இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் …

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலகம்: சாத்திரியும்,பங்கு பிரிப்பும் படுகொலையும்!

„ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்… தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும். „-சாத்திரி   http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html

ந்த 2013 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள்நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான  ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.

இது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள்,புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச் “ சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?“அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!

கடந்த 2012 ஆம் ஆண்டு மாவீரர் தினக் கொண்டாட்டத்துள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துள் உருவாக்கப்பட்ட „புரட்சிப் பொறி “ மாவீரருக்கு விளக்கேற்றும் „தார்மீக“ உரிமைக்கானதென ஆரம்பித்து, இறுதியில் பலரைச் சிதைத்துக் கைதுகளோடு சிங்கள இராணுவம்தமிழ்ப் பிரதேசமெங்கும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான நியாயம் கொடுக்கப்பட்டது.இதுவும்,மேலே சொன்ன சதி வியூகத்தோடிணையும் சக்திகளோடு சந்திக்கும் புள்ளி இந்தியச் சாணாக்கியம்-புலத்துப் புரட்சிப் புரட்டென்று நாம் தொடர்ந்து எழுதினோம்.

இதைக் குறித்து, நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தோம். இது சதிவலையென்றும் மக்களை மீளக் காட்டிக்கொடுக்குஞ் சதியென்றுஞ் சொல்லியிதையெதிர்க்க வேண்டுமெனக் குறித்துரைத்தோம்.ஆனால், புலத்தில் „மாற்றுக் கருத்தாளர்கள்“, இடதுசாரிகள்,புரட்சிக்காராகளென ஓட்டுமொத்தமானவர்களும் கூடவே,புலிகளும் இதை ஆதரித்துச் சங்கூதினர் மக்களுக்கு!. வழமைபோலவே தட்டந்தனியாக உண்மைக்காகப் போராடினோம். இதன் சதிகளை அம்பலப்படுத்தி „இது முற்றிலும் தவறான சக்திகளது தெரிவு “ என்று மக்களை எச்சரித்தோம்.

இந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களது கலகத்தைத் தூண்டிய சக்திகள் அறுவடைக்குத் தயாரானபோது அதை சாத்தியமாக்குவதற்கான முறையில் நிலத்திலுள்ள பல போராட்ட அநுபவமுள்ள“அறிஞர்கள்“ வேலி ஓணானாக மௌனமாகவிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சீண்டிய நாம் புலத்திலுள்ளவர்களது மௌனத்தைக் கலைத்தோம். அதுள்,கலகத்தின் பின்னே நிலவும் உண்மைகளை உறுதிப்படுத்தத் தக்க வகையிலேயேதாம் அவர்கள் தமது மனசாட்சியை வெளிப்படுத்தினர்.அஃது, உண்மையின் சாயல் வரவேற்கப்பட வேண்டியது.அவர்கள், இந்திய அரசின் நிகழ்ச்சிக் குட்பட்டிருப்பினும் இந்தவிடத்தில் மனசாட்சியோடு கருத்து வைக்கும் தார்மீகத்துக்குக் கட்டுப்பட்டு மக்களோடு நின்றனர்.

ஆனால்,புலத்தில் விழுந்தடித்துக்கொண்டு போட்டிபோட்டு „யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புரட்சிப் பொறியை“ யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களெனும்பந்தத்துள் அந்தப் பல்கலைக் கழகக் கலகத்தை  முழுக் குத்தகைக்கு எடுத்து, இரயாகரன் குழு அதை ஆதாரித்து „மாணவர் எழுச்சி,மக்கள் எழுச்சியென“ப் பல பத்துக்கட்டுரை போட்டு அந்நியச் சக்திகளது சதிக்கு உடைந்தையாகவிருந்தது.இதேபோலவே, புலத்தில் பலர் அந்நியச் சதியை மக்களது தார்மீகப் போராட்டவுணர்வின் பேரால் ஆதரித்து அறிக்கைகள் விட்டனர்.அதுள், முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்க „அமைப்புகள்“ புதிய திசை-புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற  இரயாகரனது பெயர்ப்பலகை!

என்னவொரு அந்நிய விசுவாசம்!,அடிமைச் சேவகம், இந்த அமைப்புகளுக்கு!!

இலட்சக் கணக்கான மக்களை“தமிழீழப்போராட்டம்“செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருந்தனர்.

நாம்,இந்த அவலத்தின் நடுவே, ஓங்கியொலித்து மாணவர்களது கலகமானது அந்நியச் சக்திகளது தெரிவு,அது அவர்களாற் தூண்டப்பட்டு மக்களது உரிமைகள்-போராட்டவுணர்வுக்கு விலங்கிட்டு அடிமைப்படுத்தும் சதியெனச் சொன்னபோதெல்லாம் அதை இந்தப் புலத்து புரட்சிகாரர்கள் ஏதேதோ சொல்லிக் கருத்தடி தந்தனர்!.

கூடவே, எமக்குச் சமூகவியக்கம்,அதன் அசைவாகத்துள் உருவாகிய புதிய தலைமுறையின் சமூகவுணர்வு குறித்தெல்லாம் வகுப்பெடுக்க வெளிக்கிட்டனர். ஆனால்,அவர்கள் சமூகவியலில் எந்தக் கடைக்கோடி நிலையில் நிற்கிறாகளெனத் தம்மை நிரூபித்தபடி தமது அந்நியச் சேவையைத் திறம்படச் செய்தனர்.அதனால், இத்தகைய கலகங்களையும் அதுசார்ந்து இலங்கையின் தென் மாகாணப் பல்கலைக்கழகத்துக்குள் செயற்கையாகத் தூண்டப்பட்ட கலகத்தையெல்லாம் „இனங்கடந்த போராட்டவுணர்வு தோழமை “ யென வகுப்பெடுத்துத் தமது எஜமானர்களுக்கிசைவாகக் கருத்தாடினர்.

இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும்,முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடித்தனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.

இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

இந்தச் சதிகளது தெரிவில் சிலவுண்மைகளது முடிச்சவிழ்க்கும் „பங்கு பிரிப்பும்,படுகொலையும்“ எழுதும் சாத்திரியைக் குறித்து நாம் சில கருத்துக்களை முன்வைத்தாகவே வேண்டும்.

சாத்திரி,ஒருவகையில் முழுமையான புலி விசுவாசி.பிரபாகரனுக்காக எதையும் செய்யும் மனநிலையுடையவரென்பதும்,வியாபாரப் புலிகளால் ஏமாற்றிப் படுகொலைசெய்யப் பட்ட பிரபாகரனுக்குப் புலத்தில் தமது வட்டத்துக்குள் முதன்முதலாகப் பொதுவெளியில் மாவீரர் அஞ்சலி செய்தவரும் சாத்திரிதாம்.சாத்திரி இத்தகைய மனிதரென்பதால் புலிகளையும்,அவர்கள் வழியிலான விதேசியப் போராட்டத்தையும் நாம் விமர்சித்த கடந்த காலத்தில் இந்தச் சாத்திரியார் எமது கட்டில்வரை வந்து எம்மைத் தூசித்தவர். எனினும்,அதையெல்லாம் நாம் எமது சமூக நடாத்தையினதும்,அதன் வளர்ச்சிக்கட்டத்திலும் புதைந்து பார்த்ததன் காரணத்தால் அது ஆச்சரியமோ அன்றி வேதனையையோ தரவில்லை.மாறாகச் சமூகக் கோபத்தையே தந்தது.என்றபோதும்,இந்தச் சாத்திரியின்இந்தப் „பங்கு பிரிப்பும்,படுகொலையும்“ என்ற தொடரை மிக முக்கியமானவொரு சமூகப்பணியாகவே நாம் பார்க்கிறோம்.

புலிகள் தம்மைக் குறித்த ஆவணங்கள் யாவையும் நாசிகளைப்போலவே தாமும்  கைக்கெட்டியவரை அழித்துத் தமது அந்நியத் தொடர்புகளை,சதியை அதையொட்டி அந்நியருக்காக மக்களைக் கொலைகளத்துக்கனுப்பிய அனைத்து அரசியல் ஆவணங்களையும் இல்லாதாக்கிவிட்டனர்.புலத்தில் புலிப்பினாமிகள்,வியாபாரப் புலிகள்-மாணவப் புலிகளெல்லோரும் நேரடியாக அந்நிய ஏஜென்டுகளோடு உறவாடித் தம்மிடமிருக்கும் அனைத்தையும் மறைத்துவிட்டனர்.

இந்த நிலையில்,தமிழீழப் போராட்டத்தால் நாம் இடம் பெயர்ந்ததுக்கும்-அழிந்ததுக்கும்,திக்குத்திக்காய் புலம் பெயர்ந்ததற்கும்காரண காரியம் தேடும்வருங்காலச் சந்ததிக்கு,அதன் அறிவுக்கும்-தேடுதலுக்கும் அவசியமான“தமிழீழப் போராட்டத்தின்“ உண்மையான வரலாறு இன்னும் உருவாகப்படவில்லை.அத்தகைய வரலாறு தரவுகளையும்,உண்மைகளையும் சார்ந்தே எழ முடியும்.அஃது,அநேகமாகக் கை கூடாதும் போகலாம்.ஆனால், சாத்திரியின் தொடர் அதுள் சிறு பொறியையாவது வருங்காலச் சந்ததிக்கான உண்மையாகவிட்டுச் செல்லும்.

நாமும், இந்தச் சாத்திரியின் மூலமாக இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் தொடர் முடிச்சுக்களை போடும் நிலைக்கு அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் கலகத்தின் பின் புலத்தையும், அதற்குக் கயிறு கொடுத்தவர்களையும் குறித்துப் பேசுகிறார்.அந்தக் கயிறு இந்தியாவால் திரிக்கப்பட்ட தெய்வீகன் மற்றும் புலத்துப் புலி வியாபாரிகள்!எப்படியிருக்கிறது இந்தச் சதி? மக்களைக் கொல்லுஞ் சதி-அந்நியர்களால் நடாத்தப்படுகிறது, இந்தக்கலகமெனத் தொடர்து இடைவிடாது கூறிக்கொண்டோம்.கபோதி, இரயாகரன் குழு இதை „மக்கள் எழிச்சி-மாணவர் எழுச்சி“ என்றிட்டுக்கட்டி அந்நிய எஜமானர்களுக்காக நமது இளைஞர்களைச் சிங்களத்துச் சிறைக்கனுப்பினார்கள்-பாவிகள்-கொடும் மாபியாக்கள்!!இவர்கள்தாம் இப்போது அந்நிய சேவைக்கேற்ப முன்னிலைச் சோசலிசக்கட்சிக்கு வால்பிடித்துத் தம்மைத் தக்கவைக்க முனைகிறார்கள். அன்று, தம்மால் கொள்ளையிடப்பட்ட கட்டன் நசனல் வங்கிக்குள்ளிருந்த மக்களது பல கோடி பணம்-நகைள் மூலம் அமைப்புகளுக்கு நிதியிட்டும்,பொருளிட்டும் தமது ஏஜமானர்களிடம் இதற்காக இரட்டிப்பாக அறுவடை செய்கின்றனர்.;இது,எதன் பெயரால்? மக்களது விடுதலை-புரட்சியின் பெயரால்!

எதிர்ப் புரட்சியாளர்கள் வரலாற்றில் சறுக்கியவர்களல்ல. மாறாகப் புரட்சிக்குரிய நிலவரத்தைத் திட்டமிட்டுச் செயற்கையாகப் படைத்து அதன்வழியாகத் தம்மைப் புரட்சிகரச் சக்தியாகக் காட்டிப் புரட்சியைச் சிதைத்தபடியே தம்மைப் புரட்சியாளர்களெனத் தொடர்ந்து நிரூபித்துப் பற்பல புரட்சிகரக் கட்சி நாமத்துடன்  உலகெல்லாம் விரிந்து வாழ்பவர்கள். இது, புட்சிகரத் தோழமைக்குள் நியாயப்படுத்தப்பட்ட தோழமையாக விரித்து வைக்கும் சதி முதலாளித்துவத்து இருப்புக்கான வியூகத்தின் தெரிவிலொரு வழியாகும்.எனவேதாம், மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில்:“ எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ]“. என்பது. இதன்வழி நமது சிந்தனையாளர்கள் பலர் 2009 வரை ஆழ்ந்த மௌனத்தைப் புலிப்பாசிசத்தின் முன் கடைப்பிடித்தபோது அதன் கிளைகள்-வேர்கள்-விழுதுகள் தற்போது புரட்சிகரச் சக்தியாகப் படங்காட்டிப் பின்னும் சதிவலையைக்கூடப் புரட்சியென நம்பும் நம் மக்களை விட்டில் பூச்சியாகவே நாம் இனம் காணவேண்டும்.

ஆகவே, யாழ்மாணவர்கள்கலகத்துக்குப் பின் நின்று தூண்டிய சக்திகளை நாம் ஏலவே சொன்னோம்.சாத்திரியின் குறிப்பின்வழி அது பலமான தொடர் புள்ளிகளை நமக்குத் தருகிறது.

இதிலிருந்து,இன்னொரு புள்ளிக்குத் தாவினால் அதுள் சந்திப்பவர் பரணி கிருஷ்ணரஜனி.

இவர் 2009 க்குப் பின் பொதுவெளிக்கு வருகிறார்.முள்ளி வாய்க்காலில் புலிகள் மண்கவ்வி மக்களைப் பலிகொடுத்து அழிந்துபோன பின்புலிகளது தவறுகள்,தப்புகள்,போராட்டச் செல்நெறிகள்,அவர்களது காட்டிக்கொடுப்பு,அந்நிய அடியாட்படைப் பாத்திரத்தோடு புலிகளது வரலாற்றுத் துரோகம் குறித்து நிறையக் கேள்விகளோடு மக்களும்,அவர்களது குழந்தைகளும் புலத்திலும்-நிலத்திலும் முனையுங் தருணமிது.

இதைத் தடுத்து, மக்களைத் தொடர்ந்து விவேகமாகச் சிந்திக்கவிடாதிருக்க அதே புலிவழிபாடு,தலைவர் துதியைத் தொடர்ந்து அச்சுப் பிசாகமால் பரணி செய்து வருகிறார்.இது இந்திய அரசின் மிகப்பெரும் கருத்தியல் தாக்குதலாகும்.

புலத்தில் மீள,அதே புலிவழிச் சிந்தனையையும்-ஏமாற்றையும் மனோவியற் புரிதெலெனுந்தொலியின்வழி  சொல்லிப் புனைந்து, புலத்தில் புலி குறித்த சரியான மதிப்பீட்டுக்கு மக்கள்வராதிருக்கப் பாடுபடுகிறார்.இது, ஒருவகையில் பார்ப்பனர்கள்இன்று தமிழர் பிரச்சனை குறித்துப் பேசுவதுபோன்றது.அதாவது, ஜெயலலிதாவையும் கவனித்துக்கொள்ள முடியுமென்கிறேன்.

வீன் பல்கலைக்கழகப் பின் கற்கையியல் மாணவன்பரணியின் வயதையொட்டிய ஆறாவடுச் சயந்தன் கதிர் பரணியின் இத்தகைய நடவடிக்கைக்குச் சமீபத்துள் எங்கோவொரு குறிப்பில்சொன்ன கருத்து:“ பரணி, சின்ன விடலைகளுக்கு உசுப்பேத்திக் கதைவிடுகிறார்“என்பதாக இருந்தது.

ஆனால்,நாம் தொடர்ந்து கூறினோம் பரணி இத்தகையவழியில் இளைஞரைச் சிந்திக்கவிடாது புலிகளுக்கு ஒளிவட்டம் கட்டி மாயயை ஏற்படுத்துவது அந்நியச்சதி. இளையர்களைத் தொடர்ந்து போலித்“தமிழீழ“ க் கனவின் வழி மழுங்கடிப்பதற்கான வியூகம் இதுவென்றோம்.அதுதாம் உண்மையென்பதைப் பல்கலைகழக மாணவர்களது கலகம் குறித்த பரணியின் உரையாடலின் மூலமும் ,புலி மாணவன்-இளய போராளி தெய்வீகனது இந்திய மண்ணில் இருத்தலுக்குட்ட பாதுகாப்பும் இன்னும் அதிகமாகப் பரணியின் பாத்திரத்தை உறுதிப்படுத்தும்

பரணி கடந்த 2012 கார்த்திகை மாதம் ஆரம்பத்திலேயே யாழ்ப் பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் உறுமுகிறார்கள்-ஒரு புரட்சி வெடிக்கும்,அது துனேசியாவைப்போல வெடிக்கும் என்றெல்லாம் கதைவிடத் தொடங்கினார்.இது திட்டமிடப்பட்ட சதிகளது முன்கூட்டிய தொடர்பு,அதன்வழியான பின்புலச்சக்திகளது உரையாடல் மூலமாக அவர் பெற்றுக்கொண்டபின் அதை அவிட்டுவிட்டார்.

இப்படிப் புலிகளால் வளர்க்கப்பட்ட பல மாணவர்களே இந்திய உளவுப்படைகளால் இப்போது உள்வாங்கப்பட்டு முழுக்க முழுக்க இந்திய நலனுக்கான தெரிவில் புலியைப் போற்றியும்,தேசம்-தேசியம்-தமிழீழம்“என்று கருத்துக்கட்டி மக்களைப் புதிய தெரிவுகளிலிருந்து அப்புறப்படுத்த்தித் தொடர்ந்து புலிக்கனவில் வைத்து ஒடுக்குவதற்கான கூட்டுக்கள்-சதிகள் தொடருகிறது.

இதை எங்ஙனம் முறியடிப்பது?

மக்களைத் தவறான பாதைக்குள் தள்ளிப் பலியெடுக்கும் இந்திய-மேற்குலக-இலங்கைச் சதிக்கார லொபிகளுக்கும் அவர்களது „இயக்க-கட்சி-புரட்சிக்குள்ளிருந்து“ அடுத்த தலைமுறையை எங்ஙனம் காக்கப்போகிறோம்?

அரபுத் தேசத்துள்அமெரிக்க மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியத்துக்காகச் சாகும் அரேபியர்கள்போன்றோ அல்லது தமிழீழப் போராட்டத்தின் மூலம் அந்நியர்களுக்காக நமது மண்ணில் வீழ்ந்த பல இலட்சம் மக்களைப் போன்றோ இனியும் மக்களைச் சாகடிக்கும் அரசியலைப் புரட்சி-விடுதலை என்று வகுப்பெடுப்பவர்களைக் குறித்து எப்படிப் பார்ப்பது?

அந்நிய ஏஜென்டுகளை-கூலிகளை,லொபிகளை புரட்சிக்காரர்கள், விடுதலைப் போராளிகளென்றுரைக்கும் முட்டாள்தனத்தை எப்போது விடப்போகிறோம்?

குறைந்தபட்சமாவது சாத்திரியின் இத்தகைய உண்மை கூறிலின்வழியாவது சில சதிகளை கருத்து ரீதியாவுணர்ந்தாலும் செயற்பாட்டில் இத்தகைய குழுக்களை,புலத்தில் புரட்சிப்படங்காட்டும் புலிப்பினாமிகளையெல்லாம் வெற்றிகொள்ளும் ஆற்றலை முழுமையான உண்மை கூறற் கருத்துக்காளாலும் அது சார்ந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் பெறமுடியும்.

ஒரு சிறு பொறியை எழுப்ப முடியும்.

அந்த வகையில் சாத்திரியும் தமிழீழப் போராட்டத்தின் மூலமான சதி வரலாற்றை ஒரளவு மக்கள் அறிவதற்கு முக்கியமானவொரு பங்கைச் செய்திருக்கிறார்.

ப.வி.ஸ்ரீரங்கன்

29.01.2013

Advertisements

இரயாகரன் குழுவைப் புரிந்துகொள்ளல்

இந்த இரயாகரனிடமுள்ள கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளைப் பணமானது எப்படியெல்லாம் பொய்யுரைத்துக் காக்கப்படுகிறதென்பது மேலுள்ள „பகிரங்கமடல்“ மற்றும் அவர்களது போர்ட்மெம்பர் „நாதன்-வேலன்-சிலோன்-இல்லைகை“என்ற அவர்களாலேயே புரியப்படவேண்டும்.

//சிறிரங்கனுக்கு பகிரங்க மடல்…

………………………..

Sri Rangan Vijayaratnam க்கு ‚கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை!

 

மட்டுப்படுத்தப்பட்ட விபரம்…

 

* இந்த வங்கி ‚மனேசர்‘ சுட்டுக் கொல்லப்பட்டார்…

** இதன் சொத்துக்கள் புலிகளால் அபகரிக்கப்பட்ருந்தது…

*** இராயாகரானால் பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் முதுகெலும்பில்லாதவர்காளால் தாரைவார்க்கப்பட்டது…

 

*** ஐயரிடம் ஒப்படைக்பப்பட்ட சொத்துக்களின் விபரத்தை… ‚இனியொரு‘ , ‚சிறீரங்கன்‘ போன்றவர்களால், ஏதோ ‚பில்டா விடுபவர்கள்‘ சரியாக, அல்லது மாதிரியாகத்தன்னும் வெளியில் (முகப்புத்தகத்தில்) வைக்க முடியுமா???-குமார்

 

Ceylon Illaikai : ஐயரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது தமிழீழக்கட்சியிடம் கொடுக்கப்பட்டது. இப்போ வசதிக்காக அனேக முற்போக்குகள் மௌனமான இருக்கிறார்கள். இதுதான் புரட்சிவாதிகளின் தோழமையோ. தோழர் ……//

இரயாகரன் குழுவைப் புரிந்துகொள்ளல்

 

 

ந்த இரயாகரனிடமுள்ள கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளைப் பணமானது எப்படியெல்லாம் பொய்யுரைத்துக் காக்கப்படுகிறதென்பது மேலுள்ள „பகிரங்கமடல்“ மற்றும் அவர்களது போர்ட்மெம்பர் „நாதன்-வேலன்-சிலோன்-இல்லைகை“என்ற அவர்களாலேயே புரியப்படவேண்டும்.

பல முகமூடிக்குள்ளிருக்கும் இந்த இரயாகரன் குழுவானது தன்னைச் சுற்றிப்போடும் வேடமானது அப்பணத்தைக் காத்துக் கொண்டு அதன்மீது நாமம் போடும் அரசியலைக்குறித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.

இவர்களது,விளக்கத்தின்படியே இரயாவிடமிருந்த பணம் இறுதியில் தமிழீழக் கட்சிக்கும் போனதாம்.அதாவது,ஜான் மாஸ்டரின் தலைமையில் தமிழீழ மக்கள் கட்சியென்றும்,அதன் அரசியல் ஏடென்றும்“தமிழீழம்“சஞ்சிகை தலைமறைவாக அனைவருக்கும் கிடைத்து வந்ததை நண்பர்கள் அறிவார்கள்.

இந்தத் தமிழீழக் கட்சியானது புலிப் பாசிசத்தைக் கருத்தியல் ரீதியாக ஆதரித்து மக்களைக் காயடித்த புலிப் பினாமிகளது  முகாமாகும்.அச்சஞ்சிகை புலிப்பாசிசம் உச்சத்தில் இருந்த போது அதைத் தேசிய இராணுவமாகவும்,தேசம் அதனால் விடுவிக்கப்படுவதுமாகப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களைப் புலத்தில் திறம்படக் காயடித்தது.இதற்குக் காசைத் தாரவார்த்த இரயாகரன் யார்?-சீச்சீ அது இரயாகரனல்ல-ஐயர் கையளித்தது! 🙂

இந்தக் கேள்விக்கும் புரட்டல்வாதிகளது பதில் இவ்வாறு „புரட்சிகரக் குழுவாகத் தோன்றியதன் நம்பிக்கையில் வழங்கினோம்.அது,புலிப் பாசிசத்துடன் அண்மித்து முதுகெலும்பில்லாது அரசியல் செய்விட்டதென்றுங்கூட வகுப்பெடுத்தலாக அமையலாம்.“ ஏனெனில், இரயாகரன் குழுவினது புரட்டல் „இப்படி“ எத்தனை ஆயிரம் நமக்குள் கடந்த 20 வருடமாக அனுபவமாகியது-புலத்துள்!

புலிப் பாசிசத்துக்குக் கருத்தியற்பலம் கொடுத்த தமிழீழக் கட்சிக்குக் கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளையில் நிதியிட்ட இரயாகரன் புலிப்பினாமியென நான் ஆய்ந்து சொல்வதன்  நியாயத்தைப் பாருங்கள்!

இவர்கள், இப்படியாக மக்களை மொட்டையடித்த மகாத் திருடர்கள்,பாசிஸ்டுக்கள்-எதிர்ப் புரட்சிகாரர்கள் என்பதைக் குறித்து மிகக் கவனமாக உற்று நோக்குங்கள்.

ஒரு சதிகாரக் கூட்டு, எப்படியெல்லப் புரட்சிகரச் சக்திகளையும் வேட்டையாடியதென்பதை மிக விரைவில் உணர்த்துகொள்ளவேண்டும்!

பயங்கரமான சதிக் குழுவான இரயாகரன்-குழு,சதி நிரம்பியதென்பதற்கு இந்த ஒப்புதல் வாக்கு மூலங்கள் அவர்களையறிவதற்கு இன்னுமொரு படிக்கல்!

இவர்கள் எப்படியெல்லாம் புலிக்கு முகவர் வேலைசெய்து, தமிழிச்சிகளது தாலியை அறுத்தனரென்பது நாம் அறிய வேண்டிய வரலாற்றுண்மைகள்!

இப்போது அதே எதிர்ப் புரட்சியை மீளப் „புரட்சி வேடங்கட்டி“ அந்நியர்களுக்கும்,அவர்களது வியூகத்துக்குமொப்ப அந்நியச் சக்திகளால் தூண்டப்பட்ட“மாவீரர் தினக்கொண்டாட்ட“ஆதரவுக் கலகப் „பல்கலைக் கழகப் போராட்டத்தை“ மக்களது ஆவேசமாகவும்,தார்மீகவுரிமையாகவும் வர்ணித்து, அதைச் சொல்லி மீளவும், இலங்கை-இந்திய விச அரசியலுக்குக் கருத்தியல் நியாயம் கற்பிக்கும் கபோதிகளைக் கவனமாக் கண்காணிக்க வேண்டும்.

அன்று,தமிழீழக் கட்சியின்வழி முகமூடிபோட்டுப் புலிக்காவடி தூக்கிய இரயாகரன் குழு, மிக மோசடியான மாபியாக்களென்பதைத் தமிழீழக் கட்சி-ஜான் மாஸ்டர்,தமிழீழச் சஞ்சிகை,அவர்களது“தேசிய இராணுவம்“தமிழீழம்“விடுவிக்கப்பட்டு வருகிறதென்ற பாசிச ஆதரவுப் பரப்புரைகள்-கருத்துக் கட்டலிலிருந்தும்,இதே குழுவுக்குள் பல தலைகள் „விக்கியென்று,இளங்கோவென்று,ஜான் மாஸ்டரென்று,இரயாகரன் குழுவென்று“ புலிகள் தமக்கான உளவுப்படைகளை எப்படியெல்லாம் உருவாக்கிவைத்துச் சிறு தொகையான இடது சாரிகளை வேட்டையாடினர்,இப்போதும் அதே குழுவை வைத்து எப்படி அந்நியச்சக்திகள், புலியினது புலம்பெயர் பினாமிகள் காரியத்தை முடிகிறார்களெனப் பார்த்தால் இந்தக் கற்றன் நசனல் வங்கிப் பணம்,விஸ்வா நந்ததேவனின் படுகொலை,கோவிந்தனின் படுகொலை,புலிகளால் இரயாகரன் கைது-தப்பித்தல் நாடகமெல்லாம் புலியினது வியூகத்துக்கமைய நடாத்தப்பட்டுப் புரட்சிகர அணிகளை நம்பவைத்துக் கழுத்தறுத்தது ஒரு பெருஞ் சதி!

இஃது, வரலாறாக நம் முன் எஞ்சி நிற்கிறது,புலிகள் இரயாகரன் குழுவை புரட்சிகர முகாமுக்குள் மெல்லத் தள்ளிப் புரட்சிகரவணிகளையுடைத்தும்-சிதைத்தும் வெற்றிகொண்டது, புலத்திலும்-நிலத்திலுமென்பது ஜீரணிக்க முடியாதவுண்மை!

புலிப் பாசிச எஜமானர்களது முள்ளிவாய்க்கால் அழிவில், அவர்களுக்குத் தியாகிகளெனப் புலிப் பினாமி இரயா கண்ணீர் வடித்துக் கட்டுரைபோட்டுக் கழற்றி மீள எனது அம்பலப்படுத்தலில் மாட்டுண்டு அதைத் தொடர்ந்து இணையத்துள் விட வேண்டிய நிலையும் நீங்கள் அனைவரும் அறிந்ததே!

இந்த மாபியாக்களை எங்ஙனம் வெற்றி கொள்வது?

இவர்களை அம்பலப்படுத்தித் தமிழ் அரசியற் பரப்பிலிருந்து அகற்றவது நிலத்து மக்களதும்,புலத்து மக்களதும் கடமை.

இவர்களால் தொடர்ந்து சுத்தப்படும் அரசியல் சதிகள், தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு புரட்சிகரக் கட்சியின் தோற்றத்தைத் தொடர்ந்தழித்து வருகிறது.

புரட்சிகரக் கருத்தியலைச் சிதைத்தும்,தனிநபர்களான புரட்சிகரச் சிந்தனையாளர்களை தமக்குள் உள்ளிளுத்துச் சிதறடித்தும்-காட்டிக்கொடுத்தும் வரும் இரயாகரன் குழு மிகப்பெரும் சதிகாரக்குழுவென்பதைப் பகிரங்கமாகவுரையாடவேண்டும்.

இவர்களது அனைத்து வேடங்களும் கலையாதவரை புலத்தில் புரட்சிகர அணிகள் தொடர்ந்து சிதைக்கப்பட்டுத் தோல்விகண்டே வருவர்.

ப.வி.ஸ்ரீரங்கன்

26.12.2012

பொங்குதமிழ் ஊடகமும்,மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்…

பொங்குதமிழ் ஊடகமும்,
மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்…

கட்டுரைத்தொடர்: (4)

„புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:“அறிவாளிகள்!“ 

மிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள் ஆழ்த்தும் கட்டுரைகளை நமது „ஆய்வு“க் கட்டுரையாளர்கள் தற்போது பரவலாக எழுதிவருகின்றனர்.அதுள் முக்கியமாகப் பலராலும் வாசிக்கப்பட்ட கட்டுரையாக(பொங்குதமிழ்இணையக் கட்டுரை) இக்கட்டுரை பல தளங்களில் வாசிக்கக் கிடைத்தது.

கட்டுரையாளர் மீளத் தகவமைக்கும் அயலுறுவுக்கொள்கை எனக்கு அன்றைய புளட்டின் அரசியல் வகுப்பெடுப்பை ஞாபகப்படுத்தத் தவறவில்லை.

„இந்தியா உலகத்தில் முற்போக்கான நாடாகத தன்னைக் காட்டி வருவதால்,அது உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பாக இயங்குகிறது.எனவே,தமிழீழத்தை ஏற்று அங்கீகரிக்கும்,தமிழ்பேசும் மக்களது நியாயமான போராட்டத்தை அது ஆதரிக்கும்“ என அன்று புளட், இந்திய அயலுறவுக்கொள்கையை எடுத்தியம்பியது.பரவலாக இந்தியா குறித்து மக்கள் கேள்விகளைத் தொடுக்கும்போது புளட் இங்ஙனம் விடையளித்தது.இத்தகைய முட்டாள்த்தனமான கருத்தை அன்று மக்கள் நம்பிக்கொண்டார்கள்.

இன்று,சுமார் கால் நூற்றாண்டு கடந்துவிட்டது.இதற்குள் இந்தியாவின் பாத்திரம் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைக் கொன்று குவித்துள்ளதும்,தமிழ்பேசும் மக்களது போராட்டத்தைத் திசைதிருப்பி ஒரு படுகொலைக் களத்தைத் திறந்துவிட்டதும் வரலாறாக இருக்கும்போது மீளவும், இந்தியாவுக்கும்-சீனாவுக்குமான அயலுறவுக்கொள்கை முரண்களால் யுத்தம் வெடிக்குமெனவும்,அதுள் இந்தியாவானது தனது அயலுறுவுக்கொள்கையினதும்,ஆதரவுச் சக்தியினதும் தேவையின் பொருட்டுத் தமிழர்களுக்கு நாடுபிடித்து-பிரித்துக்கொடுத்து, இலங்கைத் துறைமுகத்துள் தனது இருப்பைத் „தமிழ்த் தேசவுருவாக்கத்தில்“ நிலைப்படுத்தும் எனக் கட்டுரையாளர் மகிரிஷி அரசியல்-பொருளாதார அறிவு புகட்டுகிறார்.

அயலுறுவுக்கொள்கையை வலுவாகப் புரிந்து காரியமாற்றும்போது நமக்கு விடிவுகிடைக்குமென வகுப்பெடுப்பதில் இதுவரை தேறாத புலிகளுக்கு மாற்றாகச் சிந்திப்பவர் மிகத் தாரளமாகச் சொல்லும் இந்தக் கட்டுரையினது மையக் கருதுகோள் மீளத் தகவமைப்பது என்ன?

இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை இவ்வகைக் கட்டுரையினது பேசு பொருளாக உலாவவிடுதில் தமிழ்பேசும் மக்களுக்குப் புதிய அயலுறுவுக்கொள்கை வகுப்பெடுகின்றதென்று நாம் சந்தேகப்படவேண்டும்.

இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.

இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-ஆயுதக்குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில்நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன. இதற்குத் தோதாகச் சொல்லப்படும் அந்நியவுறுக்கொள்கை-தமிழ்பேசும் மக்கள் சார்ந்திருக்கவேண்டிய அயல் நாடு-நட்பு நாடு என்பதெல்லாம் மீளவும் அதே தேசத்தால் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.

இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் ஏமாற்றி அழிக்கப்பட்ட தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.

இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்புதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.இன்று தமிழ்பேசும் இளைய சமூகமானது எந்தத் திசையிலும் புதிய புரிதல்களோடு தம்மைத் தகவமைக்க முனைகிறது.அதன் ஆழ்ந்த நகர்வானது தமக்கு நேர்ந்த நெருக்கடிகளைப் புதிய புரிதல்களோடு அறிவுரீதியாக விளங்க முற்படும் சூழலொன்று புலம் பெயர் தமிழ்க் குழுமத்துக்குள் உருவாகிறது.இந்தச் சூழலை எந்தத் தேசம் தமக்கேற்ற வகையில் பயன்படுத்த முனைகிறதோ அந்தத்தேசம் இலங்கையில் கணிசமான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திச் சீன-இந்தியக் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.இன்று,தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை தன்னைப் புதிப்பிக்கும் ஏதோவொரு உரிமைசார் போராட்டத்தில் முதன்மையுறும் அந்நியவுறாவானது பரந்துபட்ட புரிதலை மறுத்தே இயங்குகிறது.அதற்கு மேற்குலகத்தின் அரசியலை எங்ஙனம் கையாளுவதென்பது பெருஞ் சவாலாகவே இருக்கிறது.இந்தச் சவாலனின் நடுவே,“சீன-இந்திய“யுத்தஞ்சார்ந்து இந்தியாவைக் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டுமென கருத்துக் கட்டுபவர்களைக் குறித்து நிறையப் பேசியாக வேண்டும்.

கடந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குகான புள்ளியை-அரசியல் செப்படி வித்தையை இந்தியாவின் ஆலோசனைப்படி „சர்வகட்சிக் கூட்டுக்கள்“(யு.என்.பி-காங்கிரஸ்,சீனக் கம்யூனிசக் கட்சி,மகிந்தாவின் மக்கள் கூட்டணி,தமிழர் கூட்டணி இன்னபிற)அன்று முன்வைக்கும் நிலைக்கு அரசியல் வியூகம் சென்றுகொண்டிருந்தது.புலிகளது தனிக்காட்டுத்தார்ப்பாரைச் சொல்லி மக்களின் உயிரோடும்-வாழ்வோடு விளையாடிய இந்தக்கட்சிகள்-அரசுகள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக இறுதிப் புலியழிப்பு யுத்தத்தை உருமாற்றம் செய்து கொண்டன.இங்ஙனஞ் செய்துகொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும்-தோல்வியாவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்தக் கட்சிகள் செய்து முடித்தன.

இந்தத் தோல்வியான வியூகத்தைச் சரி செய்ய வேண்டுமானால் தமிழ்பேசும் மக்களை மீள வென்றெடுத்தாகவேண்டிய நிலையில் சீன-இந்தியக் கூட்டணிக்கு அவசியமான முன் நிபந்தனையாகவிருக்கிறது.இங்கே,இத்தகைய கட்டுரைகள்,குறித்துரைக்கும் சர்வதேச-அயலுறவுக்குகொள்கைசார் கருத்துக்கள் அத்தகைய இலக்குகளின்வழி மேற்குலகஞ் சார்ந்தோ அன்றி இந்தியா சார்ந்தோ முன் தள்ளப்படுகிறது என்பதே இன்றையவுண்மையாக இருக்கிறது.

இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு „தமிழ் மக்கள் உரிமைசார்“ கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச இந்திய ஆளும் வர்க்கத்தை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு புலிகள்பாணி அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது.

அன்று,முள்ளி வாய்க்கால் நிகழ்வு நேரும்வரை தமிழ்ழீழம்பெறும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள். இப்போது, முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை இத்தகைய கட்டுரையாளர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களது அயலுறவுக்கொள்கையென வகுப்பெடுத்துத் தமது இலக்கை எட்ட முனைவதென்பது உண்மையானது.இதுள் பற்பல குழுக்கள் தமது விசுவாசத்துக்கேற்பக் கட்சிகளாகவோ அன்றி இலக்கிய வட்டங்களாகவே புலம்பெயர் சமூகத்திலும்,நிலத்திலும் இயங்கி வருகிறார்கள்.இத்தகைய இயக்கப்பாட்டின் அதீதமான கருத்தியற் காயடிப்பாகவே பொங்குதமிழ் இணையத்துக்காகக் கட்டுரை எழுதிய மகிரிஷி என்பவர் இயங்குகிறார்.இது,போராட்டக் குழுக்களது அன்றைய தொடர்கதையான அந்நியச் சேவையின் இன்னொரு அரூபமான வெளிப்பாடு.

அந்நிய நலன்களாலும்,புலிகளாலும் ஏமாற்றப்பட்ட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை, இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே.

இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின்இனங்களைப் பிரித்தாளுவதே!இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் „புரட்சி“க்காகக் கட்சிகட்டுவதாகவும் இன்னொரு பக்கம் ஐ.நா.வரை நடைபயணமெனப் பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது,புலத்துப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிறதென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். அந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.கே.பி.குழுவானது வெளிப்படையாகவே இலங்கை அரசோடிணைந்து ஆசிய மூலதனத்துக்குச் சேவை செய்கிறதென்பது கடந்த சில மாதங்களாக நாம் காணும் உண்மை.

இந்த நிலைமையில் பொங்குதமிழுக்குக் கட்டுரைவரையும் மகிரிஷியின் கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.

நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் படுகொலை அரசியலுக்கு, இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும், தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-சீன,மேற்குலக ஏகாதிபத்தியங்களே முழுமுதற் காரணமாகும். கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து
„இந்தியாவின் தயவில் இலங்கையில் இரு தேசங்கள் உருவாக்கப்படும் தீர்வு சாத்தியமெனும் மகிரிஷியின் தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.

இது, கைவிலகிப் போகும் புலம் பெயர் இளைய குழுமத்தின் அரசியல் இருப்புக் குறித்தும்,அவர்களது மேற்குலகச் சார்பு குறித்தும் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.எனவே,இத்தகைய கருத்து நிலைகளுக்குள் கட்டிவைக்கப்படும் பொறியானது மக்களைக் காயடித்து அதிகாரங்களுக்குள் கட்டுண்டுகிடக்க வைப்பதே.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.07.2010

எதிர்நிலைகளை முன்வைத்து…

கட்டுரைத்தொடர்: (3)

எதிர்நிலைகளை முன்வைத்து…

„புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,
அந்நியச் சேவை:“அறிவாளிகள்!“

மிழ் பேசும் மக்களாகிய நாமோ இன்று தமிழின் பெயராலும்,தேசவிடுதலையின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டும், எந்தப் பிடிமானமும் அற்ற வெறும் ஓடுகாலி இனமாக உருவாகப்பட்டு நாடோடிகளாகியுள்ளோம். நமது சமூக சீவியம் வலுவாக அழிந்தபின் நம்மிடம் எஞ்சியிருக்கும் வாழ்வானது காத்திரமான சமூக ஆண்மையாக இருக்க முடியாது! நாம் மெலினப்பட்ட இனமாக,பொருளாதாரப் பலமற்ற சிறு குழுவாகச் சிதைக்கப்பட்டு,உலக இனங்களுக்குச் சேவகஞ் செய்யும் நாடோடிகளாக்கப்படும் அரசியலைச் செய்து முடித்த ஆயுதக்குழுக்களது எச்சங்கள் இன்று போடும் அரசியல் கணக்கானது அவர்களது இருப்பைக் குறித்தான தெரிவென்பது நாம் இனங்காணத்தக்கது.இது,ஒருபோதும் நமது மக்களது அரசியல் நெருக்கடிக்கு எந்தவிதத்திலும்ஆரோக்கியமாகச் செயற்படாதென்பதைக் குறித்தே நாம் இப்போது பேச முற்படுகிறோம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான புலியற்ற சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.இயக்க நலனுக்கான தெரிவும்,தலைமைத்துவத்தின் இருப்புக்கான அரசியற்றொடர்ச்சியுங்கொண்டியங்கிய புலியினது அழிவுக்குப் பின்பான இலங்கையின் சிறுபான்மையினங்களது அரசியல் நகர்வில், இன்றுவரை தொடரும் நயவஞ்சகமான அரசியலானது புலத்திலும்,நிலத்திலும்(இலங்கையில்)தமிழ் மக்களை அவர்களது பிரிவினைகளுக்கூடாகப் பிளந்துள்ளது.கூடவே,இந்த வகைக்குட்பட்ட அரசியல் நடாத்தும் மேலாண்மைச் சமூதாயங்கள் இன்று மிக வேகமாகக் காரியமாற்றுகின்றன.

இவை நமது மக்களது எதிர்காலவாழ்வு குறித்துப் புதுவகைக் கருத்துக்களைத் தமது எதிர்கால இலங்கை அரச வியூகத்திலிருந்து தொடரும் புதிய தெரிவுகளில், புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் அரசியல்ரீதியாக அணிதிரள்வது புரட்சியெனப் பரப்புரைக்குள்ளாக்கப்படும் தருணத்தில் பக்கம் பக்கமாகப் புதிய தொடர்கள் ஏதோவொரு மூலையில் இருப்பெடுக்கிறது.மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.இவை நமது மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே தத்தமது எஜமானர்களது தேவைகளைக் கையிலெடுத்துள்ளது.

பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இந்தப் புரிதலோடு இன்றைய புலம்பெயர் தமிழ்க் குழுமத்தின் அரசியல் நகர்வைப் புரிய முனைந்தால்அந்நியத் தேசங்களது கனவானது தமிழ் மக்களைப் பிரதேச ரீதியாக எங்ஙனம் பிளந்துள்ளதென்றும்,அதன் தொடர்விருத்தியாக முன் தள்ளப்படும் கட்சிகள்-குழுக்களது மாதிரிக் குட்பட்ட அரசியல் அமுக்கமும் புலியினது போராட்டப் பாதையின் எச்சமாக நகர்வதை இனங்காணமுடியும்.

இதன் தொடரில் நாம் பற்பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறோம்.எனினும், புலிவழி இயக்கவாதம் மீளக் கோலாச்சுகிறது.

அந்நியச் சக்திகளுக்குக் கூஜாத் தூக்கும்“போராட்டம்“ தொடர்கிறது.

அஃது, ஈழத்தை-சுயநிர்ணயவுரிமையைப் பெற்றுத் தருமெனப் பல“தோழர்கள்“ நம்பிக்கிடக்கிறார்கள்!இங்கே, அன்றைக்குப் புலிகள் சொல்லிய பாசிசக் கருத்து நிலை(மொழிக்காக, இனத்துக்காக, தேசத்துக்காக „உயிர்ப்பலிகொள்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு“எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொண்டு, மனித ஆளுமையைக் காவு கொள்வது) மக்களுக்காகப் போராடுவதற்கு,அவர்களுக்கான அரசியலைத் தொடர்வர்தற்கு அணிச் சேர்க்கை அவசியமென்கிறது.அதைக் குறித்து எந்தக் கேள்வியுமின்றித் „தாம் உரைக்கும்போது „கட்சி“கட்டுவதும்,போராடுவதும்“ சரியெனப் பரப்புரை செய்கிறது.இதன் வன்மமான கருத்துநிலையானது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிலவும் சூழலுக்கேற்ற எதிர்-நியாயவாதத்தை மக்களுக்கான நலனின் தெரிவனச் சொல்லியே தமது „நியாயவாத்தை“த் தொடர்கிறது.

இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற „வர்க்க“அரசியலானது இன்று புலம்பெயர் தளத்தில் ஊடகவன்மமாகவும்-கட்சிகட்டும் பெரிய போர்வினை நுட்பமாகவும் ஒருங்கே தமிழ்மக்களது விடிவு குறித்து வகுப்பெடுக்கின்றனர்.ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களைப் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது.

அதே புலிப்பாணி „அணிதிரள்வு-ஒத்து வடம் பிடித்தலெனும் வகைமாதிரிப் புனைவுகள்“ ஏதோ எழுந்தமானமாக வாசிக்கப்படுகின்றன.இது,எந்த நிலையிலும் மகள் அரசியலறஞ்சார்ந்து சிந்திப்பதில்லை. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத்தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட „நிகழ்வுகள்“சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.

இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த“புரட்சிக் குழுக்களின்“குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த „தார்ப்பார்களை“ உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.

புலிகளது ஈழப்போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்ச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட வாழ்வதற்கானதும்,சமூகமாக ஒருகிணைவதற்கானதானதுமான பெருவிருப்பம் முதற்றெரிவாக முன்னெடுக்கும் இருத்தலுக்கான ஆதாரத்தை உரிமையெனக்கொள்வதற்கில்லை.அது,தனது இழந்துபோன அடிப்படைத் தேவைகளையொட்டிச் சிங்கள அரசுடன் செய்யும் சமரசம் முற்றுமுழுதாக வாழ்வதற்கான தெரிவே அன்றிப் போரிட்டுத் தமது உரிமைகளைவென்றெடுப்பதென்றில்லை!

இதுசார்ந்த அவர்களது சிந்தனா முறை ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது தமிழ்ச் சமுதாயத்தின் இனிவரும் அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும். இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியலானது மக்களது சுயதெரிவான அரசியலூக்கத்திலிருந்த அவர்களது சுயாதீனச் செயற்பாட்டின்வாயிலாக எழவேண்டுமெயொழிய எந்தக் கொம்பரும் அதைப் புலத்திலிருந்து ஏற்றுமதி செய்யமுடியாது!அப்படிச் செய்வதென்பது மீளவும்,அந்நியச் சக்திகளது அரசியலை முன்னெடுப்பதன் தொடர்ச்சியாகவே பார்த்தாகவேண்டும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.

தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர்நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல் சேட்டைகள்“கூட்டங்களாக-நிகழ்வுகளாக-நினைவுக் கொண்டாட்டங்களாக-விழா எடுப்புகளாக“புலம் பெயர் வாழ்சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் „மாற்றுக் கருத்து-புரட்சிகரக் கட்சிகட்டல்“எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணக் கருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, அறிக்கைப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் புலத்தில் இருக்கப்போவதில்லை.

நிலத்தில்(இலங்கை)அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு, அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறும்.இதைத் திட்டமிட்டே கணித்துச் செயற்படும் அந்நிய நலன்கள் தமிழ் மக்களுக்குள் மீளவும் சதி அரசியலைத் தொடர்கிறது.அதற்குத் தோதான கூட்டத்தை முன்னாளத் தமிழ் இயக்களது மாபியாக் குழுக்களுக்குள் இருந்து தெரிந்தெடுக்க முனைகிறது.அதன் தொடரில் சிக்கியுள்ள பலர் மக்களுக்காகப் போராட அணி திரள்வதாகப் புலம்புவது மக்களைக் கருவறுக்கவே என்பது மிகக் கறாராக விளங்க வேண்டிய உண்மை.

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்“மாற்றுக் கருத்து“என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய நிலையில், இத்தகைய „மாற்றுக் கருத்துக்களை“முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச் சென்றுவிடுகிறதென்ற உண்மையில் அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.அந்நியச் சேவையின் பொருட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.

நாம் எந்தவொரு சூழ்நிலையிலும் விழித்துவிட முடியாதபடி அன்று பாசிசப் புலிகளுக்கூடாகக் காரியமாற்றிய உலக அந்நிய நலன்கள் இன்றொரு முக்கியமான கட்டத்தில் நம்மைத் தொடர்ந்து ஏமாற்றிவரப் புலிகளுக்கு மாற்றானவொரு சக்திகளை முன்னிறுத்திப் புலிகளின் இருப்பை மேலும் நிலைப்படுத்தித் தமது ஆர்வங்களை,பொருளாதாரப் பிராந்திய நலன்களைக் காத்துவருகிறார்கள். இத்தகைய நலன்களுக்குத் துணைபோகும் புலத்துப்புலிகளும்“புரட்சி“க் குழுக்களும் நம்மை இன்னும் ஏமாற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சிகளோடு புலிகளைக் குறைகூறியபடியே அவர்களின் எஜமானகளுக்கிசைவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.இவர்களே புதிய திரட்சியை வலியுறுத்துவதில் தமது பழைய பெறுமானங்களைப் புதிப்பிக்கின்றனர்.இந்தப் பெறுமானத்தின் அறுவடை தமிழ்ச் சமுதாயத்தின் முதுகெலும்பையே முறித்துவிட்டுள்ளதைக் கிஞ்சித்தும் சிந்திக்கமறுத்துப் புதிய பாணியில் அதே தொடர்ச்சியை வற்புறுத்துவது எதனால்?

இது குறித்துப் பேசுவது அவசியம்.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.07.2010

குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்

கட்டுரைத்தொடர் (2):
புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:“அறிவாளிகள்!“

குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்:

ற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்“தமிழீழப் போராட்டம்“குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.

புலம்பெயர் தமிழர்கள் தமது அடையாளங்களை இதுவரை புலிவழிப் போருக்குள் இனங்காண முனைந்தபோது,புலிகளால் கட்டியமைக்கப்பட்ட போலிக் கோசமான தமிழீழம் அவர்களை வலுவாகப் புலிகளோடும்“தமிழீழ“த்தோடும் பிணைத்துக்கொண்டது ஒரு தற்செயல் நிகழ்வாகும்.இலங்கையைவிட்டு வெளியேறிய தமிழர்கள் யுத்தம்-கொலை அரசியலிலிருந்து தப்பவே முயன்றுகொண்டனர்.இதுள்,அந்நியத் தேசங்களது அகதிகளுக்கான நெருக்குவாரங்கள் சந்தர்ப்ப வாதமாகத் „தேசம்-தேசியம்“ எனும் கருத்து நிலைகளுக்கு முக்கியமளிக்கும் அக நெருக்கடிளைத் தமிழ்பேசும் புலம்பெயர் மக்களுக்கு ஏற்படுத்தியபோது அதைப் பலமாகப் பயன்படுத்தியவர்கள் பிழைப்புவாதப் புலிப் பினாமிகளும் அவர்களது பின்னாலிருந்த மேற்குலக-இந்திய எஜமானர்களுமே.

இலங்கையில் தமது அடையாளங்களைத் தேடும்புலம்பெயர் இளைய அகதிகள்தமது பெற்றோர்களது புரிதலிலிருந்து மேல் நோக்கிய புரிதலை மேற்குலகக் கருத்தியற் படிமத்திலிருந்தே பெறுகிறார்கள்.வளர்ச்சியடைந்த சமுதாயங்களது கருத்தியற் படிமத்தில் வந்தமர்ந்த „தமிழீழம்“மேலும் வலுவான அக நெருக்கடியை இளைய தலைமுறைக்கு வழங்கும் பல சந்தர்ப்பங்களை அவர்கள் தமது புற அடையாளங்களை வெள்ளையினத்தவர்கள் எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமது வேர்கள்“தமிழீழத்தில்“பதியமிடத்தான் முடியுமென எதிர்பார்த்தார்கள்.ஆனால்,அந்தத்“தமிழீழம்“சாத்தியமானதா என்ற ஒரு கேள்வியை அவர்கள் புலி வழியிலேயே புரிந்து கொண்டனர்.

இவர்களை நோக்கியதான இன்றைய அணிச்சேர்க்கைகள்-கட்சி கட்டும் இயக்கவாதக் குறுகல் பார்வைகள் எடுத்தாளும் அரசியலை அம்பலப்படுத்தப்படவேண்டும்! இக்கட்டுரையது உள்ளடக்கம் இந்த நோக்கு நிலையிலிருந்தே எடுத்தாளப்படுகிறது,நிலத்தில் வாழும்மக்கள் இதுவரையான அனைத்துக் கொலைகளுக்கும்,அழிவுகளுக்கும் முகங்கொடுத்தவர்கள்.அவர்களது தலைமுறைசார்ந்த அரசியல் தலைமைகள் இதுவரையான அனைத்துக் கொலைகளிலும் ,அழிவுகளிலும் தமது கரங்களை ஏதோவொரு வகையில் திணித்திருக்கின்றார்கள். இவர்களே,இன்று தமது இருப்பினது தெரிவாகப் புலம்பெயர்ந்த மக்களது குழந்தைகளையும்,அவர்தம் அறிவையும் மேற்குலகத் தேசங்களுக்கேற்ற வகையில் தகவமைக்கின்றனர்.இது,ஆபத்தானது!மீளவும்,தமிழீழஞ் சொல்லி இளைய தலைமுறையின்அக வளர்ச்சியை குறுந்தேசிய இனவாதப் பண்புக்கொப்ப மாற்ற முனையும்.இது,புரட்சிகரமாக சமூகத்தைப் புரிவதற்குக் குறுக்கில் நிற்கும் கருத்தியற்றடையை மேலும் இருப்புகுட்படுத்தும்.இத்தகையவொரு சூழல் வலுத்திருந்தபோதுதாம் புலிகளது பாசிசக்கட்டமைப்பு இலங்கையிலும்,புலத்திலும் தொடர்ந்து நீடித்தது.அதைத் தக்கவைக்க முனையும் இன்றைய அணிச் சேர்கைகளது“புரட்சிகர“வாதங்களும்,தெரிவுகளும் இத்தகைய புலவழிக் கட்டமைப்பைத் தொடர்ந்து தமக்குள் உள்வாங்கிப் புலிகளது அதே பாணித் „தமிழீழம்“சார்ந்த பிரமைகளது அரசியல் பிரகடனங்களது வழியில், மேற்குலகத்தின் இலங்கைக்கான அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைகின்றன.

வரலாற்றுப் பேரிடி:

புலிகளின் தோல்வி-புலிகளின் அழிவுதரும் வலி, ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இந்த வலிமிக்க வரலாற்றுப் பாத்திரத்தில் புலிகள் இல்லாத இன்றைய சூழலில், இன்னும் எத்தனை குழுக்கள்-கட்சிகள்,இயக்கங்கள் „புரட்சி-விடுதலை,சுயநிர்ணயவுரிமை“ எனும்பெயர்களால் தமிழ்பேசும் மக்களைக்குட்டியபடி,அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு முண்டுகொடுப்பார்களோ அவ்வளவு பேரும் இனிப் „புரட்சி“ பேசுவார்கள். இவர்களை இனங்கண்டு அம்பலப்படுத்தாதுபோனால் தமிழ்பேசும் மக்களைச்சிங்கள-ஆசிய-மேற்குலக மூலதனத்துக்குத் தத்துக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக்குவதில் வெற்றி கண்டுவிடுவார்கள்.தமிழ்பேசும் மக்களுக்கு விடிவுவேண்டிச் சிந்திப்பவர்கள் இவ்வகைப் போராட்டத்தைக் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது அவசியமான பணி.எனவே,திடீரென முளைவிடும் கூட்டுக்கள்-கழகங்கள்,பொது அமைப்புகளெனும் முகமூடிகளை விலத்தி அவர்தம் உண்மை முகங்களைக் கண்டடையவேண்டும்.

தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான ப+ர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை. ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இதை மேலும் தொடர்வதற்கான பல் முனைப் போராட்டம் தமிழ்மக்கள் பேரால் நடந்தேறுகிறது.

தமிழ்த் (வி)தேசிய „விடுதலை“ப் போராட்டத்தில் புலித் தலைமை வன்னியில் மக்களது குழந்தைகளைத் துடைத்து அள்ளிப் போருக்குள் திணித்துக் கொன்றதில் இன்றெவர் குற்றவுணர்வோடு இருக்கிறார்?

இது,வரலாற்றுப் பேரிடி அல்லவா?

இந்த அழிவுயுத்தம் செய்த வரலாற்றுத் தவறு ஒரு இனத்தையே அழித்து ஏப்பம் விட்டதல்லவா?

இதைக் குறித்துத் தேடுதலைச் செய்து நமது மக்களை சமூக நெருக்கடியிலிருந்து காப்பதற்கு முனையாத கபோதிகள் கட்சி கட்டுவதில் முனைப்புறும்போது,இந்தச் சொறி அரசியலை“புரட்சி“யின் பெயரால் ஆதரிப்பதென்பது அடி முட்டாள்த் தனமானது.இதைப் புரட்சி என்பவர்கள் மனிதசமுதாயத்தின் அசைவியக்கத்தையே புரியாது, அந்நியச் சதிகளுக்கு உடன்படும் பிழைப்பு வாதிகளென்பதில் எவரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

அது,புகலிடச் சிந்தனை மையத்தின்“புதிய ஜனநாக மக்கள் முன்னணி“ஆகவிருந்தாலென்ன அன்றி மே 18 இயக்கமாக இருந்தாலுஞ்சரி அனைவரதும் தெரிவும் இதிலிருந்து மாறுபடவில்லை.

பம்மாத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழருக்கான அரசியலைச் சொல்லியே கால் நூற்றாண்டாக எத்தனை ஆயிரம் தமிழர்களைப் பலிகொடுத்துள்ளது-எத்தனை ஆயிரம் தமிழர்களைத் துரோகி சொல்லிக் கொன்றிருக்கிறது?இது,வரலாற்று நெருக்கடி.ஒரு இனத்தின் வாழ்வோடு களமாடிய வலாற்றுக் குற்றம் இன்னும் குற்றமாகக்கூட புரிய வைக்கப்படவில்லை!அது,தேச நிர்மாணத்துக்கான-இனவொடுக்குமுறைக்கெதிரானவொரு போராட்டமாகவும்,அதுள் சில தவறுகள் நேர்ந்ததாகவும் கற்பிக்கப்படும் வரலாற்று மோசடிக்கு எதிராகப் புதிய புரிதல்கள் வாசிக்கப்பட வேண்டும்.

தொடரும் இயக்கவாத மாயையின்வழி அந்நியச் சேவை:

படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.எனினும், புலிகளது வரலாறு ஏதோவொரு முனையில் பாமரத்தனமாகச் சொல்லப்படுகிறது.அதுவும் வரலாற்றுக் குறிப்பெனப் பதியப்படும் அபத்தம்வேறு.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.

புலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் „புரட்சிக்கரர்“ என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின்மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.

இது,அரசியல் மோசடி!

எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலியழிப்புக்குப்பின் புலிகளது உபக் கூறுகளைப் பயன்படுத்தும் இராஜதந்திரத்தில் நோர்வே முதல் பிரித்தானியவரை தனது வலையை விரிக்கிறது.அங்கே,புலிகளது தனிப்பேட்டை ரவுடிசத்துக்கு „தேசயவிடுதலை-சுயநிர்ணயவுரிமை“போராடமெனப் பரப்புரை செய்த சண்முகரெத்தினம் முதல் „புரட்சிகர“க் கட்சி கட்டும் மர்ம மனிதர்கள்வரை ஏதோவொரு வழியில் தத்தமக்கேற்ற திசைவழியில் அந்நியச் சக்திகளோடு இணக்கமுறுகிறார்கள்.

புலிகளது நிறுவனப்பட்ட பாசிச அடக்குமுறையினது தகர்வுக்குப் பின்பான அரசியலில், தமிழ் பேசும்மக்களோ உயிர் வாழ்வுக்கான தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தம் வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக விருத்தியாகும் (தமிழீழ)போராட்டத்துக்கு எதிரான எதிர்ப்பு உளவியல் தோன்றுவது இலங்கையின் இன்றைய குறை ஜனநாயகச் சூழலில்தவிர்க்கமுடியாதவொரு சமூக அசைவியக்கமாகும். இதைத் தடுத்து அவர்களை மீளத் தகவமைக்கும் குழுக்கள், தமது நம்பிக்கைக் குரிய திசைவழியில் புரட்சியோ அன்றித் „தேசிய விடுதலை“யோ பேசி மக்களை அடிமையாக்குவது அந்நிய நலனினது தெரிவின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.இன்றையபொழுதில்,நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த விய+கங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான குழுக்கள், தமது இருப்புக்கும்-அங்கீகரப்புக்கும் அந்நியச் சேவையைத் தொடர்வதே தெரிவாகக்கொண்டியங்குகின்றன.இதன் உச்சபட்ச விருத்தியாக முகிழ்க்கும் தொடர் சந்திப்புகள்-ஆய்வு வட்டம்,கற்கைப் பட்டறைகள் யாவும் ஏதோவொரு அந்நிய தேசத்தின் அனுசாரணையுடன் அதன் நலன்களுக்கமையத் தமிழ்பேசும் மக்களது உரிமையின்-விடுதலையின் பெயரால் நடந்தேறுகிறது.இங்கே,தம்மைப் பேராசிரியர்களாகவும்,புரட்சிகரர்களாகவும் இனங்காட்டிவரும் நபர்கள்-குழுக்கள் தமது எஜமானர்களிடம் தம்மை நிலைப்படுத்த அடிக்கும் குத்துக்கருணங்கள் கட்சி-அமைப்புள்,அரசுசாரா அமைப்பகளெனக் கட்டிடத் துடிப்பதில் முடிகிறது.

எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான „அதிகாரப் போட்டி அரசியலை“,புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச்சூழலில் „எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே நமது மக்களது வாழ்நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.இதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங்கடந்து,கண்டங்கடந்து நடந்தேறிகிறது.அங்கே,“பேராசிரியர்கள் முதல் புரட்சிக்காரர்கள்“வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்!

இஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது. கடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள்புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன. இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்“புரட்சி-விடுதலை“குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.

தகர்க்கப்பட வேண்டிய இயக்கவாதம்:

இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.

இந்தச் சந்தர்ப்பத்தில்மேலுஞ் சிலதைச் சொல்வது பொருத்தம்.அதாவது, இலங்கை அனைத்து இனமக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த இலங்கைத் தேசத்துக்கு-அதன் பொருளாதார நகர்வுக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது.

தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும். இந்தத் தெரிவானது ஆசிய மூலதனத்துக்கான வெற்றியாக இருப்பதால் இதையுடைத்து ஆசிய மூலதனத்துக்கான நெருக்கடிகளை தமிழ் மக்களது விடுதலையின் பெயரால்கொடுப்பதற்குத் தயாராகும் இன்னொரு இயக்கவாத போராட்டமுறைச் சுற்று களத்துக்கு வருவதில் பல நலன்களது தெரிவு இயக்கமுறுகிறது.இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி இலங்கையினது சுய வளர்ச்சியை மட்டுப்படுத்தித் தமது நோக்கங்களுக்கான தொங்கு நிலைத் தேசமாக்குவதில் அதிக அக்கறையுடைய தேசம் இப்போது நோர்வே என்பது தெரியவருகிறது.

அண்மைக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கான இராணுவ அடியாள் இஸ்ரேல் என்பதுபோல ஐரோப்பாவில் நோர்வே அமெரிக்காவினது அரசியல் அடியாள்.இதன்வழி ஆசியாவில் இழந்த தனது வல்லமையைத் தக்கவைக்க நோர்வேயூடாக இலங்கையில் பற்பல நெருக்கடிகளை புதிய குழுக்களின்வழி நோர்வே ஏற்படுத்தும் தெரிவாகவே இந்தப் புதிய கட்சிகள்-குழுக்கள் அணியுறுவதும் புரட்சி பேசுவதும் சாத்தியமாகிறது.

இன்றைய தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளது வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை. கணிசமான பொருளுற்பத்தியானது, இன்று மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன. இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்“மார்க்“ வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும். இங்கே, இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது. இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினதும்,இந்தியாவினதும் பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இதன் பாரிய நெருக்கடியே இன்றைய தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் நெருக்கடியாக மாற்றப்படுகிறது.இதைக் குறித்து அந்நியத் தேசங்களுக்குக் கூஜாத் தூக்க முந்தும் அவசரமே கட்சிகள் கட்டுவதன் அவசரத்தில் பற்பல புரட்சிக்காரர்களை பற்பல முறைமைகளில் கட்சிகட்டும் நியாயத்தை முன்வைத்து இயங்கக் கோருகிறது.

புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதன் தொன்மையான புரிதலில்“புரட்சிகர“கட்சியென்ற வடிவத்தில் எதிர்புரட்சிகரக் குழுக்களை உருவாக்கும் அந்நிய சக்திகள் அக் குழுக்களை உண்மையில் தமது எதிரிகளாக இயங்கவே அனுமதிக்கிறார்கள்.இதனால்,இவர்கள் சாரம்சத்தில் அந்நியச் சக்திகளை எதிர்ப்பதையும்,மக்களில் பெரும் பகுதியை மயக்கி அவர்களது எதிர்ப்பு அரசியலையே காலத்துக்கு முந்திக் கட்சிகட்டி எதிரிக்கு ஆட்காட்டிச் சிதைப்பதில் சாத்தியமான சமூக அசைவியக்கம் முகிழ்கிறது.இது செயற்கையான -புரட்சிகர நிலவரத்தை-புரட்சிகரச் சூழலை ஒரு சமூகத்துக்குள் உருவாக அனுமதித்து இயங்கிறது.அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயத்தை இப்போது தமிழர்களைப் பயன்படுத்தி இலங்கையில் மீளத் தகவமைக்கும்இயக்ம்- கட்சிகட்டும் அரசியல் பிரவேசத்தில் இனங்காண முடியும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது விடுதலைக்கு எதிரானதும்,அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கான தடைக் கற்களாகவுமே இருக்கும்.

தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.06.10

தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்…

புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:“அறிவாளிகள்!“

கட்டுரைத்தொடர்: (1) 

தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்:

லங்கையில் இனங்களுக்கிடையிலான மூலதன வளர்ச்சியானது பெரும்பாலும் ஒரு பெரும் வரலாற்று அழிவை இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் ஏற்படுத்தி மேலும் தகவமைக்கும் அரசியல் நெருக்கடிகள், மெல்ல உயர்த்தும் முரண்பாடுகள் , இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் குரோதத்தை வளர்த்து இரத்தங்குடிக்கக் காத்திருக்கிறது.இதை ஊக்குவிக்கப் பல தளங்களில் உசாராகும் அந்நிய நலன்கள், இலங்கை மக்களது ஜனநாயக விழுமியங்களைக் காலிற்போட்டுமிதிக்கும் சர்வதேசச் சதிகளை இனங்களுக்குள் இருக்கும் கட்சிகள்-குழுக்களைப் பயன்படுத்திச் செல்லும் அரசியல் திசைவழியானது புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு வகையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

அஃது, இது காலவரையான அனைத்து அரசியல் நடாத்தைகளையும் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயம் முன்னெடுத்த பெரும்பகுதி ஆதரவுக்கான புலிகளது அரசியல் கூச்சல்“தமிழீழத்தை“க் கனவுக்குட்படுத்தியபோது,அதை நோக்கிய எதிர்பார்ப்பு பொருட் செலவில் மையங்கொண்டிருக்க இப்போது, அதன் தொடர் நிகழ்வுகள் அதே“தமிழீழத்தை“ ஏலம் போட்டுப் „புரட்சி-கட்சி“என அந்நியத் தெரிவுகளில் இருப்புக்கான போராக விரிகிறது.இது குறித்த சரியான புரிதலின்றி „பேராசிரியர்“ சண்முகரெத்தினம்,மற்றும் „புகலிடச் சிந்தனை“ மையத்தின் தொடரான புதிய புரட்டுக் குறித்துவொரு தெளிவான நோக்கு நிலைகளை நாம் பெறவே முடியாது.சம்பந்தப்பட்ட நபர்கள்-குழுக்களுக்கான அந்நியத் தெரிவுகள்“விடுதலை-புரட்சி“எனத் தொடராகப் புனையும் கருத்தியல் யுத்தத்தில் மக்களது அடிமை வாழ்வு மேலும் இருப்புக் குள்ளாகிறது.

இதுவரை, இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களது எந்த வாழ்வியற்றேவைகளையும் நிறைவு செய்ய முடியாத தமிழ் அதிகார மையங்கள் அம் மக்களது உயிர்வாழ்வைக் குறித்துப் புதிய புனைவுகளது தெரிவில் பேசுகிறார்கள்.இவர்களது சுய தெரிவு அவ் மக்களது எதிர்ப்புக் கூறுகளைத் தமது வரும்படிக்கான-பதவிக்கான உந்துதலாகக் கனவு காண்கிறது.

இது குறித்து நாம் நிறையக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்.

பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதன், மறு விளைவாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் நிரந்தரமாகப்படுகிறது. புலிகள் அழிந்தாலும் அவர்களது எச்சங்கள் பல வடிவங்களில் புதிய மாதிரிகளை உருவாக்கிக் கட்சி-அமைப்பாகுதலெனக் குமுறுகின்றனர். இவர்களில் பற்பல குள்ள நரிகள் „பேராசிரியர்களாகவும்-போராசிரியர்களாகவும்“ ஏலவே அறியப்பட்ட தமது பிம்பங்களுக்கு நடுவே கோலமிடும் அரசியல் நகர்வானது, எமது மக்களுக்கு மேலும் அரசியல் நெரிக்கடிகளைச் செய்யக் கூடியவை.இந்தப் புள்ளியை இலக்குப் படுத்தும் இக் கூட்டம் பரந்துபட்ட மக்களது எதிரிகளாக இனங்காணப்படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.இது தொடராக என்னால் வலயுறுத்தப்படும் வெகுஜனக் கருத்தின் தெரிவாகவே இருக்கிறதென நம்பிக் கொள்வதில் எந்தக் குறைபாடும் இருக்க முடியாது.

மக்கள்:

ஒருகட்டத்தில் மக்கள் இனங்களாகவும்-மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் பொருளாதார ஆர்வங்களுக்காகக் கூறுபடும்போது, அத்தகைய முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள மேட்டுக்குடிகள்(ஓடுக்குபவர்கள்) தமக்குள் நடந்தேறும் அதிகாரத்துக்கான பங்குச் சண்டையில், இனத்தை,மதத்தை,மொழியை முதன்மைப்படுத்திப் போராட்டத்துக்குப் போராளிகளை அப்பாவி மக்களிடமிருந்து தட்டிப் பறித்தெடுக்கின்றார்கள். இதன் தர்க்கால நடாத்தையைப் புலிகளது போராட்டத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள் மிக நன்றாகவே அறியும்-புலம் பெயர்ந்த தமிழர்களை மேலும் இது குறித்துச் சிந்திப்பாயாகவென எவரும் வற்புறுத்த அவசியமில்லை.தற்போதைய கட்சிகட்டும் கிறுக்குப் புத்திக்கு ஒப்பாரி வைக்க தெரியுமளவுக்கு உலக அரசியல் வியூகம் தெரிந்திருக்கவில்லை! அதைத் தெரியவேண்டுமென எவரும் வற்புறுத்தத் தேவையில்லை.ஏனெனில்,“ஏன்-எதற்கு“என்ற கேள்விகளைக் கேட்காது தலைமை வழிபாட்டில் புலியைப் பீடத்தில் ஏற்றிய தமிழ் மனதுக்கு எல்லாஞ் சரிதாம்.“ஆரு குத்தியும் அரிசி ஆனால் சரிதாம்“என்ற மிகக் கெடுதியான சுய நலப் புத்திக்கு இன்றைய அரசியலையும் அதுசார்ந்து இயங்கும் தமிழ் கபடவாதிகளையும் அறிய முடியாதுதாம்.இந்த நிலையில் அன்றைய சரித்திரம் மீள முடிகிறது…

இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள் இன்று!. இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புலம்பெயர் „புரட்சி“க் குழுக்கள் தமது இருப்புக்காக-அந்நியத் தொழுகைக்காக நம்மை ஏமாற்றச் சமர்ப்பிக்கும் கட்சி-அமைப்பாகும் ஆலோசனைகள் அதுசார்ந்த அலகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம். இதைப் பேதமையான புரிதல் „புரட்சியின்“இடி முழக்கமாக இனங்கண்டால் அது,புலித் தலைமைக்குக் கட்டிய ஒளிவட்டத்தின் தொடர்ச்சியாகவே வரலாற்றில் பதியப்படும்.

கட்சி கட்டும் அவசரம்:

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான „கட்சி“கட்டுவதற்கான ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.பிணம் தின்னிகளான இந்த மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, தம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.நமது மக்களது உரிமைசார் கோரிக்கைகளைக் குலைக்க முனையும் சக்திகள், எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு ஐக்கிய இலங்கைப் புரட்சிகர அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில்,இலங்கையில் இனங்களுக்குள்பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி ,நமது இறைமையைச் சிதைப்பதில்இலங்கை மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

ஐக்கிய இலங்கை, புரட்சிகரமாக மாற்றப்பட்டு மக்களுக்கான அரசு-கட்சி ,அதிகாரத்துக்கு வருவதற்கான தொடர் நிகழ்வுகள் இலங்கைப் பொருளாதார நகர்வுகளோடு தன்னை இணைப்பதென்பது இந்திய-சீன மற்றும் மேற்குலக அரசுகளுக்குக் காவடி தூக்குவதென்ற அர்த்தமாக முடியாது!இது வழமையான பூர்ச்சுவா அரசு குறித்த புரிதலை விட்டகன்று , புதிய தெரிவுகளின்வழி இன்றைய பொருளாதாரவியக்கத்தில் அரசுக்கும் மக்களுக்குமான பங்கு என்னவென்ற புரிதலின்வழி ,அவ்வரசைத் தூக்கியெறியும் மக்களது தர்க்காலிகச் சமூகவியக்கம் தன்னையொரு மக்கள்சார் அலகாகக் கண்டு,அரசுக்குரிய பண்பை கருத்தளவில் வைத்து முன்னெடுக்கப்படவேண்டும்.இதுவே, இன்றைய பூர்ச்சுவாக் கட்சிகள்-அரசுகளுக்கான மாற்றாக மக்கள் தமது உரிமைகளைக் கையிலெடுப்பதென்பதன் நோக்காகும்.இந்த நோக்கே புரட்சகரகட்சியின் தெரிவில் ஒருகட்டத்தின் முன் நிபந்தனையாகும்.இது,முழுக்க-முற்றாக, மக்களது சுய ஆளுமையில், அவர்களது மண்ணிலிருந்தே எழ முடியும்.இதைப் புலம் பெயர் மண்ணில் பெயர்த்தெடுக்க விரும்புபவர்கள் அன்றைய இந்திய மண்ணிலிருந்து இயக்கங்கட்டிப் போரிட்டவர்களது கால் அடிகளை மறந்துவிட முடியுமா?

ஆழ்ந்து யோசித்தால்,இவர்களின் வரலாறு நமக்கு எதிரானதாகவே இருக்கிறது!தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.இத்தகைய வரலாற்றுத் தொடர்ச்சி இன்னொரு முனையில் புரட்சிகர வேடம் பூணும்போது, அதையும் மக்கள் நலனினது தெரிவில்“புரட்சிகரக் கட்சி“யாக எவரும் குறித்துரைக்கலாம். எனினும்,அது கெடுதியான முகவுரை எழுதும்போது புலிகளது அழிவுக்குக் கூறிய காரணத்தால் மீள நம்மைத் தேற்றியுங் கொள்ளலாம்.

இலங்கையில் கட்சி-இயக்க அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
25.06.2010

நமது மக்களது அழிவில் எதை முன்னிறுத்துகிறோம்?

„புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை

இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப்

புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும்,

மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில்

உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது

புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச்

சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது

பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள்

முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின்

சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு.“

நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும்.பகுதி:3 -(இப்போதைக்கு இறுதிப் பகுதி இஃது.)

>>>அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறது<<<

ப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.புலிகள் போராடி மடிவது தியாகம் என்றும் அழிவு யுத்தத்துக்கு வரைவிலக்கணங் கற்பிக்கப்படுகிறது!வன்னி மக்களது அழிவுக்குப் புலிகளும் சிங்கள அரசும் காரணமானாலும் புலிகளது போராட்டத்துக்குத் தியாகங்கற்பிக்கும் அரசியலே மிகக் கடைந்தெடுத்தப் புலி அரசியலின் நீட்சியாக மக்களைக் கருவறுக்கிறது.இது,புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழர்முதல் புரட்சிபேசும் புலிப்பினாமிகள்முதல் „ஒரு தமிழன் இருக்குவரை போராடி மடி“எனும் பாசிச மொழிக்கொப்ப ஆளும்வர்க்கக்களின் அடவாடித்தனமான யுத்தம் மக்களுக்கான விடுதலைக்கான புறவயச் சூழலை ஏற்படுத்தும் காரணத்துக்காகத் தலைவணங்கி வரவேற்கப்படுகிறது.

நாம் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம்.புலிகளது தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம் இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.இன்று,வன்னிக்குள் தினமும் செத்து மடிபவர்களுக்கு புலிகள் சரணடைவது துரோகம் என்று கூறும் புலிகளாலும், இறுதிவரை போராடி மரிப்பது என்ற அதன் அழிவு அரசியலாலும் ஆபத்தான சூழலையே மேலும் அழைத்துவருகிறது.

மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுதித் தயாராக்கும் புலி-இலங்கை அரச பயங்கரவாதத்துக்கும் கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் செத்து வருகிறார்கள்.இந்த இரண்டு பயங்கரவாதத்துக்கும் பெயர்“தேசிய விடுதலை-ஜனநாயகம்-பயங்கரவாதத்துக் எதிரானபோர்“இன்று.

சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது.வலுகட்டாயமாக வன்னிமக்களைத் தம்மோடு அழைத்துச் சென்ற புலிகள் தற்போது அதே மக்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள்.இதனால் தமது தலைமையைக் காப்பதற்கான கேடயமாக மக்கள் பயன்படுத்தப்படும்போது இவர்களது „இறுதிவரையான போராட்டத்தை-போராடி மரி“ப்பதை ஊக்குவிக்கும் புலிச் சிந்தாந்த வல்லுனர்கள் புலிகளிடம் „மக்களை விடுவிக்கும்படியும்,போராட விருப்பமற்றவர்களை விட்டுவிட்டுப் போராட்டத்தோடு இணைந்து போராடுபவர்களோடு இணைந்து, இறுதிவரை சரணடையாது போராடி மரிக்கத் தயாருகும்படி“ கோருகிறார்கள்.இது, அன்று தொட்டுக் கட்டாயப் போராளிகளாக்கிய ஒரு இயக்கத்துக்குச் சிறார்களை அவர்களது பெற்றோரின் அனுமதியின்றி இயக்கத்துக்குப் பிடித்துச் சென்றவொரு இயக்கத்துக்கு விடுவிக்கும் கோரிக்கையென்பதை நாம் முதலில் புரிவோமானால் இந்தப் புலிப்பினாமிகளது சித்தாந்தத்துக்குள் புலிகளது அழிவு அரசியலே புரட்சிகரமானதாகவும்,தேசிய விடுதலைக்கானதாகவும் கட்டியமைக்கப்படுவதை மிக இலகுவாக நாம் அறிய முடியும்.

மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை.மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் „தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்“என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைப்பதைச் „சரணடையாது போராடி மடிதல்“ என்றுரைக்கப் புலிகளது சித்தாந்தம் இப்போது புரட்சிகர வேடங்கலைத்துத் „தியாகம்-துரோகம்“ என்கிறது.

பாசிசம் என்பது ஒரு கொடிய நோய்.அது,மனிதப்பரப்பில் எத்தனையோ உயிர்களைத் தேசத்தின் பெயராலூம்,இனத்தின் பெயராலும் அழித்து மனித வரலாற்றையே கொலைகளது வழி கற்பிக்கிறது.நாம்,கிட்லரையோ அல்லது முசேலினியோ அல்லது ஸ்டாலினையோ பாசிசத்துக்கான புரிதலுக்குள் உள்வாங்குவதைவிட இவர்களையும் கடந்து இன்றைக்குச் சிந்திக்க வரலாற்றில் பல நிகழ்கின்றன-நிகழ்ந்தன.

இதுள்,புலிகளது இயக்கவாதம்-போராட்டச் செல்நெறி,அவர்களது இயக்க நலன் மற்றும் தலைமையின் நலனுக்கானதும்,அந்நியச் சேவைக்குமான இந்த „தமிழீழப் போராட்டம்“மிகவும் புரிந்துகொள்ள முடியாதளவுக்கான பாசிசக் குழப்பத்தால் „தியாகம்-துரோகம்“எனும் பாரிய உளவியல் நெருக்கடியை நமக்குள் உருவாக்குகிறது.மக்களது அறிவைக் காயடிப்பதற்குப் புரட்சிகர வேடமிட்டவொரு புலிக் கும்பல் எப்போதுமே தயாராகக் கணினிமுன் கிடந்து தமது தொழிலைச் சுத்தமாக முன்னெடுக்கிறது.இங்கே, மக்களது அழிவைத் தமக்கு முடிந்தவரை எதிர்ப்பதாகக்காட்டி அவர்கள் செத்து மடிவதைத் தியாகமெனவும் புலிகளுக்கூடாகக் கருத்தை வடிவமைக்கிறது.இந்தச் சமூகவிரோத அரசியல் நடாத்தையைக் கேள்வி கேட்பவர்களைச் சிங்கள அரசினது கைக்கூலிகளாகவும் இந்தக் கும்பல் வசைபாடுகிறது!

நாம்,எங்கே போகிறோம்?

நமது மக்களது அழிவில் எதை முன்னிறுத்துகிறோம்?

புரட்சிகரமான அரசியல் வேலைத் திட்டமென்பதற்கான கருத்துப் பகிர்வில் புரட்சிகரப் புறவயச் சூழலையே காயடித்து அழிவு யுத்தத்தைத் தியாகமானதாகவும்-இலட்சியமுடையதாகவும் கருத்துக்கட்டி யாரது-எந்த வர்க்கத்து நலனைக் காக்க முனைகிறோம்?

இது மிக அவசியமாகப் புரியவேண்டிய தருணம்!

எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதை முன்னின்று நடாத்தும் புலிகளது சிந்தாந்தத் தலைமை மேலும் போராடிச் செத்துப் போவதற்குப் போராளிகளையும் மக்களையும் ஊக்கப்படுத்துகிறது.இது கடந்த காலத்தில் புலிகளது இராணுவக்கட்டமைப்பை „தேசிய விடுதலை இராணுவமாகவும்“தமிழீழத்தின் படையணியாகவும் கருத்துக்கட்டியது.இப்போது இப்பிழையான போராட்ட நெறியைத் தியாகமாக்க முனையும் ஒவ்வொரு பொழுதும் புரட்சிக்கான புறவயச் சூழலுக்குப் புலியைத் தியாகத்தின்வழி அழிப்பதாகப் பாசிச உரையாடலைப் புரட்சிகரமாக்குகிறது.

இது,ஆபத்தானது!

இவர்களை எங்ஙனமும் வெற்றிகொளவது அவசியம்.

போலித்தனமாகப் புரட்சி பேசுகின்ற புலிகளது கைக்கூலிகள் நமது மக்களது அழிவை-போராளிகளின் சாவை புரட்சியின்பால் தியாமெனச் சொல்வது மனித நடாத்தைக்குப் புறம்பானது.இங்கே,மனிதாபிமானம் என்பது கிடையவே கிடையதென்றும் இவர்கள் கூறுகிறார்கள்.இதன் உள் அர்த்தம் இதுவரை புலிகளால் காயடிக்கப்பட்ட அனைத்துக் கொலைகளுக்கும் தேசத்தினதும்,விடுதலையினதும் பெயரால் நியாயங் கற்பிப்பதும்,தியாகத்துக்காக-விடுதலைக்காக அவர்கள் செய்வதாகச் சொல்லும் பாசிச யுத்தத்தை நியாயப்படுத்துவதில் மிக நாசுக்காக இந்த மக்கள்விரோதிகள் சித்தாந்த எல்லைக்குள் ஒளிந்தபடி மிக நேர்த்தியாகச் செஞ்சோற்றுக் கடனை ஆற்றுகிறார்கள்.

தமது நடாத்தையைக் கடந்தவொரு மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலுமூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது.

இதற்காகத் தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி“புலிகளைச் சரணடையச் சொல்பவர்களை,அரசினது கைக்கூலி“என்றும் கருத்துக் கட்டுகிறது.இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.இங்கே,மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும் புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.

அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.அவர்களது வாழும் விருப்பத்தை அழித்துத் தத்தமது எஜமான விசுவாசத்துக்காகக் கூஜா தூக்கும் ஒருகூட்டம் நாளாந்தம் தத்துவ விளக்கக்கட்டுரை போடுகிறது.இதையும் மக்களுக்குச் சார்பான மொழிகளுடாகப் புனைகிறது.இத்தகைய கொடியவொரு சூழலில் மக்களைப் பலியாக்கும் புலிகளதும், இலங்கை அரசினதும் பரப்புரைப் பீரங்கிகள் மக்களது நலனையே திரித்துத் தமது தரப்பை நியாயப்படுத்துகிறார்கள்.இவர்களது நோக்கம் எப்படியும் நிறைவேறுவதற்குச் சாதாரண மனிதர்களது யுத்த எதிர்ப்பு உணர்வை ஏதோவொரு பக்கத்துக்குச் சார்பாக்கி இக் கொடியவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

அன்பு வாசகர்களே,பரந்துபட்ட புரட்சியின் சமூக அடிப்படைகள் எதுவுமற்ற இன்றைய சூழலில்,ஒப்பீட்டளவில் சமாதானத்துக்கான(சரணடைவு அல்லது இருதரப்பும் யுத்த நிறுத்தஞ் செய்வது) முன்னெடுப்பே இலங்கையில் பாட்டாளிய வர்க்கத்துக்கும், அதன் முன்னணிப்பாத்திரத்துக்கும்,மக்கள் ஜனநாயக(புதிய ஜனநாயக)வடிவத்தினது பொது அம்சத்தை நிர்ணயிக்கிறது.இந்த உண்மையைத் திரிக்கும் ஓடுகாலிகள் இறுதிவரைப் போராடி மடி என்பது புலிகளது தலைமையைக் காப்பதற்கானதாக மாறுகிறது.மக்களதும்,போராளிகளதும் தியாக உணர்வைக் கொச்சைப்படுத்தி மனித இருத்தலையே கீழாக மதிக்கும் உளபாங்கைப் புரட்சியின் பெயரால்-பாட்டாளிகளின் பெயரால் சரியானதென வாதிட்டுப் புலிகளைத் தியாகிகளாக்கி முழு மக்களையும் வேட்டையாட முனைகிறார்கள்.

இதைக் குறித்து நிறைய விவாதித்தாகவேண்டும்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டப் பாத்திரத்தில் புலிகளது போராட்டச் செல்நெறி தவறானதென்பதும்,அது அந்நியச் சக்திகளால் வழிநடாத்தப்பட்டவொரு எதிர்புரட்சிகர அணியென்பதும் மறைக்கப்பட்டு, மக்களுக்காகப் போராடி மறையும் ஒரு இலட்சிய அமைப்பாக வரலாற்றில் பதியமிடப் புலிப்பினாமிகள் தமது வலுவுள்ளவரை சித்தாந்தைத் திரிக்கிறார்கள்.

இன்றைய சூழலில் யுத்தமற்ற இலங்கையும் அதன் பாராளுமன்ற போலி ஜனநாயச் சூழலும் அவசியமானதாகவே இருக்கிறது.இந்தப் பூர்ச்சுவா ஜனநாயகத்தின்மீதுதாம் நாம் அடுத்த கட்டத்தை நாடும் புதியஜனநாயகப் புரட்சிக்கான மக்கள் முன்னணி எனும் ஸ்தாபனம் கட்டியமைக்க முடியும்.இது,இலங்கைத் தொழிலாளிவர்கத்தையும்(அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகியுள்ள பாட்டாளிகள்),விவசாயிகள் மற்றும் ஏகாதிபத்தியத்தாலும் தரகு முதலாளிகளாலும் பழிவாங்கப்பட்ட நகரக் குட்டிமுதலாளிய வர்க்கம்,இதுசார்ந்து சிந்திக்கும் அறிவுத்துறையினரின் கூட்டோடே சாத்தியமாவதாகும்.இந்த மக்கள் முன்னணியின்றி இலங்கையில் ஒரு துரும்பைக்கூடப் புரட்சியின் பெயரால் ஆற்றமுடியாது.இங்கே, இலங்கைவாழ் அனைத்து இனங்களும் பரஸ்பரம் இன ஐக்கியத்தைக் கடைப்பிடிக்குமொரு குறைந்தபட்ச ஜனநாயகச் சூழல் அவசியமாகிறது.இது,இலங்கையில் இராணுவ முனைப்புடைய அரசுகளாலும்,இயக்ககங்களாலும் அழிக்கப்பட்டு, இலங்கை அரை இராணுவ ஆட்சியாக மாற்றப்பட்டபின் புரட்சிகர முயற்சிக்குப் பாதகமான சூழலே இப்போது நிலவுகிறது.

புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப் புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும் மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில் உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச் சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள் முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின் சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு.குறிப்பாக அமெரிக்கா.தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பகுதியைப் பிளந்த அமெரிக்க நலன் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை ஒருபோதும் தீர்க்க முனையாது.எனவே,யுத்தம் நிறுத்தப்பட்டு அல்லது புலிகள் சரணடைந்து இலங்கையின் இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமைக்கான சூழல் உருவாக்கப்பட்டாக வேண்டும்.இதற்காக இன்றைய புலிகளது அழிவுப் போராட்ட ஜந்திரம் தோற்கடிக்கப்பட்டு (இங்கே,கவனியுங்கள்:நான் சொல்வது புலிகளது யுத்த ஜந்திரமாகும்,அவர்களைப் பூண்டோடு கொல்வதல்ல.இது அவர்கள் மீளவும் இலங்கை அரசியலில் தமது தரப்பு அரசியலை ஜனநாயவழிக்குள் முன்னெடுத்து இயங்க அனுமதிப்பதுதாம்.பூர்ச்சுவா ஜனநாயகத்தில் தமது ஆயுதங்களை இழக்கும் புலி, மக்களிடம் அம்பலமாக இதுவே சரியானதொருவழி,அவ்வியக்கம் தவறானவழியில் தமிழீழப் போலிக்கோசத்தால் இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமானது.இவ்வியக்கம் அதற்குப் பொறுப்பேற்று வரலாற்றில் தண்டிக்கப்பட மக்களது வலுவுக்குள் வாழ்ந்தாக வேண்டும்,அரசிலை முன்னெடுத்தாகவேண்டும்.இங்கே,இன்னுமொரு புலிகளது அரசியல் நடாத்தையையும் கவனியுங்கள்.அதாவது,புலியைப் பிளந்து கருணா „ஜனநாயக“ச் சூழலுக்குள் இழுத்துவரப்பட்டு இலங்கைச் சட்டவாக்கத்துள் அரசியல் செய்யும்போது,கருணா தனது கடந்தகால அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாவினது தலையில் சுமத்துவதும்,அதைக் கண்ட புலிப்பினாமிகள் பிரபாகரனை ஒரு அப்பாவியாகக் கட்டுரை புனைந்ததையும்.இங்கே தத்தமது கொலை அழிவு யுத்தத்தைப் பொறுப்பெடுக்காததும்,தண்டைனுக்குள்ளிருந்து தப்பிக்கொள்ளவும் இவர்கள் மிக அவதானமாக இருக்கிறார்கள்.இதன் உச்சக்கட்டம் புலியினது அழிவுக்குத் தியாகங் கற்பிக்கிறது.தூ…என்னவொரு பிழைப்பு.இதைவிடப் பிச்சையெடுத்து வாழுங்கோடா!), அந்நியச் சக்திகளது நலன்கள் இலங்கையில் வீரியமற்றதாக்கப்படவேண்டும்.அங்ஙனம் உருவாகும் இலங்கையில் தொழிலாள வர்க்கத்துக்குப் பிரதான எதிரியா இலங்கை அரசே முன் நிற்கிறது.இது,புலிகளையும்,இலங்கை அரசையும் எதிர்கொண்ட சூழல் இல்லாதாக்கப்பட்டு,இலங்கை அரசையும் ஏகாதிபத்தியங்களை வலுக்குன்றிய குழுக்களுக்குள் மற்றும் கட்சிகளுக்கூடாக எதிர்கொள்வதாகவே இருக்கும்.இப்போது இலங்கை வாழ் தொழிலாள வர்க்கம் மிகப் பெரும் இரு எதிரிகளைப் பிரதானமாக எதிர்கொள்கிறார்கள்.இவை இரண்டுமே போட்டி போட்டு அந்நிய நலன்களை இலங்கைக்குள் திணிக்கும்போது இலங்கையில் புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்டு முற்போக்குதளம் நிர்மூலமாக்கப்படுகிறது.

இந்த உண்மை புரட்சியினது புறவயச் சூழலைச் சரியாக மதிப்பிடும் அரசியல் தத்துவார்த்தத் தளத்திலிருந்து உருவாகிறது.குறுந்தேசிய வாதப் பரப்புரை செய்யும் புலிப் பினாமிகள் புரட்சியைக்காட்டிக் கொடுக்கும் புலிக்கு வக்காலத்து வேண்டுவது அவர்களது தொழிலாகப் புலிகளால் நிறுவப்பட்டது.இது,கக்கும் புரட்சிகரத் தத்துவமென்பது திரிவுவாதமாகும்.இதைத்தாண்டி நாம் இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகச் சூழலின் அவசியத்துக்காகவும்,மேற்சொன்னபடி அரசியலை முன்னெடுக்கவும் புலிகள் தமது அந்நியச் சேவைப் பாத்திரத்தைவிட்டு ஒதுங்குவதற்குச் சரணடைவதால் மக்களைக் காப்பதும்,போராளிகளைக்காப்பதும் கூடவே இலங்கைப் பாட்டாளியவர்க்கத்தின் எதிரியைத் தகுந்த முறையில் எதிர்கொள்வதற்குமான புரட்சியின் புறவயச் சூழலை முன் தள்ளவே இதை ஒரு அரசியலாக முன்வைக்கிறோம்.எனவே,புலிகள் தமது பாசிசக் கட்டமைக் குலைத்துச் சரணடைவதும் அந்நியச் சேவைக்காகக் காரயமாற்றும் அவர்களது வெளியுலகப் பிரமுகர்கள் மேலும் தமது குருதிக்கறைபடிந்த கரத்தைத் தமிழ்பேசும் மக்கள்மீது திணிப்பதைத் தவிர்ப்பதும் அவசியமானவொரு பணியாகிறது.

யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களும் மற்றைய இனங்களும் தமது ஐக்கியத்னூடாகப் பொது எதிரியானதும் அந்நியச் சக்திகளுக்கு உடந்தையானதுமான இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்ள, இலங்கையின் அனைத்து இனமக்களும் ஒன்றிணைந்து போராடும் சூழலின்றி இலங்கையில் புரட்சிகரப் போராட்டமும் இனங்களுக்கிடையிலான சுயநிர்ணய உரிமையும் நிலைக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்

19.04.09

%d Bloggern gefällt das: