த சமூகத்தில்“லீனா மணிமேகலைக்கான தார்மீக-எதிர் நியாயங் குறித்துப் பேசுவதன் தொடரில் பல தளங்கள் முனைவுறுவது எதன் தெரிவின் நிபந்தனையென்பதே இங்கு முக்கியமானது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.06.10

>ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்!

>நாடு கடத்தப்பட்ட தமிழீழமும்,
ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:

கருத்தின்பால் காரணந் தேடுதல்!

வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.மக்களிடம் கொள்ளையடித்த செல்வத்தின் துணையுடன் அதே மக்களை மேலும் மொட்டையடிப்பதில்“ஆரு உண்மையான புரட்சிக்காரர்கள் “ எனப் பூச்சுத்தும் இந்த மோசடிப் பேர்வழிகளைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பதும் ஒருபகுதியான ஜனநாயகப் போராட்டம்தாம்.மக்களிடம் சேர்த்த பணம் எவரிடம் போய்ச் சேர்ந்ததெனப் பூச் சுற்றப்போகும் இந்தத் தொலைக்காட்சி,நாளை அப்பணம் கே.பி. என்ற கேடியிடம் போனதாகவும் கூறமுடியும்.இது,ஒரு தொடர் கதையாக மாறமுடியும்.இருப்பினும் நாம் வேறு திசைகளை நோக்கிச் செல்ல வேண்டும்.அது,அவசியமானது.

„வெளிச்சமென்றும்,அரசியல் ஆய்வு“ எனவும் GTV கொட்டும் கருத்துக்களைக் குறித்து மிக நேர்த்தியாக அணுகவேண்டியுள்ளது. இணையத்தில் எழுதும் எழுத்துக்களைவிட இலவசமாகப் புலம்பெயர் தமிழர்களது வீட்டுக்குள் பிரேமும்,ஜெகனும் அத்துமீறி வந்து கொட்டும் புலிவழி இனவாதக்கருத்துக்களோ, பன்மடங்கு மோசமான விளைவுகளை இலங்கைவாழ் தமிழ்மக்களுக்குக் காலப்போக்கில் ஏற்படுத்தப்போகிறது.

ஒரு புறம் புலிகளது உறுப்புக்களான புரட்சிப்படைகள்,மறுபுறம் தேசிய விடுதலைக்கு, மீளப் புதுவிலக்கணந்தரும் புலிப்பினாமி ஊடகயுத்தமென இன்றைய சூழல் மிகக் கெடுதியாக நகர்கிறது.இவற்றுக்கு மத்தியில் புதிய“படைப்பாளிகள்“ புலிகளது கொலை அரசியலில் நீந்திய தமது கடந்தகாலத்தை மறுத்து, வலம் வருவதற்கேற்ற தயாரிப்புகளில்… கடந்த பல வருடங்களாக வலையுலகில் மனிதநேயத்துக்காக நாம் தட்டந்தனியனாகப் போராடியபோது அதை எதிர்த்த பல புலிக்கேடிகள் இப்போது, „படைப்பாளிகள்-புரட்சிகரப் போராளிகளாக“ வலம் வர, நாம் சந்தர்ப்பவாதிகளைத் தோலுரிக்க அடுத்த வலம் வருவதும் அவசியமே!சாகவில்லை!சந்தர்ப்பவாதிகளை-சதிகாரர்களை-புரட்சி பேசிப் புலிக்கு லிங்குகொடுத்தவர்களை,புரட்சிகரக் கட்சிக்கு ஆள் சேர்க்கும் அந்நியச் சேவகர்களை, நாம் தோலுரித்து மக்கள் முன் நிறுத்துவதே இப்போதைய அரசியல் தேவை.அதைச் செய்யாதிருப்பது அரசியல் தற்கொலையே!

சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!

அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர் வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?

கேடுகெட்ட“படைப்பு“வாதிகளே கேளுங்கள்!

மே 18 எனத் தொடர்ந்த புலியினது மிச்சசொச்சத்தை எதிர்த்தும்,ஆதரித்தும் கருத்தாடும் அதர்ம அரசியல் போக்கில் வந்து குதித்துவிழும் முத்தான பரப்புரைகளது தெரிவில் புரட்சிக்குப் புதுவிளக்கமிடும் புதிய யுகத்தில் புலியினது இருப்பு இன்னுஞ் சிதறவில்லையென்பதும்,அதன் அந்நியச் சேவை தொடர்கிறதென்பதும் மறுத்தொதுக்க முடியாத புரிதற்பாடாகும்.இதையுங் கேளுங்கள்!!

எவன்(ள்)எந்தெந்தத் திசையில் புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப் பினாமிகள் மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது புரட்சியின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

ஒவ்வொரு குழுவும்,அடுத்த குழுவுக்குத் தெரியாதபடி புலிகளது எஜமானர்களால் வளர்த்துவிடப்பட்டுள்ளது.இத்தகைய குழுக்கள் தத்தமக்கு „நியாயமான“ வகைகளில் புரட்சி-விடுதலை குறித்துப் பேசுகின்றன.இவர்களில், எவரும் மக்கள் சக்தியெனப் பேசுவதற்கும்,தம்மை முதன்மைப்படுத்துவதற்கும் ஏற்ற தருணங்களைப் பற்றிக்கொண்டு மற்றவர்களை எதிர்க்கின்றனர்.இவர்கள் அனைவரும் ஒரு தளத்தின் பல்வேறு பிரிவுகளாக வளர்க்கப்பட்டு வழி நடாத்தப்படுகின்றனரெனப் பெரிதும் நம்பலாம்.இதை உரைத்துப் பார்க்க ஜீ.ரீ.வீயினது கருத்துக்கட்டும் வியூகத்தில் நம்மைக்கொஞ்சம் இணைக்கும்போது மெல்லப் புரிந்துகொள்ளும் ஆற்றலை இனங்காணமுடியும்.அவ்வண்ணமே, புரட்சிக்காரர்களது இணைய-வலை ஊடகங்களுமென நம்பலாம்.

இப்போது,திருடனே ஊரினது காவற்காரனாக வலம் வருகிறான்-திருடியினது கைகளில் ஊர்க் கோவிலது சாவி…இப்படித்தாம்,புலம்பெயர் புரட்சிக்கார வேஷமும்,போராட்ட வியூகமும்.இதற்குள்தாம் எத்தனை கோலம்-எத்தனை கோட்டம்?

புலத்துப் புலிப்பினாமிப் புரட்சிக்காரர்களது இந்த வகை அரசியல், எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால், மக்கள்சார் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,அதுசார்ந்த கருத்தியல்போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவர மீளத் திட்டமிடுகின்றனர்.பிரபாகரனுக்கு நிகரான இன்னொரு பிரபாகரன் வருவதை நாம் அனுமதிக்கப் போகின்றோமா?இல்லை,இலங்கையில் சிங்கள-புலிப்போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்துள் சிவில் சமூக உருவாக்கத்துக்கான முன்னெடுப்புகளை முடுக்கிவிடுவதற்கான அம்பலப்படுத்தல் அரசியலில் துடிப்பாக இயங்கப் போகிறோமா?

தீர்மானிக்கவேண்டும்-இதை,இப்போதே தீர்மானித்து இயங்கவேண்டும்!வேடதாரிகளை-புரட்சி,விடுதலை பேசும் கயவர்களை இனங்காண்பதே இன்றைய அதியவசியமான தேவை!

இப்போது,இந்த நயவஞ்சகர்களால் புரட்சிகரமான போக்குகள் மிகவும் பலவீனமாக்கப்பட்டு, மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது.இஃது, தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.எது எப்படி நடைபெற வேண்டுமோ, அஃது, அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் வியூகத்தைக் கொண்டியங்கும் புலிகளது உறுப்புகள் தமக்குள் மோதிக்கொள்ளும் பொருள்வழிப்பட்ட முரண்பாடுகளைக்கிடப்பில்போட்டபடி அரசியல் இருப்பைப் புரட்சியின்பெயரால் தொடரமுனையும் கேடுமிக்க அரசியலை நாம் புரிந்துகொண்டுள்ளோமா?

இக் கேள்வி அவசியமானது.நாம்,இதைப் புரிந்துள்ளோமா-இனங்கண்டுள்ளோமா?எவருக்கெவர் „மக்கள் சக்தி“லேபிள் ஒட்டுவது?புலிக்கு வக்காலத்துவேண்டும் புலியுறுப்புகளுக்கும், புரட்சிக்கும் என்னடா தொடர்பு?புரட்சியென்பது மே 18 நயவஞ்சகர்களது முற்றத்து மரமா?அல்லது, அவர்களது கோவணத்துள் சுருங்கும் உலகமா?

இத்தகைய நபர்கள்-குழுக்கள்சார் அந்நிய எஜமானர்களுக்கேற்ற இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் மீளக்கட்டியமைக்கப் பாடுபடுகிறது.இதற்கேற்றபடி மே 18 இன் தொடர்புகள் விரிந்து மேவுகிறது.அதைக் கொண்டியக்கும் தளங்கள் புதியபல தொடர்ச்சிகளை மிக விரைவாக இயங்கக் கோருகிறது.இந்தப் புதை சேற்றில் இறங்க நம்மை அனுமதிக்கும் ஒவ்வொரு கணமும், நாம், எமது மக்களது உயிரைப் பறிப்பதில் பங்களித்தவர்களாவோம்!இங்கே, மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.இதைத்தாம்,இந்தக் கேடுகெட்ட புலிவழிப் புரட்சிக்காரர்கள் எமக்குப் புரட்சியெனப் பூச் சுற்றுகிறார்கள்-மக்கள் நலக் கோரிக்கை-அரசியல் என்றும் புனைகிறார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசு,மே 18 இயக்க அரசியல் வியூகம்,தேசியவிடுதலைக்கான மீள் போராட்ட வடிவங்களெனப் பிரகடனப்படுத்தப்படும் ஒவ்வொரு திசைவழியும் புலத்துப் பினாமிப் புலிகளுக்கு வரும்படியை உயர்த்தலாம்.இந்த வரும்படியை அவர்கள் தமது அந்நிய எஜமானர்களிடமிருந்தும்,நமது மக்களது உண்மையான பங்களிப்பிலிருந்தும் பெற்றுக்கொள்வர்.ஆனால், இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்போது,இது பாரிய பின்னடைவை இலங்கையின் ஜனநாயக முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே, பயன் பெறுவது முன்னாள் ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே என்பது உண்மையானது.இதற்கு, வக்காலத்து வேண்டுவதே ஜீ.ரீ.வி யினது(GTV) வேலையாக இருக்கிறது.இவர்களைப் புலம்பெயர்வாழ் மக்கள் நிராகரிப்பதென்பது, தெருமுனையில்வைத்து இவர்களை அம்பலப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது.

இதைச் செய்தாக வேண்டும்!யாரு செய்வது?; „புதிய படைப்பாளிகளா“ அல்லது, „புரட்சிக்காரர்களா“ என்பதே சர்ச்சை!ஏனெனில்,இவர்கள் யாவரும் ஏதோவொரு வகையில் புலிப்பினாமிகளதும்,அந்நியத் தேசங்களதும் சேவகர்களாகவே இருக்கின்றனர்!இதை உய்துணர வேண்டாமா?

இலங்கையில் புலிகளின் ஆயதப்படைகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில் மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தைத் தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயக ரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே, இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது.மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய குடிசார் அமைப்புகளிடமே தேங்கிக்கிடக்கிறது.அத்தகைய அமைப்புகள் வலுப்பெறுவதைத் தடுப்பதில் புலத்துப் புலிப்பினாமிகளும் அவர்களது எஜமான மேற்குலக அந்நிய தேசங்களும் மிகவும் துடிப்பாக இயங்குகின்றன.

பல பத்தாயிரம் உயிருண்ட ஈழக் கோசம் தமிழர் விரோதிகளுக்கு உவகையானது-அது பதவிக்கும் பகட்டுக்கும் வால்பிடிக்கும் புலிகளது எடுபிடிகளுக்குத் தேசவிடுதலைக்கான தெரிவு.இதை வைத்து மக்களை மீள மொட்டையடிக்கும் கும்பல்களோ மக்கள் புரட்சிகரமாக இயங்குவதை-சிந்திப்பதைத் தடுப்பதற்குத் தாமே புரட்சிகரச் சக்தியாக மாறுவேசம் போடுகின்றனர்.இதுகுறித்த புரிதல் நம்மிடம் மிக அற்பமாகவே இருக்கிறது.இவர்களை எங்ஙனமும் இலகுவில் இனங் கண்டுவிட முடியாது.இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதி மூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.

புலியை அழித்த பின் எழும் எந்தப் போராட்டமும் புலிகளது பாத்திரத்தில் அவர்களது எஜமானர்களது நலனுக்கேற்றவாறேதாம் நமது நாட்டில் நடைபெறும்!

இலங்கையிலென்ன,உலகின் எந்த மூலையிலும் எழும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.

இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி (இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே, இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இந்த வர்க்கப் பார்வையை அந்நிய மேலாதிக்க சக்திகளது கைக்கூலிகளே இப்போது மும்மரமாக முன்வைக்கும் தமிழ்ச் சூழலில், எவர் புரட்சிகர அணியின் தொடர்ச்சியென எவரும் இலகுவில் புரியமுடியாது!இதுதாம்,நமது முதற் தோல்வி.இதன்வழி தொடரும் அனைத்துவகை அரசியல் வாதங்களும் நமது குருதியில் மீளத் தம்மை முன்னிறுத்தும் அரசியல் சூழ்ச்சியோடு நம்மை அண்மிக்கின்றன.இதை முறியடிப்பது அவசியமான பணி.புலியினது ஆயுதப்பலத்தோடு இருந்த அதே பாசிசச் சூழல் ,அவர்கள் அழிந்தபின்பும் அவர்களது எஜமானர்களால் நம்மீது நிறுவப்படுகிறது.அப்போது, புலிப்பாசிசம்;இப்போது, புரட்சியின் வடிவிலான கருத்தியல்-மற்றும் உளவியற் பாசிசம் மேலோங்குகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு,அதன் செயற்பாடு மற்றும் ஈழத்துக்கான குரல் என்பதெல்லாம் பிரபாகரனது பாத்திரத்தை நிறுவமுனையும் பாதாளவுலக மாபியாகளது அரசிலாகவே இருக்கிறது.இது ஒருவகையில் தற்பெருமை கொள்ளுமொரு பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும், அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள். இவையெல்லாம், புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.இதை உருத்திரகுமாரிடமிருந்து கற்க முடியாது-சேரனிடமிருந்து செரிக்க முடியாது!அதை, நாம்தாம் சுய தேடுதலின்வழி புரிந்தாகவேண்டும். இதைவிட்டுவிட்டு,மே 18 இயக்கத்தின் திசையில் கொடிபிடிக்க முனையும் எந்தக் கபோதிகளினது கூற்றிலிருந்தும் நாம் எதிர்கால அரசியல் வாழ்வைக் கற்கமுடியாதென்பதை உணர்வுபூர்வமாக விளங்க முனையவேண்டும்.

இந்தப் புரிதலைச் சிதைப்பதில் புலிப்பினாமிகளது ஊடகமான ஜீ.ரீ.விக்கு(GTV) அதிக அக்கறையுண்டு.அந்தத் தொலைக்காட்சியினது இருப்பில் இன்னொரு சதி பின்னப்படுகிறது.அதை வாந்தியெடுத்தும்-எதிர்த்தும் புலிகளது புரட்சிகரவுறுப்புகள் புரட்சி சொல்லித் தமக்குள் எம்மை உள்வாங்க முனையும் சதி அரசியல், புலிகளை மீளவொரு சக்தியாக-புரட்சிகர அணியாக இனங்காட்டப்போகிறது.இது,அபாயகரமான எதிர்புரட்சிகர அணியாக நமக்குள் மலரும்போது அதைப் புரட்சிகரச் சக்தியாகத் தூக்கி நிறுத்த நமக்குள் ஆயிரம் பேர்வழிகள் வலம்வருவர்-பற்பல தளங்களிலிருந்து.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.05.2010

புரட்சிகரச்சக்தியாக நடிக்கும் …

புரட்சிரச்சக்தியாக நடிக்கும்
ஒடுக்குமுறையாளர்களது உறுப்புகள்.

சிறு கவனக் குறிப்பு.

„குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டு
கொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும்
மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும்
தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரை
தேசமே விருப்புறுதியாகி
இவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்பட்டது!

புலம்பெயர் நாடுகளில்
சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில கிழட்டு நரிகள்
கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி
சில்லறைக்கு மௌனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள்

ஊராரின் உயிர்கள்
தேசமென்ற அரக்கியின் பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பியது!
கேட்பாரின்றிக் கோலாச்சிய மொழித் தர்பார்
உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொண்டது…“

டுக்கப்படும் வர்க்க மனிதரை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள் . நடந்த முடிந்தவை முடிந்துபோனவையாகவும்,முயற்சியில் இது தவிர்க்கமுடியாததாகவும் உரைக்கப்படுகிறது.புலம் பெயர் தமிழர்களுக்குள் கொட்டப்படும் புலிசார் மதிப்பீடுகள் யாவும் பிழையான தெரிவுகளை இளைஞர்களுக்குள் கட்டியமைக்கிறதோ இல்லையோ அவர்களது சுயதெரிவை இது மழுங்கடிக்கிறது.எல்லாப் பொழுதிலும்“தேசியம்-தமிழ்-தேசம்“அவர்களது நியாயவாதமாகப்படுகிறது.

தனக்குச் சம்பந்தமே இல்லாத தெரிவுகளால் பட்டு அவஸ்த்தைப்படும் இலங்கைவாழ் தமிழர்கள்,மீளவும் புதியதைத் தெரிந்துகொள்ளத் தடையாக“நாடுகடந்த தமிழ்த் தேசம்“அவர்களை இராணவக் கெடுபிடிக்குள் முடக்கியுள்ளது.

புலிகள் போரிட்ட இலங்கையின் அரசியலையும்,மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக்கருத முடியாது.இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு,குறிப்பாக இலங்கையில் இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான புலிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு, மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கிய இழி நிலையில் புலிகள் அழிந்தே போயினர்.எனினும்,களத்துப் புலிகளது மரணத்தில் காசுசேர்த்த சதிகாரக்கூட்டம் மீண்டும்,மீண்டும் பற்பல வேடம் போடுகிறது.

„நாடுகடந்த தமிழீழம்சார்ந்தும்,எதிர்த்தும்,புரட்சிபேசியும்“புலிகள்-புலத்துப் பினாமிகளென ஒவ்வொருவரும் ஏதோ வகையில் இணைந்தபடி புலம்பெயர்தமிழர்களைத் தமக்குள் இணைத்துக்கொள்ளப் பொறிமுறைகளைத் தகவமைக்கின்றனர்.இதில் எவரையும் இலகுவாக இனங்காண முடிவதில்லை!எல்லோருமே புரட்சி-விடுதலையெனத் தத்தமக்குச் சொந்தங்கொண்டாடுவதில் மக்களது தெரிவு என்னவாக இருக்க முடியும்?

புலம்பெயர் தமிழ் மக்கள் பலியாகும் அரசியலானது இதுவரை பல இலட்சம் தமிழ்-முஸ்லீம்,சிங்கள மக்களைப் பலியெடுத்தும் அவர்களது சமூகவாழ்வைச் சிதறடித்துவிட்டும்வியாபாரஞ் செய்வதில் குறியாகவிருக்கிறது. இதற்குப்புலத்து-நிலத்து மக்களது வாழ்வு மூலதனமாக்கப்படுவதில் தமிழ்பேசும் மனிதவுடலானது அந்த அரசியல்- அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத்தமிழ்த் தேசிய நடாத்தையால் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக“மக்கள் விரோதமாக“இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் „நாம்“ மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

தேசியம்-தேசம்-பண்பாடு என்ற வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.

தமிழையும்,தேசியத்தையும்,பண்பாட்டையுஞ்சொல்லித் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்துவிட்ட தமிழ் மேட்டுக்குடிகள் இப்போது ஒருகிணையுந்தளம் வர்க்க எதிரிகளைத் தீர்த்துக்கட்டும் ஒடுக்குமுறையாளர்களது தளமாகவே இருக்கிறது.இதற்காகப் புரட்சிகரமான அரசியல் முன்னெடுப்புகளைக் காட்டிக்கொடுப்பதும் அதன்வழி இல்லாதாக்குவதற்கும் அவர்களே“புரட்சிகரமான“அணியாக உருவாகி வருகிறார்கள்.இதை இனங்காணுவதென்பது மிகக்கடினமாகும்.அவர்கள் தமக்கான வரலாறைப் போலிப் புரட்சிகரக் குரல்களின்வழி நிறுவிக்கொண்ட கடந்தகாலம் நம்மையெல்லாம் உதிரிகாளாக்கிவிட்டுள்து.இதில் புலிகளது அரசியல் மிக விவேகமாக அந்நியர்களது பணிப்பின்படி நடந்துள்ளது.இதை இனங்காண்பதும்,அதை முறியடிப்பதென்பதும் இன்னொரு புலிவழிப்பட்ட அல்லது சார்புடைய அணிகளுக்குள் நம்மை விழுத்துவதில் போய் முடியலாம்.அது,ஒரு நெருக்கடியான இன்றைய சூழலில் சாத்தியமாகலாம்.இதைக் குறித்து முன்கூட்டிப் பேசுவது அவசியமானதுதாம்.புலம் பெயர்வுச் சூழலில் ஒவ்வொருவரும் சொந்தங்கொண்டாடும் அரசியலில் மடிந்தவர்கள் பலர்.புரட்சியின் பெயரால் நடந்தேறிய குழிபறிப்பில் புலிகளது இருப்பு நியாயமுற்ற தமிழ்ச் சமுதாயத்தில் இதைவிட மேலான அரசியல் அரும்ப முடியாதுதாம்.என்றபோதும்,இதைக்குறித்த சரியான தேடுதல் அவசியமாகிறது.இங்கே,இனங்காணும் செயற்பாடுகள் அவசியமாகிறது.

புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில்
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் சமூக இருப்புப் பலமானதாகவில்லை.புலம்பெயர் சமூகம்மிகவும் முரண்படுதன்மைகளை -பொருந்தாத்தன்மைகளை தன்னகத்தே கொண்டுடியங்குகிறது,இணக்கமற்ற இருவேறு அணுகுமுறைகளின் ஒருமாதிரி சேர்க்கையிலேதாம் புலம் பெயர் தமிழ்மக்களினது இருப்பே தங்கியுள்ளது. இங்கெல்லாம் நாம் நமது வாழ்வை சமூகக்கூட்டாகமைக்க முடியவில்லை .இதனால் சமுதாயரீதியான அணுகுமுறையற்றுப்போவதால் குழுவாரீயான அணுகுமுறையே நிலவுவதால் அஃது ஒன்று,மற்றது: தனிநபர்வாத அணுகுமுறை! குழுவாரியான அணுகுமுறைக்குள் சிறு சுய அமைப்பாண்மையும்,ஆற்றலையும் காணும்போது மறுபுறத்திலோ தனிநபர்வாத அணுகுமுறை எல்லாச்சீரழிவுக்கும் பசளையிடும் காரியத்தில் இயங்கிக்கொள்கிறது.

இத்தகைய தனிநபர்வாத அணுகுமுறை பழைய குட்டிப் பூர்ச்சுவா குணாம்சம் காரணமாக மிகவும் இறுக்கமான மரபுசார்ந்து செயற்படும் தந்திரத்தில் மையங்கொண்டுள்ளது, இத்தகையவொரு சூழலில் தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் ஸ்தாபனமடையாதிருப்பதற்கேற்வாறு புலிகளினது தளங்கள்செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை „ஜனநாயக வாதிகளாக“க்காட்டிக் கொண்டும்,புரட்சிக்காரர்களாகக் காட்டிக்கொண்டும் பல்வேறு முகாங்களாகத் தம்மைத் தகவமைத்து மக்களரங்குக்கு வருகிறார்கள்.இவர்களது வரலாற்றைத் தோண்டி அம்பலப்படுத்தாமல் இலங்கைவாழ்மக்களது விடுதலையென்பது பகற்கனவானது.

புலி அதிகார வர்க்கமானது „புரட்சிகரக் கட்சியின் „தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.களப் புலிகளது அழிவுக்குப்பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில்புரட்சிக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு“தமிழ்த் தேசியத்தின்“தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்து வருகிறது.சேரன் போன்ற மேட்டுக்குடிச் சிந்தனையாளர்கள் இதையொரு தொழிலாகவே இப்போது செய்து வருகின்றனர்.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த இனவாதப் பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.இதுதாம் தமிழ்சிந்தனை மரபாக இதுவரை செயற்படுகிறது!

நமது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமான இந்தத் „தமிழீழ“அழிவு யுத்தத்துக்கு உடந்தையாக எவரொருவர் இருந்தாரோ-அவர் மக்கள் விரோதியே.ஏனெனில்,இன்றுவரை இலட்சம் மக்கள் சாவதற்கான சித்தாந்தவலுவைச் செய்து,மக்கள் விடுதலையை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்தும்,புலிகள் மூலமாக அந்நியத் தேசங்களுக்கு ஏவல் நாய்களாக நமது மக்களது குழந்தைகளை உருவாக்கியும், இன்று கொன்று குவித்தற்கும்,துரோகிகளாக அழித்தற்கும் இவர்களே உடந்தையாக இருந்தவர்கள்.இவர்களே இப்போது புலியினதும்-புரட்சியினதும் பேச்சாளர்களாக வலம் வருகிறார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசுக்காரர்கள் புரிய மறுக்கும் இலங்கைச் சிங்களச் சமுதாயமானது, இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது.தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக்காக்கவும்,வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது, இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சாரமட்டத்தில் நிறுவுகிறது.இதையே ஒத்திசைவாகச் செயற்படுத்த உதவிய புலிவழிச் சிந்தனையாளர்கள் இப்போது நாடுகடந்த அரசுக்கு முண்டுகொடுப்பதில் புலம்பெயர்-நிலத்துத் தமிழ் மக்களை அதிகார மையங்களுக்கு அடிமையாக்கின்றனர்.

தமிழ்மக்களை இரசித்துக் கொல்வதற்கு வழிகாட்டிய தத்துவம் என்ன?

அதன் பின்னால் தெரிவுகளாகிய நலன்கள் யாருடையது?

கடந்தகாலப் புலிகளது போராட்ட வரலாற்றில் கொன்று கவர்வது வழமையானதாகவே இருக்கிறது.மிகச் சிக்கலான பொருள் குவிக்கும் புலிப் பினாமிகளின்ஆசையானது பின்னோக்கிய கற்காலத்தைத்தாண்டியும், இன்றைய பின் முதலாளித்துவச் சூழல்குறித்துக் கருத்தாடும் மனிதச் சமுதாயத்தில் மிக நரித்தனமாகவே உரிமை-தேசியம்-சுயநிர்ணயம் குறித்துப் பேசுகிறது.

புரட்சிகரச் சக்திகளையெல்லாம் உதிரிகளாக்கிய களத்து-புலத்துப் புலிகள், இன்றும் தமது கைவரிசையை புலத்தில் காட்டியே வருகிறார்கள் என்பதற்கு புலம் பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்களின்அணிச் சூழல் நல்ல உதாரணம்.இவர்கள் பேசும் புரட்சிகரச் செயற்பாடு,அணிச் சேர்க்கை,புலிகளுக்குகெதிரான செயற்பாடு,புலிவழித் தேசியத்தை அம்பலப்படுத்தல் என்பதெல்லாம் ஏதோவொரு தளத்துக்குகிசைவானதாகவே இருக்கிறது.அந்தத் தளத்தை அறிவதே இன்றைய மக்கள் நல அரசியலாக இருக்க முடியும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.05.2010

%d Bloggern gefällt das: