"கம்யூனிசப் பொறுக்கிகள்"

புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியினது அஜந்தாவை இனியொரு தளம் மீளப் பிரசுரித்தது.அதுள், எனது கருத்துக்களைக் கூறியதிலிருந்து பிடுங்கி எனும் வாசகரது கருத்துக்கள் மேலும் மனித சமூகத்தைக் குறித்த பால்யப் பாடத்தைப் புகட்டுவதான தோரணையில் எழும்போது,அதையிட்டுச் சிலவற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் கூறியாக வேண்டும்.நாம்,மனிதர்கள் கடந்த பாதைகளை நிலவுகின்ற வாழ் நிலைகளிலிருந்து புரியாது வேடிக்கைத் தனமாகப் புரிவது ஒருவகை அபத்தம்.

தமிழுக்கு மேலும் வலிமை சேர்க்கும் இராகுல சாங்கிருத்தியானின்“வால்காவிலிருந்து கங்கைவரை“கூட இன்றைய வாசகர்களுக்குத் துணையில்லாது போய்விட்டபோது,நமது வாசிப்பு-கற்கையின் நிலைமை புரிகிறது. இது குறித்துச் சில குறிப்புகளை எழுவதென்பது கருத்து முதல்வாத்தின்மீதான பொருள்முதல்வாதப் பாச்சிலென்பதில்லை! “ சமூக வாழ்வே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்ற உண்மையை“ உரைத்துப் பாருங்களேன் என்ற அறை கூவலாக…

„பிரச்சனையின் உண்மையான தீர்விலிருந்து தானும் விலகி,மற்றவர்களையும் வேறு திசையில் இட்டுச் செல்வதன் மூலமாகக் கருத்துமுதல்வாதம்,இச் சுரண்டல் அமைப்புத் தொடர்ந்து நிலைபெற உதவுகிறது“

பிடுங்கி,கருத்தாடவதுதெனும் தோரணையில் நீங்கள் கட்டும் அனைத்துக் கருத்தும் „விடுதலைபெற வேண்டிய வர்க்கத்துக்குத் தேவ தூதனை அழைக்கும் மதத் தூய்மை வாதிகளைத் தேடுவது “ போலத்தாம் இதுவும்.

ஏதோ கம்யூனிஸ்டென்பவர்கள் வானத்திலிருந்து பிறந்தவர்கள் போலவும்,அவர்கள் இந்த முதலாளிச் சமூகத்தின் கெடுதியான பகுதிகளை உள்வாங்காதவர்களெனும் போக்கில் உரையாட முடியாது.

நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.

சூதும் வாதும்,தவறும்-தப்பும்,எமக்குள்ளே முகிழ்த்திருப்பினும் அவையே இந்தச் சமூகத்தின் வாழ்நிலையாக இருக்கும்போது இதற்கு வெளியில் எந்த உணர்வும் நிலைக்க-முகிழ்க்க முடியாது.சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றுவதென்பது 5000 ஆண்டுகால இதுவரையான சமூகத்தைப் புரட்டிப் போடுவதென்ற முறையில் அதுள் பலவிதப் போக்குகள் நிலவும்.எதிரி வர்க்கமானது சும்மா கையைக் கட்டி வேடிக்கை பார்க்கும் வர்க்கமெனக் கருதிக்கொண்டும்,அதுள் இடதுசாரிகள் தமது சூதுவாதுகளால் சமூகத்துக்கு நன்மை செய்வதென்ற தோரணையில் தமது நலன்களைப் பார்ப்பதாகவும் அழுவதில் வரலாற்றுப் பொருள்முதல்வாத அறிவைக் காணவில்லை!

தினமும் பொழுதும் எதிரி வர்க்கமானது உழைக்கும் மனிதர்களைப் பல கோணத்தில் வேட்டையாடும்போது,இதுள் எத்தனையோ இடதுசாரிக் கொம்பர்கள் காணாமற்போயுள்ளனர்.எனினும் ஒடுக்கு முறைக்குள்ளாகும் வர்கத்தின் விடுதலையை அந்த வர்க்கஞ் சாதிப்பதற்கான அனைத்து முகிழ்ப்பையும் ஆளும் வர்க்கஞ் சிதைத்தே வருகிறது.

இராகுல சாங்கிருத்தியாயனின் „வால்காவிலிருந்து கங்கை வரை“படித்துப் புரிந்துகொண்ட நீங்கள் இப்படி உரையாடுவது வியப்பாக இருக்கிறது.

ஆரம்பக் கதையான நிஷாவிலிருந்து திவாச் சமூகம் உருவாகுவதற்குள்ளேயே தாய் நிஷா தனது மகள் லேக்காவை வால்க்கா நதியில் கொல்லும் வரலாற்றைப் புரியாதுபோனதாற்றாம் நீங்கள் எல்லோரும் பெரிய“தூய்மை“வாதிகளாக்கப் புரட்டு விடுகிறீர்கள்.முதலாவதாக மனித சமூகத்தை அதன் வில்லங்கமான அனைத்துப் பக்கங்களுடனும் கற்றுவிட்டுக் கருத்தாடலாம். இதைவிட்டு முட்டுச் சந்தி விமர்சனத்தைக் குறித்து அதற்குப் பதிலெழுதுவதை நான் விரும்பவே இல்லை.

இந்த அறிக்கைமீது சரியான விவாதங்களை வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிவுடன் வைக்க முடியாத வாசகர்களையிட்டு நான் மனம் வருந்தவே இல்லை.

இவர்களிடமிருந்து கற்பதும்,கற்றதை மீள மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதெனும் சிறிய புரிதலுடன்தாம் இங்கே எழுதுகிறோம்.

இன்றைய சமூதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தின் மேற் கட்டுமானுத்துக்கு அன்றைய பிரவாஹானின் பிர்மவாதம்(இன்றைய மரூவு: பிரமம்-உபநிஷதத்தின் மூலம்) அதிக மாகக் கேள்வி கேட்டால் தலை வெடிக்குமென கார்க்கிப் பெண்ணுக்கு மட்டும் சொல்லவில்லை.அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலப் புலிகள்வரை(நம்ம புலியைக் கருது வேண்டாம்) இதே கதைத்தாம்.

இங்கே,போகத்துக்கும்-சூதுக்கும்,சதிக்கும் அனைத்துமே உட்பட்டுக் கிடக்கிறது.இதைவிட்டு-அகற்றிப் புரட்சிகரமாக அணி திரள்வதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

என்றபோதும், சரியானதைத் தேடவும்-கதைக்கவும்,அதன்வழியில் தொழிலாள வர்க்கம் தன்னைப் புனரமைக்கவும் காலம்தாம் தீர்மானிக்கும்.அதுவரையும் புரட்சிகரக் கட்சியை நோக்கி முகிழ்ப்புகள் எல்லோர் வடிவிலும் எழும்.அதைச் சேறடிப்பதில் பிடுங்கி,இடுக்கி-மடக்கி வடிவிலும் உருவாகும்.இதையெல்லாம் சொல்வதென்பது கம்யூனிஸ்டுக்கள் „புனையப்பட்ட பூடகம்“இல்லை என்பதற்கே!

மீளவும் ஒருக்கால்,“வால்க்காவிலிருந்து கங்கைவரை“யையும் படியுங்கோ.இதைவிட வேறு மருந்து உங்கட்குத் தேவையில்லை.

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி.

16.08.2011

Werbeanzeigen

இனியொருவில், புலம்பெயர் நிலைவரம்

எம்மை, அகதி என்றே பிரகடனப்படுத்துவது
மானுட விடுதலைக்கு ஆனது!


னியொருவில், புலம்பெயர் நிலைவரம் குறித்த உரையாடலது பகுதி உரை.தொடராக, இது குறித்த கருத்தாடலும்-ஆய்வுகளும் அவசியமிருக்கு.அதைச் சாத்தியப்படுத்தும் புரிதல், அவசியமானதும் அடுத்த கட்டத் தேவையுமென்பது எனது எண்ணம்.அதன்வழி உரையாடலை இங்கு பகிர்கிறேன்.

புலம் பெயரும் மக்கள் கூட்டம்: துண்டிக்கப்பட்ட மக்கள் குழாமே-அவர்களுக்கு நிறம்,மொழி,இனம் இல்லை-அவர்கள் தம்மை அகதி என்றே பிரகடனப்படுத்துவது மானுட விடுதலைக்கு ஆனது!

சரி,விரிவாக விவாதிக்க வேண்டியவொரு தேவைக்கு சிரஞ்சீவி உந்தித் தள்ளுகிறார்.இந்தக் கட்டுரையின்வழி நாவலன் பேச முற்பட்டதை அவர் (நாவலன்)பின்னூட்டில் விளக்கியுள்ளார்(.) .

சரிஞ்சீவி,தமிழ்“சிவப்பு“ பெண்கள்-ஆண்கள்,“கருப்பு“ஆண்-பெண்களை கேலி பேசுவதை என் விமர்சனம் எப்படிப் பேசியுள்ளதென்பதை இன்னொரு முறை வாசித்துப் புரியவும்.அடுத்து,தமிழ்பேசும் புலம் பெயர் மக்களை மட்டுமான வட்டத்துள் பேசப்படாததும்-பேசப்பட்டதுமான எனது உரையாடாலானது ஒரு சமூகத்தின் இருப்பை நோக்கி-உருவாக்கத்தின் ஆரம்ப நிலைமைகளைப் பேசுவது.அதுள் ,புலம்பெயர் மக்களுக்கு எங்கிருந்து-எப்படி ஒடுக்குமுறைகள் வருகின்றனவென்பது அவசியமான தேடுதலாக எனக்குப்படுகிறது.அதன்வழி ,மேலோட்டமாக எவர் எழுதும்போதும் அதைக் குறித்து எதிர்வினையாற்றுவதென்பது பதினெட்டாம் நேற்றாண்டினது மொழியாகவிருந்தாலென்ன, 21 ஆம் நூற்றாண்டினதாகவிருந்தாலென்ன?

இமானுவல் காண்டையும்,மார்க்சையும் எத்தனையாம் நூற்றாண்டு மொழிகொண்டு வாசிக்கிறோம் ?

பெரிய விடுகதையெல்லாம்“பின்நவீனத்துவம்“என்ற வார்த்தையை வைத்து விளையாடாதீர்கள்!

இது குறித்து வாங்கோ விரிவாக விவாதிப்போம்.நான் இத்தகையவுரையாடல்களை மிகவும் மனத்தோடு பேச முற்படுபவன்.இந்தவுரையாடலையே பேஷ் புக்கில் அதிகம் இணைக்கிறேன்.இப்போதைக்கு மிக்கேல் பூப்காவின் ஒரு பதிலை உங்களுக்குச் சுட்டுவேன்.

„Ich bin kein theoretiker.Als Throretiker bezeichne ich Jemanden,der ein allgemeines System errichtet,sei es ein deduktives oder ein analytisches,und es immer in der gleichen Weise auf unterschiedliche Bereiche anwendet.Das ist nicht mein Fall.Ich bin ein Experimentator in dem sinne,daß ich schreibe,um mich selbst zu verändern und nicht mehr dasselbe zu denken wie zuvor.-Gespräche mit Ducio Trombadori-Die Hauptwerke von Michel Foucault,Seite:1585-86.

„நான் ஒரு சிந்தாந்தவாதி அல்ல.சிந்தாந்தவாதியாக என்னை நான் காட்டிக்கொள்வேனானால் எங்கேயாவது,அது வித்தியாசமான நிலைகளுக்குள்-பகுதிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒருமாதிரியான விளக்கங்களும்-கழித்தல்களையுமே பயன்படுத்திக்கொள்வதில் முடியும்.அது எனக்குரிய செயலல்ல! உங்களுக்கு என்னைக் குறித்துச் சொன்னால்,நான் ஒரு பரிசோதகன்.நான் சித்தாந்தவாதியல்ல.எனது நோக்கத்துள் நான் எழுதுவது என்னைத் தொடர்ந்து மாற்றுவதற்கும்,மற்றும் முன்னையே சிந்தித்ததை நெடுகவும்,மீளவுஞ் சிந்திதித்து வருவதை மறுப்பதே.“

இப்படிச் சொல்லும் பூப்காக மனிதன் ஒரு அநுபவ மிருகமென(Der Mensch ist ein Erfahrungstier) இடூசியோ டொறோம்பாடோறியோடு(Ducio Trombadori) நீண்ட உரையாடலையும் செய்திருக்கிறார்.இப்படிப் பின் நவீனத்துவம் பரிசோதித்து வரும் பகுதிகளை மனித அநுபவத்தை-நடாத்தையை,அதன் அடையாள நெருக்கடியைத் தட்டிக்கழிக்க நாம் பயன்படுத்தும் தற்குறித்தனத்துக்குத் தெரிந்த வார்த்தை ஒன்று மட்டுமே.அது,“பின் நவீனத்துவம்“இந்த வார்த்தைக்கு வெளியில் விரிவாக உரைக்க முடியாத „புத்திசாலிகள் „நம்மில் பலர் இருக்கிறார்கள்.அதுள் நீங்களும் ஒன்றா சிரஞ்சீவீ?

அப்படியில்லையென்றால் வாருங்கள் பூப்கா,தெரிதா,லெக்கான்,சசூர்,ரொலாந் பார்த்,சார்த்தார்,அந்திரே ஜீத் குறித்தும் காம்யுவின் கொள்ளை நோய் (Die Pest)குறித்த அல்ஜீரிய மானுடரது முகமிழந்த வாழ்நிலை பற்றி, சமூக அசைவாக்கவும் குறித்துப் பகிர்வோம்.அதுள் நமது மக்களது புலம் பெயர் வாழ்வது வலி என்னவெனப் புரிந்தும் போகும்!

பின் நவீனத்துவம் ஏதோவொரு பெரிய தத்துவமெனப் பீலாக்காட்டும் கயமைக்கு முன் அவரது[Michel Foucault ] கூற்றுப் புட்டுவைப்பதும்-எனது புரிதல் இந்தத் தமிழ் பின்நவீனத்துவப் பீலாவைக் கண்டு புன்னகைத்தலும் சதா நிகழ்வது சிரஞ்சீவீ!

உங்களுக்கு மனிதசமூகத்தின் இடப்பெயர்வு அவ்வளவு கேலித்தனமாக இருக்கு?புலம் பெயர்ந்து உலகம் பூராகவும் வாழ்பவர்கள் எத்தகைய ஒடுக்கு முறைகளை நேர்முகமாகவும்-மறைமுகமாகவுஞ் சந்திக்கின்றார்கள் என்பதைக் குறித்து மேட்டுக் குடித் தனமாக எள்ளி நகையாடுவதாகவிருக்கிறது?

புலம் பெயர்ந்து“அகதி“யாக வாழ்ந்து மடிவதன்வலி உங்களுக்குப் புரியமுடியாதபோது எனது எழுத்தின்மீதான கேலியாக வாக்கியங்கள் வருகிறது.அதைவிட மோசமான கேள்வி“யாரர் ஐயா உங்களை இங்கு வரச் சொன்னது-தமிழ்நாட்டுக்குப் போயிருக்கலாமே?“ சிரஞ்சீவி இந்தக் கேள்வி எமக்குப் புதிதில்லை.

இக் கேள்வியை 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணி மேயர் கைம் [Mayer Heim_Nürnberg]எனது அகதி விண்ணப்பக் [ Asylverfahren]கோட்டு விசாரணையின் முடிவில் ,மொழிப் பெயர்ப்பாளரான வேந்தனார் இளங்கோவைப் பார்த்துக் கேட்டார்.அதற்கு அந்தப் பொறியிலாள மேதை அளித்த பதில் சிரிஞ்சீவீயிகளது அதே „மோட்டு“தனமானது.

„ஒரு நாயின் முன் சோற்றையும்,இறைச்சியையும் வையுங்கள் அவற்றில் எதை நாய் நாடும்-இறைச்சியைத்தானே?“என்றான் அந்த இளங்கோ.பின்பு அவருக்கு அவுஸ்ரேலியா இறைச்சியாகத் தெரிய அங்குபோய் „டாக்டர்“பட்டம் பெற்றுத் தமிழ்ச் சங்கம் அமைத்து அரை வயதில் இறந்தே போனார்.இது,ஒரு எடுத்துக்காட்டு.

புலம் பெயர் மனிதர்களை நாயின் முன் ஒப்பிட்டு. ஐரோப்போ இறைச்சி,தமிழ்நாடு சோறு.

தமிழ் மக்கள் ஐரோப்பா வரக் கூடாதென்பதற்கு நீங்கள் கூறும் காரணமென்ன?தமிழ்மக்கள் யுத்தாத்தால் பாதிப்படையாத பொருளாதார அகதிகள் என்பதா?இதன்வழி அவர்களுக்கு-தமிழ்பேசும் மக்களுக்கு பிரச்சனையே இலங்கையில் இல்லையென்பதா?

ஐரோப்பியனும்-அமெரிக்கனும் எங்களது மண்ணில் நேரடியாகவும்-மறைமுகமாகவும் வந்து யுத்தப் பிரபுகளை ஊக்குவித்து யுத்தஞ் செய்வான்,ஆனால் ,நாம் அவர்களது மண்ணுக்கு இடம் பெயரக்கூடாது.அவ்வகான் அகதி பாகிஸ்த்தானுக்குள்தாம் நுழையவேண்டும் மேற்கு ஐரோப்பாவுக்குள் இல்லை-,ஈராக்கியர்கள் சிரியாவுக்குள் அல்லது ஈரானுக்குள் நுழையவேண்டும்.அப்படியா சிரஞ்சீவி?

நாயோடு நம்மை ஒப்பிட்ட இளங்கோ,உங்களது திமிருக்கு நிகரானவர்தாம்.தமிழ்நாட்டில் எத்தனை இயக்கம்,எத்தனை அட்டகாசம் செய்ததென்பதும்,ஈழ அகதிகளை ரோவினது குரங்குகள் எப்படிக் கண்காணித்துத் திறந்தவெளிச் சிறையில் அடைத்தார்கள் என்பதும் எவருக்கும் புரியாததல்ல.மாற்று இயக்கத்தவன்,அவனது-அவளது குடும்பத்தவர்கள் கணிசமாகத் தமிழ்நாடு செல்ல முடியாது.அங்கே, இருமுனைத் தாக்குதல் தயாராகவிருந்தது.அடுத்துத் தனது சொந்த மக்களையே அகதியாக வைத்திருக்கும் தமிழகத்துக்குப் புதிதாக இன்னொரு அகதி குழுமம் செல்லுமென எதிர்பார்ப்பது அகங்காரம்.

மக்கள் சமூகத்தில் யுத்தம் என்பதைவிடக் கொடிய யுத்தமானது திட்டமிட்டு ஒரு இனத்தின்மீது வறுமையை ஏவிவிடுவது.இதை எவர்கள் செய்கின்றார்களோ ‚அங்கே, சென்று அவர்களது முற்றத்தில் பறிக்கப்பட்ட எமது வாழ்வைக் கேட்பதே நியாயமானது.அந்த வகையிற்றாம் இன்றைக்கு ஆபிரிக்காவிலிருந்து கடல்வழிப் பாதைமூலம் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க மக்கள் ஐரோப்பாவுக்கு வரும் வழியில் கடலில் மூழ்கிச் சாகிறார்கள்.

ஆபிரிக்க மக்களிடம் என்ன இல்லை?அவர்களை ஒட்டச் சுரண்டுபவன் எவன்?

ஏன் நாமெல்லாம் பட்டுணி கிடந்தா காலந் தள்ளினோம்.நமது மக்களிடம் என்ன இல்லாமல் இருந்தது.எம்மை மொட்டையடித்தவனுக்கு வக்கலாத்து வாங்கும் கேள்விகளை இலண்டனிலிருந்து கொடிபிடிப்பவன்கூடக் கேட்பான்.அவனுக்கு ஐரோப்பியக் கொலனித்துவத்தின் கொடுமை இன்றுவரை நம்மைச் சிதைப்பது புரியாது!அதிலொரு மேதைதாம் இந்தச் சிரஞ்சீவியெனச் சொல்லேன்.ஏனெனில் ,நாம் எல்லோருமே வீணர்கள்-வினைமறுப்பாளர்கள்!எமக்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் அறவே கிடையாது.

ஐரோப்பாவில் அகதியாக வாழ்பவன் தன்மீது நடாத்தப்படும்,உயிரியில்ரீதியான ஒடுக்குமுறையையும், சட்டரீதியான ஒடுக்குமுறையையும் சேர்த்து தனது அடையாளத்தின்மீதான ஒடுக்குமுறையைப் பரம்பரைவரை சந்திக்கிறது சிலருக்குப் புரிவதே இல்லை. அகவொடுக்குமுறையானது அள்ளிப்போடும் சில்லறைகளால் மறைக்க முடியாது. அதுவரையும் ,இந்த ஏகாதிபத்தியப் பேய்களால் பாதிப்படைய உலகக் குடிமக்கள் எங்கும் இடம் பெயர்வார்கள்-எப்படியும் வாழ்வார்கள்!அதை தட்டிக் கேட்கும் உரிமை எந்தப் பேய்க்கும் கிடையாது!கொங்கோவைப் பிளந்து பத்தாண்டுக்குள் கோடி மக்களை இரகசியமாய்க் கொல்பவனுக்குச் சொல்-அவ்வகானை வேட்டையாடும் அமெரிக்கனுக்குச் சொல்-அல்லது ஆசியாவை வேட்டையாடும் இந்தியனுக்கும்-சீனனுக்கும்போய் வகுப்பெடு உனது பித்தலாட்டத்தை!

அன்பு நாவலன்,தூர தேசிய உரையாடலானது மிக மோசமான இனவாதம் நிறைந்த அல்லது,அதை மறைக்க முனைந்த உரையாடலாகும்.அதை நினா(நைனா ஆங்கில உச்சரிப்பு) கிலிக் சில்லர் [ Nina Glick Schiller ]மூலம் தத்துவ நிலைக்குட்படுத்தியவர்களில் ஜேர்மனிய அரசுக்குப்(Visiting Research Associate, Max Planck Institute, Social Anthropology, Germany ) பெரிய இடமுண்டு.மக்ஸ் பிலாங் பல்கலைக் கழகமானது[ Max Planck Institute ]பேர்ளினில் அவருக்கு ,மானுடவியற்றுறையை வழங்கியது அவரது புலமைசார் புரிதலில் இல்லை.அவர் மேற்கொண்ட குடியேற்ற வாசிகளது வாழ்வு-சாவு,விருப்புகள் குறித்து(Global Migration Project, Center for International and Area Studies, ) அச்சொட்டான இரகசியங்கள் பற்றியது.ஆபிரிக்காவில் அவர் செய்த ஆய்வுகள் ஆபிரிக்க மக்களைத் துரத்தி அவர்களது கனிவளங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தும் வியூகத்தோடு சம்பந்தப்பட்டது.

அதற்காகவே 21 நூற்றாண்டின் காட்சிச்சலையென(African Culture and the Zoo in the 21st Century ) அவுஸ்பேர்க்கில் [ Augsburg ]நிறுவி ஆபிரிக்கர்களை ஒட்ட மொட்டையடிக்கும் செயல்களில் (The “African Village” in the Augsburg Zoo and Its Wider Implications )அவர் மும்மரமாக இருக்கிறார்.அவ்கானில் அமெரிக்கா படையெடுப்பதற்கு முன் அமெரிக்க மானுடவியலாளர்கள் மூலம் அவ்கான் மக்களது வாழ்வையும்-சாவையும் ஆய்ந்து (http://www.linksnet.de/de/artikel/25589 )பார்த்தது.

எனவே,நினா சொல்வதும்-நிறுவுவதும் அடிப்படையில் கயமைத்தனமானதும்,ஐரோப்பிய இனவாதத்தை குடியேற்ற வாதிகளது வாழ்வுப்போராட்டத்தில் ,மேலெழும் அடையாள அலகுகளை முன் நிறுத்தித் தமது சுரண்டலை-கொள்ளையை-இனவாத அரசியல் நகர்வை மறைத்தல்-நியாயப்படுத்தலாகும்.

இப்போதைக்கு இவ்வளவுந்தாம் நான் சொல்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.01.2011

நாவலன்: சொந்த முகங்களை இழந்து…

„சொந்த முகங்களை இழந்து… – புலம் பெயர் அரசியல்“ சொல்ல அவசரப்படாதீர்கள்!

சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் „நாவலன் கட்டுரை தொடர்பாக எனது புரிதல்.இது குறித்து மிக விரிவாக எழுதியாகவேண்டும்.எனினும்,இப்போதைக்கு கொஞ்சம் பேசலாம்.“புலம் பெயர் மக்கள்“இந்த வார்த்தையே மிக விரிவாகப் பகுத்தாய்ந்து முடியவில்லை.உலகம் பெரு வெளியில் மனிதத்தைத் தொலைத்த கதை இதற்குள்…நாம்,மேலே போவோம்.

நாவலன்,“சொந்த முகங்களை இழந்து… – புலம் பெயர் அரசியல்“ சொல்ல அவசரப்படாதீர்கள்! இப்படிச் சொல்வதற்கு எனக்கு நிறையக் காரணங்கள் உண்டு!

நான்,உங்களது இக்கட்டுரைக்கு ஓடிவந்து நறுக்குப் பதிலுரைக்கும்வாசகர்கள் போன்று கருத்துச் சொல்லமாட்டேன்.

இதற்கான காரணங்களை நமது மக்களதும்-புலம் பெயர் மானுடர்தம் சமூக உளவியல்சார் தொடர்பாடலோடும், அதன் தளத்தில் அவர்களது சமூக அசைவியக்கத்தோடும் பொருத்தியே நான் எழுத முற்பட்டிருப்பேன். உங்களது கட்டுரை இவற்றையெல்லாம் பார்க்கமால் வெறும் முன்தீர்ப்பு மொழிவுகளோடு அவசரக் குடுக்கைத் தனமாக எழுதப்பட்ட அறிதலை எமக்கு வழங்குகிறது.

அவசரப்படாதீர்கள்-ஆத்திரப்படாதீர்கள்!

நான்,நேரடியாக விஷயத்துக்கு வருவேன் :

[ //இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.//

//30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.//

//ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகளுக்குக் கிடைத்த உணர்வு பூர்வமான ஆதரவு என்பது 90 களின் பின்னர் இலங்கையின் வட கிழக்கில் அவர்களுக்குக் கிடைத்ததில்லை. மேற்கின் சீரழிந்த கலாச்சாரத்திலிருந்து தமது சந்ததியைப் பாதுகாக்கின்ற குறியீடாக விடுதலைப் புலிகள் அமைப்பை “மேற்குத் தமிழர்கள்” நோக்கினார்கள் என்பதே இதன் அடிப்படையாகும்.// ]

இப்படியுரைக்கிறீர்கள்.ஒரு மார்க்சிஸ்ட்டு இத்தகைய முடிவுக்கு வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது-உங்களுக்கு இந்தச் சிக்கல் முன் தோன்றவில்லையா?

சரி,நான் சொல்கிறேன்!மனிதர்கள் கூட்டாகவும்,தாம்சார்ந்த மொழி நிலைப்பட்ட குழுவாழ்வுக்குள் தம்மை இணைத்து உறவாடியபோது,அவர்கள் ஒரு பொது மொழிக்கு இணைவாகவும்-சிந்தனை பூர்வமாகவும் ஆத்மீகரீதியான ஆற்றலோடு இசைந்து உயிர்த்திருக்க முனைந்தனர்.இலங்கை அரசு,இந்த வாழ் சூழலை இல்லாதாக்கிச் சமூக நிலையைச் சிதைத்தபோது, புலப்பெயர்வு-இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.இங்கு,ஒரு „ஒழுங்குக்கு“ உட்பட்ட உறவு-வாழ்நிலை உடைவுறுகிறது.புலம்பெயர்ந்த தேசம் புதிய சூழலோடு-புதியபாணி ஒடுக்குமுறையோடு புலம்பெயர் தமிழர்களை-மனிதர்களை வரவேற்கிறது.புலம் பெயர்ந்தவர்கள் முன் எல்லாம் வெறுமை!அம் மனிதர்கள் அனைத்திலும் வறுமையோடு இப் புலப் பெயர்வை எதிர்கொள்கின்றனர். வரலாற்றில் கட்டியமைக்கப்பட்ட“ஈஸ்ற்-வெஸ்ற்“[East-West]கருதுகோள் மேற்கு மனிதர்கள் மூலம் அறிமுகமாகிறது.

அந்தோ பரிதாபம்!ஆச்சி காலமுக்க-அப்பு,கைப்பிடித்து குரும்பட்டி பொறுக்கி விளையாட்டுக்காட்ட வளர்ந்த நாம்,அனைத்தையும் இழந்து, பெட்டி வீட்டுக்குள் புறாக்கூடு கட்டிவைத்து எமது குழந்தைகளை வளர்க்கும் போது, இந்த நெருக்கடியைத் தவிர்த்து சமூக இசைவாக்காத்தோடு மேற்குடன் கலக்கப் போராடித் தோற்போம்!அங்கே,அனைத்தையும் சொல்லும் தடையாக,நாசமாப்போன வாழ்நிலை சிதறி மனிதர்களைத் துவசம் செய்கிறது.

„குங்குமம்“ஐரோப்பியர்களுக்கு ஒரு நிறம் மட்டுமே.தமிழ்மொழிக் காரருக்கு ஒரு வாழ்வு அநுபவம்!“ஆர்பைட் மார்க் பிறாய்“[Arbeit macht Frei] தமிழர்களுக்கு ஒரு சுதந்திரம் குறித்த வார்த்தை.ஆனால் ஜேர்மனியனுக்கு ஒரு ஒடுக்குமுறையின் திசைவழி சொல்வது.இதைத் தாண்டுவோமா?

தான்சார்ந்து,தன் சுற்றங்கொண்ட சிலாகித்த வாழ்வு தொலையும்போது, வந்த தேசத்தில் குழுமமாக வாழ மொழி தடையாகிறது-நிறம் தடையாகிறது-கல்வி தடையாகிறது-செயற்றிறன் தடையாகிறது.என்ன செய்வார்கள்?

புலம்பெயர்ந்தோரை,அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழப் பணித்த ஐரோப்பிய நிர்வாகம்,அவர்களது இணைவைத் திட்டமிட்டுப் பறித்தெடுத்தது.இதன் புரிதலில்,தான்சார்ந்த சமூகத்தோடு அசைவுறும் வழியென்னவெனப் பாமர மனிதன் சிந்திக்க முனைதல் சாத்தியமில்லையா?; தான் வாழ்ந்து மடிந்த ஏதோவொரு கனவில் தன்னிருப்புக்கு நெருக்கடியேற்படுவதில் அதைக் காக்கவும்-கண்டடையவும் தன் வேர்களைக் காணமுனைவது சாத்தியமாகிறது.

எனக்குப் பண்பாடுண்டா,எனக்கு உணவுக் கலாச்சாரம் உண்டா,எனக்கெனவொரு மொழி-தேசம் உண்டா?இது கேள்வியாகவும்,உள நெருக்கடியாகவும் புலம்பெயர்ந்த எம்மைத் தக்குகிறது!

எமக்கு முன் துருக்கியர்கள் கூட்டாகவும்,கொடிபித்தும் வாழ்ந்து பார்க்கின்றனர்.இத்தாலியர்கள் தமது தேசக்கொடியை முத்தமிட்டு மிடுக்குக்காட்டும்போது,புலம்பெயர் தேசத்துக் குடிமகனோ தனது தாய்ப் பூமியை தரிசித்து எம்மை ஏசுகிறார்கள்.நாம்,மீளவுஞ் சிதைகிறோம்.எமக்கானவொரு „கொடி-தேசம்,மொழி-பண்பாடு“ நம்மைத் தவிக்க வைக்கிறது.இலங்கையிலிருந்தபோது இந்தப் பஞ்சம் ஏற்பட்டதில்லை.அங்கு தேசமாகவும்-நகரமாகவும்,கிராமமாகவும் வாழ்ந்ததைவிட ஒரு சுற்றமாக வாழ்ந்தோம்.எமக்கு அந்நிய நெருக்கடி தெரியவில்லை.பெரிதாகத் தெரிந்தது மாமி வீடும்-சித்தியின் வீடும்.மிச்சம் சந்தித் தெருவில் உலகம் விரிவதாகவிருந்து, நாகமணியின் தேனீர்க்கடையில்பருப்பு வடையும்-பிளேன் ரீயும் குடித்துக் „கமல்-ரஜனி வாழ்வு“ பேசியது.இது,ஒரு சமூக வாழ்நிலையில் உறுதியான சமூக அசைவாக்கம் விரித்துப் பார்த்திருக்கிறது.

இவை இழந்தபோது,எனது உறவுகள்,புலம் பெயர் தேசத்தில் பொய்யுரைத்த புலிக்கொடிக்கு அர்த்தங்கண்டது-தமிழீழத்தைத் தனது தேசமாகக் கண்டடையக் புறக் காரணிகள்வழி வகுத்தன.பண்பாட்டுத் தாகமாகவும்,வாழ்ந்தனுபத்தின் முன்னைய கருத்தியலைத் தகவமைக்க விரும்பியது.அங்கே,“சாமத்திய-கல்யாண-பிறந்ததின“க் கொண்டாட்டங்கள் தனது சுற்றத்தோடு தன்னை இணைத்துக் கோலம் போட விரும்பிய அக விருப்புக்கு வடி காலாகிறது.

புலிக்கொடிக்கு எந்தவுந்துதல் காரணமோ அதே காரணம் அனைத்துக்குமான காரணத்தின் திறவுகோலை எமக்கு வழக்குகிறது.இது,சமூக நெருக்கடியின் தற்காலிகத் தேவையாக புலம் பெயர் மக்கள் ஒவ்வொருவரையும் அண்மிக்கிறது.இது,தமிழர்களுக்குமட்டுமல்ல அனைத்து இனப் புலப்பெயர்வுக்கும் பொருந்துகிறது.இதை வெறுமனமே சப்ப முடியாது!
சமூக-மானுடவியற் புரிதலின்வழி சிந்திக்க வேண்டும்.

முப்பது வருடத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணத்தை இன்றைய யாழ்ப்பாணத்தில் காணமுடியாதுதாம்.அதுதூம்சமூக வளர்ச்சியின் பரிணாமம்.அவர்களும்,அவர்தம் இன்றைய சுற்றஞ் சூழப் „பில்லி-சூனியமெல்லாஞ் “ செய்து சுகமாய் வாழ்வதாகக் கனவுகொள் மனமும்,யுத்தத்தில் மையங்கொண்ட மனிதத்தைக் குழிதோண்டிப் புதைத்து நல்லூர்த் திருவிழாச் செய்து, தம்மை நிரூபித்தார்கள்! இது,ஒரு குழுமம வாழ்வுக்குச் சாத்தியம்.புலம் பெயர் மண்ணில் நாம் சமூகவாழ்வோடு இசைந்து ஒரு மொழிக் குட்பட்ட „ஒழுங்குக்குள்“ வாழ முடியுமா? இது இல்லாதவரை,இருந்த அன்றைய சூழலை மையப்படுத்தி அடையாளமாக வாழ்ந்து காட்டுவது மனித நடத்தைக்குப் புதிதாகுமா?

[ //ஆக, மூன்றாம் உலக நாடுகளின் குடியேற்ர வாசிகள் தமது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மிகவும் “விசித்திரமான” சிந்தனைத் தளத்தில் போராடுகின்றார்கள். இந்தச் சிந்தனை அவர்களிடையே ஒரு வகையான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.// ]

நாவலன்,இது அபத்தமாகத் தெரியவில்லையா?விசித்திரமோ-சாத்திரமோ இங்கு கிடையாது.மனிதர்கள் எப்போது சமூகவுணர்வோடு“ஒரு ஒழுங்குக்குள்“வாழ நேர்ந்தார்களோ,அந்த ஒழுங்கினது வாழ்நிலைக்கிசைவான“அடையாள“நெருக்கடி உருவாவதை எவரும் விரும்புவதில்லை!வாழ் சூழல் பாதிப்படைந்து தன் சூழலைவிட்டு அந்நியமானவொரு சூழலை எதிர்கொண்டபோது,அதைத் தமதாக்க முடியாத மனிதர்கள் அதற்குப் பிரதியீடாக இன்னொரு முறைமையைத் தமக்கேற்ற புரிதலோடு இணைத்து வாழ முற்படுதல்தாம் அவர்களை உயிர்த்திருக்க வைப்பது.இதை மறுத்து வாழ முற்படுதலென்பது எப்போதும் சாத்தியமாக முடியாது.விசித்திரம் என்பது எதைவைத்து-எதர்க்கு நிகராக அணுகிச் சொல்ல முடிகிறது.

தனக்குள் பொருத்தப்பாடும்-பொருந்தாதத் தன்மைகளுடனும் புலம்பெயர் இளைய தலைமுறை வாழும் இந்தப் புலம் பெயர் வாழ்வில் சமூகவாண்மை என்பது தனக்குட்பட்ட அரசியல் வாழ்வைத் தகவமைக்கும் போராட்டமாக இருக்கும்போது,ஒரு பொருளாதார வாழ்வுக்குட்டபட்ட“வாழ்நிலை“இவர்களுக்குக் கைகூடிவிட்டதா?ஏதோ,சொல்வதால்-சொல்லிச் செல்லும் கட்டுரை மொழி வேண்டாம்!

[ //உதாரணமாக இ தனது பெண்பிள்ளை ஒரு கறுப்பினத்தவரைத் திருமணம் செய்துகொண்டிவிடக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படுகின்ற ஒருங்கிணைவுஇ திருமணத்திற்கு முன்னர் பெண்பிள்ளை உடலுறவு வைத்துதுக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்களிடையே ஏற்படும் ஒருங்கிணைவு என்பனவெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைகின்றன. அவை பண்பாட்டு நிகழ்வுகளாகவும்,கலாச்சார வைபவங்களாகவும், மத வழிபாடுகளாகவும் வெளிப்படுகின்றன.// ]

„கருப்பு-வெள்ளை“-திருமணப் பந்தம்-எதிர்காலம்.“கற்பு“-பதிவுத்திருமணத்துக்கு முன் „உடலறுவு“ஒரு வாசிப்புக்காகச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது.எமது நினைவிலி மனதில் தமிழ்மொழிவழி சிந்தனைத் தேட்டம் அழியாதவரம் பெற்றிருக்கிறது.இளமையிற் கற்றல்(வாழ்நிலை)சிலையில் எழுத்து“சரி.இன்று,தமிழ் வானொலிகளில் தமக்கு அந்நியப்பட்ட,தமது நிறத்தைக் கேலி பேசும் தமது சமூகத்துக்கு உட்பட்ட உணர்வானது தமது பண்டத்தை விற்கவே வெள்ளைமேனிப் பெண்ணை முன்னிறுத்தி விளம்பரஞ் செய்கிறதா?எது,அரிய பொருளாக இருக்கோ-அதற்கு மவுசுதாம்!நாம் இயல்பாகக் கருப்பர்களா?நமது சமூகத்தில் மேற்குலகச் சிந்தனைக்குட்பட்ட-கலப்படைந்த மக்கள் வெண்மையாக-„அழகாக“இருக்கிறார்களா?எமது சமுதாயத்தின்பெண்கள்-ஆண்கள்“கருப்பு-அவலட்சணம்“கண்டு கேலி பேசுகிறார்களா?கலப்படைந்து“வெள்ளையாக“இருக்கும் நபருக்கு இருக்கும்“செருக்கு“எத்தகைய சமூக-அகவொடுக்குமுறையை“கருமையாக“இருக்கும் மனிதருக்கு வழங்கியது? இந்த அனுபவம் தன் பெண்ணுக்குத் தொடர்ந்து“கருமையுடைய“பிள்ளை பிறப்பதை நம்மில் எத்தனைபேர் விரும்பினோம்?“கருப்பு-வெள்ளை“கருத்தியலைச் செய்த „மேற்கு,கிழக்கு“க் கருதுகோள் நம்மைக் கோவணத்தோடு-கும்மப் பூவோடு அலையவிட்டது மட்டுமல்ல-நம்மையே,நாம் அங்கீகரிக்க-மதிப்பளிக்க மறுத்து நிற்கிறது.

இன்றைய புலப்பெயர்வு வாழ்வில் பாலியல் நடாத்தையென்பது பொறுப்போட நடைபெறவில்லை.“அநுபவித்தில்-தட்டிக்கழித்தல்“ வரை முறையற்ற பாலியல் நடாத்தையெனப் பல பாலகர்களைத் துவசம் செய்து நடுத்தெருவில் அலையவிடும்போது,இப்போது மேற்குப் பெற்றோரே தமது பிள்ளைகள் குறித்துக் கவலையடையும்போது,நீங்கள் இதைக் குறித்து மேலோட்டமான வார்த்தைகொண்டு மெலினமாகவுரையாடுகிறீர்கள்.இது,முழுமொத்த மனித சமூகத்தையே இன்று பல உள நெருக்கடிக்குள் கொணர்ந்திருக்கும்போது அதை நமது மக்களிடம்-புலம்பெயர்ந்தவர்களிடம் மட்டும் குறிப்பாக நிகழ்வதாக ஒரு மார்க்சியன் கருத்துக் கூறுவதாகவிருந்தால் நான் உங்கள் மார்க்சியம் குறித்துக் கவலையடைகிறேன்.மனிதர்களை அவர்களது வாழ்நிலையோடு புரிதலைவிட்டுப் பெயர்த்தெடுத்து விமர்சிப்பது நியாயமாகாது.எமது வாழ்நிலை பாதிப்படைந்து நாம் அங்குமிங்குமாக அலைகிறோம்.

[ //இவ்வாறு புலத்திலிருந்து தொலை தூரத்தில் உருவாகின்ற தேசிய உணர்வானது “கலாச்சாரப் பய” உணர்வின் அடிப்படையிலிருந்து மேலெழுகிறது. இத் தொலை தூரத் தேசிய உணர்வு சொந்த நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கதைச் செலுத்துகிறது.// ]

தூரத்தே உருவாகும்“தூரத்தேசியவுண்ர்வு“என்பதெல்லாம் அடிப்படையில் அறிவியல் பூர்வமற்றது.ஒரு இனக் குழும மக்கள் இடம்பெயர்ந்து,சிதறிச் சமூகக்கூட்டின்றியும், எந்தப் பொருளாதார-நில-நினைவிலித் தளமும் இன்றியவொரு புலம்பெயர் தளத்தில் இத்தகையவுரையாடலானது அந்த மக்கள் துண்டிக்கப்பட்டவொரு மனிதக் கூட்டாக வாழ நேர்ந்த வலியயை மறுதலிப்பதாகும்.இது,புலம்பெயர் தேசத்துப் பொருளாதார-இனத்துவ அடையாள அரசியலது ஈனத் தனத்தை மறுமுனையில் வைத்து மறைக்கும் கயமைத்தனமாகும்.புலம் பெயர் மக்களைத் தொடர்ந்து அச்சத்துக்குட்படுத்தி,அவர்களது மனவலிமையை-ஆற்றலை முடக்கி நிராகரித்துத் தமது சமுதாயத்துக்கு புறம்பாக வாழ நிர்பந்தித்த வெள்ளைத் தேசமும்-வேற்று அரசவுரிமையுடைய தேசத்துச் சமுதாயங்களும் தொடர்ந்து புலம்பெயர்ந்த-குடியேறியவர்களைத் திட்டமிட்ட உளவியலொடுக்குமுறைக்குட்படுத்தும்போது அங்கே, தமது அடையாள நெருக்கடிக்குள் வந்துவிட்ட வாழ்நிலைகண்டு அச்சங்கொள்வதும்,தாம் வாழ்ந்த வரலாற்று மண் நோக்கிய அவாவுறுதலும் மனிதர்கள் அனைவருக்குமான பொதுப் பண்பாக மாறுவது இயல்பு.இதுவே,புலம்பெயர் வாழ்வில் ஒவ்வொரு அகதியும் சந்திக்கும் மிகப் பெரிய சோகம்.இதுள்,இவர்கள்“துராத் தேசியவுணர்வடைகிறார்கள்“என்பது தப்பான கற்பித்தலாகும்.

இன்றுவரை,இந்த உணர்வைத் தமது அயலுறுவு-நலன் நோக்கிய அரசியற் காரணங்களுக்காகத் தட்டையாக உருவாக்கி அசைபோட்டுவரும் மேற்குலகம், இத்தகைய புலம்பெயர் மக்களைக்கொண்டு, அவர்கள் சார்ந்த தேசத்து அரசியலை அழுத்தப்படுத்தித் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ததை நாம் ஈரானியர்கள்-ஈராக்கியர்கள்,குத்தீஸ் புலம்பெயர் மக்கள் வழி புரிகிறோம்.இந்த வகையிற்றாம் புலிகளது தேவையோடு,அவை மிக நெருக்கமான வினையாற்றலைக்கொண்டியங்கியது. இது குறித்துச் சிந்தியுங்கள்.

இவர்களது கொச்சையான-மொட்டையான இந்தக் கருத்தை ஜேர்மனியக் கவிஞன் ஹன்ஸ்-ஹேர்பேர்ட்திறைஸ்கே [ Hans-Herbert Dreiske] இப்படிக் கேலி பேசிய ஆண்டு 1985. :

„இங்கே அந்நியராய் இருந்தோம்
அங்கே அந்நியராக்கப்பட்டோம்
எனினும்,
நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி
ஒரு நாட்டை உருவாக்குவோம்
எங்கெங்கு
எப்படியெப்படியோ அந்நியர்களாகிய
அனைவருக்குமாக.“

[ Hier

fremd geblieben

dort

fremd geworden

Vielleicht

sollten wir

ein land suchen

einen Staat gruenden

fuer alle

die irgenwo

irgenwie

Fremde sind.]

-Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984

[ //குஜராத்யர்கள் செறிவாக வாழும் பிரித்தானியாவின் நகரமான லெஸ்டரில் சாரி சாரியாக 30 ஆயிரம் பேர்வரை கலந்துகொண்ட கூட்டம் பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி கலந்துகொண்ட பொதுக்கூட்டமாகும். விஸ்வ இந்து பரிசத் என்ற இந்து அடிப்படை வாதக் குழுவிற்கு பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு இந்தியரும் உணர்வு பூர்வமாக வழங்கும் பணம் புலிகள் இயக்கத்திற்குத் தமிழர்கள் “கண்ணை மூடிக்கொண்டு” வழங்கிய பணத்தைப் போன்றதாகும்.// ]

புலிகளுக்கு நிதி கொடுத்த சமூகவுணர்வை-உளநிலையை மிகவும் தப்பாக உரைப்பதற்குப் பலர் முனைகிறார்கள் நாவலன்.நீங்கள் இந்த வரிசையில் ஒருபோதும் உரைத்திருக்கப்படாது.இது,தப்பானது.எமது மக்கள் முன் சில தீர்வுகள் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவி மனத்துள்.இவர்கள் எவரும் கண்ணை மூடிககொண்டு புலிக்கு நிதிகொடுக்கவில்லை!

„கண்ணை மூடிக் கொடுத்ததுபோல்“ நடாகங்காட்டியது புலிப்பினாமிகள்.அது,மக்களது நிதியைக் கறக்க அவர்களது பணத்தில் புலி தன் பொண்டிலுக்குத் தாலிகட்டி பின் அதை மக்கள் முன் களற்றிப் போட்டு நாடகம் ஆடியது.இதுவொரு வியூகம்.

ஆனால்,எமது மக்கள் தமது உழைப்பில் சிறு தொகையை மாதாந்தங்கொடுக்கும்படி உருவாகிய சூழல் மிக முக்கியமாகத் தவறவிடப்படுதல் சாபக்கேடானது!

1:“ஊரிலுள்ள உறவுகளை புலிவேட்டையிலிருந்து காத்தல்“

2;“தாம் தேசம்-தாயகம் திரும்பும்போது புலி வேட்டையின் முன் முகங்கொடுத்தல்“

3:“தமது சமுதாயத்தின் அழிவைக்கண்டும்-தாம் தப்பிய குற்றவுணர்விலிருந்து விடுதலையடையவும்“

4:சிங்கள அரசின் அத்துமீறிய இனவழிப்புக்கு விடிவு தேடிய பாமரவுணர்வுகொண்ட நம்பிக்கை“

ஆகிய காரணிகளது வழியிலேயே புலிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.இதைவிட்டு,“கண்மூடி-கண்திறப்பு“ வார்த்தைகள் மோசமான பார்வைகளைக்கொண்டது.

நாம்,எமது மக்களது சமூக உளவியலைப் புரிய முனைதலும்,மனித சமுதாயத்தை மிக முன்னேறிய புரிதல்களைக்கொண்டு ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.புலம்பெயர் சமூகங் குறித்து எவரும் போகடிபோக்காக வரலாறு எழுதலாம்.ஆனால்,அவையெல்லாம் குப்பைக் கூடைக்குள் ஒரு நாள் செல்லும்.மார்க்சியம் புரிந்த உங்களிடமிருந்து இத்தகையவொரு கட்டுரை“புலம்பெயர் மக்கள்“குறித்து வந்ததில் நான் மிகவும் வருந்துகிறேன்.மையமான புள்ளிகளைத் தொட்டு ஆய்வு மனத்தோடு எழுதப்படவேண்டிய கட்டுரையை வெறும் மனவுணர்வுக்குள் உந்தப்பட்டெழுத முற்படுதல் மார்க்சிய ஆய்வாகாது!

[ //இந்த நூற்றாண்டின் தெற்காசியாவின் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் “புலம் பெயர் அரசியல்” தொலைதூரத் தேசிய உணர்விலிருந்து விடுதலை செய்யப்பட்டு மனித நேயம் மிக்க அரசியலாக மாற்றமடையே வேண்டும். ஆப்கானிஸ்தானிலும்இ காஷ்மீரிலும் மனிதர்கள் கொல்லப்படும் போது அதன் வலியையும் நாம் உணர வேண்டும்.// ]

ஏன்,எமது மக்கள்மீது குறைப்படுகிறீர்கள்?,எங்கள் மக்களுக்கு இந்த வலிகளைச் சொல்லும் எத்தனையூடகங்கள் நமக்குள் உண்டு?தொடர்ந்து தமிழ் ஊடகங்களில் புலிக்கு வக்காலத்து அல்லது, தமிழ்நாட்டுச் சீரழிவு நாடாகம்-சினிமா!இதைவிட எமது சமூகத்துக்கு என்ன சமூகப் புரிதலை காட்சியூடகம் வாயிலாகச் சொன்னோம்.எமது மக்களது சிந்தனையைக் காயடிக்கும் இன்றைய ஆளும் வர்கங்கள்தாம் எமது மக்களது சிந்தனையைத் தகவமைத்தபோது,நாம் அவ்கானை-ஈராக்கை-காஸ்மீரைக் காணது பேசுவதாகக் குறைப்படுதல் நியாயமாகாது.புரிதற்பாடென்பது அந்தச் சமுதாயத்தின் ஊடகங்கட்கு வெளியில் வெறும் கல்வியல் மட்டுமே தங்கும்.பொதுத்தளத்தில் உலக மக்களது வாழ்வுஞ் சாவும் ஊடகங்களின் வழியே சமூக ஆவேசம்-உணர்வு கொள் திசைவழியைத் தகவமைக்கும்.எமது ஊடகங்களது நயவஞ்சமான வர்த்தக நோக்கு இதுள் மையமாகத் தவிர்க்கப்பட முடியுமா?

[ //தவறுகளைத் தர்க்கரீதியான ஆய்விற்கும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுத்துவதனூடாக தேசிய வாதத்தின் முற்போக்குக் கூறுகளை வளர்த்தெடுக்க முடியும். இலங்கைப் பேரினவாதப் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சார்ந்த புலம்பெயர் தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் மக்கள் போராட்டத்திற்கான ஜனநாயகச் சூழலை இலங்கையில் உருவாக்குமாயின் போராடத்தின் புதிய திசைவழியில் ஒரு மைற்கல்.// ]

இலங்கையில் ஜனநாயகச் சூழலை உருவாக்கப் புலம் பெயர்ந்த மக்கள் பங்களிப்பதென்பதன் அர்த்தம் வெறும் பேச்சுக்கானதான ஒரு பரிவர்த்தனைதாம்.இலங்கையில் மட்டுமா „ஜனநாயகம்“செத்துப் போனது? இந்தப் புலத்து வாழ்வில் வாழுகின்ற ஒவ்வொரு அகதிக்கும் தனது வாழ் நிலையில் புரிந்த ஒருவுண்மையானது „ஜனநாயகம்“என்பது என்னவென்று புரியாததுதாம்.தனக்கான வாழ்வு-தேசம்,மொழி,பொருள் முன்னேற்றம்.இதைவிட்டகலாவொரு அரசைக் குறித்த மிக அருகிய புரிதல்.இதைவிடப் புலப்பெயர் வாழ்வில் முன்னேறும் போராட்டம் இலங்கையிலொரு ஜனநாயகச் சூழலைத் தீர்மானிக்கும் பகுதிச் சக்தியென்பதுகூட மிக நெருங்கிப்பார்த்தறியும் புரிதலுக்கு எதிரானது.தனது வாழ்நிலையில் ஒரு கூட்டாக-குழுமமாக வாழ முற்படும் அரும்பு நிலையுள் தவிக்கும் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டாகக் கோவிந்தாபோட்டு ஓய்ந்த சூழலில் அவர்களது நிதியுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கும்,இலங்கையில் „ஜனநாயக“ச் சூழலை மீட்பதென்பதற்குமான புரிதலது எல்லை, இலங்கைக்கு வெளியில் அநாதவராகக் கிடக்கிறது.

இலங்கையுள் வாழும் மக்களுக்கு முடியாதவை எதுவும், அந்தத் தேசத்துக்கு வெளியிலிருந்து இறக்கு மதியாகும் எந்தவொரு சக்திக்கும் அவர்கள் நியாயமாக-விசுவாசமாக நடக்க முடியாது.இலங்கைத் தேசத்து ஒடுக்கப்படும் மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிப்பதைத் தவிர புலம்பெயர் மக்களுக்கு எந்தப் பொறுப்புஞ் சுமத்த முடியாது.புலமானது தனது தளத்திலுள்ள மக்களது வலியை வெளியுலகுக்குச் சொல்வதைத்தவிர வேறெதுவையுஞ் செய்துகொள்ள முடியாது.இவர்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தையே செய்துகொள்ள முடியாது திசையில் இலங்கை நோக்கி…(?…)

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.01.2011

இனியொரு எதிர்வினை…

இனியொரு வலைஞ்சிகையின் அசிரியர்களில் ஒருவரான திரு.சபா நாவலனது கட்டுரையொன்று வரும் ஜனவரி 2011 இல் மகிந்தாவின் காலடியில்நடைபெறுப்போகும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்தவொரு மதிப்பீட்டை செய்கிறது. அவ் மிப்பீட்டின்மீதான எனது கருத்துக்களை இனியொருவில் பின்னூட்டமாக இட்டதன் தொடரில் அது விவாதாமாக மாறுகின்றபோக்கில் தம்பி மயூரன் இணைகிறான்.

மயூரன் நடைபெறப்போகும் இவ் „சர்வதேச“ தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஆதிரிப்பவருள் ஒருவராவார்.அவர் எனது இனியொரு பின்னூட்டங்கள்மீது எழுப்பிய கேள்விகளை இதுள் பதிலீடுகளாக்கிப் பதிவிடுகிறேன்-பிரதியிடுகிறேன்.

„சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் …“ : சபா நாவலன்

இக்கட்டுரையின்வழி,நாம் தொடர்ந்து கூறுவதை வகைப்படுத்திய-நிரல்ப்படுத்திய ஒரு உரையாடலுக்குள் இழுத்து வந்துள்ளீர்கள்.இதை வரவேற்கிறேன்.இலங்கையின் அரச வியூகமானதை அதன் ஆளும் கட்சிக்குள் காணுகின்ற போக்கை உடைத்துவிட்டுப் பரவலாக விளங்க முற்படும்போது,இவ் „எழுத்தாளர்“மாநாடென்பது  நீங்கள் குறித்த நிரல்படுத்தப்பட்ட

“ ஆக மாநாட்டின் இறுதி நோக்கம்:
1. இலங்கை அரசின் இனப்படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் அங்கீகரித்தல்.
2. இலங்கை அரச பாசிசத்தை மறைத்து அது ஜனநாயக அரசு என அறிவித்தல்.
3. இலங்கை அரச எதிர்ப்பாளர்களைப் புலிகள் என அடையாளப்படுத்தி அன்னியப்படுத்தல்.
4. தமிழ் நாட்டு மற்றும் புலம் பெயர் அரச எதிர்ப்பாளர்களிடையே பிளவுகளை உருவாக்குதல்.“

கருத்துக்களுக்கமைய வினைகளை ஆற்றுவதாகவே இருக்கும்.

இவ்வெழுத்தாளர் மாநாட்டை ஆதரிப்பதற்கான காரணங்களை அடுக்குபவர்கள்  ஏதோவொரு வெளியில் தமது சுய தேவைகளின்வழியே பரவலான மக்களது நலன்களைக் கையிலெடுத்து ஆசிய-ஐரோப்பிய மூலதனத்துக்கேதுவாக இயங்குவதில் முனைப்புப்பெறுவதாகவே இருக்கும்.

இரு முனைகளாக இயங்கும் ஆதிக்க மூலதனவூக்கத்தில் ஒரு பகுதி மேற்கு மூலதனத்துக்கேற்ற திசைவழியைக்கொண்டியங்குகிறது. மறு தளமானது ஆசிய மூலதனத்துக்கேற்றபடி இயங்க முனைகிறது.

இந்த இரண்டு தளமும்(ஆசிய-மேற்கு பொருளாதார அணிகள்) சிங்கள இனவாத அரசினது தமிழ்பேசும் மற்றும்சிறுபான்மை இன மக்கள்மீதான பொருளாதார-இன-பாண்பாட்டு ஒடுக்குமுறையை அங்கீகரித்தபடியும், தார்மீக ஒத்துழைப்பையும்நல்கியபடியுந்தாம் இலங்கையை முற்றுகையிட முனைகின்றன.

இன்றும், மௌன்ட் பெலரின் சொசைட்டி (Mont Pelerin Society )போர்ட் மென்பராக இருக்கும் இரணில் விக்கிரமசிங்காவை அண்மித்தியங்கும் தமிழ் ஓட்டுக்கட்சிகளை இங்கு முன் வைத்து யோசித்தால் இவ்வெழுத்தாளர் மாநாட்டை இரு தரப்பும் (மேற்கு-ஆசிய விசுவாசம்) வரவேற்று ஆதரிக்கிறது என்பதையும்,நமது புலம் பெயர் தளம் இவ்விரண்டு முகாங்களது லொபியாக இயங்குவதை அறியக் கூடியதாகவிருக்கிறது.

உதாரணத்துக்கு தமிழரங்க இரயாகரன்கோஷ்டி(புரட்டுப் புரட்சி) – இராகவன் கோஷ்ட்டி(தலித்துவ முன்னணி-அபிவிருத்தி,ஜனநாயகம்) இரண்டுமே ஒவ்வொரு தெரிவில் ஆதரிக்கின்றன.இங்கே, இராகவன்-சோபாசக்தி அணி,இரயாகரன் போன்ற பினாமிகள் எங்கே-எப்படி தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட சிங்கள இனவொடுக்குமுறையை,எதன் தெரிவில் மறைமுகமாக ஆதிரித்தும்-எதிர்த்தும் இயங்குகின்றார்களென்பதைப் புரிவதன்வழி, இன்னும் பாரிய பின்னடைவுகளைத் தமிழ் பேசும் மக்கள் சந்திப்பதைத் தடுக்கலாம்.

இங்கே,உங்கள் கட்டுரை மட்டுமல்ல,பொதுச் சூழலே இதை வற்புறுத்துவதெனவுணர்கிறேன்.

பிற்குறிப்பு: தங்களது தொலைக்காட்சி உரையாடலில் குறிப்பாகப் பகரப்படவேண்டிய ஆசிய மூலதனத்துக்கு ஊக்க வினையாக இயங்கும் கிஷோர் மபுபானியின் ஆய்வுகள் பேசப்படவேண்டும்.அவர் தனது தெரிவுகளில் இனமுரண்பாடுகளை அழிப்பதை ஆயுத-பொருளாதார முறைமைகளை பயன்படுத்துவதில் சீனாவையே உதாரணமாகக்கொள்வதும்,அதையே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பரிந்துரைத்தவர்.அவருக்கும் ப.சிதம்பரத்துக்குமான உறவு நீண்டது.புலியழிப்பின்போது கிஷோர் மபுபானியும் சிதம்பரமும் பல தடவைகள் சந்தித்துள்ளனர்.

(2)

நாவலன்,இன்னுமொன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்“சர்வதேச” அரசுகளுக்கெல்லாம் கொலைசெய்வது எப்படி என்ற முன்னுதாரணத்தை வழங்கியிருக்கும் இலங்கை அரசின் எல்லைக்குள்இ அது வரித்திருக்கும் சர்வாதிகார வரம்புக்குள்“என்ற தங்கள் கருத்தானது இன்று உலகத்தில் அமெரிக்காவினது தலைமையில் இயங்கும் நேட்டோ சர்வ நாசகார இராணுவ ஒடுக்குமுறையைச் சந்திக்கும் மக்களது வலியைக் குறித்துக் கணக்கெடுத்திருக்கிறதாவென என்னிடம் கேள்வி விரிகிறது.

இதன் பொருட்டு, மூலவளக் கொள்ளைக்காக கொங்கோவில் இன்றுவரை 3 மில்லியன்கள் மக்கள்,சோமாலியாவில் 4 மல்லியன் மக்கள்,ஈராக்கில் 1.5 மில்லியன் மக்கள்,அவ்கானில் இதுவரை இரண்டு இலட்சங்கள் மக்கள்வரைப் படுகொலை செய்யப்பட்டதும்,அவர்களது கொலைகளை எங்ஙனத் திட்டமிடப்பட்ட தொழில் ரீதியான கொலையென்பதையும் நாம் உணர வேண்டும்.இவர்களிடமிருந்தே இலங்கை ஆளும் வர்க்கம் இதை முன்மாதிரியாகவைத்துத் தமிழ்பேசும் மக்களை-புலியழிப்பை அரங்கேற்றியது.ஈராக்கில் சீனாவுக்கு மூக்குடைத்த அமெரிக்காவை,சீனா இலங்கையில் புலியழிப்பைச் செய்து மூக்குடைத்தது.இதை விரிவாக உணர்வது அவசியமே.புலிகளது மேற்குலகச் சேவகத்தைத் தகர்ப்பதால் சீனா தனது  வர்த்தகத் தொடர்பாடலது கடல்வழிப் பிரயாண வசிதியில் சில நிர்ணயமான ஒழுங்கைக் கைப்பற்றியுள்ளது.

இப்போதைய மூலவள-வர்த்தக யுத்தமானது மூன்றவது உலக யுத்தமாகவே பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளது ஆளும் வர்க்கத்தால் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகிறது. கடந்த இரண்டு உலக யுத்த வடிவத்தையும் உடைத்து விட்டுப் புதிய முறைமைகளில் அணிபிரிந்துள்ள ஆளும் வர்க்கங்கள் தத்தமது மூலவளத் தேவைக்காகப் போட்டியிட்டு மூன்றாம் உலக யுத்தத்தை நடாத்துகின்றன. இனிமேல் பழைய பாணி உலக யத்தம் நடைபெறவதின்றி இந்தப்பாணியில்(ஈhராக்-அவ்கான்,கொங்கோ இன்னபிற) உலக யுத்தம் நடைபெறுவதை உணரவேண்டும்.இவ் யுத்தத்தில் ஆசிய-மேற்குலக மூலதனம் தன் முரண்பாடுகளை யுத்தத்தின்வழி நடாத்துவதை ஏற்காதுபோனால் சரியான தரவுகளுக்கு நாம் முகம் கொடுப்பதைத் தவறவிடுவோம்.

ஆசிய மூதனத்தோடு கஸ்பியன்வலைத் தேசங்களை இணைப்பதும் அவசியம்.அதாவது இருஷ்சியக் கூட்டணி.இலங்கையில் நடாத்தப்பட்டது-படுவது இதன் ஒரு தெரிவே!இலங்கையின் அரசியற் சூழலானது இனிமேல் மெல்லிய-தாழ் வகைப்பட்ட புதியபாணி மூன்றாவது உலக யுத்தத்துள் ஈர்க்கப்பட்டே இருக்கும்!நேட்டோவினது சமீபத்திய மாநாடு இதை உறுதிப்படுத்துகிறது. 2014 ஆண்டில்நேட்டோத் துருப்புகளது அவ்கான் வெளியேற்றமானது தென்னாசிய அரசியல் வியூத்தைத் மீளத் தகவமைத்துக்கொள்வதற்கான காலக்கெடூவாகும்.இதுள் நேட்டோவானது நான்கு ஆண்டுகளுக்குள் ஈரானை முற்றுகையிட்டே முடிக்க வேண்டும்.துருக்கியை ஐரோப்பியக் கூட்டமைப்புக்குள் இணைக்கவேண்டும்.இவை இரண்டும் நபுக்கா எண்ணை-எரிவாயுக்குழாய்களது ஒப்பந்தத்தில் நோர்த் ஸ்ரீம் இருஷ்சியக் குழாய்களுகஇகு ஆப்பு வைப்பதன் தொடரில் ஈரானிய எண்ணை நபுக்காவுக்கு உறுதிப்பட்டாலேதாம் துருக்கியை ஊடறுத்து இது சாத்தியமாகும்.எனவே,மூன்றாவது உலக யுத்தம் புதிய பாணியில் நடைபெறுவதை இனம் காணுங்கள்.இங்கே அணிகள் ஒவ்வொரு தேசதஇதுக்ப் பின்னும் இயங்கும்போத அங்கே பலியாவது பரந்துபட்ட மக்களே-இனங்களே!தமிழ்பேசும் மக்களது தலைவதியும் இதற்கு விதிவிலக்கற்றுப் போகிறது.

(3)

// மு. மயூரன்  :Posted on 11/20/2010 at 7:22 pm

சிறீரங்கன்,

நாம் , கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடக்கப்போகும் (ஆகக்கூடினது 300 பேர் நின்று பார்க்கலாம்) இந்த மாநாட்டை எதிர்த்து நிற்பது ஆசிய- மேற்கு மூலதனங்களை எதிர்த்து நிற்பதாகுமா?

இந்த மாநாட்டை ஆசிய-மேற்கு மூலதனங்களின் பினாமிகள்தான் நடத்துகிறார்களா?

அதுகிடக்க,

இந்தக்கேள்வி முக்கியமானது,

ஒரு தமிழ் எழுத்தாளர் மாநட்டை நான் நடத்த விரும்புகிறேன். அம்மாநாட்டை ஆசிய-மேற்கு மூலதனங்களுக்கு சார்பாக அல்லாமல் (எதிராகக் கூட இருக்க வேண்டியதில்லை) நடத்த நான் செய்ய வேண்டியவை எவை?-மு. மயூரன் //

மயூரன் யாழ்ப்பாணத்தில் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்தவர்கள் நாம் சமீபத்து இனவழிப்பை மறந்து…ஆனால்,நான் கூறுவது அணித் திரட்சிகளையும்,அதன் வாயிலான அரசியல் கோரிக்கைகளையும்.டான் தொலைக் காட்சியில் உரையாடிய தேவதாசன்-இராகவன் வகையறாக்கள் என்ன செய்தார்கள் என்பது நாம் பார்த்ததுதாம்.நீங்கள் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடாத்து மளவுக்கு நமது சமுதாயம் அனைத்து வளமும் பெற்று வாழவில்லை!முதலில் அவர்களது வலியைப் போக்க-இனவழிப்பைத் தொடரும் இலங்கை அரச பாசிசத்துக்கெதிராக அணிதிரண்டு வீதிக்கிறங்கி ஊர்வலங்களைத் தொடருங்கள்.அது,இலங்கைப் பிரச்சனைகளைக் குறித்த ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கும்.நாலு சுவருக்குள் மாநாடு நடாத்தியவர்கள் தந்த பரிசு,அகதி வாழ்வு-அடிமை வாழ்வு-மரணம்-கொலை-கொள்ளை ,நிலப்பறிப்பு இத்தியாதி.இதைத் தொடர்வதன் புள்ளியே இவ் வகை மாநாடுகளின் தெரிவிலிருந்தே ஆரம்பிக்கிறது.

//மு. மயூரன் :Posted on 11/20/2010 at 9:57 pm

உங்களுடைய பதிலை,

1. நமது சமுதாயம் அனைத்து வளமும் பெற்று வாழும் நிலையில் மட்டுமே இலங்கையில் ஓர் எழுத்தாளர் மாநாடு நடைபெற வேண்டும். அதுவரை வேறு தேசத்தவர்கள் (இந்தியத்தமிழர் உட்பட) மட்டுமே ஆய்வரங்குகளை, மொழி சார்ந்த, இலக்கியம் சார்ந்த, திரைப்படம், கணினி சார்ந்த ஆய்வுகளைச் செய்யப் பாத்தியதை உடையவர்கள்.

2. இலங்கையில் அரச பாசிசத்தை நேரடியாக எதிர்க்காத, நேரடியாக எதிர்ப்பதற்கான கட்டுமானங்கள் அல்லாத எந்தவொரு நிகழ்வும் பாசிசத்துக்கும் மேற்குக் கிழக்கு மூலதங்களுக்கும் சேவகம் செய்வதாகவே அமையும்.

3. இலங்கைத் தமிழர் தமக்கான விடிவு கிடைக்கும்வரை வேறு எந்தவொரு வேலையிலும் ஈடுபடாமல் முழு மூச்சாக எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே காலம் கழிக்க வேண்டும்.

என்றா நான் புரிந்துகொள்வது?

(முள்ளிவாய்க்கால் காலத்தில் இராணுவத்திடம் அடைக்கலம் கோரி இராணுவக்கட்டுப்பாட்டுப்பிரதேசங்களுக்கு தப்பி ஓடிய சனங்கள் பற்றிய உரையாடல் ஒன்றில், யாரோ சொன்னார்களாம்,
“அந்தச்சனங்கள் துரோகிக்கூட்டங்கள். மண்ணுக்காகப் போராடி வீரமரணம் அடைந்திருக்க வேண்டாமா” என்று ) //-மு. மயூரன்

மயூரன் நீங்கள் நான் சொல்வதை விட்டு, மானுட வாழ்வியக்கப் போக்கில் தொங்குகிறீர்கள்.இன்று, இலங்கை அரசினது வியூகங்களை மிக இலகுவான முறையில் மலினப்படுத்தி ஒன்றோடொன்றைக் குழப்பாதீர்கள்.நீங்கள் எழுதுங்கோ-படையுங்கோ,கணினியில் புரட்டுங்கோ, அவையாவும் சமூக அசைவியக்கத்தின் உறுப்புகளே.

ஆனால்,நிறுவனப்பட்ட அரச ஆதிக்கத்துக்குள்ளிருந்து சர்வதேசத்தில் புலம் பெயர்ந்த படைப்பாளிகளை இணைத்து மாநாடு நடாத்துகிறோமெனக் கூவிக்கொண்டியங்கும் பேர்வழிகளைக் குறித்து நீங்கள் நியாயப்படுத்துவதை நாமும் ஏற்க வேண்டுமென்பதல்ல.அதேபோன்று, நாம் கூறுவதற்கும் நீங்கள் தலையாட்டவேண்டுமென்றுமில்லை!

என்றபோதும்,கடந்தகால நடாத்தையில், இத்தகைய „எழுத்தாளர்கள்“எந்தத்திசையில் அரசியலோடியங்கியவர்கள் என்பதைவிட நமது பிரச்சனைகளை அரசியல்ரீதியாகத் தீர்க்க முடியாதவொரு சிக்கலில் மக்கள் தவிக்கும்போது அவற்றைக் கிடப்பில் போட்டுவிட்டு,அல்லது அதைத் திசை திருப்பி மழுங்கடிக்கும் திசைகளில் இத்தகைய மாநாட்டரங்குகளெல்லாம் இலங்கையில் திடீரெனப் பத்திப்படர்வதும்,தமிழ் மக்களது புறமுரண்பாடுகளையும்,அவர்கள்மீது சுமத்தப்படும் இராணுவ அழுத்தங்களையும் மிக இலகுவாக சகஜமாக்கவும்,அதையே தொடர்ந்து நிலைப்படுத்தவம் மக்களது கவனம் மட்டுமல்ல அத்தகைய மக்களுக்கும் படைக்கிறோம்-புடைக்கிறோமெனும் பேர்வழிகளையும் ஒரு ஒழுங்குக்குள் அமுக்கியெடுக்க வேண்டிய வியூகத்துக்குப் பெயர் „சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு“என்று  நாம் புரிகிறோம்.

இதன் தெரிவில் அணிச் சேர்க்கையாகும் ஒவ்வொரு தளத்திலும் பத்திப்படரும் இலங்கை அரசினது மையச் சிந்தனையோட்டத்தின் ஆதாரமான „ஆதிக்கம்“அதன் வினைத் தொடரைப் புலம் பெயர் தளங்களில் மிக இலகுவாக நிலைப்படுத்தப்படுவதற்கும்,அந்த ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாதவொரு சூழலை உருவாக்கவும் இங்கே கொட்டை போட்டு நீரூற்றுகிறது.இதையெல்லாம் இலங்கையிலிருப்போர் எதைக்கொண்டு அழைத்தால்மட்டும் அது மகிந்தாவைப் புடுங்கும்,சிங்கள அரச ஆதிக்கத்தையும்-அரச வன்முறை ஜந்திரத்தின் கெடுபிடிகளையும் இல்லாதாக்கித் தமிழர்களது சுய நிர்ணயவுரிமையை அங்கீகரிக்க ஏதுவாகிவிடுமெனும் கூத்து முற்று முழுதான போக்கிரித்தனமாகும்.அங்கே,ஆதிக்கச் சக்திகளது தெரிவுக்கான வியூகங்களைத் தம்மையறியாது ஒப்புதலோடு தொடர முனையும் „எழுத்தாள“நாயகர்களை எண்ணி வருந்தத்தாம் முடியும்.முள்ளிவாய்க்காலுக்கும்,கொழும்பு மாநாட்டுக்கும் முடிச்சுப்போடுவதன் தொடரில் எதை நியாயப்படுத்த நீங்கள் புதிய மாதிரிகளை உருவாக்குகிறீர்கள்?

உலகம் உருண்டையென்பது உண்மைதாம் மயூரன்!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.11.1010

மாற்றை முன்வைக்கும் டி.சே-அறிக்கை தரும் சோபாசக்தி!

டி.சே,இந்த அறிக்கையை நீங்கள் எழுதுவதும்,அதை“ஓம் நான் முற்றிலுமாக ஏற்கிறேன்-கையொப்பம் போட்டுவிட்டேன்“என்று சோபாசக்தி சொல்வதும் குறித்து யோசிக்கும்போது,நமது சமுதாயத்தின் தலைவிதியையெண்ணி மனம் வெதும்புகிறேன்.கடந்த முப்பதாண்டுப் போரில் எமது மக்களது சமூக சீவியத்தையே சீரழித்துச் சின்னாபின்னமாக்கி,எமது உறவுகளையெல்லாம் கொன்று,எம்மை அகதியாக்கி நடுவீதியில் தமிழ் மக்களது எதிர்காலத்தையே வேரோடு பிய்த்தெறிந்த இந்தப் பெரிய இனவழிப்புக்கும்,அதை எதிர்த்துப் போரிடுவதற்காக ஆயிரக்கணக்கில் பாலகர்களது கனவைக் கருக்கிய „தமிழீழ விடுதலை“ப் போரும் ஏதோ சில தவறுகளால் நேர்ந்ததுபோன்று நீங்கள்-சோபாசக்தி அறிக்கை விடுமளவுக்குச் சூழ் நிலை இருக்கென்றால் எமது சமுதாயத்தில் நோய் முற்றியுள்ளது.

இவ்வளவு கொடுமைகளுக்கும் மூல காரணமான இலங்கைப் பாசிச அரசுக்கும் அதைத் தூக்கி நிறுத்தும் அந்நியச் சக்திகளுக்குமான அறிக்கை தயாரிப்பது அல்ல எமது மக்களது இன்றைய நிலைக்குத் தீர்வு.இத்தகைய அறிக்கைகளை ஒரு ஓட்டுக்கட்சிப்பாணிக்குக் குறுக்கும் சோபாசக்தியைச் சபிக்கிறேன்!என்னுடைய கவனமெல்லாம் எமது மக்களது தலைவிதியை இப்படியெல்லாம் சிறுபிள்ளைத் தனமாக்கி உரையாட முடிகிறதே உங்களுக்கு-அதுவே மிகப் பெரிய தொல்லை!எமது மக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தவர்களை நமது மக்களே ஒன்றுதிரண்டு போராடி அம்பலப்படுத்துவதென்பதையுங் கடந்து, நாம் அணிதிரண்டு வரலாற்றுப் படுகொலைக்கும்-திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராகவும்,அதைச் சட்டபட்படி உலகத்தின் முன் காட்டிப் படுகொலை நடாத்தும் இலங்கை அரசிடமே முழுப் பொறுப்பையும்-கடப்பாடையும் தள்ளிவிடுவதற்கு எதிராக உரையாட முனைகிறோம்.

புலிகள்-மற்றைய இயக்கங்கள் தோன்றுவதற்கான சமூக நெருக்கடியை ஏற்படுத்திய இனத்துவ அரசும்,அதன் ஏவல் நாய்களமே புலிகளது அட்டகாசத்துக்கும் பொறுப்பானவர்கள். இலங்கை அரசு சரியானமுறையில் இனப் பிரச்சனையை அணுகியிருந்தால் இவ்வளவு அழிவும் ஏற்பட்டிருக்க முடியாது.எனவே,இதில்,“சோபாசக்தி ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது“ என்ற புள்ளி மிகக் கேவலமானவொரு நடாத்தையின் தெரிவு.

தமிழ்பேசும் சமூகத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தத்தமது வர்க்வுணர்வுக்கொப்ப உரையாடலாம்.எனினும்,இந்த இனவழிப்பென்பது,வர்க்கவொடுக்குமுறையையுந்தாண்டி நிகழ்ந்து வருவது.இதைக் குறித்து அறிக்கை தயாரித்து,அதை இவர்கள் கையெழுத்திட்டு,“எழுத்தாளர்கள்“மாநாட்டில் வாசித்து…என்ன பூச்சாண்டியா காட்டுகிறீர்கள்?மக்களது அழிவுக்குப் பரிகாரம் தேடுவதல்ல இந்த நடாத்தை.

மாறாகப் படுகொலையை நடாத்தும் அரசுக்கெதிரான பாரிய அரசியற்போரையும் அதுசார்ந்த சர்வதேசரீதியான எதிர்ப்பியங்கங்களையும் ஒன்றிணைத்து இலங்கை அரசைக் குற்றக் கூண்டில் ஏற்றுவதும்,எமது மக்களது விடுதலைக்கான நியாயமான சுயநிர்ணயவுரிமையை ஏற்கப்பண்ணுவதும்,அதன் தெரிவில் ஒரு சமுதாயத்தின்மீது திட்டமிடப்பட்ட இனவழிப்பைச் செய்த சிங்கள அரசைத்தண்டிப்பதும்-அழிவுக்குட்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மற்றைய இன மக்களுக்கும் அவர்களது தலைமுறைவரை நஷ்ட ,டு கட்ட வேண்டிய நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளியே தீரவேண்டும்.இது உலகத்தில் நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கான நஷ்ட ஈடாக நாம் வரலாற்றில் கண்டவை.

கிட்டலர்,துருக்கிய ஒஸ்மானிய ஆதிக்கங்களால் யூத,சிந்தி-ரோமா,ஆர்மேனிய இனங்களக்கு நடந்த இந்த வகை(சிங்கள அரசின் படுகொலைபோன்று)ப் படுகொலைகளுக்கு இத்தகைய நஷ்ட ஈடு இன்றுவரையும் வழங்கப்படுகிறது.ஜேர்மனியில் சிந்தி-ரோமா மக்களக்கு அனைத்துக்குமான வரிவிலக்கு உண்டு.எமது பிரச்சனை இதையுந்தாண்டிப் பூர்வீக நிலப்பரப்பின்மீதான உரிமையை நிலை நாட்டுவதென்பதையுந்தாண்டி, „நமது தலைவிதியை நாமே தீர்மானிப்பதென்ற“ கொச்சைத் தனத்தையுந்தாண்டி, இலங்கையில் மாற்று இனத்துக்குச் சமமாக வாழும் உரிமையை நிலைப்படுத்துவதற்கான தெரிவாகவே இருக்கிறது,சுயநிர்ணயத்தின் அரசியல் தெரிவு.இதை எவரது அறிக்கையின் மூலம் எமது மக்கள் கண்டடைவது?எவர் எமது மக்களுக்கான தெரிவைக் கையெழுத்து வைத்து நிறுவுவது?இலங்கையிலுள்ள மக்களின் அரசியலைக் கையிலெடுத்துக்கொள்ளும் உரிமையை எந்த „எழுத்தாளர் மாநாட்டுக்கு“எப்போது நமது மக்கள் வழங்கினர்?மக்களது படுகொலைகளை அம்பலப்படுத்துவது வேறு,அதை வைத்து அறிக்கை அரசியல் செய்வது வேறு!

சோபாசக்தி,உங்களுக்கெல்லாம் மக்களது அழிவும்,அவர்கள்மீது தொடர்ந்து சிங்கள அரசு செய்யும்இனவொடுக்கல் அரசியலும் „அறிக்கை-கையெழுத்து“ எனும் ஓட்டுக்கட்சி நிலைக்குக் குறுக்கும் அரசியலாக மாறுகிறது? இது,ஜனநாயகச் செயலது திசைவழி-முன் நிபந்தனையெனக் கொள்வதாக நீங்கள் கருதினால் உங்களுக்கும் ஜனநாயக் கோரிக்கை-அது சார்ந்த போராட்டம்(ஆயுதம் எடுத்து) என்பதன் அரிச்சுவடியே தெரியவில்லை!உலகத்தில் மக்களை இதுவரை முட்டாளாக்கும் வியூகமெல்லாம் இதே பாணியிற்றாம் இப்போது அரங்குக்கு வருகிறது.உங்கள் தெரிவும் அதிலிருந்து சற்றும் மாறவில்லை!நடாத்துங்கோ-நடாத்துங்கோ!,நலிவது நமது இனம்தானே-போகட்டும்!  

ப.வி.ஸ்ரீரங்கன்

15.11.2010

சோபாசக்தி,வளர்மதி : இடையில் நான்…

சோபாசக்தி,வளர்மதி:இடையில் நான்…

Shaseevan hat geschrieben:
„அண்ணை, நீங்கள் சோபாசக்தி கேட்ட கேள்விக்கு எழுதப்போகும் பதிலை நினைத்தால் ஃபேஸ்புக்கை விட்டு ஓடி ஒளியவேண்டும் போல் உள்ளது. எதிர்காலத்தில் ‚சளாப்பல்‘ என்ற சொல்லுக்கு உங்கள் பதிலே உதாரணமாக இருக்கும். 🙂

Shoba Sakthi13 November 2010 at 10:14
Betreff: From Shoba
/உங்கள் நேரத்தை இப்படியானவர்களுடன் விவாதித்து விரயம் செய்யவேண்டாம் என்று அனுபவத்தாலும் நட்பினாலும் கேட்டுக்கொள்கிறேன்// என எழுதப்பட்ட பின்னூட்டமான்றிற்கு தீபச்செல்வனும் சிறீரங்கன் அண்ணனும் விருப்பம் சொல்லியிருக்கிறீர்கள் இங்கே ‚இப்படியானவர்கள்‘ எனச் சொல்லப்படுவது நான்தான். என்னுடன் விவாதிப்பது விரயம் என்றா நீங்கள் இருவரும் கருதுகிறீர்கள்? உங்கள் இருவரதும் பதில்கள் எனக்கு முக்கியமானவை.

இக் கிழமை முதல்,நான் புதிய வேலைகிடைத்து என்னுடல்-மூளை வருத்தி ஓய்ந்து,குடித்துத் தூங்கி,மதுமயக்கத்தில் எழுந்தபோது,கணினித்திரை மங்கலாக இருக்கச் சோபாசக்தியின் கேள்வியும்,நாரதன் சசீவனின் கருத்தும் கண்ணிலேபட்டுத் தாக்கியது மண்டையை!

இனி விஷயத்துக்கு வருவோமா தம்பி சசீவா?(இஃது-பொதுவூழ்)

தம்பி,சசீவா!,சோபாசக்தி என்ன சொறுடிங்கரது பிரச்சனைகளை அல்லது பின்னங்களைப் போட்டா கேள்வி எழுப்பியுள்ளார்?-நான் சளாப்ப!

அவரைப் பொருத்தவரை,தன்மீதான அரசியல் உரையாடலையொட்டி,அவர் இருப்புச் சம்பந்தப்பட்டதும்,அதுள் எழுந்துள்ள அடையாள நெருக்கடிகுறித்ததுமான புரிதலில் அவர்சார் அரசியலைக் குறித்து நாம் எதிர்கொள்ளும் போக்குகளோடு நெருங்க முனைகிறார்.அல்லது, நொருக்க முனைகிறார்.இது,எனக்கு,எப்போதும்போலவே விருப்புக்குரியதும்-என்னை உரைத்துப் பார்ப்பதற்கும் உவகையானதே!(இது“நான்“ எழு நிலை).

அன்புச் சோபாசக்தி, „உங்கள் அரசியல்-எழுத்துப் பரந்தபட்ட மக்களது அரசியல்வாழ்வோடு இயங்குகிறதா?அல்லது நீங்கள் குறிப்பிட்டவொரு நிலையில் அத்தகைய எழுத்துக்களை மக்களது பரந்துபட்ட நலன்களோடிணைத்துப் பரந்துபட்ட மக்களையொடுக்க முனையும் ஆதிக்க சக்திகளை மக்களுக்கு மேய்ப்பர்களாக்கும் முயற்சியில் வியூகம் அமைப்பவரா?“(…)

ஒடுக்குமுறைகளை உடைத்து முன்னகர முனையும் எம் மக்களக்குக் குறுக்கே நின்று கல்லெறிவது எனக்கு உடந்தையானதில்லை!உங்களுக்கும் அப்படியே எனக்கொண்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

உங்களை நோக்கி(சோபாசக்தியை நோக்கி)பல்வேறு கட்டுரைகளை-கேள்விகளை நண்பர் வளர்மதி எழுதியுள்ளார்-எழுப்பியுள்ளார்.அவருடைய கேள்வியானது உங்கள் அரசியல் நடாத்தையைக் கேள்விக்குட்படுத்துபவை.சமீகாலமாக நான் கவனித்துவரும் எழுத்துக்களில் முக்கியமானது வளர்மதியின் எழுத்துக்கள்.எப்படி உங்கள் எழுத்துக்கள் நமது மக்களது வாழ்வோடும்-விடுதலையோடும்,அவர்களது அரசியலோடும் விளைவுகளை ஏற்படுத்த முனைகிறதோ அதேயளவு உங்களது அரசியல் நடாத்தையைக் கேள்விக் குட்படுத்துவது வளர்மதியின் கேள்விகள்.

இந்தப் புள்ளியில்,நீங்கள் இதுவரை எதுவுமே நடாவாததுபோன்றிருந்துகொண்டு, மற்றவிடயங்களில் மூழ்கும்போது(அப்படிக் காட்டும் நிலையில்) நான் வளர்மதிக்கு உரைக்கிறேன்“சோபசக்தியோடு விவாதிக்க முனைவது வீண் விரயம்“ என்று.அத்தகைய எழுத்தை முன்வைக்கும் பின்னூட்டமும் விருப்பமாகிறது!

வளர்மதிக்குப் பதிலுரைப்பது உங்களதுரிமை.ஆனால்,சமீபக காலமாக நீங்கள் இயக்கும் அரசியல் உரையாடல்உலகத்தால் ஒடுக்கப்படும்தமிழ்பேசும் மக்களது எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டதென்பதால்,நீங்கள் பொதுத் தளத்தில் வளர்மதியோடு உரையாடவேண்டும்-அவர் முன்வைத்த அனைத்துக் கேள்விகளுக்கும்,தாங்கள் குறித்த அரசியல் நடாத்தைக்கும் பதிலுரைத்தே ஆக வேண்டும்.இத்தைய கடப்பாட்டைத் தட்டிக்கழித்துவிட்டு என்னிடம் பதில் கேட்பதன் நியாயத்தோடு வந்திருப்பது சரியே!அதேபோன்று,நானும்“சோபாசக்தியோடு உரையாடுவது விரயம்“எனச் சொல்வதும் தங்கள் நிலையினது விளைவுதரும்எனது புரிதலில் எனக்கும் நியாயமாகிறது!

இந்த எனது „நியாயத்தை“தப்புவென நிரூபிப்பது உங்கள் கையில்.அதைச் செய்து(வளர்மதிக்குப் பதிலுரைத்து) என்னைக் கேள்வி கேட்பது இன்னொரு தளத்தில் இயலுமாகும் சோபாசக்தி.அதுவரையும்…

ப.வி.ஸ்ரீரங்கன்.

13.11.2010

„தமிழீழம்“என்றைக்கோ அமையத்தாம் போகிறது.

அருள் எழிலனது ஜீ.ரி.வி(G.tv) ப் பேட்டி குறித்த எனது „கிண்டல்“  எதிர்வினை மீது இரமணிதரன் எழுப்பிய கேள்வியை முன்வைத்துச் „சில“ புரிதலுக்காக:

நாம் என்ன புலியை ஆதரிப்பது – எதிர்ப்பதென்றதிலா தொங்கி நிற்கிறோம்? „தமிழீழம்“ என்ற மாய மானை மீள உயிரூட்டிச் சிதை கொடுக்க எவரும் இனி முன் வருவாரென எந்த முட்டாளும் தீர்மானகரமானவொரு கருத்துக்கு உணர்வூட்ட முடியாது.

எமது மக்களுக்கு, என்ன தேவை-தேவையில்லை என்பதை எவரும் புறத்திலிருந்து  புகட்ட முடியாது.அவர்கள் தம்மைத் தாமே போராட்டத்துள் இணைத்து அதற்கு விடைகாண அனுமதிப்போம்.

இதனடிப்படையிலேதாம் அருள் எழிலன் மீளவுமுரைத்த „தமிழீழம்என்றோ ஓர் நாள் சாத்தியமாகும்“ என்பதையும் மறுப்பதற்காக அப்படியொரு சிறு குறிப்பில் நான் தொங்கினேன்.

மலரப் போகும் „தமிழீழம்“ அந்நிய தேசத்துக்குச் சார்பானதா அல்லது ஈழ மக்களுக்குச் சார்பானதவெனத் „தான் கவலை“ கொள்வதாகச் சொல்லும்போதே „தமிழீழம்“சாத்தியமென்று மீளக் கயிறு திரிக்கும் அருள் எழிலனது புலிகள்மீதான புரிதலைத்தாம் சுட்டிக் காட்டினேன்.எமது பிரச்சனையை உணர்வு பூர்வமாகப் புரியாதவர்கள்-சமூக ரீதியாக விளங்க முற்படாதவர்கள்போன்று அவர் உரையாடியதைவைத்து, எனது எதிர்வினையை அப்படிச் சொன்னேன்.

நெடுகச் „சீரியஸ்“ பாணியில் விமர்சிப்பது அலுக்க,அங்ஙனம் உரைத்தேன்.

அடுத்து- புலியை ஆதரிப்பது-எதிர்ப்பதென்பது, தமிழ்ச் சமுதாயத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பரந்து பட்ட மக்களது நலனிலிருந்தே ஆரம்பிக்கிறது.

புலிகளது போராட்டத்துள், சிங்களப் பேரினவாதத்தின் தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் இருக்கிறது(அதை அவர்கள் கையப்படுத்தித் தமது நோக்குக்கிணைவாகப் பயன்படுத்தியிருப்பினும்).

அதை ஆதாரித்தோம்.

சிங்கள பேரினவாத அரசின் இனவொடுக்குமுறைக்கெதிரான தமிழ் பேசும் மக்களது எதிர்ப்புப் போராட்டத்தைத் தமது இலக்குத் தோதாகப் பயன்படுத்திய புலிகள் சார் வர்க்கத்தின் இந்த நோக்கைத் திட்டமிடப்பட்ட வகையில் எதிர்த்தோம்.

அங்கே,புலிகளது அராஜகம் மட்டுமல்ல அவர்களது வர்க்க சார்பையும்,அந்த வர்க்கத்தின் அந்நியச் சார்பையும் எதிர்த்தோம்.

ஒரு கட்டம் ஆதரிக்கும் நிலை,

இன்னொரு கட்டம் எதிர்த்தே ஆகவேண்டிய நிலை.

இதுள், அருள் எழிலன் மீதான கிண்டல் அவரது அரசியல்-பொருளாதாரப் புரிதலிலிருந்து, ஆரம்பமாகிறது!எமது போராட்டத்தை-தமிழ்பேசும் மக்களது அரசியல்-சமூக அசைவியக்கச் சூழல்மீதான பார்வையைக் குறித்தான புரிதலைகொண்டியங்குவதற்கு மாறாக, அவரது புரிதல், மிக மோசமான தமிழ் நாட்டு ஓட்டுக் கட்சிகள் போலவே இருந்ததால் அதை கிண்டல் செய்தேன்.

இதில் புலியை எதிர்ப்பது-ஆதரிப்பதென்பது சரியானவொரு தளத்தின் புரிதலிலிருந்து அரும்ப முடியும்.

அதைவிடுத்து இயக்க விசுவாசம்-தமிழ் மக்கள்மீதான இனப்பாசம்,பச்சோதாபங்களால் எவரும் எமக்குப் பங்களிக்க முடியாது.

நாம் ஒரு போராட்டத்தை செய்து தோல்விகளது வலியிலிருந்து இன்னொரு கட்டத்தை எட்டுகிறோம்.அருள் எழிலன் இதற்குள் எங்கிருந்து, எந்தத் தளத்தில் விமர்சனத்தை நகர்த்துகிறார்? அதே புலிகளது விசுவாசிகள்,புலம்பெயர் புலிப் பினாமிகள் போலவே அவரும் உரையாடுகிறார். ஒரு வகையில் இது அதே புலிவால்கள் கொண்டிருந்த புரிதலை மீறிச் செல்லவில்லை! இறுதியில் எல்லாம் முடிந்தவுடன் புற்றுக்குள் நுழைந்து காணாமற்போன எத்தனையோ புலிவால்களது இன்னொரு முகமாக அருள் எழிலன் கட்டமைக்கும் கருத்துக்கள் எவருக்கு அவசியம்? நமது மக்களை மீளவும் முட்டாளாக்கவா? போதும்!

மீளவும், இந்தியாமீதும்,தமிழ் நாட்டு மக்கள்மீதும் கட்டமைக்கும் அரசியல் சும்மா-சும்மா (உபயம்.சயந்தன்).

புலம் பெயர் தமிழர்களது உணர்வோடு விளையாடாமல் இருந்தாலே போதும்.இதுதாம் எனது கிண்டலது உண்மை முகம்!மற்றும்படி யாரை,யார் எதிர்ப்பது-ஆதரிப்பது இரமணி?

ஸ்ரீரங்கன்

27.10.2010

%d Bloggern gefällt das: