இந்தத் தமிழினம் வாழுமா?

„ஈழத் தமிழனுக்கு“ விடுதலை ஒரு கேடா?-தூ!

மிழர்கள் படு மோசமானவர்கள்.உலகத்துள் எப்போதும் ,தமது பிழைப்புக்காக மற்றவர்களது கண்ணீரையும்,தேசவழிப்பையும் நியாயப்படுத்தித் தமது எசமானர்களிடம் தமக்குப் பங்கு கேட்பவர்கள்.
ஈராக்கில் ,இலிபியாவில் ,யுக்கோஸ்லோவியாவில் எத்தனை இலட்சம் மக்களை அமெரிக்க -மேற்குலக ஏகாதிபத்தியங்கள் கொன்றன?
அந்த மக்களது இன்றைய அவலத்தை ,நியாயப்படுத்தும் இந்தத் தமிழர்கள் தமக்கு நியாயம் வேண்டுமெனப் பாசிச ஏகாதிபத்தியவாதிகள் செய்த கொலைகளை நியாயமென அட்டை தூக்கி வீதிக்கு வருவது வேடிக்கையானது.
உலகத்துள்  அமெரிக்க -மேற்குலகப் பாசிச வாதிகளால் அடிமைப்படுத்தப்படும் ஈராக்க, இலிபிய, யுக்கோஸ்லோவிய மக்களையெல்லாம் இந்த ஏகாதிபத்தியத்துக் காட்டிக்கொடுக்கும் தமிழர்கள் ,விடுதலை பெறுவதென்பது பாவமான செயல்!
இவர்கள் ,இந்தப் புவிப்பரப்பில் வாழ்வதே கொடுமையானதென இந்த அட்டைகள் பேசுகின்றன!
இதனாற்றான் இத்தகைய மோசாமான ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் தமிழர்களது அரசியலுக்கும்-போராட்டத்துக்கும் எந்த முற்போக்குத் தேசமும் தலை சாய்ப்பதே இல்லை!
குறிப்பாகக் கியூபா மற்றும் வெனிசூலா , தேசங்கள் கூடத் தமிழர்களது பிழைப்பு வாதத்துக்கெதிராகவே நமது மக்களது அழிப்பைக் கண்டுகொள்ளவில்லை!
பல இலட்சக் கணக்கான மக்களை அரபுத்தேசத்தில் அழித்துவரும் ஏகாதிபத்தியங்கள் ,பொய்யைச் சொல்லி அவர்களது தலைவர்களைக் [Saddam Hussein,Muammar Muhammad Abdassalam Abu Minyar al-Gaddafi,Slobodan Milošević ]கொன்றுபோட்டத்தை நீதியென்று உதாரணப்படுத்தும் தமிழ் அரசியல் பிழைப்புவாதிகளையும் ,அவர்களது பின்னே தலையசைக்கும் புலம்பெயர் இளைய மந்தைக் கூட்டத்தையும்  எந்த அறமும் மன்னிக்கவே மாட்டாது.
இந்தவினம்  ஏகாதிபத்தியங்களது தயவில் பிழைப்புக்காகக் கொலை செய்யவும் ,மற்றைய இனங்களது அழிவைப் பார்த்து மகிழவுமே பழக்கப்பட்டது.
ஆரோக்கியமான-புரட்சிகரமான சமுதாயத்தை இலங்கையில் கட்டியெழுப்புவதையே மேன்மையான நோக்கமாகக் கொண்டு,மக்கள் திரள் எழிச்சியை-இனங்களுக்கிடையிலான தோழமையுடன் கட்டி வழி நடாத்திச் சிங்களச் சியோனிசத்தை வீழ்த்வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த மக்களினங்கள் தவறவிடும் துர்ப்பாக்கிய நிலையையும்,பாரிய மனித அவலங்களையும் இத்தகைய ஏகாதிபத்தியங்களுக்குக் கூஜாத் தூக்கும் கயமைத்தனமான அரசியில் ஏற்படுத்தி விடுகிறது.
இதற்கு, எந்த ஆன்மீக – அரசியல் அறமும் ஒரு பொருட்டே இல்லை.
„யாரு செத்தாலும் பறுவாயில்லை அள்ளுவதற்குச் சில்லறைகள் இருந்தால் போதும்“என்று, ஏகாதிபத்தியங்களை அண்டி உலகத்தை வேட்டையாட முனையும் அந்த அழிவுவாதிகளை நியாப்படுத்திப் பிற தேசங்களது இறைமைக்கு ஆப்பு வைக்கும் இந்தத் தமிழினம் வாழுமா?
அழிவார்-அறுப்பார்“தமிழீழ விடுதலை“ சொல்லிப் பிழைப்பு வாதிகளாகவும் ,அந்நிய அடியாட்படையாகவும் இருந்தபடி சொந்த மக்களை இலட்சக்கணக்காய் அழித்ததும் இந்தக் கண்ணோட்டத்தாற்றாம்.
தமிழ் மக்களுக்குத் „தமிழீழம்“எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு விடுதலை ஒரு கேடா?
பிறதேசங்களது அழிவை நியாப்படுத்தும் நீங்கள் ,அழிவதை மற்றவர்களும் நியாப்படுத்தும் தருணங்களை நீங்களே உருவாக்குகிறீர்கள்-நாசமாய்ப்போவார்!
ப.வி.ஶ்ரீரங்கன்
19.05.2013
Advertisements

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!

புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் , யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!

சிங்கள இனவாத அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாத அரசியலானது தமிழ்த் தேசிய வாதப் பிழைப்பு வாதிகளுக்குள் பல்வேறு இனவாத-சாதிய வொடுக்குமுறை-பெண்ணடிமைத்தனம்-பிரதேசவாதமெனக் கோலாச்சிய இந்த மானுடவிரோதமானது பௌத்த சிங்களப் பெருந்தேசிய உச்சத்துள், தமிழ்த் தேசியவினத்தின் மீதான வொடுக்குமுறையாகவும்,அதற்கு முன்னமே சிங்கள-முஸ்லீம் வார்த்தகர்களது முரண்பாடாகவும், ஒடுக்குமுறையாகவும் எழுந்து, இறுதியில் இந்த இனவாதமானது „தமிழீழப் போராட்டத்துள்“அதீத உச்சமான மனித அவமானகரமான புலிப் பாசிசமாக உச்சம் பெற்றது!

இதன் முகங்கள் பல்வேறு வகையானவை.

இந்திய உளவுப் படையினது நேரடியான ஆலோசனையின் பெயரில் இந்தப் பாசிசமானது அநுராதபுரத்துள் (1988 இல்) சிங்கள மக்களை வேட்டையாடியது.பின். இஸ்லாமிய மக்களை வேட்டையாடியது.இதன் முகத்தைத் தமிழ்பேசும் மக்களே தரிசித்த காலமானது புலிகளது வதை முகாமிலிருந்தும்,முள்ளிவாய்க்காலிலிருந்தும் மட்டுமல்ல.கூடவே,தமிழ் மக்கள் தமது குழந்தைகளை,கல்வியாளர்களை,மாற்று அமைப்புப் போராளிகளைப் பல்லாயிரக்கணக்காகப் புலிப் பாசிசத்தால் இழந்தபோதுதாம் அதன் உச்சம் புலப்பட்டது.

இந்த அந்நிய அடியாட்படைச் சேவையுள் பாசிசப் புலிகளது பாத்திரம் தேசிய விடுதலையாகப் பின்னப்பட்ட கருத்தாடல்களால்-சிங்கள இனவாத ஒடுக்குமுறையால் ஒரு தேசிய இனம் தன்மீதானவொரு வரலாற்றுப் பழியைச் சுமக்கிறது, இன்று!

இந்த வரலாற்றைத் தந்த புலிப் பினாமிகள் இன்றும் அஃதே, வகை அந்நியச் சேவையில் மக்களிடம் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களுடன் பாரிய முதலாளிகளாகிவிட்டு எமது மக்களுக்காக மீளவும், கொலை அரசியலையே செய்கின்றனர்.

புலிப் பாசிசத்தின் பெயரால் மொட்டையடிக்கப்பட்ட            “ தமிழினத்துக்கு வெளியிலான பிற-இனங்கள் “ தமது அனைந்து நியாயத்தையும் தொடர்ந்து ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்ட தமிழ்த் தேசியவினத்தின்மீது சுமத்திவிடும்போது அந்தத் தேசியவினமானது அதை நிராகரிக்க முடியாது.இஃது,இந்த உலகத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு இரட்டிப்பான ஒடுக்குமுறையாக மேலெழுகிறது.ஒன்று ,உளவியலொடுக்குமுறை மற்றது, பௌதிக ஒடுக்குமுறை!புலிப்பாசிசத்தின் உச்சத்தின் அறுவடை இதுதாம்!

ஆனால்,இது குறித்து நாம் பேசியாக வேண்டும்.

புலிப் பாசிசத்தை, இவ்வளவு மனித அவமானகர ஒடுக்குமுறைகளுக்குப் பின்னும்-பாசிசத்தின் புதிய மாதிரிகளுக்குப் பாத்திராமாகவும்,அந்நியச் சக்திகளது அடியாளாகப் போன பின்பும் அந்தப் பாசிசப் புலிகளைத் தேசிய இராணுவமாகவும்,அதனால் தமிழீழம் விடுதலையாவதாகவும் அப்பட்டமான பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை இவ்வளவு அழிவுக்குள் தள்ளிய பயங்கரமான “ புரட்சிகரச் சிந்தனையாளர்களும்“ நமக்குள் „இப்போது“ புரட்சி வகுப் பெடுக்கின்றனர்தாம்.இவர்களைத் தண்டிக்கவென ஒரு இனங்கடந்த நீதி மன்றைத் தோற்றுவிக்க முடியாதளவுக்கு உலகம் மனிதக் குருதியில் நீந்திக்கொண்டிருக்கிறது.எனவே,இலங்கை மக்களாகிய அனைவரும் தமக்குள் இணைவுறவேண்டியது இந்த யுத்தக் கிரிமனல்களைக் குறித்த விசாரணையுள் இனவாதப் பேதமின்றி நீதி-விசாரணைக்கானதாக இருக்க வேண்டும்.

இதுவொரு புதிய நூரன்பேர்க் நீதிவிசாரணை மன்றாக அமைய வேண்டும்.தென் கிழக்காசியாவின் விடிவுக்கு இது அவசியமானவொரு பணி.இதன் வாயிலாகவொரு நீதியை இந்த இஸ்லாமிய மற்றும் தமிழ்தேசியவினத்துக்கானவொரு மாண்பான நீதியும்-நிலைத்த ஜனநாயக வழித் தீர்வும் எட்டாதா?நிச்சியம் எட்டும்!மக்களே வரலாற்றைப்படைப்பவர்கள்.அந்த மக்கள் தம்மைத்தாமே தலைமையாக்கும்போது இது சாத்தியமானதே!

இன்று, இஸ்லாமிய மக்களது இந்த வடூவுக்காகப் புலிப்பாசிசத்தை ஊக்குவித்த புரட்சிக்காரர்களே ஆதரவாகவும்,பக்கப்பலமாகவும் இருந்து அநுதாபம் தெரிவிப்பது வேடிக்கையானதல்ல-வினையானது.

புலிகளுக்குக் கருத்தியல்-பரப்புரை செய்து, பிழையானவொரு அழிவுச் சக்தியைத் தேசிய இராணுவமெனச் சொன்னவர்கள்,அதற்காகக் கட்சி கட்டி எமது மக்களை ஏமாற்றியவர்கள், புலம் பெயர் தமிழ் குழுமத்தில் உலகு தழுவி வாழ்கின்றனர்.அவர்கள் எங்கெங்கு எப்படியெல்லாம் இப்போது அரசியல் பண்ணுகின்றனரென்பதை இந்தப் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அறியார்கள்.அவர்களை நிர்க்கதியாக்கிய இந்தப் பாசிஸ்டுக்களே இப்போது, புரட்சியின் புரவலர்களென்றும்-முன்னேறிய பிரிவினரென்றும் ஐரோப்பாவெங்கும் தமது அரசியலை தொடர்கின்றனர்.

எப்போதும்,முகமூடி அரசியல் செய்தவர்கள்-புலிப்பாசிசத்தை மிக மூர்க்கமாக ஆதரித்தவர்கள்,அதைத் தேசியச் சக்தியாக வரையறை செய்து முள்ளி வாய்க்கால்வரை மனித வதை செய்தவர்கள் முஸ்லீம்-சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரானவர்களே!

இவர்கள்தாம் இப்போது, இந்த வீடியோவுக்கும் „ஆதாரித்து அரசியல் “ செய்கின்றனர்.இவர்களிடம் ஏமாறாது, பாதிக்கப்பட்ட இஸ்லாம்-தமிழ்த் தேசியவினங்கள் தமக்குள் நீதி காணும் முயற்சியில் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

அது,பாசிச அரசாகத் தோன்ற முனையும் இலங்கை அரசை மக்களுக்கான சட்டத்துக்குட்பட்ட-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,ஜனநாயக விழுமியத்துள் தள்ளி அதன் வாயிலாகவொரு நீதிகான அமைப்புகளைத் தோற்றுவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவிருக்கவேண்டும்.இதன் முகிழ்ப்பில்தாம் இலங்கையில் யுத்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் விமோசனம் பெற முடியும்.

இதைத் தவிர்த்துவிட்டுப் பாசிசக் கூறுகளை மேலும் அரசியல் வாழ்வாக நிலை நிறுத்தும் அரசியல் பிழைப்புவாதிகளின்பின் நம்பிக்கை தரிப்பது கானல் நீரான எதிர்ப்பார்ப்பையே இந்த மக்களுக்கிட்டுச் செல்லும்.

புலிப்பினாமிகளான இந்த மேற்சொன்ன சிந்தனையாளர்கள் சொல்லும் அநுதாபமும்,அதுசார்ந்த இஸ்லாமிய மக்களுக்கான ஆதரவும் „புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!“ என்பது போன்றதே!ஏனெனில்,முள்ளி வாய்க்கால் வரைப் புலிகளைத் தேசியச் சக்திகளாக வர்ணித்து அதை வளர்த்துவிட்டுப் பாசிச ஒடுக்குமுறையை அப்பாவிகள்மீது செலுத்தியவர்கள் இவர்கள்தாம்.

இவர்களைக் குறித்து கவனத்தைக் குவிப்பதே முதற்கட்ட விடுதலைக்கு-விமோசனத்துக்கான முகிழ்ப்பாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

30.03.2013

என்ன செய்யப் போகின்றோம்?

இலங்கையின் தலைவிதி! :என்ன செய்யப் போகின்றோம்?

ன்றைய இலங்கையின் இனப்பகை அரசியல்-தமிழ்பேசும் மற்றும் சிறுபான்மையினங்களது அனைத்து முரண்பாடுகள்,அரசியல் அபிலாசைகள்அதன் வழியான ஒத்துழையாமை-மறுப்பு அரசியல்,இனவொடுக்குமுறை-பகையெல்லாம் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்படுகிறது.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தும் அரசியலாகப் புத்தபிக்குகள்,மற்றுஞ் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களைத் தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடாத்தும் அரசியல், நிச்சியம் நமது மக்களது நலனின்பாற்பட்டதல்ல!

இது,மீளவும் அந்நிய நலனுக்கானதென்றே கருத வேண்டியிருக்கிறது.

சீன-இலங்கை அரச வியூகத்துள் இனங்களுக்கிடையிலான ஒரு மொன்னைத்தனமான  ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முன்னிலைச் சோசலிசக்கட்சி,மற்றும் அதன் சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கும் அரசியல் மாறிவரும் பொருளாதாரச் சாய்வில் இலங்கைச் சீன வியூகத்துக்கு அவசியமானது.இதை உடைத்து மேற்குலக நலன்களை அறைவடை செய்யும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அரசியலை-அமெரிக்கச் சீ.ஐ.ஏ.க்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்கும் தமிழ்நாட்டுச் சீமான் வகைப்பட்ட அரசியலது நோக்கம் மீளச் சுவிட்ச்சர்லாந்தில் மையங்கொள்கிறது.

இது,ஆபத்தான காலம்.

இலங்கையின் அனைத்து மக்களுக்கும்,இறைமைக்கும் சாவால்விடும் அந்நிய லொபிக் கட்சிகளால் இலங்கை மீள இரத்தக்களத்தைக் காணப்போகிறது.

இதுதாம் மேற்குலகத்துக்குத் தோன அரசியல்.

அதைத் தமிழ்நாட்டு சீமான் வகைப்பட்ட அரசியல் மிக நுணுக்கமாக நம்மைச் சொல்லி,நமது பெயரால் அமெரிக்காவுக்கான அரசியலைச் செய்கிறது.

சலிப்புத்தான் வருகிறது.

மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.

இது,சதி நிரம்பிய காலம்.

இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?

தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.

மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது, சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு „சட்டம்-ஒழுங்கு“ ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.

இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.

 இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.

ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது.

 இலங்கைக்கானவொரு மேட்டிமை அரசானது காலத்துக்கு முந்தியதானதாகவே இருக்கிறது.

இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ்நிலைக்குள்ளிருக்கும்போதே அதைத் துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர். அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.

இதன் தொடர்ச்சியே தமிழகத்தில் தமிழினவாதப் பிழைப்புவாதக் கட்சிகளது வழியில் தொடர்கிறது.இத்தகைய இனவாதக் கட்சிகளை மெல்ல ஊட்டி வளர்க்கும் அமெரிக்கச் சி.ஐ.ஏ.வும் இந்திய அரசும் போடும் நாடகமெல்லாம் எந்த வழியிலும் நமக்கு விமோசனம் தரப்போவதில்லை!இலங்கையின் குடிகள் தமக்குள் மீள, மோதும் காலத்தைத் தீர்மானிக்கும் சதியைத் தயாரிக்கும் அந்நியச் சக்திகளை வெல்லும் புரட்சிகரமான அரசியலை இலங்கை ஏலவே இழந்துவிட்டது.

ப.வி.ஸ்ரீரங்கன்

18.03.2013

>சோபா சக்தி தன்னை…

>மீனா-சோபா சக்தி இடையிலான
உரையாடல் குறித்த எனது புரிதல்: 
 
ன்றைய நமது அரசியல்-சமூக வாழ்வில்,குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்குப் பலமான அரசிற் குரல்கள் கிடையாது.
 
 
இந்த குரல்களை அழிப்பதற்கான அனைத்து வடிவத்தையும், நமது எதிரிகள் புலிகள்மூலமும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடாகவும் செய்து முடித்தார்கள்.தமிழ்பேசும் இலங்கை மக்களது எதிர்காலம் எப்பவும்போலவே ஆதிக்க சக்திகளிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது.
 
 
இந்தச் சூழலில் நாம் பலமாகக் காரியமாற்றவேண்டிய நிலையில், எமக்குள் தெளிவற்ற பல அரசியற் போக்குகளை மீளவுற்பத்தி செய்வதற்குப் பிற்போக்குவாதத் தமிழ்-புலி விசுவாசிகள் முயலுகின்றனர்.இவர்களின் பின்னே உலக-இந்திய ஆளும் வர்க்ககங்கள் ஒளிந்திருக்கின்றன.இஃது, இன்றைய துர்ப்பாக்கிய நிலை.
 
 
இதிலிருந்து ஒடுக்குமுறைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மீள்வதற்கு, உகந்த அரசியல் தலைமையை இந்தச் சிறுபான்மை இனங்கள் இன்னும் பெற்றுவிடவில்லை.இந்த வெற்றிடம், அவர்களது விடுதலைக்கு மாறாக அவர்களை ஆதிக்கச் சக்திகளிடம் அடிமைகளாக்கிவிட்டுள்ளது-இது,இன்றைய யதார்த்தம்!
 
 
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான-இருண்ட நிலையை இலங்கைச் சிறுபான்மை இனங்கள் என்றும் பெற்றிருக்கவில்லை.
 
 
இன்றைய உலகமயப் பொருளாதாரச் சூழலில், இது, இப்படித்தாம் இருக்குமென எவரும் அதற்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட முடியாது.இதை, உறுதிப்படுத்தக்கூடிய உலக அரசியலின் உள்ளார்ந்த போக்குகளும்,அதுள் இலங்கை ஆளும் வர்க்கத்தின் இடம்,அவர்களால் வழி நடாத்தப்படும் அரசியல்,இலங்கைப் பொருளாதாரத்தில் இலங்கையின் சிறுபான்மை இனங்களை எங்ஙனம் கையாளும் என்பதற்கு,புலிகளின் தோல்வி மிக நல்ல பாடமாகவே நம்மிடம் உரைக்கப்படுகிறது.
 
 
இது,விட்டுவைத்திருக்கும் இந்தப் பாடம் மேலும் குழப்பகரமான திசைவெளியினூடாக „நாடு கடந்த தமிழீழ அரசு,பாராளுமன்றமென“ எமது மக்களை ஒட்ட மொட்டையடிக்கும்போது,அதைத் தடுத்து நிறுத்தியாகவேண்டிய பணி குறித்துப் பேசப்பட வேண்டும்.
 
 
இது, குறித்துத் தமிழ்ச் சூழலில் மிகக் காத்திரமான படைப்பாளியும்,முன்னாள் போராளியுமான சோபா சக்தி தன்னை நேர்கண்டவரிடம் மிக தெளிவாகவே வலியுறுத்துகிறார்.
 
 
அவசியமான பணிகள் குறித்து அங்கே திறன்வாய்ந்த விவாதத்தைச் செய்கிறார் சோபா சக்தி.
 
 
இதிலிருந்து நாம் அவசியமான பணிகளை இனங்காணமுடியும்.
 
 
இந்தப் பணிகள் நமது மக்களது அரசியல்-சமூக வாழ்வை எதிர்காலத்தில் தீர்மானிப்பது.
 
 


 
 
இதை, நாம் உணர்ந்துள்ளபோதும்,நமது மக்களுக்குள் மீளத் தலைத் தூக்கும் புலிகளதும்,இலங்கை-இந்திய அரசுகளதும் அரசியலை முன்னெடுக்கும் சக்திகள், இத்தகைய பணிகளை முடக்குவதற்கேற்ற பொய்யான „தமிழ்த்தேசிய“மாயைகளை மீளக் கட்டியமைக்கின்றார்கள்.இது, குறித்து நாம் இனம்காணும் கெடுதிகள் புலிகளது ஆயுத ஒடுக்கு முறைக்கு ஒப்பானவொரு நிலையைக் கொண்டியங்குகிறதென்பதைச் சொல்லுகிறோம்.
 
 
கடந்த காலமானது மிகச் சக்தி வாய்ந்த மக்களது ஆதரவுத்தளத்தோடும், புலிகளெனும் பாசிச இயக்கத்தோடும்“தமிழீழ“க் கனவை நமக்குள் வளர்த்திருந்தது.இத்தகைய கனவு தந்த அறுவடையாக நாம் நமது சமூகசீவியத்தை இழந்து, அகதிகளாகி முட்கம்பிகளுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம்.நம்மை அடிமைகொண்டவர்கள்,நமது மக்களுக்குள் இருக்கும் ஒரளவு கற்றவர்களைப் பயன்படுத்தி, மீளவும், நமது அரசியலையும்-விடுதலையையும் அந்நியச் சக்திகளுக்கேற்றவாறே முன்னெடுக்கமுனைவதின் தொடரில், எமக்குள் பலவகையான குழறுபடிகளைத் தொடர்கின்றனர்.இத்தகைய குழறுபடிகளில் பல மக்கள் சேமிப்பின்மீதான புலம்பெயர் புலி அரசியலாக விரிகிறது.இது,தாம்கொண்ட மக்கள் செல்வத்தை-நிதிகளை மெல்லத் தமதாக்கும் முயற்சியில் அந்நியச் சக்திகளுக்கேற்ற அரசியலை நமக்கான விடுதலை என்கின்றன.
 
 
இது மோசமானது.
 
 
இத்தகைய புலிப் பினாமி அரசியலாளர்களை தமிழ் நாட்டின் கோடியிலிருந்து, ஐரோப்பியத் தெருக்கள்வரை இனம்காணமுடியும்.என்றபோதும் எமது மக்கள் அனைவரையும் பின்தொடரும் சூழலே இப்போது நிலவுகிறது.இதன் தெரிவில் மக்களது மனங்களை வென்று, அவர்களை ஆதிக்க சக்திகளது நோக்குக்கமைய „ஏசு சீவிக்கிறார்“எனும் மதத்துக்குள் இழுத்துச் சிதைப்பதற்கும், பற்பல முயற்சிகளை மதவாதப் போதகர்களும் அவர்கள் பின் நிற்கும் எஜமானர்களும் ஒரு யுத்த முனைப்போடு செய்து வருகின்றார்கள்.வன்னியுள் வதைபட்ட மக்களது மனங்களை „உதவி“எனும் பெயரில் இவர்கள் அடிமை கொள்வது நடந்தேறுகிறது.
 
 
தமிழின-புலியழிப்புப் போராட்டத்தின் பின்பான இன்றைய சூழலில், பொதுத் தளத்தில் பரவலாகப் பிரச்சனைகளைப் பேசவேண்டியவொரு சூழலில் சோபாசக்தியினது நேர்காணல் முக்கியமானவொரு உண்மையைச் சுட்டுகிறது.அஃது, அனைத்துவகையான ஒடுக்குமுறைகளை முதலில் இனங்காணவேண்டியதையும்,புலிகளது இன்றைய „அரசியலின் தெரிவு“ எது,என்பதையும் கேள்வி கேட்கிறது.
 
 
இலங்கை அரசினதும்,இந்திய-உலக அரசுகளினதும் பின்னால் நிற்கும் தமிழ்த் தலைமைகளது பாத்திரம்,அவர்களது இன்றைய அரசியல் குரல்களையும் பரவலாக விமர்சிக்கிறது, சோபா சக்திக்கும்-மீனாவுக்கும் இடையிலான இந்த நீண்ட உரையாடல்.கூடவே, புலிகளது இயக்கவுட்கட்டமைவில் பரவலான தமிழ் மக்களுக்கு எதிரான போக்குகள் எங்ஙனம் நிலவியதென்றும் விளக்குகிறது.
 
 
இது,ஒரு வகையில் பரவலாகப் பேசப்பட்ட விடையமெனினும்,புலிகளது அமைப்புக்குள் நிலவிய சமூக ஒடுக்குமுறைக் கூறுகளைப் புலிகளது அமைப்புக்குள் இருந்த முதன்மையான படைப்பாளி பேசுவதென்பதால் அதற்கான உண்மைத் தன்மை அதிகமாகிறது.
 
 
இங்கே,உண்மைகளை இனங்காண்பதென்பது ஒரு வரலாற்றுத் தேவையாக நமக்கு முன் இருக்கிறது.
 
 
இதிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் மீளத் தவறுகளைச் செய்வதிலிருந்துவிடபட அவசியமானது.நாம்,எமது மக்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து இத்தகைய உண்மைகளைக் கண்டடையவும்,நேரிய அரசியல் பாதையை இனம்காணவும் அவசியமான தர்க்கத்தைச் செய்கிறார் சோபா சக்தி.இதன் வெளியில் கண்டடைய முனையும் அரசியல் மீளவும், புலிவகைப்பட்ட குறுந்தேசியவாத அரசியல் கோரிக்கைகுளுக்குள் முடங்க முடியாது.எனவே,சோபா சக்தியின் குரலை இங்கே மீள் பதிவிடுகிறேன்.இது, அவசியமான வரலாற்றுத் தேவையின்பால் நான்கொண்ட தெரிவே என்பது, என்வரையான விளக்கம்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
வூப்பெற்றால்,
ஜேர்மனி
 
19.11.2009

என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி

நேர்காணல்: மீனா
 

ஈழத்தின் மரணப் போராட்டங்களை; சாதிய, இன, அதிகார வெறிகளால்
மக்களுக்கு நேர்ந்த அவலங்களை, பிறந்த மண்ணைப் பிரிந்த அகதியின் மனநிலையை;
அழுகுரலெடுக்கும் பெருஓலங்களாலோ, ரத்தக் கண்ணீர்களாலோ அல்லாமல் அசாதாரண
எழுத்துகளால் உறைய வைத்து நமது நனவிலியைப் பிடித்தாட்டிய தமிழின் ஆகச்சிறந்த
கதைசொல்லி, ஷோபாசக்தி. நவீன இலக்கியத்தில் தனி முத்திரையைப் பதித்ததோடு இடதுசாரி
அரசியல் வழிநின்று அரச பயங்கரவாதத்துடன் புலிகளின் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து
கண்டித்து வருகிற வகையில், புலிகளைப் புனிதத் திருஉருக்களாக கட்டமைப்பவர்களால்
உட்செரிக்க இயலாதவர். பதினைந்து வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
போராளியாக தமது அரசியலைத் துவக்கி இன்று புலம்பெயர் சூழலில் மாற்று அரசியலை
முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழர்களைக் காப்பதற்கே
யுத்தம் என்று பச்சையாய் புளுகி மீண்டுமொரு இனப்படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே
அரசு, யுத்ததிற்கு பிறகும் பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு தமிழர்களைத் தின்று
தீர்க்கிறது. இந்நிலையில், ஈழத்தமிழரின் சனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து
குரலுயர்த்தி வருகிற ஷோபாசக்தியோடு ஈழத்தமிழரின் நிலைகுறித்தும், தமிழ்ச்சூழலில்
நடைபெற்று வருகிற ஈழ அரசியல் குறித்தும் ‘அம்ருதா’ இதழிற்காக உரையாடினோம்.
அவற்றிலிருந்து..

 
 
மீனா: போர்க்குற்றங்களைத் தொடர்ந்தும் தமிழ் இளைஞர்களின் நிர்வாண படுகொலைகள், திசநாயகம் கைது என அடுக்கடுக்காய் இனவெறி வெட்ட வெளிச்சமாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை கண்டித்திருக்கின்றன. போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அழுத்தங்கள் தொடர்வதன் மூலம் தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா?
 
ஷோபாசக்தி: ‘சானல் நான்கு’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ ஆதாரங்களைப் பொய் என்கிறது இலங்கை அரசு. எந்த கண்டனத்திற்கும் அஞ்சாமல் திசநாயகத்தின் கைதையும் நியாயப்படுத்தி வருகிறது. சர்வதேச சமூகத்தின் மனிதாபிமானக் குரலை ராஜபக்சே மயிரளவும் மதிப்பதில்லை. சமீபத்தில் நாட்டிலிருந்து யுனிசெப் அதிகாரியும் வெளியேற்றப்பட்டார். இலங்கை அரசின் பயங்கரவாதம் எந்த அழுத்ததிற்கும் வளைந்து கொடுக்காது.
 
 
மீனா: ஈழத்தில் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்கள் வசதிகளுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு அரசு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் இந்து என்.ராம் போன்றவர்கள் சொல்கிறார்களே?
 
 
ஷோபாசக்தி: கிடையாது. அதெல்லாம் சுத்த அயோக்கித்தனமான பேச்சு. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால் கூட மக்களை முகாமில் வைத்திருக்க மகிந்த ராஜபக்சேவிற்கு உரிமை கிடையாது. மக்களை அவர்களது சொந்த நிலங்களிலிருந்து பிரித்து முகாம்களில் கட்டாயமாக வைத்திருப்பதை அனுமதிக்கவே முடியாது. கண்ணிவெடி அச்சுறுத்தல் என்றெல்லாம் அரசு சொல்வது அப்பட்டமான பொய். கண்மூடித்தனமாக விமானங்களிலிருந்து குண்டு வீசியும் எறிகணைகளை ஏவியும் மக்களைக் கொன்றவர்கள், கண்ணி வெடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பது பற்றியெல்லாம் பேசுவது நம்பக்கூடியதல்ல. மகிந்த அரசு நடத்தி முடித்தது ஒரு இனப்படுகொலை. அந்த இனப்படுகொலை இப்போது வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது. அதிலொன்றுதான் இந்தக் கட்டாயத் தடுப்பு முகாம்கள். இந்த முகாம்களிலிருந்து மக்களை விடுவிக்குமாறு அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. அத்தகைய பிரசார இயக்கங்களை வலுப்படுத்துவதும் அந்த மக்களின் விடுதலைக்கான உடனடி வழிகளைக் கண்டடைவதும் நம் முன்னாலிருக்கும் இன்றைய முதலாவது சவாலும் பணியும்.
 
 

 
மீனா: தடுப்பு முகாம்களில் இருக்கும் அகதிகளுடன் நீங்கள் பேசியிருக்கிறீர்களா, அவர்களின் நிலை எப்படியிருக்கிறது?
 
 
ஷோபாசக்தி: எனது உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் இளவயதினர் பணம் செலுத்தித் தங்களை அங்கிருந்து மீட்க உதவி செய்யுமாறு மன்றாடுகிறார்கள். இராணுவத்திற்கோ அல்லது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத இயக்கங்களைச் சேர்ந்தவர்களிடமோ லஞ்சம் கொடுத்தால் அவர்கள் முகாம்களிலிருந்து அழைத்துச் சென்று வெளியே விடுகிறார்கள். ஆளையும் கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தையும் பொறுத்து மூன்று இலட்சத்திலிருந்து பத்து இலட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அங்கே கைதுகள் நிகழ்கின்றன. ஒரு முகாமில் நாளொன்றுக்கு முப்பது வரையான இளம் வயதினர் கைது செய்யப்படுகிறார்கள். எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்; குறிப்பாகக் கைதுசெய்யப்படும் யுவதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கின்றன என்ற எந்த அறிக்கையும் தகவலும் அரசால் வெளியிடப்படுவதில்லை. அவை நலன்புரி முகாம்களல்ல, சிறைச்சாலைகள்.
 
 
மீனா: சொந்த மண்ணிலேயே கைதிகளாய் அடைக்கப்பட்டிருக்கும் இந்த அப்பாவி மக்கள் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த போது எப்படியிருந்தார்கள்?
 
 
ஷோபாசக்தி: புலிகளிடம் மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஒன்றும் இந்தத் துன்பங்களிற்குக் குறைந்ததல்ல. 1990களிலிருந்தே புலிகளும் ‘பாஸ்’ என்றொரு நடைமுறையைத் திணித்துப் பணம் பெற்றுக்கொண்டுதான், தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்த இளவயதினரை வெளியேற அனுமதித்தார்கள். குழந்தைகளையும் இளைஞர்களையும் கட்டாயமாக அரைகுறைப் பயிற்சி கொடுத்து யுத்த முன்னரங்கத்திற்கு அனுப்பிவைத்துச் சாகக் கொடுத்தார்கள். இயக்க விரோதிகள், துரோகிகள், சமூகவிரோதிகள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்ற குற்றச்சாட்டுகளில் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டவர்களின் கணக்குத் தனியானது. ஆயிரக் கணக்கானோர் புலிகளின் பங்கர் சிறைகளில் நாயினும் கீழாக வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 2002க்குப் பிந்திய சமாதான காலத்தில் மட்டும் தங்களுக்கு ஒவ்வாத 400க்கும் மேற்ட்ட தமிழ் அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் அறிவுஜீவிகளையும் புலிகள் கொன்றிருக்கிறார்கள் எனத் துல்லியமாக அய்.நா. அவையின் சமூகப் பொருளாதரக் கவுன்சிலின் ஆய்வாளர் பிலிப் அல்ஸ்டன் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.
 
 
மீனா: ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும் மெனிக் பண்ணையின் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் தமிழர்களுக்காகவும் ஆதரவாய் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள், நீங்கள் குறிப்பிடுபவை பற்றியும் தொண்ணூறுகளில் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றியும் பேசுவதில்லையே, ஏன்?
 
 
ஷோபாசக்தி: பாரிசில் இருந்து வெளிவரும் ‘ஈழமுரசு’ பத்திரிக்கை 12 செப்டம்பர் 2009 இதழில், ‘பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் உதவினார்கள்’ என்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. காலம்காலமாக தமிழ் தேசியவாதிகளும் -குறிப்பாக – புலிகளும், முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட முறையில் இனப்பகைமையை பிரசாரம் செய்து வருகிறார்கள். யாழ்ப்பாண சாதிய உணர்வு தலித்துகளை ஒடுக்கியதைப் போல தமிழ்த்தேசிய உணர்வு முஸ்லீம்களை ஒடுக்கியது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க மறுப்பவர்களை ஆதிக்கத்தின் எடுபிடிகள் என்றல்லாமல் வேறெப்படி புரிந்துகொள்வது.
 
 
மீனா: இப்போது, இலங்கை அரசோடு இயைந்துபோய் தமிழர்களிற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்றவாறாக ஈழத் தமிழ் அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினர் பேசுகிறார்களே?
 
ஷோபாசக்தி: ஆயுதப் போராட்டத்தினால் கடந்த முப்பது வருடங்களில் நாம் சந்தித்த இழப்பு மிகப் பெரிது. ஒரு சின்னஞ் சிறிய இனமான எங்களால் தாங்க முடியாத அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. ஆயுதப் போராட்டம் என்பது இப்போது இலங்கையில் சாத்தியப்படாத ஒன்று. சர்வதேசப் புறச் சூழல்களும் ஆயுதப் போராட்டத்திற்குச் சாதகமாயில்லை. எனவே, வேறுவகையான அரசியல் முன்னெடுப்புகளாலும் போராட்ட முறைமைகளிற்குள்ளாகவும் அழுத்தங்கள், பேச்சுவார்த்தைகள் ஊடாகவுமே இனி ஈழத் தமிழர்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இலங்கை அரசு தனது பேரினவாத அரசியல் என்ற நிலையிலிருந்து கீழிறங்காதவரை அரசோடு இயைந்துபோவது என்பதெல்லாம் அயோக்கித்தனம். இந்தப் பாசிச அரசை எந்த விதத்திலும் நியாயப்படுத்தும் போக்குகள் ஈழத் தமிழர்களிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை மக்களிற்குமே இழைக்கப்படும் துரோகம்.
 
 
மீனா: போராட்டத்தை முன்னெடுக்க சமீபமாய் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்த முறை எவ்வளவு சாத்தியம்?
 
 
ஷோபாசக்தி: எங்கள் மீது தன்னிச்சையாக அரசையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தும் அதிகாரத்தை இவர்களிடம் யார் கொடுத்தார்கள்? இவர்களின் நாடுகடந்த அரசின் அரசியல் பண்பு என்ன? வலதா, இடதா, இல்லைப் பாசிசமா? முதலில் அதைச் சொல்லட்டும். எங்கள் ராஜினி திரணகமவையும் விஜயானந்தனையும் கொன்றவர்களுடன் சேர்ந்து பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் எங்களுக்கு அரசமைத்துக் கொடுக்கப் போகிறார்களா? புலிகளின் போராட்டம் ஆயுதப் போராட்டமாயிருந்தாலென்ன, அரசியற் போராட்டமாயிருந்தாலென்ன அவர்களின் அரசியலில் அறம் வந்து சேரும்வரை அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசமெங்கும் சிதறிக்கிடக்கும் புலிகளின் சொத்துகளையும், புலிகளும் அவர்களின் முகவர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சுகித்த அதிகாரங்களையும் காப்பாற்றிக்கொள்ளவே இந்த நாடுகடந்த அரசாங்கம் என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.
 
 
மீனா: இப்பொழுதும் மக்களிடம் பணம் வசூலிப்பது தொடர்கிறதா?
 
 
ஷோபாசக்தி: இன்றுள்ள சூழலில் புகலிடத்தில் கட்டாயக் காசு கேட்டால் சனங்களே காவற்துறையிடம் புலிகளைப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனாலும், கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் புலிகள் திரட்டிய ஏராளமான பணம் வர்த்தக நிறுவனங்களாகவும் இந்துக் கோயில்களாகவும் தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களாகவும் திரண்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் இப்போதும் இலாபம் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பணத்தைக் பகிர்ந்துகொள்ளத்தான் வெளிநாட்டுப் புலிகள் இப்போது தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் புலிகள் மீது கொண்டிருந்த அச்சம் பெருமளவு நீங்கிவிட்டது. புகலிடப் புலிகள் தங்களுக்குள் தாங்களே அடித்துக்கொண்டிருப்பதால் புலிகள் மீது சனங்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் பயமும் காணமலேயே போய்விட்டது. இணையங்களைத் தொடர்ச்சியாகக் கவனிப்பவர்களால் புலிகளை முன்பு தீவிரமாக ஆதரித்த நபர்களே இப்போது இந்த வெளிநாட்டுப் புலிகளைக் கண்டித்துப் பேசுவதைத் தெரிந்துகொள்ள முடியும்.
 
 
மீனா: ‘புலிகளின் வீழ்த்தப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவர்களின் தவறுகளை விமர்சிப்பதால் இனிமேல் ஆகப்போவது ஒன்றும் இல்லை‘ என உங்களைப் போன்றவர்கள் பற்றி பரவலாக ஒரு கருத்து நிலவுகிறதே?
 
 
ஷோபாசக்தி: புலிகள் தாங்கள் மட்டும் அழியவில்லை. தங்களோடு சேர்த்து ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வையும் அழித்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே நமது மக்கள் அரசியலிலிருந்து புலிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். மக்களுக்கு விமர்சனங்களேயில்லாமல் புலிகளை ஆதரிக்கும் ஒரு கடமையைத் தவிர வேறெந்த அரசியல் உரிமைகளையும் புலிகள் வழங்கவேயில்லை. ஈழத்து அரசியலில், ஒரு ஈழக் குடிமகனது அரசியல் உரிமை, பிரபாகரனின் சிந்தனைக்கும் கட்டளைக்கும் கீழ்ப்படிவது என்பது மட்டுமாகவே வரையறுக்கப்பட்டிருந்தது. புலிகள் ஆதரவைத் தவிர்த்து வேறெதையும் பேசும், எழுதும் உரிமைகள் துப்பாக்கி முனையில் மக்களிற்கு மறுக்கப்பட்டிருந்தன. புலிகளைத் தவிர வேறெந்த அரசியல் போக்குகளையும் புலிகள் தமது பரப்பில் அனுமதிக்கவில்லை. இதைப் புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்றார்கள். நாங்கள் பாசிசம் என்றோம்.
 
 
சாதியொழிப்பு இயக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எவையுமே அங்கே இயங்க அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் தடையை மீறிய போதெல்லாம் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கவாதிகளும் மாற்று அரசியலாளர்களும் தலித் மக்களின் வழிகாட்டிகளும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் புலிகளால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். சிறைப்பிடிக்கப்பட்டு மனித நாகரிகமே இல்லாமல் நிர்வாணமாக வருடக்கணக்கில் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்கள். ஒரு வருடமல்ல, இருவருடமல்ல, இருபத்தைந்து வருடங்களாகப் புலிகள் இந்த அட்டூழியங்களைச் செய்தார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சி வீழ்ந்த பிறகுதான் புலிகள் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவத்தொடங்கினார்கள் என்பதில்லை. அவர்கள் தங்கள் பிறப்பிலிருந்தே அப்படித்தானிருந்தார்கள்.

புலிகளிடம் அரசியலே இருக்கவில்லை. அவர்கள் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் இயங்கினார்கள் என்று இப்போது புதிது புதிதாய் சிலர் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால், அது தவறான கண்டுபிடிப்பு. புலிகளிடம் தெளிவான வலதுசாரி அரசியல் நிலைப்பாடும் மேற்கு ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடும் கலாசார அடிப்படைவாதமும் இருந்தது. அவர்கள் நடத்திய இஸ்லாமியச் சுத்திகரிப்புக்குப் பின்னால் ஒரு உறுதியான குறுந்தமிழ்த் தேசிய அரசியலிருந்தது. அவர்களின் இத்தகைய படுபிற்போக்கான அரசியல் வேலைத்திட்டம் அரசியல் எதிரிகளையும் தங்களை மறுப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் கொலை செய்வதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற கேவலமான அரசியலில் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது. எல்லாவித முற்போக்கு அரசியலையும் ஈழப் புலத்திலிருந்து துடைத்தெறிந்த புலிகள், அவர்களின் கொலை அரசியலை மட்டுமே அங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தக் குறுந்தமிழ்த் தேசியவாதக் கொலைகார அரசியலை செல்வாக்கு இழக்கச் செய்து, மாற்று அரசியலை நோக்கி நகருவதற்கு நம் மக்களிடம் நாம் புலிகளின் தவறுகளையும் அரசியலையும் நுணுக்கமாகத் தோலுரித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.
தவறுகளைப் பேசுவது, குற்றங்களைப் பட்டியலிடுவதற்காக மட்டுமல்ல; பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காகவும் தான்.
 
 
மீனா: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இனி உரையாடலுக்கு தயார் என புலிகள் அறிவித்திருக்கிறார்களே?
 
 
ஷோபாசக்தி: புலிகளுடைய இன்றைய அரசியல் பிரபாகரன் காலத்து அரசியலின் நீட்சிதான். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு வேறுவழிகளில் போராடப்போகிறோம், எல்லோருடனும் உரையாடத் தயாராயிருக்கிறோம் என்ற அவர்களது அறிவிப்புகள் வெளியானாலும் அவர்கள் புலிகளின் கடந்தகால பிற்போக்கு அரசியலிலிருந்து தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை எவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவ்வகையான எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் அவர்களிடம் காண முடியவில்லை. அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மைய அரசியலுக்கு வந்தாற் கூட அவர்களது அரசியல் வேலைத்திட்டம் தமிழ்க் குறுந்தேசியவாத, வெறும் வலதுசாரி அரசியற் திட்டமாய் இருக்கும் வரையில் அவர்களின் அரசியல் மக்கள் விரோத அரசியலாகவேயிருக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
 
இன்று புலிகள் தங்களிடம் அரசியல் இருக்கவில்லை என்று சொல்வதை அவர்கள் ஏதோ தங்களது பிற்போக்கு அரசியலின் மீது அதிருப்திகொண்டு புதிய மாற்றத்தைக்கோரி பேசுவதாக நீங்கள் கருதவேண்டியதில்லை. தொடர்ச்சியாக அவர்களின் அறிக்கைகளையும் உரையாடல்களையும் நீங்கள் கவனித்துப் பார்த்தால், கடந்த காலங்களில் இந்திய அரசையும் மேற்கு நாடுகளையும் தாங்கள் சரியாக ‘டீல்’ செய்யவில்லை என்ற வருத்தத்திலேயே அவர்கள் பேசுவது தெரியும். அவர்கள் அரசியல் தோல்வியென்று தங்கள் ‘டீல்கள்’ தோல்வியடைந்ததையே குறிக்கிறார்கள். மற்றப்படிக்கு புலிகளின் கடந்த கால பிற்போக்கு அரசியலிலிருந்து அவர்கள் மீள்வதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.
 
 
மீனா: புலிகள் இயக்கம் தனது தலைமைப் பொறுப்புகளில் தலித்துகளை அமர்த்தியிருந்தது. அதேவேளையில் செல்லன் கந்தையன், கணபதி ராசதுரை போன்றோர்களிடம் தனது ஆதிக்க முகத்தைக் காட்டியது. புலிகள் சாதியத்தை எப்படி எதிர்கொண்டதாக நினைக்கிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றிலேயே வெள்ளாளர்கள் அல்லாத ஒரு தலைமையாக உருவாகி ஒரு உடைப்பை ஏற்படுத்திய இயக்கம் புலிகள் இயக்கம்தான். எனது ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்ற கட்டுரையில் இதை விரிவாகப் பேசியுள்ளேன். புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் செயற்பட்டவன் என்ற முறையில் இயக்கத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதையும் என்னால் கூற முடியும். இயக்கத்தில் தனிநபர்கள் சாதிய உணர்வோடு எங்காவது வெளிப்பட்டிருந்தாலும் கூட அதை இயக்கத்தின் பொதுப் பண்பாக வரையறுக்க முடியாது.

இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை. அந்த முன்னெடுப்புகள் பெரும்பான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என அவர்கள் கருதினார்கள். இதை அடேல் பாலசிங்கம் தனது சுதந்திர வேட்கை நூலில் ஒப்புக்கொண்டிருப்பதையும் நான் எனது கட்டுரையில் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

சமூகத்தில் சாதிய முரண்கள் எழுந்தபோதெல்லாம் அங்கே எப்படிப் பிரச்சினைகளை ஊத்திமூடி அமைதியைக் கொண்டுவருவது என்றே புலிகள் முயற்சித்தார்களே தவிர அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பக்கத்தில் நின்று அவர்களின் உரிமைகளிற்காகக் குரல் கொடுத்தார்களில்லை. புலிகளின் ஆட்சிக்காலத்திலேயே வடபுலத்தில் ஏராளமான கோயில்களும் பொது இடங்களும் தலித்துகளிற்கு மூடியே கிடந்தன. இவற்றைத் திறந்துவிடுவதற்கான அதிகாரம் புலிகளிடமிருந்தும் கூட அவர்கள் அதைச் செய்யவில்லை. குறிப்பாக இந்து மதத்திற்கும் சாதிக்குமான உறவுகள் குறித்தெல்லாம் அவர்கள் அக்கறையே காட்டவில்லை. அவர்களே இந்து மரபுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள். புலம்பெயர் நாடுகளில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் புலிகள் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். நிலவும் சமூக ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமலிருப்பது என்பது அந்த ஒடுக்குமுறையைக் காப்பாற்றுவது என்றுதான் பொருள்படும். தமிழீழம் கிடைத்த பின்பு உள்முரண்கள் தீர்க்கப்படும் என்று புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள் சொன்னதற்கெல்லாம் ஏதாவது பொருளிருக்கிறதா?
 
 
மீனா: சாதியத்தின் நச்சு வேர் ஆழப்புதைந்து கிளை பரப்பி இருந்த காலத்திலேயே ‘அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை’, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்’ ஆகியவை கலகக் கிளர்ச்சிகள் செய்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டின. இன்றைக்கு தலித்தியம் பெருவலிமை பெற்றிருக்கிறது. இந்த பின்புலத்தில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் [அய்ரோப்பா] செயற்பாடுகள் எவ்விதமிருக்கின்றன?
 
 
ஷோபாசக்தி: சாதியொழிப்புக் குறித்து மேலும் சில உரையாடல்களைத் தொடக்கி வைத்தது என்பதற்கு அப்பால் மேலே நகர முடியாமல் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்திருக்கிறது. ஒரு சாதியொழிப்பு முன்னணி, சமூகத்தில் இருக்கக் கூடிய சாதிய ஒடுக்குமுறை வடிவங்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டு உயிர்வாழ முடியாது. அது சாதியொழிப்பிற்கான செயற்திட்டங்களை நோக்கி நகர வேண்டும். தலித் மக்களை அமைப்புமயப்படுத்த வேண்டும்.
 
 
சாதிய விடுதலை குறித்து நாம் பேசும்போது மற்றைய அடிமைத்தளைகள் குறித்த, குறிப்பாக இனஒடுக்குமுறை குறித்த, கேள்விகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கேள்விகளை நேர்மையுடன் அணுகாதபோது ஒரு அரசியல் இயக்கத்தின் தேக்கம் தவிர்க்க முடியாததே. எனது அவதானிப்பில் இலங்கை தலித் முன்னணி அரசை அனுசரித்து நின்று ஏதாவது செய்துவிடலாம் என்று கனவு காண்கிறது. 40 வருடங்களிற்கு முன்பு தலித் தலைவர்களான எம்.சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் அரசோடு இணைந்து செயற்பட்டு தலித் மக்களுக்கான சில நலத்திட்டங்களை பெற்றுக்கொண்டதுபோல இப்போதும் செயற்படலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். எம்.சி.சுப்பிரமணியம் தன்னுடைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பின்பலத்தோடு அரசோடு பேரம் பேசியவர். அப்போதைய அரசின் அமைச்சரவையில் கம்யூனிஸ்டுகளும் பங்கெடுத்திருந்தார்கள். கொல்வின்.ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற இடதுசாரி நட்சத்திரங்கள் அரசின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியதாயிருந்த காலமது. ஆனால், இன்று அரசுப் பொறுப்பிலிருப்பவர்கள் அப்பட்டமான தரகு முதலாளிய கொள்ளைக்காரர்களும் இனப் படுகொலைக்காரர்களுமே என்பதை தலித் முன்னணி புரிந்துகொண்டு, தனது செயற்திட்டங்களை வகுக்காதவரை இந்தத் தேக்கத்திலிருந்து அதனால் வெளியே வரமுடியாது என்றே கருதுகிறேன்.
 
 
மீனா: நீங்கள் இலங்கை அரசின் உளவாளியென்றும், அரசிடமிருந்து பணம் பெறுகிறீர்கள் என்றும், தமிழகத்துப் பத்திரிகையாளர்களிடையே இலங்கை அரசிற்காக ஆள்பிடிக்கிறீர்கள் என்றும் தொடர்ந்து ‘கீற்று‘ இணையத்தளத்தில் குற்றம் சாட்டப்படுகிறீர்களே?
 
 
ஷோபாசக்தி: இத்தகைய ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளாலும் அவதூறுகளாலும் எதையும் சாதித்துவிட முடியாது. இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் என்னிலிருந்து ஒரு மயிரைக் கூட உதிர்த்துவிட முடியாது.
 
 
 
மீனா: உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருப்பது அந்த விமர்சனங்களை உண்மை என்று ஆக்கிவிடாதா?
 
 
ஷோபாசக்தி: நான் பொதுவிவாதங்களில் பங்கெடுக்க மறுப்பவனல்ல. என்னுடைய எழுத்தின் பெரும்பகுதி எதிர்வினைகளிலும் விவாதங்களிலும் பதில்களிலுமே செலவிடப்பட்டிருக்கிறது. எத்தகைய மாறுபட்ட கருத்துள்ளவருடனும், எனக்கு முற்று முழுதான எதிர் அரசியல் நிலைபாடுகளை உடையவருடனும் கூட நான் உரையாடவோ, விவாதிக்கவோ பின்நின்றதில்லை. அண்மையில் கூட ‘வடலி’ பதிப்பகம் தோழர்களின் ஏற்பாட்டில் தோழர்.தியாகுவுடன் மூன்று மணிநேரங்கள் ஈழத்து அரசியல் குறித்து விரிவாக விவாதித்திருந்தேன். அந்த உரையாடல் ஒரு நூலாக வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் உளவாளி, பணம் வாங்குகிறான் என்று புறணி பேசுபவர்களுடன் எல்லாம் என்னால் விவாதிக்க முடியாது. இத்தகையை இழிவான குற்றச்சாட்டுகளைப் பேசும்போது ஆதாரங்களுடன் பேசவேண்டும் என்ற யோக்கியமோ, ஆதாரமற்ற அவதூறுகளை இணையத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற கடப்பாடு இல்லாதவர்களிடமோ நான் எதை விவாதிக்க முடியும்.
என்னுடைய இத்தனை வருட காலத்து எழுத்தில், பேச்சில் இலங்கை அரசுக்கோ, இந்திய அரசுக்கோ ஆதரவான ஒரு வார்த்தையைக் கூட இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் காட்ட முடியாது. கடந்த பத்து வருடங்களில் இலங்கை அரச பயங்கரவாதத்தையும் யுத்தத்தையும் எதிர்த்து நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச் சித்திரங்களாகவும் என்னளவிற்கு இலக்கியத்தில் பதிவு செய்தவர்களும் யாருமில்லை. அதே தருணத்தில் நான் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் கடுமையாக விமர்சித்து எழுதும்போது அதை எதிர்கொள்ளத் திராணியோ, கருத்துப்பலமோ, தார்மீகமோ அற்றவர்கள் என்னை அரச அதரவாளன் என்று நியாயமற்ற முறையில் தீர்ப்பிடுவதன் மூலமே என்னுடைய புலிகளின் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முயலுகிறார்கள்.
 
 
மிகவும் நெருக்கிப் பிடித்து விவாதிக்கும்போது அவர்கள் தாங்கள் புலிகளை விமர்சனத்துடன் ஆதரிப்பதாகச் சொல்லி மழுப்புவதுமுண்டு. ஆனால், புலிகளைப் போன்ற வலதுசாரி அரசியல் சக்தியையும் பாசிஸ்டுகளையும் என்னால் விமர்சனத்தோடு என்றாலும் கூட ஆதரிக்க முடியாது. அண்மையில் ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தான் இறப்பதற்குத் தயாராயிருந்த ஒரே காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்களைத் தன்னுடன் தடுத்து வைத்திருந்து கொல்லக் கொடுத்ததையெல்லாம், தப்பியோடி வந்த மக்களைச் சுட்டுக் கொன்றதையெல்லாம் விமர்சனத்துடன் ஆதரிக்குமளவிற்கு நான் கொடூரமானவனோ, அயோக்கியனோ கிடையாது.
 
இந்த நேர்காணல் வெளியானதும் கூட என்னை இலங்கை அரசின் ஆதரவாளன் என்றுதான் அவர்கள் எழுதப் போகிறார்கள். இந்த நேர்காணலில் நான் புலிகள் குறித்துச் சொல்வது மட்டும்தான் அவர்களது பிரச்சினையாயிருக்கும். என்னிடம் பணமோ, சாராயமோ பெற்றுக்கொண்டு என்னை நேர்காணல் செய்து பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறீர்கள் என்ற அவமானத்தை நீங்களும் சந்திக்க நேரிடும்.
 
மீனா: நீங்கள், உங்களை இலங்கைக் குடிமகன் என்று ஒரு கட்டுரையில் சொன்னதுகூட இங்கே சர்ச்சையாக்கப்பட்டது…
 
 
ஷோபாசக்தி: பா.செயப்பிரகாசம் தான் வழக்கம் போலவே ‘நொள்ள’ கண்டுபிடிந்திருந்தார். நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று அழைத்துக்கொள்ளாமல் பிரஞ்சுக் குடிமகனென்றா அழைத்துக்கொள்ள முடியும்?
 
செயப்பிரகாசம் தன்னை இந்தியக் குடிமகன் இல்லை என்று சொல்வது அவரின் உரிமை. ஆனால், நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று சொல்வதைக் கேள்வி கேட்பதற்கு அவருக்கு உரிமை கிடையாது. இலங்கை என்னுடைய நாடு. எனக்கு அந்த நாட்டில் ஒரு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், அந்த உரிமைகள் எனக்கு இலங்கை அரசால் மறுக்கப்பட்டிருப்பதற்காக நான் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்திட முடியாது. என்னை இலங்கைக் குடிமகன் இல்லையென்று சொல்ல ராஜபக்சேவிற்கே உரிமை கிடையாது என்றபோது பா. செயப்பிரகாசத்திற்கு கேள்வி கேட்க எங்கிருந்து உரிமை வந்தது?
 
பா.செயப்பிரகாசம், தன்னை ஒரு சர்வதேச மனிதனாக உணருகிறேன் என்கிறார். அவரிடம் இந்தியக் கடவுச் சீட்டோ, அவருக்கு இந்திய அரசு இயந்திரத்துடன் வேறெந்தக் கொடுக்கல் வாங்கலோ இல்லாதிருக்கலாம். என்னுடைய நிலையும் அவரைப் போன்றதுதான். எனக்கும் இலங்கை அரசுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் கிடையாது; என்னிடம் இலங்கைக் கடவுச் சீட்டும் கிடையாது; பிரஞ்சுக் கடவுச் சீட்டும் கிடையாது. அகதிகளிற்கான பயணப் பத்திரம்தான் வைத்திருக்கிறேன். என்னுடைய தேசிய இனம் இலங்கை அகதி என்றுதான் எல்லா விமான நிலையங்களிலும் அலுவலகங்களிலும் தூதரகங்களிலும் பதிவுசெய்யப்படுகிறது. நான், செயப்பிரகாசம் போல குடியுரிமையை விரும்பித் துறந்தவனல்ல. அது என்னிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மறுத்தாலும் என்னுடைய குடியுரிமையை விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை.
 
 
மீனா: ‘இந்திய அமைதிப்படை எங்களுக்கு ஆதரவாகத்தான் வந்தது. மாகாண சுயாட்சி அமைக்க வேண்டும் என்று வந்தது. நல்ல அதிகாரம் உள்ள சுயாட்சியாக இருந்தும் பிரபாகரன் அதை விரும்பவில்லை’ என்று கருணா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதன் பின்புலம் என்ன?
 
 
ஷோபாசக்தி: கருணா அரசாங்கத்தின் அங்கம். இலங்கை அரசின் குரலில் தான் இப்படி பேசி இருக்கிறார். மக்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தும், பாலியல் வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டும் மூன்று வருடங்களுக்குள் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் இலங்கை அரசு இத்தனை வருடங்கள் செய்ததற்குக் குறைந்ததில்லை. அமைதிப்படை, புலிகளையும் அழிக்கக் கருதியே தொழிற்பட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் ஆளும் வர்க்க நலன் தான் கருத்தில் கொள்ளப்பட்டதே தவிர, மக்களின் நலன் அல்ல. கருணாவின் குரல் தமிழர்களின் குரல் கிடையாது. அது இலங்கை அரசாங்கத்தின் குரல
 
 
மீனா: ஆனால், இப்பொழுதும் இந்தியா மீதான நம்பிக்கை சில அறிவுஜீவிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறதே?
 
 
ஷோபாசக்தி: இந்திராகாந்தியின் காலந்தொட்டே இந்திய அரசு ஈழப்போராளிகளை இலங்கை அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் அமைப்புகளாக வைத்திருந்து, இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பியதே அல்லாமல், அது தனிநாட்டுக் கோரிக்கைக்கு எப்போதும் ஆதரவாயிருக்கவில்லை. இந்திய அரசின் அழுத்தங்களிற்குப் புலிகள் பணிய மறுத்தபோது அது போராகவும் வெடித்து, இந்திய அமைதிப்படை ஈழத்து மக்களைக் கொன்றும் குவித்தது. இலங்கை அரசு முற்றுமுழுதாக இந்தியாவிற்கு அடிபணிந்தபோது அது இலங்கை அரசிற்காக ஒரு போரையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றிக்கான விலையை இந்தியா இனித்தான் இலங்கை அரசிடம் கேட்கயிருக்கிறது. முழு இலங்கையும் இந்தியப் பெருமுதலாளிகளின் காலனியாவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
 
 
ஈழத்தமிழர்கள், இந்திய அரசின் நண்பர்கள்; ஈழம் அமைவதுதான் இந்தியாவிற்குப் பாதுகாப்பு; இந்தியா சிதறாமல் இருப்பதற்கு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை என்றெல்லாம் கவிஞர் கி.பி.அரவிந்தன் அண்மையில் ஒரு இதழில் சொல்லியிருப்பதைப் படித்திருப்பீர்கள். இது அவருடைய கருத்து மட்டுமல்ல. புலிகள் ஆதரவாளர்களில் பலர் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள். இவர்கள் பிராந்திய வல்லரசு என்னும் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பாத்திரத்தைப் புரிந்துகொள்ளாமல் இதைப் பேசவில்லை. காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் இந்தியவிலிருந்து சிதறினால் இவர்கள் எதற்குக் கவலைப்பட வேண்டும். இந்திய வல்லரசைப் பாதுகாப்பதா ஈழத் தமிழர்களின் வேலை? இதென்ன கோணல் கதை!
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.விற்குப் பரிந்து பேசியது, சங்கராச்சாரியைச் சந்தித்து ஆசி பெற்றது, கோவையில் இந்து முன்னணியினரின் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஈழத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என சிவாஜிலிங்கம் எம்.பி. பேசியது, எல்லாவற்றையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்திய மத்திய அரசை அதன் முதலாளிய இந்துத்துவ ஆதிக்க சாதிப் பண்புகளுடன் நாம் புரிந்துகொள்ளும்போது இந்திய அரசிற்கு ஈழத்தமிழர்கள் நண்பர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்திய அரசும் எக்காலத்திலும் ஈழத்தவர்களிற்கு நண்பனாய் இருக்கப் போவதும் கிடையாத
 
மீனா: தமிழீழம் சாத்தியமில்லை என்று நீங்கள் சொன்னதையும் கி.பி. அரவிந்தன் விமர்சித்திருக்கிறாரே?
 
 
ஷோபாசக்தி: என்னத்த விமர்சித்தார்! „நரிகள் ஊளையிடுவதால் சூரியன் மறைந்துவிடாது“ என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஒரு அரசியல் விமர்சனமா? தமிழீழம் சாத்தியமெனில் அதைத் தடுக்க நான் யார்? அதற்கு எனக்கு என்ன சக்தியிருக்கிறது. இன்றைய இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு நான் சாத்தியமில்லை என்றேன். தமிழீழம் சாத்தியம் என நம்பும் அரவிந்தன் அதற்கான தருக்கங்களை முன்வைத்துத் தனது கருத்தை நிறுவவேண்டும். அதைவிடுத்து இந்த நரி, நாய் உவமையெல்லாம் பேசி இன்னும் இன்னும் மக்களை ஏமாற்றலாமென்றும், கொல்லக் கொடுக்கலாம் என்றும் அவர் கருதக்கூடாது.
 
 
மீனா: ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழும் குரல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: நன்றியுடன் பார்க்கிறேன். ஆனால், மனிதாபினம், இனவுணர்வு இவற்றின் அடிப்படையில் எழுந்த குரல்கள் அரசியல்ரீதியாகச் சரியாக ஒன்றிணைக்கப்படவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்த சில தருணங்களில் அவர்கள் தவறான தலைமைகளால் வழிநடத்தப்பட்டார்கள். ஈழம் கிடைப்பதற்கு ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என்றளவிற்குத்தான் அந்தத் தலைமைகளின் அரசியல் யோக்கியதையும் இருந்தது. வெட்கமாயில்லையா?
 
 
ஈழத்து மக்களிற்கு ஆதரவாய் எழுந்த குரல்களை ஒரே மாதிரி மதிப்பிடுவதை நான் என்றைக்குமே செய்யப் போவதில்லை. வெறும் புலி ஆதரவாளர்களிடமிருந்தும் புலி ரசிகர்களிடமிருந்தும் விலகி நின்று ஈழத் தமிழ் மக்களிற்காகப் போராடிய சக்திகளும் தனிநபர்களும் இருக்கிறார்கள். அந்தக் குரல்கள் எங்களின் பாடுகளின் பொருட்டு இன்னும் வலுக்க வேண்டும். இந்தியாவில் இவர்கள்தான் ஈழத்துத் தமிழர்களின் நட்புச் சக்திகளே தவிர, கி.பி.அரவிந்தன் சொன்னது மாதிரி இந்திய அரசு இயந்திரமல்ல.
 
 
மீனா: புலிகளே தங்கள் தலைமையின் இழப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், „பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார். மீளெழுச்சி கொண்டு அவர் தலைமையில் போராடுவோம்“ என்கிறார் பழ.நெடுமாறன்; „ஐந்தாம்கட்ட ஈழப்போர் வெடிக்கும், அது பிரபாகரன் தலைமையில் நடக்கும்“ என்கிறார் சீமான். இவையெல்லாம்…?
 
 
ஷோபாசக்தி: இது அடுத்தவனைச் சாகக் கொடுத்துவிட்டு அந்தப் பிணம் எரியும் நெருப்பில் வெளிச்சம் பெறவிரும்பும் பேச்சு. உருத்திரகுமாரன் போன்றவர்களே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசாமல் வேறு சாத்தியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் அய்ந்தாம் கட்ட ஈழப்போர் என்று பேசுவதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்? யார் நம்பினாலும், ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பிரபாகரன் வந்து படை நடத்துவார் என்று இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பொய்யர்களின் பேச்சுக்கெல்லாம் பெறுமதி ஏதுமில்லை. ‘உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்’ என்றொரு பழமொழி ஈழத்தில் உண்ட
 
 
மீனா: தமிழர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், மலையக மக்கள் என சகலருக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு அமைய வேண்டுமானால் அது எப்படியிருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: பிரச்சினை என்று இருந்தால் அதற்கு கண்டிப்பாக எங்கேயோ ஒரு தீர்வும் ஏற்கெனவே இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இப்போது முன்மொழியப்படும் தீர்வுகள் குறித்தும், சம்மந்தப்பட்ட தரப்புகள் கூடிப் பேசித்தான், சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் மூலம்தான் அமைதிக்கான பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். அதன் மூலம்தான் ஒரு சாத்தியமான தீர்வை வடிவமைக்க முடியும். ஆனால், இன்றைய ராஜபக்சே அரசு தீர்வு குறித்துப் பேசவே மறுக்கிறது. தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்கவில்லை என்று இவ்வளவு காலமாக இருந்த அரசுகள் சொல்லிவந்தன. அதில் உண்மையும் இல்லாமலில்லை. ஆனால், இப்போது ஒரு தீர்வை முன்வைப்பதில் அரசுக்கு என்ன தடையிருக்கிறது? ஆனால், ராஜபக்சே அடுத்த ஜனாதிபதி தேர்தலிற்குப் பின்புதான் தீர்வு குறித்தெல்லாம் பேச முடியும் என்கிறார். இந்த பொம்மை மகாணசபை ஏற்பாட்டுடனேயே திருப்தியடைய தமிழர்கள் நிர்பந்திக்கப்படுவது மட்டும்தான் இனி நடக்கயிருக்கிறது.
 
 
 
இலங்கையில் இன அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் இயங்குவதைத் தடை செய்யும் சட்டமொன்றைக் கொண்டுவர இலங்கை அரசு அண்மையில் முயன்றது. நீதிமன்றம் அந்த முயற்சிக்கு இப்போது தடைபோட்டிருக்கிறது. எனினும், அரசு சிறுபான்மை இனங்களின் அரசியலுக்கு முடிவுகட்டி அவற்றின் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்யவே முயற்சிக்கிறது. நாடு முழுவதையும் பேரினவாதக் கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டத்தை நோக்கியே இலங்கை அரசு நகர்கிறது. ராஜபக்சேவுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகள்தான் கிழக்கில் மகாண சபையையும் யாழ் நகரசபையையும் கைப்பற்றியிருக்கின்றன.

இப்போதைக்குத் தீர்வென்றெல்லாம் ஏதுமில்லை. அதை ஏதாவது ஒரு தரப்பு மட்டும் முடிவுசெய்துவிட முடியாது. ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வருமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசியல் சக்திகள் இப்போது தமிழர்களிடம் கிடையாது.
 
 
மீனா: புலிகள் அவ்வாறான சக்திகளாக முன்பு இருந்தார்களல்லவா?
 
 
 
ஷோபாசக்தி: நிச்சயமாக இருந்தார்கள். ஆனால், பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து அதன்மேல் கட்டப்பட்ட அந்தச் சக்தியைப் புலிகள் தவறாக விரயம் செய்தார்கள். அவர்களின் இராணுவவாத அரசியலும் சர்வதேசச் அரசியல் சூழல்களைப் புரிந்துகொள்ள அவர்கள் மறுத்ததும்தான், இறுதி நேரத்தில் புலிகள் யுத்த நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தபோது கோத்தபாய ராஜபக்சே இது நல்ல நகைச்சுவை என்று கேலி பேசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்குமளவிற்குப் புலிகளைக் கொண்டுவந்து நிறுத்தியது; இறுதியில் அவர்களை அழித்தும் போட்டது.

புலிகள் வழியிலான அரசியல் வெறும் தோல்வி அரசியல் மட்டுமல்ல; தார்மீகம் அற்ற அரசியலும் என்பதைக் காலம் நிரூபித்துள்ளது. வெறுமனே தமிழ்த் தேசிய உணர்வில் நின்று பேசாமல், இன்றைய சர்வதேச அரசியல் சூழல்களையும் இலங்கைக்கும் அந்நிய வல்லாதிக்கவாதிகளுக்குமான தொடர்பையும், அதில் இருக்கும் பொருளியல் காரணிகளையும் விளங்கிக்கொள்ள முடிந்தவர்களால் மட்டுமே இனித் தமிழர்களிற்குச் சரியான அரசியல் தலைமையை வழங்க முடியும். அரச பயங்கரவாதத்திற்கு எதிரான, விட்டுக்கொடுக்காத எதிர்ப்புணர்வும் சனநாயக அரசியல் நெறிகளின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒரு அரசியல் போக்கு வெற்றிடத்திலிருந்து உருவாக வேண்டியிருக்கிறத
 
 
மீனா: வடக்கின் வசந்தம்’ தமிழரின் வாழ்வில் வீசுமா?
 
 
 
ஷோபாசக்தி: அரசியல் தீர்வினை வழங்கி ராணுவத்தை மீளப்பெற்றுக்கொள்வதன் மூலம் தான் வசந்தம் வருமே தவிர, இலங்கை அரச படைகளை தமிழர்களின் குடியிருப்புகளில் செருகிக்கொண்டு போவதன் மூலம் வராது. மாகாண சபை போன்ற அற்ப சொற்ப சலுகைகளுடன் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முடக்குவதற்கான கவர்ச்சி கண்துடைப்பே இந்த ‘வடக்கின் வசந்தம்’.
 
 
 
மீனா: ‘வசந்தம்’ இல்லையென்றாலும், போர்ப் பீதிகளற்ற வாழ்வாவது சாத்தியமென்றால் உங்கள் கிராமத்திற்குத் திரும்புவீர்களா?
 
 
 
ஷோபாசக்தி: இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் எனது கிராமத்திலிருந்து கிளம்பினேன். இருபது வருடங்களாகிவிட்டன. அய்ரோப்பாவில் அகதி வாழ்க்கை மிகவும் கசப்பான வாழ்க்கை என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். எனது கிராமத்தின் மீது எனக்குப் பெரிய பற்றிருக்கிறது என்பதுமில்லை. ஆனால், ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையிலும் ஒரு இடதுசாரி என்ற வகையிலும் எனது எழுத்தும் அரசியலும் வாழ்வும் முற்று முழுதாக ஈழத்துடன்தான் பிணைந்திருக்கிறது. ஊருக்குப் போக வேண்டும்; அதற்கான சூழலும் தருணமும் விரைவில் எனக்குக் கிட்டவேண்டுமென்று என்னை வாழ்த்துங்கள் மீனா!
 
 
மீனா: நிச்சயமாக ஷோபா! உங்களுக்கும் உங்களைப் போலவே காத்துக்கொண்டிருக்கும் அத்தனை ஈழத் தமிழர்களுக்கும் அத்தருணம் விரைவில் கிடைக்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
 
 
 
‘அம்ருதா‘ (நவம்பர் 2009) இதழில் வெளியாகிய நேர்காணல்
 
 
http://www.shobasakthi.com/shobasakthi/?p=549

கொல்பவர்களைக் காட்டு நீ

தெருமுனைகளும்
தேசத்தை ஏலம் போடும்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

நீ „ஈழவிடுதலை“ என்கிறாயே அது என்வென்றுரைக்க முடியுமா?
மோதிய சுவரில் வழிந்தோடும் குருதியில் பட்டுவிலகும் தென்றல்
நாசித்துவராத்தோடு குருதிவெடில் சுமந்து
எனது உயிர்ப்புக்கு உப்பிடுகிறது

எனக்குள்ளும் இறந்தவர்கள்
கொன்றவர்களுக்குள்ளும்
கொலைகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள்
தேசத்தினது விடுதலையை மையப்படுத்தும் துப்பாக்கிவழி

எனக்கிருக்கும் உயிர்த்திருக்கும் உரிமை
எந்தத் தேசமும் தந்ததில்லை
அதைத் தருவதற்கு எவருக்கு உயிருரிமையாக்கப்பட்டது?
ஒட்டிய உடலொடு கஞ்சல்படும் உயிர் மொழியின் உரிமைக்கு உருமாகிறது

மொழியோ எனக்குள் இருப்பிழக்கிறது
அஞ்சல்படுத்தப்படும் மனித அழிப்புக்கு
உலகத்தின் பலபாகத்திலும் நியாயவோலை எழுதப்படுகிறது
மக்களின் நலனென்று கொலைகள் தீவிரமாக நடாத்தப்பட்ட

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும் பொங்கு தமிழென
சாவதற்காய் உயிர்த்திருக்கும் அனைவரையும்போலவே
எனக்கும் உயிர் நிலைத்திருக்கு
எழுப்பப்படும் உயிரின் முனகலில் மரண வலி

கொலைகளின் தீவிரம் எதற்காக?
மரணம் நிச்சியப்படுத்தப்பட்ட பலிப்பீடத்துக்கு முன்னே
துப்பாக்கிகள் பிராத்தனை செய்கின்றன
தோத்திரம் உரைக்கும் எனது எஜமானர்கள் கைகளில் ஏசுவின் குருதி

கண்டடையப்படும் நியாயத்தின் வழி
விடுதலை எனக்குச் சாத்தியம் என்பவர்கள்
என்னைத் துரோகியென என்றோ கொன்றழித்தனர்
இதையும் விடுதலையின் நீதி என்கின்றனர்!

வாழ ஆசைப்படும் மெல்லிய விருப்புக்குத்
தேசத்தின் பெயரால் தியாகம்-வித்துடல் முன் நிறுத்தப்பட்டபின்
மரணங்கள் வழிபாட்டுக்கான தரிப்பிடங்களாகின்றன
கொலைகள் „ஈழப்போர்“ எதிர் கருத்துக்குத் தீர்வாகிறது

போர் வாழ்வு புகழுடம்பின் புனிதமாகின தேசத்தில்
கொல்லப்படும் உயிர் கடைப்பொழுதிலும் வாழ்வுக்காக ஏங்கித்தொலைகிறது
அதையும் தேசவிடுதலைத் தியாகமென்று
உலகத் திண்ணைகளில் தேசியக் கொடியேற்றுகிறது பாசிசம்

கொல்லப்படுவதற்கு முன் கல்லறையின் முன்னே
கனத்த மனதுடன் குழந்தைகள் அணிவகுத்தபடி
வாழ்வுக்காய் ஏங்கிக்கிடக்கச் சில காட்டுமிராண்டிகள்
தமது கட்டளையைச் சுமக்கும்படி துப்பாக்கியால் சத்தியம் வேண்டுகிறார்கள்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

ஈழம் விடுதலையாவதற்குள் குருதிச் சேற்றில் அமிழ
தமிழ்க் குறுந்தேசியம் என்னையும் உன்னையும் அண்மிக்கும்
ஈற்றில் இருவருக்கும் வேறு கல்லறைகள்
„துரோகி-தியாகி“என்று குருதியல் எழுதியும் வைக்கப்படும்

விடுதலை, சுதந்திரம், சுயநிர்ணயம்,தமிழீழம்
ஏகப் பிரதிநிதிகளின் வழியே பொங்கு தமிழாகப்பொங்க
கல்லாப் பெட்டிகள் நிரம்பும் தேசிய வர்த்தகத்தில் பணமாக
இல்லாத ஈழமோ பிணத்தால் நிரம்பி வழிய

21.06.2008

>கிளிநொச்சியிலிருந்து மூட்டைகட்டும் புலிகள்

>கிளிநொச்சியிலிருந்து மூட்டைகட்டும் புலிகளும்,
பட்டுக்கோட்டைப்பாணிபாட்டுத் தத்துவத் தட்டைப்போடும் நாமும்.

„டையன் பின் பூ-ஜெனரல் கியாப் ஈறாய் ஈழத்துக்காகப்
புலிகள் செய்த போராட்டம்வரை ஏறி-இறங்கிப் பாய்தல்“

ன்று விடுதலைப் புலிகளின் போராட்டச் செல் நெறி மக்கள் போராட்டச் செல் நெறிக்கமையவேனும் தன்னைத் தகவமைத்து ஆயிரக்கணக்கான தேசபக்த போராளிகளையும்,தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப்போராட்டத்தையும் காத்தாகவேண்டும்.இதிலிருந்து ஒருபடியேனும் புலிகள் பின்வாங்குவார்களேயானால் நிச்சியம் புலிகள் பூண்டோடு துடைக்கப் படுவார்கள்.பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் இன்று, மக்களோடான புலிகளின் பிழையான-தவறான உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்ட புலிகளின் போராட்டம் மீளவும்,மக்களைத் தம்மோடு அணைப்பதற்கான முயற்சியில்,அதே மக்களைக் கட்டாயத்துக்குட்படுத்துகிறது.இது,எதிரிக்குச் சார்பான மக்கள் மனங்களைத் தொடர்ந்து உற்பத்திபண்ணக் கிளிநொச்சியிலிருந்து புலிகள் மூட்டைகளைக் கட்டுகிறார்கள்.கூடவே, மக்களையும் பார்சல் செய்து முல்லைத்தீவை நோக்கி அனுப்புகிறார்கள்.

இது மிகவும் கொடுமையானவொரு போர்ச் சூழலை மக்களுக்குள் திணித்த காலம்.எதிரி பல்தேசியக் கம்பனிகள்(நாடுகள் என்று எடுத்திடுக)கூட்டோடு வன்னி நிலப்பரப்பெங்கும் விரிந்து பரவாலாகிறான்.பிடித்த இடங்களைக் காப்பதற்கு அவன் மேலும் இடங்களைப்பிடிக்கின்றான்.கிளிநொச்சியும் வீழ்ந்துவிட்டது.அதை அண்மிக்க மாவீரர் தினத்தை எதிர்பார்த்து எதிரி தேதி குறித்துள்ளான்.புலிகள் கிளிநொச்சியைவிட்டகல்கின்றனர்.

இனி என்ன?

„புலிகள் பூண்டோடு துடைக்கப்படமுன்னர் அவர்கள் இனியும் சர்வதேசத்தை நம்பாது மக்களிடம் தமது இருப்பைக்குறித்து தேர்வுகளை விட்டாகவேண்டும். வரலாற்றைக் குறித்துப் பார்த்தால் இன்னும் காலம் கடந்துவிடவில்லை.கிளிநொச்சியோடு எதிரியின் படைப்பலம் மெல்ல,மெல்ல அழிக்கப்படவேண்டும்.இது, மிக யதார்த்தமானவொரு கெரில்லாப் போராட்டத்துக்குப் புலிகளைத் தகவமைக்கவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது.மரபுரீதியான படையணிகள் இனிமேற்காலத்தில் புலிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.அத்தகைய மரபுரீதியானபடையணியைக்கொண்டு,வன்னிநிலப்பரப்பெங்கும் பரவலாக விரிந்துவரும் எதிரியை ஒருபோதும் முறியடிக்கமுடியாது.“இப்படியொரு எதிர்பார்ப்பை முன்வைத்து எழுதுவதற்கு ஆசை.ஆனால்,இன்றைய சிங்கள அரசின் இருப்பை நிலைப்படுத்த முனையும் சிங்கள ஆளும்வர்க்கம் புலிகளைத் தமிழ்பேசும் மக்களிடமிருந்து மிகவும் தனிமைப்படுத்தியுள்ளனர்.இதுவே,இனிவரும் காலங்களில் பெரும் தாக்கத்தைத் தரப்போகிறது.இதன் வழி மேலுஞ் சிலவற்றை நோக்கலாம்.

எதிரி தனது நிலைகளைப் பலப்படுத்துவதற்காகத் தொடர்ந்து பரவலாகுவதைத் தவிர அவனிடம் வேறு தேர்வு இல்லை.இதற்காகப் படையணிகளைத் தொடர்ந்து நிலப்பரப்புகளைக்கைப்பற்ற நகர்த்தியபடியே இருப்பான்.கிளிநொச்சியைத்தாண்டும்போது எதிரிக்குப் பொறிகள் நிச்சியமாக உருவாக்கப்பட்டாகவேண்டும்.அது,வன்னிமண்ணில் இன்னொரு“டையன் பின் பூ“வை உலகுக்குக் காட்டுவதாக இருக்கும்போது புலிகள் தமிழ்பேசும் மக்களின் குழந்தைகளைத் „தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்கு“ அர்ப்பணித்தவர்களாகுவார்கள்.ஆனால்,இதைப் புலிகளிடமிருந்து எதிர்பார்ப்பது சிரமமாக இருக்கிறது.

சிங்களஅரசு-இந்திய அரசின் வியூகதஇதுக்கமையப் புலிகள் மக்களிடமிருந்து மிகவும் அந்நியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.இந்தத் தனிமைப்படுத்தலைச் சாதகமாக்கிய இலங்கை அரசு, இராணுவத்தைச் சிங்களத் தேசிய வீரர்களாக்கியபடித் தமிழ்த் தேசத்தை இல்லாதாக்கிவருகிறது.

இன்றைய இராணுவ முன்னெடுப்புக்குப் பின்னாலிருக்கும் வெற்றிக்கொண்டாஞ்சார்ந்த நிகழ்வு, தேசியவாத்தைத் தடையின்றிச் சிங்கள மனத்தில் நிலைப்படுத்தித் தேசத்துக்கான படையை உருவாக்குவதில் பெரும்பகுதிச் சிங்கள இளைஞர்களைத் திரட்டும் சதியோடு, சிங்களச் சமூகவுளவியற் தளத்தை வலுப்படுத்துகிறது.இதன் அடிப்படையில் விரிந்துமேவும் படைகளைக் காப்பதற்கும்,வீழ்ச்சிக்குள்ளாகிய (புலிகளின்கட்டுப்பாட்டிலிருந்த) நிலப்பரப்புக்களைக் காக்கவும் பெரும் படையணியைத் திரட்டுவதற்குச் சிங்கள அரசு முனைகிறது.அதன் பெரும்பாலான இராணுவ நகர்வு மிக நேர்த்தியாகச் செயற்படுத்தப்படுகிறது.சிங்கள இராணுவம் கூலிப்படையணியாக இருந்து தேசியவீரர்களாக்கப்பட்டுள்ளார்கள்.இது, வியாட்நாமில் தோல்வியுற்ற பிரஞ்சு-அமெரிக்கப்படையணிகளுக்கு மாற்றானவொரு தளத்தில் போராட்டத்தை நடாத்துகிறது.

அங்கே,அந்நிய விஸ்த்தரிப்புப்படை.இங்கே,ஒரு தேசவுருவாக்கத்துள் நிலைபெற்ற தேசிய இராணுவப்படையாகச் சிங்கள இராணுவம் தகமைக்கப்பட்டு,அதன் போராட்டச் செல்நெறி வகுக்கப்பட்டுள்ளது.இது,புலிகளுக்கு மிகவும் கடினமானவொரு போராட்டச் சூழலை முன்தள்ளுகிறது.சிங்கள அரசின் பக்கம் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் இளைஞர்கள் தேசிய வீரர்களாக அணிவகுக்கப்பட்டுள்ளார்கள்.மறுபுறும்,அவர்களது மனவலிமையோடும்,தேசியவூக்கத்தோடும் இந்திய-உலக இராணுவத் தளபாட-நெறிப்படுத்தலோடு போராட்டம் நடைபெறுகிறது.இது, சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான இனவாத முன்னெடுப்புக்குத் தேச ஒருமைப்பாட்டுச் சாயத்தையும்,“ஒரு தேச“அபிமானத்தையும், உழைக்கும் சிங்கள மக்களிடத்திலிருந்து படையணிக்கு ஆட்பலத்தைப் பெறவும் மிக இலகுவானவொரு எண்ணவோட்டத்தைப் பொதுமையாக்கிப் போரை நியாயப்படுத்துகிற நகர்வில், வெற்றியைக் குவிக்கிறது.இந்தவெற்றியை மிகவும் ஆரவாரமாகக் கொண்டுவது சிங்கள ஆளும் வர்க்கத்தின் இருப்போடு சம்பந்தப்பட்டது.


இதைத் தோற்கடிக்கும் ஆற்றலை இல்லாதாக்கும் முயற்சியில் கூர்மையடையும் இனவாதத் தெரிவுகள் சிங்கள மக்களின் மனங்களில் வீராப்பiயும்,தமிழர்கள் குறித்த அச்சத்தையும் தொடர்ந்து நிலைப்படுத்துவதால் நடைபெறும் போராட்டம் கூலிப்படைக்கும்,விடுதலைப்படைக்குமானதாக இருக்கப் போவதில்லை!எனவே,புலிகள் தனிமைப்பட்டுக்கிடக்கும் இந்தச் சூழல், இலங்கை அரசுக்கு மிகவுமொரு சாதகமான இராணுவ வெற்றிகளைக் குவிக்கிறது.இந்த வெற்றி கிளிநொச்சியோடு முடிவடைவதற்கான எந்த வாய்யுப்பும் தமிழ்த் தரப்புக்கு இல்லை!

முற்றுகைக்குள் சுற்றிவளைக்கப்பட்ட புலிகள் சிதறிவிடுவதற்குள் உடைப்புத் தாக்குதலில் புலிகள் முயைவேண்டும்.அது, சில வெற்றிகளைக் குவிக்கும்போது போராளிகள் மனத்திடம்பெறுவதோடு,புலிகளின் பின்னே நிற்கும் மக்களும் போராட்டத்தோடு இணைவதில் மையங்கொள்ளும் சூழல்.அத்தோடு இந்தப் போருக்கெதிரான வெகுஜனப் போராட்டம் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு,கொழும்புவென வெடித்துக் கிளம்பவேண்டும்.சிங்கள அரசின் அன்றாடக் குடிசார் நிர்வாகம் சீர்குலைந்து ஆதிக்கம் ஆட்டங்கண்டாகவேண்டும்.ஆனால்,கொழும்பு,யாழ்ப்பாணம்,மட்டகளப்பு எல்லாம் புலிகளுக்கு எதிராக விழா எடுக்கும் நிலைக்குள்.

என்ன செய்ய?

இதைத்தாம் புலிகளின் போராட்டம் தந்துள்ளது!.

தமிழ்நாட்டில் நடைபெறும் போருக்கெதிரான எழிச்சிகள் யாழ்ப்பாணத்திலோ அல்லது கிழக்கு மாகாணத்திலோ அன்றிக் கொழும்பிலோ நிகழவில்லை.அரசினது சட்டவொழுங்குகளைப் பெரும் திரளான மக்கள்கூட்டம் மீறுவது அவசியம்.கையில் எத்தகைய ஆயுதத்தை-எவ்வளவுதொகை இராணுவம் வைத்திருப்பினும் மக்கள் சக்தி முன் அவை வெறும் இரும்பே.பாலஸ்தீனத்தில் நாம் காணும் காட்சிகள் என்ன?-ஈழத்தில் நடப்பதென்ன?இதைக் குறித்து எந்தத் தரப்பிலும் விவாதிக்கப்படவே இல்லை!இத்தகைய தருணத்தில் தமிழ்நாடுமட்டுமல்ல சுயநிர்ணயத்துக்காகப் போராடிய ஈழத்தமிழர்கள் எல்லோரும் ஒரு அணியில் திரளவேண்டும்.அது, புலிகளின் பின்னே என்றில்லை.மாறாகத் தமது விடுதலையின் பின்னே-வாழ்வினதும்-இருப்பினதும் பின்னே!அதாவது, மக்களே தமக்காகத் தமது தலைமையை ஏற்பதற்காக.எதுவும் நிகழவில்லை!இராணுவத்தினது கையைப்பார்த்து மக்கள் கொட்டாவி விடுவதற்குத்தாம் மக்களைப் பழக்கப்படுத்தியுள்ளது இந்த „ஈழவிடுதலை“போர்.ஒரு நேரச் சோற்றுக்காக ஏங்கியதுபோதும்,திரண்டெழுக தமிழ்பேசும் மக்களே!

இதைச் சாதிக்க வக்கற்ற தமிழர்களுக்கு வாழ்வென்ன வாழ்வு வேண்டிக்கிடக்கிறது-உங்களுக்கு ஈழம் ஒருகேடா?புலிகளை நம்பியதுபோதும்,அவர்களின் பின்னே நிற்கும் தேசபக்தர்களைக்காத்து, நமது போராட்டத்தை நாமே தலைமைதாங்க இலங்கையெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் முனையாதைவரை இந்த இனம் அடிமையான இனமே.இதை எந்தப் புலிப்படையும் காக்கமுடியாது.புலிகள் போன்ற அப்பட்டமான மக்கள் விரோத அமைப்பு இதுவரை உலகத்தில் எங்கும் உருவாகவில்லை.இவர்களது எதிர்ப்புரட்சிகரப் பார்த்திரம் தமிழ்த்தேசியச் கூச்சலால் மிகவும் நாசுக்காக மறைக்கப்பட்டது மட்டுமல்ல,அதைச் சாத்தியமாக்க எத்தனை கொலைகளைச் செய்தார்கள்!இது, உலகத்தில் தோன்றிய மிகவும் கொடிய எதிர் புரட்சிப்பாத்திரம்.இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றது மட்டுமல்ல,முழுத் தமிழ்பேசும் மக்களையும் வாழ்விடங்களிலிருந்து விரட்டி,அகதிகளாக்கி,அவர்களது போராட்ட உணர்வைத் திட்டமிட்டு அழித்த வலாறு உலகத்தில் ஈழமாகவே எழுத்தப்படும்.இதுவே,இன்றைய சிங்கள அரசின் மிகப் பெரும் பலமாகவும் இருக்கிறது!

இன்று புலிகளுக்கு வரலாறு தந்துள்ளபாடம் எதிரியை அவனது பலவீனத்திலிருந்து தாக்குவதே!நாம் வியாட்நாமைக் குறித்து பெருமிதத்தோடு நோக்கும் போராட்ட வெற்றி, அவர்களது மக்கள்போராட்டப்பாதையோடு வென்ற“டையன் பின் பூ“போராட்ட நெறியாகும்-வெற்றியாகும்.ஆனால்,இன்றைய சிங்கள அரசும்,அதன் படையும் புலிகளுக்குப் பலவீனமான சூழலைவிட்டுவைக்கவில்லை!எதிரிபரவாலாகும் அதே நேரம்,புலிகளைத் தமிழ்பேசும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தித் தனது ஆதிக்கத்துள் உள்வாங்கியுள்ளான்.இதுதாம் இன்றைய இலங்கை அரசின் மிகப்பெரும் அரசியல் வெற்றியாகும்.இதிலிருந்தபடி தமிழ்பேசும் மக்களின் மீட்பனாகவும் தன்னை உலகுக்குக் காண்பித்தபடி புலிகளின் இருப்பை வெறும் ஆயுதத்தோடு தங்க வைத்துள்ளான்.மக்களின் பலமற்ற எந்த வகைப் போராட்டமும் வெற்றிபெறுவது வரலாற்றில் நடந்தேறியதில்லை!இதனால் புலிகளின்பின்னே நிற்கும் தேச பக்த இளைஞர்கள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இந்தக் கபடத்தனத்தால் மிக விரைவில் ஆயுதங்களைக் கைவிட்டுச் சிதறிவிடுவார்கள்.இது சிங்களத் தரப்பின் பக்கமாகச் சாய்ந்த பெரும்பகுதி தமிழ்பேசும் மக்களின் தெரிவுகள்போன்று இந்த இளைஞர்களிடமும் ஒரு உளிவியற்போக்கை வலிந்து வற்புறுத்துகிறது,இந்த யுத்தச் சூழல்.

கைப்பற்றப்படும் ஒவ்வொரு நிலப்பரப்பிலும் எதிரி நிரந்தர இராணுவ முகாம்களை நிறுவி நிரந்தரமாகிறான்.இதைத் தடுக்கும் யுத்தி இல்லாத போர்வடிவம் புரட்சிகரமானவொரு மக்கள் திரட்சியை நமக்குள் வற்புறத்த முடியாது திண்டாடுகிறது!மக்கள் எதிரியிடம் கையேந்தி வாழ முற்படுவதைத் தவிர வேறு வழியில்லை.மக்களும் புலிகளைப் போலவே பிரதேசரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.இந்தத் தனிமைப்படுத்தல் கிழக்குச் சுயநிர்ணயம்,வடக்குக்கு ஆதிக்க உடைப்பு என்று தம்பட்டம் அடிக்கிறது.

புரட்சிகரமான அணித்திரட்சிகளை உடைப்பதற்கு ஐரோப்பாவில் உருவாகிய இந்தப் பக்கா கருத்தியல்கள் இன்று இவற்றையெல்லாம் விட்டுக்கடந்து,ஒரே தேசம்-ஒரே மொழியென „நவலிபரல் சந்தைப்பொருளாதாரக்கூச்சலோடு“ உலகத்தை வேட்டையாடித் தமது தேசங்களையும் மக்களையும் முதன்மைப்படுத்தும்போது,நாமோ இன்று,துண்டுபட்டு பரதேசவாதத்துள் சிதறுண்டு துவித-எதிர்மறைகளையும்,பன்முகத் தெரிவுகளையும் கூடவே,ரொலாந் பார்த்,சசூர்,தெரிதா,ஃபூப்கா,இலக்கான் என்றபடி, அமெரிக்க ஆளும் வர்க்கம் முதல் உலகங்களின் அனைத்து ஆளும் வர்க்கங்களும் தமது இருப்பைக் காப்பதற்காகக் கடந்த இரு நூற்றாண்டாகப் பயன்படுத்தும் பயங்கரவாதம் எனும் கருத்தாக்கத்தை,அமெரிக்க ஜனாதிபதியென்ற பொம்மைக்குள் குறுக்கிவிட்டுப் பாடம் புனைகிறோம்.பொருளாதாரத்தைச் சுற்றி, கட்டி வளர்க்கப்படும் இந்த மேல்மட்டக் கருத்தியலானது எப்பவும்போலவே உலக ஏகாதிபத்தியத்தின் அனைத்துக் கனவையும் நிலைப்படுத்தும்போது,நாம் பட்டுக்கோட்டைப்பாணிப் பாட்டுத் தத்துவத்தட்டை யதார்த்தத்திலிருந்து வகுக்கிறோம்.இதற்காகக் காலம் நேரமின்றி ஐரோப்பிய,அமெரிக்க வியூகங்களையும் அதன் தத்துவப் போக்குகளையும் புரட்சிகரகட்சியோடு பொருத்திக்கொண்டு அதன் வழி நகர்கிறோம்.புரட்சி-புரட்டுசீயாய்ப் போனதுக்கு மேற்கூறியவர்களுக்குக் கணிசமான பங்குண்டு என்பதை நாம் இன்றைய ஆடாம் பிர்ஷ்வோர்ஸ்கி(Adam Przeworski >>Warum hungern Kinder,obwohl wir alle ernaehren koenten?,Irrationalitaet des Kapitalismus-Unmoeglichkeit des Sozialismus<>Dreizehn Versuche,marxistisches Denken zu erneuern<< ) வரை கற்றபடியே முன்வைக்கிறோம். இதைக்கடந்து ஒரு புரட்சிகரப்பணியை இந்தப் பிரஞ்சியச் "சிந்தனையாளர்கள்"தந்துவிடவில்லை!மக்களால் நடாத்தப்பட்ட அனைத்து உரிமைகளின்வழி-அதன் முதுகிலிருந்தபடி கோடுகள் கிழித்தவர்கள் ஈழப்போராட்டத்தில் புதிய தத்துவங்களை உருவாக்கச் சிந்தனைகளைத் தரப்போகிறார்கள்.அதையும் தமிழ்ச் சூழலில் "ஆ"வென்றபடி பிளப்பவர்கள், நாளைய நமது மக்களின் அடிமை விலங்கொடிக்கப் போராட்டச் செல் நெறியாக்குவார்கள் பொறுங்கள்.அதுவரையும் புதிய பாடங்களை“இவர்கள்“சொல்ல-நாங்கள் பட்டுக்கோட்டைத் தத்துவத்தட்டை யதார்த்த அரசியல்-பொருளாதாரச் சூழலிருந்து கற்றுக்கொண்டு, போட்டுக்கொண்டே இருப்போம்-ஆனால்,அடையாளத்தோடு!

இதுதாம் புரட்சிகரமானவொரு கட்சியின் உருவாக்கத்துக்கு நிபந்தனை.இதை ஆயுதத்தோடும்,கருத்தியலோடும் உடைத்தவர்கள் ஐரோப்பிலிருந்து அமெரிக்கா ஈறாக ஈழம்வரை விரவிக்கிடக்கிறார்கள். இவர்களே இன்று மக்களை அழிவுக்குள் தள்ளிவிட்டுப்,புரட்சியையும் காட்டிக்கொடுத்துத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தைச் செல்லாக் காசாக்கியவர்கள்!இவர்களைத் துடைத்தெறிய முனையும் சிங்களத் தேசியத்திலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாதையினுடாகத் தேச பக்த இளைஞர்கள் காக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களைக் கௌரவமான இனமாகவும்,சுயநிர்ணயத்துக்கு உரிமையுடைய மக்கள்கூட்டமாகவும் உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க புரட்சிகரமான பார்த்திரத்தை முன்னெடுத்தாக வேண்டும்.இது சிங்கள மக்களைத் தமிழ்த் தேசிய வாத்தினது கடைக்கோடி நிலையாக-எதிர் நிலைக்குத் தள்ளாது!சிங்களம் பேசும் மக்களின் ஒத்துழைப்பு இன்றி ஒரு துரும்பையும் தமிழ்பேசும் மக்களுக்காக எவரும் நகர்த்த முடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
18.11.2008

>தலித்தியமா? வர்க்கமா?

>தலித்தியமா? வர்க்கமா?

இன்று, எதுகுறித்த கருத்துக்களும் பரவலாக முன்வைக்கப்பட்டாகவேண்டும்!

எமது இனத்தின் விடுதலை குறித்தான போராட்டப் பாதையில் அன்றுதொட்டு இன்றுவரையும் -சரியான தெரிவற்ற தளத்தில்- நமது மக்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டு வருகிறது!

சிங்கள இனவாத அரசோ தமிழ்பேசும் மக்களைப் படுகேவலமான முறையில் ஒடுக்கியும், அற்ப சலுகைகளைப் பதவிவிரும்பித் தமிழ்த் தலைவர்களிடம் கையளித்துத் தொடர்ந்தது தமிழ்பேசும் மக்களை ஒடுக்க முனைகிறது.அதற்காகப் பற்பல முயற்சிகளை நமக்குள் தோற்றுவித்தபடி,நமது போராட்டத்தை ஒடுக்கி வருகிறது.

இங்கே,ஒரு வாசகர் தனது கட்டுரையொன்றை எனது பதிவில் பின்னூட்டாக அனுப்பி வைத்தார்!

அவரது கட்டுரையின் கருத்துக்களை வாசகர்கள் உள்வாங்கி, விவாதமொன்றைத் தொடர்வதற்கான களமொன்றை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது.

விவாதமென்பது வாசகர்களிடையேயான கருத்துப் பரிமாற்றமாக இருக்கும்.

அது, கருத்துக்களை நேரிய முறைகளில் உருவாக்குவதற்கான முதற்படி.இதிலிருந்து நாம் இன்னும் முன்னேறிவிடவில்லை என்பதற்கு நமது இன்றைய போராட்ட நடத்தைகளே சாட்சி. எனவே,இக்கட்டுரையை ஒரு பதிவாக இடுகிறேன்.

கட்டுரை அனுப்பிய தோழருக்கு நன்றி!

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
15.02.2008

நாடை நோக்கி ஒரு கேள்வி

தலித்தியமா? வர்க்கமா?

மனித இனத்தை வசதி படைத்தவர்கள் (மூலதனம்), வசதி மறுக்கப்பட்டவர்கள் (உழைப்பை விற்க தயாராக இருப்பவர்கள்) என்ற இரு பெரும் பிரிவிற்கு இடையில் பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் ,வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே „அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம்“ என இந்த பொருளாதார அமைப்பில் இருந்து கொண்டே இருக்கின்றது.

இந்த மக்கள் கூட்டத்தை விஞ்ஞான ரீதியாக பகுத்தறிவதில் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றது.

இதில் ஒரு சமூகத்தில் ஒரு பிரிவினரே ஒடுக்குமுறையை, பின்னடைவை இனம்கண்டு அதற்கான தீர்வை முன்வைக்கின்றனர். இந்தப் பிரிவை குட்டி முதலாளிய வர்க்கம் என்று பொருளாதார முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அலசிப் பார்ப்பவர்கள் வரையறுத்துக் கொள்கின்றனர். இவர்களில் உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் சார்ந்து நிற்பவர்களாக ஒரு பிரிவினரும், மறுபிரிவினர் வசதியை பெருக்கிக் கொள்ளும் நோக்கோடு அதனைச் சார்ந்து நிற்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்தப் பிரிவினை குட்டி முதலாளிய வலது பிரிவினராக கொள்ள முடிகின்றது.

இந்த இரண்டு நலன்களைக் கொண்ட பிரிவினர்களும் சமூகத்தில் இருக்கின்ற வழிகாட்டும் சிந்தனை பற்றிய தெரிவுகள் என்பது துல்லியமாக தெரியக் கூடியது. ஆனால் ஒருவர் தத்தம் நலன் கொண்டு திரித்துக் கூற முடிகின்றது.

இதில் வசதி மறுக்கப்பட்டவர்கள் தமது நிலையில் இருந்து வெளிவர போராடுகின்ற போது அவற்றை ஒவ்வொருவரும் சுயமாக எதனையும் செய்து முடிவதில்லை. மாறாக, சமூகத்தில் இருக்கின்ற பொருளாதார அமைப்பே இவற்றை நிர்ணயிக்கின்றது.

இந்த நிலையில் பொதுவான ஒடுக்குமுறைகளை இனம் கண்டு கொள்ளும் விடயங்களை அறிந்த பகுதியினர் தத்தமது நலன்களின் மையத்தில் (வர்க்கத் தளத்தில்-வர்க்கநலனிலிருந்து)இருந்து தீர்வு நோக்கி நகர்கின்றனர்.

இதுவேதான்(வர்க்க சமுதாயத்தில் வர்க்க அரசியல் )இயல்பாக இருக்கின்ற நிலமை.

இவற்றிற்கு இடையே பற்பல கருத்துக்கள் சிந்தனைகள் என மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்ற நிலைதான் தற்பொழுது இருக்கின்றது.

தலித்தியம் என்பது இந்திய நாட்டின் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருத்தாக்கத்தினால் போராடும் முன்னணிப் பிரிவுகளிடையே பிரிவினையை உண்டாக்கியிருக்கின்றது.

இது கூட பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் தமக்கு தீர்வாக முன்வைக்கப்படும் நிலையானது இதுவரையில் அழிவுப் பாதைக்கு கொண்டு வந்ததை நாம் தமிழ் தேசியம் என்ற நிலையில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் தேசிய மையவாதமானது பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்களின் வலது பிரிவினரால் முன்வைக்கப்பட்டது தான் தமிழீழ கோசம்.

இவ்வாறுதான் இன்று தலித்துக்கள் இன்று பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் பார்ப்பன சதிக் கூட்டத்தால் விதைக்கப்பட்ட சாதி தர்மத்தை மீட்டெடுப்பதாகக் கூறிக் கொண்டு வளர்ந்த பிரிவினர் தம்மை தலித்துக்கள் என்று கூறிக் கொண்டு தமது நலனின் மையநிலையில் இருந்து கருத்தை முன்வைக்கின்றனர்.இங்கு வசதி மறுக்கப்பட்டவர்கள் என்கின்ற போது ஒரு இனத்திலோ அல்லது ஒரு மதப்பிரிவிலோ அல்லது ஒரு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இவர்கள் இனம், மதம், சாதி, நிறம் கடந்து வசதி மறுக்கப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

தேசியம் பேசுகின்றவர்கள் அல்லது தலித்தியம் பேசுகின்றவர்கள் உண்மையில் யார் என்றால் வசதி படைத்தவர்கள், வசதி மறுக்கப்பட்டவர்கள் என்ற இரு பெரும் பிரிவிற்கு இடையில் பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் தான். இவர்களால் முன்வைக்கப்படும் உரிமை என்பது ஒவ்வொரு வசதி படைத்தவர்களுக்கும் இடையே பேசப்படும் பேரம் தான் இந்த நிலை. இதனை முதலாளித்துவ ஜனநாயகம் என்பர்.

முதலாளித்துவ ஜனநாயகம் என்ற உரிமையைத்தான் பெற இணையும் படி தலித்தியம் (தேசியம் இனத்துவ கோசத்தின் கீழ்) கோருகின்றது. ஒரு பிரச்சனைக்கான தீர்வினை யார் வைக்கின்றனர்- இது எவ்வாறு அமைகின்றது? சமூகத்தின் பொருளாதார அமைப்பு என்ன என்ற புரிதல் இல்லாத நிலையில் அல்லது அறிவுரீதியாக பக்குவம் அடையாத நிலையில் இருந்து தோற்றம் பெறுகின்ற கருத்தாக்கத்தின் பின்னால் மக்கள் செல்கின்ற போது பல கோட்பாடுகளின் நிலையில் இருந்து, தத்தமது நலனை முன்வைக்கின்றனர். இவ்வாறே தமிழ் தேசிய போராட்டத்தின் ஆரம்பத்திலும் சரி சாதிய எதிர்ப்புப் போராட்டதிலும் சரி முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நிலைப்பாடில் இருந்து இடதுசாரிகள் போராடி இருக்கின்றார்கள் இது தவறு என்றே வசைபாடப்பட்டே வருகின்றது.

இதிலும் தலித்தியத்தின் கருத்தாக்கத்தை (குட்டி முதலாளிய சிந்தனையை) வெறும் பொருளாதார மாற்றத்தின் மூலம் மாற்றம் கொண்டுவந்துவிட முடியாது. இதனை எப்பவும் இலங்கையின் தீவிர இடதுசாரிகள் கூறிக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்கான முதலாளித்துவ சமூக உற்பத்தியில் கிடைக்காத உரிமைகளை பெறவே போராட்டதை நடத்திக் கொண்டனர். இவ்வாறிருக்கையில் இவற்றை மறுதலித்து தீவிர இடதுசாரிகள் போராடியதாக கருத்து உருவாக்கம் கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் இன்றைய போக்கைப் பார்ப்போம் ‘கம்யூனிஸ்டுக்கள் சாதிப்பிரச்சனைக்கு உரிய முக்கியத்துவம் அழிப்பதில்லை என்கிற குற்றச்சாடடிற்கு மாறாகச் சமீபகாலமாக இதுகுறித்து அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது…. எனவும் கூறி உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுத் திரளும் பரந்த அரசியல் கூட்டணியே எல்லா விளிம்பு நிலை மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இயலும்’ என்ற கருத்தை தலித்தியத்தை போதிப்பவர்கள் (hவவி://றறற.ளயவலையமயனயவயளi.உழஅ/யசஉhiஎநள/118 ) எதிர்க்கின்றனர்.

அதாவது ஒன்று உழைப்பவர் பக்கம் கொண்ட சிந்தனை மற்றையது ஒப்பிட்ட ரீதியில் வளர்ந்த சமூகத்தட்டில் உள்ளவர்களின் நலன் பொருந்திய சிந்தனை இவற்றை இங்கு வித்தியாசம் காண்பது முக்கியமாகும்.

இவ்வாறே இடதுசாரிகளை அரசியல் அரங்கில் மலினப்படுத்தும் புத்திஜீவிகளின் போக்கு இருக்கின்றது. மேலும் ‘வர்க்கத்தை முன்னிலைப்படுத்திச் சாதிப் பிரச்சனையைப் பின்னுக்குத் தள்ளிய தவறை இடதுசாரிகள் கடந்த காலங்களில் செய்திருந்த போதிலும்… என எதனைக் கூறுகின்றார்??? hவவி://றறற.ளயவலையமயனயவயளi.உழஅ/யசஉhiஎநள/118 இங்குதான் புரிதல் பற்றி பார்வை மாறுபடுகின்றது. தேசிய,சாதியப் பிரச்சனையாகட்டும் அவர்களுக்கான முதலாளித்து ஜனநாயகத்தை வழங்குவதன் மூலமே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் மாத்திரம் அல்ல தேசிய முதலாளிகளும் உள்ளடங்கியே இருப்பர். இங்கு சாதியப் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளியதான குற்றச் சாட்டு என்பது நிரூபிக்க முடியாது. ஆனால் இனம், மொழி, சாதி, நிறம், பால் என்ற நிலையில் இருந்து தனியமைப்புக்களை உருவாக்கி ஐக்கியத்தை குலைத்தது இவர்கள் மாதிரியாக புத்தியீவிகள் என்பதை இவர்களின் கருத்தின் மூலமாகவே அறிக் கூடியதாக இருக்கின்றது.

சாதியக் கருத்தாக்கத்தை வெறும் பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. இது தொடர்ச்சியாக கலாச்சார போராட்டத்தின் மூலமே மக்களின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டுவர முடியும். இங்கு இவர்கள் பொருளாதார விடுதலை கிடைத்தவுடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எந்தக் காலத்திலும் இடதுசாரிகள் சொன்னது கிடையாது. அது சாத்தியமும் அல்ல. இவ்வாறே இனப்பிரச்சனைக்கான தீர்வுபற்றி ஒரே நாளில் தீர்த்துவிட முடியுமா என்ற கேள்வியை செழியனுக்கு எதிராக எழுதியவர்கள் கேட்டிருந்தார்கள்.

எந்த மாற்றமும் உடனடியாக ஏற்படப்போவதில்லை. இது இனங்களுக்கு இடையேயான கசப்புணர்வாக இருந்தால் என்ற மத, சாதி கருத்தமைப்புகள் மற்றும் பிற்போக்கு கருத்தமைப்புக்களை புதியகலாச்சாரப் புரட்சியின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை (பொருளாதார உரிமைகளை) பெற்ற பின்னரும் தொடரும் ஒரு போராட்டமாகும். பொருளாதார உரிமைகள் மற்றும் சிந்தனை மாற்றங்களை ஒன்றாக கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்ற பதட்ட மனவுணர்வு நிலையில் இருந்து எழுதும் போக்குத் தான் இடதுசாரிகள் மீது சேற்றைவாரி வீசுகின்றனர்.

விழிம்பு நிலை?????

இதில் குறிப்பாக விழிம்பு நிலை பற்றி பார்க்க வேண்டும். விளிம்பு நிலை என்கின்ற போது இவர்கள் மனிதர்களாக அல்ல மாறாக இவர்கள் ஒரு இடைநிலையில் இருக்கின்றார்கள் என்று தான் விழிம்புநிலை வரையறை விளக்கம் கொடுக்கின்றது. இவர்கள் மக்களாக இருக்கின்றார்கள். அது எவ்வாறு சாத்தியமாகும். இதுதான் இங்கு எழும் கேள்வி.

தலித்தென்று வரையறுக்க இவர்கள் யார் என்பது மாதிரியான இவ்வாறான கேள்வியை hவவி://வாநளயஅநெவ.உழ.ரம இணையத்தில் எழுதிய அன்பர் எழுப்பியிருந்தார்.

ஒரு மனித கூட்டம் பொருளாதாரத்தில் வலிமை இழந்தவர்களாக இருக்க முடியும். இதனால் படிப்புவாசனை,உங்களைப் போல் வாழாது ஒலைக் குடிசையில் தெருவோரத்தில் உரிமை பறிப்பட்டு வாழலாம். உங்களைப் போல உடுபுடவை உடுத்தாமல் இருக்கலாம், உழைப்பையே நம்பிய மனிதராக இருக்கலாம், தனிபாத்திரங்களில் உணவு கொடுக்கலாம். ஆனால் இவர்களை எந்த சடங்கு செய்து மனிதர்கள் என்ற நிலைக்கு கொண்டுவரப் போகின்றீர்கள். இவர்கள் என்ன தீட்டுப் பட்டா இருக்கின்றனர் அல்லது உடலை விட்டுப்பிரிந்த ஆவியாகவா உலாவுகின்றார்கள்,அல்லது பாவத்துடன் பிறந்து பின்னர் ஞானஸ்தானம் என்ற சடங்கின் மூலம் பாவத்தில் இருந்து மீள்வது போல இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

விளிம்பு நிலை (டiஅயைெட ளவயபந) என்று வரையறுத்துக் கொண்டால் அவர்களின் சமூகப்பாத்திரம் தான் என்ன? hவவி://எரனலழ.உழஅ/எநைற_எனைநழ.pரி?எநைறமநலஃ1உன7ந96172575க48னஉய3 (இந்தப் பாடலை கேளுங்கள் இந்தப் பாடலும் இவ்வாறு கீழாக வரையறுத்துக் கொள்பவர்களை கேள்வி கேட்கின்றது.

இன்று சாதிய எதிர்ப்புநிலை என்று கூறிக் கொண்டு தனியே வகுப்புவாத அரசியலை முன்வைப்பவர்கள் கடந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையில் நடைபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களே தமிழ் தேசியத்திற்கான ஒரு அடித்தளத்தை இட்டது என்பதை மறந்து விட்டனர்.

இவர்கள் இன்று முதலாளித்துவப் ஜனநாயகம் என்ற நிலைக்கு எதிராக சாதி என்ற குறுகிய வட்டத்தினுள் காரியமாற்ற முற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சாதியத்தை ஒழிப்பதில்லை. மாறாக சாதிரீதியாக செயற்படுவதன் மூலம் முதலாளித்துவ ஜனநாயத்தை அடைந்து விட முடியும் என நம்பிக் கொள்கின்றனர் போலும்.

சாதியக் கருத்தாக்கத்தை வெறும் பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. இது தொடர்ச்சியாக கலாச்சார போராட்டத்தின் மூலமே மக்களின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டுவர முடியும். இங்கு இவர்கள் பொருளாதார விடுதலை கிடைத்தவுடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எந்தக் காலத்திலும் இடதுசாரிகள் சொன்னது கிடையாது. அது சாத்தியமும் அல்ல. இவ்வாறே இனப்பிரச்சனைக்கான தீர்வுபற்றி ஒரே நாளில் தீர்த்துவிட முடியுமா என்ற கேள்வியை செழியனுக்கு எதிராக எழுதியவர்கள் கேட்டிருந்தார்கள்.

எந்த மாற்றமும் உடனடியாக ஏற்படப்போவதில்லை.

இது இனங்களுக்கு இடையேயான கசப்புணர்வாக இருந்தால் என்ற மத, சாதி கருத்தமைப்புகள் மற்றும் பிற்போக்கு கருத்தமைப்புக்களை புதியகலாச்சாரப் புரட்சியின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை (பொருளாதார உரிமைகளை) பெற்ற பின்னரும் தொடரும் ஒரு போராட்டமாகும். பொருளாதார உரிமைகள் மற்றும் சிந்தனை மாற்றங்களை ஒன்றாக கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்ற பதட்ட மனவுணர்வு நிலையில் இருந்து எழுதும் போக்கும் தான் இடதுசாரிகள் மீது சேற்றைவாரி வீசுகின்றனர்.

இதற்குத்தான் புதியஜனநாயகப் புரட்சியையும் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தின் ஊடாக புதிய கலாச்சாரப் புரட்சிக்கான வேலை திட்டத்தை புரட்சிகர சக்திகள் முன்வைக்கின்றனர். இதற்கு மாறாக எதிர் நிலைக்கான போக்கை சமூக மாற்றத்தை விரும்பாதவர்கள் முன்வைத்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

%d Bloggern gefällt das: